In Only ஜல்லிஸ் சுய சொறிதல்

செசன்ய குடியுரிமை கிடைக்குமா???

"வாழ்க்கை என்பது நாடகமேடை, அதில் நாம் அனைவரும் நடிகர்கள்."

போனவாரம், பாக்கிஸ்தானின் ஜெனரல், பர்வேஷ் முஷாரப்பின் செவ்வியை ஐபிஎன்னில் பார்க்கமுடிந்தது. முன்பே சொன்னது போல ஐபிஎன் தன்னுடைய இருப்பை, செய்தியுலகில் கொஞ்சம் தீவிரமாகவே நிரூபித்துவருகிறது.முன்னர், சர்தேசாய் நடத்திய சோனியாவின் செவ்வியாகட்டும், கரன் தாப்பரின் முஷாரப்பின் செவ்வியாகட்டும் அருமை.

முஷாரப்பின் செவ்வியை மிகவும் ரசித்தேன், ஒரு ராணுவ ஜெனரலை இப்படியும் கேள்விகள் கேட்க முடியுமா என்று ஆச்சர்யமாகயிருந்தது. இதே சமயம் ஜெயலலிதாவின் இப்படியான ஒரு செவ்வி கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. சோனியாவின் பேட்டியைப் பற்றி, அலெக்ஸ் பாண்டியனின் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தேன். சோனியாவின் உள்ளுணர்வைப்பற்றிய கேள்வியும், அதற்கான சோனியாவின் பதிலும் நன்றாக இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு விஷயம் அரசியல்வாதிகளிடமும், பத்திரிக்கையாளர்களிடமும் இருப்பது நலம்.

இந்தவாரம் ப.சி யின் செவ்வியும் அருமை, பைனான்சுக்கும் நமக்கும் காத தூரம் இருந்தாலும், கரன் தாப்பரின் நேர்கொண்ட பார்வையையும் ப.சிதம்பரத்தின் சில அழகான புன்னகைகளையும் ரசித்தேன். அவர்களுடைய இணையத்தளமும் நன்றாக வந்துள்ளது.



செசன்யாவின் தற்போதைய பிரதமமந்திரி, கொடுத்திருக்கும் ஒரு அறிவிப்பு வியப்பில் ஆழ்த்தியது. அவர்களின் ரஷ்யாவிற்கெதிரான போரில் அதிக அளவிலான வீரர்களை இழந்ததால், ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வதை சட்டமாக கொண்டுவர கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.

அதே போல் அறிவியல் ஆட்களுக்கு, சூரியக்குடும்பத்தில் உள்ள கோமெட் எனப்படும் சிறிய கோள், மலைகள், தூசி, மற்றும் பனிப்பாறைகளால் ஆனது. இதன் தூசிகளை சேகரிக்க நினைத்த நாசாவின் முயற்சி வெற்றியில் முடிந்துள்ளது. ஏழுவருட நீண்ட பயணத்தின் பயனாய் கிடைத்திருக்கும். இந்த கோமெட்டின் தூசிகளை வகைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.





மேலும் செய்திகளுக்கு.

போபர்ஸ் பற்றியும் வலைபதிவு நண்பர்களிடையே பேச்சைக்காணோம். ஒட்டோவா குட்டோரோச்சியின் வங்கிக்கணக்கை திரும்பவும் திறக்கப்பட்டதில் சட்ட அமைச்சரின் தலை உருளுகிறது. மீண்டும் பூட்டப்படுமா தெரியவில்லை. இதன் அரசியல் விளையாட்டு வேடிக்கையாக இருக்கிறது. (சுப்பிரமணியசாமியைக்காணோம் அவரிருந்தால் நல்ல காமெடிக்கதையெல்லாம் சொல்வார். :-) )

பீகாரில் தலித் இல்லாத ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி, பஞ்சாயத்து பழிவாங்கியதைப்பற்றி பார்த்தேன் இன்னும் பீகாரின் வடக்கு மாகாணங்களில் பெண்ணுரிமை பற்றிய பேச்சே எழுப்பப்பட முடியாதென தெரிகிறது. வெட்கம்.

யாராகயிருந்தாலும் அவர்களுடைய நிறை, குறைகளுடன் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான்.பெற்றவர்களை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை அப்படித்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அதை போலவே ஆசானையும், வரப்போகும் மனைவியையும் அப்படியே. இங்கே நிறை எது குறை எது என்ற வாக்குவாதம் வைக்கவில்லை. ஆனால் குறைகள் அற்ற நிறைகள் கிடைப்பதில்லை, கசக்கும் பொங்கலைப்போலவே. :-)

மற்றபடிக்கு இணையத்தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப்பொங்கல், கன்னிப்பொங்கல்(காணும் பொங்கல்) வாழ்த்துக்கள்.

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts