நான் ஆரம்பத்தில் ப்ளாக் உலகத்தில் கால்வைத்த பொழுது பதிவுகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வந்துகொண்டிருந்தன. பெரும்பாலும் இயல்பு வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகள். சுருக்கமாகச் சொல்லப்போனால் ஆன்லைன் டைரிக்குறிப்புகள் அவ்வளவுதான். ஆங்கிலத்தில் எழுதும் ஆர்வமும் திறமையும் இல்லாத காரணத்தால் விட்டு வேகமாக நகர்ந்துவிட்டேன். பின்னர் மரத்தடி நாட்களில், சில மக்களின் பதிவுகளைப் படிப்பதற்காக வருவேன். அப்பொழுது அங்கே தெரியும் தமிழ்மணம் பட்டனைக் கிளிக்கியதில்லை, காரணம் பெரும்பாலும் வெப்சைட்களில் கொடுக்கப்படும் லிங்குகள்...