In Only ஜல்லிஸ் சோழர்கள் பயணம்

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

சுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில் அவருக்கான இடம் நிரப்பப்படமுடியாதென்றே நினைக்கிறேன், தற்சமயம் சுஜாதாவிற்கான இடம் sweet and short ஆக இருக்கிறது. அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.

“நான் கடவுள்” படத்தைப் பற்றி எழுத ஆரம்பித்து பின்னர் விட்டுவிட்டேன், காரணம் தெரியாது அதைப் பற்றி எழுத மேலும் ஒன்றும் இல்லை என்பது மட்டுமே காரணமாய் இருக்க முடியாது. கொஞ்சம் போல் பாலா பக்கம் நான் ஒரு தலைப்பட்சமாய் சாய்கிறேன் என்பது கூட காரணமாயிருக்கலாம். டிவிட்டரில் எழுதியது, இந்த ட்ராஃப்ட் என நான் என் பக்க சாய்வை உறுதிசெய்து கொண்டேயிருக்கிறேன்.

Gym செல்ல ஆரம்பித்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது, இன்னும் இரண்டு மாதங்களுக்கான சேர்த்து பணம் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டது. எங்களின் இரண்டு மாத உழைப்பே கூட எங்களுக்கான வெற்றி தான், எந்த உடல் உழைப்பும் இல்லாமல் சும்மா தட்டிக் கொண்டிருப்பதற்கு, இது தேவலை. உடலளவில் வந்திருக்கும் மாற்றத்தை விடவும் மனதளவில் அடைந்திருக்கும் மாற்றம் மகிழ்ச்சியை அளிக்கிறது.

Dev D, Delhi 6 படங்கள் பார்த்தேன், நிச்சயம் என் அளவுகோல்களுக்கு இணங்க இந்தப் படங்களைப் பற்றி எழுதித்தான் இருக்கவேண்டும் கொஞ்சம் பெரிய அளவில். “சோறுபோடும் என் முதலாளிக்கு நேர்மையாக இருக்க” வேண்டியிருப்பதால் இரண்டு வரி கூட எழுத முடியாமல் இருப்பதில் வருத்தமே. “தேவதாஸ்” கதையின் இந்த Dev D, interpretation எனக்கு மிகவும் பிடித்திருந்தது. Y tu mamá también அளவிற்கு ஒரு படம் தமிழில் வராதா என்று ஏங்கியிருக்கிறேன், இப்பொழுது என்னைப் பொறுத்தவரை தமிழ், இந்தி சினிமாக்களின் அத்தனை வேறுபாடு இல்லை என்பதால் இந்திய சினிமாவில் அப்படி ஒரு படம் Dev D. Multiplex சினிமா இந்தியில் சாத்தியப்படுத்தியிருக்கும் விஷயங்கள் தமிழில் உருவாகுமா என்றால் தெரியவில்லை. ஆற அமர ஒரு பதிவு போட்டு எழுத வேண்டிய அளவிற்கான படம் Dev D. படம் பார்த்துவிட்டு வந்ததும் டிவிட்டரில் போட்ட ஒரு வரி கமெண்ட் மட்டும் இப்பொழுது இங்கே.

“Saw Dev D, movie was pretty interesting. read lot of v good reviews. film didn't disappointed me at all, great music and camera work. if u r in2 this multiplex cinema and if u r not a hypocrite u can enjoy this movie. but thought like theய் should've cut down the scenes.”

Delhi 6 ஒப்பீட்டளவில் எனக்கு Dev D அளவிற்கு பிடிக்கவில்லை என்றாலும், பிடித்துத்தான் இருந்தது. தேவையில்லாத அந்த அபிஷேக் சோனம் காதலைக் கைவிட்டிருக்கலாம். Dev D அளவிற்கு raw வாக படம் இல்லை, சோடா ஊற்றி கலந்த எஃபெக்ட்டில் இருந்தது. இங்கும் அங்கும் குதிக்கும் அபிஷேக்கின் குரங்கு சேட்டை, அமிதாப் பச்சன் என்று கொஞ்சம் இறுக்கிப் பிடித்திருந்தால் நல்ல படமாகயிருந்திருக்கும். ஆனால் நண்பர்களுக்கு Dev Dயை விடவும் Delhi 6 பிடித்திருந்தது என்று அறியும் பொழுது ராகேஷ் ஒம்பிரகாஷ் மெஹ்ரா யோசிச்சு தான் செய்திருப்பார் என்று பட்டது.

சமீபத்தில் பதிவொன்றில் தப்பித்தவறி நுழைந்த பொழுது, கரிகாலக் கண்ணன் பற்றிய பின்னூட்டங்களைப் பார்க்க முடிந்தது. கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது, பதிவுகளில் பொன்னியின் செல்வனைப் பற்றி யாராவது பதிவெழுதியிருந்தால் அந்தப் பக்கம் தலைவைத்துக் கூட பார்க்க முடியாத “சுய கட்டுப்பாடு” கொஞ்சம் தவறோ என்று நினைக்க வந்தது அந்தப் பதிவில் பார்த்த சில விஷயங்களும் சில பின்னூட்டங்களும்.

கரிகாலக் கண்ணன் பற்றி பதிவாக எழுதாமல் ஒரு கற்பனைக் கதையை கலந்து கட்டியதற்கு முக்கியக் காரணம், அவனைப் பற்றி நான் படித்த ஒற்றை வரி மட்டுமே. இரண்டாம் ஆதித்த கரிகாலன் சோழர் குலத்தில் அரசாண்ட ஒரு மன்னன் என்பதும், அந்தக் காலத்தில் அரியணை ஏறும் பொழுது திருமணம் செய்து கொள்வது இயல்பு என்றும் புரியும் பொழுது கரிகாலக் கண்ணனுக்கான சாத்தியக்கூறுகள் விரிவடைகின்றன.





மன்னர்காலம்
இராஜகேசரி கண்டராதித்தன் கிபி 949/50 - 957
பரகேசரி அரிஞ்சயன் கிபி 956 - 957
இராஜகேசரி சுந்தரசோழன் கிபி 956 - 73
இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலன் கிபி 956 - 969.


மேற்சொன்ன அட்டவணை "The Chola" எழுதிய நீலகண்ட சாஸ்திரி கொடுப்பது. இதற்குக் காரணம் அவன் பெயரில் கல்வெட்டுக்கள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. ஆனால் கடைசியில் முடிக்கும் பொழுது “சுந்தரசோழனின் ஆட்சித் தொடக்கத்திலேயே, ஆதித்தன் துணை அரசனாக விளங்கினான் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. ஆயினும் இதை முழுக்க முழுக்க நம்ப முடியாது. ஏனெனில் துணை அரசனாக இல்லாமலேயே ஆதித்தன் இந்தப் போரில் பங்கேற்றிருக்க முடியும்.” ஆதித்த கரிகாலன் பற்றி எழுதிய இந்தக் கட்டுரை இன்னும் கொஞ்சம் விளக்கமாக இது பற்றி பேசக்கூடும்.

எதையாவது பற்றி நாலுவரி எழுதலாம் என்று நினைக்கும் ஒவ்வொரு சமயமும் இலங்கைப் பிரச்சனை கண்முன் தோன்றி இந்தச் சூழ்நிலையில் என்ன எழுதுவது என்று மனம் மூடிக் கொள்கிறது. ஈழத்தைப் பற்றி, ஈழத்தமிழர்களைப் பற்றி கேட்கும் எந்த ஒரு செய்தியும் மனதை சட்டென்று துன்பமடையச் செய்கிறது.

என்னைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவிலான எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் மாநிலக் கட்சிகளின் துணைகொண்டு மட்டும் தான் ஆட்சி அமைக்கக்கூடிய நிலை வர வேண்டும். அது காங்கிரஸோ பிஜேபியோ இப்போதைக்கு பிரச்சனை கிடையாது. அறுதிப் பெரும்பான்மையோ அதன் பக்கத்திலோ கூட வர முடியாமல் இருக்க வேண்டும். மூன்றாம் அணியில் ஜெ வருவார் மாட்டார் என்ற குழப்பத்திலேயே இருப்பதால் மூன்றாம் அணியின் வாய்ப்பு பிரகாசமாகவே தெரிந்தாலும், என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஜெ.வின் துணிச்சல் அவருடைய மிகப்பெரிய பலவீனம். The possession of power, unavoidably spoils the free use of reason - Immanuel kant. இது ஜெ.வின் விஷயத்தில் 200% நிஜம்.

புதுக்குடியிருப்பிற்குள் நெருக்கப்பட்டிருக்கும் புலிகளுக்கும் சரி, ஈழ மக்களுக்கும் சரி இந்தப் பக்கம் கலைஞர் இருப்பது தான் உத்தமமாகயிருக்கக்கூடும்.

ஹைதராபாத் சென்றிருந்த பொழுது எடுத்த ஒரு போர்ட்ராய்ட் மிகவும் பிடித்திருந்தது,

Portrait

தஞ்சாவூரில் எடுத்த பல புகைப்படங்கள் கைவசம் இல்லாததால் மாற்ற அப்லோட் செய்ய முடியவில்லை சில படங்கள்

தஞ்சை கோவில்

சிவ பார்வதி

அர்த்தநாரீஸ்வரர்

தஞ்சை பெரிய கோவில் சிற்பம்

இது பெங்களூர் Aero Show சென்றிருந்த பொழுது எடுத்தது

Surya Kiran formation

F - 18 in action

Read More

Share Tweet Pin It +1

3 Comments

Popular Posts