நான் பிறந்தது, வளரந்தது, படித்தது எல்லாமே திருச்சி தான், வரலாற்று முக்கியத்துவமிக்க ஊர். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள். ஒரே ஒரு அக்கா, மோகன வள்ளி. பெயர் மற்றும் இல்லை பலவற்றில் எங்களுக்குள் ஒற்றுமை உண்டு, அதே போல் பல வேற்றுமைகளும் உண்டு.
ஒன்றும் பணக்கார வீடு கிடையாது, சாதாரணமான நடுத்தர குடும்பம் தான் இன்னும் சொல்லப்போனால் சிறு வயது ஞாபகங்கள் கொஞ்சம் கஷ்டமானவைதான். ஆனால் அவை தேவையில்லை இங்கே. படித்தது அப்பாவினுடைய பள்ளியில் எவ்வளவு நன்மைகள் உண்டோ அதே அளவு தீமையும் இருந்தது. ஓரளவுக்கு படிக்கக்கூடிய மாணவன் நான். படிப்பை தவிர விளையாட்டு, பேச்சு, ஓவியம் ஆகியவற்றிலும் ஆர்வம் இருந்ததால். படிப்பில் முதன்மையானவன் இல்லையே தவிர. என்றுமே நான் படிப்பில் பின் தங்கியதில்லை.
பத்தாம் வகுப்பில் நான் நிறைய மார்க் வாங்குவேன் என்று எல்லோரும் நினைத்த பொழுது, 80 சதவீதம் தான் வாங்கினேன். அதை விட முக்கியமான பன்னிரெண்டாம் வகுப்பில் 70 சதவீதம் வாங்கி பொறியியலின் அத்தனை வாய்ப்புக்களையும் நழுவ விட்டேன். இந்த முறை கூட நான் அதிக மார்க் வாங்குவேன் என்று எதிர்பார்த்தவர்கள் தான் அதிகம்.
பிறகு நான் வாங்கிய மதிப்பெண்ணுக்கு ஏற்ற மாதிரி கிறிஸ்துராஜ் கல்லுரியில் சேர்ந்தேன். கணிப்பொறி அறிவியல் படிக்க, இங்கே நான் கற்றுக் கொண்டது அதிகம். மூன்று ஆண்டுகள் படித்து முடித்து விட்டு நான் சென்றது புது டெல்லிக்கு வேலை வாங்குவதற்காக. அங்கே நான் தங்கியிருந்தது என்னுடைய சித்தியின் வீட்டில். சாப்பாடிற்கு, தங்குவதற்கு என்று ஒன்றுமே கொடுக்காமல் தான் இருந்தேன். இங்கே கற்றுக் கொண்டது அதிகம். வாழத் தெரிந்து கொண்டேன் என்றால் சரியாக இருக்கும்.
பிறகு அங்கிருந்து நான் வந்தது பெங்களுருக்கு, இங்கேயும் வேலை காரணமாகத்தான். இங்கே தங்கியது மாமாவின் வீட்டில். இங்கேயும் அனைத்தும் இலவசம். மிகவும் மகிழ்ச்சியான நாட்கள். பிறகு இப்போது கேன்பே சாஃப்ட்வேரில் வேலை பார்த்துக் கொண்டு புனேயில் இருக்கிறேன். இங்கே தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் நானே செலவழித்துக் கொண்டிருக்கிறேன் சொந்தக்காரர்கள் யாரும் அருகில் இல்லாத காரணத்தால்.
என்னைப் பற்றி
பூனைக்குட்டி
Monday, August 01, 2005
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
கேள்வி கேட்பவர் - சார்! சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே! ஏ...
-
எனக்கு ஜெயமோகன் அறிமுகமானது அவ்வளவு நல்லவிதமாகயில்லை. தீவிர திமுக குடும்பத்தில் பிறந்தவன், பராசக்தி, மனோகரா போன்ற வசனங்களைப் பேசியே புகழ்பெற...
-
ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் - மிகவும் மனநிறைவைத் தந்த சந்திப்பு. ஆர்கனைஸ் செய்தவர்களுக்கு நன்றிகள்.
\\இங்கே தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் நானே செலவழித்துக் கொண்டிருக்கிறேன்\\
ReplyDeleteha ha appuram
இப்பத்தான் பார்க்குறேன் இதை ஹிஹி
ReplyDeleteநானும் இப்பத் தான் பாக்குறேன்....!!!
ReplyDelete