In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 2

ஒருவழியா வேர்ல்ட் கப் இரண்டாவது பாகத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் டீம் இப்படி முதல் ரவுண்டிலேயே வெளியேறிரும் என்று நான் நினைக்கவில்லை. சரி போகட்டும். இந்தியா தற்சமயம் தடுமாறிக் கொண்டிருக்கிறது சூப்பர் எய்ட்டில் நுழைவதற்கு. என்னைப் பொறுத்தவரை இந்திய இலங்கையை சுலபமாக வென்றுவிடும். அந்த ஆட்டதிலும் சேவாக் நன்றாக விளையாடுவார் என்பது என் எண்ணம். இதே முதல் ஆட்டம் பார்படாஸுடன் இருந்து இரண்டாவது ஆட்டம் பங்க்ளாதேஷுடன் இருந்திருந்தால் இந்தியா அதிலும் வரலாறு படைத்திருக்கும். அதைவிடுவோம்.

ஆஸ்திரேலியாவிற்கும், சௌத் ஆப்பிரிக்காவும் ஆன முதல் ரவுண்ட் மேட்ச், காலிறுதி அரையிறுதி(உலகக்கோப்பை போட்டிகளில் இறுதிப் போட்டி பெரும்பாலும் ஒன் சைட்டட் ஆகவே இருந்துவிடுகிறது) அளவிற்கு பேசப்படுகிறது, காரணம் ODI Ranking ல் இருவரும் முதல் இரண்டு இடங்களில் இருப்பதுதான் காரணம். இவர்கள் இருவருக்குமான கடைசி சீரியஸும் மிக நன்றாகவே சென்ற ஞாபகம்.



இரண்டு அணிகளும் மைண்ட் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாமல் இருந்த ரேங்கிங்கைப் பற்றிய ஜல்லிச் சத்தம் இப்பொழுது கேட்கத் தொடங்கியிருக்கிறது. சௌத் ஆப்பிரிக்கா கேப்டனை இதுவரை ஆஸ்திரேலியா அணி திறமையாகப் போட்டுத் தள்ளியிருக்கிறார்கள், அதை இந்தப் போட்டியிலும் தொடரப் போவதாக Mr. Cricket பேட்டி கொடுத்திருந்தார். இப்பொழுது பிரஷர் முழுக்க சௌத் ஆப்பிரிக்காவிற்குத் தான், ரேட்டிங்கை தக்க வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் வேறு ;). பாண்டிங் நக்கலாகச் சொல்லியிருந்தார் இந்த வேர்ல்ட் கப்பை எடுத்துக் கொண்டு போகும் பொழுது ஆட்டோமேட்டிக்கா ரேங்கிங் அவர்கள் பக்கம் வந்துவிடும் என்று.



ஷான் டைட் உடைய ஆர்ம் ஆக்ஷன் கொஞ்சம் போல் ஸ்டீவ் வா-வை நேரில் பார்ப்பதாகயிருந்தது. முதல் இரண்டொரு ஓவர்களில் லைனைப் பிடித்துவிட்டு பேஸை அதிகப்படுத்தினால் சரியாகிவிடும். ஸ்டுவர்ட் கிளார்க் இல்லாமல் நாதன் ப்ராக்கன்னை வைத்து ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது. மெக்கிராத் பர்ஸ்ட் சேஞ்சாக இறக்கப்படுவது ஆஸ்திரேலிவின் பலம். ஷான் டைட்டும் நாதன் ப்ராக்கன்னும் ஒன்றிரண்டு விக்கெட்டுக்களை முதல் எட்டு பத்து ஓவர்களில் கழட்டி விட்டால் நிச்சயமாக எதிரணியின் ரன் அடிக்கும் வேகம் மெக்கிராத்தால் தடுக்கப்படும். பாண்டிங்கின் இன்னொரு பேட்டியின் அடிப்படையில் இந்த அணி பெரும்பாலும் மாற்றப்படாது என்று தெரிகிரது. சைமண்ட்ஸை தவிர்த்து.

சைமண்ட்ஸ் முழுத் தகுதி பெற்றுவிட்டதாக ஆஸ்திரேலியாவின் பிசியோ சொல்லியிருக்கிறார். செஞ்சுரி அடித்த பிறகும் பிராட் ஹாட்ஜ் வெளியே உட்காரும் நிலைவரும் என்று நினைக்கிறேன், ஆனால் சைமண்ட்ஸ் நிச்சயமாக ஒரு போட்டியின் தன்மையை தனியொறு ஆளாக மாற்றிவிடும் சாமர்த்தியம் உடையவர் தான்.

என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா சேஸ் பண்ணினால் ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஜெயித்துவிடுவார்கள். செட்டிங் என்றால் கொஞ்சம் போல் கஷ்டப்பட்டு ஆனால் ஜெயிப்பார்கள். ஆனால் இப்படி ஒரு முன்முடிவிற்கு வரும் அளவிற்கு இருப்பதாலேயே ஆஸ்திரேலியா செட்டிங் செய்து ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். சின்ன கிரவுண்ட் என்பதால் நிச்சயமாய் ஹை ஸ்கோரிங் கேம் தான். சௌத் ஆப்பிரிக்கா பெற்றிருக்கும் தேவையற்ற பிம்பம் இந்தப் போட்டியில் தகர்த்தெறியப்படும்.

Related Articles

2 comments:

  1. எனக்கென்னவோ இந்தப் போட்டியில் டைட் நன்றாக வாங்கிக்கட்டுவார் போலத் தோன்றுகிறது. நாதன் ஓ.கே.
    கிளார்க் வருவதாயிருந்தால் டைட்டைத்தான் மாற்ற வேண்டும். நாதன் நிச்சயமாக அணிக்குத் தேவை.

    ReplyDelete
  2. அனானி, ஆஸ்திரேலியாவிற்கு ஷான் டைட் உதைவாங்குவது பெரிய பிரச்சனையாகயிருக்காது - ஒன்றிரண்டு விக்கெட்களை அவர் வீழ்த்தும் பட்சத்தில்.

    நாலு வருஷத்துக்கு முன்னால், ஆஸ்திரேலியாவிற்காக மெக்ராத் பௌல் செய்யும் பொழுது அதை எதிரெணி அடிக்கத் தொடங்கினால் ஆஸ்திரேலியா அணி சந்தோஷப்படும் ஏனென்றால், மெக்ராத்திடம் உங்கள் விக்கெட் விழ வேண்டாமென்றால் அவர் பந்தை நீங்கள் விளையாடாமல் விடவேண்டும்.அது ஒன்றுதான் ஒரே வழி. தலைவர் குச்சிக்கு பந்து போடுறது ரொம்ப குறைச்சல், குச்சியிலிருந்து நாலு விரக்கடை தூரத்தில் தான் பந்து போடப்படும்.

    விளையாட தொடங்கினீர்கள் என்றால் ஏதாவது ஒரு பந்து எட்ச் ஆவது தவிர்க்கமுடியாதது.

    இந்த முறை ஆஸ்திரேலியாவின் சீக்ரெட் வெப்பனாக, ஷார்ட் பிச் பௌலிங் இருக்குமென்று நினைக்கிறேன். ஷான் டைட் அதை நன்றாகச் செய்கிறார்.

    ReplyDelete

Popular Posts