In அரசியல்

சீமான்!

தொடர்ச்சியாக இவரைப்பற்றி படித்துக் கொண்டிருந்தாலும் பொதுவெளியில் எதுவும் சொன்னதில்லை, பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொல்லும் கருத்து politically correctஆக இருக்காது. சீமான் இப்பொழுது எடுத்திருக்கும் நிலைப்பாடு பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதுமே முக என்ன செய்தாலும், அவர் முன்னம் செய்ததை மட்டும் மனதில் கொண்டு(இதில் அவர் குடும்பத்தை இழுக்கலை) அவரை சப்போர்ட் செய்திருக்கிறேன். ஆனால் இந்த முறை திமுக தேர்தலில் தோற்கும் என்று பர்ஸனலாக தோன்றாவிட்டாலும், தோற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கடந்த முறை திமுக தோற்று அதிமுக வந்த பொழுது ஒரு வாரகாலம் மனதில் துக்கம் அப்பியிருந்தது, ஆனால் இந்த முறை திமுக தோற்றாலும் அப்படி ஒன்று நடக்காது. ஏன் கருணாநிதி தோற்றாலும் கூட, சீமானிடம். கருணாநிதி என்ன செய்திருக்க முடியும் என்று என்னால் நிச்சயமா சொல்ல முடியாவிட்டாலும், ஒன்றும் செய்யாமல் இருந்தார் ஈழ விஷயத்தில் என்றே நான் மனதளவில் நினைக்கிறேன். அந்த ஒரே ஒரு காரணம் மட்டுமே என்னை சீமான் பக்கம் இழுத்துச் செல்கிறது.



ஈழத்தமிழர்கள் பட்டதற்கான வலி கருணாநிதியின் ஆட்சியிழப்பு மூலமே சரியாகும் என்று மனதளவில் நிச்சயம் நினைக்கிறேன். கருணாநிதி பர்சனலாய் தோற்பது எனக்கு ரொம்பவும் வலிமிகுந்ததாய் இருக்கும் என்றாலும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். திமுக தோற்றால் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று பார்த்தால் வேதனை இன்னும் அதிகம் தான் என்றாலும், ஆப்போஸிட் ரியாக்‌ஷனைப் பற்றி இப்பொழுது கவலைப்படும் மனநிலையில் நான் இல்லை. பொதுமக்களுடன் அரசியல் பெரும்பாலும் பேசுவேன் என்பதால் கருணாநிதி தோற்பதோ அல்லது திமுக தோற்பதோ இந்த முறை நிகழாது என்றே நினைக்கிறேன் ஆனால் நிகழவேண்டும் என்று ஆசை.

சீமான் எடுத்த முடிவு மிகச்சரியானது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

என் வரையில் கலைஞர் தோற்க வேண்டும் என்பது ஆசையென்றால், சீமான் வரையில் எப்பாடு பட்டாலும் அவரை தோற்கடிக்கவேண்டும் என்பதும் சரியானதே. வைகோ போல் தாபாண்டியன் போல் சீமான் ஆவாரா மாட்டாரா என்பதைப் பற்றி நான் யோசிக்கவேயில்லை. அதற்கான அவசியமும் இல்லை, அவரவர்களுக்கான Priority அவரவர்களுக்கு, ஏன் கருணாநிதிக்கு இல்லையா Priority. சோனியாவின் காலின் அவர் விழுந்துகிடப்பது கருணாநிதியின் குற்றம் இல்லை என்றால் சீமான் ஜெயலலிதாவின் காலில் விழப்போவதும் கூட அவரது குற்றமாய் இருக்க முடியாது. இது ஒரு வேதனை வருத்தம் இதை நான் இப்படித்தான் சரிசெய்து கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன். கருணாநிதிக்கு இது தேவைதான், கருணாநிதியின் மரணம் அவர் முதல்வராக இருக்கும் பொழுது நிகழக்கூடாது என்றே நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அவருக்கான மானசீகமான தண்டனை அதுவே.

Related Articles

17 comments:

  1. என்னைப் பொறுத்தவரை அவருக்கான மானசீகமான தண்டனை அதுவே.///////////////////

    நானும் அவ்வாறே நினைக்கிறன் ...........

    ReplyDelete
  2. // திமுக தோற்றால் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று பார்த்தால் வேதனை இன்னும் அதிகம் //

    Why? In what way ADMK or any other political party for that mater is worse than DMK?

    ReplyDelete
  3. உங்கள தேர்த்தல்.கருணாநிதி, ஜெயலலிதா,சீமான் உங்களுக்கு பிடித்தவர்களை நீங்கள் தெரிவு செய்யுங்கள். ஈழத்தமிழர்களின் தலையை ஏன் உருட்டுகிறீர்கள்!

    ReplyDelete
  4. Can expect below shall happen in due course,
    1. Jaya shall never meet Seemon or she will not allow Seemon to meet her in Boes Garden or ADMK HQ.
    2. All dealings with Seeman shall be done thru ViKO only and Jaya will treat Seeman as untouchable.
    3. Jaya & Seemon shall never share a common dias in any public meeting.
    4. If Seemon & his party is contesting in any constituency, Jaya shall NOT campaign in those Constituencies.
    5. If ADMK losses the election, CHO and other likeminded ADMK sympathizers shall say, because of “terrorists” like Seemon supported and campaigned for ADMK, it lost the election.

    Though DMK to be defeated because of its recent Anti Tamil policies and becoming slave of Congress.
    But the question is,

    BY WHOM DMK to be defeated?

    Is it by the hands of Brahminical elements like CHO & Jaya Or Is it by biased North Indian Vested elements who wants to defame Dravidian identity. No way…DMK to be defeated only by a True Tamil party. This might not happen during this election, but Seemon & likeminded parties need to become a mainstream political party and do this in 2016.

    In this 2011 election, Seemon can focus only in Congress Constituencies and ensure their defeat.

    ReplyDelete
  5. Can expect below shall happen in due course,
    1. Jaya shall never meet Seemon or she will not allow Seemon to meet her in Boes Garden or ADMK HQ.
    2. All dealings with Seeman shall be done thru ViKO only and Jaya will treat Seeman as untouchable.
    3. Jaya & Seemon shall never share a common dias in any public meeting.
    4. If Seemon & his party is contesting in any constituency, Jaya shall NOT campaign in those Constituencies.
    5. If ADMK losses the election, CHO and other likeminded ADMK sympathizers shall say, because of “terrorists” like Seemon supported and campaigned for ADMK, it lost the election.

    Though DMK to be defeated because of its recent Anti Tamil policies and becoming slave of Congress.
    But the question is,

    BY WHOM DMK to be defeated?

    Is it by the hands of Brahminical elements like CHO & Jaya Or Is it by biased North Indian Vested elements who wants to defame Dravidian identity. No way…DMK to be defeated only by a True Tamil party. This might not happen during this election, but Seemon & likeminded parties need to become a mainstream political party and do this in 2016.

    In this 2011 election, Seemon can focus only in Congress Constituencies and ensure their defeat.

    ReplyDelete
  6. தேர்தலில் வைகோ, நெடுமாறன், ராமதாசு, திருமாவளவன், சீமான், பெரியார் திராவிடகழகம் இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் ஈழம் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் வெற்றி செயலலிதாவுக்கோ கருணாநிதிக்கோ சொந்தமாகிவிடும் என்பது தான் நிதர்சன உண்மை.

    திமுக காங்கிரசை தோற்கடிக்க எதிரணியில் இருக்கும் பெரிய கட்சிக்கு ஆதரவாக ஓட்டுகேட்கும் சீமானின் முடிவு 100% வரவேற்க கூடியது தான்.


    ஈழப்போரை நடத்திய காங்கிரசை இந்த தேர்தலோடு தமிழகத்தில் இருந்தே துடைத்தெரிய வேண்டும். அது தான் ஈழம் அமைப்பதற்கான மற்றொரு படி.

    செயலலிதா மிகவும் ஆபத்தானவர், ஈழத்துக்கு எதிரானவர், எந்த நேரத்திலும் காங்கிரசோடு கைகோர்த்துவிடுவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஆனால் அதற்காக ஈழ ஆதரவு கட்சிகள் தனி அணியில் நின்றால் அதைவிட ஈழத்துக்கான பின்னடைவு வேறு ஏதும் இருக்க முடியாது.

    போதிய அரசியல் அறிவோ, ஈழம் குறித்த புரிதல்களோ இல்லாத தமிழகத்தில் நிச்சயமாக ஈழம் தோற்கடிக்கப்பட்டுவிடும்.

    இது குறித்த எனது பதிவு

    http://tamilmalarnews.blogspot.com/2011/01/blog-post_12.html

    ReplyDelete
  7. Anony,

    In no way ADMK can match with DMK. As I said it in my post, it is nothing do with ADMK, DMK. It is about MK to lose his regime - chief minister-ship, for what he did this to the Eelam people.

    I am not a supporter of ADMK or any other party in that aspect. I have my own reservations and priorities. I may not predict the future, people used to get mature with age. See what happened in MK's life, if something like that happened to Jaya I may reconsider my decision. But not now.

    ReplyDelete
  8. Anony,

    ஈழத்தமிழர்களின் தலையை யாரும் உருட்டவில்லை. நான் என் மனதில் பட்டதைச் சொன்னேன், அதைச் சொல்ல நான் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete
  9. Anony,

    How it matters, whether what will happen between Jaya or Seeman. If MK to lose his government there are things needs to be done. This is one of them, the opposite parties grouped together. I guess Seeman knows this better than anyone here.

    Do you think Seeman dont know how JJ will treat him, I guess Seeman knows that too. There is no other go for chucking this MK out of the power.

    ReplyDelete
  10. தவிக்கும் ஈழ தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யாத (தில்லிக்கு கடிதங்கள் எழுதுவதை தவிர) கலைஞரின் திமுக வரும் தேர்தலில் தோற்கவேண்டுமென நானும் விரும்புகிறேன்.

    ReplyDelete
  11. நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிக்கும் சில தினங்களுக்கு முன் சீமான் சொன்னது.. எந்த ஒரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டனி வைக்கும் நிலை ஏற்ப்பட்டால் கட்சியை கலைத்துவிட்டு திரைப்படம் இயக்க சென்றுவிடுவேன்.

    இது அவரின் கொள்கை சறுக்கலையே காட்டுகிறது. இருந்தாலும் தற்க்கால தேவையை கருத்தில் கொண்டு இயக்கத்தையும் தமிழினக் குரலையும் நிலைநிறுத்தவே இந்த அ.தி.மு.க ஆதரவு என நினைக்கிறேன்.

    நிலையாக இல்லாத எந்த ஒரு அரசியல் கட்சியும் இயக்கிய கொள்கைகளுடன் இலக்கை அடைவது இயலாத காரியம்தான்.

    தர்மம் வெல்ல கீதையின் வழியே தற்க்காலத் தேவை.
    அண்ணன் வழியில் சொல்ல வேண்டுமானால் எதிரிகளே எங்களுக்கு ஆயுதம் தருவான் அவனை எதிர்த்து சண்டையிட..!!

    ReplyDelete
  12. மோகன் தாஸ் நான் இது குறித்து ஒரு கட்டுரை எழுதி இருந்திருந்தாலும் இப்படித்தான் எழுதி இருப்பேன். வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை ஒத்துப் போகிறேன்.

    ReplyDelete
  13. கலைஞருக்கான தண்டனை ஒருபக்கம் இருக்க, போர் என்றால் மக்கள் சாவார்கள் தானே என்று சொன்ன அம்மணியோடு கூட்டுச் சேர்கிறார் சீமான், அப்படியானால் அவருக்குத் தண்டனை கொடுக்க இன்னும் நாலு வருஷமா? இப்படியே காலத்தை ஓட்ட வேண்டியது தான்

    ReplyDelete
  14. SEEMAN ANNA ,, JEYALALITHAA VODA SERALAI ...

    WHAT HE SAID IN "THERUPE ADEPEN "

    -

    "even if jeyalaitha came to power , i'll be going to jail again "

    and want to thank for the post mohanadoss

    im from tamil elam , i support u and really proud of u as my brother !

    ungala mare tamilan irukum madum tamil enam orunalum thorkathu .. valga tamilenam !!valga tamil

    ReplyDelete
  15. இந்தப் பதிவை முன்பே எப்படி தவற விட்டேன் என்று தெரியவில்லை. கோவி.கண்ணன் பதிவு மூலமாக இன்று இங்கே வந்தேன். "திடீர் தமிழ் உணர்வாளர்கள்" என்று நம்மைப்போன்றவர்களுக்கு இரண்டு வருடங்களாக சூட்டப்பட்ட பெயர் நேற்று களையப்பட்டுள்ளது.

    ReplyDelete

Popular Posts