"தேவிடியாத்தனம் பண்றவங்களுக்குத்தான் இப்பல்லாம் மதிப்பு என்ன?" அம்மா என்னிடம் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி கேட்கிறார் என்பது புரிவதுபோல் இருந்தாலும் சின்னப்பிள்ளையை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதையெதை பேசுவதென்பதை மறந்தா போய்விட்டார் என நினைத்து கோபம் தான் வந்தது.
"அம்மா என்ன இது பவானி இருக்குறப்பவே இப்படியெல்லாம் பேச ஆரம்பிக்கிற, வயசாக ஆக உனக்கு புத்தி பேதலிச்சுக்கிட்டே வருதுன்னு நினைக்கிறேன்." அம்மாவிடம் கத்திவிட்டு, பவானியிடம்,
"டேய் உள்ளப்போய் விளையாடு. போ." அவனை மிரட்ட அவனும் இரு இரு உன்னை இன்னொரு நாள் பார்த்துக்குறேன்னு சொல்பவன் போல் முறைத்துவிட்டு உள்ளே சென்றான். அவன் போனதும்தான் தாமதம் அம்மா தன்னுடைய பாராயணத்தை மீண்டும் ஆரம்பிக்க,
"இங்கப்பாரு அவளை உன்னால கட்டுப்படுத்தி வைக்கமுடியும்னா வை. இல்லைனா அவளைத் தள்ளி வைச்சிட்டு வேறவொருத்தியை கல்யாணம் பண்ணிக்க. ஆயிரம் பேரு இருக்காளுங்க இவ திமிர் பிடிச்சி அலையறா."
அம்மாவின் இந்த பேச்சை திசைதிருப்ப நினைத்தவனாய்,
"நானா லவ் பண்ணி கட்டிக்கிட்டேன், நீதானே கட்டிவைச்ச. பொண்ணு லட்சணமா இருக்கா, அமைதியா பேசுறா அது இதுன்னு. இத்தனைக்கும் நம்ம பக்கம் வேற கிடையாது. எங்கேர்ந்தோ ஒரு பாப்பாத்திய வந்து கட்டி வைச்சிட்டு இப்ப அப்படி பண்றா இப்படி பண்றான்னா எப்படி."
"சரி நான் தான் கட்டிவைச்சேன் அதுக்கென்ன, சிலசமயங்கள்ல நாம நினைக்கிறதெல்லாம் நடக்குதா என்ன? இல்ல நீ கஷ்டப்படணும்னே கொண்டுவந்து கட்டிவைச்சேனா சொல்லு பார்ப்போம். ஒத்து வரலையா வெட்டி விட்டுறணும்."
"அம்மா திரும்ப திரும்ப அதையே பேசாதேம்மா, வேற எதாவது நடக்குறதா பேசு. எனக்கென்னமோ எல்லாமே சரியாயிறும்னு தோணுது. அதுமட்டுமில்லாம அவ்வளவு சுலபமா வெட்டிவிட்டுற முடியும் நம்ம பவானிக்கு ஆறு வயசாகுது. வேற ஏதாச்சும் தான் பண்ணனும்."
"ஆமாம்டா உம்பொண்டாட்டி, அழகிப்போட்டி அது இதுன்னு பாதி ட்ரெஸ் போடாம ஆட்டி ஆட்டி நடந்துக்கிட்டிருக்கா. இதை பார்க்கிறதுக்கு ஆயிரம் பேர் வேற. கர்மம் கர்மம். எல்லாம் நீ கொடுக்குற இடம் தான் கல்யாணத்துக்கு முன்னாடி இதையெல்லாம் பண்ணாளா என்ன? இன்னிக்குப் பாரு நம்ம குடும்ப பேரையே கெடுக்குற மாதிரி இப்படி ஆயிருச்சு. நாளையும் மன்னியும் நீ வெளியில தெருவில போகவேணாம்.
இப்படி பாதியில ட்ரெஸ் அவுத்துக்கிட்டு நிக்குறா, வெளியில போனா செருப்பால அடிக்கப் போறாங்க போ உன்னை." அம்மாவின் முகத்தில் தெரியும் ஆத்திரத்தில் கொஞ்சம் நடுங்கித்தான் போனேன். பின்னாலிருந்து யாரோ தலையில் அடிப்பது போலிருந்ததால் திரும்பிப்பார்க்க, அவள் தான் நின்று கொண்டிருந்தாள் அகிலா, கையில் வெளக்கமாறோட...
"என்ன காலங்காத்தாலேயே கனவா?" அவள் இன்னுமொறுமுறை தலையில் தட்ட, முழுதாய் முழிப்புவந்தவனாய்.
"ச்ச எல்லாம் கனவா?" எனக்கு நானே கேட்டுக்கொள்ள, சட்டையை பிடித்து பக்கத்தில் இழுத்தவள்.
"உண்மையை சொல்லுங்க, கனவுல மீரா ஜாஸ்மின் கூட கொஞ்சல்ஸ் தானே?" அகிலா கேட்க, ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் யோசித்த எனக்கு ஒருவாறு எல்லாம் புரிந்தது.
"ச்ச உனக்கு வேற வேலையேயில்லை, எப்பப்பாரு கொஞ்சல்ஸ், கொஞ்சல்ஸ்ன்னுக்கிட்டு..." சொல்லிக்கொண்டே அவளை பக்கத்தில் இழுக்க கையை தட்டிவிட்டவள்.
"தெரியுமே உங்க உள்குத்து அரசியல் நல்லாவே தெரியுமே எனக்கு. வேணாம்பா நீங்க பேசாம தூங்கி, கனவில மீரா ஜாஸ்மீன்கிட்ட கொஞ்சுங்க எனக்கு நிறைய வேலையிருக்கு." சொல்லிவிட்டு விறுவிறுன்னு நகர்ந்தவளை தடுக்க விரும்பாமல் அப்படியே விட்டுவிட்டேன். சிக்மண்ட் ப்ராய்டின் இன்டர்ப்ரட்டேஷன் ஆப் டீரீமஸ் படித்துவிட்டு இன்னும் குழம்பிப்போய் இருந்தவனுக்கு இன்றைக்கு வந்த கனவு ஏதோ பாடம் நடத்துவது போல் இருந்தது. நேற்றிரவு விடாப்பிடியாய், லேட்நைட் ஷோவும் பிகினி ஓப்பனும் பார்த்துக் கொண்டிருக்க, கோபம் வந்தவளாய் ரிமோட்டை பிடுங்கி உடைத்துவிட்டு,
"இங்கப்பாருங்க உங்களுக்கு கொஞ்சம் அதிகமாய் உரிமை கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன். கொஞ்சம் ஓவராய்த்தான் பண்றீங்க. திரும்பவும் இப்படி பண்ணீங்கன்னா நானும் கேட்வாக் பண்ண போய்டுவேன் பார்த்துக்கோங்க."
ஏதோ கோபத்தில் அவள் சொன்ன அந்த விஷயம் அப்படியே மனதில் பதிந்து இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது ஆச்சர்யமாய் இருக்கிறது. அப்படியே அச்சுஅசலாய் நேரில் நடந்ததைப் போலிருந்தது, அதே ஆட்கள் அதே உருவம், அதே வயதில், அம்மா, பையன் பவானி ஆச்சர்யமாய் இருந்தது. இந்த கனவைப்பற்றி அவளிடம் நிச்சயமாய்ச் சொல்லக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டவனாய் இருமுறை உடம்பைக் குலுக்கிக்கொண்டேன்.
"பாஷன் ஷோவில் கலந்து கொள்வது உங்களுக்குத் தேவிடியாத்தனமா பட்டுச்சா? ஆயிரம் ஆயிரம் வருஷமா அடிமையா வச்சிருந்தது போதாதா. இப்பத்தான் சுதந்திரமா எங்களுக்கு விருப்பமானதை உடுத்திக்கிற உரிமை வந்திருக்கு. அதுக்குள்ளயே இவ்வளவு பிரச்சனையா? அது ஒரு ப்ரோஃபஷன் இல்லையா அதை எப்படி தப்பா பார்க்கலாம்.
அப்படியே நான் மிஸஸ் வேர்ல்ட்ல் கலந்து கொண்டால் என்னை தள்ளி வைச்சிருவீங்களோ, என்ன அநியாயமாய் இருக்கு. நாளைக்கு நீங்க வேட்டிக்கட்டிக்கிட்டு கோயிலுக்கு போறீங்க ஏதோ தடங்கல்ல வேட்டி சிக்கி அவிழ்ந்திருது அதுக்காக உங்களை நான் டைவர்ஸா பண்ணுவேன். நல்ல வேடிக்கையாய் இருக்கு. பாதியை மட்டும் சொல்லிட்டு மீதியை மறைக்கிறீங்கன்னு நினைக்கிறேன். அத்தம்மாவுக்கு நீங்களே எடுத்து கொடுத்திருப்பீங்க, ‘கற்புங்கிறது ஒரு கடப்பாரை...’ அது இதுன்னு"
அன்றிரவு கொஞ்சம் தனிமையாய் அழகாய் அமைந்த ஒரு இரவில் மெதுவாய் இந்த கனவு விஷயத்தை சொல்லப்போய் அது பிள்ளையாரைப் பிடிக்கப்போய் குரங்கான கதையாய் ஆகியது. இதை சரிகட்ட நினைத்தவனாய்,
"இங்கப்பாரு அகிலா, என் கனவில வந்ததுங்கிறதால அப்படித்தான் நான் நினைப்பேன்னு நீ நினைக்கிறியா. சிக்மண்ட் ப்ராய்ட் கனவுகளை மூணுவிதமா பிரிக்கிறார் தெரியுமா. அதில் ஒரு விதத்தில் நாம் அதீதமாய் வெறுக்கும் விஷயங்கள் கனவில் வரும்னு சொல்றார். புரிஞ்சிக்கோம்மா நடந்தது நான் அதீதமாய் வெறுக்கும் விஷயத்தில் ஒன்று.
அதுமட்டுமில்லாமல் பாதியில கனவை கலச்சிட்டியா அதனால நான் அம்மாக்கிட்ட என்ன சொல்லவந்தேன்னே யோசிக்க முடியலை..." இப்படி நான் சிக்மண்ட் ப்ராய்டை எல்லாம் வம்புக்கிழுத்து சமாளித்துக் கொண்டிருக்க. அவளது கோபம் சிறிதும் குறைந்ததாய் தெரியவில்லை.
In இப்படியும் ஒரு தொடர்கதை கடப்பாரை கற்பு
கற்புங்கிறது ஒரு கடப்பாரை...
Posted on Wednesday, April 29, 2015
கற்புங்கிறது ஒரு கடப்பாரை...
பூனைக்குட்டி
Wednesday, April 29, 2015
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
மோகன் இந்தக் கதையை நேற்றே படித்து விட்டேன். நேரமின்மையால் ஒரு பிளஸ் போட்டு விட்டு இன்று வந்து பின்னூட்டம் இடுகிறேன்.
ReplyDeleteமுடிவு சொல்லாமல் கதை சொல்வது என்று ஒரு பாணி உண்டு. இதுவும் அப்படித்தான். எல்லாருடைய பார்வையையும் சொல்லி விட்டு முடிவை படிக்கிறவர் முடிவுக்கே விட்டு விடுவது. நல்ல கதை. ரசித்துப் படித்தேன்.
ஆமாம் இதற்கான முடிவை நான் தரப்போவதில்லை தான். ஆனால் தொடர்கதை. ஹிஹி.
ReplyDeleteரொம்ப நல்ல நடைல சொல்லி இருக்கீங்க. தொடர்கதையா..ரொம்ப இழுத்துறாதீங்க.
ReplyDeleteஆகா இதை எங்கேர்ந்து விட்டேன். சிவா ரொம்ப நன்றி. இந்த தொடர்கதையின் சாராம்சம் சீக்கிரம் புரிந்திடும்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஇந்த கதையை முன்னமே படிச்ச மாதிரி இருக்கே, தாஸ் என்ன குழப்பம் இது?
ReplyDeleteஉஷா இது மீள்பதிவு வாரம். ஹிஹி.
ReplyDeleteகதை நல்லாருக்குங்க மோகண்தாஸ்...
ReplyDeleteகனவுகளை மையப்படுத்தி வரும் எத்தனைக் கதைகளைப் படித்தாலும் அலுக்காது போல :))
அனானிமஸ்,
ReplyDeleteஆமாம்.
நல்லாவேயில்லை இந்த கதை போகும் பாதை
ReplyDeleteநன்றிகள் அனானி.
ReplyDeleteபாஷன் ஷோவில் கலந்து கொள்வது உங்களுக்குத் தேவிடியாத்தனமா பட்டுச்சா? ஆயிரம் ஆயிரம் வருஷமா அடிமையா வச்சிருந்தது போதாதா. இப்பத்தான் சுதந்திரமா எங்களுக்கு விருப்பமானதை உடுத்திக்கிற உரிமை வந்திருக்கு. அதுக்குள்ளயே இவ்வளவு பிரச்சனையா? அது ஒரு ப்ரோஃபஷன் இல்லையா அதை எப்படி தப்பா பார்க்கலாம்.--
ReplyDeleteயாரு எழுதிக்கொடுத்த இதை.
Nice Try, Anony.
ReplyDeleteI do can put a feminist cap and write.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
ReplyDelete