சரி வேணாம் வேணாம்னு தான் நானும் இருந்தேன். ஆனா உள்ளுக்குள்ள பொறி ஒன்னு தட்டியாச்சு(Mohandoss sparked by etc., etc.,) பத்தாயிரம்(x 2 = இருபதாயிரம்) செலவானாலும் மேட்சை கிரவுண்டில் பார்க்கணும் என்று திட்டமிட்டிருந்தேன். கிர்ர்ர்ர்ர் டிக்கெட் கிடைக்கலை போனால் போகுது; அந்தப் பழம் புளிக்கும் டிவியில் அதைவிட பிரம்மாதமா காட்டுவாங்க. சின்னசாமி ஸ்டேடியத்தில் flood lights போட்டு டெஸ்டிங் எல்லாம் பிரம்மாதமா செய்துக்கிட்டுருக்காங்க.
சரி மேட்டருக்கு வருவோம் இன்று சைமண்ட்ஸ் சொல்லியிருக்கும் விஷயத்தை நான் ஆஸ்திரேலியாவை இந்திய அணி ஜெயிச்சப்பவே சொன்னேன். ரொம்ப பிலிம் காட்டுறாங்க என்று;(எப்பப்பாரு ஜெயிக்கிறவங்க அப்படித்தான் அமைதியா இருப்பாங்க - எப்பவாவது ஒரு தடவை ஜெயிக்கிறவங்க தான் சலம்புவாங்க). அதை அப்படியே ஒத்துக்கொண்டிருக்கிறார் சைமண்ட்ஸ். இந்த விஷயம் இன்னும் பலருக்கும் புரிஞ்சிருக்கும் ஆனால் சொல்லலை ஏன்னா சொன்னா தப்பா எடுத்துப்பாங்கன்னு தான். ஏன் ரவி சாஸ்திரியைக் கேட்டுப் பாருங்களேன் ;) சொல்வாரு. (தோனி ரவி சாஸ்திரிக்கிட்ட கேட்ட சின்னப்புள்ளத்தனம். ஒரே வார்த்தை அவ்வளவு தான்.)
"We spoke about it back in Australia a couple of years ago; that if we can score 200 in a Twenty20 game why can't we score 400 in a 50-over game? It's really just a mental adjustment more than anything. Certainly, batsmen's skills over the last six or seven years in the one-day game have improved dramatically and I think the more Twenty20 cricket is played, the bowlers will start adjusting really well. We saw that at different times during the last event [the inaugural ICC World Twenty20]. But I think if we get some really good conditions here we'll see some good scores."
இப்படி சொன்னது ஆஸ்திரேலிய தல பான்டிங் அண்ணாச்சி; எனக்கு எப்பவுமே ஆஸ்திரேலியாவோட ஓப்பனிங் பேட்ஸ்மேனை யாரும் வம்பிழுக்க மாட்டாங்களான்னு இருக்கும் ஏன்னா கோபத்தில் நல்லா விளையாடுவாங்கன்னு தான். ஆனா யாரும் செய்திருக்க மாட்டாங்க ஏன்னா அது அப்படித்தான் நடக்கும்னு அவங்களுக்கும் தெரியும். ஆஸ்திரேலிய அணி சக்க கோபத்தில் இருக்கிறார்கள்; அதனால் மேற்கண்ட விஷயம் நடந்தாலும் நடக்கும்(ஆஸ்திரேலியா ஏற்கனவே 400 எல்லாம் அடிச்ச அணி தான் என்றாலும் - அதை ஸ்டான்டர்ட் ஆ ஆக்குவதைப் பற்றிய பேச்சு இது.)
ஸ்ரீசாந்த் செய்வதெல்லாம் ஓவர் அலும்பென்பது அவரைத் தவிர மற்றவர் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். சொல்லித் தெரியவேண்டியது ஒன்றுமில்லை இதில். பான்டிங் சொல்லியிருப்பதைப் போல் இப்பொழுது ஒட்டுமொத்த pressure இந்தியன் டீமின் மீது தான். மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன் இந்த ஆட்டத்திற்காக.
Go Aussie Go!!!
PS: இதில் பச்சாப் பசங்களுக்கு விளக்கம் நான் கொடுக்கலை - 7 ஆட்டங்கள் முடிந்ததும் அது யாருன்னு ஆட்டோமேட்டிக்கா தெரிஞ்சிரும். வர்ட்டா!
In கிரிக்கெட்
ஆஸ்திரேலிய அணியும் நானூறு ரன்களும் பச்சா பசங்களும்
Posted on Friday, September 28, 2007
ஆஸ்திரேலிய அணியும் நானூறு ரன்களும் பச்சா பசங்களும்
பூனைக்குட்டி
Friday, September 28, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
டிக்கெட் ஆயிரம் ரூபாயாம்.... :( ஆனாலும் டிக்கெட் சேல் ஆரம்பிச்ச காலையிலே எம்புட்டு கூட்டம் தெரியுமா? எங்கனயிருந்துதான் இவ்வளோ பேரு கிளம்பி வாறாய்ங்கன்னே தெரியல....
ReplyDeleteஅவ்வளோ கூட்டத்திலே வரிசையிலே நின்னு டிக்கெட் வாங்கி கஷ்டப்படனுமா? அதுக்கு வீட்டிலே உட்கார்ந்துட்டே சவுகரியமா பார்த்திறலாம்.... :)
யோவ்...திரும்பி வந்துட்டீயா.....நான் பதிவு போட்டேன்..உன்னப்பத்தி..உடனே ஓடிப்போயிட்ட..நான் கூட என்னால தான்ன்னு நினைச்சிட்டேன்...
ReplyDeleteஅப்பறம்..செயிக்கிற கட்சிக்கு வாக்கு போட்டு சும்மா இருக்கிறத விட நியாத்தின் பக்கம் நின்னு தோத்து போகலாமின்னு யாரோ சொல்லியிருக்காங்க...
நல்லா இருப்பா....ஆசுத்துரேலியா பக்கம் பெண் சினெகிதி இருக்கா..இந்த தாங்கு தாங்குறே...
மோகன்தாஸ் பிரெட் லீ வீசிய முதல் ஓவரைக் கவனித்தீர்களா???
ReplyDeleteமுதல் பந்து போட்டு போடித்தவுடன் பேட்ஸ்மேனிடம் போய் எதோ திட்டி விட்டு அல்லது சொல்லி விட்டு வந்தார். அவருடைய இரண்டு ஓவரில் அவர் இதை 3 தடவைகளுக்கு மேல் செய்து விட்டார்.
ஸ்லெட்ஜிங்கை அதிகம் உபயோகிப்பவர்களே ஆஸ்திரேலியாதான். ஸ்ரிசாந்த் செய்வதும் ஓவர்தான் என்றாலும் ஆஸ்திரேலியா அதைச் சொல்வதற்கு எந்த தகுதியும் இருக்கிறார் போலத் தெரிய வில்லை. (ஆஸ்திரேலியர்கள் யாராவது இதைக் குறித்து விமர்சித்திருந்தால் இந்த பதில்)
இராம் நானும் கேள்விப்பட்டேன்; இந்தத் தடவை கார்ப்பரேட் பாக்ஸஸ் ஒன்றை புடிச்சிடலாம் என்றும் நினைத்தேன். ஒன்றரை லட்சமாம். ;)
ReplyDeleteஎன்னைப் பத்தி பதிவு போட்டீங்களா TBCD நான் பாக்கலையே; லிங்க் கொடுங்கங்க.
ReplyDelete//அப்பறம்..செயிக்கிற கட்சிக்கு வாக்கு போட்டு சும்மா இருக்கிறத விட நியாத்தின் பக்கம் நின்னு தோத்து போகலாமின்னு யாரோ சொல்லியிருக்காங்க...//
நியாயமா? அப்படின்னா
நந்தா - பிரட் லீ என்ன சொன்னார்னு எனக்கு எக்ஸாக்டா தெரியாது? ஆனால் "என்ன டீரீட் எல்லாம் முடிஞ்சிச்சா" "இந்த பால் எப்படி" இப்படிப்பட்ட கேள்விகளாத்தான் இருக்கும் பெரும்பாலும்.
ReplyDeleteஅவர்களுடைய தகுதிகளைப் பற்றிய கேள்விகள் இல்லை அதுமட்டுமில்லாமல் அவர்கள் ஜெயிக்கும் பொழுது மட்டுமில்லை தோற்கும் பொழுதும் இதைச் செய்வார்கள் பார்த்திருக்கிறீர்களா?
எலே
ReplyDeleteஇப்படி நாயடிபட்டுமே வக்கனையா பேச வருதே உங்களுக்கு?? நீ ஆயிரம் சொன்னாலும் அடுத்த 20-20ம் வரைக்கும் கப்பு எங்களுக்கு ஆப்பு மட்டும்தாண்டி உங்களுக்கு
சாத்தான்குளத்தான்
தல பாண்டிங் மிகவும் அளவாகவே அதுவும் யதார்த்தமாகவே தான் பேசியிருக்கிறார்.
ReplyDeleteடி20க்கு 5 மணி நேர ஊர்வலம் ஓவர் தான். அது சரி 25 வருசத்துக்கு ஒருக்கா செயிக்கறவங்க அப்படி தானே செய்வாங்க. ஆனா அவுஸ்திரேலியா இதை செயிக்காதது எனக்கு ஒரு சந்தோசம் தான். ஒரு சீரிஸ் விட்டா தான் அடுத்த சீரிஸ் வெறீயோட ஆடுவாய்ங்க நம்ம பேகீகிரீன்ஸ்.
இண்டியா குண்டி காலி...
தல படத்தை மாற்றிப் போடவும்.
//அவர்கள் ஜெயிக்கும் பொழுது மட்டுமில்லை தோற்கும் பொழுதும் இதைச் செய்வார்கள் பார்த்திருக்கிறீர்களா?///
ReplyDeleteஆமா அடிப்படையிலேயே நாகரிகம் தெரியாத பயலுவ. அதான் அப்படி :-)
ஆஸ்திரேலியாவின் கைக்கூலி மோகன்தாஸ் அவர்களே,
ReplyDeleteஉங்கள் மூக்கு உடையும் நேரம் வந்து விட்டது. அண்ணன் தோனி அடிக்கும் அடியில் வெள்ளையர்கள் தோணியேறி ஓடும் காலம் வந்து விட்டது. மூன்று வயதோர்களை வைத்து முதியோர் கிரிக்கெட் கல்வியை ஆரம்பிக்கவிருக்கிறார் அண்ணன் தோனி.
:-)
ஆனா ஒண்ணு... பாண்டிங் வழக்கம்போல மேட்ச்க்கு முன்னாடியே ஆட ஆரம்பிச்சிட்டார். இந்த ஜெயிப்பை வைச்சிக்கிட்டு நம்ப மக்க பண்ற அலும்பு தாங்கல. ஒவ்வொரு கவரேஜ் பாக்கும்போதும் நம்ப பௌலர்கள் வயத்தில் புளிதான் :-)
T20 மேட்ச்கள் சில நடந்த விதம், கடைசில ஹக் கெந்துன கெந்து, இந்த அளவுல ஆடற பௌலர்கள் மூனு பேரு ஆளில்லாத ஸ்டம்பு மிஸ் பண்ணது - எல்லாத்தையும் பாக்கும்போது 'நான் அசைந்தால் அசையும் விக்கெட்டுகள் எல்லாமே' என்று புக்கிகள் பாடுவது காதில் விழுகிறபோல இருக்கிறது!
//நல்லா இருப்பா....ஆசுத்துரேலியா பக்கம் பெண் சினெகிதி இருக்கா..இந்த தாங்கு தாங்குறே...//
ReplyDeleteSnekithi is in Canada. Isn't it? ;-)
நியாயமின்னா..அழுகுனி ஆட்டம் ஆடாம, ஒழுங்கா ஆடுறது....
ReplyDeleteஆசுதுரேலியா ஆதரவாளர்களுக்கும் நியாயம்ன்னா என்னான்னு தெரியல.. :))))
இது நான் உன்னப் பத்தி போட்ட பதிவு...
கால் போட்ட மோஹன் தாஸ் !!
இது விளங்கா மண்டையன் சிமன்டசு பத்தி போட்ட பதிவு...
பொறாமைதீயில் வெந்து போகும் ஆசுதுரேலியா கங்காருகள்
//*Pஒட்"டெஅ" கடை சைட்...
ReplyDeleteதல பாண்டிங் மிகவும் அளவாகவே அதுவும் யதார்த்தமாகவே தான் பேசியிருக்கிறார்.
டி20க்கு 5 மணி நேர ஊர்வலம் ஓவர் தான். அது சரி 25 வருசத்துக்கு ஒருக்கா செயிக்கறவங்க அப்படி தானே செய்வாங்க. ஆனா அவுஸ்திரேலியா இதை செயிக்காதது எனக்கு ஒரு சந்தோசம் தான். ஒரு சீரிஸ் விட்டா தான் அடுத்த சீரிஸ் வெறீயோட ஆடுவாய்ங்க நம்ம பேகீகிரீன்ஸ்.
இண்டியா குண்டி காலி...*//
பொட்டிக்கடைக்காரரே...ஸ்டீவ் வாக் உலக்கோப்பையயை முதல்ல கெலிச்ச போது இதே மாதிரி வரவேற்பு குடுத்தாங்க..திறந்த வெளி பேருந்தில் அனைவரும் அமர்ந்து, அவங்க ஊர் முறையில நடந்திச்சி....
வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகிலும் உண்டு...குதிரை கீழே விழுந்தா எந்திரிக்க நேரம் ஆகாது..யானை விழுந்தா ஊரே பாக்க முக்கி முனங்கி....தான் எந்திரிச்சாகனும்...இப்ப அவனுங்க முனகுங்கறாங்க...அம்புட்டு தான்...
post scriptum super..!!!
ReplyDeleteSnekithi is in Canada. Isn't it? ;-)??????????????????????
ReplyDelete/PS: இதில் பச்சாப் பசங்களுக்கு விளக்கம் நான் கொடுக்கலை - 7 ஆட்டங்கள் முடிந்ததும் அது யாருன்னு ஆட்டோமேட்டிக்கா தெரிஞ்சிரும். வர்ட்டா!///
ReplyDeleteஆரூடம் பலிச்சிருச்சுன்னு இறுமாப்பிலே இருக்காதய்யா ஆஸ்திரேலிய அடிவருடி.... :))