கட்டபொம்மு 1799 அக்டொபர் 16 அன்று கயத்தாரில் அவரது 36ஆவது வயதில் தூக்கிலடப்பட்டார். அவரது உறவினர்கள் பெண்களும் ஆண்களுமாய்ப் பதினேழுபேர் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர், கொல்லவாருப்பட்டி பாளையங்கள் பறிக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சியின் பெரும்பாலான பகுதிகள் எட்டையபுரம், மேல்மாந்தை, மணியாச்சி பாளையங்களுக்குப் பகிர்ந்தளிகப்பட்டது. பறிக்கப்பட்ட பாளையங்களிலிருந்த கோட்டைகள் எல்லாம் இடிக்கப்பட்டன. ஆயுதங்கள் பிடுங்கப்பட்டன. மக்களது சுய பாதுகாப்புக்கும் வழியில்லாமல் போகவே திருட்டுகள் அதிகரித்தன. அனைத்துப்...