In கவிதைகள்

முடிச்சவிழ்க்க தெரியாத மூடன்



என் வேதனையின்
நரம்புகளை மீட்டி இசையாக்கும்
வலிமை பெற்றவளாய்
ராகக் கோர்வைகள் இசைத்தபடி நீ
உன் உற்சாகத்தின்
நீள அகலங்களுக்குள் அடங்கிப் போய்
வேதனையிலேயே சுகம் காண்பவனாய் நான்

தோல்விக்கான பேச்சுவார்த்தைகளில்
விருப்பமில்லாமல் ஒதுங்கியேயிருக்கிறேன்
என் வெற்றி நம்மை பிரித்துவிடும் சாகசம் புரிந்தவனாய்
ஒவ்வொருமுறையும்
தானாய் விழுந்து கொள்ளும் முடிச்சை
கவனமாய் பார்த்தபடி

வேதனையும் வலியும் நிரம்பியதாய் முடிச்சுகள்
இறுகிக்கொள்ளும் உறுதியில்
தெரித்து விழ ஏதுவாய் வார்த்தைகள்
கட்டுப்படுத்தி அடக்கியாளும் ஒவ்வொருமுறையும்
வார்த்தைகள் மேலும் மேலும் முடிச்சுகளாய்
இறுகி வெடிக்கப்போகும் நாளை எதிர்நோக்கியபடி நான்
முடிச்சவிழ்க்க தெரியாத மூடனாய்

Related Articles

3 comments:

  1. மிக அற்புதம்

    ReplyDelete
  2. என்னது மோகன் தாஸ் குல்ல இப்படி ஒரு கவிஞனா நம்பவேமுடியலை

    ReplyDelete
  3. கவிதை நன்றாக இருக்கிறது.
    //ஒவ்வொருமுறையும்
    வார்த்தைகள் மேலும் மேலும் முடிச்சுகளாய்
    இறுகி வெடிக்கப்போகும் நாளை எதிர்நோக்கியபடி நான்//
    இப்படி காத்திருக்க நேர்வது ரொம்ப கொடுமைதான்.

    ReplyDelete

Popular Posts