வெளியில் சென்று வந்ததும் என்று நினைக்கிறேன் உள்ளே மாலன் வலை நன்னடத்தை தலைப்பில் பேச ஆரம்பித்திருந்தார். அதற்கு முன் ஒரு வார்த்தை, முன்னால் நடந்த ஒரு விவாதத்தில் இராம.கி அய்யா ஈழத்தமிழர் இல்லையென்றால் தமிழ் இணைய உலகில் இத்தனை தூரம் வளர்ந்திருக்குமா தெரியாது என்று சொல்லியிருந்தார். கான்டெக்ஸ்ட் - மா.சிவக்குமார் தான் வெளிநாட்டில் இருக்கும் பொழுது தான் தமிழ் பற்றிய உணர்வு வந்ததாகச் சொல்ல இன்னும் சிலரும் அந்தக் கருத்தில் பதில் சொல்ல, இராம.கி அய்யா ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையில் உறவினர்கள் பலரும் பல இடங்களில் இருக்க வேண்டியிருக்கும் நிலையைச் சொல்லி அதன் காரணமாக அவர்களின் தமிழ் மீதான ஈடுபாடு அதிகாகயிருக்கும் என்று சொன்னார்.
முன்பே மாலன் அவர்கள் தன் பதிவுகளில் பேசியிருந்த விஷயங்களான, தனிப்பதிவுகளில் இருக்கும் பொழுது கூட ஒருவர் என்ன விஷயம் பேசுகிறார்(கருத்து சுதந்திரத்தை) என்பது பெரிய விஷயமாயிருக்காது என்றும் அவரே ஒரு திரட்டியில் இணைந்து மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் பொழுது கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார் என்று சொன்னார். எவர் ஒருவருக்கு பொறுப்புணர்ச்சி அதிகமாக இருக்கிறதோ அவருக்கு சுதந்திரமும் அதிகம் இருக்கலாம் என்றும். பொறுப்புணர்ச்சி இல்லாத சுதந்திரம் சரியான ஒன்றாய் இருக்காதென்று சொன்னார். உதாரணமாய் தனியாய் வீட்டில் அலையும் பொழுது நிர்வாணமாக இருக்க நினைக்கும் ஒருவருக்கு தன்னுடைய மனைவி முன்னால் கூட அப்படி நிற்க மனது வராதென்றும் இந்த விதமான உணர்வு எழுத்திலும் இருக்கவேண்டும் என்று சொன்னார்.
நாளிதழ்களில் இருக்கும் பிரச்சனைகளைக் கூறிய மாலன் அதை ஒப்பிட்டு வலைபதிவுகளால் என்ன விதத்தில் நன்மைகள் அதிகம் என்று சொன்னார். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டது வாசகர் கடிதம். பொதுவாகவே எல்லா இடங்களிலும் கட்டற்ற சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் செல்லா அவருடைய இருக்கையில் இருந்தே துடித்துக் கொண்டிருந்தார் கட்டுப்பாடுடைய சுதந்திரத்தை வம்பிழுக்க. அந்தச் சமயத்தில் வளர்மதி இந்தக் கருத்தை(மாலனுடையதை) சரியென்பது போல்(ஆள் பின்நவீனத்துவவாதி - கொஞ்சம் போல் சுத்திச் சுத்தி புல்ஸ்டாப் இல்லாமல் பேசினார் என்னால் ஃபாராகிராப்களைத் தாண்டி கவனம் செலுத்த முடியவில்லை) செல்லா உடனே எழுந்து, "நான் வலை உலகில் எழுதுவதை யாரால் கட்டுப்படுத்த முடியும் உங்களால் முடியுமா?" என்று வளர்மதியைக் கேட்டார். பின்னர் மாலனிடம் "நாம் முன்பே வலைப்பதிவுகளில் பேசிய இந்த விஷயத்தை இங்கேயும் தொடர விரும்பவில்லை" என்றார்(கான்டெக்ஸ்டாக நான் நினைப்பது மாலன் எழுதிய பொழுதே செல்லா - கட்டுப்பாடுடைய திரட்டியைப் பற்றி மாலன் எழுதியது - அதை மறுத்து எழுதியிருந்தார். மாலன் திரும்பவும் மேடையில் கட்டுப்பாடுடைய திரட்டி பற்றி இடையில் கோடிட்டார் அதனால் சொன்னார்) கட்டுப்பாடுடைய சுதந்திரம் சரிவராது என்று சொன்னார்.
இப்படி போய்க் கொண்டிருந்த விவாதம் அப்படியே முற்றுப் பெற்றிருந்தால் சந்தோஷம் ஆனால் பத்ரி கடைசி கேள்வி என்று சொல்லி வளர்மதியிடம் நகர்ந்த பிறகு மாலன், "கருத்துச் சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுறோம் அதனால இதையும் சொல்லலாம் தப்பில்லை, பெயரிலி ஒரு பதிவில் இராமைப் பற்றி பேசும் பொழுது அவருடைய மகளைப் பற்றிக் கேள்வி எழுப்பினார்," (அது தப்புன்னோ என்னவோ சொன்னார் எனக்கு நினைவில் இல்லை.)
என்று சொல்லி இராமின் மகளின் படிப்பை கொஞ்சம் டிபண்ட் செய்தார். இதில் தான் கடைசியில் சொன்னது, ஈழத்தமிழர்கள் இலங்கைப் பாஸ்போர்ட்டுடன் இருக்கும் முரணையும் இராமின் மகள் கொலம்பிய யுனிவர்சிட்டியில் படிப்பதையும். அவர் அதைச் சொல்லிவிட்டு சட்டென்று அடுத்த டாபிக்கான வலை உலகில் இருந்து எழுத்தாளர்கள் மாயமான காரணத்தை விளக்கத்தொடங்கினார். இதனால் உடனே இதைப் பற்றிய கேள்வி கேட்கும் வாய்ப்பை இதனால் நான் தவறவிட்டேன் ஏனென்றால் சுஜாதா கூட ராகாகியில் எழுதியது எனக்குத் தெரியும் அதனால். அதுவும் இல்லாமல் பத்ரி மைக் உடன் வளர்மதியிடம் நின்றார்.
திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவே சற்று நேரமானதால் மாலனின் எழுத்தாளர்கள் வெளியேறியதைப் பற்றிய பேச்சு பற்றி கான்டெக்ஸ்டிற்கு அப்பால் கூட சரிவர நினைவில் வரமறுக்கிறது. வளர்மதி இன்னொரு கேள்வியைக் கேட்டு முடிக்க, நான் தொடங்கினேன். முதலில் மைக் இல்லாமலும் பின்னர் மைக்குடனான சுய அறிமுகத்தோடும்
"எப்படி ஜார்ஜ் புஷ் ஒரு விஷயத்தைப் பற்றி பேச முடியாதோ; ஜார்ஜ் புஷ் இன்னொரு நாட்டிடம் சென்று சண்டை போடாதே என்று சொல்வது எப்படி தவறாக இருக்கும் இல்லையா? அது போல் யார் எந்தக் கருத்தைச் சொல்கிறார்கள் என்று பார்க்கும் பொழுது அவருடைய பின்புலம் பார்க்கப்படுவது ஒன்றும் பெரிய பிரச்சனை கிடையாது..." என்று சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே மா. சிவக்குமார் அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய இடம் இது இல்லை என்று சொல்லிவிட்டார். நானும் விட்டுவிட்டேன்.
பின்னர் எழுந்த இன்னொரு நபர், மாலன் சொன்ன எழுத்தாளர்கள் விலகியதைச் சொல்லி; நீங்க ஒரு செட் ஆப் மக்களுக்காகத்தான் எழுதுவதாக இருந்தால் பிரச்சனை இல்லை என்றோ இன்னும் சிலவற்றைச் சொன்னார். உடனே மா.சி மாலன் வலைபதிவுலகத்தை விட்டு வெளியேறியதற்கு காரணம் வேறு என்று சொல்லி அவரையும் நிறுத்திவிட்டார். பின்னர் அந்த விவாதம் அங்கோடு முற்றுப்பெற்றது.
பின்னர் லக்கிலுக்கின் - வலைபாதுகாப்பு பற்றிய அறிமுகம் தொடர்ந்தது. நான் வெளியில் கதவின் அருகில் நின்று கொண்டிருந்த பிரகாஷிடமும் மா.சியிடமும் இது சரியில்லை ஆளில்லாதப்ப அவரைப் பத்தி பேசக்கூடாது என்று மட்டும் சிரித்தபடி சொல்லிவிட்டு நகர்ந்தேன். பக்கத்தில் இருந்த என்னுடைய நண்பர்கள்(பெயரைச் சொல்ல விரும்பவில்லை) என்னை மட்டுறுத்தியதைச் சொல்லிக் காட்ட; நான் இங்கே உறுத்திவீர்கள் நாளை பதிவில் எழுதுவேன் என்று சொன்னேன் இரண்டு நாளானாலும் எழுதிவிட்டேன்.
நாகூர் இஸ்மாயில் பின்னர் வலைபாதுகாப்பைத் தொடர்ந்து முடிக்க மதிய உணவிற்காக பட்டறை உணவு இடைவேளை விடப்பட்டது. சாப்பாடு பட்டறை நடத்தியவர்களாலேயே வழங்கப்பட்டது, நான் கேட்க நினைத்து கேட்காமல் போன கேள்வியான கூப்பன் வாங்காதவங்களுக்கெல்லாம் சாப்பாடிற்கு, மா.சி பதில் சொல்லியிருந்தார் சாப்பாடு கூப்பன் இல்லாவிட்டாலும் சாப்பாடு தரப்படும் என்று.
ஆரம்பத்தில் இருந்தே முதல் முறையாக பட்டறை நடத்துகிறார்கள் என்ற எண்ணம் துளி கூட வராத அளவிற்கு பட்டறை நடத்தியவர்களின் செயல்பாடுகள் இருந்தன. நிறைய இடங்களில் "ச்ச எப்படி யோசிச்சு செஞ்சிருக்காங்க" என்று புருவம் தூக்கிக் கொள்ளும் கேள்விகள் வரும் அளவிற்கு நிறைய விஷயங்களைச் சின்ன சின்ன விஷயங்களானாலும் சரி பெரிய விஷயமானாலும் சரி செய்திருந்தார்கள். அவர்களுக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள், பட்டறைக்கு கீறிக் கூட ஒன்றும் செய்யவில்லை என்றாலும், சிறு சிறு நாடகங்கள் நடத்தி கல்லூரிகளில் விழாக்கள் நடத்தி - பங்குபெற்றவன் ஆதலால் நிச்சயமாய் அவர்கள் செய்திருந்த முன்னேற்ப்பாடுகள் பற்றி ரொம்பவும் பெருமையாகவே சொல்லமுடியும். நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும்...
ஏனென்றால் பதிவுலகத்தில் ஒருவருடைய கருத்தை தவறேன்று சொல்லும் பெரும்பான்மையான சமயங்களில் அது தனிநபர்த் தாக்குதல் போல் தோற்றமளித்து அந்த நபர் நமக்கு எதிரியாகும் சூழ்நிலைகள் அதிகம் உண்டு. எனக்கு டிஸ்க்ளெய்ம்பர் போடுவது என்னவோ ரொம்பவே உறுத்தினாலும் வேறுவழியேயில்லை என்பதால்; இங்கே நான் வைத்திருந்த கேள்விகள் முதற்கொண்டு கருத்து சார்ந்தவைதானே தவிர தனிநபர் சார்ந்தவை அல்ல. மா.சிவக்குமாரின் மட்டுறுத்தலை பலசமயம் நானே ரசித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பரிடம் சுட்டிக் காட்டிக் கொண்டும் இருந்தேன் என்பது உண்மை.
அம்மா என் வீட்டில் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார்கள் ஏண்டா உங்களுக்கெல்லாம் பாராட்டுறதுங்குறே தெரியாது வெறும் குற்றம் கண்டுபிடிக்கிறது மட்டும் தான் தெரியுமா என்று, அதென்னமோ டீச்சர் வீட்டுப் பிள்ளையானதாலோ என்னவோ பாராட்டுதல்களை விடவும் குற்றம் கண்டுபிடிப்பது அதிகம் இருக்கும். அதனால் இத்தனை அருமையான ஏற்பாடுகளைச் செய்திருந்த பட்டறை நடத்துபவர்களை பாராட்டாமல் குற்றம் மட்டும் சொல்வது அயோக்கியத்தனம் என்று உள்மனம் சொல்வதால் பாராட்டுகிறேன். அந்தப் பாராட்டுதல்களுக்கு முற்றிலும் தகுதியானவர்களே பட்டறையை நடத்தியவர்கள்.
PS: சொல்லப்போனால் இந்த டிஸ்க்ளெய்ம்பரும் பாராட்டும் கடைசி பதிவில் போட்டிருந்தால் தான் நன்றாகயிருந்திருக்கும். ஆனால் இந்தப் பதிவில் பேசப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு தேவைப்படும் என்றே மனம் சொல்கிறது.
PS1: எழுதியவைகள் என் நினைவில் இருந்து எழுதியவையே தவறிருக்கிறது என்று சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.
தொடர்வேன்...
பதிவர் பட்டறை என் பக்கத்துக் குறிப்புகள் - 1
Posted on Wednesday, August 08, 2007
பதிவர் பட்டறை என் பக்கத்துக் குறிப்புகள் - 1
பூனைக்குட்டி
Wednesday, August 08, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
மன்னிக்க அன்பரே,
ReplyDeleteயாம் பின்நவீனத்துவவாதி என்று தங்களுக்கு யார் சொன்னது ! தயவு செய்து கெஞ்சி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ... எனக்கு எந்த 'வியாதியும்' இல்லை :)
அப்புறம் எனக்கு பொதுவாகவே கூட்டங்களில் சரியாகப் பேச வராது. எழுதுவது பிரச்சினையாக இருந்ததில்லை. பேசுவது, அதிலும் கூட்டங்களில் ... திக்கித் திணறி கடைசியில் அது உளறலாக முடிந்ததே அனுபவம். சில நேரங்களில் சில தெறிப்புகளை வீசிவிட்டு நகர்ந்துவிடுவேன். அவை யாரையாவது யோசிக்க வைக்கும் என்ற சிறு நம்பிக்கையோடு.
அது சரி ... ஃபுல் ஸ்டாப்புகளோடு பேசுவது எப்படி? அடியேனுக்கு சற்றே அறிவொளியேற்றுங்களேன் :)
நன்றி.
அன்புடன்,
வளர்மதி ...
வளர்மதி,
ReplyDeleteபின்நவீனத்துவபிரதியைப் பற்றிய கேள்விகளை எழுப்புபவர்களை நாங்கள் பின்நவீனத்துவவாதி என்று தான் சொல்வோம். நீங்கள் டிசே தமிழனின் பின்நவீனத்துவம் பற்றிய இடுகையை முழுவதுமாகப் படித்தீர் என்று வேறு படித்ததாக நினைவு. அப்பன்னா சந்தேகமேயில்லை; உங்களுக்கு அந்த வியாதி இருக்கு.
அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே அந்த வியாதி இருப்பதாக சொல்லப்பட்ட படுகின்ற ஒருவர் உங்களை எனக்கு பின்நவீனத்துவவாதி என்று அறிமுகப்படுத்தினார். நண்பரின் பெயர் வேண்டாமே!
உங்களை நக்கல் அடிக்கும் நோக்கம் என் எழுத்தில் இல்லை. நான் சொல்லவந்தது எழுதும் பொழுது ஒரு ஃபாராகிராப் முழுவதும் ஃபுல்ஸ்டாப் வைக்காமல் எழுதினால் திரும்பவந்து பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் வாழ்க்கையில் முதல்வன் அர்ஜுன் அப்பா சொல்ற மாதிரி ஃபார்வேர்ட் பேக்வேர்ட் பட்டன் கிடையாது.
சின்ன சின்ன சென்டென்ஸா, விட்டுவிட்டுப் பேசினா புரியவரும் அப்படிங்கிறதால சொன்னது, நீங்க எழுதுற மாதிரியே பேசுறீங்க...
//சில நேரங்களில் சில தெறிப்புகளை வீசிவிட்டு நகர்ந்துவிடுவேன். //
ReplyDeleteவளர்மதியண்ணே!
சென்னை வலைப்பதிவர் சந்திப்பு முதன்முறையாக நாகேஸ்வர பூங்காவில் நடந்தபோது நீங்கள் வீசிய "கண்ணீர் புகை குண்டை" இப்போது கூட நினைத்துப் பார்க்கிறேன்! :-)))))
//சென்னை வலைப்பதிவர் சந்திப்பு முதன்முறையாக நாகேஸ்வர பூங்காவில் நடந்தபோது நீங்கள் வீசிய "கண்ணீர் புகை குண்டை" இப்போது கூட நினைத்துப் பார்க்கிறேன்! :-)))))
ReplyDelete//
மிஸ்டர்.லக்கி, பொது வலைப்பதிவர் சந்திப்பு என்று சொல்லவும். அதுவரை குழு வலைப்பதிவர் சந்திப்புக்கள் தான் நடந்துள்ளன.
சந்திப்பு பற்றி எல்லோரும் எழுதலாம், எழுதனும் என்று சொன்ன சந்திப்பு அது.
நண்பர் மோகந்தாஸ்,
ReplyDeleteபின்நவீனத்துவப் பிரதிகளைப் பற்றி பேசுபவர்களெல்லாம் பின்நவீனத்துவ வாதிகள் என்ற உங்கள் எண்ணத்தைப் பற்றி என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உங்கள் புரிதல் அப்படியாக இருந்தால் அதைச் சற்றே தளர்வாக வைத்திருங்கள். ஒருவேளை மேலும் சற்று ஆழமான புரிதல்களை நோக்கி நகரும்போது இந்தத் தளர்வு மிகவும் உதவியாக இருக்கும்.
என் புரிதலில் குறைந்த பட்சமாக, பின்நவீனத்துவம் என்பது மார்க்சியம் போன்று ஒரு 'இசம்' அல்ல. அது ஒரு தத்துவமும் அல்ல. இலக்கிய வரலாற்றில் எழுந்த ஒரு போக்கு. (சமூக அளவில் இன்னும் நிறைய சிக்கலான அம்சங்கள் இதற்கு உண்டு). அதற்கு இணையாக வேறு சில போக்குகளும் நம் சமகாலத்திலேயே நிலவுகின்றன. அது மட்டும் ஒரு fashion ஆகிவிட்டது. அதனாலேயே மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறேன்.
அப்புறம், நிறைய அரைவேக்காடுகள் அதைப் பற்றிப் புரிந்துகொள்ளாமலேயே பேசிப் பேசி பெரும் குழப்பங்களையே விளைவித்துள்ளார்கள்.
இவ்விஷயங்களையெல்லாம் விளக்கி எழுத வேண்டிய தேவை இருக்கிறது.
நேரம் தான் வாய்க்கவில்லை. ஏற்கனவே நான் எழுதியுள்ளவற்றை கவனித்தாலே சில விஷயங்கள் பிடிபடலாம்.
வேறென்னெ ... :)
உங்களுடைய ஆர்வம் எனக்குப் பிடித்திருக்கிறது.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
வளர்மதி