In இந்தி சொந்தக் கதை டெல்லி

இந்தி இந்தியாவின் தேசிய மொழியா???

இது பெரும்பாலும் இந்தியாவின் வடமாநிலங்களில் வேலை பார்த்த அனைத்து தமிழ் நாட்டு மக்களுமே தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது யாராவது அவர்களிடம் கேட்டிருக்ககூடிய கேள்விதான். என்னிடமும் இந்தக் கேள்வி பலமுறை கேட்கப்பட்டிருக்கிறது. தேசிய மொழி தெரியலைன்னு சொல்ரியே கேவலமாயில்லையான்னு, நிறைய முறை மறுத்து பேசியிருக்கிறேன் என்றாலும் மனதின் ஒரத்தில் ஒரு முழுமையான நிறைவு இல்லாமல் தான் அப்படி பேசியிருப்பேன் காரணம்.

ஒரு வகையில் சொந்தமாக இந்தி படித்துவிட்டு, சும்மா பேருக்கு இந்தியை எதிர்த்துக்கிட்டு ஆனால் சொந்தக்காரங்களை இந்தி படிக்கவைக்கும் சில அரசியல் வாதிகளுக்கும் எனக்கும் பிறகு என்ன வித்தியாசம் இருக்க முடியும். ஆனால் முட்டாள்த்தனமாக இந்திக்காரர்கள் இந்தி தெரியாதவனை கேவலமாப் பேசினா எதிர்த்து சண்டை போட்டிருக்கேன், போட்டுக்கொண்டிருக்கிறேன் நிச்சயம் இனிமேலும் போடுவேன்.

ஆனால் யாரோ ஒரு ப்ளாக்கர் சொன்ன மாதிரி, அமேரிகாவுக்கு போறிங்கன்னா கொஞ்சமாவது இலக்கணப் பிழையில்லாம ஆங்கிலம் பேசக்கத்துக்கிட்டு போறது பெட்டர் மாதிரி. உங்களுக்கு தேவையிருக்கும்னு தெரிஞ்சால், பிற்காலத்தில் உங்களுக்கு இந்தியாவின் வட மாநிலங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பாவது இருக்கும்னு தெரிந்தால் இந்தி படித்து வைத்துக்கொள்வது நல்லது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து நேராய் அமேரிக்கா போகும் அளவிற்கு தகுதியிருப்பவர்களுக்கு இந்தப்பிரச்சனையெல்லாம் கிடையாது.

உண்மையை சொல்றேனே, நான் படிச்சது பிஎஸ்ஸி, நான் மெட்ராஸில் தான் வேலைக்கு போவேன்னு உட்கார்ந்திருந்தால் ஒருவேளை என் திறமைக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை கிடைத்திருக்கும். ஆனால் நானெல்லாம் முடிச்ச சோட்டுல, டெல்லியைப்பார்க்க போய்ட்டேன். சுலபமா வேலை கிடைத்தது. முதலில் எனக்கு பிஎஸ்ஸி முடித்ததும், மாஸ்டர்ஸ் படிக்காமல் வேலைக்கு போய்விட முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தது என்னுடைய கணிணித்திறமையென்றால், அதற்கு உதவியது டெல்லியில் இருக்கும், இருந்த என் சொந்தக்காரர்கள் என்றால், ஒரு சதவீதமாவது உதவியது என்னுடைய, டெல்லியில் எனக்குத்தெரிந்த இந்தி பேசி சமாளித்துவிடமுடியும் என்ற ஒரு கான்பிடன்ஸ்.

நீங்கள் தமிழ்நாட்டில் உட்கார்ந்திருந்தால் வேலை கிடைக்காதென்றொ இல்லை கஷ்டப்படுமென்றோ சொல்லவில்லை. ஆனால் நீங்கள் தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் இருக்கும் சமயத்தில் டெல்லிக்கு சென்று வேலை தேட நினைக்கிறீர்களா? டெல்லியில் உங்களுக்கான வேலை காத்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இந்தி தெரிந்தால் ஒரு மாதம் யோசிக்கும் நீங்கள் அந்த முடிவை இன்னும் சீக்கிரத்தில் எடுக்க முடியும்.

அதற்கு எனக்கு உதவியது டெல்லியில் இருக்கும் உறவினர்கள் கொஞ்சம் என்றாலும் நானெல்லாம் தைரியமாய் அம்மா, அப்பாவை விட்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் உட்கார்ந்தது நாலு வார்த்தை இந்தியில் பேசி சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தான். இதேபோல் கூட இல்லை என்னை விட மேல் படிப்பு படித்துவிட்டு வேலையில்லாமல் உட்கார்ந்திருக்கும் என் உறவினர்களையும் அழைக்கத்தான் செய்கிறார்கள் டெல்லியிலிருந்து. ஆனால் போகாமலிருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் என்றால் அதில் இந்தி தெரியாதென்பது ஒன்றாகயிருக்கிறது.

அங்கே போய் இந்தி படித்துக்கொள்ளலாம் என்பதெல்லாம் உண்மைதான். இதெல்லாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் முன்னுக்கு வரணும் என்று நினைக்கும் கேட்டகிரியினருக்கு சரிவரும். சி, சி++, ஜாவா படித்தாலே வேலை கிடைக்கும் நிலை இன்றும் இருக்கும் பொழுது, அதன் அட்வான்ஸ்ட் டெக்னாலஜிக்களை படித்து வைத்துக்கொள்வதில்லையா, J2EE, Struts, EJB இப்படி.

இதெல்லாம் வேலையில் சேர்ந்த பிறகு படிக்க முடியாதா என்றால். நிச்சயம் முடியும். எனக்குத்தெரிந்து எத்தனை பேர் வட இந்தியாவில் மூன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் வேலைசெய்துவிட்டும் கூட இந்தியில் நாலு வார்த்தை பேச முடியாமல், துணிவாங்கணும்னா, கடையில் போய் காய்கறி வாங்கணும்னா, சலவைக்கு போட்ட துணிகளை திரும்ப வாங்கணும்னா, இல்லை ஆட்டோவில் போகணும்னா, நாலுவார்த்தை இந்தி தெரிந்த ஆட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலையை நிறையப் பார்த்திருக்கிறேன்.

இன்னும் ஒரு விஷயம், என்னுடன் வேலை செய்த எத்தனையோ நண்பர்களுக்கு அவர்களுக்கு கிடைப்பதை விட, கூடுதலாய் 30% ஹைக், டெல்லிக்கு வந்தால் கிடைக்கும் என்ற நிலையில் டெல்லிக்கு போக மனமில்லாமல், இங்கேயே இருக்கிறார்கள் சிலசமயம் அவர்களுடைய மனநிலை வினோதமாகயிருக்கும். புனேவில் சமாளித்துவிட முடியும் என நினைத்து வருபவர்கள் கூட டெல்லிக்கு போக பயப்படுகிறார்கள். கேட்டால் இது பக்கம் என்று பதில் வேறு.

இன்றும் நான் வேலை செய்யும் கம்பெனியில் அது ஒரு இன்டர்நேஷனல் கம்பெனியாக இருக்கும் பொழுதும், எங்களுடைய டீம் மீட்டிங்கள் இந்தியில் போய்க்கொண்டிருப்பது தான் உண்மை, சில சமயம் ஆன்சைட் குவார்டினேட்டர்களுடனான மீட்டிங்குகள் கூட, தமிழ் நாட்டில் மீட்டிங்குகள் தமிழில் செல்வதாக நான் கேள்விப்பட்டதில்லை(நான் இதுவரை தமிழ்நாட்டில் வேலை பார்க்கவில்லை).

ஒரு ப்ரொஜக்ட் டீமில் இருக்கும் எட்டு ஒன்பது பேரில் ஒருவர் தமிழராக இருக்கப்போய், அவருக்காக அந்த டீம் முழுவதும் இந்தியை விட்டுவிட்டு கம்பெனியின் மொழி ஆங்கிலம் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசுவார்கள் செய்துகொண்டு வரும் தமிழர்கள் படும் பாடு வேடிக்கையாகயிருக்கும். ஒரு விஷயம் மட்டும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிச்சயமாக நடக்கும் அது அவர்கள் டீமிலிருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள். சிறுபான்மை சமுதாயம் எங்கும் உண்டு அதாவது அப்படி ஒருவர் இருக்கும் பொழுது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கும் டீம் லீடுகள் இங்கேயும் உண்டு ஆனால் பர்சன்டேஜ் குறைவு. மிகவும்.

என்னைப் பொறுத்தவரை. இன்று வடமாநிலத்தில் இருக்கப்போகிறேன் என்று தெரிந்ததால் இந்தி கற்றுக்கொண்டது போல் நாளை ப்ரான்சிற்கொ இல்லை ஜெர்மனிக்கோ போக நினைக்கும் பொழுது அந்த மொழிகளை கற்றுக்கொள்ள நிச்சயம் முனைவேன். அந்த மொழியில் மாஸ்டர் ஆக நினைக்காமல் நாலுவார்த்தை பேசவும் அந்த மொழியை புரிந்து கொள்ளவும் என்னால் ஆன முயற்சி நிச்சயமாக செய்யப்படும் அது ப்ரான்ஸிற்கோ இல்லை ஜெர்மனிக்கும் போன பிறகாக நிச்சயம் இருக்காமல் இங்கிருக்கும் பொழுதே செய்யப்படும் முயற்சியாக இருக்கும்.

யாரையும் இந்தி படிக்கச் சொல்லும் படி நான் நிச்சயமாக வலியுறுத்தவில்லை, இன்று வரை என்னை பொறுத்தவரை இந்தி இந்தியாவின் தாய்மொழி கிடையாது தான். நிச்சயமாக. ஆனால் உங்களுக்கு தேவையிருக்குமானால் அது இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை.

Related Articles

42 comments:

  1. அன்பு மோகன் தாஸ்,

    தேவை ஏற்பட்டால் இந்தி மட்டுமல்ல,வியட்நாமீய மொழி கற்பதில் கூட தவறில்லை.அதே சமயம் தேசிய மொழி என்ற பெயரால் பள்ளிகளில் கட்டாயமாக மாணவர்கள் மீது இந்தியை திணிப்பதை நாம் ஏற்பதற்கில்லை.

    மொழித் திணிப்புக்கு மட்டுமே நான் எதிரானவன்.மொழி கற்பதற்கு அல்ல.விருப்பத்தேர்வாக விரும்புவோர் இந்தியை படிப்பதை நான் வரவேற்கிறேன்

    ReplyDelete
  2. the politicians spoiled the students of Tamilnadu. but only a few like you have changed like this and accepted the fact.

    ReplyDelete
  3. You are completely right.

    ReplyDelete
  4. சரியா சொன்னீர்! பாஷை என்பது ஒரு ஊடகம், அடுத்தவனுக்கு புரியம் மொழியில பேச முற்படுறதல தப்பேயில்லை, இதுவே முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக்கிட்டு உட்கார்ந்திருக்கிறவங்க குண்டுசட்டியில குதிரை ஓட்ற இனம். எல்லையை விட்டு வெளிவந்தா தான் தெரியும் உலகம் நாலுவகைன்னு. அதுக்கு முட்டுகட்டை போடறது இன உணர்வை தூண்டிவிட்டு நம்மகிட்ட ஓட்டு வாங்கிற கும்பல் தான்! என்ன பண்ணறது இது இன்னும் முப்பது வருஷமானாலும் மாறாது போ!

    ReplyDelete
  5. செல்வன் மொழித்திணிப்பென்பது யாராலுமே ஒத்துக்கொள்ள முடியாத ஒரு விஷயம் தான்.

    ReplyDelete
  6. கீதா அரசியல் வாதிகளை குறை சொல்ல முடியாது. அது அவங்களோட தொழில் அதை செய்யணுமா வேண்டாமா. மக்களை இது போன்ற விஷயங்களில் நம்பாமல் அவர்களாக முடிவெடுக்க வேண்டும்.

    ReplyDelete
  7. அநானி உங்கள் கருத்துக்கு நன்றி, வெளிக்கண்டவரே, உண்மை தான். நம்மக்கள் இன்னும் அரசியல்வாதிகளின் ஏற்படுத்தும் குழப்பங்களில் இருந்து வெளிவரவேயில்லை.

    ReplyDelete
  8. //உங்களுக்கு தேவையிருக்குமானால் அது இந்தி மட்டுமல்ல.. எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை.//

    வணக்கம் அண்ணாச்சி, விடாம கலக்கிக்கிட்டூ இருக்கீய...
    மோகன்தாஸூ, ரொம்ப சூப்பரா சொல்லியிருக்கய்யா.. இந்த வரியை முற்றிலும் ஆதரிக்கிறேன்..அதே சமயம் மொழித்திணிப்பு இருக்கக்கூடாது..

    *****

    உங்கூருக்கு வரப்போறேன்.. எந்த கம்பெனின்னு கண்டுபிடிங்க
    பாப்பம் :-)...(தனிமெயிலில் guessaலாம்)

    ReplyDelete
  9. //என்னைப் பொறுத்தவரை. இன்று வடமாநிலத்தில் இருக்கப்போகிறேன் என்று தெரிந்ததால் இந்தி கற்றுக்கொண்டது போல் நாளை ப்ரான்சிற்கொ இல்லை ஜெர்மனிக்கோ போக நினைக்கும் பொழுது அந்த மொழிகளை கற்றுக்கொள்ள நிச்சயம் முனைவேன். அந்த மொழியில் மாஸ்டர் ஆக நினைக்காமல் நாலுவார்த்தை பேசவும் அந்த மொழியை புரிந்து கொள்ளவும் என்னால் ஆன முயற்சி நிச்சயமாக செய்யப்படும் அது ப்ரான்ஸிற்கோ இல்லை ஜெர்மனிக்கும் போன பிறகாக நிச்சயம் இருக்காமல் இங்கிருக்கும் பொழுதே செய்யப்படும் முயற்சியாக இருக்கும்.


    That's good. Keep it up!

    - Ramki , ex-punetie

    ReplyDelete
  10. //ஆனால் உங்களுக்கு தேவையிருக்குமானால் அது இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை.//

    Bulls eye.

    ReplyDelete
  11. மொழி கருத்துப்பரிமாற்றத்திற்கான ஊடகமே. உங்கள் பணியிடத்திற்கேற்பவும் சுற்றுசூழலுடன் இயைந்ததாகவும் மொழி பயில்வது வேண்டுயதே. மொழித்திணிப்பு எதிர்க்கப் படவேண்டியதுதான்.

    நீங்கள் கூறியதுபோல் குழுகூட்டத்தில் ஒருவருக்காக பெரும்பான்மையவர் ஆங்கிலத்தில் பேசுவது அவர்களின் பெருந்தன்மை. அதேசமயம் அத்தைகைய பெருந்தன்மையை ஏற்றுக்கொள்வது நம்மைத் தனிமைப் படுத்துகிறது. மும்பை தமிழ்சங்கம் இங்கு பணிபுரிபவர்களுக்காக மராத்தி வகுப்புக்கள் நடத்துகிறது.

    ReplyDelete
  12. //டீம் மீட்டிங்கள் இந்தியில் போய்க்கொண்டிருப்பது தான் உண்மை, சில சமயம் ஆன்சைட் குவார்டினேட்டர்களுடனான மீட்டிங்குகள் கூட//

    தென்மாநிலங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் இந்த பிரச்சனை உண்டு.

    we are working in MNC company in pune.My friends who are from Andra also talking about this.

    ReplyDelete
  13. அட அடா என்றும் பதினாறு டாபிக்டா சாமி..

    இந்தியின் அவசியம் என்ன என்பது தான் இப்போது பிரச்சினை. தாய்மொழியின் அவசியம் தெரிகிறது. ஆங்கிலத்தின் அவசியம் நன்றாக தெரிகிறது.கணிணி தொழில்நுட்பம், கால் சென்டர்கள் உள்பட வெறும் ஆங்கிலத்தை வைத்தே பொழப்பை நடத்த முடியும்.

    நாம் ஆங்கிலத்தை படிப்பது போல் இந்திக்காரனும் ஆங்கிலத்தை படித்துக்கொண்டால் மொழிப் பிரச்சினை தீர்ந்தது. என்ன மயிருக்கு நாம் இந்தி படிக்கணும் என்பதுதான் என் கேள்வி.தேசியம் என்ற பெயரில் மக்களை சும்பனாக்குவதுதான் இது.

    ஒரு ஊருக்கு போக தேவை ஏற்பட்டால் மொழியை படிப்பதில் தவறில்லை.(எனக்கும் இந்தி ஓரளவு தெரியும்)

    ஆனால் அனைவரும் படிக்கவேண்டும் என்று கூறுவது அடிமைத்தனம் என்பது என் கருத்து.

    ReplyDelete
  14. வேலை கணிணி துறையில் என்று முடிவெடுத்தால் கன்னடமும், தெலுங்கும் தான் இந்தியை விட முக்கியமாக தெரிந்திருக்க வேண்டும், ஏனெனில் கணிணிதுறையில் இந்தி மாநிலங்களைவிட வேலை கொட்டி கிடப்பது பெங்களூரிலும், ஹைதராபத்திலும் தான், ஒரு வேளை இந்தி தெரியாமலிருந்திருந்தால் லால்பாக் எக்ஸ்பிரசையோ, கோல்கொண்டா எக்ஸ்பிரசையோ பிடித்திருந்திருப்பீர் உங்களுக்கு ஒவ்வொருமுறையும் பயன நாளாவது இரண்டு நாட்கள் மிஞ்சியிருக்கும் :-)

    புரிந்திருக்குமே நான் என்ன சொல்ல வர்றேன்னு :-))))

    ReplyDelete
  15. சுதர்ஸன் கோபால் அப்படியா?

    மணியன், இன்னும் எனக்கு மராத்தி தெரியாது தான் ஆனால் நாம் இந்தியில் பேசினாலே இவர்களுக்கு சந்தோஷம் தான். ;)

    அனானி ட்ரூ,

    முத்து, இது மொத்தமும் டிபண்டண்ட். நீங்க டெல்லிக்கோ இல்லை மற்ற மாநிலங்களுக்கோ போய் வேலை செய்யும் நிலையைப் பொறுத்தது.

    நாம் ஆங்கிலத்தைப் படிக்கிறோம் இந்திக்காரர்கள் படிக்கவில்லையென்பது விளையாட்டுத்தனமானது, இந்திக்காரர்கள் பலர் சென்னைக்கு வந்து வேலை பார்க்க பயப்படுகிறார்கள் தெரியுமா? இது உண்மை எங்கள் கம்பெனியின் கிளை ஒன்று தற்சமயம் சென்னையில் உள்ளது. அதில் வேலைசெய்ய முழுவது தமிழ் மக்களையே நம்பி இருக்கிறது கம்பெனி. தெலுங்கர்கள் கூட அங்கே வரமாட்டேன் என்கிறார்கள்.

    ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன் திணிப்பை எதிர்க்கிறேன் என்று, ஆனால் டெல்லிக்கு போய்விட்டு டெல்லிக்காரர்கள் தமிழ் பேசமாட்டேன் என்கிறார்கள் என்பது விளையாட்டுத்தனமானது. அதுமட்டுமல்லாமல் தமிழர்கள் தமிழில் பேசமாட்டேன் என்பதில் நிச்சயமாக வேறு நிறைய பிரச்சனைகள் உள்ளது. தமிழ் மீது உள்ள பாசத்தை விடவும்.

    அண்ணாச்சி குழலி, நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்களா இல்லை என்னை வம்பிற்கு இழுக்கிறீர்களா என்று தெரியவில்லை. நானும் ஒரு வருடம்முழுவதும் கர்நாடகத்தில் வேலை செய்திருக்கிறேன் தலைவரே. நான் டெல்லியிலோ இல்லை புனேயிலோ கூட உயிர்வாழ்வதற்கு பயப்பட்டதில்லை அங்கே பயந்திருக்கிறேன். இதை(விஷயத்தை) அந்தப் பக்கம் இழுத்துப்போக விரும்பவில்லை.

    பெங்களூரில் கிடைத்ததை விட 50% சம்பளம் அதிகம் கிடைத்தது புனேவில், அதனால் மாறிவிட்டேன், இதைவிட சம்பளம் 30% அதிகமாகக் கிடைக்குமென்றால் டெல்லிக்கு மாறிவிடுவேன் நிச்சயமாய். ஆனால் பெங்களூரிலோ இல்லை ஹைதராபாத்திலோ கிடைக்காதென்று நினைக்கிறேன். முதல் பேச்சே ஹேச் ஆரிடம் இருந்து 'சொந்த ஊருக்கு வரப்போறீங்க'ன்னு தான் ஆரம்பிக்கும். சேலரியை கொஞ்சம் கூடுதலாகக் கொடுக்கவோ இல்லை, நான் வாங்கும் சம்பளத்தை தருவதற்கோ தான் இந்தப் பேச்சு.

    ReplyDelete
  16. அண்ணாச்சி,

    ஒரு பிஹாரி அல்லது பஞ்சாபி பணி நிமித்தம் பெங்களூருக்கோ, ஹைதராபாத்துக்கோ வர வேண்டியிருப்பின் கன்னடம் அல்லது தெலுங்கு மொழியை கற்பதை ஆதரிக்கிறீர்களா?

    ReplyDelete
  17. // ஒரு ப்ரொஜக்ட் டீமில் இருக்கும் எட்டு ஒன்பது பேரில் ஒருவர் தமிழராக இருக்கப்போய், அவருக்காக அந்த டீம் முழுவதும் இந்தியை விட்டுவிட்டு கம்பெனியின் மொழி ஆங்கிலம் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசுவார்கள் செய்துகொண்டு வரும் தமிழர்கள் படும் பாடு வேடிக்கையாகயிருக்கும். //

    இதைத்தான் சொல்ல வருகிறேன். இதனை என்ன சொல்லி அழைப்பது?

    இதையே ஒன்பது தமிழர்களும், ஒரு ஹிந்திக்காரனும் இருக்குமிடமாக இருந்தால் தமிழ்ல் பேசுவதை நாகரிகம் கருதி நாம் ஆங்கிலத்தில்தான் பேசுவோம். (10 பேருமே தமிழர்களாக இருந்தாலும் அபப்டித்தான் என்பது வெட்கப்படவேண்டிய வேறு விசயம்)

    இங்கேதான் சறுக்குகிறது. ஆதிக்க மனோபாவம் தலைகாட்டுகிறது. என் மொழியை கற்றுக் கொள்ளாமல் நீ என்ன குப்பை கொட்டுவது என்ற ஆதிக்க எண்ணம். இந்த ஆதிக்க எண்ணத்தோடு திணிக்கப்படும் மொழி எதுவானாலும் எதிர்க்கப்பட வேண்டியதுதான் என்பதுதான் என் எண்ணம்.

    தனிப்பட்ட முறையில் ஹிந்தி படிப்பதை யாரும் எதிர்க்கவில்லையே? ஆனாலும், ஹிந்தி படிப்பதே தவறு என்று திராவிட கழகங்கள் சொன்னது போல புல்ம்புவதையே ஒரு சாரார் தொடர்ந்து கவனமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.என்னமோ ஹிந்தி படிக்காமல் போனதால்தான் தமிழ்நாடு இருண்டு போய்விட்டதாகச் சொல்வதெல்லாம் அளந்து விடப்படும் கட்டுக்கதைகள்தான்.

    ஹிந்தி ஒரு மொழியாகக் கற்றுக்கொள்லப்படுவதில் தவறில்லை.ஆனால், வலிந்து திணித்து தமிழ்நாட்டில் சாத்தான்குளத்தில் இருப்பவனும் ஹிந்தி வார்த்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமான தவறு.

    இந்த இடத்தில் செல்வனின் மறுமொழியோடு முழுக்க உடன்படுகிறேன்

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  18. தேசிய மொழி (National language) என்று ஒரு மண்ணும் கிடையாது..."official language of the Union shall be Hindi" என்று..அதுவும் பல விலக்குகளுடன் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது.(ii) They shall extend to the whole of India, except the State of Tamilnadu.

    யாருப்ப இங்க நல்லா தமிழ் தெரிஞ்சவங்க்? Official க்கு என்ன தமிழ்? அதிகாரபூர்வமான மொழி ...அல்லது ஆபிஸில் பயன்படுத்தப்படும் மொழி..என்ன குப்பையோ அதற்காக "தேசிய மொழி" என்று எழுத வேண்டாம்.


    G.S.R 1052 - In exercise of the powers conferred by section 8, read with sub-section(4) of section 3 of the Official Languages Act, 1963 (19 of 1963), the Central Government hereby makes the following rules, namely ;

    1. Short title, extent and commencement -

    (i) These rules may be called the Official Languages (Use for Official Purposes of the Union) Rules, 1976.

    (ii) They shall extend to the whole of India, except the State of Tamilnadu.

    (iii) They shall come into force on the date of their publication in the Official Gazette.


    ...
    மேலும் படிக்க... இந்தியாவின் அதிகாரபூர்வ அறிக்கை.
    http://rajbhasha.nic.in/dolruleseng.htm

    யாராவது National language Hindi என்று சொல்லும் இந்தியாவின் சட்ட வரைவை எடுத்துக் கொடுங்கள் புண்ணியமாப் போகும்.
    ..

    Hindi chauvinism
    http://www.hindu.com/mag/2004/01/18/stories/2004011800040300.htm

    //The Assembly finally arrived at a compromise; that "the official language of the Union shall be Hindi in the Devanagari script"; but for "15 years from the commencement of the Constitution, the English language shall continue to be used for all the official purposes of the Union for which it was being used immediately before such commencement".//

    ReplyDelete
  19. //இந்திக்காரர்கள் பலர் சென்னைக்கு வந்து வேலை பார்க்க பயப்படுகிறார்கள் தெரியுமா? இது உண்மை எங்கள் கம்பெனியின் கிளை ஒன்று தற்சமயம் சென்னையில் உள்ளது. அதில் வேலைசெய்ய முழுவது தமிழ் மக்களையே நம்பி இருக்கிறது கம்பெனி. தெலுங்கர்கள் கூட அங்கே வரமாட்டேன் என்கிறார்கள். //

    அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

    அலுவலகத்தில் சக பணியாளர்கள் ஆங்கிலத்தில் பேசாமையா அல்லது வெளியிடங்களில் அவர்களால் பேச முடியாது என்பதாலா?

    இரண்டாவது காரணம் என்றால், அதற்கு உங்கள் தீர்வு என்ன?

    ReplyDelete
  20. மொழியறிவை வேலைக்கான தேவை மட்டுமே என்ற வகையில் உங்களது கட்டுரை புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. உண்மையில் மொழியின் பலம் அதையும் தாண்டியது. ஒரு மாநிலத்தவர் மற்றொரு மாநிலத்தவரை புரிந்துகொள்ள ஒரு பொதுவான மொழி அவஸியம். பல மொழிகள் பேசப்படுகின்ற பாரத நாட்டில் செம்மொழியும், அரபியும் கலந்ததில் உருவான ஹிந்தி மொழியை ஒரு தகவற் தொடர்பு சாதனமாக பயன்படுத்த அரஸாங்கம் முடிவு செய்தது. ஆங்கிலத்தை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், முதலில் அது இந்த நிலத்திலுள்ள மொழிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. உணர்வு ரீதியாக வேறுபட்டது. பரத கண்டத்தில் தோன்றிய ஒவ்வொரு மொழியிலும் மற்றொரு மொழியின் வார்த்தைகள் உண்டு. உதாரணமாக தெலுங்கர்களால் கன்னடத்தை படிக்க முடியும். எழுத்துக்கள் ஒன்றுதான். தமிழர்கள் கொஞ்சம் உற்று கவனித்தால் கன்னடத்தையோ, தெலுங்கையோ புரிந்துகொள்ள முடியும். கன்னடம் தெரிந்தவர்களால் ஹிந்தியை புரிந்துகொள்ள முடியும். ராஜஸ்தானி தெரிந்தவர்கள், வங்காளிகளுக்கு ஹிந்தி புரியும். ஏனெனில் இந்த நாட்டில் உள்ள மொழிகளுக்கிடையேயான தொடர்பு அதிகம். அந்த வகையில் ஹிந்தி ஆங்கிலத்தை விட சிறந்தது.

    மேலும், ஹிந்தியை எதிர்ப்பவர்கள் இந்தியாவிலிருந்து தனியாக பிரிந்து செல்லவேண்டும் என்கிற கொள்கைகளை ஆதரிப்பவர்கள்தான். ஏனெனில் ஹிந்தி என்கிற ஒரு பொது மொழி ஏற்பட்டுவிட்டால் தமிழர்கள் இந்தியாவிலுள்ள அனைத்து கலாச்சாரங்கள் போன்றதுதான் தமிழகக் கலாச்சாரமும் என்பதை புரிந்துகொண்டுவிடுவர். இதற்கென உள்ள தனி சிறப்புக்களை, ஹிந்தி மொழி கல்வி அழித்துவிடாது என்பதையும் புரிந்துகொண்டுவிடுவர். இது தனி தமிழ்நாடு கேட்கிற அரஸியலுக்கு உதவாது.

    இங்கே கன்னடர்களின் மொழிப்பற்று அவர்களது ஹிந்தி அறிவால் பாதிக்கப்படவே இல்லை. தமிழகத்தில் இருப்பதுபோல் இல்லாமல் இங்கே கன்னட மொழிப்பற்று ஒரு மக்கள் எழுச்சியாக உள்ளது. தமிழகத்தில் அது தலைவர்களின் பொழுதுபோக்கு. படித்தவர்களின் திண்ணை பேச்சு.

    ReplyDelete
  21. பெத்த ராயுடு, சொல்றனேன்னு தப்பா எடுத்துக்கக்கூடாது, எனக்குத்தெரிந்த வரையில் பெங்களூரில் வெறும் இந்தி மட்டும் பேசி வாழ்ந்துவிடமுடியும். பெங்களூர்க்காரர்கள் அநாயாசமாக நான்கு மொழிகளை, தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.

    ஹைதராபாத் பத்தி தெரியாது, ஆனால் அந்த அந்த ஊரின் மொழி தெரிந்து கொள்வதை வரவேற்கிறேன். அப்படி செய்த பல இந்திக் காரர்களையும் எனக்குத் தெரியும்.

    -----
    இவர்கள் சென்னைக்கு வராமல் இருப்பதற்கு அவர்களுக்கு தமிழ் தெரியாமல் இருப்பதும், இந்தி சென்னையில் எடுபடாததுதான் காரணம். இதற்கு நான் தீர்வு சொல்ல முடியாது தலைவரே. அவரவர்கள் முடிவெடுக்கணும்.

    ReplyDelete
  22. //இங்கேதான் சறுக்குகிறது. ஆதிக்க மனோபாவம் தலைகாட்டுகிறது. என் மொழியை கற்றுக் கொள்ளாமல் நீ என்ன குப்பை கொட்டுவது என்ற ஆதிக்க எண்ணம். இந்த ஆதிக்க எண்ணத்தோடு திணிக்கப்படும் மொழி எதுவானாலும் எதிர்க்கப்பட வேண்டியதுதான் என்பதுதான் என் எண்ணம்.//

    ஆசிப் அண்ணாச்சி, உண்மை.

    இதை எப்பொழுதும் சிறிது நக்கலாய் அவர்களிடமும் சொல்வது உண்டு. சில சமயம் கோபமாக வாதடுவதுண்டு ஒரு உதாரணம் சொல்லவேண்டுமானால் சில நாட்களுக்கு முன்னர் எல்லா கேன்டீன்களிலும் நல்ல பெரிய ஸ்கிரீன் டிவிக்கள் கொண்டுவந்து பொறுத்தப்பட்டன. எப்பொழுதும் அந்த டிவிக்களில் இந்தி சேனல்களே ஆக்கிரமிப்பு செய்து வந்ததால் ஒரு நாள் என் டீமுடன் சாப்பிடச் சென்ற பொழுது அவர்களிடம் இதைப் பற்றி விவாதம் ஆரம்பித்து விடுதலைப் புலிகள் ராஜிவை கொன்றது வரை நீண்டது. நான் தலைமைக்கு ஒரு மெயில் அனுப்பினேன் ஆங்கில சேனல்களை ஒளிபரப்புமாறு. இது நடக்கும் ஒன்று, ஆனால் ஒரு உண்மை தெரியுமா அந்த உரையாடல் முழுவது நிகழ்ந்தது இந்தியில்.

    தேவைகள் தான் கண்டுபிடிப்பின் தாய் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை முழுவதுமாக நம்புகிறேன். இதே, தமிழகத்தின் நல்ல பெரிய கல்லூரியில் படித்திருந்து, சென்னையில் வேலையில் சேர்ந்து நேராய் வெளிநாடு, (அமேரிக்கா, இங்கிலாந்து) சென்றிருப்பேனேயானால் நானும் இந்த என்னுடைய மனநிலையை தவறாகவே புரிந்திருப்பேன் நிச்சயமாய்.

    வெளியில் இருந்து இதைப் பார்ப்பது வித்தியாசமானது, நான் செய்திருக்கிறேன் இதை, என்னுடைய கல்லூரி நாட்களில். வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடங்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  23. மோகன்..

    நானும் ஆரம்பத்தில் கலைஞர் ஏன் இந்தி படிக்க விடாம தடுத்தார் என்று பதிவெல்லாம் போட்டிருக்கேன்..

    ஆனால் இந்தி எதிர்ப்புக்கும் - இந்தி தினிப்புக்கும் உள்ள வித்தியாசம் கொஞ்ச நாள் முன்னால் தான் புரிந்தது..

    நீதிபதிகள் நியமனம் செய்தால், ஜனாதிபதியிடம் இருந்து தான் உத்தரவு வரவேண்டும்..இல்லையா?

    அது என்னன்னா, சனாதிபதி உத்தரவு வந்தவுடனே, அதுல இந்தியில் தான் கையெழுத்து போடனுமாம் நீதிபதி..(தமிழராக இருந்தாலும்..)

    அதுவும்...நம் நாட்டின் ஜனாதிபதி, ராமநாதபுரத்து அப்துல் கலாம், ராஷ்ட்ரபதி பவனில் உள்ள மொகல் கார்டனில் பூ வளர்த்துக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் கூட..

    இது போன மாதம் நடந்த நிகழ்ச்சி, பேப்பர்ல எல்லாம் வந்தது..

    உங்க பதிவு, வந்த பின்னூட்டம், உங்களுக்கு ஏற்ப்பட்ட அனுபவம்..எல்லாத்தையும் ஒரே ஒரு நிமிடம் வைத்துவிட்டு...

    கண்ணை மூடி சிந்தித்து...

    பதில் சொல்லுங்க...

    இது இந்தி திணிப்பு இல்லையா ?

    ReplyDelete
  24. மோகன் தாஸ்!
    உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.ஆனால் நான் பிறந்த நாட்டில்; நீ பேசும் மொழி இரண்டாம் தரம்;இது தான் முதல் தரம், இதைக் கற்றால்தான் உனக்கு வேலை, உயர்வு என திணித்து; மிருகமாக நடத்தும் போது தான் ;பிரச்சனை உருவாகிறது. அரசியல்வாதிகள் அதில் ஆதாயம் காண்கிறார்கள்.இலங்கையில் நடந்தது இதுவே! அதன் பலனை சகல இலங்கைமக்களும் அனுபவிக்கிறார்கள்.இதேவேளை இன்னுமொரு வேற்று நாட்டுக்கு ,வேலைக்குச் செல்லும் போது;நம்மைத் தயார்ப் படுத்துவதில் தவறில்லை.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  25. //இதையே ஒன்பது தமிழர்களும், ஒரு ஹிந்திக்காரனும் இருக்குமிடமாக இருந்தால் தமிழ்ல் பேசுவதை நாகரிகம் கருதி நாம் ஆங்கிலத்தில்தான் பேசுவோம். (10 பேருமே தமிழர்களாக இருந்தாலும் அபப்டித்தான் என்பது வெட்கப்படவேண்டிய வேறு விசயம்)
    //
    ஆசிப் அண்ணாச்சி, இதைக் கொஞ்சம் மாத்தியிருக்கோம் நான் முன்னே வேலை செஞ்ச கம்பனியில்.. எங்க டீமில் மொத்தம் 5 தமிழர், 2 தெலுங்கர், ஒரு ஹிந்திக்காரர்.. இதில் ஹிந்திக்காரரைத் தவிர மற்றவர்களுக்குத் தமிழ் புரியும் என்பதால், நாங்கள் பெரும்பாலான கூட்டங்களைத் தமிழிலேயே செய்வோம்.. அப்புறம் கொஞ்சம் தமிழ் புரியாத ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் ஆங்கிலத்துக்கு வர வேண்டியதாகிவிட்டது :)

    மற்றபடி, ஆங்கிலத்தில் பேசியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துவது நம் கையில் தான் உள்ளது. வேற்று மாநில, நாட்டு மொழி தெரிந்து கொள்வது எப்போது வசதியானது தான்..

    ReplyDelete
  26. ரவி, கொஞ்சம் வேலை அதுதான் பதிலில்லை. இன்னொரு பின்னூட்டம் போட்டு நினைவுபடுத்தியதற்கு நன்றி.

    முதலில் ஒரு விஷயம், நான் ஒரு நிமிஷம் சிந்தித்தாலும் சரி, 100 நிமிஷம் சிந்தித்தாலும் சரி, என்னுடைய அனுபவங்களை கழட்டி வைக்க முடியாது அநேகமாக அனைவருக்கும் இது இப்படியே என்று நினைக்கிறேன். நம்மையும் அறியாமல் நம் அனுபவம் நமது பதிலிலோ இல்லை சிந்தனையிலோ இடம் பெற்றே தீரும்.

    சரி உங்கள் கேள்விக்கு, இதைப்பற்றிய சுட்டிகள் எதுவும் கொடுத்தால் நலம். இப்படியொரு ஆணையிருப்பது பற்றி நான் அறிந்ததில்லை இன்று வரை. ஆனால் எங்கப்பா கவர்மெண்ட் எம்ப்ளாயி தமிழில் கையெழுத்துப் போட்டு சம்பளம் வாங்குவதைப் பார்த்திருக்கிறேன். அப்படி எழுதப்பட்ட சட்டம் எதுவும் இருந்தால் தரவும்.

    அப்படி இருந்ததென்றால் அது நிச்சயமாக இந்தி திணிப்புத்தான் சந்தேகமில்லை, இந்தக் கேள்வியை என்னிடம் கேட்ட காரணம் புரியவில்லை.

    மகராஜ் நானும் தமிழ் தமிழ்னு சுத்திக்கிட்டு இருந்தவன் தான். அனுபவம் சில விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும். அதை நான் எழுதவோ இல்லை நான் எழுதினாலும் நீங்கள் உணர்ந்து கொள்வதோ முடியாத விஷயம். நீங்களே அனுபவித்தால் தான் புரியும்.

    மற்றபடிக்கு உங்கள் சோக்குகளுக்கு எதுவும் சொல்லமுடியாது, அவரு மொகல் கார்டனில் பூ வளர்த்தாலும் சரி புலி வளர்த்தாலும் எனக்கு ஆட்சேபணை கிடையாது.

    ஒரு கேள்வி, உங்களுக்கு பின்னூட்டங்களைக் கண்டால் அப்படியென்ன ஒரு வெருப்பு. இதை நான் வேறு சில ப்ளாக்கர்கள் சொல்லியும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதையும் ஒரு சோக்காக எடுத்துக்கொள்வதைப் பற்றி ஒரு கவலையும் கிடையாது.

    ReplyDelete
  27. //நானும் ஒரு வருடம்முழுவதும் கர்நாடகத்தில் வேலை செய்திருக்கிறேன் தலைவரே.
    //
    நான் கிட்டத்தட்ட 5 வருடங்கள்

    //நான் டெல்லியிலோ இல்லை புனேயிலோ கூட உயிர்வாழ்வதற்கு பயப்பட்டதில்லை அங்கே பயந்திருக்கிறேன். இதை(விஷயத்தை) அந்தப் பக்கம் இழுத்துப்போக விரும்பவில்லை.
    //
    இது வேற அது வேற... தற்போதைக்கு வேலை கிடைப்பதை வைத்து மட்டும் பேசுவோம், பெங்களூர் மாதிரி புனேயில் நாளை அது மாதிரி நடந்தால் கஷ்டப்பட்டு இந்தி படிச்சது வீணாப்போயிடுமே :-)

    //பெங்களூரில் கிடைத்ததை விட 50% சம்பளம் அதிகம் கிடைத்தது புனேவில், அதனால் மாறிவிட்டேன், இதைவிட சம்பளம் 30% அதிகமாகக் கிடைக்குமென்றால் டெல்லிக்கு மாறிவிடுவேன் நிச்சயமாய்.//

    இன்னமும் அதிக சம்பளம் அளிக்கும் நிறைய நிறுவனங்கள் இருப்பது பெங்களூரில் தான் என நினைக்கின்றேன், 2003ல் மூன்று அல்லது நான்கு வருட அனுபவம் உள்ள ஜாவா மென்பொருளாளர்களுக்கு சர்வ சாதாரணமாக அரைலட்சம் மாத சம்பளம்(ஆண்டுக்கு 6 இலட்சம்) தந்த நிறுவனங்கள் பெங்களூரில் இருந்தன ஆனால் PCS, மற்றும் சில புனே நிறுவனங்கள் ஆண்டுக்கு 4.5 இலட்சத்திற்கே மூக்கால் அழுத கதையெல்லாம் உண்டு. வெகு சில நிறுவனங்களை தவிர மற்ற நிறுவனங்களில் சம்பள நிர்ணயம் உங்களின் முந்தைய சம்பளத்தை பொறுத்தே அமையும், சில நிறுவனங்களில் மட்டுமே சம்பள band உண்டு அந்த மாதிரியான நிறுவனங்களில் சம்பளம் கேட்டதை விட அதிகமாக கொடுத்து அதிர்ச்சி ஏற்பட்ட கதையெல்லாம் நண்பர்களுக்கு உண்டு.

    எனக்கென்னமோ இந்தி படிப்பதைவிட கன்னடமும், தெலுங்கும் தெரிந்தால் நிறைய வசதியாக இருக்கும் கணிணி ஆட்களுக்கு,

    மான்ட்ரின் படித்திருந்தால் எனக்கு இங்கே சிங்கப்பூரில் வசதியாக இருந்திருக்கும், இதே இந்தியென்றால் கீதா சாம்பசிவம் மாதிரி என்னை இந்தி படிக்கவிடாமல் செய்த அரசியல்வாதிகள் என அரசியல்வாதிகளை திட்டி விட்டு சென்றிருப்பேன், என்ன செய்ய இந்த ஊரில் இந்தி இல்லையே.... :-)

    சும்மா லுலுலாயி :-)

    ReplyDelete
  28. இல்லை நான் சொல்லவர்றது உண்மையில் புரியலையா இல்லை வேறெதுவும் நடக்குதா? நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் திணிப்பை எதிர்க்கிறேன் என்று.

    உண்மை தான் குழலி, பெங்களூர் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரையில் புனேவை விட பெட்டரான இடம் தான் உண்மை. நான் இங்கிருந்து அடுத்து ஒரு ஊருக்கு நகருவேனென்றால் அது பெங்களூரோ இல்லை டெல்லியோ தான். இதில் பெங்களூருக்குத்தான் முதலிடம். ஆனால் அங்கே வந்து தமிழ் ஆட்களிடம் தமிழில் பேசுவேனா என்றால் உறுதியாக சொல்வேன் பேச மாட்டேன். ஏனென்றால் ஒரு வருட அனுபவம் அப்படி. அதை விடுங்க. சிங்கப்பூரில் எதாச்சும் வேலையிருந்தா பார்த்துச் சொல்லுங்க, சும்மா மான்ட்ரின் கூட படித்து வருவதற்கு தயாரா இருக்கிறேன். சோக்கு இல்லை உண்மையிலேயே தான்.

    ReplyDelete
  29. //அமேரிக்கா போகும் அளவிற்கு தகுதியிருப்பவர்களுக்கு இந்தப்பிரச்சனையெல்லாம் கிடையாது.//

    தவறு தல, நான் அனுபவித்து இருக்கிறேன்....அமெரிக்கா போனாலும், அங்க பத்து இந்தியர் கூடினால் அதில் 7 பேர் சரளமாக இந்தி பேசுவார்கள், அதை அனுபவித்தால் தெரியும் அந்த சங்கடம்....

    ReplyDelete
  30. Is it a Meel-Pathivu? I thought I read it in your blog long back.

    - PK Sivakumar

    ReplyDelete
  31. //தவறு தல, நான் அனுபவித்து இருக்கிறேன்....அமெரிக்கா போனாலும், அங்க பத்து இந்தியர் கூடினால் அதில் 7 பேர் சரளமாக இந்தி பேசுவார்கள், அதை அனுபவித்தால் தெரியும் அந்த சங்கடம்..../

    ஆமாங்க.ஆனா இந்தி தெரியாதுன்னு சொன்னா 'மதராசியா'ன்னு கேட்டுட்டு அதுக்கப்புறம் ஆங்கிலத்தில் பேசுவாங்க:-)கண்டிப்பா எவனா ஒருத்தன் நீங்க ஏன் இந்தி படிக்கலைன்னு கேட்டு வாங்கி கட்டிக்குவான்.:-)

    ReplyDelete
  32. /ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன் திணிப்பை எதிர்க்கிறேன் என்று, ஆனால் டெல்லிக்கு போய்விட்டு டெல்லிக்காரர்கள் தமிழ் பேசமாட்டேன் என்கிறார்கள் என்பது விளையாட்டுத்தனமானது/
    டெல்லியில் உள்ள தமிழ் தெரிந்த தமிழ்நாட்டுக்காரர்களிடம் தமிழ் எதிர்பார்ப்பது விளையாட்டுத்தனமா? கொடுமைடா சாமி.

    மொழி திணிப்பு எதிர்ப்பையும் மொழி எதிப்பயையும் பலர் போட்டு குழப்பிக்கராங்க என்று நினைக்கிறேன். நம்ம ஊர்ல நடந்தது மொழி திணிப்பு எதிர்ப்பு.

    ReplyDelete
  33. பேசிப் பேசி சலித்துப் போன விசயம். இருந்தாலும் மீள்பதிவு செய்து கொண்டேயிருப்போம்.

    http://lldasu.blogspot.com/2005/02/blog-post_28.html#110927312838668938

    நன்றி - சங்கரபாண்டி

    ReplyDelete
  34. பெங்களூர் வானொலி நிறுவனம் ஒலி பரப்பி வரும் இந்தி நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட ரக்ஷனா வேதிகே என்ற கன்னட அமைப்பு நடத்திய போராட்டம் வன்முறையாக மாறி வானொலி நிலையம் சூறையாடப்பட்டது.

    பெங்களூர் ஆளுநர் மாளிகை உள்ள சாலையில் அகில இந்திய வானொலி நிலையம் உள்ளது. நேற்று மாலை இங்கு கன்னடா ரக்ஷனா வேதிகே என்ற கன்னட அமைப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

    இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பாதே, இந்திக்கு பிரசாரம் செய்யாதே என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சிலர் வானொலி நிலையத்திற்குள் நுழைந்தனர். எப்.எம். வானொலி நிலைய அலுவலகத்திற்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், ஒலிபரப்பு சாதனங்களை அடித்து நொறுக்கினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    (நன்றி - thatstamil.com)

    ReplyDelete
  35. //மொழி திணிப்பு எதிர்ப்பையும் மொழி எதிப்பயையும் பலர் போட்டு குழப்பிக்கராங்க என்று நினைக்கிறேன். நம்ம ஊர்ல நடந்தது மொழி திணிப்பு எதிர்ப்பு. //

    அப்படியா?

    இங்க போய் பாருங்க.
    http://mayavarathaan.blogspot.com/2006/04/2006-287.htm
    என்னா sound வுட்டார்கள் என்று.

    ReplyDelete
  36. பிகேஎஸ் ஆமாம், மீள்பதிவு தான்.

    இது இரண்டு பாகமாக முன்பே எழுதினேன். முதல் பதிவை மீள்பதிவிட்ட பொழுது இதைக் குறிப்பிட்டிருந்தேன்.

    ---

    என் மாமாக்கள் சொல்லி இதைப் பற்றி அறிந்திருக்கிறேன் செல்வன்.

    ---

    குறும்பன், மீண்டும் சொல்கிறேன். அவர்கள் தமிழில் பேசாததற்கும் இந்தியிலோ இல்லை ஆங்கிலத்திலோ பேசுவதற்கோ ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அது தனிமனித உரிமை. அதில் தலையிட யாருக்கும் அனுமதி கிடையாது.

    இதனைப் பொதுப்படுத்தாதீர்கள் என்று தான் சொல்கிறேன்.

    ---

    சங்கர பாண்டி படித்தேன். அருண்மொழி இதை ஏன் இங்கே சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. இதே விஷயம் தமிழ்நாட்டில் நடக்காததா. பிரச்சனை டெல்லி வாழ் மக்கள் தமிழில் ஏன் உரையாடுவதில்லை தமிழர்க்கு உதவுவதில்லை என்பது.

    என்னைப் பொறுத்தவரை இது தனிமனிதர் சம்மந்தப்பட்டது பொதுமைப் படுத்தும் அவசியம் இல்லாதது. இதைத்தான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன்.

    ReplyDelete
  37. //ஆமாங்க.ஆனா இந்தி தெரியாதுன்னு சொன்னா 'மதராசியா'ன்னு கேட்டுட்டு அதுக்கப்புறம் ஆங்கிலத்தில் பேசுவாங்க:-)கண்டிப்பா எவனா ஒருத்தன் நீங்க ஏன் இந்தி படிக்கலைன்னு கேட்டு வாங்கி கட்டிக்குவான்.:-)//

    ஆமாங்க, ஆனா, நாளாக, நாளாக, அவர்களை திட்டுவது சரியல்ல என்று தொன்றுகிறது....இந்த தேசத்தில், வேறு மொழி பேசும் எல்லோரும் இந்தியும் பேசுகிறார்கள், ஆனால் நாம்?...அது நமது குறையாகத்தான் நான் பார்க்கிறேன்.....நமது தலைமுறைக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே தெரிகிறது....

    ReplyDelete
  38. /குறும்பன், மீண்டும் சொல்கிறேன். அவர்கள் தமிழில் பேசாததற்கும் இந்தியிலோ இல்லை ஆங்கிலத்திலோ பேசுவதற்கோ ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அது தனிமனித உரிமை. அதில் தலையிட யாருக்கும் அனுமதி கிடையாது.

    இதனைப் பொதுப்படுத்தாதீர்கள் என்று தான் சொல்கிறேன்.
    /

    தமிழில் பேசலைன்னா அது அவர்கள் விருப்பம். ஆனா பார்டா தமிழ் தெரிஞ்ச தமிழ்நாட்டுக்காரன் ( டெல்லி, அமெரிக்கா, புனா, பெங்களூர், சென்னை.. எங்கு வேண்டும்மென்றாலும்) தமிழ் தெரிந்த தமிழ் நாட்டுக்காரன் கிட்ட தமிழ்ல பேச மாட்டிக்குறான் என்று சொல்ல கூடாது / ஆதங்கப்பட கூடாது என்பது தவறு.
    தனிப்பட்ட தாக்குதலை விட ( அது கூடாது, மிகவும் தவறானது) பொது படுத்தி பேசுவதே சிறந்தது ஏனெனில் இது பரவலாக நடப்பது.

    பார்டா மோகன் தமிழ் பிளாக்கெல்லாம் போட்டு அசத்துறாரு ஆனா நான் டில்லில அவர பார்த்தா எங்கிட்ட தமிழ்ல பேசமாட்டாராம், நான் தமிழில் பேசினாலும். யப்பா சாமி என்ன உலகமடா இது என்பது கிண்டலுக்காக எழுதினாலும் சிலர் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு. ( இது கிண்டலுக்காக எழுதினதுதாங்க, தப்பா எடுத்துக்காதிங்க :-) )

    அருண்மொழி அங்க Sound விட்ட ஆளுங்கெல்லாம் தி.மு.க வை எதிர்க்கனும்னா தமிழை எதிர்க்கனும் இந்திக்கு ஆதரவா பேசனும்னு என்கிற கொள்கைவாதிகள்.

    அதுக்கு விளக்கம் கொடுக்கனும்ன்னா பெரிய பதிவே போடனும். போடுவோம்.

    ReplyDelete
  39. //ஆமாங்க, ஆனா, நாளாக, நாளாக, அவர்களை திட்டுவது சரியல்ல என்று தொன்றுகிறது....இந்த தேசத்தில், வேறு மொழி பேசும் எல்லோரும் இந்தியும் பேசுகிறார்கள், ஆனால் நாம்?...அது நமது குறையாகத்தான் நான் பார்க்கிறேன்.....நமது தலைமுறைக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே தெரிகிறது....//

    இந்த தேசத்தில் எல்லாரும் ஆங்கிலம் படிக்கிறார்கள்.வேற்று மொழிக்காரனிடம் ஆங்கிலத்தில் பேசவேண்டியதுதானே?தமிழன் மட்டும் இளீச்சவாயனாய் இந்தி,ஆங்கிலம்,தமிழ் மூன்றையும் கற்கவேண்டும்.இந்திக்காரன் இந்தி மட்டும் படித்துக்கொள்வான்.அவனோடு பேச நான் இந்தியையும் சேர்த்து படிக்க வேண்டுமா?உலக பொதுமொழியான ஆங்கிலம் தெரியாமல் இந்திக்காரன் இருப்பது அவன் தலைமுறைக்கு செய்யப்பட்ட அநீதி இல்லையா?

    என்னோடு பேச அவனுக்கு தேவை என்றால் தமிழோ ஆங்கிலமோ கற்கட்டும்.இல்லை என்றால் வாயை மூடிக்கொண்டு அவன் போய்த் தொலையட்டும்.இந்தி மட்டுமே தெரிந்தவனிடம் எனக்கு பேச ஏதும் விஷயம் இல்லை.

    ஆங்கிலம் தெரிந்து அதில் பேசாமல் இந்தியில் தான் என்னிடம் பேசுவேன் என்பது என்ன வகையான திமிர்?அந்த திமிருக்கு அடிபணிந்து நான் இந்தி கற்கணுமா?நான் உப்பு போட்டு சோறு தின்று வளர்ந்தவன்.மானம் மரியாதை என்பது காசையும்,உயிரையும் விட பெரிது என்று நினைப்பவன்.

    அவனுக்கு தேவை என்றால் ஆங்கிலமோ,தமிழோ படிக்கட்டும்.இந்தி படி என இந்திக்காரன் சொன்னால் இனி கெட்ட வார்த்தைகள் தான் வாயிலிருந்து வரும்.ஏதோ கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  40. //பெத்த ராயுடு, சொல்றனேன்னு தப்பா எடுத்துக்கக்கூடாது, எனக்குத்தெரிந்த வரையில் பெங்களூரில் வெறும் இந்தி மட்டும் பேசி வாழ்ந்துவிடமுடியும். பெங்களூர்க்காரர்கள் அநாயாசமாக நான்கு மொழிகளை, தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.//

    என்னங்க இது?
    தென்னவர்கள் வட மாநிலம் சென்றால் இந்தி கற்றுக்கொள்ள வேண்டியதைப் புரிந்து கொள்ளலாம்.

    ஆனா, வட மாநிலத்தவர் தென்னகத்தில வேல செய்யணும்னாலும் நாமதான் (தென்மாநிலத்தை பிறப்பிடமாகக் கொண்டு அங்கேயே வசிப்பவர்கள்) இந்தியை கத்துக்கணுமா?

    IT நிறுவனங்கள் மைசூர், மங்களூர், வைசாக், விஜயவாடா, கோவை, திருச்சி, கொச்சி அப்படின்னு விரிவடைந்துகொண்டே போகுது. இங்கெல்லாம் வட மாநிலத்தவர் வேலை செய்யணும்னா, அங்க இருப்பவர்களெல்லாம் இந்தி கத்துக்கணுமா?

    Level playing field அப்படிங்கறதே இல்லையா?

    ReplyDelete
  41. Mr. Seppu Pattayam,

    Oru mozhiya therinjavangaley enna kalukku kalakkaranga theriyuma!!!

    I agree that you can get more money if you goto North(Delhi).

    If you give 10K salary to our tamil youngsters, they will say I will not go to any other place.

    ReplyDelete
  42. "கீதா சாம்பசிவம் said... "
    the politicians spoiled the students of Tamilnadu. but only a few like you have changed like this and accepted the fact

    Mr.Periyar or Mr.Kalainar or DMK never said dont read Hindi. what they said or did is, we wont accept Hindi as official Language in Tamil Nadu. It is the best they have ever done to Tamils. I salute them for this.
    I dont know why so many people pointing politicians for it. Today u r going to Delhi and say i would have studied Hindi. Because of our politicians i was not able to; and starts blaming politicians. Think like this, tomorrow u may go to Japan; and blame politicans for , you not knowing Japanese. Absurd.

    First, stop blaming politicians and do whatever you want. You read Hindi, Japanese, French or whatever u like. Nobody is going to stop you. Did they ever come to you and said " Dont read Hindi".?

    Regarding Hindi:
    You learn it if you want to. There are so many people in Tamilnadu who has never went to School. First, let them all get education atleast in their mother tongue then think about Hindi.

    Ask Hindi people to learn English. We are not asking them to learn Tamil. You will never see a tamilan speaking to Hindi guys in TAMIL. But, they will try and speak to you in Hindi only; because they know that only. It is not their patriotism. It is their incapablity to learn English. An English knowing North Indian , never had any problems with South Indians.

    so many people pointed here, Bangaloren speak Hindi and at the same they are patriotic about their language. You are correct. But this thing wont happen in Tamil Nadu. Few guys who know Hindi in TamilNadu behaves like they are something big and they speak in Hindi only. Think, what would have happened if politicians would have allowed Hindi 30 years back in TamilNadu.

    Mohandoss:-
    எங்கள் கம்பெனியின் கிளை ஒன்று தற்சமயம் சென்னையில் உள்ளது. அதில் வேலைசெய்ய முழுவது தமிழ் மக்களையே நம்பி இருக்கிறது கம்பெனி. தெலுங்கர்கள் கூட அங்கே வரமாட்டேன் என்கிறார்கள்.
    nallathu..vara vendam..athu avar avar viruppam ...ehtani per ingu irunthu north india pogamal irukurargal. ithu avar avar thni viruppam. intha kaarangalukkaga ellam naam Hindia paiyila mudiyathu.

    mohandoss:
    வெளியில் இருந்து இதைப் பார்ப்பது வித்தியாசமானது, நான் செய்திருக்கிறேன் இதை, என்னுடைய கல்லூரி நாட்களில். வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடங்களில் இதுவும் ஒன்று

    naan veliyil irunthu paarkka villai. naan irandu varudam dubailyum 2 iruvadam afghanistanlum irutnhavan.
    A proud Tamilan.( Because of shortage of time, i used English)

    ReplyDelete

Popular Posts