முன்பே சொல்லியிருந்ததைப் போல் ஒரு படமோ ஒரு புத்தகமோ நமக்கு எப்படி அறிமுகமாகிறது என்பது முக்கியமான விஷயம். இந்த Baise-Moi படம் எனக்கு அறிமுகமானதும் வித்தியாசமான முறையில் தான்; என்னுடைய ப்ரான்ஸ் நாட்டு தொடர்புகளைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன் ஏதோ ஒரு வகையில். அப்படிப்பட்ட ஒரு நபர் என்னுடைய பதிவுகளையும் படிப்பதுண்டு; நான் பெண்ணியம் பற்றி பதிவுகளில் சண்டைப் போட்டுக்கொண்டிருப்பதைப் படித்தவர் இந்தப் படத்தை சிபாரிசு செய்தார்.
அவரிடம்(மட்டும்) நான் பெண்ணியத்தைப் பற்றிய விவாதத்தை செய்ய மாட்டேன்; கிழித்தெரிந்துவிடுவார் என்று தெரியும். ஆனாலும் சுத்திச் சுத்தி பேசுவேன்.
"இங்கப்பாருங்க எந்த ஒரு விஷயமும் இந்தியாவில் செல்லுபடியாக வேண்டுமானால் இந்தியனைஸ்ட் செய்யப்பட வேண்டும். நாம இந்தியாவில் சாப்பிடும் பீட்ஸா இருக்கே அதை அமேரிக்காவிலோ இல்லை அதன் தாயகமான இத்தாலியிலோ கொடுத்தால் சாப்பிடவே மாட்டார்கள் ஏன் தெரியுமா? நாம் சாப்பிடும் பீட்ஸா இந்தியாவிற்காக செய்யப்பட்டது நம்முடைய மசாலாக்கள் போடப்பட்டு செய்யப்பட்டது. அவன் லத்தின் அமேரிக்காவிலோ, அமேரிக்காவிலோ செல்லுபடியாகும் பீட்ஸாவை அப்படியே இந்தியாவில் கொண்டுவந்தால் அது ஊத்தி மூடியிருக்கும்.
அதைப் போலத்தான் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட வெற்றி பெற்ற கொள்கைகளும் கட்டுமானங்களும். இந்தியனைஸ்ட் செய்யாமல் இங்கே ஒன்றுமே வெற்றி பெற முடியாது. அப்படி செய்தீர்களேயானால் அது படுதோல்வியில் முடியும். அது புரட்சியாக இருந்தாலும் சரி பெண்ணியமானாலும் சரி." நான் வைத்த இந்த பாய்ன்ட்டை அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் பல சமயம் இந்தியனைஸ்ட் செய்யும் பொழுது அந்தக் கொள்கை அப்படியே மாறிவிடுகிறது என்றும் புலம்பினார்.
ஏன் இதைப் பற்றி Baise-Moi பற்றி எழுதும் பொழுது சொல்கிறேன் என்றால், நான் பெண்ணியம் பற்றிய விமர்சனங்களை வைத்திருக்கும் பொழுது எனக்கு இந்தப் படத்தை அந்த நபர் அறிமுகப்படுத்தியிருந்தார். படம் பார்த்ததும் எனக்கு வந்த உணர்வுகளைத்தான் நான் சொல்லியிருந்தேன் அதனால் தான் அந்த வரிகள்.
சரி படத்தைப் பற்றி, ஏற்கனவே டிசே தமிழன் இந்த நாவலைப் பற்றி(இந்த படம் ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது நாவலை எழுதியவர் துணை இயக்குநராய் இருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டது) எழுதியிருந்தார். இந்தப் படம் 1973க்குப் பிறகு ப்ரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்ட படம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். ஏனென்றால் உலகின் கலாச்சார தலைநகரம் என்று பெயர் பெற்ற ப்ரான்ஸைப் பற்றிச் சொல்லும் பொழுது அதனுடைய சுதந்திரம் மிக முக்கியமான ஒன்றாக வைக்கப்படுகிறது அதாவது எழுத்து, பேச்சு சுதந்திரங்கள். அப்படிப்பட்ட ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு படம் என்ற Tag உடன் என்னிடம் அறிமுகம் ஆனது இப்படம்.
விளிம்பு நிலை பெண்களின் வாழ்க்கையை காட்டுவதாக படம் அமைந்திருக்கிறது, நாவலை எழுதியவர்(இயக்குநர்) மற்றும் இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் இருவரும் இந்த பின்னணியில் இருந்து வந்தவர்கள் ஆதலால் தத்ரூபமாக அம்மக்களைப் படம் பிடிப்பதாய் இருக்கிறது படம். இந்தப் படத்தை நாம் எந்த முறையில அணுகுகிறோம் என்பது மிகமுக்கியமான ஒரு விஷயமாகயிருக்கிறது. ஏனென்றால் இன்னமுமே கூட இது போன்ற ஒரு சூழ்நிலையை படமெடுக்க ப்ரான்ஸ் போன்ற நாடுகளில் மறுக்கிறார்கள் எனும் பொழுது, நம் நாட்டைப் பற்றி கேட்கவே வேண்டாம். இந்தப் பிரச்சனைகள் இல்லையா நம் நாட்டில் என்றால் - இருக்கிறது சொல்லப்போனால் நிறையவே என்ற பதில் தான் வரும்.
எழுத்து வடிவத்தில் நம்மூர் ஆட்களில் இதைப் பற்றி எழுதுபவர்கள் இன்று இருக்கிறார்கள். ஜே.பி. சாணக்யா எனக்குத் தெரிந்த ஒருவர் இந்த விதத்தில்; ஆனால் பாலியல் விவகாரங்களை விளிம்பு நிலை மக்கள் துடைத்துப் போட்டுவிட்டுப் போகும் ஒரு விஷயமாகப் பார்ப்பதை நீங்கள் சாணக்யாவின் எழுத்துக்களில் பார்க்கலாம். (ஆனால் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்த ஒரு நபர் - சாணக்யாவின் எழுத்துக்களில் விளிம்பு நிலை மக்களைப் பற்றிய விஷயங்கள் மிகைப்படுத்தலானதும் கொஞ்சம் போல் போலியானதாகவும் இருப்பதாக சொல்லிக் கேள்விப்பட்டேன்.) ஆனால் 'ரா'வாக விளிம்பு நிலைப் பெண்களின் வாழ்க்கையைப் பற்றி இந்தப் படம் விவரிக்கிறது.
Baise Moi க்கு டிசே சொல்லியிருப்பதைப் போல் Rape Me நேரடியான அர்த்தமாக இருக்காதெனவும் Kiss Me தான் அர்த்தம் என்றும் இயக்குநரின் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.(ஆனால் தற்சமயங்களில் F*** Me என்ற அர்த்தமும் வருமாம்).
நடீன் என்ற பகுதிநேர விலைமாதுவிற்கும், மனு என்ற தன்னுடைய வாழ்விற்காக எதையும் செய்யத் தயாராயிருக்கும் ஒரு பெண்ணிற்கும் நடக்கும் விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. இருவருமே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தங்களைச் சேர்ந்தவர்களையே கொன்றுவிடும் நிலை. நடீன் தன்னுடைய அறைத் தோழியையும் மனு தன்னுடைய சகோதரனையும் கொன்றுவிட்டு செல்லும் வழியில் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். பின்னர் இருவருக்கும் இருக்கும் ஒத்த பின்னணியால் சேர்கிறவர்கள். பணத்திற்காகக் கொள்ளையடிக்கிறார்கள், தேவைகளுக்காக செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள், பின்னர் வெறிக்காக(சமுதாயத்தின் மேல்) கொலை செய்கிறார்கள். இப்படியே நீளும் கதையில் கடைசியில் ஒரு கடையில் கொள்ளையடிக்கும் பொழுது மனு கொல்லப்பட, மற்றவர்(நடீன்) தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் பொழுது பிடிபடுகிறார்.
இவ்வளவு தான் படம் படமாக்கியிருக்கும் விதம் உண்மையிலேயே அதிர வைக்கிறது. அவர்களின் 'ரா'வான தன்மை. எந்த நோக்கமும் இல்லாமல் இயங்குவது, கொலை செய்வது என்று ஆச்சர்யப்படவைக்கிறது படம். இந்த வகையான எடிட்டிங் முன்பே பார்த்திருக்கிறேன்; தனித்தனியாய் இருவரைப் பற்றியும் ஆரம்பிக்கும் படம். இருவரும் சேர்ந்ததும் ஒன்றாய் பயணிக்கிறது. படத்தில் இருக்கும் ஒரு ரேப் சீன் பெரும்பான்மையான நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்ட ஒன்று. உலகத்தின் பல பாகங்களில் இந்தப் படம் இன்னமும் அனுமதி மறுக்கப்பட்டுத்தான் இருக்கிறது; இந்தியாவிலெல்லாம் கேட்காதீர்கள்.
படம் பார்க்கும் பொழுது பெரும்பான்மையான நேரத்தில் ஒரு படம் பார்ப்பதைப் போன்ற உணர்வே எழுவதில்லை. இதற்கு இந்தப் படத்தை எடுத்த முறையும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன் - இயற்கையான வெளிச்சத்திலேயே இந்தப் படத்தை எடுத்தார்களாம். இதைப் போலவே முன்பே நினைத்த ஒரு படம் Battle of Algiers's. நாம் எவ்வளவு செக்யூர்டான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதைப் போன்ற உணர்வு இதைப் போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது கிடைக்கிறது.
இந்தப் படம் என்ன சொல்ல வருகிறது எதற்காக இப்படி ஒரு படம் எடுக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதிலாக இந்த மாதிரியான ஒரு வாழ்க்கை உலகத்தில் இருக்கிறது என்பதை பதிவு செய்ய என்று கூறலாம்; இயக்குநர் Virginie Despentes சொல்கிறார் படத்தில் காண்பிப்பதை விடவும் வன்முறையா ஒரு உலகம் இருப்பதாகவும் அதில் அவர் வாழ்ந்ததாகவும். விக்கிபீடியாவில் தேடிக்கொண்டிருந்த பொழுது தான் தெரியவந்தது இந்தப் படத்தில் நடீனாக நடித்த நடிகை Karen Bach சிறிது காலத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தன்னுடைய கடைசி Note ஆக "Too Painful" என்று எழுதி வைத்திருந்ததாகவும். Karen Bach ஒரு போர்ன் ஸ்டாராக இருந்தவர் தான்.
Karen Bach
இந்தியாவில் இந்தப் படம் கிடைக்கிறதா தெரியவில்லை, படத்தில் செக்ஸ் சீன்களும் வன்முறையும் அதிகம் இருக்கும். இதை ஒரு ரிவ்யூ போல் எல்லாம் எழுதாமல் இந்தப் படம் பார்த்ததால் நான் உணர்ந்ததை எழுதியிருக்கிறேன்.
Written & Directed by - Virginie Despentes, Coralie Trinh Thi
Starring - Karen Lancaume, Raffaëla Anderson
http://en.wikipedia.org/wiki/Baise_moi
http://en.wikipedia.org/wiki/Virginie_Despentes
http://en.wikipedia.org/wiki/Karen_Lancaume
Baise Moi - Kiss Me
பூனைக்குட்டி
Wednesday, July 14, 2010
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
//அவரிடம்(மட்டும்) நான் பெண்ணியத்தைப் பற்றிய விவாதத்தை செய்ய மாட்டேன்; கிழித்தெரிந்துவிடுவார் என்று தெரியும்.// ஓஹோ அப்ப உங்க ஜம்பமெல்லாம் கிழித்தெரியாத பூச்சிகளிடம்தானா? :-)
ReplyDeleteபட விமர்சனத்தை நல்ல எழுதியிருக்கீங்க .
இந்த படத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்!
ReplyDeleteCHENNAI
ReplyDelete#5/77, C.P Ramasamy Road,
Chennai - 600 018
என்ற அட்ரெஸ்ஸில் Cinema Paradaiso என்றொரு கடையிருக்கும் அங்கே கிடைக்கும். மெம்பர்ஷிப் காசு கொஞ்சம் கேட்பார்கள்(3000 - 4000 ஞாபகமில்லை) மேற்படி படங்களுக்கு 75 - 100 ரூபாய்கள் பிடிக்கும்.
CHENNAI
91-44-42110900 / 42110990 இது தான் தொலைபேசி இலக்கங்கள். தொடர்புகொண்டு பாருங்கள்.
பெங்களூரில் இருப்பதை விடவும் அற்புதமான கலெக்ஷன் சென்னையில் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
பல நடிகர்கள் இந்தக் கடையின் வாடிக்கையாளர்கள். கமலஹாசன் வந்துதான் பெங்களூர் கடையை திறந்து வைத்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இந்த படத்தின் DVD பெங்களூர் SP ரோட்டில் உள்ளடங்கிய எலக்ட்டானிக்ஸ் கடைகளில் ரூபாய் 60க்கு கிடைக்கும்.
ReplyDeleteஎன்னாது? திருட்டு டிவிடி கிடைக்கற அட்ரசை சொன்னதுக்கு போலீஸ்ல புகார் கொடுப்பீகளா?!
அப்படின்னா, இது என் போலியோட பின்னூட்டமுங்கோவ்!!!
//நாம இந்தியாவில் சாப்பிடும் பீட்ஸா இருக்கே அதை அமேரிக்காவிலோ இல்லை அதன் தாயகமான இத்தாலியிலோ கொடுத்தால் சாப்பிடவே மாட்டார்கள்// அப்படியா??? எனக்கு அப்படியொன்னும் இன்டியனைஸ்ட் பண்ணியிருக்காப்புல தெரியலையே?
ReplyDeleteஅக்கா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. இது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றுதான்.
ReplyDeleteபிஸினஸ் டாக்டிஸ் பற்றி பேசும் எல்லா இடங்களிலும் இதைப் பற்றிச் சொல்லப்படுவதைக் கேட்கலாம் :).
பெண்ணியத்திற்காக சொன்னதால் இல்லேன்னு ஆய்டாது ;)
அறிமுகத்திற்கும் விமர்சனத்திற்ககும் நன்றி. கிடைத்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டும். :-)
ReplyDeleteநீங்கள் சொல்லும் லோகலைசேஷன் எல்லா விஷயங்களிலும் கடைபிடிக்கப் படுவதில்லை. நீங்கள் எங்கு பீட்ஸா சாப்பிட்டீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் branded கடைகளில் கண்டிப்பாக அதன் உண்மையான சுவை மாறாது. சைனீஸ் உணவகங்களில் நூடுல்ஸ் சாப்பிடுவதற்க்கும், உடுப்பி ஹோட்டலில் நூடுல்ஸ் சாப்பிடுவதற்க்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் குழப்பி கொண்டிருக்க மாதிரி தெரிகிறது. நல்ல italian cuisine-ல் (bangalore la casa மாதிரி) முயற்சி பண்ணிப் பாத்திட்டு எழுதியிருக்கலாம் :-))
மற்றபடி வழக்கம் போல் லக்ஷிமி மேடத்தை ஒரு பின்னூட்டம் போட வைத்து விட்டீர்கள். வாழ்த்துகள் :-)
விமர்சனம் அருமை.உலகில் இதுவரை வந்த படங்களிலேயே THE IRREVERSABLE படத்தில்தான் கற்பழிப்புக்காட்சிகள் கொடூரமாகக்காட்டப்பட்டுள்ளது
ReplyDeleteIrreversible இந்த படத்தில் வர்ற சீனுக்கு பிச்சை வாங்கணும். அந்த பெண்ணை அடிக்கும் போது நமக்கே விழுந்த மாதிரி இருந்தது. மிக கொடுமையான காட்சி அமைப்பு. ரத்தம் பெருக்கெடுத்து ஓடும்...... Kill Bill மாதிரி
ReplyDelete