In உலகக்கோப்பை கால்பந்து ஜெர்மனி

Spain Vs Germany

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்தியதைப்போலவும் அந்தப் போட்டியில் மார்க் வாஹ் சென்சுரி அடித்தது போலவும் சந்தோஷமாக இருந்ததெனக்கு, அர்ஜெண்டினாவை 4 - 0 என்று ஜெர்மனி வீழ்த்திய பொழுது அதுவும் Klose இரண்டு கோல் அடித்து ஜெயிக்க வைத்த பொழுது. ஒரு விளையாட்டுப் போட்டியின் காரணமாய் நான் இத்தனை சந்தோஷமாய் இருந்தது சமீபத்தில் இதற்காகத் தான். சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி கூட இதில் 50% தான்.

அரையிறுதியில் ஜெர்மனியின் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன், அப்படியே எதிர்பார்த்த இங்கிலாந்து மற்றும் அர்ஜெண்டினாவிற்கு எதிரான ஆட்டங்கள் அவ்வளவு சுவாரசியம் இல்லாமல் போனது, ஜெர்மனி சென்ற இரண்டு உலகக் கோப்பை ஆட்டங்கள் போலில்லாமல், இந்த முறை ஜெர்மனி நிச்சயம் உலகக்கோப்பை வெல்லும் என்று எண்ணத்தக்க வகையில் ஆடி வருகிறார்கள்.

ஸ்பெயின் அணியின் மிக முக்கியமான பிரச்சனையாக நான் நினைப்பது, அவர்களின் டேவிட் வில்லா மீதான dependency தான். ஸாவி மற்றும் இனெய்ஸ்டா போன்ற நல்ல ஆட்டக்காரர்கள் இருந்தாலும், இந்த உலகக்கோப்பையில் ஸ்பெயின் கோல்களுக்காக டேவிட் வில்லாவையே சார்ந்திருக்கிறது. ஜெர்மனியின் ஷ்வைன்ஸ்டைகர், பொடொல்ஸ்கி, க்ளோஸே, முல்லர்(ரெட் கார்ட் என்பதால் ஆடமாட்டார்), காகு(Cacau), ஓஸில் என இந்த உலகக் கோப்பையில் கோல் மழை பெய்து வருகிறது ஜெர்மனி அணி.

இவர்களின் counter-attack மிகப்பிரமாதமாக வேலை செய்வதாலேயே செகண்ட் ஹாஃபில் இவர்களால் இரண்டு கோல்கள் போட முடிந்திருக்கிறது. அதுவும் பர்ஸ்ட் ஹாஃபில் ஒரு கோல் போட்டு ஜெர்மன் அணி லீடிங்கில் இருந்தால் செகண்ட் ஹாஃபில் மற்ற அணி கோல் போட அபென்ஸ் விளையாடும் பொழுது, இவர்களின் மிகச் சரியான பாஸிங்காலும், திறமையும் இளமையும் கூடிய இவர்களின் சென்டர் மிட்பீல்டர்களின் கட்டுக்கோப்பான ஆட்டத்தாலும் ஃபார்வெர்ட்(மட்டும்) விளையாடும் க்ளோசேவிற்கு பந்துகள் சுலபமாகக் கிடைக்கின்றன. அதிலும் ஜெர்மனி கேப்டன் பிலிப் லாமின் பாஸ்கள் ரொம்பவும் சொற்பமாகவே மிஸ் ஆகிறது, ஜெர்மனியின் டிஃபென்ஸ் இந்த உலகக் கோப்பையின் மிகச்சிறந்த ஒன்றாகவே இருப்பது இன்னமும் கூட ஜெர்மனியின் சாதகமான அம்சம்.


ஸ்பெயின் முதல் கோல் போட்டால் ஆட்டம் கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கும், ஆனால் ஸ்பெயினின் டிபென்ஸ் மற்றும் ஜெர்மனியின் டிபென்ஸ் காரணமாக ஆட்டம் பெனால்டிக்கு வரவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் முதல் பாதியில் ஜெர்மனி கோல் போட்டால் 3-0 என்ற வித்தியாசத்தில் ஜெர்மனி ஜெயிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவே நினைக்கிறேன்.

Klose 15வது கோல் போட்டு ரொனால்டோவை சமன் செய்யவேண்டும் இந்த ஆட்டத்தில்.

Related Articles

4 comments:

  1. ஆப்பிரிக்க தென் அமெரிக்க அணிகள் விளையாடும் போது இருக்கும் சுறுசுறுப்பு ஐரோப்பிய ஆனிகள் விளையாடும் போது இல்லை.
    இருந்தாலும் ஜெர்மனி வெல்லும் என்பது என் கணிப்பு.

    நானும் ஒரு பதிவு போட்டுள்ளேன். படித்து விட்டு கருத்துகள் கூறினால் நன்று

    http://baloonkadai.blogspot.com/2010/07/blog-post.html

    ReplyDelete
  2. ஜெர்ம‌னி இன்றைய‌ ஆட்ட‌த்தில் தோல்வியுற்று வெளியேறினால் ஸ்பெய்ன் அல்ல‌து நெதெர்லாண்டு முத‌ல் முறையாக‌ கிண்ண‌ம் வெல்ல‌ வாய்ப்பாக‌ அமையும்.ஜெர்ம‌னியுட‌னான‌ ஆட்ட‌த்தில் ஸ்பெய்ன் வெல்லும் என்ப‌து என் க‌ணிப்பு.

    ReplyDelete
  3. ஒரு அணி முதல் முறையாக வெல்ல வேண்டும் என்பதற்காக நன்றாக விளையாடும் அணி தோற்க வேண்டியதில்லை.

    யாருடைய திறமை இந்த மேட்சியில் அதிகம் வெளிப்படுகிறதோ அவர்கள் ஜெயிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. So sad :-((
    Germany is out.

    ReplyDelete

Popular Posts