“என்னது கருணாநிதி பிரச்சாரம் செய்கிறாரா?”
ஐம்பது ஆண்டுகள் கோமாவில் இருந்து மீண்டும் நினைவு திரும்பியுள்ள தாத்தா கேட்டது, மோகனுக்கு பெரிதும் ஆச்சர்யமளிக்கவில்லை,
“அட நீங்க வேற தாத்தா ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு சாதகமா பிரச்சாரம் பண்ணிக்கிட்டிருக்காங்க...” சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அறைக்குள் நுழைந்த பவானி, மோகனின் முதுகில் செல்லமாகத் தட்டியபடி,
“டேய் உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் தாத்தாவை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு.” சொல்லிவிட்டு, பின்னர் தன் தந்தையிடம்,
“என்ன நைனா இப்ப எப்படியிருக்கு?”
“பவானி என்னடா சொல்றான் உன் பையன். கருணாநிதி, ஜெயலலிதாவெல்லாம் இன்னும் உயிரோட இருக்காங்களா?”
ஆம், சுயநினைவை இழந்தவராய் ஐம்பது வருடம் கோமாவில் இருந்தவருக்கு நடந்தவையெல்லாம் தெரிந்திருக்க நியாமில்லைதான். அவனால் கூட கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. பத்து வயது சிறுவனாக இருந்த பொழுது ஒருநாள் அவன் தந்தைக்கு ஏற்பட்ட விபத்தில் அவர்f இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு, அலறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்து பார்த்தால் உயிர்மட்டும் தான் போகாமல் இருந்தது.
இன்று நினைவிற்கு வந்துவிடுவார், நாளைக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கை மாறாததைப்போல் அவருடைய நிலைமையும் சுத்தமாக மாறவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக மாறிவந்த மருத்துவ வசதிகள், மருத்துவ உலகின் சாதனைகள் அவர்களின் நம்பிக்கையை இழக்காமல் வைத்திருந்தது. அவனால் கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை நடந்தவைகளையெல்லாம் கனவு போல்தான் இருந்தது.
மத்திய ஆசியாவில் இஸ்ரேல் தொடங்கிவைத்த யுத்தம் உலகப்போராக மாறுமென்று யாருமே உத்தேசித்திருக்கவில்லைதான். இல்லவேயில்லை என்று சொன்ன நாடுகள் எல்லாம் தூக்கி ஒரேயடியாக குண்டைப் போட்டுக்கொள்ள, இந்த நாட்டுக்கு சாதகமா அவன்வர அந்த நாட்டுக்குச் சமமா இவன்வர, இன்னுமொரு உலகப்போர் உருவாகியது தான் மிச்சம். ஆனால் அனைவருக்குமே இதன் முடிவு எப்படியிருக்கும் என்று தெரிந்திருந்ததாலும் ஒன்றுமே செய்யமுடியவில்லை.
எப்படியிருந்தாலும் மொத்தமாக உலகம் அழியாமல் இருப்பதற்கு, போர் தொடங்கிய சில காலங்களில் உருவாகிய மக்கள் எழுச்சியே காரணம், மக்களுக்கு அணுஆயுதப்போரின் தீவிரம் நன்றாகத் தெரியத்தொடங்கியது. தொலை தொடர்புத்துறையின் பிரம்மாண்டமான வளர்ச்சி காரணமாக பாதிப்போரின் பொழுதே, சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என்பதைப் போன்ற இயக்கங்கள் உலகம் முழுவதும் தொடங்கப்பட்டிருந்தன.
அந்தந்த நாட்டு மக்களின் பெரும் புரட்சியினை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசுகளும், அணுஆயுத நாடுகளும் போரிலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருந்தன. ஆனால் அதுவரை நடந்து முடிந்திருந்த போரின் தாக்கம் பெருமளவில் இருந்தது. இதெல்லாம் நடந்தது இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டில்.
எல்லாம் முடிந்திருந்தது, ஆனால் அந்தப் போர் ஏற்படுத்தியிருந்த பாதிப்பு மாற மற்றுமொரு இருபத்தைந்தாண்டுகள் ஆனது. உலகமெங்கும், சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என்ற இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. மக்களுக்கு ஆயுதம், போர் மீதிருந்த பயம் கடைசிவரை போகவேயில்லை. அறிவியல் அதன் அதிகபட்ச உச்சத்தை எட்டியிருந்தது, அதுவரை யுத்தம் தளவாடம் ஆகியவற்றில் செலவிடப்பட்டுவந்த மொத்த பணமும், அறிவியலுக்கு செலவிடப்பட, அறிவியில் உலகம் பல விந்தைகளை செயல்படுத்திக் காட்டியிருந்தது அதில் ஒன்று, தானாகவே சிந்திக்கும் கணிணிகள்.
முதலில் ஆராய்ச்சி வடிவத்தில் வரத்தொடங்கிய இந்தக் கணிணிகள் பின் பெரிய அளவில் எழுச்சி பெற்றது. அந்தச் சமயத்தில் கொண்டுவரப்பட்ட ஒன்று தான் இந்த கணிணிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என்ற கோஷமும். அதுவரை அரசியல்வாதிகளைத் தெர்ந்தெடுக்க நடத்தப்பெற்ற தேர்தல்களில் முதல் முறையாக சுயமாகச் சிந்திக்கும் கணிணிகளும் போட்டியிட்டன, ஒரே ஒரு கோஷத்துடன், கணிணிக்கு ஒரு வாய்ப்பைத்தாருங்கள் என்பதுதான் அது. அந்த கணிணியை வடிவமைத்தவர்கள் சொல்லியிருந்தது மக்களை ஆச்சயர்யத்தில் ஆழ்த்தியது. மக்களுக்கான திட்டங்கள், அடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றப்படவேண்டிய திட்டங்கள் இவை அனைத்தையும் தீர்மானிக்கும் கணிணிகள் என்று பிரசாரப்படுத்தப்பட்டது.
முதல் தேர்தலில் ஒரு சில நாடுகளில் முழுவதுமாக தோல்வியடைந்த இந்த திட்டம், மிகச்சில நாடுகளில் மிகச்சில இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. பின்னர் அந்த நாடுகளின் அந்தந்த பகுதிகள் அடைந்த வெற்றிகள் மேலும் மேலும் அந்த வகையான கணிணிகளுக்கு பெயர் பெற்றுத்தர அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக பரவத்தொடங்கியது. இதற்கு முன்பே அந்த தலைமைக் கணிணியின் ஒட்டுமொத்தமான இயங்குதிறன் முழுவதுமாக சோதனை செய்யப்பட்டு நன்மை ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளவை என்பது நிரூபிக்கப்பட்டிருந்தது.
ஒரு சமயத்தில் உலகத்தில் எங்கும் கணிணிகளின் கீழ் செயல்படும் அரசாங்கமே இருந்தது, ஆனால் மக்களுக்கான அத்துனை சுதந்திரங்களும் இருந்தது, தேர்தலில் ஓட்டளித்து கணிணிகளை தோல்வியடையச் செய்யவும் முடிந்திருந்தது. ஆனால் அவைகள் சுயமாக மட்டுமல்லாமல், நன்மையாக மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் பெற்றிருந்ததால் பெரும்பாலும் அவைகள் தோல்வியடையவில்லை.
இப்படியே ஒரு பத்தாண்டுகள் கடந்தது, மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருந்து வந்தாலும் எதையோ ஒன்றை இழந்துவிட்டதைப்போன்ற ஒரு உணர்வு இருந்தது. ஆனால் நிச்சயமாக இதைத்தான் இழந்துவிட்டார்கள் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு முறை தேர்தலிலும் கணிணிகளை எதிர்த்து நிற்கவே ஆட்கள் இல்லாதிருந்த நிலை இப்பொழுது கொஞ்சம் மாறியிருந்தது. அந்த கணிணிகளால் சிந்திக்க முடியாத விஷயங்களை நாங்கள் செய்கிறோம் என்று கூறி இப்பொழுதெல்லாம் மக்கள் இயக்கங்கள் சிறிதளவில் ஆரம்பித்திருந்தன. ஆனால் ஆண்டாண்டுகளாக மக்கள் இதுமாதிரியான பிம்பங்களில் இருந்து பட்டிருந்ததால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்தார்கள்.
இப்படி கணிணியை எதிர்த்து எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென்று நினைத்த அந்த குழுவினர் செய்த ஏற்பாடு தான் மக்களைக் கவர்ந்த வரலாற்று அரசியல்வாதிகள். நேனோ டெக்னாலஜி அதன் உச்சத்தை அடைந்திருந்தது, மாலிக்கியூளர் ரிப்பேர் முறையின் மூலமாக ஏற்கனவே இறந்து போனவர்களை அணுஅணுவாக உருவாக்கிவிடும் வல்லமையை அறிவியல் உலகம் செய்திருந்தது. அதனை பயன்படுத்தியே அந்த நவீன அரசியல்வாதிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். கணிணிக்கு எதிரான தேர்தலில் மக்கள் கழகத்தை ஆதரித்து, வழமையான தமிழில் கருணாநிதி பேச, நுனிநாக்கு ஆங்கிலத்தில் ஜெயலலிதா பிளந்து கட்ட, ஜெயிக்கமாட்டார்கள் என்பது நிச்சயமாகத் தெரிந்தாலும், மக்களுக்கு இது ஒரு அற்புதமான பொழுதுபோக்காக இருந்தது.
“நைனா உங்களுக்கு ஒரு டெஸ்ட் பண்ணனும் இப்ப பண்ணலாமா?” பவானி கேட்க, லேசாக முகத்தைச் சுழித்தவர்.
“இப்ப நல்லாத்தானே இருக்கேன். என்னாத்துக்கு டெஸ்ட்” அவருடைய வருத்தம் தெரிந்துதான் இருக்கிறது பவானிக்கு என்றாலும், செய்யவிருக்கும் டெஸ்டின் அருமை தெரிந்தவன் என்பதால் அதன் நன்மையை விளக்கத் தொடங்கினான்.
“அதாவது நைனா, கொஞ்சம் மேலோட்டமா சொல்றதுன்னா, நம்ம மூளையில் எல்லா விஷயமும் பதிவாகியிருக்கும், ஆனால் பதிவான அந்த விஷயங்களை நினைவு கூர்ந்து திரும்பவும் எடுப்பதென்பது கொஞ்சம் கஷ்டமான வேலை. அந்த திறமைதான் ஒவ்வொருவரிடமும் கல்விக்கான வேறுபாடுகளை உண்டாக்கியிருந்தது இல்லையா.
இப்ப அந்த பிரச்சனையில்லை, ஒரு சின்ன சிப்பை உங்கள் முளையில் வைத்துவிடுவார்கள். எல்லா உணர்ச்சிகளும், மூளைக்கு செல்லவேண்டிய எல்லாவிஷயமும் முதலில் இந்த சிப்பிற்கு செல்லும். பின்னர் அந்த சிப் உங்கள் மூளையில் நீங்கள் விரும்பிய தகவலைத் தேடித்தரும். இந்த விஷயம் வந்ததில் இருந்து, அறிவாளி முட்டாள் அப்படிங்கிற விஷயம் இல்லாமல் போய்விட்டது,
அதுமட்டுமில்லாமல் இந்த சிப் வெளியில் இருந்தும் கட்டுப்படுத்தக் கூடியதாய் இருக்கும், பப்ளிக் மெம்மரி, பிரைவேட் மெம்மரி என்று இரண்டு பாகங்கள் இருக்கும் இதில் பப்ளிக் மெம்மரியை யார் வேண்டுமானால் உபயோகப்படுத்தக் கூடியதாக இருக்கும், இதையே கூட உங்களின் விருப்பதிற்கு ஏற்றது போல் மாற்றிக் கொள்ளலாம். புதிதாய் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்பதும் கூட மிகச்சுலபமே, உங்கள் மூளையின் மெம்மரியைக் கூட உபயோகப்படுத்த வேண்டுமென்பது கிடையாது. இப்பொழுது மூளையை வாடகைக்கு விடுவதென்பது பிரபலமாக இருக்கிறது. இதற்கான சிப்களும் கிடைக்கின்றன அதாவது நீங்கள் மற்றவரின் மூளையில் உள்ள பிரைவேட் மெம்மரியை வாடகைக்கு எடுத்து விஷயத்தை போட்டு வைத்துக்கொள்ளலாம். அந்த மூளையின் சொந்தக்காரரால் கூட அந்த விஷயத்தை உபயோகப்படுத்த முடியாது ஆனால் உங்களால் முடியும்.”
ஆரம்பத்தில் கொஞ்சம் ஆர்வமில்லாமல் கேட்கத்தொடங்கிய, சீனியர் மோகன் பின்னர் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் எப்படி செயல்படுத்தப்பட்டிருக்கும் என யோசித்தவராக அந்த டெஸ்டிற்கு ஒப்புக்கொண்டார். ஏற்கனவே அவரது மூளையிலும் பொறுத்தப்பட்டிருந்தாலும் கோமாவில் இருந்ததால் அதனை உயிர்ப்பிக்க முடியாமல் இருந்து வந்ததை இப்பொழுது உயிர்ப்பித்து சோதனை நடத்த வேண்டும்.
உயிர்ப்பித்ததும், தந்தையிடம் பவானி,
“நைனா இப்ப உங்களோட பழைய மெம்மரியை எல்லாம் சிப் ரீட் பண்ணி கீ வேல்யு பேர்களா மாத்தியிருக்கும், இதுதான் இந்த சிப்பின் பியூட்டியே. இப்ப நீங்க பழைய சம்பவம் எதையாவது யோசித்துப்பாருங்கள், சீக்கிரமே நினைவில் வரும். தேதியை மட்டும் நினைத்தால் போதும்...”
ஒரு நிமிடம் கூட அவர் யோசிக்காமல் தன்னுடைய முதல் இரவைப்பற்றி யோசித்தார். அப்படியே பளிச் பளிச் என்று நினைவுகள் பிரகாசமாய்த் தெரியத்தொடங்கின,
அகிலா வந்து கட்டிலில் உட்கார்ந்ததுமே,
“ஒரு கவிதை மட்டுமே எழுதி கல்யாணம் பண்ணிக்கிட்டவர் நீங்களாத்தான் இருக்கும்” சொல்லிச்சிரிக்க அவர் எழுதிய அந்தக் கவிதை நினைவில் வந்தது, வரிகள், மடிப்புகள் எல்லாமே,
“இன்னும் படித்துக்கொண்டிருக்கும்
என் அக்காவிற்கு
நேற்றிரவு
நாய்கள் என்னைப்பார்த்தது
நக்கலடிப்பதாய்ப்பட்டது
தெரியப்போவதில்லை
உள்ளிருப்பது தெரிய
வலையவரும் பெண்கள்
என்னிரவுகள் நினைவுப்படுத்தும்
மனக்கணக்குகள்
அறிவதில்லை
கழுதையோ எருமைமாடோ
ஏதாவதொன்றை
நானாய்க்கேட்டாலொழிய
தலையில் கட்டமறுக்கும் பெற்றோர்
உணர்வதில்லை
ஜோடிகளின் நெறுக்கத்தில் புழுங்கும்
மனதின் வெம்மையை
மற்றவற்றைப் போலில்லாமல்
கட்டுடைக்கத்தூண்டும்
பனிக்காலத்தின் கிளர்ச்சிகளை
புறந்தள்ளி காத்திருக்கிறேன்
இன்னுமொறுமுறை.”
அவருக்கும் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது, சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கவிதை வரிக்குவரி அப்படியே நினைவில் வந்ததை நினைத்தவருக்கு,
அதில் வரும் கழுதையோ எருமைமாடோ என்ற பதத்தை உபயோகப்படுத்த வேண்டி வந்த சூழ்நிலையும் அதைக்காட்டி, அகிலா அவரை சீண்டியதும் நினைவில் வர, அவரையறியாமலேயே புன்னகை அவர் முகத்தில் பரவியது. அவருடையக் காலத்தில் எல்லாம் ஐம்பதாண்டு அறுபதாண்டு பழமையான கவிதைகளை நினைத்ததும் நினைவில் வருவது பெரியவிஷயம். கலைஞர் கருணாநிதியின் தனித்துவமே அதுதானே என நினைத்தவருக்கு, கலைஞர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று பேரன் சொன்னது நினைவில் வந்தது.
“பவானி, கலைஞர் இன்னும் உயிரோட இருக்காரா?”
மருத்துவரும், பவானியும் தந்தையின் முகத்தில் நொடிக்கொரு விதமாய் மாறும் பாவங்களை கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய கவனத்தை கேள்வி சற்று திசை திருப்ப,
“அது ஒரு பெரிய கதை நைனா பின்னாடி சொல்றேன். இன்னிக்கு ஒரு முக்கியமான நாள், அவசர அவசரமா உங்கள் மூளையில் சிப் பொறுத்தியதற்கு காரணம் கூட அதுதான். இன்னிக்கு தேர்தல் நாள்.”
சீனியருடைய முகத்தில் தெரிந்தை வியப்பை குறித்துக் கொண்டவனாக,
“ஆனால் பழைய காலம் போல் பூத் சென்று ஓட்டு போடவேண்டுமென்பதெல்லாம் கிடையாது, உங்கள் பப்ளிக் மெம்மரியில் சரியாக பத்துமணிக்கு தேர்தல் நினைவு வரும். உங்கள் பகுதியில் நிற்பவர்களின் விவரங்கள் கூட நினைவில் வரும். பின்னர் நீங்கள் அந்த நொடி நீங்கள் மனதில் இவருக்கு ஓட்டு போடலாம் என நினைத்தால் உங்கள் ஓட்டு அவருக்கு சென்றுவிடும். இதனை சேகரிக்க மிகப்பெரிய அளவில் கணிணிகள் இருக்கிறது.” சற்று நிறுத்திய பவானி,
“இதனால் 100 சதவீத ஓட்டுகள் ஏதாவது ஒரு சாய்ஸில் வந்துவிடும், நீங்கள் அந்த நொடியில் என்ன நினைக்கிறீர்களோ அது பதிவாகிவிடும். பின்னர் அதற்கேற்றார் போல், சில நிமிடங்களில் ஒட்டுமொத்த மக்களிடம் பெற்ற வாக்குகளை கணக்கிட்டு வென்றவரை தலைமைக் கணிணி வெளிவிடும். பத்து நிமிடங்கள் அவ்வளவுதான் தேர்தல்.”
அடுத்த பத்து நிமிடங்களில் நினைவில் தேர்தல் நடந்து முடிந்துவிட, கணிணிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் அமைப்பு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, பவானியும் ஜூனியர் மோகனும் சிரித்தனர்.
“கருணாநிதி...”
பெரியவர் விடாப்பிடியாக, கேட்டுக்கொண்டேயிருந்ததால், சுருக்கமாக நானோ டெக்னாலஜியின் வெற்றியை விவரித்த பவானி, கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாலிக்யூலர் ரிப்பேர் செய்வதற்கான சொத்துக்களை விட்டுவிட்டு போனதால் இறந்த சிறிது காலத்தில் அவர்களை உயிருடன் கொண்டுவரப்பட்டதை விளக்க, பெரியவருக்கு எங்கேயோ பொறிதட்டியது,
“டேய் தம்பி, இதுவந்து நான் எழுதிய ஒரு கதை மாதிரியில்லை இருக்கு.”
சொன்னதும் தான் தாமதம், மருத்துவரும் பவானியும் கைகுலுக்கிக் கொள்ள, ஜூனியரும் சிரித்தான்,
“நைனா உங்கள் மூளையில் பொறுத்தப்பட்ட சிப் நன்றாக வேளை செய்ய ஆரம்பித்துவிட்டது, ஆமாம் இது உங்களுக்கு விபத்து நடப்பதற்கு முன்னர் நீங்கள் எழுதிய கதையின் சாராம்சம்தான். இதன் காரணமாகத்தான் நீங்கள் இன்றைய நவீன உலகத்தின் மிகவும் ஆச்சர்யப்படும் மனிதர்களில் ஒருவராக இருக்கிறீர்கள்.
எப்படி உங்களால் அறுபது ஆண்டுகளுக்கு பின்னால் நடக்கப்போவதை இத்தனை தூரம் சரியாய் ஊகிக்க முடிந்ததென்பதை அறிய பல விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள். ஆனால் தனிநபரின் ஒத்துழைப்பில்லாமல் அவரிடம் இருந்து இன்பர்மேஷன் வாங்குவது நவீன உலகத்தில் தவறான காரியம் ஆதலால், உங்களின் ஒத்துழைப்பிற்காக காத்திருக்கிறார்கள்.”
என்று சொன்னதும் தான் தாமதம், அவருடைய நினைவில் சில பல டாக்டர்களின் பயோடேட்டாகள் வந்து போய்க்கொண்டிருந்தன.
தேர்தல் - 2060 கணிணிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்
பூனைக்குட்டி
Tuesday, September 30, 2008
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
Good imagination.
ReplyDeleteஇது என்ன, இப்போதுதான் உஷாவின் வருங்கால கனவுக் கதையை படித்தேன். நீன்களும் அதே பாணியில். ஆனாலும் கதை யில் நிகழ்பவைகளைக் கண்டால் பயமாக இருக்கிறது.
ReplyDeleteNalla "Kathai" Vudura Naina...
ReplyDeleteKeep it up..
test
ReplyDeleteநற்கீரன், ரொம்ப நன்றி. உங்களின் விமர்சனத்துக்கு
ReplyDeleteபிளாக்கர் உதைக்குது என்னமோத் தப்பா நடக்குது.
மணியன், நீங்களும் அதே பாணியில் தப்பிருப்பதாகப் படுகிறது.
ReplyDeleteஏன் அவரும் என்பாணியில் என்று இருக்கக்கூடாது. :-) just kidding.
கிறுக்கரே. நன்றி, ஏதோ என்னால் முடிந்தது.
ReplyDeleteஅறிவியல் கற்பனைக்கு அளவில்லை!
ReplyDeleteOi veLikkNdavarE nanRi.
ReplyDeleteEternal Sunshine of the Spotless Mind படத்தை பத்து தடவை பார்த்தீங்களா
ReplyDeleteoru 15 years munnadi doordarsanla sujathavin eniya eyanthira nadakam parthierkala
ReplyDeleteசுப்ரா அந்தப் படம் நான் பார்த்ததில்லை. உண்மையிலேயே!
ReplyDeleteஅனானி, 15 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஏழு வயசு. அதனால பார்த்திருந்தாலும் ஞாபகமில்லை.
ReplyDeleteஆனால், என் இனிய இயந்திராவும் சரி, மீண்டும் ஜூனோவும் சரி மனப்பாடம் ஆகும் வரை படித்திருக்கிறேன். ஆனால் அதனால் இந்தக் கதையில் பாதிப்பு இருந்ததாக நான் நினைக்கவில்லை.
Good imagination.
ReplyDeleteசூப்பரப்பு...
ReplyDeleteஉங்களூட தேவதயின் காதலன் படித்தேன் , சுய சரிதை என்றாலும் இவ்வளவு அழகாக அருமையாக நிகழ்த்தியுள்ளீர்
ReplyDeleteவாழ்த்துக்கள்
kumaran@muthamilmantram.com
அன்புடன்
நாகா
பரிசுப் பெற்றதற்கு வாழ்த்துகள் மோகன்தாஸ்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் !!!
ReplyDeleteஒரு நல்ல விஞ்ஞான சிறுகதை படித்த அனுபவம் கிடைத்தது.
ReplyDeleteசிறுகதையோடு முடித்து விடுவீர்களா, இல்லை தொடர்கதையாக தொடர்வீர்களா
super mohan
ReplyDelete