In American Diary அமெரிக்கா ஒபாமா தேர்தல் 2012 ராம்னி

ராம்னி - ஒபாமா, 2012 அமெரிக்க தேர்தல்

நான் அமெரிக்கா வந்த நேரம்(2011) எனக்கு ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி என்பது மட்டுமே தெரியும். அவர் டெமொக்கரேட்டா ரிப்பப்ளிக்கனா என்பது தெரியாது, டெமொக்கரேட் ரிப்பப்ளிகன் என்பது அமெரிக்காவின் இரண்டு கட்சிகள் என்பது தெரியும். அது போல் இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதி, ஒபாமாவுக்கு எதிரான கட்சி என்பதுவும்.

ட்விட்டரில், வந்த குழப்பத்தைத் தீர்க்க இலவசக்கொத்தனார் கொடுத்து ஒபாமா demon - democrat, வெகுநிச்சயமாய் உதவியது. எப்பொழுதையும் போல் அமெரிக்காவில் இறங்கிய சில மாதங்களில் எல்லாம் அமெரிக்காவின் அரசியல் பற்றிய அறிவு விரிவடையத் தொடங்கியது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது ஒபாமாவை அமெரிக்க அதிபராக பார்த்த என் எண்ணம் வெகு விரைவில் அவரை ஒரு Democrat ஆக பார்க்க வைத்து நல்லதற்கா அல்லாததற்கா என்று தெரியாது.

ஆனால் தொடர்ச்சியான மேய்தல்கள், எனக்கு அமெரிக்க அரசியலின் கருப்பு வெள்ளைகளை காட்டத் தொடங்கின.  கன் கண்ட்ரோல், பர்த் கண்ட்ரோல், 2அது அமெண்ட்மெண்ட், லிபரல் வியூ, கன்சர்வேட்டிவ் வியூ, டெஃபெசிட், டெப்ட் போன்ற இன்ன பிற அமெரிக்க பிரச்சனைகளையும் அவற்றைப் பற்றிய அமெரிக்க கட்சிகளின் கருத்துக்களையும் யார் எப்படி நினைக்கிறார் என்பதைப் பற்றியும் கொஞ்சம் சரி வர விளங்கிக் கொள்ள முடிந்தது. எனக்கு நான் யார் பக்கம் என்பதைப் பற்றிய எந்தவிதமான கொள்கைப் பிரச்சனையும் வரவில்லை, என்னால் ஒரு கன்சர்வேட்டிவ்வாக இருந்திருக்கவே முடியாது. புஷ் ஆட்சி முடிந்து ஒபாமா ஆட்சி வந்ததும் இந்தியாவில் சாஃப்ட்வேர்(இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது பிறகு வருகிறேன் அதற்கு) மக்கள் கொஞ்சம் பயந்தார்கள். ஒபாமாவின் கட்சி அவுட்சோர்சிங் செய்வதை நிறுத்திவிடும் என்றும், அதனால் பிரச்சனை வரும் என்றும். இதைப் பொதுவாகவே மறுக்கும் ஒரு பார்வை உண்டு. அமெரிக்காவால் முழுவதுமாக அவுட்சோர்சிங்கை நிறுத்திவிட முடியாது(கொள்கை அளவில் ஒபாமா அவுட்சோர்சிங் நிறுத்திவிடவும், நிறுத்திவிட்ட கம்பெனிகளுக்கு Tax Break கொடுக்கவும் நினைக்கிறார். இங்கும் என்னிடம் எண்கள் இல்லை ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட கம்பெனிகள் எத்தனையென்றோ, பாதிக்கப்பட்டன என்றோ என்னால் சொல்ல முடியாது.)

இதற்கான(அவுட் சோர்சிங்கிற்கான) முக்கியமான காரணமாக மக்கள் கருதுவது,

1) அமெரிக்கர்கள் பொதுவாக அத்தனை தூரம் கல்வி அறிவு பெற்றவர்கள் இல்லை(இதை ஒரு லூசுத்தனமாக கருத்தாக பார்க்க முடியும் ஆனால், அமெரிக்காவில் க்ராட்யூவேட்டாக வெளியேறுபவர்கள் எண்ணிக்கை குறைவு என்றும் அவர்களுக்கு அதற்கான தேவையும் கொஞ்சம் குறைவு என்று மக்கள் சொல்வதுண்டு.1
2) அப்படியே அவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை கொடுக்க வேண்டுமானாலும் அதற்கு அளிக்கப் போகும் சம்பளம் அதிகமாகயிருக்கும். அதற்கு ஒரு அமெரிக்கருக்கு கொடுக்கும் சம்பளத்தில் 5 - 10 ஆசியர்களை வேலைக்கு வைக்க முடியும் என்பது.2

இங்கே சாஃப்ட்வேர் என்று பொதுவாக சொல்லிவிட்டாலும் அதில் இருக்கும் ITES தான் பாதிக்கப்படும், உதாரணமாக கால் செண்டர்கள், ஏனென்றால் அரசியல் கொள்கைகளுக்காக அவுட்சோர்சிங்கை குறைக்க வேண்டுமென்றால் எளிதாக முடியக் கூடியது(வருமானத்தைத் தவிர்த்து) கால் செண்டர்கள் தான் - ஏனென்றால் கணிப்பொறியாளர்களை ரிப்ளேஸ் செய்து அதற்கு பதிலாய் அமெரிக்கர்களுக்கு அந்த வேலையை கொடுக்க நினைத்தால் அதற்காக ரிசோர்ஸ் தற்பொழுது அமெரிக்காவில் கிடைக்காது. ஆனால் கால் செண்டர்களில் வாய்ஸ் பேஸ்ட் இருப்பவர்களை அவர்களால் மாற்றிவிட முடியும்.

இப்பொழுது மீண்டும் 2012ல் அதே பிரச்சனை அவுட்சோர்ஸிங், Tax Break என்று. இந்த முறை ஒபாமாவிற்கு எதிராய் மிட்(10 unknown facts about Mitt Romney என்று David Letterman ஷோவில் இந்த மிட்ற்கு அர்த்தம் சொன்ன வீடியோவைத் தேடிப் பார்க்கலாம்) ராம்னி. நிரம்பப் பணக்காரர், இவர் தந்தை ஒன்றிற்கு மேற்பட்ட தடவை கவர்னராக(நம்மூர் முதல்வர் போல்) இருந்தவர். இவர் பெய்ன் கேப்பிடல்(Bain Capital)ல் இருந்த பொழுது வேலைகளை நிறைய அவுட்ஸோர்சிங் செய்தார் என்பதுவும் அவருடைய அந்தக் காலத்திய வருமான வரி ரசீதுகளும் இப்பொழுதைய தேர்தலின் ஹாட் டாபிக்கள்.  ஏனென்றால் மிட் நான் பெய்ன் கேப்பிடல் அவுட் சோர்ஸிங் செய்த பொழுது கம்பெனியை விட்டு விலகிவிட்டேன் என்கிறார், இவர்கள் டாக்ஸ் ரிட்டர்ன் காண்பிச்சி நிரூபி என்கிறார்கள்.(இடையில் ஹாக்கர்கள் - pricewaterhousecoopers - என்கிற மிட் உடைய டேக்ஸ் ரிட்டர்ன் ஃபைல் செய்யும் கம்பெனியில் இருந்து அதை எடுத்து வெளியில் போடக் கூடாதென்றால் 1 மில்லியன் கொடுக்கணும் என்று சொன்னதும் இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது.)

ரிப்பப்ளிகன்கள் ஒபாமாவை Food Stamps President என்று சொல்துண்டு(நான் இதைப் பற்றி இதற்கு மேல் சொல்ல விரும்பலை) தற்சமயம் கூட மிட் 47% அமெரிக்கர்கள் அரசாங்கத்தை நம்பியிருக்கிறார்கள் என்றும் அவர்கள் Federal Tax கட்டுவதில்லையென்றும், அவர்களுக்கு சாதகமாக(Food Stamps President, Health Care Reform) இருப்பதால் அவர்கள் ஒபாமாவிற்குத்தான் ஓட்டுப் போடுவார்கள், நான் அவர்களைப் பற்றிக் கவலைப் படவில்லை என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டது கூட இடையில் நடந்தது(போய்க் கொண்டிருக்கிறது). ஆனால் இந்த 47%ல் மில்லினியர்கள்(4000 பேர் இருக்கிறார்கள்) அது எப்படி என்கிறீர்களா, எல்லாம் ரிப்பப்ளிக்கன்ஸ் - tax break - செய்தது தான். வயதானவர்கள் இருக்கிறார்கள் ஏன் பல ரிப்பப்ளிக்கன் சப்போர்ட்டர்களே கூட இருக்கிறார்கள். ராம்னிக்கு எப்பொழுதும் இது போல் எதையாவது ஒன்றைச் சொல்லி வாங்கிக் கட்டிக்கொள்வதே வேலையாப் போய்விட்டது என்று ரிப்பப்ளிக்கன்கள் வருத்தத்துடனும் டெமோக்கரேட்ஸ் சந்தோஷத்துடன் சொல்லிக் கொள்வதைப் பார்க்கிறேன்.

வரலாறு இது போன்ற தவறுகள்(மேடைகளில் உளறுவது) பெரும்பாலும் ஓட்டுப் போடுபவர்களை(ஓட்டுப் போடும் நேரத்தில்) பாதிக்காது என்று சொல்கிறது. ஒபாமாவும் இது போல ஒன்றை சொல்லி மாட்டிக்கொண்டார் 2008ல், என்று படித்தேன்.

ராம்னியின் கட்சி யாருக்கும்(குறிப்பாய் பணக்காரர்களுக்கு - மில்லினியர்ஸ்) வரியை அதிகப்படுத்த விரும்பவில்லை, ஆப்வியஸா 47% ஏற்கனவே வரிகட்டலைங்கிறார். ஒபாமா எல்லாரும் ஒன்று போல் வரி கட்டணும் என்று - இங்க ஒரு பாய்ண்ட், மிடில் க்ளாஸ் மக்கள் 30%ம் ராம்னி போன்ற பணக்காரர்கள் 17% வரி கட்டுகிறார்கள், மில்லினியர்களும் 30% வரி கட்டணும் என்று ஒபாமா சொல்கிறார். இதில் வர்ற காசை வைத்து கொஞ்சம் கொஞ்சம் debtஐ குறைக்கலாம் என்கிறார். ராம்னியோ அதெல்லாம் முடியாதென்று தலைகீழாய் நிற்கிறார்.

இப்ப இடையில் இன்னொரு கதையும் ஓடியது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, ராம்னியை ஆதரிக்கிறார் ஏனென்றால் ஒபாமா ஈரான் மீது(இது ஒரு இன்னொரு பெரிய கதை நேரம் கிடைத்தால் இன்னொரு பதிவு) நடவடிக்கை எடுக்க மாட்டேங்கறார் என்பதால். ஏனென்றால் நேதன்யாஹூ ஈரான் ஆறு மாசத்தில் நியூக்ளியர் வெப்பன் செய்திடுவாங்கன்னு என்றும் இப்பவே அட்டாக் பண்ணி அதைத் தடுக்கணும் என்றும் சொல்கிறார். (ஈரான் ராணுவ தளபதி, நியூக்ளியர் சைட் மேல கைவச்சா - இஸ்ரேலே இல்லைன்னு பண்ணிடுவோம்னு சொல்லி கூட இன்னும் வாரம் முடியலை.) நான் David Baer சொல்வதை நம்புகிறேன், ஈரானுக்கு இப்பொழுது நியூக்ளியர் வெப்பன் தேவை கிடையாது - நான் செய்யவே மாட்டாங்கன்னு சொல்லலை - ஆனால் இப்பொழுது இல்லை. The devil we know  ஒரு அருமையான புத்தகம் ஈரான் பற்றித் தெரிந்து கொள்ள நிச்சயம் படிக்க வேண்டிய ஒன்று. சமீபத்தில் அமெரிக்கவிற்கு அதிரடியான அதிபர் தான் வேண்டும், அப்பாலஜி சொல்றவர் இல்லைன்னு, நெதன்யாஹு சம்மந்தப்பட்ட விளம்பரம் ஒன்று வந்ததாக செய்திகள் வந்தது. ராம்னி 2012ல் தோத்தா இஸ்ரேலுக்கும் நேதன்யாஹூவுக்கும் ஆப்பாகும் என்று சம்மந்தப் பட்ட ஒரு கட்டுரை சொன்னது.

எழுத வேண்டியது இதைப் பற்றி இன்னும் நிறைய இருக்கு அதே போல் தேர்தலுக்கு இன்னும் கன காலம் இருக்குது, ரெண்டு பெரும் விவாதிக்கும் அரங்குகள் மீதமிருக்கின்றன. முடிந்ததை எழுதப் பார்க்கிறேன். அதற்கு முன், ஒரு சிறு முடிவு.

நான் சில காரணங்களுக்காக ஒபாமா திரும்ப வரணும் என்று நினைக்கிறேன்.

1) ரொம்ப பர்ஸனல் - என் வருமானம், வருங்காலம் பற்றியது.
2) மற்றது ரிப்பப்ளிக்கன்ஸ் சொல்வது மாதிரி ஒபாமா ஒரு Too Liberal, Too Left. இது போதாதா? (Bill Maher சொல்வதை ஒப்புக்கொள்கிறேன், ஒபாமாவை லெஃப்ட் என்று சொல்லிவிட முடியாது, ஆனால் நிச்சயம் இடது சாய்வு கொண்டவர்.
3) பொதுவாகவே மக்கள் மத்தியில் ஒபாமாவிற்கான ஆதரவு அதிகம் இருக்கிறது(முதல் முறை போலில்லாமல் - ரிப்பப்ளிக்கன்ஸ் ஒபாமாவை One Term President ஆக்காமல் விடமாட்டோம் என்று செய்ததைப் போல் இல்லாமல் - இந்த முறை திரும்ப வந்தால் வேறு வழியில்லாமல் மக்களுக்காய் சில விஷயங்களை ஒபாமா செய்ய ரிப்பப்ளிக்கன்ஸ் விட்டுக் கொடுத்தே ஆகவேண்டும்.)

நான் முதலில் சொன்ன காரணத்துக்காகவே இப்படி ஒரு பதிவை எழுதித் தொலையவேண்டாம் என்று நினைத்தேன். இப்பொழுதும் நான் பக்கச் சார்புடன் இருக்கிறேன் என்று கருதினால் நிச்சயம் இருக்குமாய்க் கூட இருக்கும்.

1. இதற்கான எண்கள் என்னிடம் கிடையாது. இது ஒரு விலாவரியான பதிவாக இல்லாமல் இருப்பதால் என்னால் தேடிப்பிடித்து எண்களைச் சொல்ல முடியாது. மிகச் சாதாரணமான உதாரணம் ஒன்றை வேண்டுமானால் சொல்கிறேன், என்னுடன் வேலை செய்யும் இந்தியர்களின் அமெரிக்காவில் படிக்கும் குழந்தைகளுக்கு ‘மேத்’ தனியாக(ட்யூஷன்) கற்பிக்கப்படுவதை(10வது 12வது வகுப்பு இல்லீங்க) முதலாம் வகுப்பு படிக்கும் பையனுக்கே கூட. இது நான் பார்த்த ஒரு உதாரணம். இது எல்லா பிரிவு மக்களுக்குமான ஒன்றாய் இருக்காது என்று நினைக்கிறேன். மத்திய தர வர்க்கம் என் உதாரணம்.
2. மேற்சொன்ன(1) காரணங்களினால் கணிப்பொறியறிவியல் முடித்துவிட்டு வேலைக்கு வரும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையை வைத்து அவர்களின் மொத்த Serviceகளை செய்துவிட முடியாது. வேண்டுமானால் நாளை நம்மை விட ரேட் குறைவு என்பதால் சைனாவுக்கோ அல்லது இந்தோனேஷியாவிற்கோ அவுட்சோர்சிங் செய்யலாம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இங்கும் நம்மிடம் கட்டுமானம்(infrastructure) வந்துவிட்டதால் இந்திய சாஃப்ட்வேர் துறை(ITES தவிர்த்து) இன்னும் கொஞ்ச காலம் - ஒரு பத்தாண்டுகள் - பிழைத்துக் கொள்ளும்.

-தொடர்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

Popular Posts