ஆங்கிலப்புத்தாண்டு, சொர்க்கவாசல் மற்றும் சில எருமைமாடுகள்
"டேய் எருமைமாடு ஹாப்பி நியூயியர்"
இப்படித்தான் ஆரம்பித்தது இந்த புதுவருஷம், பிறகு இன்னும் சில அன்பு நாயேக்களும் எருமைமாடுகளுக்கும் பிறகுதான் நல்ல வாழ்த்துக்களே வந்தது.
எல்லா வருடங்களையும் போல இந்த வருடமும் டான்ஸ் ஆடுவதற்கென்று கிளம்பியிருந்தோம். ஆனால் கொஞ்சம் விஷேஷமாக மும்பைக்கு "Essel World" என்ற இடத்திற்கு சென்றிருந்தோம்.
Elephanta Caves
Elephanta Caves
Essel World
பிறகு அப்படியே, எலபெண்டா கேவ்ஸ் போய்விட்டு வீடு திரும்பினோம். இடையில் டான்ஸ் ஆடும் பொழுது மூன்று முறை கண்ணாடி கீழே விழுந்தும் உடையாததால் நல்ல அதிர்ஷ்டமான வருடமாக(???? அதிர்ஷ்டமான வருஷமோ இல்லையோ, கண்ணாடி உடையலை அது பெரியவிஷயம், கண்ணாடி அணிபவர்களுக்குத்தான் அதைப்பற்றித்தெரியும். போட்டிருக்கும் கண்ணாடி உடைந்தால் நான் ரொம்பவே அப்செட் ஆகிவிடுவேன்.) இருக்கும் என்று நம்புகிறேன்.
சுமார் ஐயாயிரம் பேர் இருந்த அந்த இடத்தில் டான்ஸ் கலைகட்டியது, பெரும்பாலும் புனேவிலுருந்தும் மும்பையிலிருந்தும் ஜோடிகள் வந்திருந்ததால் கொண்டாட்டமாகவேயிருந்தது. எனக்கென்னவே அன்றைக்கென்று பார்த்து சொர்க்கவாசல் நினைவில் வந்தது. உண்மையில் இது போன்ற டான்ஸ் பார்டிகளுக்கும் சொர்க்கவாசலுக்கும் சென்றிருப்பவர்களுக்கு நான் சொல்லவருவது விளங்கலாம்.
எஸ்ஸெல் வேர்ல்ட் பற்றி சில வார்த்தைகள், நீங்கள் குடும்பத்துடன் பாம்பே சென்றால் பார்க்கக்கூடிய மிக நல்ல இடங்களில் இதுவும் ஒன்று. குடும்பத்துடன் போய் ஒருமுறை அனுபவித்துவிட்டு வாருங்கள். அதேபோல் எலிபெண்டா கேவ்ஸ், கடலின் நடுவில் இருக்கும் ஒரு தீவில் மிக நல்ல சிற்பங்கள் இருக்கின்றன. முகலாயர்களின் ஆட்சியில் சில சிற்பங்கள் அழிக்கப்பட்டதாக அங்கிருந்த கைடு சொன்னார்.
ஒருமுறை நிச்சயமாக பார்க்கவேண்டிய இடம்தான் இரண்டுமே. மற்றபடிக்கு போனபதிவில் பிக் பேங்க்ஸ் பற்றியும், ஸ்டிரிங் தியரி பற்றியும் சொல்லியிருந்தேன். அதைப்பற்றிய டாக்குமெண்டரிகளை இந்தியாவிலிருந்து பார்க்க கீழே கிளிக்கவும்.
Documentry
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் தான் இந்த டாக்குமெண்டரிகள்.
மற்றுமொறு முறை அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஆங்கிலப்புத்தாண்டு, சொர்க்கவாசல் மற்றும் சில எருமைமாடுகள்
Posted on Tuesday, January 03, 2006
ஆங்கிலப்புத்தாண்டு, சொர்க்கவாசல் மற்றும் சில எருமைமாடுகள்
பூனைக்குட்டி
Tuesday, January 03, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
-
"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
புனேவிலுருந்தும் மும்பையிலிருந்தும் ஜோடிகள் வந்திருந்ததால் கொண்டாட்டமாகவேயிருந்தது"//
ReplyDelete- அப்ப நீங்க...??
சொர்க்க வாசல்ன்னா என்னாங்கோ?
ReplyDeleteஉங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete-off the topic
'செப்புப்பட்டயம்' - என்ற இந்த தலைப்பை திரு பாலகுமாரன் நாவலொன்றில் படித்திருக்கிறேன்(படித்துக்கொண்டிருக்கிறேன்).. நீங்கள் இந்த தலைப்பிட்டதன் காரணம் தெரிந்துகொள்ளலாமா?
அன்புடன்
கீதா
இப்படியெல்லாம் பப்ளிக்கா கேட்டா சரியில்லை தருமி.
ReplyDeleteகுமரன், சொர்க்கவாசல் அப்படிங்கிறது, ஸ்ரீரங்கத்தின் சொர்க்கவாசல் அப்படியென்ற ஒரு விஷயம் நடக்கும், வைகுண்ட ஏகாதெசியன்று அந்த கதவு திறக்கப்படும். பல ஆண்டுகளாக மிதித்திருக்கிறேன். ஆனால் கடந்து சில ஆண்டுகளாக வேலையின் காரணமாக முடியவில்லை. உண்மையிலேயே வருத்தம் தான்.
கீதா, அது பாலகுமாரனின் தாக்கத்தில் வந்தது இல்லை, நான் சோழர்களைப்பற்றி படிக்கும் பொழுது பிடித்திருந்தது உபயோகித்திருக்கிறேன்.
Nainaa, indha post-ku sambandhame illadha oru vishayam kekka poren.
ReplyDeleteI have a feeling that 'Ravanna' (lankan king) was not a atrocious king as has been described commonly. If we are in sync, why not write a post on the real ravanna. Appadiye enakum sila puthagangalai sibaarisu seiyavum. Chennai bok fair is starting tomorow.
முதல் படம் நல்லா இருக்கு.
ReplyDelete