In கேரளா பயணம்

கடவுளின் தேசம்

சோழர்களின் மேலிருந்த காதலால் என்ன நடந்ததோ தெரியாது, பாண்டியர்களையும் சேரர்களையும் பிடிக்காமல் போனது. ஆமாம் உண்மையில் எனக்கு மதுரையும் கேரளமும் பிடிக்காது சின்னப் பிள்ளையாய் இருக்கும் பொழுது. இதெல்லாம் ஒரு நாளில் மாறியதா என்றால் மாறியது; இன்னும் அந்த நாள்(ட்கள்) நினைவில் இருக்கிறது. எங்கள் நேரு ஸ்டேடியத்தில் தேசிய கோ-கோ விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்ற சமயம்.

கேரளத்தில் இருந்து பெண்கள் அணி வந்திருந்தது, அப்பா PET என்பதாலும் நானும் கோ-கோ விளையாடுவேன்(எங்கக்காகிட்ட மட்டும் இதை சொல்லிடாதீங்க) என்பதாலும் ஸ்டேடியத்திலேயே இருந்தேன். அப்பொழுது பார்த்த மகளிர் கேரள கோ-கோ வீராங்கனைகளைப் பார்த்து கேரளத்தைப் பற்றிய என்னுடைய அபிப்ராயத்தை மாற்றிக்கொண்டேன்(அப்ப மிஞ்சி மிஞ்சிப் போனால் எட்டாவது படித்துக் கொண்டிருப்பேன்.) மஞ்சக்கலரில் சந்தனப் பொட்டொன்றை புருவங்களுக்கிடையில் வைத்திருந்த பெண்களைப் பார்த்து நானும் சந்தனம் வைத்துக் கொள்ளத் தொடங்கினேன்.

கொடுமை என்னான்னா எங்கள் வீட்டில் சந்தனக் கட்டை இருக்கும்(சிறிசுங்க - சந்தனக் கட்டையும் கல்லும் இருக்கும் நீங்கள் அரைத்து வைத்துக் கொள்ளலாம். வைச்சீங்கன்னா சந்தன வாசனை ஒரு நாள் முழுக்க உங்கக்கூடவேயிருக்கும்) அம்மா எப்பப்பார்த்தாலும் புலம்பல் தான்; சந்தனம் வச்சாத்தாண்டா நீ அழகாயிருக்க என்று அதைவிடுங்க காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு, ஆனா சந்தனம் வச்சா நானும் அழகாத்தான் இருப்பேன் ;-). ஆனால் வைத்துக் கொண்டதில்லை, படித்த சாமியார்ப் பள்ளியில் சந்தனம் வைக்காமல் இருக்கக்கூடாது சின்ன வயதில் எப்பொழுதும் சந்தனம் இருக்கும் நெற்றியில், என் கை அந்தப்பக்கம் போகாதென்பதால் பெரும்பாலும் அழியாமல் இருக்கும் மாலை நேரம் வரை.(நிறைய பேர் உறுத்தும் என்பதால் கைகொண்டு அழித்துவிடுவார்கள் தெரியாமல்).

ஆனால் ஏதோ ஒரு நாளில் ஆரம்பித்த சோம்பேறித்தனம் சந்தனம் வைக்காமல் ஆக்கியிருந்தது. ஆனால் அந்தப் பெண்களைப் பார்த்ததும் சந்தனம் ஒட்டிக்கொண்டது; அந்த முகங்கள் நினைவில் இல்லாமல் இல்லை, புகைபடிந்த ஓவியமாய் அந்தப் பெண்கள் என் நியூரான்களின் பின்னால் எங்கோ ஒளிந்திருக்கிறார்கள்; நிச்சயமாய். பொய்கள் இல்லாத வரிகள் இவை, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் எழுதவேண்டும் என்று எப்பொழுதும் நினைத்திருக்கிறேன். ஆனால் பிரச்ச்னை என்னவென்றால் அப்படிஎழுதும் பொழுது உடைந்து போகும் பிம்பங்கள் பெரும்பாலும் திரும்பவும் ஒட்டவைக்க முடியாதவையாகயிருக்கின்றன. செல்ப் சென்ஸாருக்குப் பிறகுதான் வெளியில் வருகிறது என்னுடைய பதிவுகள்.

அப்பா சபரிமலைக்குப் போவார் என்று முன்னமே எழுதியிருக்கிறேன்; பெரும்பாலும் சாதாரணமான நடை திறப்பிற்கும் விஷூவிற்கும் தொடர்ச்சியாக எட்டு வருஷம் போல் போனதாக நினைவு. ஆனால் என்னை அழைத்துச் செல்லவில்லை எனக்கு உண்மையில் கோபம் ஏற்படுத்தி நிகழ்வுகள் இவை(அப்பல்லாம் நான் ஆத்தீகன் தான் ;-) இது நான் நாத்தீகன் ஆனதற்காக ஒரு காரணம் கிடையாது). ஆனால் அப்பா நான் தீவிரமாக எதையும் செய்யமாட்டேன் என்று நம்பி என்னை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டார். நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் சபரிமலைக்குச் செல்லும் பாதைகள் மிகவும் அருமையாக இருக்கும் என்று.

பின்னர் நான் படித்த கல்லூரியில் ஏகப்பட்ட கேரளப் பெண்கள் படிப்பார்கள். அந்தக் காலத்தில் (நான்குவருடங்கள் முன்பு) கேரளாவில் நிறைய கல்லூரிகள் கிடையாதோ என்னவோ எங்கள் கல்லூரியில் நிறைய மல்லு மக்கள். ஆனால் அவர்கள் செட்டாக வருவார்கள் செட்டாகப் படிப்பார்கள் செட்டாகப் போவார்கள் ;-). சும்மா வேடிக்கை வேண்டுமானால் பார்க்கலாம். இப்படி எனக்கும் கேரளத்திற்குமான தொடர்பு ஒரு விதத்தில் பெண்களைத் தொடர்பு படுத்தியே இருந்தது.

எனக்கு கேரளாவிற்கு டூர் செல்ல வேண்டுமென்ற ஆர்வம், ரொம்பகாலமே உண்டு. ஆனால் நல்ல வாய்ப்பு அமையாமலே இருந்தது. மிகச் சமீபத்தில் அந்த வாய்ப்பு அமைந்தது. ஏற்காடு செல்வதற்கான முயற்சியொன்றை நண்பர்கள் குழாம் செய்துகொண்டிருந்தது தெரியும். மற்றவர்களிடம் கூட நான் இந்த வாரக் கடைசியில் ஏற்காடு போகப்போகிறேன் என்று தான் சொல்லிவைத்திருந்தேன். சனிக்கிழமை காலை 2 மணிக்கு மீட்டிங்க் பாய்ண்ட் சென்றதும் தெரியும், கேரளாவின் வயநாட்டிற்கு(WAYANAD) போகப்போகிறோம் என்று.

நண்பர்கள் ஏற்கனவே ஏகப்பட்ட அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தார்கள். நிறைய தூரம் டூவிலரில் பயணம் செய்யாதே அது இது என்று. உண்மைதான் முதுகுவலி வரப்போவது இந்தப்பயணத்தால் வெகுசீக்கிரம் என்று அவர்கள் சொல்ல வந்ததும் உண்மைதான். ஆனால் இந்த இரண்டு நாள் பயணம் மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்றாய் அமைந்துவிட்டது.

கேரளத்தை கடவுளின் சொந்த நாடென்று சொல்வார்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், God's own country. ம்ம்ம் உண்மைதான் அப்படியும் ஒன்றும் கேரளத்தை முழுவதுமாகச் சுற்றிவிடவில்லை என்றாலும். சுற்றிப்பார்த்த வரையிலுமே நிச்சயமாகச் சொல்லலாம் அருமையான ஒரு பிரதேசம் கேரளம். இந்த முறை டூவீலரில்(பில்லியன் ரைடர் தான் - சொல்லிட்டேன்பா) பயணம் செய்ததால் முன்னர் குல்லு-மணாலி போயிருந்த எஃபெக்ட் இருந்தது. இதைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.















அப்பார்ட்ச்சர், ஷட்டர் ஸ்பீட் சொல்லிக்கொடுத்த புண்ணியவான்களுக்கு சமர்ப்பணம். இது நண்பரின் கேமிராவில் என்னுடைய கைவண்ணம். நாளை அக்காவின் மொபைலில் எடுத்த என்னுடைய கைவண்ணத்தைப் போடுறேன்.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In வகைப்படுத்தப்படாதவை

ஒரு உதவி வேண்டுமே

பொற்கொடி என்னைப் பற்றி ஒரு பதிவெழுதியிருந்தார், மிக முக்கியமான அலுவலில் இருந்ததால் சனி, ஞாயிறு இணையத்தளங்களுக்குள் நுழையவில்லை. அந்தப் பதிவு காணாமல் போயிருப்பதால், யாரிடமாவது அந்தப் பதிவின் காப்பி இருக்குமானல் அனுப்பி வைக்கவும்.

Danke இது முன்பாகவே சொல்லிவிடும் நன்றிகள்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In ஓவியம்

இது கணிணி ஓவியப் போட்டிக்கு இல்லை



ரொம்ப நாட்களுக்குப் பிறகு பெயிண்டில் கை வைத்தேன். இந்த வேலைக்கு வந்த பிறகு வேலை டென்ஷனைக் குறைக்க எப்போதாவது பெயிண்டில் கைவைத்து விளையாடுவதுண்டு.

இன்னும் நன்றாகச் செய்யமுடியும் என்று நினைப்பதால்; இதைப் போட்டிக்கு அனுப்பவில்லை. ஒன்றிரண்டு நாட்களில் இன்னும் அழகான ஒன்றை அனுப்புவேன்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

Y tu mamá también

இந்தப் படத்தைப் பார்த்ததில் இருந்தே இரண்டு வரி இந்தப் படத்தைப் பற்றி எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கிய படம். ரொம்ப காலமாக எழுதப்போகும் திரைவிமர்சனங்கள் வரிசையில் உட்கார்ந்திருந்தது; ஆனால் என்னமோ ஒவ்வொரு முறை எழுத உட்காரும் பொழுதும் ஏதோ ஒரு விஷயம் தடுத்து மீண்டும் மீண்டும் ட்ராஃப்ட் ஆகவே இருந்ததை கொஞ்சம் ஒப்பேற்றி வெளியிடுகிறேன். இன்னொரு விஷயம் படமே அடல்ஸ் ஒன்லி தான் எனும் பொழுது அதைப் பற்றிய விமர்சனமும் அப்படித்தான் இருக்குமென்பதால் வயதுக்கு வந்தவர்களுக்கான பதிவு இது. இதை தலைப்பிலேயே போட்டிருக்கலாம் தான் என்றாலும் அது வாசகர்களை குழப்பிவிடும் வாய்ப்பிருப்பதால் இங்கே அறிவிக்கிறேன். வயசுக்கு வராதவர்கள் அப்படியே எஸ்கேப் ஆகிவிடவும்.



நான் பாபெல்(Babel) பார்த்துவிட்டு, அலெஜாண்ட்ரோ கன்ஸாலஸ் இன்னாரிட்டுவையும்(Alejandro González Iñárritu), கெய்ல் கார்சியோ பெர்னாலையும்(Gael García Bernal) தேடிக்கொண்டு அலைந்த பொழுது கண்ணில் பட்ட படம் இது. Alfonso Cuarón பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் ஹாரி பாட்டர் வகையறாவின் ஒரு பகுதியைக் கூட இவர்தான் இயக்கியிருந்தார்(Harry Potter and the Prisoner of Azkaban -2004). அவருடைய படம் தான் இந்த Y tu mamá también ஆங்கிலத்தில் "And your mother, too" என்று மொழிபெயர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

படம் இரண்டு இளைஞர்களையும் ஒரு இளம் பெண்ணையும்(In her late 20's ஆமா) சுற்றி சுழல்கிறது. ஜூலியோ(Julio), மற்றும் தெனொச்(Tenoch) இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் இதில் ஜூலியோ நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன், தெனோச் மெக்ஸிகோ அரசியிலில் இருக்கும் பெரும் புள்ளி ஒருவரின் மகன். இருவரும் அவரவர்களின் பெண் தோழிகளை உறவு கொள்வதில் இருந்து தொடங்குகிறது படம்; எதனால் இந்தக் காட்சி முக்கியத்துவம் பெருகிறதென்றால் இவர்கள் இருவரின் மனநிலையையும் பிரதிபலிக்கிறது அந்தக் காட்சிகள். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தின் மையமே ஒரு மாதிரி "உடலுறவு" கொள்வது என்பதைப் பற்றி பேசுவதால் அப்படிப்பட்ட ஒரு தொடக்கம் படத்திற்கு தேவைபடுகிறது.



கதைசொல்லி ஒருவர் கதை சொல்வதாக நகரும் கதையில் ஆரம்பத்திலேயே இருவரின் சமூகநிலை எப்படி அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்று இயக்குநர் சொல்லிவிடுகிறார். தெனொச்'சின் காதலியின் வீட்டாருக்கு இவர்கள் இருவதும் காதலிப்பதும் உறவு வைத்திருப்பதும் தெரியும் என்றும் ஆனால் கண்டுகொள்ளாமல் விடுவதாகச் சொல்லப்படுகிறது அதே சமயத்தில் ஜூலியோவின் காதலியின் வீட்டாருக்கு முழுவதுமாகத் தெரியாவிட்டாலும் ஒரு மாதிரி காதலியின் அப்பா சந்தேகப்படுவதாகக் காட்டபடுகிறது.

இப்படி தானுண்டு தன் பிகருண்டு என்று அலைந்து கொண்டிருக்கும் நண்பர்கள் இருவரும் மேற்ச்சொன்ன அந்த இளம் பெண்ணை சந்திக்கிறார்கள் ஒரு திருமணத்தில். அவர்களை அந்தப் பெண் கவர்ந்துவிட "சொர்க்கத்தின் வாய்" என்று அழைக்கப்படும் கற்பனையில் மட்டுமே இருக்கும் ஒரு கடற்கரைக்கு தாங்கள் இருவரும் செல்லவிருப்பட்தாகவும் சேர்ந்து கொள்ள விருப்பமா என்று சைக்கிள் கேப்பில் கேட்கிறார்கள். ஆனால் அந்த இளம் பெண் லூயிஸா(Luisa)தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிடுகிறார்.(லூயிஸா ஏற்கனவே திருமணம் ஆனவர் - ஒருவகையில் தெனொச்'சின் உறவுக்காரரையே மணந்தவர்).





ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் வேறுவிதமாக அமைந்துவிட லூயிஸா, ஜூலியோ மற்றும் தொனோச்'சுடன் சொர்க்கத்தின் வாசலுக்கு வருவதாய்ச் சொல்ல வேண்டிய கட்டாயம்(இங்க ஒரு ட்விஸ்ட் இருக்கு - படத்தின் அந்தக் காட்சியில் சொல்லப்படும் பொழுது, லூயிஸாவின் கணவன் ஒரு நாள் தொலைபேசி தான் வெளியூர் சென்ற இடத்தில் இன்னொரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள நேரிட்டதை குடிபோதையில் இவளிடம் புலம்புவதால் லூயிஸா இளைஞர்களுடன் பயணம் செல்ல ஒத்துழைப்பதாக வரும் - இதில் இன்னொரு ட்விஸ்ட் இருக்கு) இவர்கள் மூவரும் அந்தக் கடற்கரைக்குப் போவதாய் முடிவெடுத்ததும் படம் சூடுபிடிக்கத் தொடங்கும்; அதற்காக முன்னால் மெதுவாகச் சென்றதாய்ப் பொருள் இல்லை. இன்னும் வேகமெடுக்கும்.

மூன்று பேரும் காரில் சொர்க்கத்தின் வாசலுக்குப் பயணிக்கும் பொழுது தங்களுடைய முன் அனுபவங்களைப் பற்றிச் சொல்கிறார்கள் தங்கள் காதலன் காதலிகளைப் பற்றி, அவர்களுடனான உறவு பற்றி. இந்த இடத்தில் ஒரு விஷயம் மூவருமே உண்மைகளைச் சொல்வதாய் இயக்குநர் சொல்லியிருப்பார். இந்த நேரத்தில் ரொம்ப சீரியஸான விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசுவார்கள் அதையெல்லாம் நான் எழுதினேன் என்றால் உதைவிழும். சரி மீண்டும் கதைக்கு போகும் வழியில் ஒரு இடத்தில் தங்கியிருக்கும் பொழுது லூயிஸா அவளுடைய கணவனுக்கு தொலைபேசி தான் அவனை விட்டுக் கிளம்புவதாகச் சொல்லி மெஸேஜ் சொல்லுவாள்.



இப்படியாக போய்க்கொண்டிருக்கும் பயணத்தில் இன்னொரு ட்விஸ்ட் வரும் எப்படியென்றால் முதலில் தெனோச்'சுடன் லூயிஸா உறவு கொள்வாள்; இதை மறைந்திருந்து ஜூலியோ பார்த்துவிட இதனால் கோபமடையும் ஜூலியோ தானும் தெனோச்'சுடைய காதலியும் உறவு கொண்டதாகச் சொல்லுவான். இதைத் தொடரும் அடுத்த நாளில் லூயிஸா ஜூலியோவுடன் உறவுகொள்ள தெனோச் தான் ஜூலியோவின் காதலியுடன் உறவு கொண்டதைச் சொல்வான். இதைவிடவும் முக்கியமான ஒரு விஷயத்தை இயக்குநர் சொல்லாமல் சொல்வார் அது இவர்கள் இருவருமே ஒரு விதத்தில் அந்தப் பெண்ணுடன் உறவு கொள்ளத்தான் அத்தனையும் செய்வார்கள். ஆனாலும் அவர்கள் இருவரிடையேயும் பகை வரக்கூடிய அளவிற்கு இந்த விஷயம் கொண்டு சென்றுவிடும்.

ஒரு விதத்தில் நாம் படம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் லூயிஸா அவளுடைய கணவனை பழிதீர்க்கத்தான் இவர்களுடன் பயணம் செய்வதாய் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கும் அப்படிப்பட்ட பிம்பத்துடன் நீங்கள் இருக்கும் பொழுது; இவர்கள் இருவராலுமே லூயிஸாவிற்கு பயனொன்றும் இல்லை என்று இயக்குநரால் சொல்லாமல் சொல்லப்படும்; இரண்டு இளைஞர்களும் இந்த விஷயத்தில் பேசத்தான் லாயக்கு என்பது போல் புனையப்படும். இந்தக் காட்சிகள் இயக்குநரால் மிகவும் திறமையாக கையாளப்பட்டிருக்கும்.

இவர்கள் இருவரும் கற்பனையில் இருப்பதாய் நம்பப்படும் கடற்கரையை கண்டுபிடிக்கிறார்கள். மூவரும் கடற்கரையின் அழகை ரசிக்கிறார்கள் விளையாடுகிறார்கள் ஒட்டுமொத்தமாக என்ஜாய் செய்கிறார்கள். ஆனால் நண்பர்கள் இருவருக்கும் மனத்தாங்கள் ஏற்பட்டு விடுகிறது; பயணத்தையே இவர்கள் பாழ் செய்து விடுவார்கள் என்று லூயிஸா ஏகப்பட்ட கன்டிஷன் போட்டு அவர்களுடன் வரப்போக மனஸ்தாபங்களை மறந்து இருவரும் ஒன்றாக இருப்பார்கள். பின்னர் லூயிஸா கடற்கரையிலேயே தங்கி அங்கிருக்கும் குகைகளுக்குச் செல்லப்போவதாகச் சொல்ல. இவர்களின் வீட்டில் தேடுவார்கள் என்பதால் இவர்கள் திரும்பவும் சொந்த ஊருக்கே வர கதை முடிவை நோக்கி பயணிக்கும்.

இவர்கள் சொந்த ஊருக்கு வந்ததும் தத்தமது காதலிகளை கழட்டிவிடுவார்கள் பின்னர் இருவரும் சந்தித்துக் கொள்ளவே மாட்டார்கள். ஒரு வருட இடைவெளிக்குப் பின் சந்தித்துக் கொள்ளும் பொழுது பரஸ்பரம் விஷயங்களை பரிமாறும் சமயத்தில் தான் தெனோச் சொல்லப்போய் ஜூலியோவிற்குத் தெரியவரும் லூயிஸா கேன்ஸரால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவளுடைய வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருந்ததாகவும். அப்பொழுது தான் படம் பார்ப்பவர்களுமே இந்த விஷயம் சொல்லப்படும். இது தெரிந்தபின் படத்தை இன்னொரு முறை பார்த்தால் வித்தியாசமாகயிருக்கும் லூயிஸாவின் நடவடிக்கைகள்.

மிகவும் நெருக்கமானதாய் இருக்கும் இருவரின் நட்பென்பது எத்தனை பாசாங்குகளை உள்ளடக்கியதாகயிருக்கிறது என்பது ஆச்சர்யமான விஷயம். அல்பான்ஸோ கியூரன் இந்த பாசாங்குகளை மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார் இந்தப் படத்தில்; டிவிடிக்கள் கிடைக்கும் இந்தியாவில் என்று நினைக்கிறேன். பதின்ம வயது இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம் ;-).

படத்தில் அங்கங்கே மெக்ஸிகோவின் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கை இடித்துக் காட்டப்படும். கதை சொன்ன விதமும் படமெடுக்கப்பட்டிருக்கும் விதமும் மிக அருமையாக இருக்கும். அதைப் போலவே நடிகர்களும் கெய்ல் கார்சியோ பெர்னாலைப் பற்றி கேட்கவே வேண்டாம் அருமையாக நடித்திருப்பார் படத்தில். மொத்தமாக மூன்று கதாப்பாத்திரங்களை மட்டுமே வைத்து வேண்டுமானால் ஒரு கார் கூட சேர்த்துக் கொள்ளலாம் படத்தை அற்புதமாக எடுத்திருப்பார் இயக்குநர். இன்றைய நிலையில் மேற்கத்திய நாடுகளில் நிலவும் இளைஞர்களின் வாழ்க்கையை படம் பிடிப்பாதாகயிருக்கும் இந்த Y tu mamá también.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In சினிமா விமர்சனம்

கிரீடம் திரைவிமர்சனம்

ஆசிப் அண்ணாச்சி பெங்களூர் வந்திருந்த பொழுது இந்தப் படத்தைப் பற்றி ஞாபகப்படுத்தினார். என்னய்யா கிரீடம் வெளிவரப்போகுதாமே என்று, அவர் மலையாளத்தில் இந்தப்படம் பார்த்ததிருந்ததாகவும் தமிழில் எப்படி வரப்போகுது என்று தெரியவில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தார். நான் சொன்னேன் விஜய் மாதிரியில்லாம அஜித் நல்லா டிரை பண்ணுவாருங்க அதனால நல்லாவரும் என்று சொல்லியிருந்தேன்.

நான் மலையாளப்படம் பார்த்திருக்கவில்லை, வெள்ளிக்கிழமை ரிலீஸ் என்றதும் கால் தரையில் பரவவில்லை, முன்னாலே வாலி, அமர்க்களம், வில்லன், வரலாறு போன்ற படங்களை முதல் நாள் பார்த்திருந்தேன். காரணம் ரொம்ப சிம்பிள் கதை தெரிவதற்கு முன் பார்ப்பதில் உள்ள சுவாரசியம் பெரும்பான்மையான சமயங்களில் கதை தெரிந்த பின் பார்க்கும் பொழுது கிடைப்பதில்லை. இன்டர்நெட்டில் தேடினேன், ஞாயிற்றுக்கிழமைதான் டிக்கெட் இருந்தது வெள்ளி சனிக்கிழமைகள் ஹவுஸ் புல். சரியென்று ஞாயிறுக்கான டிக்கெட் இரண்டை புக் செய்து 5.45 க்கே கிளம்பினேன் கம்பெனியில் இருந்து; சரி கடைசி டிரை பண்ணிவிடலாம் என்று.

கம்பெனியின் அருகில் இருக்கும் INOXல் தான் முதலில் தேடினேன் படமே ரிலீஸ் இல்லையாம், அங்கிருந்து Forum வந்தால் PVRல் மேலே டிஸ்ப்ளேவில் கீரிடத்திற்கு ஹவுஸ்புல் போர்ட் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் மனதைத் தவறவிடாத விக்ரமாதித்தனாக கியூவில் நின்று கவுண்டரை நெருங்கியதும், எதுவும் கேன்ஸல் ஆன டிக்கெட் இருக்கா என்று கேட்க, நான் நின்ற கியூவிற்கு டிக்கெட் தரும் நபர் இல்லையென்றதும், பக்கத்து கவுண்டர் நபர் இரண்டு டிக்கெட் இருப்பதாகச் சொன்னதும் இந்த நபர் ஒரு டிக்கெட்டாய் கொடுக்கமுடியாதென்றும் சொல்லி வீம்பு பிடிக்க. இரண்டையுமே வாங்கிக்கொண்டேன்.

மணி ஏழு இருக்கும் 10.00 மணி ஷோ, என்ன தான் இருப்பது Forum என்றாலும் எனக்கு window ஷாப்பிங்கில் நம்பிக்கையில்லாததால் கீழ் ப்ளோரில் இருந்த Relienceல் ப்ரவுஸிங்க் செய்து மூன்று மணியை கழிக்கலாம் என்று முடிவுசெய்தேன். Gmailல் லாகின் செய்து பார்த்தால் ராம் ஆன்லைனில் இருக்க "என்னய்யா ஒரு டிக்கெட் இருக்கு வர்றீரா கிரீடத்திற்கு" என்று கேட்க, நான் ரிவ்யூ எல்லாம் பார்க்காம அஜித் படம் பார்ப்பதில்லை என்று சொல்லிவிட நானும் விட்டுவிட்டேன்.

சரி படத்தைப் பற்றி, மலையாளப்படத்தை தமிழில் எடுத்திருக்கிறார்கள், மூலக்கதை லோகிததாஸ். நான் அந்தப் படத்தை பார்க்கவில்லை என்பதால் இது ஒப்பீட்டளவிலான விமர்சனமாக இருக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் அஜித்தின் படத்தை விமர்சனம் செய்யும் பொழுது எனக்குள்ளே ஒட்டிக்கொள்ளும் ரசிகன் tagகினால், விமர்சனத்தைப் பார்த்து படத்திற்குச் செல்பவர்கள் என் விமர்சனத்தை ஒதுக்கிவிடுங்கள்.

அஜித்தின் ஏப்பை சாப்பை படங்கள் போலில்லாமல், இயக்குநருக்கும் கதைக்கும் நல்ல முக்கியத்துவத்தை கொடுத்து எடுத்திருப்பதாகத்தான் பட்டது, அஜித்தின் இண்ட்ரொட்யூஷன் சாங், பைட் கனவு, மற்றும் கிளைமாக்ஸ் கதறல்(இது மலையாளத்தில் இருந்ததா தெரியாது) போன்றவற்றை தவிர்த்துப் பார்த்தால் அஜித் ஏன் இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறது; எப்பொழுதென்றால் தமிழ்ச்சினிமா ஹீரோயிசங்களுடன் ஒப்பீடும் பொழுது. படத்தில் அஜித்தும் ஒருவராகயிருக்கிறார், அவர் ஹீரோவென்று சீன்களை ஆக்கிரமித்து ஹிம்ஸை செய்யவில்லை.

மென்மையானக் காதலைச் சொல்லியிருக்கிறார்கள், த்ரிஷா மாமி அழகாகப் பொருந்தியிருக்கிறார் கொஞ்சம் போல் குண்டாகி ஹிஹி அருமையாக இருக்கிறார். "யோவ் பாட்டைப் போடுங்கய்யா" என்று தியேட்டரே கதறிவிடும் வகையில் அநாவசியமான பாடல் திணிப்புகள் இல்லை(முதல் அஜித் பாடலைத் தவிர்த்து - அஜித்தும் என்ன தான் செய்வார் சொல்லுங்கள், 'எங்கடா உங்க தல' என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாவிட்டாலும் தமிழ் சினிமாவில் இருக்க வேண்டுமில்லையா).

ராஜ்கிரண், சரண்யா, விவேக், சந்தானம் என்று ஏகப்பட்ட நடிகர் கூட்டம்.(ஒரு ஜொள்ளு விஷயம் அது யாருய்யா அஜித்தின் சின்ன தங்கையா நடிக்கிறது - மூன்றடியில் அழகாயிருக்கு பொண்ணு.) விவேக்கின் சந்தானத்தின் மூன்றாம் தர ஜோக்குகள் தனித்து தெரிகின்றன - தேவையில்லாத இடைச் சொறுகல்கள்களாக; நிச்சயமாகத் தவிர்த்திருக்கலாம்(வைரம் பாஞ்ச கட்டை எல்லாம் ரொம்ப ஓவர்) ஆனால் தியேட்டரே அதிர்கிறது என்ன சொல்ல நம் ரசனை மாறவேண்டும் என்ற ஒன்றைத் தவிர, இந்தப் படத்தை தியேட்டரில் மக்கள் பார்க்கும் பொழுது தயாரிப்பாளர் கவனிக்கிறார் என்றால், இரட்டை அர்த்த வசனங்களை தொடரச் சொல்வார் என்று தான் படுகிறது. என்னயிருந்தாலும் வியாபாரமல்லவா.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபர்கள் எல்லாம் இன்டர்வெல்லுக்காக ரொம்ப முன்னமே யோசிக்கத்தொடங்கியிருந்தாலும் எனக்கென்னமோ முதல் பாதி வேகமாகச் சென்றதாகவே பட்டது. ராஜ்கிரண் பிரம்மாதப்படுத்தியிருக்கிறார், இன்னமும் ஹீரோ ரோல் தான் செய்வேன் என்று வீம்புபிடிக்காமல் நடிக்கத்தொடங்க நல்ல கேரக்டர் ரோல்கள் கிடைக்கின்றன. படத்தில் பாதி நேரம் திரையை ஆக்கிரமித்திருக்கிறார் ஆனால் எடுபடுகிறது. அவரோட புருவத்திற்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை; இதிலும் வரைந்திருக்கிறார்கள் க்ளோசப்பில் பளீரென்று தெரிகிறது முன்பு; தவமாய் தவமிருந்துவிலும்(நான் படம் பார்க்கவில்லை - சன் டீவியில்(;)) பார்த்த காட்சிகளை வைத்து) அப்படித்தான்.

படத்தின் உற்சாகமான நேரத்தில் கூட அஜித்தின் முகத்தில் ஒரு மென்சோகம் இளையோடுகிறது; திரும்பவும் குண்டடிச்சிட்டாரோ லைட்டா தொப்பையிருக்கிற மாதிரி தெரியுது. அவருடைய கதாப்பாத்திரத்தை சரியாகச் செய்திருக்கிறார். ஃபைட் சீக்வென்ஸ் நல்லாயிருக்கு கொஞ்சம் போல் எதார்த்தமாய் அடிக்கப் பயன்படுத்தும் விஷயங்களும் சண்டையும்; அஜித் நன்றாகச் செய்திருக்கிறார். த்ரிஷா மாமி நல்லாவேயிருக்கிறார் ரொம்ப நாட்களுக்குப் பிறகு அவருடைய ஒரு படத்தை தியேட்டரில் பார்க்கிறேன்; சாமி பார்த்தேன் என்று நினைக்கிறேன் கடைசியாக. எங்கம்மா போனீங்க தெலுங்கிற்கா.

டப் டப் டப் என்று துப்பாக்கியால் ஆயிரம் பேரை, சென்னையின் ஒட்டு மொத்த ரௌடிகளை கொலைச் செய்யும் இந்தக் காலத்தில் ஒரு நபரை கொலை செய்வதைப் பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் இப்படி சொல்வது தமிழ் சினிமாவில் எடுபடுமா? தங்கச்சியைக் கற்பழிக்காமல் அம்மாவையோ அப்பாவாவையோ சுட்டுப்போடாமல் வில்லன் லேசாய் அடிப்பட்டதாய் காண்பிப்பதும் எடுபடுமா. அஜித் இந்த மலையாள வாசனையுள்ள டைரக்டர்களையும் அஸிஸ்டெண்ட் டைரக்டர்களையும் கொஞ்சம் நாளைக்கு பக்கத்தில் விடாதீர்கள் ;-).

எனக்கு உண்மையிலேயே கன்ஃப்யூஸ்டா இருக்கு தமிழ் மக்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா என்று, கதாநாயகியுடன் கதாநாயகன் சேர்வதில்லை, படத்தின் ஆரம்பத்தில் இருந்து ஹீரோ கஷ்டப்பட்டு செய்யும் விஷயங்கள் அனைத்தும் தோல்வியில் முடிவது. அதாவது அவரது இன்ஸ்பெக்டராகும் கனவு. பெரிய கனவுப் பாடலொன்றும் கிடையாது; வரும் கனவுப்பாடலிலும் அடிக்கடி நிகழ்காலத்தில் நடப்பது காண்பிக்கப்படுகிறது.(பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரசிகர் ஒருவர் இந்தப் பாடலில் சில காட்சிகள் வரும் த்ரிஷாவின் மார்புப் பகுதியில் வரைந்திருக்கும் டாட்டுவை பார்த்து அதை பார்க்காத நண்பர்களுக்கும் சொல்லிக் கொண்டிருந்தார். அங்க எப்படி வரைந்திருப்பான் என்ற கேள்வியும் தொக்கி வைத்தார்.)

படத்தில் ஆரம்பப் காட்சிகள் சென்று கொண்டிருக்கும் பொழுது தியேட்டரில் ஒருமுறை சப்தம் போடாமல்(அல்லது வராமல்) மௌனமாகச் சென்றது ஏன் சொல்கிறேன் என்றால் இடைவேளைக்குப் பிறகு அஜித் சிறையில் இருக்கும் ஒரு காட்சியில் வசனமும் இல்லை பேக்ரவுண்ட் மியூஸிக்கும் இல்லாமல் மௌனமாக இருக்க அதே டாட்டு பார்ட்டி திரும்பவும் விசிலடித்தார் சவுண்ட் விடுமாறு; அவருக்கு தெரிந்துதான் இருந்தது படத்தின் அந்த காட்சி அப்படி என்று; அந்தக் காட்சி முடிந்தது "ஆமாண்டா ஆர்ட் படம் எடுத்திருக்கிறான்" என்று சொன்னதை இந்தப் படத்தின் விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாமா தெரியவில்லை.

பெரும்பான்மையான காட்சிகளில் இயக்குநர் மலையாளத்தின் இயல்பு போய்விடக்கூடாதென்றும் அதே சமயத்தில் தமிழ் சினிமா பார்ப்பவர்களின் மேல் மலையாள வாசனையை தூவிவிடக்கூடாதென்று கஷ்டப்பட்டிருப்பது பிரகாசமாத் தெரிகிறது. ஆனால் அதில் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்பது டைரக்ட்லி ப்ரப்போஷனல் டு இந்தப் படத்தின் வெற்றி.

என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல படம் தான் அஜித்திடன் நான் எதிர்பார்த்த ஒரு மாறுதலான படத்தை அஜித் கொடுத்டிருக்கிறார் தான். ஆனால் இதை விமர்சனமாக எடுத்துக்கொண்டு இந்தப் படத்திற்குப் போகவேண்டாம்.






























Read More

Share Tweet Pin It +1

17 Comments

In பதிவர் சந்திப்பு

மோகன்தாஸ் வருகை - பெண்கள் தெறித்து ஓட்டம்

பெங்களூர் வலைபதிவர் சந்திப்பைப் பற்றி ராம் எழுதியதுமே அங்கே போவதென்பது முடிவாகியிருந்தது. ஆசீப் அண்ணாச்சி அதற்கு ஒரு வாரம் முன்பு தமிழகம் வருவதால் சென்னைக்கு போவதாகவும் ஒரு ப்ளான் இருந்தது. ஒரு குட்டி - சந்திப்பை - செய்துவிடலாம் என்று. ப்ளான் என்ன டிக்கெட் புக்செய்து வைத்திருந்தேன், கிரிக்கெட் 'கிட்' வேறு ரெஸ்பான்ஸிபிள் ஆளிடம் கொடுத்து எல்லாம் தயாராகயிருந்தது. ஆனால் கடைசி சமயத்தில் சூழ்நிலைகள்(;-)) சரியாக அமையாததால் மிஸ்ஸாகியது. அன்றிலிருந்தே ஆசீப்பை அரித்துக் கொண்டிருந்தேன்; பெங்களூர் சந்திப்பிற்கு வருமாறு. அவர் கடைசிவரைக்குமே வருகிறாரா இல்லையா என்பதைச் சொல்லாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார்.

ராம் இடையில் ஒரு நாள் தொலைபேசி, என்னய்யா பெங்களூர் சந்திப்பென்று சொல்லியிருக்கேனே ஒரு பதிலும் இல்லையே என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டார். அவருக்கு நம்முடைய பெருமை தெரியாததால் அப்படி கேட்டுவிட்டார் 'சின்னப்பிள்ளை' என்று நானும் 'மன்னிச்சு' விட்டுவிட்டேன். பின்னர் அவராகவே சந்திப்பு முடிந்ததும் புரிந்துகொண்டிருப்பார் என்று திடமாகவே நம்புகிறேன். நான் வர்றேன் என்ற விஷயத்தை கடைசி சமயத்தில் கசியவிட்டதற்கே வருவதாய்ச் சொல்லியிருந்த இரண்டு 'பெண் பதிவர்கள்' வரவில்லை*. நான் அவர் பதில் பின்னூட்டமிடப்போக(அங்கு வந்துவிடப்போகும் லிங்கைப் பிடித்து என் பதிவிற்கு வந்து பதிவைப் படித்து கோபமாகி)வந்திருந்த 'பெண் பதிவர்கள்' உம் வராமல் போயிருப்பார்கள்.(;)) இப்பவவாது புரிஞ்சிக்கங்க ஓய் நாங்க எது செஞ்சாலும் அதுக்கு பின்னாடி ஒரு விஷயம் இருக்கும்.

சனிக்கிழமை காலையிலேயே ஆசீப் பெங்களூர் வந்துவிட்டார், 6.00 மணின்னு சொல்லிவிட்டு ஐந்து மணிக்கே வந்து மடிவாலாவில் உட்கார்ந்திருவரை கண்டுபிடித்து சாயா வாங்கிக் கொடுத்து "கீர போண்டாவில்" உட்கார வைத்தது தான். அப்புறம் அவர் சனிக்கிழமை இரவு சென்னைக்கு கிளம்பும் வரை ஒரே "டிராவலிங்" தான். ஓசியில் நான் பெங்களூரைச் சுற்றிக் காண்பித்ததை ஆசீப் சொல்லுவார் ;). வீட்டிற்கு வந்ததும் நான் கே டிவியில் போட்டுக்கொண்டிருந்த "வர்றார் சண்டியரில்" ஒன்றிவிட அண்ணாச்சி லாப்டாப்பில் பொய் சொல்லிக்கொண்டிருந்தார் எல்லோரிடமும். இடைப்பட்ட நேரத்தில் அண்ணாச்சி எனக்கே எனக்கென்று ஆசையுடன் வாங்கிவந்திருந்த லட்டு பாக்ஸை ஒரே ஆளாய் காலி செய்தேன். ;)

எங்க வீட்டு செல்ல ஸ்கூபி(ஓனர் வீட்டு நாய்)யிடம் சொல்லிவைத்திருந்தேன், இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கான சாப்பாடு வருமென்று; ஆனால் செந்தழல் ரவி ஏமாற்றிவிட்டார். நாய்கடிக்கு யாரோ எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து குளிக்கவேண்டும் என்று புரளி கிளப்பிவிட, தழலு ஏகப்பட்ட எலுமிச்சை பழங்களை வாங்கி வீட்டில் முடக்கிவிட்டதால் அல்சூரு ஏரியாவில் எலுமிச்சை பழங்களுக்கான கிராக்கி ஏகமாகிவிட்டிருந்தது. அவர் கொரியா போவதே 'நாய்' இனத்தை பழிதீர்க்கத்தான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

9.30 க்கெல்லாம் ரெடியாகி நாங்கள் கிளம்பிக்கொண்டிருந்தோம், பெரிசா லால் பா(ஹ்)வில் இருப்பதைப் போல் சீனைக் கிளப்பிய தழல், நாங்கள் போய்ச் சேர்ந்து "லால் பா(ஹ்) காதலர்கள்", அவர்கள் ஏன் லால் பாஹ் வருகிறார்கள், பிறகு போலீஸ்காரர்களின் கைகளில் இருந்த லத்தி யாரிடம் என்ன விதமாய் எப்படி பேசும் என்றும், இப்படியெல்லாம் பொது இடங்களில் தவறு செய்வது இந்தியக் கலாச்சாரத்தை பாதிக்கும் என்று நான் சொல்ல, காதலர்களுக்கா வாதாடிக்கொண்டிருந்தார் ஆசிப். இப்படி நாங்களாக நேரத்தை கழுத்தைப் பிடித்து தள்ளிக்கொண்டிருக்க 'லேட்டாக' வந்தார் தழல்.

வந்ததும் வராதுமாக தன்னுடைய 'எக்ஸ்ரே' கண்களால் சிறிது தூரத்தில் த்ரோ பால் விளையாடிக்கொண்டிருந்த எட்டு பெண்கள் கண்ணில் பட. அவருக்கு நாங்கள் உட்கார்ந்திருந்த பெஞ்சில் 'சீட்டு' உட்கார மாட்டேன் என்றுவிட்டது. அந்த மூவரில் இந்தச் செயலை எதிர்த்தது "ஆணீய 'வியா'தி" நான் தான்; ஆனாலும் ஆசிப் விட்ட அலும்பு எழுத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது.(அண்ணாச்சி உங்களுக்கு வாக்கு கொடுத்தாப்லவே என்ன விஷயம் எல்லாம் நீங்களும் தழலும் பேசினீங்கன்னு எழுதலை போதுமா).

பின்னர் ராம் ரவிக்கு தொலைபேச, இருவரும்(ஆசிப் மற்றும் ரவி) மனமேயில்லாமல்(அதுவரை த்ரோ பால் விளையாடிக்கொண்டிருந்தவர்கள்; பின்னர் களைத்துப் போய் "படம் பேர்" நடிச்சிக் காண்பித்து கண்டுபிடிக்கும் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.) இருவரையும் தள்ளிக் கொண்டு வருவதே பெரும்பாடாய்ப் போய்விட்டது, தூரத்திலிருந்தே பார்த்தே 'ராமை' அடையாளம் கண்டுகொண்டு(போட்டோவில் பார்த்திருக்கிறேன்) நான் அவர் தானே ராம் என்று சொல்ல, ஏற்கனவே 'ராமை' நேரில் பார்த்திருந்தும் இல்லையென்று சொன்னார் ரவி.(ராம் அங்கில்லை என்றால் திரும்பவும் 'விளையாட்டை' பார்க்கலாமென்று தான்.) ஆனால் ராம்; ரவியை அடையாளம் கண்டுகொண்டதால் இவர்கள் விளையாட்டு ஒரு முடிவிற்கு வந்தது.

பின்னர் ஒருவழியாய், செல்லா, தீபா அவரது கணவர், பிரியா, ராம் பின்னர் கடேசியாக நம்ம ராசா வர, எங்கே உட்கார்வது என்று கேள்வி எழுப்பப்பட டீபால்டாக 'ரவி' முன்பு பிகர்கள் த்ரோ பால் விளையாடிக் கொண்டிருந்த இடத்தைச் சொன்னார். ஆனால் மற்றவர்களுக்குத்தான் ஒன்றும் தெரியாதே தெரியாமல் வர; அந்த பிகர்கள் அதற்குள் அந்த ஆட்டமும் புளித்துப்போய் வெளியேறியிருந்தார்கள் மனமுடைந்து போனார் ரவி. அப்படியிப்படி என்று ஒரு இடத்தில் உட்கார்ந்தோம், நீங்க யாரும் First Knight படம் பார்த்திருக்கிறீர்களா, அதில் ஸீன் கானரி அவரது படைத்தளபதிகளுடன்(?) உட்காருவாரே அதுமாதிரி ஒரு இடத்தில் உட்கார்ந்தோம்.(எங்க கற்பனை கொஞ்சம் பெரிசா இருக்கும் கண்டுக்கிடாதீங்க). இதிலெல்லாம் அனானிமஸ்கள் மிஸ்ஸாகி விட்டார்கள்.

சிறிது நேரத்தில் ஐயப்பன் அவரது குடும்பத்துடன் வர, அதற்கு சிறிது நேரத்தில் இம்சை அரசி என்று சொல்லப்படுபவரும்(;)) ஜி-யும் வந்தார்கள்(இந்த ஜி தான் என்னுடைய - ஒரு காதல் கதையை - மரத்தடியில் படிச்சிட்டு அதுமாதிரி ஒரு கதை எழுதணும்னு வலைபதிவிற்கு வந்தேன்னு சொன்னார் - என் நெஞ்சில் பாலை வார்த்தவர். (இனிமே யாராவது சொல்லுவீங்க அப்படி ;-)) கரெக்டா ப்ராக்கெட் க்ளோஸ் பண்ணியிருக்கேனா?). அவர்கள் வந்ததும் ஒரு சிறு அறிமுகம் எல்லோரும் அவரவர்களைப் பற்றி சொல்லி முடித்ததும். ராம் தன்னுடைய லாப்-டாப்பைப் பற்றி என்னமோ(;)) சொல்லி ஓப்பன் செய்துவைத்தார். டெஸ்க்டாப்பில் முருகன் படம்; அது எல்லாம் சரி டெஸ்க்டாப்பில் முருகன் படம் வைச்சிருக்கும் பச்சை புள்ளையின் பர்ஸனல் லாப்டாப்பிற்கு பாஸ்வேர்ட் ப்ரொடெக்ஷன் வேற(ஈஸ்வரோ ரக்ஷத்). இடைப்பட்ட நேரத்தில் எல்லாம் யாரோ ஒரு பெண் பெயரைச் சொல்லி ராமை ஓட்டிக்கொண்டிருந்தார்கள், ஜி - இம்சை அரசி - ஐயப்பன், பேசிக்கொண்டிருந்ததை வைத்து ராமின் லவ் மேட்டர் எதையோ தான் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று தெரியவந்தது. (என்னையையா மிரட்டுறீரு - இதெப்படி இருக்கு - ;) ஆனால் பேசிக்கொண்டிருந்த பெயர் நினைவில் வரமறுக்கிறது - ரொம்பவும் முக்கியமாகத் தேவைப்படுபவர்களுக்கு யோசித்து சொல்லப்படும் - மெயில் அனுப்பலாம்)

பின்னர் போட்டோ எடுப்பது எப்படி என்ற செல்லா-ஐயப்பன் செஷன் தொடங்கியது. இது ஆரம்பித்த சிறிது நேரத்தில் சுபமுகா வந்திருந்தார். 48,000 RS, SLR ஒன்றை குறிவைத்திருக்கும் எனக்கு ரொம்பவும் இன்ஃபர்மேட்டிவ்வா இருந்தது அந்தப் பதிவு முழுவதுமே. அப்பர்ச்சர், ஷட்டர் ஸ்பீடு, லைட்டிங் அது இது என்றெல்லாம் எல்லா விவரங்களையும் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் சொல்லியது உபயோகமாயிருந்தது. உடன் உடன் படமெடுத்து அதை லாப்டாப்பில் போட்டுக் காண்பித்து எது எப்படி ஏன் இப்படி என்று விளக்கியது பயனுள்ளதாக இருந்தது.

இடையிலேயே பலூன் மாமா என்ற கல்வெட்டு வந்துவிட்டாலும் புகைப்பட விஷயத்தில் கலந்துகொள்ளாமல் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துவந்தார்.

பின்னர் அங்கிருந்து ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தோம், இன்னமும் கொஞ்சம் வாங்க வேண்டியிருந்ததால் ஜி, ராம், ஐயப்பன் சென்றிருக்க நான், பலூன்மாமா, ஆசிப், இம்சை(இனி இந்தப் பெயரால் இவர் இந்தப் பதிவில் குறிப்பிடப்படுவார்) மற்றும் பிரியா ஆகியோர் மட்டும் தான் முதலில் இருந்தோம். மொத்தம் அறுபது குழந்தைகள் இருந்தார்கள், நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று பலூன் மாமா தொடங்கியதுமே. குழந்தைகளின் முகங்களில் தொடங்கிய புன்னகை கடைசிவரைக்கும் நீடித்திருந்தது. சொல்லப்போனால் அந்த உற்சாகம் பற்றிக் கொள்ள நாங்களும் ஏகப்பட உற்சாகத்தில் இருந்தோம். முதலில் பலூன்மாமா மட்டுமே தொப்பி செய்துகொண்டிருந்தார். பின்னர் அது அப்படியே இம்சை, ப்ரியா, நான், ஆசீப் எல்லோராலும் பலூன்மாமாவால் கற்பிக்கப்பட்டு செய்து தரப்பட்டது.

எனக்கும் ப்ரியாவிற்கும் பலூன்களை யார் அதிகம் உடைப்பது என்று போட்டி இருந்ததைப் போன்று உடைத்து நொறுக்கினோம். நான் அதிகமாக உடைத்தேன் என்பதைப் போன்ற ஒரு மாயத்தை ப்ரியா உருவாக்கினார் ஆனால் அதிகம் உடைத்தது அவர்தான் என்பதை இந்தப் பதிவின் மூலம் 'பதிவு' செய்கிறேன். சொல்லப்போனால் இம்சையும் ப்ரியாவும் நன்றாகவே தொப்பி, கத்தி செய்தார்கள். என்னை பர்ஸனலாக அறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் எனக்கு இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகம் இல்லாதது. ஆனால் இந்தச் சந்திப்பு அந்த வரையறையை மாற்றியிருக்கிறது என்றால் அது 100% உண்மை. பின்னர் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்தி பரிசளித்தார்கள் ராமும் மற்ற வெளியில் சென்று மீண்டு வந்தவர்களும். பின்னர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சிகரமாக நிறைவு செய்யப்பட்டது.

இந்த அற்புதமான ஒரு வாய்ப்பை வழங்கிய ராமிற்கும் ஐயப்பனுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றிகள். நீண்ட நாட்களுக்குப் பிறகு கற்பனைக் கோடுகளைச் சுருக்கி மகிழ்ச்சியாக இருந்தேன். பின்னர் அருகில் இருந்த சாந்தி-சாகரில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு கிளம்பினோம்.

PS: எதுவும் விட்டுப்போயிருப்பதைப் போல் தோன்றினால் பின்னூட்டத்தில் எழுதுகிறேன்.

* - பெண் பதிவர்கள் சில முக்கியமான வேறு முக்கியமான காரணங்களுக்காக வரவில்லை நான் இங்கே எழுதியிருப்பது சும்மா ஜல்லிக்காக, மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In பதிவர் சந்திப்பு

பெங்களூர் வலைபதிவர் சந்திப்பு படங்கள்(மட்டும்)







































ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் - மிகவும் மனநிறைவைத் தந்த சந்திப்பு. ஆர்கனைஸ் செய்தவர்களுக்கு நன்றிகள்.

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In வகைப்படுத்தப்படாதவை

பெங்களூரில் எர்த்-க்வேக்கா ?????

உண்மையிலேயே இன்னிக்கு கம்பெனியில் உட்கார்ந்திருக்கும் பொழுது சுமார் 5.45 PM போன்ற சமயத்தில் பில்டிங்க் ஆடுவதைப் போலிருந்தது. முதலில் புரியவில்லை பின்னர் இரண்டாவது முறையும் அப்படியே ஒரு பீலிங். சரி முட்டாள்னு சொல்லிடுவாங்கன்னு சொல்லலை. சிறிது நேரத்தில் மனம் ஒப்புக்கொள்ளாமல் அப்படி வேறயாராவது பீல் பண்ணிங்களாய்யா? என்று கேட்டேன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மக்களிடம்.

எல்லோரும் ஒன்றைப்போல இல்லையென்று சொல்ல, என்னுடைய டீம் லீடர் மட்டும் தான் உணர்ந்ததாகச் சொன்னான்.

ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் உணர்ந்தது தவறோ இல்லை என்ன நடந்ததுன்னு எந்த நியூஸ் சேனலும் இதைப் பற்றிய நியூஸ் போட்ட மாதிரி தெரியலை. நியூஸிற்காக வெய்ட்டிங்க். பெங்களூரில் நில அதிர்ச்சி வர வாய்ப்பேயில்லை என்று சகோதரி சொன்னாலும் கிர்ர்ர்ர்ர் என்று இருக்கிறது.

இதற்கும் நாளை ஆசிப் பெங்களூர் வருவதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In வகைப்படுத்தப்படாதவை

நான் வரலை இந்த விளையாட்டுக்கு

லக்ஷ்மி உடனான என்னுடைய சிவாஜி படம் பற்றிய கருத்து பரிமாற்றத்தை போன பதிவுடனேயே நிறுத்திவிட்டேன். அதற்கு அவர் எழுதிய பதிவுக்கும் பதில் எழுத வேண்டிய அவசியம் இல்லையென்றே நினைக்கிறேன். இந்த விவாதம் போகும் இடம் நன்றாகத் தெரிவதால் பிரகாசமாக எஸ்கேப் ஆகிறேன்.

வர்ட்டா

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In கவிதைகள்

புலிக்குட்டியாய் ஒரு வாழ்க்கை

வெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின்
முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை
தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய்
வீரியம் பெறுகிறது என் இருப்பின் மீதான
மற்றவர்களின் கோபம்

அடர்கானகத்தின் வழியேயான
முடிவென்னும் பெருவெளியை நோக்கிய பயணத்தின்
இடையில் இயக்கத்தை நிறுத்த முயலும்
அத்தனைப் பொறிகளையும் சுட்டு வீழ்த்தியவனாய்
நகர்ந்து கொண்டேயிருக்கிறேன்
கடக்கவேண்டிய தொலைவை மட்டுமே கருத்தில் நிறுத்தி

சிறிதும் பெரிதுமாய்
வண்ணக்குழப்பங்களுடன் கூடியதாய்
பல சமயங்களில்
பொருந்தாததாயுமான முகமூடிகள்
பயணத்தின் நடுவே கழன்று விழுகின்றன
பெருஞ்சிரிப்புகளைப் புறக்கணித்தவனாய்
நான்

நண்பர்கள் பகைவர்களாய்
நீலமேகம் நொடியில் நெருப்பு மழை பொழியும்
இருண்மையாய் மாறி பயமுறுத்தும் மாற்றங்கள்
காலைவாறிவிடவே காத்திருப்பவை போல்
எகிறிக்குத்தோ அடியில் குனிந்தோ எப்படியோ
இருப்பை மட்டும் நிச்சயப்படுத்து
நீளும் என்னுடைய பயணத்தின் முடிவான
பெருவெளியைப் பற்றிய பயமெப்போதும் இருந்ததில்லை
செய்துகொண்டிருக்கும் பயணமே
பெருங்கனவாய் அகலும் சாத்தியக்கூறுகள்
புரிவதால்.

Read More

Share Tweet Pin It +1

5007 Comments

In Science ஜல்லிஸ்

கொண்டையை மறைப்பது எப்படி

பெரும்பாலும் இணைய உலகில் உலவுபவர்கள் அனைவருமே ஐபி, ஐபி டிராக்கர் போன்ற டெர்ம்களை கேள்விப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள். அதனுடைய பங்ஷனாலிட்டியும் பெரும்பாலும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் தமிழ்மணத்தில் அடிக்கடி ஐபி டிராக்கர் வைத்திருக்கிறேன் தேர்ட் பார்ட்டி ஐபி டிராக்கர் வைத்திருக்கிறேன் என்று எல்லா சொல்பவர்கள் கூட ஒரு பங்ஷனாலிட்டியை புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது.(இல்லை நான் புரிந்துகொள்ளவில்லையென்றால் புரிந்துகொள்ளவே இந்தப் பதிவென்றும் வைத்துக்கொள்ளலாம்.)

சாதாரணமாக நபர்கள் ஐபி தெரிந்துவிட்டது என்று சொல்லும் பொழுது பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, முன்பே கூட ஒரு முறை இதைப்போன்ற பிரச்சனை எனக்கு வந்த பொழுது சொல்லியிருக்கிறேன். ரொம்ப கரெக்டா நீதான் பின்னூட்டம் போட்டன்னு சொல்லவே முடியாதுன்னு. சமீபத்தில் பெயரிலி அண்ணாச்சி ஒரு பதிவில் சொல்லியிருப்பதைப் பார்த்ததும் திரும்பவும் அந்தச் சந்தேகம் வந்தது. இந்தப் பதிவு நீங்கள் ப்ளாக்கர் உபயோகிக்கிறீர்கள் என்றால் மட்டுமே அதுவும் இலவச சேவை மட்டுமே.(பெயரிலி அண்ணாச்சி உபயோகிக்கிறது காசு கட்டிய சேவைன்னா நான் எஸ்கேப் அவர் பெயரை உபயோகித்ததில் இருந்து ;))

Blogger ஐப் பொறுத்தவரை நீங்கள் பின்னூட்டம் போடுவதற்கு தனிப்பட்ட இடத்தைத் தருகிறார்கள். எப்படியென்றால் என்னுடைய இந்தப்பதிவின் கீழ் "நீங்களும் சொல்லுங்களேன் ஏதாச்சும்" என்று பின்னூட்டம் போடவேண்டியவர்கள்/விரும்பியவர்களை அழைத்திருப்பேன் அதுவரை தான் உங்கள், ஐபிடிராக்கர், தேர்ட்பார்ட்டி ஐபி டிராக்கர் எல்லாம் உபயோகமாகும். அந்தப் பேஜை கிளிக் செய்துவிட்டீர்களேயானால். அது Bloggerன் சொந்தப் பதிவு அதில் யாராலும் ஐபிடிராக்கரை உபயோகிக்க முடியாது. (http://www.blogger.com/comment.g?blogID=15417112&postID=6031665407035373379 இங்கே)

இப்ப என் கேள்வி, உங்கள் பதிவு தமிழ்மணத்தில் வந்ததுமே ஒருவர் உங்கள் பதிவிற்கு கிளிக் செய்து வருகிறார். மேற்சொன்ன பின்னூட்ட இணைப்பை கிளிக் செய்கிறார்(Open in a new window) என்று வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் முன்னால் வந்த Parent Window வை க்ளோஸ் செய்துவிடுகிறார். இந்தப் பின்னூட்ட பக்கத்தை ஆறப்போடுகிறார்(ஒரு அரைமணிநேரத்திற்கு என்று வையுங்கள்). பின்னால் இருக்கும் அநாநிமஸ், அதர் ஆப்ஷனைக் கொண்டு பின்னூட்டம் போடுகிறார் என்றால் நீங்கள் உங்களிடம் இருக்கும் ஐபிடிராக்கரை வைத்து கண்டுபிடிக்கும் ஐபி யாருடையதாக இருக்கும். உண்மையிலேயே புரியவில்லை, இது மற்றவர்களுக்கு பெரும்பாலும் தெரிய வாய்ப்பில்லையென்றாலும் பெயரிலிக்குமா(அண்ணாச்சி இது சும்மா ஒரு உதாரணத்திற்கு - மேற்படி அநாநிமஸ் பின்னூட்டம் எனக்கும் வருத்தத்தை கொடுப்பது தான் - ஆனால் அதைக் கண்டுபிடிக்கும் முறை சரியானதுதானா? என்ற ஒரே ஒரு கேள்வி)

நான் சொன்ன இந்த அரைமணிநேர கணக்கும் கூட சரிவராது. இன்னும் தெளிஞ்சவனா இருந்தா. வெறுமனே ஜாவா அப்ளிகேஷன் ஒன்றில் உங்கள் பதிவின் பெயரைக் கொடுத்தேனேயானால்(http://wandererwaves.blogspot.com) உங்களின் பதிவின் எண்ணையும் ப்ளாக்கர் எண்ணையும் கண்டுபிடித்துவிட முடியும். http://www.blogger.com/comment.g?blogID=9437046&postID=7993645203957527874 அதாவது மேற்சொன்ன நம்பர்களைச் சொல்கிறேன். இதன் காரணமாக உங்கள் பதிவில் கிளிக்கே விழாமல்(உங்கள் ஐபி டிராக்கர்களை ஏமாற்றி) நேராக பின்னூட்ட பெட்டியை அடைய முடியும். இல்லையா? நான் சொன்ன கணக்கு சரிவருதா?

சரி எல்லோருக்குமா ஜாவா ப்ரொக்கிராம் கிடைக்குதுன்னு நீங்க கேட்கலாம். சரிங்க உங்க பதிவுக்கு வர்றாரு, பின்னூட்ட பெட்டியின் உரலை காப்பி செய்து நோட்பேடில் வைத்துக் கொள்கிறார். ஒரு நாள் கழிச்சு போடுறார் பின்னூட்டத்தை என்ன செய்வீர்கள் எப்படி கண்டுபிடிப்பீர்கள்.

ஏன் சொல்கிறேன் என்றால் இது போன்ற ஆட்கள் பின்னூட்டம் போடும் பொழுது ஐபி டிராக்கர் வைத்திருக்கிறேன் தேர்ட் பார்ட்டியோடது வைத்திருக்கிறேன் என்றெல்லாம் பெரிய ஆட்கள் சொல்வதை நம்பி சின்ன ஆட்களும் ஏடாகூடமாகச் சொல்கிறேன் பேர்வழியென்று சும்மா பார்த்துட்டுப் போனவனையெல்லாம் சொல்றாங்க. இது உண்மை எனக்கே நடந்திருக்கு.

இல்லை என் கான்செப்டில் தப்பிறுக்குன்னா சொல்லுங்க திருத்திக்குறேன். கொண்டையை மறைப்பது எப்படி என்று நேரடியாகச் சொல்லவில்லை இந்தப் பதிவில்.

டிஸ்க்கிளெம்பர் - நான் சொன்ன இந்த இன்பர்மேஷன் பெரும்பான்மையானோருக்கு தெரிந்திருக்கக்கூடிய ஒன்றுதான். இந்தப் பதிவின் மூலம் யாருக்கும் கெட்டது செய்வது எப்படி என்று சொல்லித்தரவில்லை. அதற்கான முயற்சியும் இது இல்லை ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்கிறேன். அவ்வளவே.

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In வகைப்படுத்தப்படாதவை

லக்ஷ்மிக்கு சில விளக்கங்கள்

முதலில் ஒரு விஷயம் சிவாஜி படத்தின் ஹீரோயினியை - அதாவது உங்கள் டெர்மில் - அண்ணியை நான் முட்டாளாக பார்க்கவில்லை. திருப்பதி பத்மாவதி தாயார் கழுத்தில் இருந்து தாலி கழன்று விழுந்ததாக வந்த செய்திக்காக(புரளியாகவும் இருக்கலாம்) இரவோடிரவாக ஒரு புதுத் தாலியை தயார் செய்து கட்டிக்கொண்டவர்களை நீங்கள் முட்டாள்களாகப் பார்க்கிறீர்களா? நான் அதைப்போன்ற விஷயத்தை சாதாரணமான ஒன்றாகத்தான் பார்க்கிறேன்; அதைப்போலவே இதையும் ஒரு சாதாரணமான ஒரு விஷயமாகத்தான் பார்க்கிறேன் 'அண்ணி' ரஜினியின் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்ததும் சிபிஐயிடம் லாப்டாப்பை கொடுப்பத்தையும். படத்தில் வரும் ஹீரோயினியைப் போன்ற ஜோசிய ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை நீங்கள் பார்த்ததில்லை என்று தெரிகிறது. நான் நிறைய பார்த்திருக்கிறேன் எங்கள் வீட்டிலும் எங்கள் சுற்று வட்டாரத்திலும்(கிணற்றுத் தவளைன்னு சொன்னாலும் கவலையில்லை எனக்கு - நான் பார்த்திருக்கிறேன், எனக்குப் புரிகிறது உண்மையில் நடக்கும் ஒரு இயல்பைச் சொல்லியிருக்கிறார்கள் என்று) பார்த்திருக்கிறேன். அவர்களை நான் முட்டாளாகப் பார்க்கவில்லை நிச்சயமாய்.

விமர்சனம் எழுதலாம் தவறில்லை என்று சொல்லிவிட்டு சுஜாதாவை இழுத்திருந்தீர்கள் நல்லாதாய்ப் போயிற்று, தலைவரே ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார் எப்பொழுது என்றால் "டெல்லியில் ஒரு விழா நடந்த பொழுது 'கணேஷ் - வசந்த்' கதைகளை கணையாழிக்காக எழுதுவீர்களா என்று கேள்வி எழுந்த பொழுது. எழுதுவது ஆயிரக்கணக்கான இன்டலக்சுவல்களுக்காகவா இல்லை கோடிக்கணக்கான சாதாரண வாசகர்களுக்காகவா என்று" அதனால் நீங்கள் விமர்சனம் எழுதியதைக் குறை சொல்லவில்லை, ஆனால் நீங்கள் கேட்டிருந்தது மாதிரியான படங்கள் ஏன் எடுப்பதில்லை என்பதற்கான காரணங்களாக(யாருக்காக படம் எடுக்கிறார்கள் - etc) நான் சொல்லியதை உங்களை விமர்சனமே எழுதக்கூடாதென்று சொல்லியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

எழுதுவதற்காக எழுதுவது ஒரு விஷயம் ப்ராக்டிகலாக யோசிப்பது ஒரு விஷயம்.(ஏனென்றால் நான் என் கல்யாணம் பற்றி பேசியது ப்ராக்டிகலான ஒன்று - இன்டலக்சுவல்களான பெண்களை அக்காவாகவோ தங்கையாகவோ நிறைய பேர் ஏற்றுக்கொள்வார்கள் மனைவியாக யார் ஏற்றுக்கொள்வார்கள் - யாரோ சொன்னது) நீங்கள் கூலாகப் பதிவு போட்டதும் எல்லோரும் சிரிச்சிட்டு போய்ட்டாங்கன்னும் நான் கலகக்காரனாய் என் பதிவில் அதைப்பற்றி கேள்வி கேட்டிருந்தேன் என்று சொல்லியிருந்தீர்கள். நீங்கள் ஒட்டுமொத்தமாய் காமெடிக்காக அந்தப் பதிவெழுதியிருந்தீர்கள் என்றால் நான் ஜஸ்ட் எஸ்கேப் - இல்லை சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் அதை நமது நக்கல் தொணித்த பதிவில் இருந்து தொடங்கலாம் என்றும் நினைத்து எழுதியிருந்தீர்கள் என்றால் தொடரலாம்.

//உங்களுக்கு முட்டாள் பெண் மனைவியாக வர வேண்டுமென்று ஆசையிருப்பின் நீங்களும் அப்படியே இருப்பதாகத்தான் அர்த்தம்.//

நீங்கள் என்னை முட்டாள் என்று நினைப்பதைப் பற்றி கவலைப்படவில்லை என்றாலும் நான் இது போன்ற ஒரு விஷயத்தை என் பதிவில் எங்கே சொல்ல்யிருந்தேன் என்று காட்டலாம். இன்டலக்சுவல் பெண்களை விரும்புவதில்லை என்ற வரிகளுக்கு நான் முட்டாள் பெண்களைத் திருமணம் செய்து கொள்வேன் என்று அர்த்தம் ஆகாது.

//டிகிரி முடிச்சதும் 2 வருஷம் சும்மா இருந்து, தையல், சமையல்னு கத்துகிட்டு கல்யாணத்துக்காகவே காத்துக்கொண்டிருக்கும் டிபிகல் தமிழ்ப்பெண்களைத் தான் பிடிக்கும்.//

அப்படியிருக்கும் பெண்களை நான் நிச்சயம் முட்டாளாக நினைக்க மாட்டேன், அப்படி நினைத்திருந்தால் அதை உங்களிடம்(;-)) சொல்லியிருக்க மாட்டேன் தானே. பெண்களை முட்டாள்த்தனமான, சாதாரணமான, இன்டலக்சுவல்தனமான என்று கேட்டகிரி பிரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் நான் சொல்ல வந்தது, சார்த்தரையோ, பதிவுலகையோ, நீட்ஷேவையோ தெரிந்திராத பெண்களைத்தானோ ஒழிய முட்டாள் பெண்களைக் கிடையாது. நீங்கள் சார்த்தரையும் நீட்ஷேவையும் தெரியாத பெண்களை முட்டாள்கள் என்று எடுத்துக்கொண்டால் நான் பொறுப்பில்லை. திரும்பவும் ஒருமுறை சொல்கிறேன் நீங்கள் வேண்டுமானால் சிவாஜியில் காண்பிக்கப்பட்ட 'அண்ணி' கதாப்பாத்திரம் முட்டாள்த்தனமாகயிருப்பதாகச் சொல்லலாம், நான் அதைச் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் மறுக்கிறேன்; ஜோசிய ஜாகத்தின் மீது இருக்கும் நம்பிக்கைகளையும் அதன் காரணமாக தன் கணவனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதென்றும் நினைப்பதை சாதாரணமான விஷயமாக பார்க்கிறேன்.(இங்கே எங்கேயும் நான் நம்புகிறேனா இல்லையா என்பதல்ல மேட்டர், அப்படி நம்புகிறவர்களை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதுதான்.)

இதன் காரணமாக நீங்கள் முட்டாள் என்று என்னைச் சொல்லி அதற்காகக் கொடுத்திருந்த அத்தனை விளக்கங்களையும், உதாரணங்களையும் ஒன்றும் சொல்லாமல் விட்டு விடுகிறேன்.(ஆனால் நீங்கள் சொல்லியிருந்த கீரிக் லவ் பற்றி முன்பே தமிழ்மண விவாதக்களத்தில் எழுதியிருக்கிறேன். அங்கே எனது அதுபற்றிய எண்ணத்தைப் பார்க்கலாம்)

அதேபோல் நாத்தீகவாதியாக இருக்கும் கணவன் தன் மனைவியின் விருப்பத்திற்காக அவளை திருநள்ளாரு அனுப்பியதை வைத்து ரஜினிகாந்தை மிகச்சிறந்த பெண்ணியவாதி என்று ஏன் சொல்லக்கூடாது. அவர் ஆணாதிக்கவாதியாகயிருந்தால் தன் பெண்டாட்டியிடம் இதென்ன "முட்டாள்த்தனமா" இருக்கு என்று சொல்லி அடக்கியிருக்கலாம். ஆனால் அதையா இந்த சமூகம் விரும்புகிறது ;-) இப்படிச் சொல்வது எப்படி ஜல்லியாகயிருக்குமோ அப்படித்தான் இருந்தது நீங்கள் அந்தப் பதிவில் 'அண்ணனை' MCP ஆகச் சொன்ன பொழுது.

//சமூக சீர்திருத்தத்துக்கு உங்களுக்கான வழி அது. என் வரையில் இரவு 10 மணிக்கு தியேட்டர் நிர்வாகியிடம் போய் கத்தினால் என்ன பலனிருக்கும் என்று தெரியும். கஸ்டமர் சர்வீஸ் என்கிற பதத்திற்கான சரியான பொருளே தெரியாத நம் சமூகத்தில் இதை கையாளும் முறை வேறு - காசு அதிகம் கொடுத்தாலும் இப்படி ஒரு போதும் நடக்காது என்கிற உத்ரவாதமுள்ள தியேட்டர்களுக்கு மட்டுமே(உதா: சத்யம்) போவது என்று முடிவெடுப்பது அதில் ஒன்று.//

இதுவும் நீங்கள் சொன்னது தான்.

//நள்ளிரவில் ஒரு பெண் தனியா நடமாடற அன்னிக்குத்தான் உண்மையான சுதந்திரம்ன்னு அது கூட அந்த லட்சிய சமுதாயத்தை பத்தித்தாங்க. இப்போதைக்கு தவிர்க்கறதுதான் தற்காலிகத்தீர்வுன்றதை வேணும்னா நான் ஒத்துக்கறேன். ஆனா அதுவே நிரந்தரமாயிடக்கூடாது. சமூகப்பிரச்சனைகளைப்பத்தி பேசும்போது கொஞ்சமாவது தொலைநோக்கு வேணும். புரியுதா?//

இதையும் சொன்னது நீங்க தான் - ஞாபகமிருக்கா பலருக்கு இந்த விஷயம் புரியாமயிருக்கலாம் உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன். வேணும்னா கீழிருக்கும் பத்தி உதவும் உங்கள் நினைவுக்கு

//நடமாட்டத்தக் குறைச்சுக்கணும்னா குறைச்சுக்கத்தான் வேணும்(ஆணாயிருந்தாலும் சரி, அடிச்சுப்போட்டுட்டு பர்ஸ் அடிச்சிட்டுப் போய்டுவான்னாலும் சரி) அதுயில்லாம, என்னை அடிச்சிப்போட்டுட்டு பர்ஸ் எடுத்துட்டுத்தானே போவான் பரவாயில்லைன்னு அங்கப் போய் நிக்கிறது என்னைப் பொறுத்தவரையில் தப்புதான்.

ஆட் ஆயிருக்கோ இந்த பதில்.// -----

------------------------------------------------------------------------------

கடைசியா ஒன்னு என்னைப் பற்றிய தனிநபர்த் தாக்குதல்களுக்கு(;)) நான் பதில் சொல்லப்போவதில்லை. அதேபோல் என்னைக் கிள்ளீட்டாங்கன்னு அழப்போறதும் இல்லை. என்னைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது ஆழ்ந்த எண்ணம். இந்தப் பதிவெங்கேயும் கோபமான மனநிலையில் எழுதக்கூடாதென்று நினைத்து அப்படி ஒரு வார்த்தைக் கூட வந்துவிடக்கூடாதென்று எழுதியிருக்கிறேன். அப்படியும் வந்திருக்குமென்று நினைத்தால் மாப்பு.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In Only ஜல்லிஸ்

ஆப்படிக்க வர்றவங்களுக்கு ஒரு அறிவுப்பு

முதலில் இந்தப் பக்கம் அந்தப்பக்கம், அவங்க(லக்ஷ்மி) சொன்ன பதிவுகள் நான் சொன்ன பதிவுகள் எல்லாத்தையும் படிங்க. அப்புறம் அடிங்க உங்க ஆப்பை. சும்மா நான் சொன்னேன்னோ இல்லை அவங்க சொன்னாங்கன்னோ, "பதிவையே படிக்கலை" ஆனாலும் இதுசரியில்லைன்னு போடாதீங்க பிட்டை.

பதில் பதிவு ரெடியாய்க்கிட்டிருக்கு....

தொடர்புடைய பதிவுகள்.

முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்
ஆறாம் விரல்களும் அர்த்தமற்ற முட்டாள்தனங்களும்
தமிழ்க் கலாச்சாரத்தோடு ஒரு பெண்

இது இப்ப எழுதினது குறைந்த பட்சம் இதையாவது படிங்க, மேற்படி அவங்க பதிவில் சொன்ன வரிகள் எல்லாம், நிறைய பதிவில் வார்த்தைகளுக்கு இடையில் இருந்து எடுத்தது. அதையும் படிங்க வேணும்னா லிங்க் கேளுங்க.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In Only ஜல்லிஸ்

முருகக் கடவுள் ஆணாதிக்கவாதியா?

சமீபத்தில் ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் முன்பே ஒரு முறை நட்சத்திர வாரத்தில் சொன்னதைப் போல் நான் சினிமா பார்ப்பதில் பாரபட்சம் பார்ப்பதில்லை. இது ஏதோ ஒரு கடவுள் பார்த்த பொழுது சொல்லப்பட்ட விஷயம் தான்

முருகன் ஏன் பிரணவ ரகசியத்தை அம்மாவிடம் சொல்லாமல் அப்பா சிவனிடம் சொன்னார்?

கிர்ர்ர்ர் எனக்கு சட்டென்று தோன்றிய கேள்வி முருகனன்பர்கள் பதில் சொல்லலாம்.

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In கவிதைகள்

சுரங்க விளையாட்டு

வீடுதோறும் வாசல்களில்
அகல் விளக்குகள் பொருத்தும்
அழகான நாட்களுள் ஒன்றில்
உன்னை முதல்முறை பார்த்தேன்
காற்றில் தள்ளாடும் சுடர்களை
இரு கைகளைக் குவித்துப் பொத்தி
காத்துக் கொண்டிருந்தாய்
உனது மஞ்சள் நிற பட்டுப் பாவாடையும்
காதுகளில் தொங்கிய லோலாக்குகளும்
சுடர் பட்டுப் பிரகாசித்தன
என் மகள் மஞ்சள் ப்ட்டில் லோலாக்கோடு
சுடர்களைக் காத்துக் கொண்டிருந்தாள்
எனது ஒளி பொருந்திய வாசல்களில்
அழகான நாட்களில்

----------------------------------------------------

ஒவ்வொரு அறையாகத்
திறந்து செல்வது எனக்குப்
பிடித்தமான விளையாட்டு
அறைகள் தோறும் வெவ்வேறு பக்கங்களில்
கதவுகள்
ஒன்றைத் திறந்து பிறிதொன்றில் நுழைந்து
வெவ்வேறு திசைகள் வழியாக
ஒருமுறை நுழைந்தால் திரும்ப வெளியேற
சில வாரங்களோ மாதங்களோ ஆகும்
களைப்படைந்தால் ஓய்வெடுக்கும்
சில அறைகளில்
உணவும் உடையும் பெண்ணும் உண்டு
அதிர்ஷ்டமிருந்தால் அவ்வறைகளுள் ஒன்ரை
இரண்டொரு நாட்களுக்கொருமுறையேனும்
அடைந்துவிடலாம்
எனது கோட்டைக்குக் கீழ்ப் பகுதியில்
இச்சுரங்க விளையாட்டு அரங்கை
என் முன்னோர்கள் நிர்மானித்தார்கள்
கிழவிகளாகிவிட்ட பெண்களையும்
காய்ந்து கருவாடாகிவிட்ட உடல்களையும்
சில அறைகளிலிருந்து அப்புறப்படுத்துவதுதான்
இன்றைக்கு என் ஆட்சியின்
ஒரே பிரச்சனை.

இந்த இரண்டு கவிதைகளும் ரமேஷ்-பிரேமின் "உப்பு" கவிதைத் தொகுப்பில் வெளியாகியிருந்த கவிதைகள்.

நன்றி ரமேஷ் பிரேம்

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In வகைப்படுத்தப்படாதவை

தமிழ்மணம் வாசிப்பில்

தமிழ்மணம் வாசிப்பில் என்ற தலைப்பில் எழுத எனக்கு முதலில் அருகதை உள்ளதா என்ற கேள்வி தான் முதன்முதலில் தமிழ்மண நிர்வாகம் எழுதச் சொன்ன பொழுது முதலில் தோன்றியது. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ்ப் பதிவுகளில் இயங்கி வருவதால் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் என்னுடைய தீவிரமான வாசிப்பு என்பது இரண்டாண்டுகளுக்கு முன் தமிழ்மணம் என்னிடம் அறிமுகம் ஆன பொழுதோ இல்லை அதற்கு முன் தமிழ் இணையம் பழக்கத்தில் வந்த பொழுது இருந்தது போன்றோ இல்லாமல் மட்டப்படுத்தப் பட்டதாய் இருக்கிறது. அதாவது என்னுடைய வாசிப்பின் பரப்பளவை நானே சுருக்கிக் கொண்டு, இருந்து வருகிறேன். பல நல்ல பதிவுகளை இதனால் இழந்திருப்பேன், நிச்சயமாய். சரி இந்த வார தமிழ்மணத்தில் வாசித்த மிகவும் பிடித்த சில ஆக்கங்களை வழிமொழிய இருக்கிறேன். சொல்லப்போனால் இத்தனை ஃபார்மலாக இல்லாத விதத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்க வேண்டிய ஒருவிஷயம். சரி இப்பொழுதாவது எழுதுகிறேன்.

இன்னுது என்று வகைப்படுத்த முடியாதபடி, ஏகப்பட்ட சிவாஜி The Boss பற்றிய விமர்சனங்கள் இந்த வாரத்தில் வந்திருந்தன. அவைகள் ஒட்டுமொத்தமாக வாசிப்பவர்களின் கவனத்தைக் கவர்ந்திருந்தன என்ற உண்மை, சூடான பகுதிகளில் பெரும்பாலும் சிவாஜி பற்றிய தலைப்புக்களே இடம்பெற்றிருந்ததன் ஆதாரம். அடுத்தது அசுரன் தொடங்கிவைத்திருந்த வீரமணி பற்றிய விவாதம், பின்னர் வரவனையான் ம.க.இ.கவின் சந்தேகத்திற்குரிய தலைமை பற்றிய பதில் இடுகையால் சூடுபிடித்தது. சுகுணா திவாகரின் சுந்தரராமசாமி : உதிர்ந்த இலையும் சேர்ந்த குப்பையும் பதிவு நிறைய கேள்விகளையும் அதற்கான மிகச்சில பதில்களை பின்னூட்டங்களில் கொண்டிருந்தது. வைரமுத்துவின் கவிதை வரிகளில், எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போய்விடுங்கள் ஆனால் நாளை உங்கள் கல்லறையைத் தோண்டி கேள்வி கேட்கப்படும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் போன்ற வரிகள் சொல்லும் உண்மை கல்லறையத் தோண்டி எழுப்பப்படுவீர்கள் என்பதில்லை உங்களின் பிரதிகளின் மீதான கேள்விகள் நீங்கள் கல்லரைக்குச் சென்ற பிறகும் இருக்கும் என்பதுதானே!. இங்கே கேள்விகள் கேட்கப்படுவது கூட பிரச்சனையின் ஒரு முகமாகப் பார்க்கப்படுகிறது, கேள்விகளும் இவர்களுக்கு பிடித்தமானதாய்; பதில் உள்ள கேள்விகள் மட்டுமே கேட்கப்படவேண்டும் என்பதைப் போன்ற ஒரு மனநிலை இங்கே தற்சமயம் அதிகம் காணப்படுவதை மேற்சொன்ன பதிவில் உணரமுடிகிறது.

அடுத்து இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளராக விளங்கிய ஜீவாவின் மரணம்; உன்னாலே உன்னாலே பாடல்கள் என்னுடைய ப்ளேலிஸ்டில் இப்பொழுதெல்லாம் இடம்பெற்றிருப்பவை. தற்சமயம் அந்தப் பாடல்களைக் கேட்கும் பொழுது ஏனோ ஒரு மாதிரியாக இருக்கிறது. ஆசீப் மீரானின், அப்துல் ஜப்பார் பற்றிய இடுகைகள் வாசிப்பனுபவம் தாண்டியும் மனதில் தங்கியவை. வாழ்க்கையில் முன்னேற முந்நூறு வழி போன்ற எத்தனை தரமான புத்தகங்கள் வந்தாலும் அதைவிடவும் நிகழ்காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் பதிவுகளாக வரும் பத்திகள் அதிகம் நமக்கும் நம்பிக்கையளிப்பதாகவேயிருக்கின்றன. அதைப் போலவே மா.சிவக்குமாரின் மென்பொருள் தொழில் துடங்கிய அனுபவங்கள் நான் தொடர்ச்சியாக படித்துவரும் ஒரு பகுதி. அலங்காரங்கள் இல்லாமல் எழுதப்படும் இது போன்ற பதிவுகளில் இருக்கும் உண்மை முகத்தில் அறைவதாய் இருக்கிறது; ஏனென்றால் நான் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு இன்னும் இரண்டாண்டுகளுக்குத் தான் ப்ரொக்கிராமிங் அப்புறம் கம்பெனி தொடங்கிவிடுவேன் என்பது. அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களை மேக்கப் போடாமல் சொல்லும் பொழுது நம்முடைய அனுபவ அறிவு இன்னும் வளமடைகிறது. கீதா சாம்பசிவத்தின் பாரதி கேட்ட மன்னிப்பு பதிவு எனக்கு ஹரியண்ணாவின் பதிவொன்றை ஞாபகப்படுத்தியது.

ஆவியைப் பற்றி பதவியேற்க இருக்கும் ஜனாதிபதி அவர்கள் வார்த்தை விட அதைப் பற்றிய விமர்சனங்கள் பதிவுகளாக இருந்தன. நா. முத்துக்குமார் போன்ற கவிஞர்கள் தீண்டத்தகாதவர்களா என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு லக்ஷ்மியின் படித்ததில் பிடித்தது; பிடித்தது. நா.முத்துக்குமாரின் அ'னா ஆவன்னா கவிதைத் தொகுப்பைப் பற்றிய விமர்சனமாக இந்தப் பதிவை எடுத்துக்கொள்ளாமல் அறிமுகமாகக் கொடுத்திருந்தார். மைக்கேல் மூரின் SiCKO பற்றிய அறிமுகத்தை மயூரன் கொடுத்திருந்தார், அதனுடன் "இந்தப்படத்தை இலங்கை இந்திய நிலை அரசியல் சூழலின் அடிப்படையில் பார்த்தல் ஆரோக்கியமானது." வரிகள் படத்தின் மீதான பார்வையை ஒழுங்கமைப்பதாகயிருக்கிறது. மங்கையின் நட்சத்திரப்பதிவுகளில் நான் நொறுங்கிய பொழுதுகள் பதிவு ஒரு ஆரோக்கியமான அனுபவப் பகிர்வு, ஏனென்றால் தான் வெற்றி பெற்ற சமயங்களை எழுத விரும்பும் நாம் தோற்ற அனுபவங்களை எழுத முயல்வதில்லை பெரும்பாலும். இதுபோன்ற எல்லைகளை உடைத்து எழுதப்பட்ட ஒரு பதிவு மங்கையினுடையது. வெற்றியை விட தோல்வி நமக்கு தரும் அனுபவங்கள் அதிகமாயிருக்கும்.

கண்ணபிரானின் பெரியாழ்வார் பற்றிய பதிவு அழகாக வந்திருக்கிறது. "தாய் போல் பொங்கும் பரிவு! தாய்ப்பால் பொங்கும் பரிவு!" அதனால் தான் பெரியாழ்வாருக்கு மட்டும் 'பெரிய' ஆழ்வார் பட்டம் என்று விளக்குகிறார். ஆசீப்பின் எனக்குப் பிடித்த சிறுகதைகளில் இந்தத் தடவை அறிவுமதியின் வெள்ளைத் தீ பற்றிய அறிமுகம்; "தமிங்கலத்தில் எழுதினால்தான் யதார்த்தமாகச் சொல்லமுடியுமென்ற அரைவேக்காட்டு எழுத்தாளர்களூக்குச் சாட்டையடி போல கொஞ்சமும் உறுத்தாத தமிழிலேயே அழகாக எழுத முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் முழுக்கத் தமிழிலேயே இருக்கிறது கதை." வரிகள் அவருடைய தமிழார்வத்தையும் அதேசமயம் அறிவுமதியின் பிடிப்பையும் சொல்கிறது. நல்ல ஒரு கதைத் தொகுப்பின் அறிமுகம். iPhone பற்றிய ஸ்ருசலின் விமர்சனமும் பின்னூட்டங்களில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதிலும் நன்றாகயிருந்தன. கானா பிரபாவின் யாழ்ப்பாணத்துச் சமையல் இடுகையும், இளவஞ்சியின் எடின்பரோ கோழி வறுவல் இடுகையும் பிரம்மாதம். நான் இன்னும் சமையல் செய்யத் துவங்கவில்லையென்றாலும் இது போன்ற இடுகைகளை வாசிக்கவும் பிடித்தவற்றை டெலிஷியஸில் சேர்த்துவைக்க மறந்துவிடுவதும் இல்லை. அருள்குமாரின் கூர்க் - இயற்கையின் கொண்டாட்டம் படிக்க கூர்க்கை நோக்கிய என்னுடைய(எங்களுடைய) பயணத்தின் அடுத்த படிக்கட்டை நோக்கி நகர்ந்துவிட்டோம். நல்ல பதிவு.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In Only ஜல்லிஸ்

வரையறைகளுக்குள் அடங்க மறுக்கும் மழை

இங்கே சாஃப்ட்வேர் உலகில் Culture and Values என்ற ஒரு விஷயத்தைப் பற்றிய பேச்சு அதிகமாகவேயிருக்கும். சமீபத்தில் நீயெல்லாம் கல்சுரலி நாட் குட் அப்படின்னு டிரெயினிங்கிற்கு அனுப்பினார்கள். ஒரு நாள் முழுக்க Cross Cultural Sensitivity என்ற கான்செப்டில், ஒரு அண்ணாச்சி நல்லா பாடம் நடத்தினார். அதைப் பற்றி இன்னொரு பதிவு விளக்கமா எழுதுறேன் இப்ப, அந்த ப்ரொக்கிராம் முடியிறப்ப ஒரு பஞ்ச் ஆப் கொஸ்ஸீன்ஸைக் கொடுத்து இதை பில் பண்ணிக்கொடு நீயாருன்னு நாலு வரியில் நறுக்குன்னு சொல்றேன்னு சொல்லியிருந்தார்.

நான் கொடுத்த ஆன்ஸர்களுக்காய் எனக்கு அவர் சொன்னது இதைத்தான். இது மாய மந்திரம் ஜோசிய விவகாரம் கிடையாது சரியா?

"Cool onlookers, Quiet, reserved observing and analyzing life with detached curiosity and unexpected flashes of original humor. Usually interested in impersonal principles, cause and effect, how and why mechanical things work. Exert themselves no more than they think necessary because any waste of energy would be inefficient. Action-oriented, precise and tireless. Can be impulsive. Challenged by complex equipment. Somewhat solitary."

எனக்கென்னமோ இது போன்ற வார்த்தைக் கட்டுகளுக்குள் நான் அடங்கமாட்டேன் என்று தான் நினைக்கிறேன். இந்த முடிவிற்கு வருவதற்கு அவர் கையாண்ட முறைகளை ஒரு ப்ரொக்கிராமாக போட்டு விடலாம் என்ற உத்தேசம் இருக்கிறது. நிறைய டைப் செய்ய வேண்டும் கொஞ்சம் ப்ரொக்கிராமும். நாங்கள் உபயோகித்தது ஹார்ட்கோடட் புக்கை.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

ஆறாம் விரல்களும் அர்த்தமற்ற முட்டாள்தனங்களும்

தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினிகள் தேவையா என்று யோசித்திருக்கிறேன், அப்படியே பாடல்களும். ஹீரோயினிகள் இல்லாமல் போய்விட்டால் நிச்சயமாய் பாடல்கள் நின்றுவிடும். எப்படிப்பட்டவையென்றால், சட்டுன்னு "எனக்குத்தேவை தமிழ்க்கலாச்சாரத்தோட ஒரு பொண்ணு" என்று சொன்னதும் "பல்லேலக்கா பல்லேலக்கா" என்று ரஜினிகாந்த், நயன்தாராக்களின் தொப்புள்களுடன் டான்ஸ் ஆடவேண்டிய அவசியம் இருக்காது. ரஜினிகாந்த் வாழ்க்கையை வெறுத்து "விடுகதையா இந்த வாழ்க்கை" போன்ற பாடல்கள் இதில் அடங்காது, அதெல்லாம் கொஞ்சம் சப்தமாகயிருக்கும் பின்னணி இசை என்று வைத்துவிடலாம் இல்லையா? ஆனால் தமிழ்ச்சினிமாவின் இன்றைய நிலை என்ன? பாடல்கள் ஹிட் ஆகாத எத்தனை படங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றன?

இது போன்ற காரணங்களால்; தமிழ் சினிமாவில் பாடல்கள் இருக்கலாமா கூடாதா என்பதை தீர்மானிக்க வேண்டியது யார்? ஓராயிரம் இன்டலக்சுவல்ஸா இல்லை தங்கள் கவலைகள் மறந்து, டிவிக்களின் ஆதிக்கத்தை ஒரு நாள் நிறுத்தி படம் பார்க்க வரும் கோடிக்கணக்கான மக்களா? சாரி கோடின்னு சொல்லிட்டனே நம்பர் சரிவருமா? இங்கே யாருக்காக திரைப்படம் எடுக்கப்படுகிறது என்ற கேள்வி பெரும்பாலும் எல்லா சமயங்களிலுமே கேட்கப்படுகிறது. ஆனால் பதில் தங்களுக்கு சாதகமானதாக இல்லாமல் இருப்பதால் பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. அர்பனைஸ்ட் ஏரியாக்கள் இல்லாமல் ரூரல் ஏரியாக்களாலும் இளைஞர்களாலும் தான் இன்று சினிமாக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? என்று நான் சொல்லப்போனால் உனக்கெப்படி தெரியும் என்ற கேள்வி எழலாம். ஆனால் படம் ஓடுகிறதே! பாபா ஓடலையே!!! அதனால் மக்கள் தரமில்லாத தாங்கள் விரும்புவதைத் தராத சூப்பர்ஸ்டார் படங்களைக் கூட மக்கள் பார்ப்பதில்லை.

மற்ற குப்பைகளை விட்டுவிடுகிறேன்; என்னை எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கு பெண் பார்க்கிறார்கள் பார்த்த பெண்களில் இரண்டு பெண்களை எனக்கு சரிசமமாகப் பிடித்திருக்கிறது. ஒரு பெண் ஆத்தீகவாதி மற்றவள் நாத்தீகவாதி. நீங்கள் நினைக்கிறீர்களா நாத்தீகவாதியாகயிருப்பதால் நான் இன்னொரு நாத்தீகவாதியை விரும்புவேன் என்று. இருக்காது ஆத்தீகவாதியைத்தான் திருமணம் செய்வேனாயிருக்கும்; ஏனென்றால் ஆண்களுக்கு(க்ரூப் அடிக்கிறேன்னு நினைக்க வேண்டாம் என்னையும் சேர்த்து வேண்டுமானால் %) இன்டலக்சுவல் பெண்களைப் பிடிப்பதில்லை. டிகிரி முடிச்சதும் 2 வருஷம் சும்மா இருந்து, தையல், சமையல்னு கத்துகிட்டு கல்யாணத்துக்காகவே காத்துக்கொண்டிருக்கும் டிபிகல் தமிழ்ப்பெண்களைத் தான் பிடிக்கும். உண்மை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவோ இல்லை எழுதும்படியாகவோ இருக்காது. ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலகக்காரனாகவும்(இந்த விஷயத்தில் மட்டும்) MCP ஆகவும் இருப்பதால் இதுதான் உண்மை என்று சொல்லிக்கொள்கிறேன்.

அப்படி இருக்கும் பொழுது ரஜினிகாந்த் சர்ரியலிஸம் பேசிக்கொண்டு சார்த்தரையும், பெட்ரிக் நீட்ஷேவையும் துணைக்கிழுக்கும் ஒரு அறிவுஜீவி பெண்ணை அதாவது லாப்டாப்பை திறந்து "ஹாய் ஃபட்டி திஸ் ஈஸ் சிவாஜி! கூல்" என்று சொல்லி வாய்ஸால் பாஸ்வேர்ட் வைத்து திறந்து எப்படி கருப்புப்பணம் வெள்ளையாச்சு என்று சொன்னதாலும், கிங்காங்கையே கிழித்துக்கொண்டு வானத்தில் பறந்து சண்டை போடுவதாலும் தன் புருஷனை லீகலாகவும், இல்லீகளாகவும் ஒன்னும் செய்யமுடியாது என்று புரிந்து கொள்ளும் பெண்ணாகவும் இருந்துவிட்டால்; சாரி எக்ஸ்கியூஸ் மி மூணுமணிநேரம் படம் எப்படி காட்டுறது.(அப்பாடா ஃபுல்ஸ்டாப் பொட்டாச்சு) ரஜினிகாந்திற்கு நீங்கள் தான் ஒரு கதை எழுதுங்களேன் இப்படி.

நீங்க யாரும் "சிட்டி ஆஃப் காட்" படம் பார்த்திருக்கீங்களா? அதில் படம் முழுவதும் பெண்களே வரமாட்டார்கள் சொல்லப்போனால் காட்டப்பட்ட பெண்களுமே கூட வாழைக்காயை எப்படி பயன்படுத்துவது என்று கேட்கும்படியாய் கேவலமாய் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் உலகமெங்கும் "இன்டலக்சுவல்" சினிமா விமர்சகர்கள் ஆதரித்த படம். அது ஆண்களின் உலகம் அங்கே பெண்களுக்கு இடம் கிடையாது. அதுமட்டுமில்லாமல் அப்பட்டமான உண்மையைப் பற்றியது அந்தப்படம் என்ற ஜல்லிகள் அடிக்கப்படலாம். ஆனால் உண்மையை அப்படியே எடுத்துவிடலாமா? பாய்ஸில் சுஜாதா எழுதிய வசனங்களை தங்கள் காதுகளால் மால்களிலோ ஷாப்பிங் காப்ளக்ஸ்களிலோ எத்தனை பேர் கேட்டிருக்கவில்லை; சொல்லுங்கள். இங்கே பிரச்சனை அது இயல்பானதா உண்மையில் நடக்கக்கூடியதா என்பதில்லை. வாசகர்களுக்கு ஏதுவானதா? என்பதுதானே கேள்வி. ஞானிகூட கூறியது இதைத்தானே. (அந்தாளின் சுஜாதா கூறித்தான பர்ஸனல் ஜல்லிகளை விடுத்து)


இன்னமும் நாம் அஜீத்குமாரின், விஜய்-ன் ஆண்குறிகளின் அளவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயத்தை நம்மகத்தே கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடவேண்டாம்(%). அவர்களுக்கு ஷாலினிகளைப் பற்றிய கேள்விகள் கிடையாது இதுதான் உண்மை. இப்படிப்பட்ட சமுதாயத்தை திருத்த வேண்டும்தான் அந்தவிஷயத்தில் இருவேறு கருத்து கிடையாது. ஆனால் எங்கிருந்து தொடங்கப்படவேண்டும் என்பதுதான் கேள்வி. சினிமாக்களின் லாஜிக் பற்றி பேசும் விமர்சனங்களில் இருந்தா? ஏசி தியேட்டர்களில் சாப்பிட்டு விட்டு, பாதியில் சினிமா தியேட்டரின் ஏசியை நிறுத்திவிட்டான் என்ற "கோட்"களுடன் இருக்கும் விமர்சனங்களை விடவும், "காசு கொடுத்தேன் ஏன்யா ஏசியை பாதி நிறுத்தின" என்று கேட்கப்படும் கேள்விகளால் சமுதாயம் திருந்தலாம்.

அரசியல் ரீதியான தீர்வாக இல்லாமல் போகும் எந்த ஒரு தீர்வும் வெற்றிபெற முடியாது இல்லாவிட்டால் ஆவிகளிடம் கேட்டுப் பார்க்கலாம்; இந்த சமுதாயத்திற்கான தீர்வை. ஏனென்றால் இப்பொழுதெல்லாம் இந்தியத் துணைக்கண்டத்தின் குடியரசுத்தலைவர்களையே தீர்மானிக்கும்/ தேர்ந்தெடுக்கும் அளவு சக்தி பெற்றவையாய் அவைகள் தானே இருக்கின்றன.

Read More

Share Tweet Pin It +1

21 Comments

Popular Posts