In சுய சொறிதல்

Go Aussie Go!!!

யார் எந்த விஷயத்தைப் பேசுகிறார்கள் எனப் பார்க்கும் பொழுது அவர்களுடைய பின்புலம் பார்ப்பது என்பது 'முன்முடிவு'; அது தவறு என நான் நினைக்கும் ஒவ்வொரு சமயமும் இல்லை அது அப்படியில்லை ஒருவரது ஒரு கருத்தை/விஷயத்தைப் பற்றிய முடிவானது அவரது பின்புலங்களின் பாதிப்புகளால் ஏற்படுவது தான் என்று மீண்டும் மீண்டும் முகத்தில் அறைந்து சொல்கிறது. பாபர் மசூதியை இடித்தவர்கள் என்ற இமேஜும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பேச்சுக்களும் இவர்கள் இராமர் பாலத்தையும் கருணாநிதியின் பேச்சுக்களையும் பற்றி சொல்லும் பொழுது தன்னாக நினைவில் வருகிறது. தமிழகம் இதன் காரணமாக இந்தியாவில் இருந்து பிரிந்துவிடும் என்று இன்னொரு ஈழமாக தமிழகம் இந்தியாவில் தோன்றிவிடும் என்பது வேடிக்கையாயிருக்கிறது.

ரஜினிகாந்த் படங்களை நோக்கி ஈர்க்கப்பட்டதை விட தள்ளப்பட்டதே அதிகம் என்று எழுதியிருக்கிறேன் முன்பே; இப்பொழுதும் அப்படியே இந்த விஷயத்தில் நான் தள்ளப்படுகிறேன். கருணாநிதி இராமன் என்பவன் இருந்தவனா? கல்லூரியில் என்ஜினியரிங் படித்தவனா என்று கேட்டதில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

--------------------------------------------------------------

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பார்கள், நான் தலைப்பாகையுடனேயே தப்பித்து விட்டேன் ;) அந்தச் சந்தோஷத்தை கொண்டாட நான் திரும்ப எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் Australia கிரிக்கெட் அணியின் தோல்வி என்னை இன்னும் ஒரு மாதத்திற்கு கட்டிப்போட்டுவிட்டது.

மார்க் டைலர், ஸ்டீவ் வாஹ் பிறகான ஆஸ்திரேலியா அணி போலில்லாமல் பான்டிங்கிற்கு பிறகான ஆஸ்திரேலியா அணி கொஞ்சம் கஷ்டப்படும் என்று தெரிகிறது. அணித்தலைவர் என்பதை விடவும் First down பாட்ஸ்மேன் என்ற முறையில் ஆஸ்திரேலியாவின் மிகமுக்கியமான தூண்களில் ஒருவராக இருக்கிறார். ஆனால் இன்னும் வருடங்கள் இருக்கிறது பான்டிங் சாதிக்க நிறைய இருக்கிறது. ஆனால் இடைப்பட்ட காலங்களில் பான்டிங் இல்லாமல் ஆடும் ஆட்டங்களில் பான்டிங் என்ற தனிமனிதரின் ஆளுமை மொத்தமும் இல்லாமல் இருப்பதை உணரமுடிகிறது அணியில்.

சுலபமாக ஜெயித்திருக்க வேண்டிய ஒரு ஆட்டம், ஆஸ்திரேலியாவின் இன்னொரு பலவீனமான மிடில் ஆர்டருக்கு பேட்டிங் கிடைக்காதது இந்தத் தொடரிலும் தொடர்ந்தது. இதன் காரணமாகவும், முட்டாள்தனமாக மீண்டும் ஷான் வாட்ஸனை கொண்டுவந்ததன் காரணமாகவும் அவர்கள் தோற்க நேர்ந்தது. அவர் தன்னுடைய பிட்னஸை இன்னும் ஒரு வருடம் ஆஸ்திரேலிய அணிக்கு வெளியில் நிறுவிய பின்னர் அழைத்துவரலாம். அவருடைய திறமையில் நம்பிக்கை குறைவில்லை அவர் பிட்னஸ் இல்லாமல் போனதால் தான் இந்தப் போட்டி இப்படி ஆனது என்பதில் சந்தேகம் ஒன்றும் கிடையாது.

--------------------------------------------------------------

கிரிக்கெட்டின் மற்ற எல்லா போட்டிகளுக்கும் ஸ்டான்டர்ட்ஸை நிர்ணயிக்கும் ஆஸ்திரேலிய அணி இந்த 20-20 ஆட்டத்திற்கும் விரைவில் புதுவிதமான பரிமாணத்தை அளிப்பார்கள் என்று முழுமனதாக நம்புகிறேன். உதாரணம் இங்கிலாந்து அணி, அவர்கள் அதிகமாக 20-20 ஆட்டம் விளையாடுபவர்கள் ஆனால் அந்தப் போட்டிகளைப் போலில்லாமல் உலகக்கோப்பை 20-20 ஆட்டம் வித்தியாசமாகயிருந்ததை அவர்கள் உணர்ந்தார்களை அதைப் போலவே ஆஸ்திரேலியா அணியின் கேம் ப்ளான் இந்த முறை பயன் தரவில்லை அவ்வளவே.

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஒரு நாள் போட்டி இந்தவாரம் தொடங்குகிறது முதல் போட்டிக்கான டிக்கெட் கிடைக்கலை. ஆனால் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெளுத்து வாங்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

--------------------------------------------------------------

பெரும்பாலும் கோபம் ஏற்படும் பொழுது அந்த கோபத்தை உங்களால் கவனிக்க முடிந்திருக்கிறதா - பாலகுமாரன் சொல்வதைப் போல் என்னால் முடிந்தது இந்தச் சனிக்கிழமை - ஆஸ்திரேலியா இந்தியா போட்டியின் பொழுது பொங்கி வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்(கோபத்தை - லூசு மாதிரி பேசுறேனோ!) ஆச்சர்யமாகயிருக்கிறது. நான் வளர்ந்துட்டேனே மம்மி!

உண்மையில் இந்தப் போட்டியால் disappoint ஆகவில்லையா என்று கேட்டால் நிச்சயம் ஆகியிருக்கிறேன் - இல்லாவிட்டால் ஏக சந்தோஷம் கிடைத்த ஒரு விஷயத்தை விடவும் துக்கம் அதிகமாகயிருக்காது. ஆனால் உண்மையில் முன்நாட்களைப் போலில்லை நிச்சயமாய் இப்பொழுது.

-------------------------------------------------------------

உண்மையில் பதிவெழுதாமல் இருந்த சமயத்தில் கொஞ்சம் உருப்படியான வேலைகள் பார்த்துவந்தேன். அதைத் தொடர்வதற்காகவாவது எழுதாமல் இருக்க வேண்டும் இன்னமும் கூட கொஞ்சம் நாட்கள்...


நான் உருப்புடியா எழுதினது

Related Articles

1 comments:

  1. ஓவியம் நல்லாயிருக்கு

    ReplyDelete

Popular Posts