சிறிது நேரத்தில் சிந்து மீண்டும் என் அறைக்கு வந்திருந்தாள். அன்று சனிக்கிழமை நான் பொதுவாய் வாரக்கடைசிகளில் எந்த வேலையும் வைத்துக் கொள்ளாது உமையாளுக்காய் காத்திருக்கும் நாள். ஆனால் நான் ஒரு வகையில் சிந்து திரும்பவும் வருவாள் என்று ஊகித்திருந்தேன். இறுக்கமான ஷர்ட்டும் குட்டி ஸ்கர்ட்டும் போட்டுக் கொண்டு வந்திருந்தாள், குதிரை வால் விட்டிருந்தாள் குளித்துவிட்டு மெலிதாய் புருவம் வரைந்து அதுவாகவே நீண்டிருந்த இமைகளை மஸ்காரா விட்டு இன்னமும்...