தஞ்சை பெரியகோவிலில் பார்த்த இந்த இரண்டு சிற்பங்களும் எங்கள் கவனத்தைக் கவர்ந்தன. நான் இது போன்ற சிற்பங்கள் இருப்பதைப் பற்றி எங்கேயும் படித்ததில்லை. பார்த்துச் சொன்னது அக்காவின் கணவர், நல்ல ஷார்ப்பான கண்கள் அவருக்கு என்று நினைக்கிறேன். நான் என் மற்ற கண்ணில் பார்த்தது இங்கே கீழே புகைப்படங்களாய்.
இந்தச் சிலையில் இருப்பவரைப் பார்ப்பதற்கு ஒரு சீன நாட்டுக்காரர் போலவே தோற்றமளிக்கிறார். தலையில் தொப்பி அணிந்து இருக்கும் இந்தச் சிலை எங்கள் கவனத்தைக் கவர்ந்தது. இதைப்பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. நான் பார்த்தவரையில் இப்படிப்பட்ட ஒரு சிற்பம் எந்தக் கோவிலிலும் பார்த்ததில்லை.
அதே போலவே இந்தப் பெண் உருவமும், இந்த வகையான அலங்காரத்துடன், இந்த வகையில் உட்கார்ந்திருக்கும் சிலையையும் நான் பார்த்ததில்லை. இதற்குப் பின் எதுவும் ரகசியங்கள் இருக்கிறதா? தெரியவில்லை. இன்னும் நன்றாய் தஞ்சை பெரிய கோவில் பற்றி அறிந்தவர்களிடம் தான் கேட்கவேண்டும்.
In சிற்பங்கள் சோழர்
தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு விசித்திர சிற்பங்கள்
Posted on Monday, February 16, 2009
தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு விசித்திர சிற்பங்கள்
Mohandoss
Monday, February 16, 2009
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
இன்னொன்று பார்த்திருப்பீர்கள்
ReplyDeleteஎன்று நினைக்கிறேன்
பூ தொடுப்பு போன்ற வேலைப்பாடு
இரண்டு பூவிற்க்கு நடுவில் சிரிய துவாரம் துவாரத்தில் குண்டூசி போட்டால்
தலை மாட்டிக்கொள்ளும்
நுண்ணிய வேலை
மோகன்தாஸ்!
ReplyDeleteஎனது நண்பர் பாலசுப்ரமணியன் தன் ஐ.ஏ.எஸ். நேர்காணலின்போது இந்தக் கேள்வி கேட்கப்பட்டதாக சொல்லிக் கேட்டதுண்டு. அதாவது தஞ்சை பெரிய கோபுரத்தில் என்ன வித்தியாசம் என்று (நிழல் கீழே விழாது (?), ஒரு மாட்டுவண்டியே கோபுர பிரகாரத்தை சுத்தலாம் போன்றவைத் தவிர்த்து) கேட்கப்பட்டதாகவும் அந்த வெள்ளைக்காரனின் சிலை பதிலைத் தான் சொன்னதாகவும் (அவர் மாயவரத்துக்காரர்!) பகிர்ந்து கொண்டிருக்கிறார்! ஆனால் அவருக்கும் கூட அந்த வரலாறு தெரியவில்லை என்றே நினைக்கிறேன். உங்கள் இடுகையினை அவருக்கு அனுப்பியிருக்கிறேன்! பார்ப்போம்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
mohandoss,
ReplyDeleteread about the chinaman(sic) sculture in ponniyinselvan yahoo group years ago. there should be something in varalaaru.com
-Mathy
smile, venkatramanan, மதி - நன்றிகள்.
ReplyDeleteஎன் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவர் கொடுத்த இந்த உரல் நல்ல இன்ஃபர்மேட்டிவ்வா இருந்தது.
http://kavirimainthan.wordpress.com/2008/09/13/a-european-on-tanjore-temple/#comments
ஆரம்பத்தில் இருந்தே எனக்கு பொன்னியின் செல்வன் குழுமத்தில் ஈடுபாடு வரலை, ஏன்னு தெரியலை. வரலாறுவில் தேடிப்பார்க்கிறேன்.
செய்தி தந்த நண்பர் விஜய் குமார். http://www.poetryinstone.in/
ReplyDeleteதொப்பி அணிந்திருக்கும் இந்த சிலை சுமார் 16ம் நூற்றாண்டூ வாக்கில் அந்நியர்களின் வருகையால் ஏற்பட்டது என தொல்லியல் ஆய்வாள்ர் குடவாயில் பாலசுப்ரமணியன் சொல்ல கேட்டிருக்கின்றேன்.
ReplyDeleteஅமர்ந்திருக்கும் அந்த பெண்ணிண் தலைக்கு மேல் ட்ராகன் பாம்பு போன்ற தோற்றம் சீனப்பெண் என்றே கணிக்கச் செய்கிறது
ReplyDelete//http://books.google.com/books?id=UD8TAAAAYAAJ&pg=PA192&lpg=PA192&dq=chinese+pilgrim+tanjore&source=bl&ots=fPJA89CacS&sig=7w-xi41UfPUsiGvVhkv486Vpupk&hl=en&ei=p3ukSa-2EZDdnQeZmambBQ&sa=X&oi=book_result&resnum=2&ct=result//
ReplyDeleteHere is a page from a book published in 1922 that speculates the same thing.(Danish person)
When I first saw it
I guessed that it must have been one of the chinese travellers who came to the southern part of the country.