In அரசியல்

சீமான்!

தொடர்ச்சியாக இவரைப்பற்றி படித்துக் கொண்டிருந்தாலும் பொதுவெளியில் எதுவும் சொன்னதில்லை, பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொல்லும் கருத்து politically correctஆக இருக்காது. சீமான் இப்பொழுது எடுத்திருக்கும் நிலைப்பாடு பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதுமே முக என்ன செய்தாலும், அவர் முன்னம் செய்ததை மட்டும் மனதில் கொண்டு(இதில் அவர் குடும்பத்தை இழுக்கலை) அவரை சப்போர்ட் செய்திருக்கிறேன். ஆனால் இந்த முறை திமுக தேர்தலில் தோற்கும் என்று பர்ஸனலாக தோன்றாவிட்டாலும், தோற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கடந்த முறை திமுக தோற்று அதிமுக வந்த பொழுது ஒரு வாரகாலம் மனதில் துக்கம் அப்பியிருந்தது, ஆனால் இந்த முறை திமுக தோற்றாலும் அப்படி ஒன்று நடக்காது. ஏன் கருணாநிதி தோற்றாலும் கூட, சீமானிடம். கருணாநிதி என்ன செய்திருக்க முடியும் என்று என்னால் நிச்சயமா சொல்ல முடியாவிட்டாலும், ஒன்றும் செய்யாமல் இருந்தார் ஈழ விஷயத்தில் என்றே நான் மனதளவில் நினைக்கிறேன். அந்த ஒரே ஒரு காரணம் மட்டுமே என்னை சீமான் பக்கம் இழுத்துச் செல்கிறது.



ஈழத்தமிழர்கள் பட்டதற்கான வலி கருணாநிதியின் ஆட்சியிழப்பு மூலமே சரியாகும் என்று மனதளவில் நிச்சயம் நினைக்கிறேன். கருணாநிதி பர்சனலாய் தோற்பது எனக்கு ரொம்பவும் வலிமிகுந்ததாய் இருக்கும் என்றாலும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். திமுக தோற்றால் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று பார்த்தால் வேதனை இன்னும் அதிகம் தான் என்றாலும், ஆப்போஸிட் ரியாக்‌ஷனைப் பற்றி இப்பொழுது கவலைப்படும் மனநிலையில் நான் இல்லை. பொதுமக்களுடன் அரசியல் பெரும்பாலும் பேசுவேன் என்பதால் கருணாநிதி தோற்பதோ அல்லது திமுக தோற்பதோ இந்த முறை நிகழாது என்றே நினைக்கிறேன் ஆனால் நிகழவேண்டும் என்று ஆசை.

சீமான் எடுத்த முடிவு மிகச்சரியானது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

என் வரையில் கலைஞர் தோற்க வேண்டும் என்பது ஆசையென்றால், சீமான் வரையில் எப்பாடு பட்டாலும் அவரை தோற்கடிக்கவேண்டும் என்பதும் சரியானதே. வைகோ போல் தாபாண்டியன் போல் சீமான் ஆவாரா மாட்டாரா என்பதைப் பற்றி நான் யோசிக்கவேயில்லை. அதற்கான அவசியமும் இல்லை, அவரவர்களுக்கான Priority அவரவர்களுக்கு, ஏன் கருணாநிதிக்கு இல்லையா Priority. சோனியாவின் காலின் அவர் விழுந்துகிடப்பது கருணாநிதியின் குற்றம் இல்லை என்றால் சீமான் ஜெயலலிதாவின் காலில் விழப்போவதும் கூட அவரது குற்றமாய் இருக்க முடியாது. இது ஒரு வேதனை வருத்தம் இதை நான் இப்படித்தான் சரிசெய்து கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன். கருணாநிதிக்கு இது தேவைதான், கருணாநிதியின் மரணம் அவர் முதல்வராக இருக்கும் பொழுது நிகழக்கூடாது என்றே நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அவருக்கான மானசீகமான தண்டனை அதுவே.

Read More

Share Tweet Pin It +1

17 Comments

Popular Posts