ஞாயிற்றுக்கிழமை காலை நானும் நண்பரும் பட்டறை நடக்கும் இடத்திற்குள் நுழைந்த பொழுது 9.45 இருக்கும். நண்பர் முன்பே பதிவு செய்யாதவர்கள் வரிசையில் பதிவுசெய்து கொள்ள, நான் பதிவு செய்தவர்கள் வரிசையில் கையெழுத்துப் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தேன். முதலிலேயே கண்டுக்கிட்டது உண்மைத் தமிழன், பிரகாஷரு, பின்னாடி மா.சி. அவர் என்னை விரட்டி பாட்ச் அணிந்து கொள்ளுமாரும் சாப்பாடு கூப்பன் வாங்கிக்கொள்ளுமாறு சொன்னார். அப்புறமா பொன்ஸ்; பார்த்த இரண்டு மூணு தடவ "வாங்க தல"ன்னு சொல்ல நான் என் மண்டையைத் தடவிப் பார்த்ததை அவர் கவனிக்காமல் பிஸியா நகர்ந்துட்டார் :(. அப்புறம் பாலராஜன் கீதா.
உள்ளே விக்கி unconference பற்றி பேசிக் கொண்டிருந்தார், மாப்பிள்ளை பெஞ்சில் இரண்டு இடங்கள் காலியாயிருக்க உட்கார்ந்தோம். என்னைப் பற்றிய கவலையில்லை, நண்பருக்கு அதுதான் முதல் முறையாயிருந்திருக்க வேண்டும்(ஹிஹி).
விக்கி அவர்கள் வைத்திருந்த அஜண்டாவை சொல்லிவிட்டு, இதற்கு மேல் தேவைப்பட்டால் அதற்கான முயற்சியையும் செய்வதாகவும். வந்திருந்தவர்கள் பட்டறைக்கு எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி சுருக்கமாகச் சொல்லச் சொல்லவும். சூடுபிடித்தது. இந்தச் சமயத்தில் அரங்கிற்குள் நுழைந்த செந்தழல் ரவி உட்கார, அவரிடம் காஜி போடுவதற்காக பக்கத்தில் உட்கார்ந்தேன். கொஞ்சம் வழமைபோல் பேசிக்கொண்டிருந்தோம் இந்தச் சத்தத்தை எங்கேயே கேட்டதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு திரும்பிய லிவிங்ஸ்மைல் வித்யாவை ரவி அக்கா என்று அழைக்க அவர் கோபமானார்.
பின்னர் ஆசிப் அண்ணாச்சி எழுந்து அவர் "துபாயில் இதே போன்ற பட்டறை நடத்துவற்கான சாத்தியக்கூறுகளை பார்க்க வந்திருப்பதாகச்" சொல்ல அண்ணாச்சியைப் பார்த்த சந்தோஷத்தில் ரவியிடம் இருந்து தெறித்து அவரை நோக்கி நகர்ந்தேன். வணக்கம் சொல்லி ஃபார்மலாகத் தொடங்கினோம் பின்னர் ஆசிப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆசாத் அண்ணனிடம் அறிமுகம் செய்து வைக்க, அவரிடமும் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தேன். இந்தச் சமயத்தில் எல்லாம் பத்ரி தன்னுடைய "தமிழிணைய அறிமுகத்"தைத் தொடங்கினார்.
பின்னால் உட்கார்ந்திருந்த பிரகாஷரிடம் ஏன்யா ரொம்பவும் ஃபார்மலாயிருக்கிற மாதிரியில்லை என்றேன், அவர் நீயே மைக்கில் சொல்லு என்று கழண்டு கொள்ள நான் மைக்கிற்காக காத்திருந்தேன். ஆனால் பத்ரியிடமிருந்த அந்த ஃபார்மலான பேச்சு முதல் சில நிமிடங்களிலேயே கழண்டு கொண்டது. நல்லதொரு தொடக்கத்தை அண்ணாத்தை கொடுத்தார் அரசாங்கம் செய்ய வேண்டியவை இருப்பதாகவும் MLA அளவில் சென்று பேசவேண்டும் என்றும் சொன்னார். மாலன் உடனேயே கணிணிகளை தமிழ்நாட்டில் விற்கும் பொழுதே தமிழ் எழுதப் படிக்கக் கூடிய அளவிற்கு இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தை அமல்படுத்தலாம் என்று சொன்னார்.(அவர்தான்னு நினைக்கிறேன் :()
விவாதம் சில சமயங்களில் நம்முடைய கணிணிகளில் இருந்தாலுமே பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கான வாய்ப்புகளையும்; அந்த மக்களை எப்படி சென்று சேர்ப்பது என்பதைப் பற்றியும் நகர்ந்தது. பத்ரி தமிழ் டிக்ஷனரிகளைப் பற்றி(அகரமுதலிகளாமா!) சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே இராம.கி அய்யா தமிழிணைய இணையத்தளத்தில் TAMல் ஒன்று இருப்பதாகவும் அது உபயோகப்படும் யுனிக்கோடில் மாற்றினால் என்று சொன்னார். இதற்கு சற்று பின்னால் என்று நினைக்கிறேன் செல்லா "விக்கிஷனரி" பற்றிச் சொல்லி தமிழிணைய பல்கலைக்கழக டிக்ஷனரியா இல்லை விக்கிஷனரியா என்று வரும் பொழுது அவர் விக்கிஷனரியைத் தான் சப்போர்ட் செய்வார் என்று சொன்னார்.
சில காரணங்களால் வேகவேகமாய் கேமராவை வாங்கி சுடத் தொடங்க நினைத்தேன் அதற்கான வேலைகளைச் செய்து எடுக்க நினைத்த பொழுது ஆசிப் கூப்பிட்டு நான் செய்ய இருந்த தவறைச் சுட்டிக் காட்டினார். அதை உணர்ந்து நானும் விட்டுவிட்டேன் ஆசிப்பின் சமூக அக்கறையைப் பற்றிய கேள்விகள் எனக்கு எப்பொழுதுமே கிடையாதென்றாலும் இன்னொரு பக்கம் எழுதி நிரப்பப்பட்டது. பின்னர் அரங்குகளை பேசிக் கொண்டிருந்தவர்களைச் சுடத் தொடங்கினேன்; அங்கிருந்து பாட்டரி காலியாகும் வரை காமெரா கண்சிமிட்டிக் கொண்டேயிருந்தது.
முகுந்த் தன்னுடைய "தமிழிணைய மைல்கற்கள்" தொடங்க ஸ்னாப் மட்டும் எடுத்துவிட்டு வெளியில் வந்தேன். ஆசிப் எல்லாம் வெளியில் வந்த காரணம் தான். அங்கே தான் பாலபாரதியைப் பார்த்தது அவர் ஆசிப்புடன் ஒரு போட்டோ எடுக்கச் சொல்ல எடுத்துக் காண்பித்தேன் ரொம்பவும் நன்றாய் வந்திருந்ததாய்ப் பட்டது. காசியிடம் என்னை இவருதான் அவரு என்று ஒரு மார்கமாக அறிமுகப்படுத்தினார் ஆசிப். ஆனால் காசி நான் அத்தனை கெட்டவன் இல்லை என்று சப்போர்ட் செய்தது ஆறுதலாய் இருந்தது. அப்பத்தான் உள்ள நுழைஞ்சாங்க ஒரு அக்கா, லேட்டா வந்துட்டு சீக்கிரமா எஸ்கேப்பும் ஆய்ட்டாங்க; நான் காரணம் கிடையாதென்று நினைக்கிறேன்.
இங்கத்தான் செல்லா என்னைப் படம் எடுத்து மொபைல் ப்ளாக்கிங் செய்தது :(. தருமி பக்கத்தில் வந்து யோவ் முடிவெட்டினா சொல்லிட்டு வெட்டுங்கய்யா என்று சொன்னார்; அடையாளம் காண்பதில் இருந்த பிரச்சனைக்காகத்தான் சொன்னார் என்றாலும் நான் சொல்லிட்டுத்தான் வெட்டுனேன் இல்லாட்டி வெட்டிட்டு பெரிய பதிவு போட்டேன். டெல்ஃபைன் மேடம் வந்த பேசிக் கொண்டிருந்தார் நான் "மோகன்தாஸ்" என்று அறிமுகப் படுத்துக் கொண்டேன். அவருக்குத் தெரிந்ததாகத் தெரியவில்லை :(.
ஒரு முறை மேலே சென்று என்ன நடக்குது என்று ஜஸ்ட் பார்த்துவிட்டு கீழிறிங்கேனேன் இறங்கும் வழியில் பிரகாஷ் புகை பிடித்துக் கொண்டிருக்க அதையும் கண்சிமிட்டி சேகரித்துக் கொண்டு உள்ளே வந்து நிற்க பக்கத்தில் நின்ற ஆளை நல்லாத் தெரிஞ்சது மாதிரியிருந்தது. அவரைத் தட்டி நான் மோகன்தாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். அது ரஜினி ராம்கி பின்னர் அவருடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்து அப்படியே வெளியில் வர ரவியும் லக்கியும் வாய்யா புகைப்போட்டுட்டு வரலாம் என்று சொல்ல அவர்களுடன் பீச்சிற்கு வந்தேன்.
குறிப்பு கொஞ்சம் நீளமாய்டுச்சு நாளைக்கு மீதியைப் போடுறன்...
பதிவர் பட்டறை என் பக்கத்துக் குறிப்புகள்
பூனைக்குட்டி
Tuesday, August 07, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
ஆமா மோகன்தாஸ்! நான் இந்த பதிவை படிக்கலையே! ஸாரி!நான் அந்த போட்டோ பதிவ மட்டும் தான் பார்த்தேன், ஸாரிப்பா!
ReplyDeleteசாரி எல்லாம் கேக்காதீங்கங்க...
ReplyDeleteஇதுவே கூட செல்லாவோட பதிவாயிருந்ததால் சொன்னேன். இல்லாவிட்டால் **தை மூடிக்கிட்டு வந்திருப்ப்பேன் ;-)