Showing posts with label சொந்தக் கதை. Show all posts
Showing posts with label சொந்தக் கதை. Show all posts

In சுய சொறிதல் சொந்தக் கதை

இரண்டு வருஷம் தான் ஆச்சுதா

நான் வலைப்பூ உலகில் காலடி எடுத்து வைத்தது ஆகஸ்ட் 2005; ஆக இரண்டு வருஷம் ஆச்சுது. என்ன எழவ சாதிச்சேன்னு என்ற கேள்வி எழும் பொழுது "நான் ஏன் பிறந்தேன்" அப்படிங்கிற கேள்வி எழுற மாதிரி எழுதினேன் அப்படின்னு பெருமையா சொல்லலாம். ;-) நிறைய நட்பைச் சம்பாதித்திருக்கிறேன் அப்படியே விரோதத்தையும் எப்படி நட்பு நாம் கேட்காமலே கிடைக்கிறதோ அதைப் போன்றே விரோதமும்.

இரண்டு மூணு பேர் உங்களாலத்தான் பதிவுலகத்திற்கு வந்தேன் என்று சொல்லும் பொழுது திகிலாயிருக்கிறது. பின்னாடி பதிவுலகம் சரிவரலைன்னதும் அடிக்க வந்திடுவாங்க்யலோன்னு :). மற்றபடிக்கு இரண்டறை வருஷத்துக்கு முன்னாடி எழுதின "ஒரு காதல் கதை" யை அப்பப்ப யாராவது படிச்சிட்டு சூப்பராயிருக்கு - ஆனா அப்படி ஒரு முடிவை வைத்திருக்கக்கூடாதுன்னு சொல்றப்ப மட்டும் அப்படியே காற்றில் பறக்குறது மாதிரியிருக்கும். ஹிஹி.

2005 மற்றும் 2006ல் வெறும் 75 & 76 பதிவுகள் போட்டதாக கணக்கு சொல்லுது; இந்த வருஷம் இப்பவே 150 ஐ தாண்டிடுச்சு. இது இல்லாமல் பூனை வேற; அப்பப்ப, அதை ஏன் தொடங்க வேண்டி வந்ததுன்னு சமீபத்தில் நடந்த ஒரு பெங்களூர் இரகசிய சந்திப்பில் கலந்துகொண்ட ரகசிய பதிவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவ்வளவு சுவாரசியமாக அதை அவர்கள் கேட்டதாக நினைவில் இல்லை. ஆனால் அந்தப் பதிவை தொடங்கியதன் காரணம் போய் இப்ப என்னவோவாக வந்து நிற்கிறது. ஆனால் மாற்றம் என்பது மாறாத்தத்துவம் இல்லையா சல்தா ஹை.

ஒரு விஷயம் தான் மலைப்பாயிருக்கு - நான் இங்க வந்து இரண்டு வருஷம் தான் ஆகுதா??? என்பதுதான் அது.

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In Only ஜல்லிஸ் சினிமா சினிமா விமர்சனம் சொந்தக் கதை

பொறுக்கி பேரைச் சொன்னா அப்படித்தான் அதுறும்

இன்னொரு முறை சிவாஜி பார்க்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. Live Free or Die Hard நாளை Inoxல் ரிலீஸ். ரொம்ப சீரியஸான ஒரு மேட்டர் பத்தி gmail chat ல் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, எதிர்பக்க நபர் brb போட, அதே சமயத்தில் சரியாய் ரொம்பவும் வேண்டிய நண்பர்; Die Hard 4.0 டிக்கெட் வாங்கிட்டியான்னு பிங் பண்ணினார். இல்லைன்னதும் தலையிலடித்துக் கொண்டவர், சரி கிளம்பு டிக்கெட் புக் பண்ணிக்கிட்டு சிவாஜி படம் பார்த்துட்டு வரலாம்னு சொன்னார்.

எனக்கு ரொம்பவும் ஆச்சர்யம், தலைவர் பின்நவீனத்துவத்தை கிழித்து கயிறு கட்டி தொங்கவிடுபவர். ரஜினி படம் பார்க்கப் போகலாம்னு சொன்னதும் எனக்கு ஆச்சர்யம். இன்னிக்கு ஜகஜ்ஜோதியா இருக்கும்னு நினைச்சிக்கிட்டு கிளம்பினேன். எங்க நேரம் Die Hard 4.0 டிக்கெட்டும் ஈசியா கிடைச்சது அப்படியே சிவாஜியும். ஒரு சின்ன அப்டேட் இன்னிக்கும் சிவாஜி ஷோ பெங்களூர் ஐநாக்ஸில் ஹவுஸ் புல். பக்கத்தில் உட்கார்ந்து படத்தைப் பற்றி கமெண்ட்ஸ் மட்டும் ஆங்கிலத்தில் அடித்துக் கொண்டு பிகர்கள் மூன்றை வைத்து என்னதான் இருக்கு சிவாஜியில் அப்படின்னு பார்க்கவர்ற ஆட்களின் கூட்டம் குறையவேயில்லை. நாளை நாளான்னிக்கு அதுக்கு அடுத்த நாள் இப்பவே ஹவுஸ் புல். முதலில் சௌந்தர்யா ரஜினிகாந்த் எடுத்திருக்கும் "சுல்தான்" பிரிவ்யூ போட்டாங்க; 2008ல் ரிலீஸாம் இப்பவே ப்ரிவ்யூ. எல்லாம் குளிர் காஞ்சிக்கிறாங்க ரஜினியோட சூட்டுல ;). (நம்மைப் போலன்னும் வச்சிக்கலாம்.)

Grrrrrr. சரியான இடம் கிடைத்திருந்தது. எங்களுக்கு வலது பக்கம் மூணு பிகர்கள், இடது பக்கம் இரண்டு பிகர்கள். மொத்தம் ஐந்தா வந்தவங்க தானாம், டிக்கெட் இப்படி கிடைச்சிருச்சு அப்படின்னு சொல்லி, can you take the other seat's அப்படின்னு கேட்க நான் ஜொள்ளு வடிஞ்சபடி எழுந்திருச்சேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் தொடையில் கையை வைத்து அழுத்தி உட்காரவைத்து. Are you ordering us? னு கேட்க என் காதில் புகைவந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். Its okay yahh we can manage அப்படின்னு பிகர்கள் முடியை சிலிப்பிக்கிட்டு அவங்கவங்க இடத்தில் உட்காரப்போக. நண்பர், this is not the way of requesting someone. அப்படின்னு சொல்லி நீங்க சொன்ன சென்டென்ஸில் please ஏ இல்லை. இப்படியா ரெக்வெஸ்ட் பண்ணுவாங்க அப்படின்னு கேட்டுக்கிட்டே பக்கத்தில் இருந்த சீட்டில் உட்கார்ந்தார். நானும் வழிவதை தொடைத்தபடியே உட்கார்ந்தேன் இன்னொரு புறம்.

படம் ஆரம்பித்தது, SUPER STAR அப்படின்னு பெயர்கள் திரையில் தோன்ற பக்கத்தில் இருந்து பிகில் சத்தம். எனக்கு ஆச்சர்யமாய்ப் போய் திரும்பிப் பார்த்தால் நண்பர் தான் சப்தமாய் விசிலடித்துக் கொண்டிருந்தார். சாதாரணமாய் மிகக்கேவலமாய் ரிவ்யூ செய்பவர் ரஜினி படங்களை இங்கே பெயர் போடும் பொழுதே விசிலடித்ததும் எதோ உள்குத்து என்று நினைத்தேன். படத்தில் ஒவ்வொரு பஞ்ச் டயலாக்குக்கும் இவர் தான் சப்தம் போடுவதை துவங்கி வைப்பது, அப்படியே அது தியேட்டர் முழுவதும் தொடர்ந்தது. பல்லேலக்கா, பல்லேலக்கா பாட்டுக்கு எழுந்து ஒரு டான்ஸ் ஸ்டெப் போட, நான் அவரை அமுக்கி உட்காரவைத்தேன்.

இப்படியே படம் முழுவதும் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிகர்களை ஓட்டுவதையே குறியாய் வைத்து பின்னிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் தான் அவரை கவனித்துக் கொண்டிருந்தேன் பின்னர் சிவாஜி படத்தைப் பார்க்கத் தொடங்க; இடைவேளையில் பார்த்தால் சண்டை போட்டுக் கொண்டிருந்த பெண்களிடம் கடலைப் போட்டுக் கொண்டிருந்தார் நண்பர். இப்ப புகை அந்தக் கால ரயில் இன்ஜினை விடவும் அதிகமாய் வந்தது. திரும்ப வந்து உட்கார்ந்தவரிடம் எப்படிடா இப்படின்னு கேட்டேன். அதுக்கு அவங்க கிட்ட போய் சாரி கேட்டேன்னாரு, நான் உடனே ஏண்டா இந்த மானங்கெட்ட பிழைப்புன்னு கேட்க. உனக்கு பொண்ணுங்க சைக்காலஜியே தெரியாது நீ வேஸ்ட்டுன்னு சொல்லிட்டு நான் முன்பு உட்கார்ந்திருந்த சீட்டில் உட்கார்ந்து, பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிகரிடம் கடலை போட ஆரம்பித்தார்.

எனக்கு திரும்பவும் படம் பார்க்கும் ஆவல் அதிகமாக நான் படத்தை நோக்கி என் கவனத்தை திருப்பினேன். முன்பே சொல்லியிருந்தது போல் இன்டர்வெல்லுக்கு பிறகு படம் எக்ஸ்ப்ரஸ் சூடுபிடிக்கிறது. போன தடவையைப் போல இந்த முறையும் போனதே தெரியவில்லை; மொட்டை பாஸ் வந்து படபடபடவென்று அடிக்கும் பொழுதுதான் ஏதோ நினைவுக்கு வந்தவனாய் திரும்பிப் பார்க்க நண்பர் சக்க பார்மில் வருத்துக் கொண்டிருந்தார்.

படம் முடிந்து வெளியில் வந்ததும்

"என்ன சொன்னிச்சு பிகர்"ன்னு கேட்க

கையை ரஜினி மாதிரியே ஆட்டி "சும்மா அதிருதுல்ல" அப்படின்னு சொல்லப்போக, இருந்த கடுப்பெல்லாம் மொத்தமாய்க் கொட்டியவனாய் "பொறுக்கிங்க பேரைக் கேட்டா பிகருங்க எல்லாம் இப்படித்தான் அதுறும். அப்புறம் ஆட்டோமேட்டிக்கா அடங்கிறும். அடங்காக அதறிக்கொண்டேயிருப்பதறு நீ என்ன ரஜினியா" கேட்க, நண்பர் "உனக்கு பொறாமைங்காணும்!" சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார்.

1) இந்த முறை ஸ்ரேயாவிற்காக படம் பார்க்கப் போயிருந்தேன்னு கூட சொல்லலாம். முதல் முறை வெறும் ரஜினியின் ஆதிக்கம் தான் இருந்தது என் கவனத்தில். இந்த முறை ரஜினி இருக்கும் சீனில் கூட ஸ்ரேயாவாயே பார்த்துக் கொண்டிருந்தேன்.

2) நயன்தாராவா அது! சிம்பு நீ மிஸ் பண்ணிட்டடா மச்சி!

3) சொல்லப் போனா எங்கப்பா வயசு ரஜினிக்கு. Grrrrr. சத்தியமா நம்பமுடியலை இத்தனைக்கும் எங்கப்பா ஒரு PET.

4) நானும் எழுதுறேன்னு ரிவ்யூ எழுதுபவர்கள் அந்த உழைப்பைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லலைன்னு கோபம் வரும்.

5) பதிவுலகில் ரஜினியை வெறுப்பவர் போல் சீன் காட்டி வரும் ஒரு மூத்த பதிவரிடம் போனில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த பொழுது அவரும் இதையே தான் சொன்னார். உண்மையில் ரஜினியின் உழைப்பு மதிப்பிற்குரியது.

6) ஷங்கர் உங்க படத்தை மக்கள் ஓட வைச்சிட்டாங்க, இதுக்காகவாவது இன்னும் நாலு நல்ல அஸிஸ்டெண்ட் டைரக்டர்களை நீங்க டைரக்டர்கள் ஆக்கணும். Giving back to the society. வெய்யில் போன்ற படங்கள் வருவது உங்கள் கையிலும் இருக்கிறது.

7) விஜய், தனுஷ், சிம்பு especially அஜீத் இன்னும் கொஞ்ச நாளுக்கு கையை எல்லாம் கட்டி வைச்சுட்டு நடிக்க டிரை பண்ணுங்க. பஞ்ச் அடிக்கிறது, அடுத்த சூப்பர்ஸ்டார் நான் தான்னு பேட்டி கொடுக்குறது. நான் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆனா என்ன தப்புன்னு கேக்குறதை எல்லாம் இன்னும் இரண்டு வருஷத்துக்கு தள்ளி வைச்சிக்கலாம்.

8) சந்திரமுகி மாதிரி ஒரு வெற்றி படத்திற்குப் பின் ரஜினிக்கு இன்னும் ஒரு வெற்றிப்படமாய் சிவாஜி அமைந்திருக்கிறது.

9) சாட்டில் பிரச்சனை பற்றி பேசிக் கொண்டிருந்த நண்பரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நண்பர் கையைப் பிடித்து இழுத்துட்டுப் போய்ட்டார். நான் இதுமாதிரி பலசமயம் அவரைச் செய்திருக்கிறேன். தட்டமுடியலை :(



























Read More

Share Tweet Pin It +1

18 Comments

In சொந்தக் கதை

என்னைப் பற்றி பெருமைப்பட இருக்கும் விஷயங்கள் எட்டு

பெரிய கைகளின் தொடக்கத்தில் இருந்து வந்திருக்கிறது இந்த விளையாட்டு, என்பதால் மட்டுமே இதை மறுக்க இயலாமல் தொடருகிறேன். ஒரு விஷயம் நான் இதுவரை பெருமைப் படும்படி எட்டு விஷயங்கள் எதுவும் செய்யவில்லை.

என்னை இந்த ஆட்டத்தில் சந்தோஷும், ப்ரசன்னாவும் இழுத்துவிட்டிருந்தார்கள். Grrr. அதை மறந்திட்டேன்.

பிற்காலத்தில் நான் பெருமைப் படும்படியாக செய்ய இருக்கும் நினைத்திருக்கும் எட்டு விஷயங்களை வேண்டுமானால் சொல்கிறேன்.

1) எப்பாடுபட்டாவது கடைசி வரை சிகரெட் தண்ணி அடிக்காமயிருக்கணும்.

2) நல்லபடியா கல்யாணம் செய்து கொண்டு நல்ல கணவனாய் நடக்கணும்.

3) கடைசி வரைக்கும் அம்மாவை பார்த்துக்கணும்.(பெண்டாட்டியுடன் பிரச்சனை இதனால் வருமென்றால் எத்தனை பொய் சொல்லியாவது. இரண்டு பேருக்கும் நல்லவனாயிருக்கணும்).

4) Giving back to the society அப்படிங்கிற கான்செப்டில் நம்பிக்கை அதிகம் இருந்தாலும் இதுவரை அதற்கான இனிஷியேட்டிவ் எடுக்காமல் இருக்கிறேன். அப்படி இல்லாமல் என் மனசு பெருமைப்படும் அளவிற்கு திரும்பித் தரணும்.

5) இவனால கெட்டழிஞ்சாங்க நாலு பேர்னு இல்லாமல் என்னால நல்ல நிலைமைக்கு வந்தாங்க நாலு பேர் அப்படின்னு பேர் வாங்கணும்.

6) எனக்கு சாப்பாடு போட்டு, வாழ்க்கை கொடுத்த ஜாவாவிற்கு என்னால் எதுவும் செய்ய முடியுமென்றால் செய்ய வேண்டும்.

7) அதிகமா வாழ்ந்து யாரையும் நச்சு பண்ணாம உடல்நிலை திடமாயிருக்கிற வரை உயிர்வாழ்ந்து நல்லபடியா இதே திடகாத்திரமான உடல்நிலையோட யாருக்கும் பிரச்சனை எதுவும் செய்யாமல்(இதில் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளும், மனைவியும் அடக்கம்) இறந்துடனும்.

8) கடைசி வரைக்கும் நாத்தீகனா இருக்கணும்.

அவ்வளவு தான்.

தொடர அழைப்பவர்கள் :-

1. பிகேஎஸ் அண்ணாச்சி
2. ஹரன்பிரசன்னா அண்ணாச்சி
3. கேவிஆர் அண்ணாச்சி
4. பெயரிலி அண்ணாச்சி
5. மதுரா அக்காச்சி
6. சயந்தன் அண்ணாச்சி
7. வசந்தன் அண்ணாச்சி
8. ஜெயஸ்ரீ அக்காச்சி

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தான் பெருமைப்படும் 8 விஷயங்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

PS: யாரையும் நான் வற்புறுத்துவதில்லை இந்தமாதிரி விளையாட்டுக்கள் ஆட என்பதால், அவர்கள் விரும்பினால் தொடரலாம்.

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In சொந்தக் கதை பதிவர் சந்திப்பு

கோவை பதிவர் சந்திப்பு - என் குறிப்புகள்

நான் தங்கியிருந்த காந்திபுரத்திலிருந்து சந்திப்பு நடைபெற்ற RS-புரம் எப்படி வரவேண்டும். ஆட்டோவிற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்றெல்லாம் செல்லாவிடம் ஞாயிறு காலை 9 மணிக்கே(!!!) போன் செய்து கேட்டுக்கொண்டு தான் கிளம்பினேன். எனக்கு இரண்டாவது ப்ளோரில் நடப்பதாக தெரியாததாலும், கௌதம் ஆர்கெட் ஒன்பதரை மணிக்கு ஆளோருவரும் உள்ளிருப்பதைப் போன்ற தோற்றத்தை தராததாலும்; பக்கத்தில் இருந்த பேங்கிற்கு சென்று ஏடிஎம்-ல் காசை உருவி(எனக்கு முன்னர் காசை எடுத்துவிட்டு சென்ற நபர் கார்டை விட்டுவிட்டுச் சென்றிருக்க - என்னிடம் வேறு டிரான்ஸாக்ஷன் செய்யணுமா என்று அந்த நபரின் கார்டில் கேட்டதும். உடனடியாக புரிந்துகொண்டு கார்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து - அந்த நபரிடம் கொடுத்து "புண்ணியம்" சேர்த்துக் கொண்டேன்)வந்தேன்.

பின்னர் இன்னொரு தடவை அந்த பில்டிங்கின் எதிரில் வந்து பார்த்துவிட்டு இன்னமும் ஆள் நடமாட்டம் இல்லாததால் - மேங்கோ ஜூஸ் ஒன்றை பக்கத்தில் இருந்த பழமுதிர்ச் சோலையில் குடித்துவிட்டு; இனி வேலைக்காகாது என்று செல்லாவிற்கு தொலைபேச. அவர் மேலை போங்காணும் - கீழே நின்று என்னத்த பராக் பார்க்கிறீர் என்று சொன்னதும் தான் 2ஆவது ப்ளோருக்கு வந்தேன். எனக்கு முன்பே மா.சிவக்குமார், பாலபாரதி, வினையூக்கி, உண்மைத் தமிழன், சென்ஷி, எ-கலப்பை முகுந்த் அப்புறம் இன்னும் ஒருவர் பெயர் நினைவில் வரமறுக்கிறது, கண்ணாடி போட்டிருந்தவர் கவிதை எழுதுபவராக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர், போன்றவர்கள் இருந்தனர்.

வழக்கம் போல் நான் தான் மோகன் தாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தேன்; அந்தச் சமயத்தில் பார்ட்னர்ஷிப் கொடுத்தது சென்ஷி. தான் வலையுலகத்திற்கு எப்படி வர நேர்ந்தது என்பதைப் பற்றி நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது தான் பாலா, செல்லாவிற்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வரமுடியாத நிலையில் இருப்பதை சொன்னார். பின்னர் உதயசெல்வி அவரது கணவருடன் வந்தார் அவரிடம் நாங்கள் ஒருமுறை அறிமுகம் செய்து கொண்டோம். முகுந்த் நாங்கள் ஒவ்வொருவரும் திரட்டிகளில் இருந்து எதிர்பார்ப்பது எதை என்பதைப் பற்றி கேட்க சொல்லிக்கொண்டிருந்தோம்.

நான் சொன்னது தமிழ்மணத்தின் ஒரு விண்டோ என் ஸ்கிரீனில் எப்பொழுதும் இருக்குமென்றும் தேன்கூட்டை, அதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகளைப் பார்ப்பதற்காகவும் கில்லி பரிந்துரைகளை பார்ப்பதற்காகவும் பயன்படுத்துவதாகச் சொன்னேன். சமயங்களில் தமிழ்ப்ளாக்ஸ் பார்ப்பேன் என்றும், பின்னர் நானே உருவாக்கிக்கொண்ட iGoogle பற்றிச் சொல்லி அது எப்படி எனக்குப் பயன்படுவதாகச் சொன்னேன்.

பின்னர் ஒன்றிரண்டாய் ஆட்கள் வந்து சேர்ந்தார்கள். சுப்பையா அவர்களும் கோவை ரவி அவர்களும் வந்ததும் சூடுபிடித்தது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அவர் தான் எப்படி பதிவெழுத வந்தது எப்படி இருந்தது தன் அனுபவம் எப்படி படிப்படியாய் மக்களுக்கு ஏற்றவாறு தன்னுடைய பதிவை மாற்றிக்கொண்டார் என்பதைப் பற்றி கொஞ்சம் பெரிதாய்(;)) தன்னுடைய தெளிவான குரலில் சொன்னார். இந்தச் சமயத்தில் தான் பாமரனும் அவருடைய நண்பர்களும்(செகுவாரா அவருடைய மகன் - இதை நான் படித்திருக்கிறேன்) வந்தார்கள். அதில் ஒருவர் செகுவாராவின் படத்தை கலரில் கருப்பு பேக்ரவுண்டில் போட்டிருந்தார் நன்றாகயிருந்தது.(பின்ன பொண்ணுங்க மட்டும் தான் மத்தவங்க போட்டிருந்த புடவை நன்றாகயிருந்தது என்று எழுதணுமா என்ன?) ஆனால் எனக்கு நான் ப்ரொபைலில் போட்டிருக்கும் செகுவாரா படம் போட்ட டீஷர்ட் வாங்கத்தான் ஆசை. இங்கே கருடா மாலிலும், போரமிலும்(Forum) அப்படி செய்து தருபவர்கள் இருக்கிறார்கள்; செய்யணும்.

பாமரன் வந்ததும் இசைக்கலைஞர் ஆறுமுகம் வந்தார் என்று நினைக்கிறேன். பின்னர் பாமரன் மெதுவாக பாலபாரதியிடம் ஆரம்பிக்கலாமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு ப்ரொபஷ்னலான உரையாடலுக்கு முன்னர் ஆறுமுகம் அய்யா; உட்கார்ந்ததுமே தன்னை அறிமுகப்படுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தது நன்றாகயிருந்தது. நான் ஆறுமுகம் அவர்களுடனான பாமரன் அவர்களின் உரையாடலுக்குப் பிறகு பாமரன் அவர்களிடம், நீங்கள் அவரிடம் வேறுமாதிரியான கேள்விகள் கேட்டு வேறுமாதிரியான அனுபவங்களை சொல்லச் சொல்லியிருக்க வேண்டும் என்று சொன்னேன். ஆறுமுகம் அய்யா தன்னுடைய ப்ரொபஷ்னல் உரையாடலில் "ராமன்"ஐ பற்றி பேச ஆரம்பித்ததுமே ராஜா வனஜ் எஸ்கேப் ஆகிவிட்டிருந்தார். இதை பக்கத்தில் உட்கார்ந்திருந்த சென்ஷியிடம் சொல்லிக் காட்டினேன்.

என்னால் ஒருவகையில் ஆறுமுகம் அவர்கள் வைத்த வாதத்தை தவறாகச் சொல்ல முடியவில்லை ஏனென்றால், அவருடைய வயதை கருத்தில் கொண்டும் அந்தக் காலத்தில் அவர் வாழ்ந்து வந்த முறைகளைக் கொண்டும் என்னால் அவர் சொல்லிய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் நானும் என் அப்பாவுடன் உரையாடுவதுண்டு ஒரு(number) ஜெனரேஷன் இடைவெளியின் தாக்கமே பெரிதாக இருக்கும் பொழுது. அங்கிருந்த பலருடன் அவருடைய ஜெனரேஷன் இடைவெளி அதிகமாக இருந்திருக்கும். என்னைப் பொறுத்தவரை அவரிடம் வேறு வித்தியாசமான கேள்விகள் கேட்டிருக்கலாம். நான் பாமரனைக் குறை சொல்லவில்லை அவரும் உரையாடல் வேறு திசையை நோக்கிப் போகும் பொழுதெல்லாம் தன்னால் முடிந்தவரை எங்களுக்கு இடையிலான ஜெனரேஷன் கேப்பை சரிசெய்ய முயன்றார். ஆனால் பேட்டி எடுப்பவர்களுக்கான ரெஸ்டிரிக்ஷன்; எனக்கு நான் மாங்காயாக இருப்பதால் புரியுமென்பதால் அக்செப்டட்.

இந்தச் சமயத்தில் தான் பாலபாரதிக்கும், ஆறுமுகம் அவர்களுக்கும், செந்தழல் ரவிக்கும் சுப்பையா அவர்கள் பொன்னாடை போற்றினார். இதுவும் ஒரு ஜெனரேஷன் கேப் தான் நிச்சயமாய், ஆறுமுகம் அய்யா பற்றி தெரியாவிட்டாலும் பாலபாரதியும் ரவியும் இதை எதிர்பார்த்திருக்க(விரும்பியிருக்க) மாட்டார்கள் என்றே நம்புகிறேன். அடுத்த இதைப் போன்ற சந்திப்புக்களில் இந்த விஷயத்தை செய்ய வேண்டாம் என்று இந்தச் சமயத்தில் கேட்டுக் கொள்கிறேன். இதனாலெல்லாம் நான் பாலபாரதியின், ரவியின் சேவைகளை பாராட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை; இப்படித் தொடர்ந்தால் நாளை ஒரு மீட்டிங்கின் பொழுது ஆளாளுக்கு நான்கைந்து பொன்னாடைகளை எடுத்துவந்து வலைபதிவர் மீட்டிங்கையும் அரசியல் மேடையாக ஆக்கிவிடும் சூழ்நிலை பிரகாசமாகத் தெரிகிறது.

இந்தச் சமயத்தில் தான் ரவி வந்திருந்தார், அப்படியே சுகுணா திவாகரும். இதற்கெல்லாம் கொஞ்சம் முன்னர் லிவிங் ஸ்மைல் வித்யாவும் வந்து சேர்ந்திருந்தார். பின்னர் ரமணி அவர்களின் பின்நவீனத்துவம் பற்றிய பேச்சு; ஓரளவிற்கு இந்தக் காலக் கட்டங்களில், மையம், விளிம்புநிலை, அமேரிக்க மேலாதிக்கம் பற்றி தெளிவாகத் தெரியுமென்று சொல்ல முடியாவிட்டாலும் அப்படின்னா என்ன என்று புரியுமாதலாலும், தீவிரமாக பின்நவீனத்துவத்தைப் பற்றிய என்னுடைய புரிதல்களை அதிகமாக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருப்பதால்; தீவிரமாக கவனிக்கத் தொடங்கினேன்.

என் N73ல் அதனுடைய சில பிரச்சனைகளுக்கு இடையிலும் இவருடைய பின்நவீனத்துவ உரையாடல் ஓரளவிற்கு என்னிடம் MP4 பைலாக இருக்கிறது. செல்லா வீடியோகிராபரை ஏற்பாடு செய்திருந்ததால்; அவர் இதை வலையேற்றுவார் என்று நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால் என்னிடம் இருப்பதை வலையேற்றுகிறேன். இந்த பின்நவீனத்துவ உரையாடலைப் பற்றி சுகுணா திவாகர் ஏற்கனவே எழுதிவிட்டார். அதனால் அதற்குள் அத்தனை தீவிரமாகப் போகவில்லை.

நிறைய விஷயங்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தாலும் 'பின்நவீனத்துவத்திற்கான' அறிமுகமாக இந்த உரையாடலை வைத்துக் கொள்ளலாம். அதுவும் கடைசியில் அவர் நவீனத்துவத்தின் பிரச்சனைகளையும் அது எப்படி சரியில்லை என்றும் சொன்னார் ஆனால் பின்நவீனத்துவம் எப்படி இந்தப் பிரச்சனைகளை சரி செய்கிறது என்பதை சொல்லவில்லை(அப்படின்னு நினைக்கிறேன்). ஆனால் ராஜா வனஜ், சுகுணா திவாகர், முகுந்த் மற்றும் நான் இடையிடையே நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தோம். அவ்வப்போது மா. சிவக்குமாரும் தன்னுடைய புரிந்துணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த உரையாடல் அப்படியே ரிலையன்ஸ் ப்ரஷ் மற்றும் மேற்கு வங்காளப் பிரச்சனை என பல தரப்புகளில் விவாதம் சூடுபிடித்தது. அந்தச் சமயம் ஹிந்துவின் நிருபராக வந்திருந்தவரும் தன்னுடைய பங்கிற்கு சில விஷயங்களைப் பற்றிய தன்னுடைய புரிதல்களைச் சொன்னார். இந்த மாதிரி விவாதங்களில் முதலில் கருத்தைச் சொன்னவர் விவாதத்தை தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பது அவ்வளவு சரியாகயிருக்காது அதைப் போலவே ஒரு இனிஷியேட்டிவ்வை நான் கொடுத்திருக்கிறேன், நீங்கள் யோசித்து தீர்வை நோக்கி நகர்த்துங்கள் என்று விலகி உட்காருவது எந்த அளவிற்கு சரிவரும் என்று தெரியவில்லை.

இந்த விவாதம் முடியும் தருவாயில், சுப்பையா அவர்கள் மாற்றங்களுக்கா நாமெதுவும் செய்யவேண்டுமென்ற அவசியம் இல்லை மாற்றம் அதுவாய் ஏற்படும் என்றும். நீங்களெல்லாம் நம்ப மாட்டீர்கள் என்றாலும் "கடவுள்" அந்த மாற்றம் ஏற்பட ஏதாவது செய்வார் என்பதையோ இல்லை அதை ஒத்ததையோ சொன்னார். நான் "தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" அப்படின்னு சொன்னதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியாது. கடவுள் பற்றி அவருடைய பேச்சுக்கும் எதிர்வாதம் வைத்தேன்; பாமரனும் நக்கலாக ஒரு வார்த்தைச் சொல்லி நிறுத்தினார்.

இதற்கெல்லாம் இடைப்பட்ட காலத்தில் நிறைய விஷயங்கள் நடந்தது, அதாவது சின்னச் சின்ன விஷயங்கள். பாலபாரதி தன்னுடைய கத்தி போன்ற பற்களால் கடித்து(;)) ஒரு பார்சலைப் பிரித்து எல்லோருக்கும் நோட் புக்கும் பேனாவும் கொடுத்தார். நான் மட்டும் "நானெல்லாம் காலேஜிலேயே நோட் எடுக்க மாட்டேன்" என்று சொல்லி தவிர்த்துவிட்டேன். எனக்குத் தெரிந்து நன்றாய் நோட்ஸ் எடுத்தவர்கள்(நான் பார்த்தவரையில்) சென்ஷி, மற்றும் வினையூக்கி. செந்தழல் ரவி, பின்நவீனத்துவ ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார் இடைப்பட்ட இந்த நேரத்தில். நான் அவர் வரைந்திருந்த அந்த ஓவியத்தில் பின்நவீனத்துமே இல்லை என்றும். அந்தப் படம் பின்நவீனத்துவ ஓவியமாக ஆக என்ன செய்யவேண்டும் என்றும் சொன்னேன்; அவர் முறைக்க எக்ஸ்கேப் ஆகினேன்.

கேட் பெர்ரீஸ் சாக்லேட்டும், டீயும் கொடுக்கப்பட்டது(இது முதல் ரவுண்ட்) நான் சாக்லேட் சாப்பிடக்கூடாது என்று தீவிரமான உத்தரவு ஒன்று நிலுவையில் உள்ளதால் சாயாவை மட்டும் குடித்துவிட்டு பேசாமல் உட்கார்ந்துவிட்டேன். பாமரனின் "நக்கல்" தொணித்த ஒன்றிரண்டு வரி கமெண்ட்களை ரசித்தேன்.

இப்படியாக முதல் அமர்வு நிறைவு பெற்றவுடன், கிளம்பிய சுப்பையா அவர்களும் கோவை ரவியும், ஹிந்து பேட்டிக்காக மீண்டும் வந்து உட்கார இன்னொரு இன் - பார்மலான பார்மல் பேட்டி ஒன்று நடந்தேறியது. நானும் பாலாவும் முதலில் பின்னூட்டத்திலும் பின்னர் தொலைபேசியிலும் விவாதித்த பிரச்சனை இன்னொரு முறை கிளப்பப்பட்டது. இந்த முறையும் நான் "எனக்கு" சரியென்று பட்டதை சொன்னேன். பின்னர் விவாதம் வேறுபக்கமாக திரும்புவதாக மா.சிவக்குமார் விளக்க மீண்டும் விவாதத்திற்கு வந்தோம்.

முகுந்த், முன்னர் ஒரு முறை ஹிந்துவில் தவறாக வந்திருந்த ஒரு தகவலைச் சொல்லி, ஹிந்து நிருபரிடம் எழுதிப் பதிவிடும் முன் யாராவது ஒருவரிடம் காட்டி சரிபார்த்துக் கொள்ளும்படி சொன்னார் எனக்கு அது சரியென்று பட்டது. லிவிங் ஸ்மைல் வித்யா தன்னுடைய பதிவுலக அனுபவங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் சொன்னார். பின்னர் தமிழ் பதிவுலம் ஹிந்து போன்ற பத்திரிக்கைகளில் இருந்து எதிர்பார்ப்பது என்ன என்பதை யாரோ ஒருவர் சொல்ல கடைசியில், தமிழில் இலவசமாக எழுத முடியும் என்பதை மட்டும் சொன்னாலே போதும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தோம். நிருபர் தானும் தமிழில் எழுத ஒரு சாப்ட்வேர் காசு கொடுத்து வாங்கியதாகவும் அதுவும் வொர்க் ஆகவில்லை என்ற தன்னுடைய ஆதங்கத்தைச் சொன்னார்.

இரண்டாவது அமர்வை இன்னொரு பதிவு போடுகிறேன். முதல் அமர்வில் சில கண்ணில் பட்ட விஷயங்கள்.

* சென்ஷி என்றால் என்ன என்பதை சென்ஷி விளக்கவேண்டும் என்று நிறைய பேர் ஆசைப்பட்டனர்.

* சுப்பையா அவர்கள் தான் எப்படி வாத்தியார் ஆனார் என்பதை நிறைய தடவை சொல்லும் படியான சூழ்நிலை அமைந்தது.

* உடனுக்குடன் வினையூக்கியும், பாலாவும், மாசிவக்குமாரும் பதிவெழுதிக் கொண்டிருந்தனர்.

* மோகன்தாஸ் தன்னுடைய மொபைலில் இருந்து போட்டாக்களை பதிவிட ப்ளூடூத் வசதியுள்ள மடிக்கணிணியை தேடிக்கொண்டிருந்தார். (கிடைக்கவில்லை)

* செந்தழல் ரவிக்கு நாங்கள் பெங்களூரில் இருந்து கோயம்புத்தூருக்கு தண்டர் பேர்டில் வந்ததை நான் படம் காண்பித்துக் கொண்டிருந்தேன்.

* இன்று வரை, சுகுணா திவாகர் செந்தழலாரிடம் இருந்து தான் பெற்ற பின்நவீனத்துவ பரிசைப் பற்றி பின்நவீனத்துவக் கவிதை எழுதவில்லை.

Read More

Share Tweet Pin It +1

21 Comments

In கிரிக்கெட் சொந்தக் கதை

கல்லூரியில் கிரிக்கெட்

நான் என் கல்லூரி அணிக்குத் தேர்வானது ஒரு நல்ல கதை. முதலில் டென்னிஸ் பந்துகளில் விளையாடுவதைத் தொடங்கினாலும் எனக்கு கிரிக்கெட் பந்துகளில் விளையாட நேரமோ, சூழ்நிலையோ அமையவில்லை. இதனாலெல்லாம் நான் கல்லூரி அணிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் என்றதும்; அதுவும் கிரிக்கெட் பந்தில் என்றதும் தாழ்வு மனப்பான்மையால் அந்தப் பக்கமே போகவில்லை. என்ன பெரிய செலக்ஷன் ப்ராப்பர் கிரவுண்டிலா நடந்ததது? என்றால் இல்லை. கல்லூரிக்கு பின்னால் இருந்த ஒரு இடத்தில் நடந்தது.

நான் அந்த செலக்ஷனுக்குப் போகாத மற்றொரு காரணம் முதலில் பீல்டிங் பயிற்சி என்று காஜி எடுத்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் கல்லூரி நேரம் முடிந்ததும் பக்கத்து பஸ் ஸ்டாப்பில் இருக்கும் ஆயா கடையில் டீ சாப்பிடப் போவது வழக்கம். அன்று அப்படி போயிருந்த பொழுதுதான் தெரிந்தது; பீல்டிங் செலக்ஷன் நடப்பது. நானும் வேடிக்கைப் பார்த்துவிட்டு, நக்கலாக இரண்டு கமெண்ட் அடித்துவிட்டு கிளம்பிவிட்டேன். அதற்கடுத்து சனி, ஞாயிறு என்று நினைக்கிறேன். ஹாஸ்டலில் பெரிய காலமாகப் போகும் அவை.

அடுத்த நாளும் கல்லூரி முடிந்ததும் ஹாஸ்டல் வந்து கைலி கட்டிக்கொண்டு டீகுடிக்க, ஆயாக்கடையை நோக்கி நகரும் பொழுதுதான் கவனித்தேன். பௌலிங் செலக்ஷன் நடந்து கொண்டிருந்தது. கிரிக்கெட் பற்றிய தீராத வெறி என்னை ஒரு ஐந்து பத்து நிமிடம் அங்கே நிற்க வைத்தது. நான் எதிர்பார்த்ததைப் போலில்லாமல் அங்கே டிஸ்டிரிக்ட் டிவிஷினல் என்று கதைகளை விட்டு நிறைய பேர் பௌலிங் போட்டுக் கொண்டிருந்தார்கள். பூரா க்ராப்; ஒரே வார்த்தை. நான் அவசர அவசரமாக கூடவந்த பையனின் பாண்டை உருவி போட்டுக்கொண்டு நானும் பௌலிங் செய்ய பந்து ஒன்றை வாங்கினேன்.

டென்னிஸ் பந்துகளை விட சைஸில் பெரிய பந்துகள்; சிகப்புக் கலர் கூக்குபரா பந்துகள். கைக்கு அடக்கமாக இல்லாத காரணத்தால் நான் எதிர்பார்த்த யார்க்கராக இல்லாமல் முதல் பந்து ஒரு நச்சு பௌன்ஸராகப் போனது. ஹெல்மட் போட்டுத்தான் விளையாடுவார்கள் என்றாலும் அந்த சீனியர் பையன் பயந்து போனது நன்றாகத் தெரிந்தது. அப்பொழுதுதான் முதன் முதலில் கிரிக்கெட் பந்தில் பௌலிங் போடுகிறேன் என்பதை நினைவில் வைக்க வேண்டும். அந்தப் பந்திற்கு பாட்ஸ்மேனிடம் பதிலொன்றும் இல்லாததால். தொடர்ச்சியாக ஒரு ஓவர் போடும் வாய்ப்பு கிடைத்தது.

இப்பொழுது இருப்பதையெல்லாம் விடவும் தலைமுடி அதிகம் வைத்திருப்பேன். நான் ஓடிவர என் தலைமுடி ஒரு பக்கம் தனியாக வரும். ரெண்டு குட் லெங்க் டெலிவரிகளும், இரண்டு யார்க்கரும் போட்டுக்காட்ட, இரண்டு யார்க்கரிலும் பாட்ஸ்மேனின் குச்சி போயிருந்தது. பெரும்பாலும் இந்த கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு கால்கள் அவ்வளவு வேகமாக நகராது ஏனென்றால் அடிஷனல் பர்டன் பேட்கள். அதுவும் கிடைக்கிறதென்று இரண்டு பேட்கள், ஹெல்மெட், காட் என ஏகப்பட்ட அய்டங்களைப் போட்டுவிளையாடுவதால். அவர்களுடைய நேச்சுரல் கேம் வரவே வராது. அதனால் குச்சி பறந்தது பெரிய விஷயம் இல்லை; அந்த வேகத்தில் வரும் பந்தை கரெக்டாக ஜட்ஜ் செய்து டிபென்ஸ் ஆடுவது கடினம்.

நான் ஒரு ஓவர் போட்டு முடித்ததும் கூட டீ குடிக்க போய்விடலாமா என்றுதான் நினைத்தேன். அங்கே செல்க்ஷனுக்காக நின்றிருந்த வாத்தியார் பாட்டிங் செய்வியா இல்லை ஒன்லி பௌலரா என்று கேட்க ஆஹா போட்ட பந்துக்கு காஜியும் அடிக்கலாம் என்று ஆடுவேன் என்று சொன்னேன். சரி போய்த் தயாராகு என்று சொன்னதும். வேகவேகமாகப்போய் இடது காலுக்கு மட்டும் பேட் கட்டிக் கொண்டு போய் நின்றேன். எல்லாம் ஒரு சீன் தான், எங்கள் ஸ்டேடியத்தில் ப்ராக்டிஸ் செய்யவரும் பிரபல BHEL பிளேயர்கள் அந்தக் காலில் மட்டும் பேட் கட்டி விளாயாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் ஹெல்மட் மேண்டேட்டரியாகக் கொடுக்கப்பட அதைமட்டும் போட்டுக் கொண்டு போய் நின்றேன். சீனியர் மக்களுக்கு கோபம் இருந்திருக்க வேண்டும். அதுவரை பௌலிங் செய்து கொண்டிருந்த ஜூனியர் மக்களை நிறுத்தி அவர்களே இறங்கினார்கள் பௌலிங்கிற்கு. நாங்க மதிச்சாத்தானே. ஆறு பந்துகளுக்குமே கீழேயிறங்கி ஆடினேன். என் அதிர்ஷ்டம்(???) நான்கு பந்துகள் கிளிக் ஆகியது. ஒன்று எட்ஜாகி பின்பக்காம் சென்று விட ஒன்று மிஸ். அம்பையர் இடத்தில் இருந்த செல்க்டர் சரி போதும் என்று சொல்ல பேடைக் கழட்டியவன். ஆயாக்கடை சாயாவில் மயங்கி அங்கிருந்து எஸ்கேப் ஆக; டீக்கடைக்கு மெஸேஜ் வந்தது செலக்டர் என்னை தேடுவதாக. ஆல்ரவுண்டராக என்னை அணியில் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அதற்குப் பிறகு ஹாஸ்டல் அணியுடன் டென்னிஸ் பால் கிரிக்கெட். காலேஜ் அணியுடன் கிரிக்கெட் பால் ப்ராக்டீஸ் என பிரகாசமாகப் போனது.

ஆனால் நாங்கள் RECயில் கொங்கு Arts & Scienceவுடன் விளையாடிய மட்ட ரகமான ஆட்டம் ஒருவாறு எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை இல்லாமல் செய்தது என்று சொல்லலாம். சீனியர்கள் செலக்டர் சொல்லியும் கேளாமல் என்னை சப்ஸ்டிட்யூட் ஆக வைத்து விளையாடினார்கள். நாங்கள் RECயில் பிகர் பார்க்கக் கிளம்பிப் போய்விட்டு வருவதற்குள் பாதி பேர் அவுட். இருபத்தைந்து ஓவர்களுக்கு எங்கள் அணி அடித்ததை விக்கெட் இழப்பில்லாமல் ஐந்து ஓவர்களில் அடித்துவிட்டு அவர்கள் கிளம்பிப் போனார்கள். அதற்குப் பிறகு சீனியர்கள் முகம் போன போக்கு... ;). அதற்குப் பிறகு அபிஷியலாக அதிகம் விளையாடாவிட்டாலும்; பக்கத்தில் இருந்த சாரநாதனுடன் நிறைய ஆட்டம் விளையாடியிருக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் சீனியர்களுடன் நல்ல பழக்கத்திற்கு வந்திருந்தேன்.

பின்னர் எங்கள் ஹாஸ்டல் அணியின் நிரந்தர ஆட்டக்காரராகவே இருந்தேன். பெரும்பாலும் எக்ஸாம் இல்லாத நாட்களில் எல்லாம் ஏதாவது ஒரு கல்லூரி அணிக்கும் ஹாஸ்டல் அணிக்கும் இடையில் மேட்ச் இருக்கும். சில சமயம் நான் படிக்கும் வகுப்பிற்கு எதிராகவே விளையாடுவோம். அப்பொழுதெல்லாம் கிளாஸ்மெட்களையெல்லாம் விடவும் ஹாஸ்டல் மெட்கள் தான் பிடிக்கும். ஏனென்றால் நாள் முழுவதும் அவர்கள் தான் எங்களுடன் இருப்பார்கள். கல்லூரியில் உட்கார்ந்திருக்கும் பொழுதுகளிலும் கூட ஹாஸ்டல் நண்பர்களுடன் தான் உட்கார்ந்திருப்பது. டேஸ் ஸ்காலர்களின் உலகம் வேறு, ஹாஸ்டல் மக்களின் உலகம் வேறு...


முந்தைய பாகம்
அதற்கு முந்தையது

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In கிரிக்கெட் சொந்தக் கதை

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia - 1

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia

இந்தச் சமயத்தில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு நடந்தது அது நான் எட்டாவது படித்து முடித்த பொழுது மே மாத விடுமுறைக்காக டெல்லிக்குச் சென்றது. மற்ற விஷயங்களை விடுத்து கிரிக்கெட் சம்மந்தமான முக்கியமான நிகழ்வென்றால் அது நான் என் மாமாக்கள் இருவருக்கும் பந்து வீசியது. இருவரும் உண்மைக் கிரிக்கெட் ;) ஆடியிருந்தவர்கள். அதாவது மேட் எல்லாம் போட்டு விளையாடும் டிவிஷன் மேட்ச்சஸ். இதனால் இருவருக்குமே டெக்னிக்கலாக கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டுமென்று தெரியும்.

அங்கே விளையாடிய பொழுதுதான், Front foot, Back foot, பந்து வீசுபவர்களின் கைகளைக் கவனிப்பது, பந்து கைகளில் இருந்து வெளியேறியது பந்தை கவனிப்பது, பேட்டை எப்படி விளையாடப் போகிறோம் என்பதற்கிணங்க ஹேண்டிலைப் பிடிப்பது(ஸ்ட்ரோக் ஆடுவதற்கும் ஷாட்ஸ் ஆடுவதற்கும் வெவ்வேறு ஸ்டைலில் பேட்டைப் பிடிக்க வேண்டும்) என நிறைய விஷயங்களை ப்ராக்டிகலாக இம்ப்ளிமெண்ட் செய்ய சொல்லித் தந்தார்கள். அதுவரை குருட்டாம் போக்கில் வந்த பந்தை அடிப்பது என்ற நிலையில் இருந்த என்னை அடுத்த அடிக்கு உயர்த்தியது அங்கே தான். எனக்கு என் மாமாக்களுடன் இன்றும் கிரிக்கெட் விளையாடப் பிடிக்கும். இன்று நான் ஆப்-ஸெட்ம்புக்கு அந்தப் பக்கம் நாலு இஞ்சில் போடப்படும் பந்தை லாவகமாக தடுத்தாடுவார்கள் என்று நன்றாகத் தெரியும் ஆனால் வேலை காரணமாக நாங்கள் மூவரும் ஒரு இடத்தில் இருக்கும் வாய்ப்புக்கள் குறைந்ததில் நான் அனுபவிக்கும் வருத்தத்தில் இதுவும் ஒன்று.

இதையெல்லாம் விடவும் முக்கியமான ஒரு விஷயம் மாமா வைத்திருந்த SG பாட் ஒன்றை என்னிடம் தந்தார் நான் டெல்லியில் இருந்து புறப்படும் பொழுது. நான் என் பகுதியில் கேப்டன் ஆனேன் ;). நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த பேட்களுடன் ஒப்பிடக் கூட முடியாது அந்த பேட்டை, கொஞ்ச நாள் யாருக்கும் கொடுக்காமல் நான் மட்டும் தான் விளையாடி வந்தே அந்த பேட்டில் ஆனால் அது பல காரணங்களுக்காக சரிவராமல் போக எல்லோரும் உபயோகிக்கத் தொடங்கினார்கள். சில டோர்னமென்ட் விளையாடுவதற்கு பெரிய டீமில் இருந்தெல்லாம் பேட் கேட்டு வருவார்கள்.

இப்பத்தான் நான் அப்பா ஸ்கூலில் இருந்து வேறு ஸ்கூலுக்கு வந்தது, ஆனால் இரண்டு பள்ளிகளுமே ஒரு மேனேஜ்மென்ட்-ஆல் நடத்தப்படுபவை. நானூறு மீட்டர் இடைவெளி இருக்கும் இரண்டு பள்ளிகளுக்கும் அவ்வளவுதான் விஷயம் என்றாலும். ஸ்கூல் அதையடுத்து ஒரு ரோடு ரோட்டைத்தாண்டினால் "நேரு ஸ்டேடியம்". இது போதுமே ஆனால் இன்னொரு விஷயமும் இருந்தது, "நேரு ஸ்டேடியம்" தாண்டி கேர்ல்ஸ் ஹைஸ் ஸ்கூல் ;).

பள்ளி விடும் 4.15க்கு முன்னமே கிளம்பிப் போய் கிரவுண்டில் குச்சி நட்டு வைச்சு, அந்தப் பெரிய கிரவுண்டில் நல்ல பிச்சா விளையாடுவதற்கு தேர்ந்தெடுத்து வேறுயாரும் விளையாடாமல் பார்த்துக்கொள்ளவென்றே ஒருத்தன். அவன் 4.00 மணிக்கெல்லாம் கிளம்பிடுவான் பாத்ரூம் வருகிறதென்று. நாங்கள் அவன் பையையும் எடுத்துக் கொண்டு கிரவுண்டிற்கு வந்துவிடுவோம். அப்புறமென்ன இரண்டு இரண்டு பேரா அரைமணிநேரத்திற்கு ஒரு தடவை குறையத் தொடங்க. கடைசி இரண்டு மூன்று ஆட்கள் வரும் வரை விளையாடிவிட்டு பேட் பாலை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேருவோம். அந்த கிரவுண்டில் மொத்தம் எங்களைப் போல் இருபது டீம் விளையாடிக் கொண்டிருக்கும்.

இது கிட்டத்தட்ட அந்த நான்கு வருடங்களில் தொடர்ச்சியாக நடந்தது. அப்பல்லாம் டீம் மாட்ச் நடக்கும் 9A, 9B, 9C என மூன்று பிரிவுகள் ஆங்கில வகுப்புக்கள். அப்புறம் 9D ல் தொடங்கி 9M வரைக்கும் தமிழ் பிரிவுகள். ஒவ்வொரு வகுப்பிற்கும் 40 - 45 மாணவர்கள் இருப்பார்கள், அதனால் குறைந்த பட்சம் 11 பேர் பிரச்சனையே இல்லை. எல்லா நாட்களும் மேட்ச் தான், மதியம் இன்டர்வெல்லில் இதற்கென்றே இருக்கும் மாணவர்கள் போய் எதாவது ஒரு க்ளாஸிடம் மேட்ச் கேட்டு வருவார்கள். அப்படி டீம் மாட்சா இருந்தால் சென்டர் பிச்சில் விளையாடுவோம்.

பொதுவாக சென்டர் பிச் காலியாகத்தான் இருக்கும், இதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று பெரிய மைதானம், இருபத்திரெண்டு பேர் விளையாடாவிட்டால் சரிவராது அதுமட்டுமில்லாமல் அந்த சென்டர்பிச் பௌலிங் பிச் அதனால் அதிக ரன்கள் வராது. எட்டு ஓவர்கள் இருபத்தைந்து ரன் அடிப்பதுவே பெரிய விஷயம் அதனால் கிளாஸிக் கிரிக்கெட் போல் இருக்குமென்பதால் அவ்வளவு சுவாரசியமாகயிருக்காது. ஆனால் க்ளாஸ் மேட்ச் என்று வந்துவிட்டால் செண்டர் பிச் தான். அந்தக் காலத்தில் எல்லாம் அப்பா என்னைத் தேடவேண்டுமென்றால் நேராக ஒன்றிரண்டு கிரிக்கெட் கிரவுண்டிற்கு போய்த் தேடி கண்டுபிடித்துவிடுவார்.

அந்தக் காலத்தில் எல்லாம் நான் ஆல்-ரவுண்டர், கொஞ்சம் வித்தியாசமான. பெரும்பாலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர்(நான் பௌலிங் செய்யாத பொழுது), அப்புறம் பௌலர். எட்டு/பத்து ஓவர் மேட்சில் இரண்டு ஓவர்கள் தான் கிடைக்கும். அந்த இரண்டு ஓவர்களும் நன்றாகப் போட்டால் மூன்றாவது கிடைக்க வாய்ப்புண்டு எனென்றால் ஒரு பத்து ஓவர் மேட்சில் ஒரு ஆள் தான் மூன்று ஓவர் போடலாம்.

அதுமட்டுமில்லாமல் விக்கெட் கீப்பிங் ரொம்பவும் முக்கியமான ஒன்று. அதனால் அதுவும் நானே, அப்பல்லாம் கண்ணாடி கிடையாது. ஸ்டெம்புக்கு ரொம்பவும் அருகில் நின்று கீப்பிங் செய்வேன். சிலகாலம் ஒரு அணிக்கு அவர்களிடம் இருந்த ஒரு பேஸ் பவுலரின் பந்துகளை நான் கீப் செய்கிறேன் என்பதற்காகவே குறைந்த வயதில் டோர்னமெண்ட் விளையாடியிருக்கிறேன். எப்படியாவது லெக் அம்ப்பயரை ஏமாத்தி மேட்சுக்கு ஒரு ஸ்டெம்பிங் வாங்கிவிடுவேன் ;). அப்புறம் பௌலிங், முதலில் எங்கள் அணி பௌலிங் செய்தால் நான் தான் முதலில் வீசுவது. முதல் ஸ்பெல் முடிந்து எட்டாவதோ பத்தாவதோ ஓவரை நான் தான் வீசுவேன்.

1500 ஓடுவதாலும் வீட்டில் தண்ணி தெளித்து விட்டிருந்ததாலும் என்னால் அந்தக் காலக் கட்டத்தில் நிறைய கிரிக்கெட் விளையாட முடிந்திருந்தது. பின்னர் எனக்கென்று ஒரு டீம் இருந்தாலும் பிற அணிகளுக்காகவும் விளையாட போய்விடுவேன். கூத்தைப்பார் டோர்னமெண்ட், செக்யூரிட்டி காலனி டோர்னமெண்ட், எழில்நகர் டோர்னமெண்ட் என சுத்துவட்டாரத்தில் நான் விளையாடாத டோர்னமெண்ட்களே ஒரு காலத்தில் இல்லை என்பது போல் ஒன்று கிரிக்கெட் விளையாடுவது இல்லை கிரிக்கெட் பற்றி பேசுவது இது மட்டும் தான் வாழ்க்கை அப்பொழுது.

+1, +2 விலும் அப்படித்தான். நான் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண் வாங்காததற்கு இதுவும் ஒரு காரணம். மற்ற காரணம் தான் முன்னமே தெரிந்திருக்குமே.

அடிக்கிற மழை கொளுத்தும் வெய்யில் என எதற்காகவும் நாங்கள் விளையாடுவதை நிறுத்தியதில்லை. இதுவரையான சமயத்தில் நான் ரொம்பவும் பேமஸான பௌலர் தான் பேட்டிங் பிஞ்ச் ஹிட்டர், ஏனென்றால் டெக்னிக்கலாக தெரிந்திருந்தாலும் 8 ஓவர் மேட்சில் நமக்கு கிடைக்கும் ஒன்றிரண்டு ஓவர்களை ஸ்ட்ரோக் பண்ணியெல்லம் ஆடினால் அடுத்த மேட்சில் ஆட இடம் கூட கிடைக்காது. அதனால் ஓப்பனிங் பிஞ்ச் ஹிட்டர், ஷாட்ச் பிச் டெலிவர் வந்தால் போதும் ஒரு போர் அடித்துவிடுவேன் பெரும்பான்மையான சமயங்களில் என்பதால் என் பள்ளி அணிக்காக பெரும்பாலும் ஓப்பனிங் மட்டுமே விளையாடுவேன். சிலசமயம் ஆப்பொனண்ட் ரொம்பவும் குறைவான ரன்கள் என்றால் நான் இறங்க மாட்டேன்.

ஆனால் இதையெல்லாம் மாற்றிப் போட்ட கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன், +2 படிக்கும் பொழுது. பௌலிங் கிடையாது ஒன்லி த்ரோ தான், ஒரு சதுரம் போல் இருக்கும் இடம் தான் பிச். வெறும் ஆப் சைட் மட்டும் தான். கட்டத்திற்கு வெளியில் தூக்கி அடித்தால் அவுட். அது ஒரு அற்புதமான கிரிக்கெட். ஓவர் கணக்கு கிடையாது அவுடாகும் வரை விளையாடலாம். ஆனால் அந்த சின்னக் கட்டத்திற்குள் இருக்கும் பீல்டர்கள் கைகளில் சிக்காமல் ரன் அடிப்பது என்பது பெரிய விஷயம். ஆனால் சில பேர் வேண்டுமென்றே ஸ்ட்ரோக் வைக்கிறேன் பேர்வழியென்று ஆரம்பித்ததால் - unlimited ஓவர்கள் விளையாட முடியாமல் போனது. அதனால் ஒரு கணக்கிற்கு 15 ஓவர்கள்.

பிரம்மாதமான ஆஃப் சைட் ஆட்டம் கைக்கு வந்தது அப்பொழுது தான். அதேபோல் லெக் ஸ்பின் விளையாட வந்ததும்(பிற்காலத்தில் கல்லூரி அணிக்காகவும், கம்பெனி அணிக்காகவும் ஆடிய பொழுது ஸ்பின்னர்ஸை அடிக்க இந்த ஆட்டம் உதவியது.) அப்பொழுதுதான். ஷென் வார்னேவின் மைக்கேல் ஹோல்டிங்கிற்கான பந்து தெரிந்திருக்கும். அதெல்லாம் என்ன பிரம்மாதம் த்ரோ என்பதால் வெறும் முத்தையா முரளீதரன்களும் ஷேன் வார்னேக்களும் தான் அங்கே. அதுவும் இல்லாமல் நிறைய வெரைட்டி வேறு, ஒரே ஓவரில் பேஸ், பவுன்ஸ், லெக் ஸ்பின், ஆப் ஸிபின், புல்டாஸ் என நிறைய போடுவார்கள். இந்த ஆட்டங்களில் எத்தனை 50 அடித்திருப்பேன் நினைவில் இல்லை. மாமாக்கள் சொல்லிக் கொடுத்த டெக்னிக் இங்கே நிறைய உதவியது.

அடுத்த பாகம் போடுகிறேன், இப்பவே நிறைய ஆச்சுது.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In கிரிக்கெட் சொந்தக் கதை

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia

நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது எப்பொழுது என்று சரியாக நினைவில் வரமறுக்கிறது ஆனால் ஐந்தாவது வகுப்பு படிக்கும் பொழுதெல்லாம் ஆடியிருக்கிறேன் என்பது நினைவில் இருக்கிறது. கொஞ்சம் போல் சீரியஸ் கிரிக்கெட் என்றால் அது ஆரம்பித்தது ஆறாவது ஏழாவது படிக்கும் பொழுதாகயிருக்கலாம்.

எங்கள் பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருந்த ஒரு இடத்தில் விளையாடுவோம்; பக்கத்தில் ஒரு மாங்காய் மரத்துடன் கூடிய வீடிருந்தது. பெரும்பாலும் அந்த வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் எனவே பந்து வீட்டின் கொல்லைப் புறத்திற்கு சென்றுவிட்டால் பிரச்சனையில்லாமல் எடுத்துவரமுடியும் என்பதுகூட நாங்கள் அந்த இடத்தில் விளையாடியதற்கு ஒரு காரணம். அப்பொழுதெல்லாம் ரப்பர் பந்துதான், கிரிக்கெட் பேட் என்று பெரிதாக ஒன்றும் இல்லாவிட்டாலும் எங்கேயோ கிடைத்த ஒரு பேட்டில் விளையாடிக் கொண்டிருந்த நினைவு.

ஸ்டிக் எல்லாம் மரக்குச்சிகள் தான், பெரும்பாலும் பள்ளிவிட்ட பிறகு இரண்டு மணிநேரங்கள் விளையாடுவோம். வெறும் 'லெக்' சைட் மட்டும் தான்; அதுவும் ஸ்டிக்கிற்கு பின்பக்கம் ரன்கள் கிடையாது. ஏனென்றால் அந்த வயதில் பௌலிங் போடும் பொழுது ஷார்ட் பிச் டெலிவர்கள் அதிகம் இருக்குமென்பதால் அந்தப் பக்கம் அடிக்க வசதியாக இருக்கும். அதன் காரணமாகவே அந்தப் பக்கம் ரன் கிடையாது. பள்ளிக்கூடம் விட்டபிறகென்பதாலும் எல்லோர் வீடுகளிலும் உடனே வீட்டிற்கு போய்விடவேண்டிய அவசியம் இல்லாத காரணத்தாலும் சைட் ஒன்றிற்கு ஆறு பேர் என பன்னிரெண்டு பேர் விளையாடுவோம்.

நினைவு தெரிந்து அந்த வயதில் எல்லாமே வேகப் பந்துவீச்சு தான்; சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கொஞ்சம் பெரிய க்ரவுண்ட்களில் இரண்டு செக்டார்களுக்கு இடையில் மேட்ச் நடக்கும். அந்த மொட்டை வெய்யலில் முதல் ஆளாக நான் உட்கார்ந்திருப்பேன் மேட்ச் பார்ப்பதற்கு. நான்கு மணிக்கு ஆட ஆரம்பிக்கும் அவர்கள், ஆறு மணி போல் மேட்ச் ஆடி முடித்ததும் அந்த பெரிய ஆட்களுக்கு பௌலிங் செய்வேன். சொல்லப்போனால் நான் ஓசி காஜி தான் அடிப்பார்கள் அவர்கள் இருந்தாலும்; அதுவரை நானாகப் பார்த்திராத டென்னிஸ் பால்களுக்கு அறிமுகம் அங்கே தான் கிடைத்தது.

ரப்பர் பாலுக்கும், காஸ்கோ பாலுக்கும் வித்தியாசம் நிறைய உண்டு. கொஞ்சம் மித வேகமாக பந்து வீசினாலே ரப்பர் பாலில் வேகமாகச் செல்லும். ஆனால் காஸ்கோ பாலிற்கு வெய்ட் சுத்தமாகயிருக்காது, அதனால் என்ன வேகமாக ஓடிவந்து வேகமாக வீசினாலும் பேட்ஸ்மேனுக்கு டைமிங் நிறைய கிடைக்கும். நான் ஆறாவது படிக்கும் பொழுதெல்லாம் இப்பொழுது மார்க்கெட்டில் கிடைக்கும் 'விக்கி' பந்துகள்(இரண்டு கலர்களில் பெரும்பாலும் இருக்கும், சில ஒற்றைக் கலரிலும்) கிடைக்காது. BHELல் டென்னிஸ் கிளப்பில் இருந்து இந்த காஸ்கோ பந்துகளை அந்த அண்ணன்கள் வாங்கி வருவார்கள்.

சின்ன வயது, எதையாவது சாதிக்கணும் என்ற ஆசை எல்லாம் சேர்த்து அந்த வயதிலேயே நான் வேகமாக பந்துவீசுவேன். காஸ்கோ பந்திலும்; என்னைவிட சற்றேறக்குறைய பத்து வயது பெரியவர்கள் பேட்டிங் செய்பவர்களை என் வேகத்தால் தடுமாறவைப்பேன் சில தடவைகள். சில தடவைகள் பொத்தென்று ஷார்ட் பிச் விழ பந்து பறக்கும்(பஞ்சு மாதிரி ;)). இதில் பிரச்சனை என்னவென்றால் அப்படி அடிக்கப்பட்ட பந்தையும் நான் தான் எடுத்துவரவேண்டும். இதனாலெல்லாம் ஒரு நன்மை என்னவென்றால் ஆஸ்பிட்டல் பக்கம் ஒரு பிரச்சனை என்று படுத்ததில்லை அவ்வளவே.

அப்பா வேறு உடற்பயிற்சி ஆசிரியர், அக்கா ஸ்டேட்-ல் தொடர்ச்சியாக தங்கம் வாங்கியவர். இதனால் காலையில் ஐந்தரை மணிக்கே "நேரு ஸ்டேடிய"த்திற்கு துரத்தப்படுவேன். அக்கா போய் வார்ம் அப் செய்யும் வரை, கேலரியில் படுத்திருந்துவிட்டு. வார்ம் அப் ஆனதும் லாங்க் ஜெம்ப் பிட்டில் படுத்துக் கொள்வேன். அப்பா தூரத்தில் வருவது தெரிந்ததும் நானும் அப்பத்தான் ஓடிக் களைச்சு போயிருக்கிறதா சீன் போடுவேன். ஆனால் அப்பாவுக்கு அதெல்லாம் நல்லாவே தெரியும். ஆனாலும் நான் காலையில் எழுந்து ஸ்டேடியம் போனதற்கு காரணம் அம்மா போய்வந்ததும் தரு கேழ்வரகு கஞ்சி. (அந்த ஏலக்காய் மணம் இப்பவும் நினைச்சா உணரமுடிகிறது.)

காலை இப்படின்னா சாயங்காலம் இப்படி கிடையாது; என்னையும் அக்காவையும் ஸ்டேடியத்திற்கு துரத்திவிட்டுட்டு அப்பாவும் அம்மாவும் வாக்கிங் வருவார்கள். வந்து ஸ்டேடியத்தின் கேலரியில் உட்கார்ந்திருப்பார்கள்; அதனால் ஏமாற்ற முடியாது. அந்த ஸ்டேடியம் பெரியது. எப்படியென்றால் நானூறு மீட்டர்களை ஒரே ரவுண்டில் ஓடக்கூடிய அளவிற்கு பெரியதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நான் அந்த ஸ்டேடியத்தில் பதினைந்து ரவுண்ட்கள் ஓடுவேன். பார்த்துக் கொள்ளுங்கள்(400மீட்டர் x 15). அக்காவிற்கு வெறும் இரண்டு ரவுண்ட்கள் தான் ஏனென்றால் அவள் பங்கேற்பது 100, 200 மற்றும் லாங் ஜெம்ப்.

என்னை இருபது மீட்டர் முன்னால் நிறுத்திவிட்டு எனக்கும் அக்காவிற்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடக்கும் பெரும்பாலும் எல்லா நாளும், 20 மீட்டர் மட்டுமல்லாமல் ஸ்டாட்டிங்கும் முன்னாடியே கொடுத்துவிட்டு ஓடுவேன். ஆனால் அக்கா தீவிரமாக ஓடிக்கொண்டிருந்த காலங்களில் அவள் என்னை முந்திக் கொண்டுதான் முடிப்பாள்.

இதுமுடிந்ததும் அப்பா அக்காவைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குப் போய்விடுவார், நான் அந்த ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடுவேன். இது வேறு ஒரு கூட்டம் கொஞ்சம் போல் நான்-ஸ்டாண்டர்ட் கிரிக்கெட் விளையாடுபவர்கள். அதாவது காலையில் இருந்து வேலை செய்துவிட்டு விளையாட வருபவர்கள். இவர்களிடம் என் பௌலிங்க் வெகு சீக்கிரமாக எடுபடும் பந்தும் ரப்பர் பால் தான். என்னிடம் இருந்த அத்தெலெட்டுக்கான திறமை என்னுடைய பீல்டிங்கிலும் ரன்கள் எடுப்பதிலும் தெரியும்.

சொல்லப்போனால் இவ்வளவு தான் நினைவில் இருக்கிறது நான் எட்டாவது படித்தது வரையிலான கிரிக்கெட் அனுபவம், நினைவுகள், நோஸ்டாலஜியா எல்லாம். அடுத்து நான் கொஞ்சம் போல் கிரிக்கெட் பைத்தியம் பிடித்துக் கிடந்த 8 - 12 படித்த பொழுதுகளின் நினைவுகள்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சொந்தக் கதை சோழர்கள் பயணம்

கங்கை கொண்ட சோழபுரம் - பயணம்

அப்பொழுதுதான் எங்கள் கல்லூரி இறுதித் தேர்வு முடிந்திருந்தது. கல்லூரி வாழ்வில் அனைவரும் பேர்வெல் பார்ட்டி கொண்டாடியிருப்பீர்கள். ஆனால் நாங்கள் (நான் மற்றும் என் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர்) கொண்டாடவில்லை. எங்களுக்குத் தெரியும் அந்தக் கல்லூரியில் நாங்கள் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லையென்று. அதாவது நாங்கள் அந்தக் கல்லூரியை பிரிவதற்காக வருந்தவேயில்லை. நாங்கள் ஏற்கனவே முடிவெடுத்திருந்ததைப் போல் ஒரு சுற்றுப்பயணத்தைத் தொடங்கினோம்.

2003 மேயிலிருந்து அடுத்த 2004 மே வரை நான் ஊர் சுற்றியது மிகவும் அதிகம். முதலில் என் கல்லூரி நண்பர்களுடனான பயணம். நாங்கள் அனைவரும் முதலில் திருச்சியிலிருந்து கிளம்பி பிரபுவின்(துறையூர்) வீட்டிற்கு வந்திருந்தோம். முதலில் எங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம், மொத்தம் ஆறு பேர், நான், ராஜேஷ், உதயசங்கர், பிரபு, பார்த்திபன், ராஜாமணி. இதில் பிரபுவையும் ராஜாமணியையும் தவிர்த்து எங்கள் அனைவருக்கும் எந்த பேப்பர்களும் பாக்கியில்லை. கொஞ்சம் நன்றாய் படிக்கும் சொம்பு கும்பல் என்று கூட வைத்துக் கொள்ளலாம் ஆனால் நான் அதில் சேர்ந்தது தான் ஆச்சர்யமே. நன்றாய் படிக்க மாட்டேனா என்றால் அப்படியில்லை. கொஞ்சம் ரௌடி, ஒரு முறை கல்லூரி நிர்வாகம் கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தும், லீவ் போட்டுக்கொண்டு பெங்களூர் வரை வந்து ஊர் சுற்றியதால் ஹாஸ்டலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தேன் அது வேறு ஒரு கதை.

ஒரு முறை கல்லூரியிலிருந்து "பார்ட்" பெஸ்டிவலிற்கு பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வைக்கப்பட்ட போட்டியில் நான் வெற்றி பெற்றிருந்தும் மேலாளர் சொன்னார் என்பதற்காக வேறொரு பெண்ணை அனுப்பிவிட கல்லூரியின் அனைத்து தமிழ்ச்சங்க பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொண்டேன், அந்த நாட்களில் இது ஒரு பெரும் பிரச்சனையாய் இருந்தது. இப்படியாக நன்றாய்ப் படித்துக் கொண்டும் வம்பிழுத்துக் கொண்டிருந்ததால் கொஞ்சம் இல்லை நன்றாகவே கெட்டப்பெயர் வாங்கியிருந்தேன்.

வந்துட்டேன் பயணத்திற்கு, இப்படியாக நாங்கள் சுற்றுலாவை துறையூரிலிருந்து தொடங்கினோம், பிரபுவின் வற்புறுத்தலுக்காக மட்டுமே துறையூர் வந்திருந்தோம் ஏற்கனவே பார்த்த ஊர், பார்த்த இடங்கள். இருந்தாலும் புளியஞ்சோலை என்ற பெயர் மனதின் ஓரத்தில் அனைவருக்குமே அறித்துக் கொண்டிருந்ததால் வந்து சேர்ந்த இரவு பிரபுவின் வீட்டில், டைட்டானிக் படம் பார்த்தோம். ஆமாம் பிரபு காதலித்துக் கொண்டிருந்தான். புளியஞ்சோலையில்லாமல் நாங்கள் துறையூர் வந்ததற்கு இன்னொரு காரணம் அவன் காதல். அந்தப் பெண்ணை எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழியென்று கூப்பிட்டுவந்திருந்தான் எங்களை. அது ஒரு பெரிய தமாசு.




காலையில் நாலரை மணிக்கெல்லாம் எழுந்து பார்த்தால், கிராமமே எழுந்திருந்தது. வாழ்க்கையில் நான் முதன்முதலில் ஒரு கிராமத்தை நினைவு தெரிந்து பார்த்தேனேயானால் அது துறையூர் தான். பிரபுவின் அம்மா காலையில் எழுந்து எங்களுக்கெல்லாம் காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு நாங்கள் கிணற்றில் குளித்துவிட்டு வருவதற்குள். ஆறு பேருக்கும் எலுமிச்சை சாதம் தயார்செய்து வைத்திருந்தார்கள். இன்று சொல்கிறேன், அவர்கள் எலுமிச்சை சாதம் செய்து தருவதாகச் சொன்னால் வேலைப் பளுவின் இடையிலும் புளியஞ்சோலை சென்றுவரத் தயாராயிருக்கிறேன்.

புளியஞ்சோலை என்று நான் சொன்ன ஊரை உங்களில் பெரும்பால் ஆனவர்களுக்கு தெரிந்து வாய்ப்பிருக்கிறது. அது ஒரு மலையடிவாரம், அங்கே ஆறு மலைமேலிருந்து ஒடிவருகிறது. மிக ரம்மியமான இடம், ஆனால் கொஞ்சம் மோசமான இடமும் கூட, திருச்சி காதலர்களுக்கான இடங்களில் புளியஞ்சோலையும் ஒன்று. காலையில் ஓட்டிக்கொண்டுவந்து விட்டு சாயங்காலம் திரும்பும் ஓட்டிக்கொண்டு போவதை அனாயாசமாகப் பார்க்கலாம்.

நாங்கள் நன்றாய் மலையில் உள்வரை சென்று அருமையாக கலக்கப்படாமல் இருந்த ஆற்றுநீரை ஐந்துமணிநேரம் கலக்கிவிட்டு, பின்னர் எடுத்த பசியில் கொண்டு வந்திருந்த எலுமிச்சை சாதத்தை முடித்திருந்தோம். இந்த விஷயத்தில் பெரியவர்களின் அனுபவம் ஆச்சர்யம் அளிக்கும். நாங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் பிரபுவின் அம்மா கட்டிக்கொடுத்த அதிகப்படியான சாதம் எங்களுக்கு சொல்லப்போனால் மிகச்சரியாக இருந்தது.



இப்படியாக நாங்கள் புளியஞ்சோலை பயணத்தை முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்த ஊர், ஜெயங்கொண்டம், இது பார்த்திபனுடைய சொந்த ஊர். அவர்கள் வீட்டில் தறிநெய்வது தான் தொழில். அம்மா அப்பா தம்பி, தங்கை சில சமயங்களில் பார்த்தியும் நெய்வதுண்டு என்று சொல்ல எங்கள் அனைவருக்கும் நாங்களும் நெய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. ஆனால் அதையெல்லாம் சொல்லி அவர்கள் பிழைப்பை கெடுத்து விடாமல் தவிர்த்துக் கொண்டோம்.

இன்னுமொரு விஷயம் பயணத்தை தவிர்த்து, நாங்கள் அனைவரும் கல்லூரி படிப்பவர்கள் எங்கள் வீடுகளும் அத்துனை வசதியானது கிடையாது, அதுவும் கல்லூரி படிக்கும் ஆறு தடிமாடுகளுக்கு சாப்பாடு ஆக்கிப்போடுவதென்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அதனால் நாங்கள் பயணத்தின் ஆரம்பத்திலேயே கணக்குப்போட்டுக் கொண்டது. யாருடைய வீட்டிலும் சாப்பிடுவது இல்லையென்று. ஆனால் பிரபுவின் வீட்டிலேயே இந்த விரதம் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் புளியஞ்சோலையில் சாப்பிட வேறு இடம் கிடைக்காது என்ற காரணத்தால் அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.

காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து விட்டு தயாராகிவிடவேண்டும், பெரும்பாலும் இரவுகளில் தூங்குவதில்லை சீட்டுக்கட்டு(ஏஸ்) ஆட்டம் போடத் தொடங்கினால் அது முடிய இரண்டு மணிநேரம் ஆகும் பிறகு பிரபுவை வம்பிழுக்க ஆரம்பித்தோமானால் ஒரு வழியாக நாங்கள் தூங்க மூன்று மணியாகிவிடும் பிறகு ஒரு மணிநேரத்தில் எழுந்து கிளம்பிவிடவேண்டும். வேண்டுமானால் தங்கும் வீட்டில் காப்பி சாப்பிடாலாம்.

ஆனால் நாங்கள் சாப்பிடுவதைப் பார்க்க வேண்டுமே, எப்படியும் அந்த ஊரை தெரிந்தவன் ஒருவன் இருப்பான் என்பதால் அவனிடம் கேட்டுக்கொண்டு அன்லிமிட்டட் மீல்ஸ் கிடைக்கும் கடைக்குச் சென்றுதான் சாப்பிடுவது, காலை மதியம் இரண்டிற்கும் சேர்த்து ஹோட்டலில் சாப்பாடு சமைத்து தயாரான பதினொன்று மணிவாக்கில் உட்கார்ந்தோமானால் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டுத்தான் நகர்வது.



ஜெயங்கொண்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது அது, பார்த்திபனின் வீட்டிற்று பக்கத்தில் ஜோசியக்காரர் ஒருவர் வீடும் இருந்தது. பார்த்தின் வற்புறுத்தி அனைவரும் ஜோசியம் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட என்னைத் தவிர்த்த அனைவரும் பார்த்தனர்.

பின்னர் நாங்கள் வந்திறங்கிய இடம் தான், ஜெயங்கொண்ட சோழபுரம் எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல் தெரிகிறதா, அதுதான் கங்கை கொண்ட சோழபுரம். ராஜேந்திரன் அதாவது ராஜராஜனின் மகன் கட்டியக் கோவில், தந்தைக்கும் மகனுக்கும் என்ன காண்டு என்று தெரியாது. அப்பனைப் போலவே மகனும் பிரம்மாண்டமாய் ஒரு கோவில் கட்டியிருந்தான்.

ஆரம்பத்தில் மிகவும் மோசமாக பராமரிக்கப்பட்டு இருந்ததாகவும் தற்சமயம் இந்திய தொல்பொருள் துறையினரிடம் இருப்பதலால் கொஞ்சம் நன்றாய் இருப்பதாகவும் பார்த்திபன் சொன்னான். வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோவிலை பார்த்தே ஆவது என நான் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்ததால், அவனுடைய அப்பா போட்டுக் கொடுத்த பிளானையை கொஞ்சம் மாற்றி கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்திருந்தோம்.

அழகான அமைதியான ஊர், புல்வெளிகளுக்கு மத்தியில் சிவன் கோவில். மற்றவர்கள் ரொம்பத் தீவிரமாக சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க நான் சுற்றிப் பார்த்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி சிறு அறிமுகம்.

உடையார்ப் பாளயம் தாலுகாவில் 16 மைல் நீளத்திற்கு வடக்குத் தெற்காக ஒரு கரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், வலிமை வாய்நத பல பெரிய கலிங்குள் உள்ளன. இது முன் காலத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பெரிய குளம் அல்லது ஏரிக்குக் கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஒரு கால்வாய் அதனுடைய தென் கோடியில் இந்த ஏரிக்குள் நுழைகிறது. இதுவே இந்த ஏரியின் முக்கியமான வருவாய்க் காலாகும்.

ஏரியின் வடபகுதியில் நுழையும் ஒரு சிறு கால்வாய் வெள்ளாற்றின் நீரையும் இங்கு கொண்டு வருகிறது. இந்த ஏரி தூர்ந்து விட்டதால், பல ஆண்டுகளாக அது எவ்விதத்திலும் பயன்படவில்லை. அந்த ஏரியின் நடுப்பகுதி முழுவதிலும் உயர்ந்த அடர்த்தியான புதர்களும் குறுங்காடுகளும் நிறைந்து பாழாகிவிட்டது. இந்த ஏரி, படையெடுத்து வந்த ஒரு படையினர் வேண்டுமென்றே செய்த கொடுஞ்செயலால் அழிந்து விட்டதாகத் தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டுவருகிறது.

ஏரியின் தென் கோடியில் காடு சூழ்ந்த ஒரு கிராமம், கங்கைகொண்டபுரம் என்னும் பெயரால் இருந்து வருகிறது. அதன் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய அளவினதும், அரிய வேலைப்பாடு உடையதுமாகிய ஒரு கோயில் இருக்கிறது. அதற்கு அருகே காடுசூழப்பட்ட பகுதியில் பழைய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. மலை மேடுகள் போலவும் குவியல்கள் போலவும் உள்ளன.

இவை பழங்காலத்து பாபிலோனை நினைவுப் படுத்துகின்னற. மிகப் பரந்த பகுதியில் அழகிய ஒரு அரண்மணை இருந்தது என்றும் அதன் பல்வேறு பகுதிகள் தான் இவ்வாறு இடிபாடுகளாகக் காட்டியளிக்கின்றன என்றும் கிராமத்திலுள்ள முதியோர் சொல்கின்றனர்.

இந்த அரண்மனை இருந்த காலத்தில் கங்கைகொண்டபுரம் முடியடைய மன்னர் ஒருவரின் செல்வமுக் செழிப்பும் நிறைந்த தலைநகராக விளங்கியது. இப்போது ஒற்றையடிப்பாதை ஓட இல்லாத காடாகக் காட்சி தரும் பகுதியில் மைல் கணக்கான பெரும்பரப்புக்கு இந்த ஏரி வளத்தை வாரி வழங்கிற்று.

இந்த மாபெரும் அணையை மீண்டும் கட்டவேண்டும் என்று அடிக்கடி பேசப்பட்டு வந்திருக்கிறுது.

என்று 1855 ம் ஆண்டில் வெளியான ஸ்தல சஞ்சிகை ஒன்று நினைவு கூர்கிறது.

இவ்வாறெல்லாம் நினைவுகூறப்படும் கங்கை கொண்ட சோழபுரம், இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இம் மன்னனை பற்றிய ஒரு சிறு குறிப்பு, தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும், ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இவனது தந்தை இவனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன். பெருநிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற்குழுக்கள் ஆகிறோரது உரிமைகளைப் பாதுகாக்கவும். அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமுக் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வீரரைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு.

புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புக்களை அழிக்கவும் வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவி புரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றிய பின், அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறு செய்ய அவன் ஒரு சிறந்த கடற்படையும் வைத்திருந்தான்.

இக்கடற்படை உதவியுடன் கிழக்கிந்திய தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வாணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி ஆட்சி செய்த 33-ம் ஆண்டுகளில் இராஜேந்தின் தன்நாட்டை இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும் மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக்கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப்பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான்.

வரலாற்றின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவனான இராஜேந்திரனின் அரண்மனையும் தலைநகரமும் இன்றிருக்கும் நிலையை நினைத்து கண்ணீர்தான் வந்தது.

இது ஒரு பெரிய சுற்றுலாக் கதையென்பதால் இதனை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன். பின்னர் நாங்கள், மீனாட்சி அம்மன்கோவில், பெரிய கோவில், சூரியனார்க் கோவில், பாரி ஆட்சி செய்த ஒரு மலைக்கோட்டையில் இருக்கும் ஒரு கோவில் (பெயர் மறந்துவிட்டது) என ஏறக்குறைய 20 கோவில்களுக்கு மேல் சென்றோம். முடிந்தால் என் பக்கத்தில் அதைப்பற்றி குறிப்புக்களை எழுத முனைகிறேன்.

--------------------------------

இது நான் தமிழோவியத்திற்காக எழுதிய ஒரு பதிவு.

பதின்மத்தில் நான் செய்த பயணம்

நன்றி தமிழோவியம். வாய்ஸ் பதிவு போட்டப்ப நினைவில் வந்தது, தேடிப் பார்த்தேன் என் பதிவில் என் கண்ணில் படாததால் மீண்டும் ஒருமுறை.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In கவிதைகள் சொந்தக் கதை

எழுதப்படாத என் கவிதைகள்



பாப்லோ நெருதாவைப் பற்றி எழுத அரிப்பெடுக்கும் என் நினைப்பை மட்டப்படுத்திக் கொண்டிருக்கிறேன், உள்ளிருந்து வெளிப்பட்டதும் மறைந்துபோய்விடுவதாய் நினைக்கும், மீண்டும் இன்பக்கிளர்ச்சி வருவதேயில்லை.

--------------------------

நழுவிச் செல்லும்
சொற்களைப் படிமமாக்கி
அழகுபடுத்தப்படும்
அக்கவிதை
ஒருமுறை படிக்கப்பட்டதும்
இறந்துபோனதாய் உணரப்படுவதால்
அழிக்கப்படுகிறது
இரைச்சலுடன் பறந்துபோகும்
சொற்களைப் பார்த்தவாறே
நிரப்பப்படாத பக்கங்களாய்
எழுதப்படாத என் கவிதைகள்.

- நான் தான் எழுதினேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சொந்தக் கதை

ஏனிந்த கொலைவெறி "செந்தழல்" ரவி

சமீபத்தில் வெட்டிப்பயலின் ஒரு பதிவைப் படிக்க நேர்ந்தது. நிச்சயமாய் அந்தப் பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கலாம் தான். ஆகக்கூடி ஒரு ஜல்லிப்பதிவு போடுவதுன்னு ஆச்சுது. சரி அதேநேரத்தில் பதிவிடும் நேரத்தை ஒரு நல்ல மனிதனுக்காக செலவிடும் நல்ல எண்ணத்தில் இந்தப் பதிவு.

உண்மையில் எனக்கு ஆரம்பத்தில் தெரிந்த செந்தழல் ரவி, ஒரு சாதாரண பதிவர் பின்னூட்டங்களில் ஜல்லியடிப்பவர் அவ்வளவே. சொல்லப்போனால் ஒரு 'வடை' பிரச்சனையில் எனக்கும் அவருக்கும் பிரச்சனை கூட இருந்தது.

ஆனால் அவர் இந்த வேலைவாய்ப்பு விஷயத்தை தொடங்கியதும், (நான் படித்ததும்) செய்த முதல் வேலை எனக்குத் தெரிந்த வேலை வாய்ப்புக்களை அவருக்கு அறிமுகப்படுத்தியது. அவருக்கு அந்தச் சமயம் தொலைபேசியிருந்தேன். வெட்டிப்பயல் சொன்ன அத்தனையும் உண்மை, கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகாத என்னைப் போன்ற மேல்மாடி காலியாயிருந்த(நான் மட்டும் - இது கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகாத மற்றவர்கலை குறிக்கவில்லை) மக்களுக்கு எவ்வளவு உதவியாகயிருக்கும் என்பது.

என்னுடைய ஓட்டை( ;-) ) இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் டெல்லியில் வேலை தேடிய அனுபவத்தில் எனக்கு நன்றாகவேத் தெரியும். எனக்கு வெட்டிப்பயலைப் பற்றித் தெரியாது ஆனால் இந்தப் பதிவை யார் கேட்டுக்கொண்டும் நான் எழுதவில்லை.

வாழ்க நீ எம்மான், வளர்க உன் தொண்டு.

----------------------------------------------------

என்னை நேரில் பார்த்த அதாவது நான் தான் என்று தெரிந்து பார்த்த இரண்டு பதிவர்களில் செந்தழலாரும் ஒருவர். ஒரு அபாக்கியமான சமயத்தில் நாங்கள் பார்த்துக் கொள்ள நேர்ந்தது. என்னுடைய டெபிட் கார்ட் தொலைந்து போய், அதை இன்னொரு நபர் ஸ்வைப் பண்ணிக்கொண்டிருந்த வேளையில் நடந்த சந்திப்பு அது.

சொல்லிக்கொள்ளும் படியாக அவர் நிறையப் பேசினார். நான் வழக்கம் போல் ஜல்லிதான். ஆனால் நான் நினைத்ததுதான் நடந்தது, என்னுடைய வயசை அவர் சுத்தமாக நம்பவேயில்லை. அடுத்த முறை பார்க்கும் பொழுது பாஸ்போர்ட் சகிதம் பார்த்து உண்மையை நம்பவைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

அவரிடம் ப்ராமிஸ் செய்த ஒரு விஷயத்தை செய்யவில்லை, விஷயம் அவருக்குத் தெரியும். வேறென்ன கேட்கப்போகிறேன்.

மாப்பு, மாப்பு மற்றும் இன்னொரு முறை மாப்பு.

-----------------------------

தலைப்பு வழக்கம் போல ஜல்லி தான், அர்த்தம் கேட்டால் ஐகாரஸிடம் அனுப்பிவிடலாம் என்று தான் நினைத்தேன் பின்னர் ஒருவழி எழுதுவதில் தவறில்லையென்று. "வேலையில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு வாங்கித்தந்தே தீருவேன் என்று ஏனிந்த கொலைவெறி "செந்தழல்" ரவி உங்களுக்கு?". இதுதான் நான் நினைத்த தலைப்பு. தமிழ்மணம் தாங்காது ஆதலால் எனக்கு வேண்டிய பாகத்தை வெட்டி ஒட்டி இந்த தலைப்பு.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சுய சொறிதல் சொந்தக் கதை பெங்களூர்

பெங்களூரில் இன்று

சொல்லப்போனால் நேற்று, உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். இங்கே இந்து முஸ்லீம் பிரச்சனை நடந்தது. பெங்களூரின் சிவாஜி நகர் பகுதி முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதி. அவர்களில் ஒரு பகுதியினர், சதாம் உசேனைத் தூக்கிலிட்டதைக் கண்டித்து ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். கண்டித்தது இந்திய அரசாங்கத்தைக் கண்டித்தில்லை அமேரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து.

வழியில் ஒரு கோவிலில் பிரச்சனை செய்ததாகக் கேள்வி.

இது நடந்த பிறகு, நேற்று விஷ்வ இந்து பரிஷத்தின் ஒரு மாநாடு எங்கள் வீட்டுப்பக்கத்தில் நடப்பதாகயிருந்தது. அது மட்டும்தான் தெரியும் எனக்கு. நானும் ரொம்ப நல்ல பிள்ளையாய் ஞாயிற்றுக்கிழமை பொட்டி தட்ட கம்பெனிக்கு வந்துவிட, ஏதேதோ பிரச்சனைகளால் நிம்மதியாகப் பொட்டி தட்ட முடியாமல் மனம் அலைபாய வேண்டாம் வீட்டிற்கே சென்றுவிடுவோம் என்று நினைத்து வெளியே வந்த பொழுதுதான் தெரிந்தது. வெளியே பிரச்சனை நடந்து கொண்டிருந்தது.

எங்கள் கம்பெனியிருக்கும் கட்டிடத்தை பாதுகாக்கும் காவலாளிகள், வெளியே பிரச்சனை நடக்கிறது அதனால் உங்களை வெளியே விடமுடியாது என கட்டிடத்திற்குள் சிறை வைக்க, காபி டேவிற்கு நூறு ரூபாய் அழுதது தான் மிச்சம். பின்னர் ஒன்றிரண்டு மணிநேரத்திற்குப் பிறகு பிரச்சனை ஒரளவிற்கு சரியானதுபோல் தெரிந்ததால் வெளியிட வீட்டிற்கு வந்தேன். நேற்று நான் இருக்கு அல்சூர் ஏரியா முழுவதும் கடையடைப்பு நடந்ததுபோல் ஒரு கடையும் ஓப்பனாகயில்லை. பால் வாங்கவே சிரமப்பட்டேன். அப்படியே காப் சிரப்பும்.

காலையில் டீவியில் தான் சொன்னார்கள், சிவாஜிநகரிலும் அதைச் சுற்றியுள்ள் இடங்களிலும் கர்ப்யூ என்று. வேகவேகமாக கம்பெனிக்குப் போன்செய்து வரணூமா என்றால் இன்னும் வீட்டில் தான் இருக்கிறாயா என்று மறுகேள்வி வந்தது. காலையில் இருந்து தலைக்குமேல் choppers பறக்கிறது. பல கம்பெனிகள் லீவுவிட்டதாக அறிகிறேன்.

--------------------------------

கங்குலி அவ்வளவுதான் என்று எழுதிய பதிவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. என்னைப் பொறுத்தவரை இந்திய அணியின் அட்டிட்யூட் மாற மீண்டும் கங்குலியை கேப்டனாக்க வேண்டும்.

அன்று அவ்வளவுதான் கங்குலி காலி, அவுட் ஆப் பார்ம் அப்படி இப்படி என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் தெரியவில்லை.

---------------------------------

புளிநகக் கொன்றை படித்து முடித்துவிட்டேன், இரண்டு நாட்களில் ஆரம்பம் கொடுத்த எதிர்பார்ப்பை நிச்சயமாக அவரால் கடேசிவரை கொண்டு செல்ல முடியவில்லை. இன்னொருநாள் நேரமிருந்தால் என் முதல் புத்தகவிமர்சனமாக புளிநகக் கொன்றை வரலாம்.

இப்பொழுது எடுத்துவைத்திருப்பது, மூன்று விரல் மற்றும் ரமேஷ் பிரேமின் பேச்சும் மறுபேச்சும். பின்நவீனத்துவம் நோக்கிய என் பயணத்தின்(?) ஒரு நல்ல வழிகாட்டியாக இந்த(?) புத்தகம் அமையும் என்று நினைக்கிறேன். மற்றபடிக்கு மூன்று விரல் என்னைப் போன்ற ஒரு கம்ப்யூட்டர் ஆசாமியின் உண்மையை உண்மையாகச் சொல்லுவதால் ஆர்வம் அதிகமில்லையோ என்னவோ இரண்டு பக்கம் தொடர்ச்சியாகப் படிப்பதே கடினமாக இருக்கிறது. ஆனால் அரசூர் வம்சம் இப்படிக் கிடையாது நல்ல ஒரு மாந்திரீக யதார்த்தக் கதை.

-----------------------------------

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In Only ஜல்லிஸ் சொந்தக் கதை சொர்க்கவாசல்

பெத்தபெருமாள் == பணம்(photos updated)

எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ச்சியாக பலமுறை, பல வருடங்களுக்கு செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் அந்த நிகழ்வு வித்தியாசமாய்ப்படுகிறது. வித்தியாசமாய்ப்படுவதற்கு பல காரணங்கள், பொருளாதாரம், பகுத்தறிவு, ஆட்சிமாற்றங்கள், காலங்களுக்கு இடையில் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள். இப்படி பல காரணங்கள்.

இவை அனைத்தும் எனக்கும் வைகுண்ட ஏகாதெசிக்கும் இடையில் வந்தது தான் இந்தப் பதிவை நீங்கள் படிப்பதற்கான காரணங்கள். அதுவும் என் வரையில் நிறைய மாற்றங்கள், முதன் முறை நான் வைகுண்ட ஏகாதெசிக்குச் சென்றிருந்த பொழுது நான் பள்ளiயில் படித்துக் கொண்டிருந்தேன். பத்து ரூபாய் கிடையாது பையில், பெருமாள் மீதான பாசமும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்விற்கு செல்லும் பொழுது இயற்கையிலேயே உண்டாகும் ஒருவித உற்சாகமும் தான் முக்கியக்காரணம்.







அந்த உற்சாகம் இரண்டாவது கோபுரத்தைத் தாண்டியும் சுத்தமாக வாடிப்போனது தான் உண்மை. ஒரு பக்கம் சந்தன மண்டபம், மற்றும் கிளi மண்டபம் சொல்வதற்கான வழியென எழுதப்பட்டு காலியாகக் கிடந்த ஒரு கியூ இன்னொரு பக்கம் பெரிரிரிரிரிரிரிரிரிரிரிரிய கியூ. காலியாகக் கிடந்த கியூவிற்கும், மற்றப்பக்க கியூவிற்குமான வித்தியாசம் இதற்குள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆறு ஏழு வருடத்திற்கு முன்னர் அந்த மண்டபங்களுக்கு செல்வதற்கான பணம் எவ்வளவு என்று சரியாக நினைவில் இல்லாவிட்டாலும், என்பையில் காசில்லாதது மட்டும் நன்றாக நினைவில் உள்ளது.

பக்திங்கிறது கோயிலுக்குப் போய் நிரூபிக்கும் விஷயமாய் என் குடும்பத்திற்கு இன்றுவரை இருந்ததில்லை, நல்ல நாள் பெரிய நாள்களுக்கு மட்டும் தான் இன்று வரை கோவில்களுக்குச் சென்று வருகிறோம், அதுவும் வருடத்திற்கு இரண்டு மூன்று முறைகள் மட்டுமே. அதனால் நான் ஏகாதெசிக்குச் செல்வதற்கு பர்மிஷன் கிடைப்பதே பெரிய விஷயம். காசு கேட்டால் அவ்வளவுதான். ஆப்வியஸ்லி நான் அந்த கும்பல் நிறைந்த கியூவைத்தான் தேர்ந்தெடுத்தேன். ஒருமுறை அந்தக் கும்பலில் கடந்துப் போய் சொர்க்கவாசலுக்குச் சென்று திரும்பியிருந்தால் உங்களுக்கும் தெரிந்திருக்கும் ஒரு பள்ளிக்கூட மாணவனுக்கு இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச உற்சாகத்தையும் தொலைக்கும் வலிமையுள்ளது அந்தக் கியூ என்ற உண்மை தெரிந்திருக்கலாம். உற்சாகம் அனைத்தையும் தொலைத்துவிட்டு, திரும்ப வீட்டிற்கும் போகும் வழியில்லாமல், வேதனையே என்று கியூவில் நின்றேன்.

கிட்டத்தட்ட ஆறு மணிநேரம், தூங்காமல், உட்காரக் கிடைக்கும் சிறிது ஆப்பர்டியூனிட்டியை உபயோகப்படுத்திக் கொண்டு ஒருவழியாக மார்கழி மாதக்குளிரிலும், சட்டையெல்லாம் நனைந்து உள்நுழைந்து மிதித்த சொர்க்கவாசல் நன்றாக நினைவில் இருக்கிறது. ஆனால் இப்பொழுதைப் போலில்லாமல் பெண் உடலின் மீதான காதல் அதிகமாக இருந்த நாட்கள் அவை. நான் பல பிரச்சனைகளுக்கு நடுவில் சொர்க்கவாசலுக்குப் போயிருந்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்று இப்பொழுது நினைக்கிறேன். அந்த விஷயத்தில் நான் நிச்சயமாய் ஏமாந்து போகவில்லை தான்.

அத்தனையிலும், நான் அன்று சொர்க்கவாசலை மிதித்து விட்டு, உற்சவமூர்த்தியை மட்டும் தான் பார்த்தேன், மூலவரைக் கிடையாது. ஆனால் சாதாரண நாட்களில் பார்த்திருக்கிறேன் என்றாலும் அன்று முத்தங்கி சேவை. ஆனால் அவர்கள் பொது சேவைக்காக திறந்துவிடும் வழி மூலவரை நோக்கிப் போகாது. சொர்க்கவாசலைக் கடந்து கிழக்கு வாசலுக்கு பக்கத்தில் இருக்கும் மணல்வெளிக்கு வந்தால், ரத்தினங்கி அணிந்து சிங்க முக நடனம் ஆடிக்கொண்டிருக்கும் உற்சவமூர்த்தியை பார்த்துவிட்டு வெளியே வந்துப்பார்த்தால் மீண்டும் நீங்கள் ஒரு பெரிய கியூ நிற்கும். சின்ன வயதுதானே எனக்கும் பொறுமையில்லாமல், வீட்டை நோக்கி நடையைக் கட்டியிருக்கிறேன்.

அடுத்த இரண்டு முறையும் நண்பர்களுடன் சென்றிருந்தேன். அதில் ஒரு முறை நல்லா ப்ளான் பண்ணுறேன் பேர்வழியென்று ஒன்பது மணிக்கு முன்பே சென்று உள்சுற்றில் உட்கார்ந்திருந்தோம். ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்திருந்ததைப் போல் இல்லாமல் ஒரு பெரிய கியூவை மட்டும் தான் தாண்டியிருந்தோம், இரண்டு மணிக்கு மேல் உட்கார்ந்திருந்து பின்னர் கிளi மண்டபத்திற்குள் அனுமதித்தார்கள். அந்த இரண்டு முறையும் நாங்கள் ஒரு பெரிய கியூவில் நிற்கவில்லை, அது மட்டுமில்லாமல், நண்பர்களுடன் சென்றிருந்ததால் அந்த இரண்டு முறையும் குதூகலமாயிருந்தது.இந்தப் பதிவை எழுவதற்கான சப்-டைட்டிலாக போட்ட பெத்தபெருமாள் == பணம். கம்ப்யூட்டர் வழக்கப்படி, வலதுபக்கத்திலிருந்து தொடங்குகிறேன்.

பணம், என் வாழ்க்கையின் இதுவரையிலான காலக்கட்டத்தில் பெரும்பாலான சமயத்தில் என்னிடம் இல்லாமல் இருந்த ஒன்று. பெரும்பாலான சமயம் என்பது இருபது வருடங்களுக்கு மேற்ப்பட்ட காலங்கள். அதனாலேயோ என்னவோ என் இந்த இருபத்தி மூன்று வருட வாழ்க்கையில் நிறைய விஷயங்களை அனுபவித்துவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு அடிக்கடி வருவதுண்டு. (அது அப்படியில்லை என்பது உள்மனதிற்கு தெரியும் பொழுதும் சப்கான்ஷியஸில் அப்படி ஒரு பீலிங்.)

பணத்தைப் பற்றி எனக்கு பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. ஒவ்வொரு வருடமும், வைகுண்ட ஏகாதெசிக்கு செல்லும் பொழுதும். சந்தன மண்டபத்திற்கும் கிளி மண்டபத்திற்கும் செல்வதற்கு காசு கொடுக்க வேண்டும் என்று தெரிந்தாலும், கைவசம் காசில்லை என்ற உணர்ந்தாலும், ஒரு கில்டி பீலிங் இருக்கும் வாழ்க்கையில் எதையோ இழப்பதைப் போல். அந்த இடத்திலேயே ஒரு மணிநேரத்திற்கு மேல் நின்று இன்னொரு கியூவில் உள்ளே செல்பவர்களையே பார்த்துக்கொண்டிருப்பேன். எப்படியும் எனக்குத் தெரியும் அந்த வழி வழியாக உள்ளே போக முடியாதென்பது. இருந்தாலும் போலீஸ்காரர்களின் திட்டுக்களையும் கேட்டுக்கொண்டு அங்கேயே நின்றிருப்பேன். அந்த வருடத்திற்கு தேவையான கோபம் அனைத்தையும் சேர்த்துக்கொள்வதைப்போல.

இந்த தடவைக்கு வருகிறேன், சொல்லப்போனால் கிளி மண்டபத்திற்குச் செல்ல ஆகும் இருநூறு ரூபாயும் ஆகட்டும், சந்தன மண்டபத்திற்கு ஆகும் ஆயிரம் ரூபாயும் பாக்கெட்டில் ஹாட் கேஷாக இருந்தது. ஆனால் டிக்கெட், ம்ஹும் என்னிடம் கிடையாது, நான் ஏகாதெசிக்காக ஸ்ரீரங்கத்திற்கு வந்ததே வெள்ளிக்கிழமை மத்தியானம் தான். பிறகெங்கே வாங்குவது டிக்கெட், ஸ்ரீரங்கத்திற்குள் நுழையும் பொழுது ராத்திரி பதினொன்று. பணமிருந்தும் டிக்கெட் வாங்க முடியாத என் நிலை இப்பொழுது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இங்கே தான் நான் வியக்கும் சில விஷயங்கள் நடந்தது, நான் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவேயில்லை, இந்தப் பக்கம் ஏற்கனவே டிக்கெட் வாங்கியிருந்த நபர்கள் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள், இன்னொரு பக்கம் பெருங்கூட்டமாய் மக்கள் கியூ வரிசையில் சேர்ந்து கொண்டேயிருந்தார்கள். அதே பழைய நாட்கள் மீண்டும் நினைவில் வந்தது. ஆனால் ஒரேயொரு வேறுபாடு, ஒன்றே ஒன்று, என்னிடம் பணம் இருந்தது. அந்த ஒரேயொரு விஷயம் எனக்கு நான் எழுதமுடியாத அளவிற்கு நம்பிக்கையைத் தந்தது. அந்த நம்பிக்கையை இந்திய தேசத்தின் மீதான என் நம்பிக்கை என்று சொல்லலாம், ஆனால் சரியா என்று தெரியாது.

அந்தச் சமயத்தில் இரண்டு விஷயங்கள் தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஒன்று போலீஸ்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்து எப்படியாவது ஒரு டிக்கெட் பெறுவது மற்றது அதே போல் ஐயர்களைக் குறிவைப்பது. பத்து நிமிடத்தில் நம்பிக்கை வந்தவனாய் போலீஸ்காரர்கள் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த கேட்கீப்பரை அணுகி விஷயத்தைச் சொன்னேன். மேலும் கீழும் பார்த்தவர், இன்னும் நேரம் இருப்பதாகவும் சற்று காத்திருக்கவும் சொல்ல அங்கேயே நின்று கொண்டிருந்தவனை நோக்கி அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு நபர் வந்து டிக்கெட் இருப்பதாகவும் வேண்டுமென்றால் நூறு ரூபாய் கூடக்கொடுத்து வாங்கிக்கொள்ளச் சொன்னார். ஆயிரம் ரூபாய் செலவழித்துக்கூட உள்ளே செல்ல ஆவலாய் இருந்த எனக்கு நூறு ரூபாய் எம்மாத்திரம்.

அடுத்த நொடி டிக்கெட் என்கையில், சுத்தமாய் இருந்த முதல் கியூவைத்தாண்டி உள்ளே நுaழந்து அடுத்த அடுக்கிற்குள் நுழைந்தேன், இங்கே தான் இராமாநுஜர் சமாதி இருக்கும். அங்கேயும் ஒரு பெரிய கியூ இருக்கும் எனக்கும் நன்றாகவேத் தெரியும் ஏனென்றால் முன்பு நண்பர்களுடன் சென்ற பொழுது ஸ்கிப் பண்ணியது முதல் கியூவைத்தான், இரண்டாம் கியூதான் நான் மேற்சொன்னது. நான்கு முறை முன்பின்னாக சினிமா டிக்கெட் கியூபோல் சுமார் 60 மீட்டர் தூரமுள்ளது இந்த வரிசை. நான் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன் மொத்தமாக இந்தக் கியூவை ஸ்கிப் செய்ய அதாவது தாவிக்குதித்த முன்னேற.

என் நேரம், நான் கியூவில் இணைந்ததும் வந்து நிறைய டிக்கெட் இல்லாத மக்கள் அந்தக் கியூவில் இருப்பதால் டிக்கெட் இருப்பவர்கள் நேராய் உள்ளே போகலாம் என்று சொல்ல, அப்பொழுது உள்ளே செல்ல திறந்துவிடப்பட்டுக் கொண்டிருந்த 200 ரூபாய் டிக்கெட் வரிசை மொத்தத்தையும் ஸ்கிப் பண்ணிக் கொண்டு போக எனக்கு வாய்ப்பு. அப்படி கியூவிலிருந்து வெளiயில் குதிக்கும் பொழுது தெரியாமல்(உண்மையிலேதாங்க) ஒரு அம்மா மீது ஒரு விரல் பட்டிருக்கும் அதுவம் ஷாயித் புடவையின் மீது. அந்தம்மா தமிழ் கிடையாது, தெலுங்கு. ஸ்டுபிட் என்று திட்ட வந்த கோபத்தில் நடந்த விஷயத்தைச் சொன்னேன் அவர்களிடம் இந்தியில்(எனக்கு தெலுங்கு தெரியாது. ஆங்கிலம் பேசுவதை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன்.) அந்தம்மாவுடன் வந்திருந்த இன்னும் மூன்று தெலுங்கு பெண்களும் சேர்ந்து கொண்டு நீ மட்டும் கியூவை தாண்டலாமா யோக்கியமா என்று கேட்க நான் சொன்னேன் போலீஸ்காரர்தான் சொல்கிறார் என்று. பின்னர் தான் தெரிந்தது அந்த அம்மாக்களும் 200 டிக்கெட் வைத்திருந்தவர்கள். என்னைப்போல் எகிறிக் குதிக்க முடியாததுதான் கோபத்திற்கு காரணம் என்று.

பின்னர் அடுத்தக் கியூ, இது ஜஸ்ட் மூலஸ்தானத்திற்கு முன் உள்ளது. இங்கே மொத்த கும்பலே கம்மிதான். அதிலும் விஐபி டிக்கெட், 200 ரூபாய் டிக்கெட், அப்புறம் டிக்கெட் இல்லாத நம்ம மக்கள் என்ற மூன்று வகையான மக்களும் நின்றார்கள். டிக்கெட் இல்லாத மக்கள் உள்ளே போகமுடியாது, விஐபி டிக்கெட்டும், 200ரூபாய் டிக்கெட்டும் உள்ளே போக முடியும். அந்த இடத்தைக் கடந்து உள்ளே நுழையும் பொழுது சரியாக மணி பன்னிரெண்டு பதினைந்து. அங்கே வரை கியூவே இல்லாமல் உள்ளே வந்த ஆயிரம் ரூபாய் டிக்கெட் சந்தன மண்டபம் என்று அழைக்கப்படும் மூலஸ்தானத்திற்கு எதிரில் அனுப்பப்பட, அதாவது மூலவர் இருக்கும் இடத்திற்கு சற்று வெளiயில்.
அந்த மண்டபத்தை அடுத்து வருவதுதான் கிளி மண்டபம், இந்த மண்டபத்தில் உட்கார்பவர்களால், மூலஸ்தானத்திலிருந்து சொர்க்கவாசல் திறக்கச் செல்லும் உற்சவரையே கூடப் பார்க்க முடியும். சரியாகச் சொல்ல வேண்டுமானால் சந்தன மண்டபத்தையும் அதனுடன் ஒட்டியவாறு இருக்கும் மூலஸ்தானத்தையும் ஒரு சுற்று சுற்றிவிட்டுதான் உற்சவர் சொர்க்கவாசலுக்குச் செல்வார். இந்த மண்டபத்தில் இதற்கு முன்பே இருந்திருக்கிறேன் எப்படி என்றால் முன்னர் ஒருமுறை தில்லுமுல்லு செய்வதற்காக கிழக்கு வாசலில் நின்ற சமயம், இராமகோபாலன் வர அவருடன் சேர்ந்து அவர் குரூப்பாக உள்ளே சென்றிருக்கிறேன். அவர் சந்தன மண்டபத்திற்குச் செல்ல நான், வேண்டுமென்றே கிளி மண்டபத்தில் உட்கார்ந்தேன். ஆனால் இந்த முறை நான் உட்கார்ந்த சுற்று கிடையாது அதற்கும் வெளியில்.

இந்த முறை கிளிமண்டபத்திற்குள் நுழைந்த நபர்களiல் இருபதாவது ஆளாய் இருப்பேன் என்று நினைக்கிறேன். முதல் முறையாக முத்தங்கி சேவையைப் பார்த்தது இந்த முறைதான். அதே போல் ஆராம்ஸேயாய் சொர்க்கவாசல் சென்றதும் இந்த முறைதான். என்னவோ இந்த முறை வெளியில் வரும் பொழுது பெத்த பெருமாளையே விலை கொடுத்து வாங்கிவிட்டதாக ஒரு உணர்வு எழுந்ததை தவிர்க்க முடியவில்லை. உள்ளே வந்ததற்கும், எந்தக் கியூவிலும் நில்லாமல் சென்றதற்கும், வசதியாய் பார்த்ததற்கும் பணம் தான் காரணம் என்ற எண்ணம் மனசை விட்டு அகலவேயில்லை(பக்தி தான் இல்லையே என்னிடம்).

சின்னப்புள்ளத்தனமாயில்லை, ஆனால் சில விஷயங்கள் உண்மையிலேயே உறுத்துகின்றன. இந்த முறை எல்லா முறையையும் போலில்லாமல், பொது சேவை ஆறுமணிக்கு மட்டும்தான் விட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் முந்தைய நாள் இரவு டிக்கெட்டிற்காக காத்திருந்த சமயத்தில் போலீஸ்காரர்களிடம் சோஷலிசம்(கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் - அவர்களிடம் பணம் இருக்கிறது கொடுத்து போகிறார்கள், எங்களிடம் இல்லை என்ன செய்ய) பேசிக்கொண்டிருந்த ஒரு குரூப் நான் ஒட்டுமொத்த தரிசனமும் விட்டு வெளியில் வந்த பொழுது வெளி கேட்டிலேயே தான் நின்று கொண்டிருந்தார்கள். நிச்சயமாய் அவர்களுக்கு இன்னும் ஐந்து மணிநேரம் எடுக்கும் முத்தங்கி சேவையையோ இல்லை சொர்க்கவாசலுக்கோ செல்ல.

அதே போல் மூன்றரை மணிக்கு மூலஸ்தானத்தை விட்டு வெளியில் வரும் உற்சவர் உடன் செல்லும் அத்தனை மனிதர்களும் அங்கே பணம் கொடுத்து வந்தவர்கள் தான். விஐபி பாஸ் மக்களைக்கூட எங்களுக்குப் பின்தான் விட்டார்கள். மக்கள் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது இந்த முறை பணம் தான் ஏகாதெசியை தீர்மானித்தது என்று. எனவரையில் 100% சரியான வாதம் தான் அது.

அந்த மக்களுக்கு தெய்வபக்தி இருந்திருக்கும், எல்லாம் அவன் செயல் என்று அந்த மக்கள் நினைத்திருக்கலாம், கலிகாலம் முத்திருச்சுன்னு சொன்ன பாட்டியைப் போல(கிளிமண்டபத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் – பிஎஸ்ஸி படித்து முடித்து வேலையில்லாமல் தவிக்கும் பையனைப்பற்றிச் சொன்னதும், மெயில் ஐடி கொடுத்துவிட்டு வந்தேன்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In Only ஜல்லிஸ் சொந்தக் கதை

புத்தாண்டும் சில முன்முடிவுகளும்

புத்தாண்டு அன்று ஒரு பதிவு போட்டால் நல்லது என நினைப்பதால் ஒரு பதிவு.

வலைபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்தப் பதிவை நான் வரும் ஒரு வாரத்திற்குள் எழுத விரும்பும் சில தலைப்புகள் பற்றிய ஒரு அறிமுகப் பதிவாக போட விரும்புகிறேன்.

வைகுண்ட ஏகாதெசி - பெத்தபெருமாள் = = பணம் (= = வை இஸீக்கோல்ட்டு இஸிக்கோல்ட்டு என்று படித்தால் சாலச்சிறந்தது)
நான் பார்த்த முதல் பின்நவீனத்துவப் படம் பாபெல்(Babel)
காகிதமலர்கள், என் பெயர் ராமசேஷன் - எனக்குப் பட்டவை
சிறுகதை எழுதுவது எப்படி - எனக்குப் பட்டவை
அப்புறம் கைவசம் உள்ள சில புத்தகங்களின் விமர்சனங்கள்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In Only ஜல்லிஸ் சொந்தக் கதை சொர்க்கவாசல்

பெங்களூர் to ஸ்ரீரங்கம்

பெங்களூர் டு ஸ்ரீரங்கம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் வடமாநிலங்களiல் வேலை செய்து வந்ததால் செய்ய முடியாத ஒரு காரியத்தை இந்த வருடம் பெங்களூரில் இருப்பதால் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அது வைகுண்ட ஏகாதெசி அன்று சொர்க்கவாசல் மிதிப்பது. முடிஞ்சிருச்சான்னு கேட்டா இல்லை இன்னைக்கு நைட்டு தான்.

ஆனால் வழக்கம் போல் சில கேள்விகள் எல்லோர் மனதிலும். கடவுள் நம்பிக்கையில்லை என்று சொல்லிக்கொள்ளும் நான், கொஞ்சம் கஷ்டப்பட்டு இந்த சொர்க்கவாசலுக்கு வரும் காரணம் என்ன என்பது அது. அவரவர்கள் அவரவர்களுக்கு பிடித்த முகமுடியுடன் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டார்கள் என்றே சொல்லுவேன்.

அம்மாவிற்கு இன்னும் தன் பையன் முழுசா கெட்டுப்போய்விடவில்லை, இன்னும் தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறான் அதனால் எப்படியாவது சொர்க்கவாசல் மிதிக்க வருகின்றான் என்பதில் ஒரு திருப்தி.

அப்பாவிற்கு, நான் பத்திரமாக வந்து எல்லாம் முடிந்து எந்தவித பிரச்சனையும் இல்லாமல் திரும்பப்போய்விடவேண்டும். இதற்கு நான் வராமலேயிருக்கலாம் என்ற எண்ணம்.

அக்காவிற்கு, நான் கதையெழுதுவதற்கான ஒரு தீம் இந்த கூட்டத்தில் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் தான் நான் இந்த முறை வந்திருக்கிறேன் என்ற நினைப்பு.

நம்ம ஜிகிடி தோஸ்துக்கு, ஸ்ரீரங்கத்துச் சின்ன மாமிகளை பை போடுவதற்காகத்தான் நான் போவதாகவும்.

நம்ம மனசாட்சி(கலைஞருக்கு முரசொலி மாறன் மாதிரியெல்லாம் கற்பனை செய்துக்காதீங்க, உண்மையை மறைக்கத் தெரியாத என் பாகம்னு வேண்ணா வைச்சிக்கோங்க) சொன்னது தான் கொஞ்சம் பக்கத்தில் வருவது மாதிரி இருந்தது. மாமு உனக்கு அந்தச் சம்பவத்துக்குப் பிராமணாஸ் கண்டா ஆகாது, முதலிலே பார்த்த உடனே நம்புறது கிடையாது. ஆனால் இப்ப ப்ளாக் உலகத்திற்கு வந்த பிறகு அது கொஞ்ச கொஞ்சமா குறையிற மாதிரி ஒரு பீலிங்.

இப்ப ஏகாதெசிக்கு ஸ்ரீரங்கத்துப் போனா அங்க நடக்கிற விஷயங்களைப் பார்த்து ஆட்டோமேட்டிக்கா திரும்பவும் மனசில ஊடு கட்ட ஆரம்பிச்சிருவ. அதாவது தூங்கிற சிங்கத்த எழுப்பிடாம அதே சமயத்தில ஒரேயடியா தூங்கிடா பார்த்துக்கிற நீ இல்லையா?

எனக்கென்னமோ இந்த விஷயம் கொஞ்சம் சரி மாதிரி தெரிஞ்சாலும், எனக்கு சாதாரணமாவே கூட்டத்தைக் கண்டால் ரொம்பப் பிடிக்கும். ஆனா அந்தக் கூட்டத்தோட பழகிறதுக்குக் கிடையாது, வேடிக்கைப் பார்க்க. எப்படி கிருஸ்துமஸ் இரவுகளில் சர்சிற்கு செல்கிறேனோ அப்படி. (செக்யூலரிஸ்டு முகமூடி வெளியில் வந்திடுச்சு.)

திரும்பவும் அந்த மனசாட்சி மேட்டருக்கு, எனக்கு கொஞ்ச காலத்துக்கு முந்தியெல்லாம் பாலகுமாரனை ரொம்பப் பிடிக்கும்(இப்ப பிடிக்குமா பிடிக்காதாங்கிறது வேற விஷயம்) அதுக்கெல்லாம் முக்கிய காரணம் எங்க மாமா, அவன் தான் பல நாவல்களைக் கொடுத்து படிக்கச் சொல்லியிருந்தான். வாங்கியும் கொடுப்பான். ஆனால் நன்றாக நினைவில் இருக்கிறது ஒரு ஏகாதெசி முடிந்த அடுத்த நாள் பாலகுமாரன் நல்லவர் இல்லைன்னு ஒரே ஆர்க்யூமெண்ட், ஏன்னு கேட்டா பாலகுமாரன் எப்பப்பார்த்தாலும், கடவுளை பார்ப்பதற்கு காசுகொடுத்தோ இல்லை இன்னபிற விஷயங்களை உபயோகித்தோ ஸ்கிப் பண்ணி போகக்கூடாதுன்னு எழுதியிருப்பாரு.

அந்த ஏகாதெசியில, மேல் சட்டைப்போடாமல்(;))வரிசையை ஸ்கிப் பண்ணி, சாமிப்பக்கத்தில் போய்ட்டார். அதை மாமன் பார்த்துட்டான் அதான் இந்த வெறுப்பு. ஏனென்றால் சாருநிவேதிதா போலில்லாமல், அவருடைய வாழ்க்கையையும் எழுத்தையும் ஒன்றாய்ப் பார்க்கும் நிறைய பேரில் மாமனும் ஒருத்தன். பாவம் மாமாவிற்கு ப்ராக்டிகாலிட்டி ரொம்பச் சுட்டிருக்கணும் அன்னிக்கி. அதே விஷயம் மறுபடியும் மறுபடியும் என்னை சுடணும் அப்படிங்கிறதுக்காகத்தான் நான் ஏகாதெசிக்கு வர்றேன்னு மனசாட்சியே சொன்னாலும்.

இரண்டு கைகளையும் எக்ஸர்சைஸ் செய்வதைப்போல் முன்னால் நீட்டி அந்த கேப்பில் தான் பெற்ற பெண்ணை(ஐயர் பொண்ணுன்னு வைச்சுக்கோங்களேன் – திராவிடப் பிகரை சைட் அடிச்சேன்னா முத்து உதைப்பார், இதே பிராமணப் பொண்ணை சைட் அடிச்சேன்னு தெரிஞ்சா, பிகேஎஸ் இரண்டு வரிக்கதை எழுதுவார். இருந்தாலும் ஒரு உதாரணத்திற்கு)யாரும் கிள்ளிவிடாமல்(புரியும்னு நினைக்கிறேன்) காப்பாற்றி சொர்க்வாசலை கடக்கவைத்து இதற்கிடையே அந்த பல்லியையும் இன்னொரு ஐட்டத்தையும் வேறு காண்பித்து. அப்பப்பா. இதைப் போன்ற விஷயங்கள், பிறகு ஆந்திராவிலிருந்து கோவிந்தனையே மனதில் நினைத்தபடி வரும் தெலுங்கர்கள், சபரிமலைக்கு போகும் அவசரத்தில் கோவிலுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும் சாமிகள். பிகர்களை, மாமிகளை இடிப்பதற்கென்றே வரும் கும்பல் என ஒவ்வொரு தடவையும் எனக்கு வித்தியாசமான பிக்சர் கிடைத்து வருகிறது. ஆனால் ஊஞ்சலாடும் உற்சவர் ஒருவர்தான்(இதைச் சொல்லி தேசிகனின் பதிவில் போன வருடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன்.)

எனக்கு இப்படின்னா நிறையப்பேருக்கு வேறமாதிரியெல்லாம், சீவலி(?) பிடிக்கிறவா, பல்லக்கு தூக்கறவா இப்படி அவரவர்களுக்கு வித்தியாசமாய் ஆனால் நல்ல பொழுது போக்காய்.(எங்க அப்பாவுக்கு தெரிஞ்சது எனக்குன்னு தனியா ஒரு கேபிஎன் புக் பண்ணி பெங்களூர் பார்சல் பண்ணிடுவார். ஏதோ புள்ளை சாமியெல்லாம் கும்பிடுதுன்னு தான் இப்ப வர்றதுக்கு அப்ரூவல் கிடைத்தது. பொழுதுபோக்குன்னு சொன்னேன்னா அவ்வளவுதான்.)

சரிசரி ஏற்கனவே லேட் ஆகிக்கிட்டிருக்கு, நான் கிளம்புறேன். போய் மூலவருக்கு முத்தங்கிசேவையில் ஒரு ஹாய் சொல்லிவிட்டு. பின்னூட்டம் போடுறவர்கள் கேட்டுக்கொண்டால் அவர்கள் சார்பாகவும் ஒரு ஹாய் சொல்வதாக உத்தேசம். வருகிறேன். நாளை இந்த வருட ஏகாதெசி அனுவங்களுடன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சொந்தக் கதை

அயர்லாந்து ஒரு அறிமுகம்

என்னடா இவன் இந்தியாவிலிருந்து அயர்லாந்துக்கு எதுவும் போய்ட்டானா என்று அவசரப்படுபவர்களுக்காக ஒரு சின்ன ப்ளாஷ்பேக். நான் கேன்பேவிலிருந்து மாறி பெங்களூருக்கு வந்தது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். நான் இங்கே வந்து சேர்ந்திருக்கும் ஒரு கம்பெனி ஒரு அயர்லாந்து பேஸ்டு கம்பெனி. இதனாலெல்லாம் நான் அயர்லாந்து ஒரு அறிமுகம் போடவேண்டுமானால். முதலில் அமேரிக்கா ஒரு அறிமுகம் தான் போடவேண்டும்.

சரி விஷயத்திற்கு வரலாம்னா ஒரு கன்டின்யுட்டி வேணும்ல அதனால இன்னும் கொஞ்சம் சுயசொறிதல். அதாவது நான் சேர்ந்திருப்பது ஒரு சிறிய கம்பெனியாக இருந்தாலும்(கேன்பேவுடன் ஒப்பிடும் பொழுது) ப்ரொடக்ட் பேஸ்டு கம்பெனி. இதனால் என்ன பிரச்சனை என்றால் இவர்கள் இன்டஸ்டிரியில் உபயோகப்படுத்தும் ஆர்க்கிடெக்சர்களை உபயோகப்படுத்தாமல்(சரியாகச் சொல்லவேண்டுமானால் - நேரடியாக உபயோகப்படுத்தாமல்) சொந்தமாக ஆர்கிடெக்சர் வைத்திருக்கிறார்கள். (டெக்னிக்கலாக இன்னுமொறு பதிவு போட விரும்புவதால் இப்போதைக்கு சுறுக்கமாக.)

இந்த மாதிரி வைத்திருப்பதால் வரும் கஷ்டம் என்ன என்றால் கூகுளாண்டவர் கோட் எழுத உதவமாட்டார். காப்பி பேஸ்ட் எல்லாம் ஒரளவிற்கு மேல் உதவாது. அதன் காரணமாக எங்களுக்கு அந்த ஆர்கிடெக்சரை சொல்லித்தருவதற்காக அந்த ஆர்கிடெக்சரை டிசைன் செய்த மக்களை - இல்லை நன்றாக அந்த ஆர்கிடெக்சர் அறிந்தவரை - இல்லையென்றால் என்னைப்போல பெரிய கம்பெனியில் இருந்து வந்த மக்களை கொஞ்சமாவது சமாதானப்படுத்துவதற்கு - அயர்லாந்து மக்கள் வந்திருந்தார்கள். அப்பாடா ஒருவழியா கதைக்கு வந்துட்டேன்.

ஒரு நாள் என்ன ஆச்சுன்னா, அன்றைக்கான வகுப்புகள் இல்லாததால் வழக்கம் போல் தமிழ்மணத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு மெயில் உடனடியாக நாம் எல்லோரும் சந்திக்கிறோம் என்று. (நாம் என்பது அந்த அயர்லாந்துக்காரர் மற்றும் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நாங்கள்). நான் என்ன நடந்தது என ஒன்றும் புரியாமல் ஆகா நாம எக்ஸர்சைஸ் ஒழுங்கா செய்யாம டிமிக்கி கொடுக்கிறது தான் தெரிஞ்சு கூப்பிடுறான் போலிருக்குன்னு நினைச்சுக்கிட்டு. இருந்தாலும் வடிவேலு மாதிரி இருக்கிற மீசை விறைப்பா வைச்சிக்கிட்டு உள்ள போனேன் அந்த கான்பிரன்ஸ் அறைக்கு.

அந்த மனிதர் அயர்லாந்தைப் பற்றி பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு கொஞ்சம் போல் நிமிர்ந்து உட்கார்ந்தேன். விஷயம் என்னான்னா - பயிற்சி எடுத்துகொண்டிருந்த ஒரு அதிகப்பிரசங்கி, அந்த நபரிடம்(பேரு டோனின்னு வைச்சுக்கோங்களேன்.) அயர்லாந்து ஒரு நாடில்லை போலிருக்கே, அது இங்கிலாந்தோட ஒரு மாநிலமாமுல்ல - என்பதாகவோ இல்லை அதற்கு ஈடான ஒன்றையோ கேட்டுத் தொலைக்க எனக்கு இந்தப் பாடம். பெரும்பாலும் இது போல் பயற்சியளிக்க வருபவர்கள் கொஞ்சம் நெருக்கமாக பழகமாட்டார்கள். முக்கியமாக தற்பெருமை பேசமாட்டார்கள் அதனால் தான் டோனி முதலில் இதைப்பற்றி ஆரம்பித்ததும் நான் மலைத்தது - இதற்கெல்லாம் காரணம் நாட்டுப்பற்று என்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.

இனிமேல் கொஞ்சம் போல் அயர்லாந்து ஒரு அறிமுகம்.

எனக்கு அயர்லாந்து இங்கிலாந்தின் ஒரு மாநிலம் கிடையாது அது ஒரு தனிப்பட்ட நாடென்று தெரியும். அதேபோல நார்தர்ன் அயர்லாந்து பிரச்சனையும் கொஞ்சம் தெரியும். எப்படின்னா ஒரு சமயம் எந்த தேசத்தின் தேசியப்பாடல் சிறந்தது என்பதாகவோ இல்லை அதற்கு ஈடானதோ ஒரு போட்டியை பிபிசி(?) அறிவித்திருந்தது. அந்த முடிவுகளில் நார்தர்ன் அயர்லாந்தின் தேசியப்பாடல் முதல் இடம் பெற்றதாக ஞாபகம். விடுதலைப்புலிகளினுடையது இரண்டாவது வந்ததென்று நினைக்கிறேன். (நான் நிச்சயமாக போட்டோஜெனிக் மெம்மரி உடையவனெப்பது எனக்கு தெரியும் ஆனால் வரவர சாதாரண விஷயங்களை கூட நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.)

என்ன பிரச்சனை என்றால், இந்தியாவைப் போல் அயர்லாந்தும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் தான் முழுமையாக இருந்தது. பின்னர் 1949ல் இரண்டாம் உலகப்போரின் பின் சுதந்திரம் அடைந்து ரிப்பப்ளிக் ஆப் அயர்லாந்து என்ற பெயரில் தனிநாடனது. அங்கே தான் ஒரு சின்ன பிரச்சனை. நம்முடைய காஷ்மீரைப்போல(இது ஒரு சாதாரணமான கம்பேரிஸன் - மக்களுக்கு பிரச்சனை புரியவேண்டுமென்பதற்காக மட்டுமே.)

பிரச்சனை என்னவென்றால் அயர்லாந்தின் ஒட்டுமொத்த பகுதிகளும் கிறிஸ்துவத்துன் ஒரு பிரிவான கேத்தலிக் மக்களைக்கொண்டது. ஆனால் நார்தன் அயர்லாந்து பெரும்பான்மையாக ப்ரோட்டஸ்டண்ட் பிரிவினரைக்கொண்டது. இதனால் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்த பொழுது இந்த வட அயர்லாந்து மக்கள் மட்டும் தாங்கள் இங்கிலாந்துடன்(இங்கிலாந்து ஒரு ப்ரோட்டஸ்டண்ட் நாடு) இருந்துவிடுவதாக சொல்லிவிட. இன்று வரை வட அயர்லாந்து இங்கிலாந்தின் ஒரு பகுதி. அந்த அதிகப்பிரசங்கியும் இந்த வட அயர்லாந்தை மட்டும் எடுத்துக்கொண்டு இங்கிலாந்தின் ஒரு பகுதி தான் ஒட்டு மொத்த அயர்லாந்து என்று சொல்லிவிட நான் இங்கே உங்களுக்கு இதையெல்லாம் விளக்குகிறேன்.

இன்னமும் வட அயர்லாந்தில் இருக்கும் கேத்தலிக் மக்கள்(சொல்லலாமா?) வட அயர்லாந்து அயர்லாந்துடன் இணைந்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இது தான் சுருக்கமான இல்லை மிகச்சுருக்கமான அயர்லாந்தின் வரலாறு.

கேலிக் புட்பால்னு ஒரு அய்ட்டம். அப்புறம் ஒரு வகையான ஐரிஷ் டான்ஸ்.

இந்த கேலிக் புட்பால் என்கிற அய்ட்டம் கொஞ்சம் போல் புட்பால், கிரிக்கெட், ஹாக்கி எல்லாம் கலந்த ஒரு கலவை. உண்மை என்ன என்பது தெரியாது ஆனால் டோனி இந்த ஆட்டத்திலிருந்து தான் கிரிக்கெட் கொண்டுவந்தார்கள் என்பதைப் போன்ற ஒன்றை சொன்னார். ஆனால் நான் கூகுளை நாடவில்லை இதைக் கண்டுபிடிக்க.

மற்றது ஐரிஷ் டிரடிஷினல் மியூசிக் வகையில் வரும் ஒரு வகை டான்ஸ். நான் ரொம்ப நாளாக இந்த வகை டான் ஸ்பானிஷ் வகையறா என்று தான் நினைத்து வந்தேன். இந்த டான்ஸில் ஒரு விஷயம் அவர்கள் இந்த ஷூக்களை ஒரு சின்க்கில் ஆடும் பொழுது ஒரு பிரபலமானவர் ஒரு செகண்டில் அந்த ஷூவை 100க்கு பக்கத்தில் தட்டுவார் எனவும் டோனி சொன்னார். ரியலி அம்மேசிங். உங்களுக்காக ஒரு கேலிக் புட்பால் வீடியோவும், இந்த டான்ஸ் வகையறாவும் யூடுயூபில் கொடுக்கிறேன். பார்த்து மகிழுங்கள்.



இரண்டு நிமிஷங்களுக்கு பிறகு வரும் அந்த டான்ஸைப் பார்க்கத் தவறாதீர்கள்




கடேசியில் ஒரு விஷயம் மற்றும் சில டீட்டெய்ல்ஸ்.

விஷயம் என்னன்னா டோனி இந்தக் கதையெல்லாம் சொல்லி இனிமேல் நீங்களெல்லாம் யாரவது ஒரு நபரிடமாவது அயர்லாந்து தனிநாடு. இங்கிலாந்தின் மாநிலம் என்பதை விளக்கவேண்டும் என கொஞ்சம் விளையாட்டாகச் சொன்னார். நான் அதைச் செய்து விட்டேன். இன்மேல் உங்களிடம் யாராவது மேற்சொன்ன விஷயத்தைச் சொன்னால் ப்ளீஸ் விளக்கவும்.

அப்புறம் அந்த டீட்டெய்ல்ஸ், டோனி அயர்லாந்தில் பிறந்தவர்களைப்(சில சமயம் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அயர்லாந்து தொடர்பு உள்ளவர்களைப்) பற்றிச் சொல்லும் பெரும்பாலானோர் வியந்துதான் போனோம் நீங்களும் அந்தப் பட்டியலை ஒரு முறைப் பாருங்கள்.

Irish People

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In Only ஜல்லிஸ் சொந்தக் கதை

ஒரு அறிவிப்பு

இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு நிச்சயம் செய்யணுமா என்று தான் நான் முதலில் நினைத்தேன். ஆனால் என்னை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகத்தான் இந்த அறிவிப்பு.

தமிழ்மணமும் அதன் வாசகர்களும் ஒரு திணிப்பை அளித்திருப்பதாகவே பல சமயம் நினைத்திருக்கிறேன். எப்படி என்றால் உண்மையான வலைப்பதிவென்பது நாள்தவறாது எழுதப்படும் டைரி போல் இல்லாமல், சுவாரசியமாகவும் நிறைய பேர் படிப்பதற்காகவும் எழுதப்படும் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கைப் போல் மாற்றப்பட்டுவிட்டதாகவேப் படுகிறது எனக்கு.

இதில் நிறைய அட்வான்டேஜ்கள் இருந்தாலும் பல டிஸ் அட்வான்டேஜ்களும் இருப்பதாகப் படுகிறது. என்னைப்போன்ற ஒரு நாளைக்கு பதினெட்டு மணிநேரமும் கணிணியையே பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பத்து வரி அன்றைய நாளைப்பற்றி எழுதுவது என்பது கொஞ்சம் கஷ்டமான வேலை கிடையாது தான்.

ஆனால் தினம் தினம் புதிதாகவும், வித்தியாசமாகவும், அனைவரையும் கவரும் விதத்திலும் பதிவிடுவதென்பது முற்றிலும் இயலாத ஒன்றாகிவிட்டது. எதுக்கு இந்த பில்டப் என்றால். இன்னும் சிறிது நாட்களில்(இரண்டு நாட்களில்) எனக்கு கொஞ்சம் வேலைப்பளூ குறையும் வாய்ப்பு இருப்பதால், 2005ன் ஆரம்பத்தில் இருந்த உத்வேகத்துடன் பதிவெழுதும் வேகத்தை அதிகரிக்கலாம் என்று நினைக்கிறேன்.

குறைந்த பட்சம் நாளைக்கு ஒரு பதிவாவது(!), எல்லோரும் அவரவர்களுடைய வாழ்க்கையை இனிதாக்கிக்கொள்ள பதிவெழுதுவதையே விட்டு வெளியே போகும் பொழுது நான் அதிகப்பதிவெழுதப்போகிறேன் என்று ஒரு அறிவிப்பை விடுப்பதற்கு மேற்சொன்ன காரணம் மட்டும் தான் உண்டு. அதனால் மக்களே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும் என்பதை சொல்லிக் கொள்ளவே இந்தப் பதிவு.

நான் சிறுகதைகள் எழுதுவதை அடியோடு சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்திருப்பதால் தைரியமாக இருக்கலாம் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In Only ஜல்லிஸ் கிரிக்கெட் சொந்தக் கதை

கோ ஆஸி கோ

ஆஸ்திரேலியா டீம் மீண்டும் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது. நான் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.





நட்சத்திரம் - சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள்

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சொந்தக் கதை புத்தகங்கள்

பெங்களூர் புத்தகக்கண்காட்சி

பெங்களூர் புத்தகக்கண்காட்சி

பெங்களூருக்கு வந்து சேர்ந்ததும் வரும் முதல் வாய்ப்பு என்பதால் விட மனசில்லாமல், சென்றிருந்தேன். மனதிலே சில புத்தகக் கணக்குகளுடன்.

பன்சங்கரியில் இருந்து பேலஸ் கார்டனுக்கே முதலில் ஆட்டோவே கிடைக்காமல் அரைமணிநேரத்திற்கு பிறகு கிடைத்தது.

வந்து சேர்ந்ததும் மூன்று கடைகளைத் தேடினேன். முதலாவது காலச்சுவடு, இரண்டாவது உயிர்மை, மூன்றாவது பத்ரியின் கிழக்கு.

முதலாவதும் மூன்றாவதும் வந்திருந்தன.

காலச்சுவடு கடைக்குள் நுழைந்ததுமே, தெரிந்துவிட்டது, தமிழ்க்கடைகளில் காற்றடிக்கும் நிலை, நன்றாக நினைவில் இருக்கிறது. டெல்லியில் நானிருந்த பொழுது நடந்த புத்தகக்கண்காட்சி.

அப்பொழுதெல்லாம் இலக்கியம் என்றால் எனக்கு சுஜாதாவும் பொன்னியின் செல்வனும் தான். அதனால் வந்திருந்த காலச்சுவடு கடைக்குள் நுழைந்து சுஜாதாவின் புத்தகங்களைக் கேட்க அவர்கள் என்னை புழுவைப்போல பார்த்தது அப்பொழுது புரியவில்லை.

ரொம்ப சண்டை போட்டேன் அன்று, சுஜாதா பாலகுமாரன் புக்கெல்லாம் எடுக்காமல் ஏன் வருகிறீர்கள் என்று.

அந்த நினைவுகள் பசுமையாக ஓட, காலச்சுவடு கடைக்குள் நுழைந்து நான் சில புத்தகங்களைக் கேட்டதும். அந்தப் புத்தகக் கடைக்காரரின் முகம் பிரகாசமானதை உணரமுடிந்தது. ரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்த ஜேபி சாணக்கியாவின், என் வீட்டின் வரைபடம் மற்றும் கனவுப் புத்தகம் சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன். அப்புறம் ஒரு படுபாவி வீட்டில் இருந்து ஏற்கனவே இருந்த ஜேஜே, வை சுட்டுக்கொண்டு போய்விட்டதால் அதையும் ஒருமுறை வாங்கினேன்.(இன்னொருமுறை).

என்னவோ இந்தப் புத்தகங்கள் எல்லாம் வாங்கியதாலோ என்னவோ, கொஞ்ச நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சில புத்தகங்களை வெறும் பத்து எண்ணிக்கை போடுவது பற்றி வருத்தப்பட்டார்.

அடுத்து நுழைந்தது, கிழக்கு. ஒரு ஓரமாய் திங்க்பேடும் கையுமாக பத்ரி உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு ஒரு மனநிலைக்கு தயார் செய்து போகாததால் நான் அறிமுகம் செய்து கொள்ளவில்லை.

ஆதவனின் சிறுகதைகள் இவர்கள் கொண்டுவந்த ஞாபகம் இருந்தது. அதனால் நுழைந்ததுமே அந்தப் புத்தகத்தைக் கேட்டேன் ஆனால் வந்ததோ வேறொரு புத்தகம். ஆத்தர் நேமும் ஆதவன் இல்லை புத்தகத்தின் பெயரும் ஆதவன் இல்லை. ஆனால் இந்தப் புத்தகமும் நல்லப் புத்தகம் என்ற விளக்கம் வேறு கிடைத்தது.

சரி போனால் போகிறதென்று வேறு ஒருவர் எங்கேயோ போய் எடுத்துக்கொண்டு வந்தார்(ஷாயித் நிவேதா - இந்த விஷயத்துக்கு பிறகு வருகிறேன்). அந்தப் புத்தகம் கிடைத்தது. அப்புறம் நம்ம ஊர்க் கதையான அரசூர் வம்சம் வாங்கினே. முன்பே கொஞ்சம் நிறைய படித்திருக்கிறேன் திண்ணையில்.

ஆனால் புத்தகமாக இருப்பதில் கிடைக்கும் சுகத்தால் அதையும் வாங்கினேன்.

அந்தச் சமயத்தில் தான் இராகவன்(அவருதான்னு நினைக்கிறேன்!) அந்தப் பக்கம் வந்தார். கையில் ஹெல்மெட் பின்னால் பேக் என்று. ஆனால் நிச்சயமாகத் தெரியாததாலும் என்னுடைய அன்றைய மனநிலை காரணமாகவும் அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை.

இடையில் தான் நினைவில் வந்தது, ஆதவனின் இன்னொரு நாவல். ஆனால் பெயர் நினைவில் வரவில்லை. கிழக்கின் மத்த நபர்களைக் கேட்பதைவிட பத்ரியையே கேட்டுவிடலாம் என்று கேட்டேன். என் பெயர் ராமசேஷன் இல்லாமல் மற்ற நாவல் என்று. என் மனதில் கண்ணீர்ப் பூக்கள் என்ற பெயரே ஒட்டிக்கொண்டு உண்மையான பெயர் வரவேயில்லை. ஆனால் பத்ரி சரியாகச் சொன்னார்.

பின்னர் ராம்கியின் முகவையும், ரஜினி பற்றிய புத்தகதையும் எடுத்துக்கொண்டு முன்னுரையைப் படிக்கத்தொடங்கியிருப்பேன். சார் இந்த கிமு கிபி புத்தகத்தை எடுத்துக்கோங்க என்று பிஸினஸ் ஸ்டிரேடஜி மூஞ்சில் வீசப்பட்டது. பின்னர் இன்னும் இரண்டு மதனின் புத்தகங்களும் அதே கொள்கையுடன் முகத்தில் வீசப்பட, ஹெல்மட் இல்லாமல் ஆம்ப்ரோஸின் பந்தை விளையாடச் சென்ற ஒரு உணர்வு தான். ஆனால் கொஞ்ச நேரத்தில் பொறுக்கமுடியாமல் "மதன் புக் படிக்கிற அளவுக்கு இப்போ மூடில்லை" என்று பின்நவீனத்துவ மூஞ்சியை திருப்பிக் காட்டினேன். பின்னர் ஆரம்பித்தது இட்லிப் பிரச்சனை.

ஜினடின் ஜிடேனை "மொட்டை" என்று சொல்லியதால் தான், அவர் மற்ற அணிவீரரை முட்டித்தள்ளினார் என்ற செய்தி புதிகாகக் கிடைத்தது "இட்லி..." பற்றிய புத்தகத்தின் கேன்வாஸாக. அறிமுகமே சரியில்லாததால்( ;-)).

வாங்கின இரண்டு புத்தகங்களுக்கு பில் போடுங்க என்று கிரெடிட் கார்டைக் கொடுத்தால் அங்கேயும் பிரச்சனை. ரொம்ப வேகமாக கார்ட் நம்பரை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். நான் சட்டப்படி அது குற்றம் என்று இந்தியில்(!) ஆர்க்யூ பண்ண(அந்த பையன் கன்னடிக்கா - இது சிக்கன் டிக்கா இல்லை) ஒன்றும் பேசமுடியாமல் ஹாட்கேஷ் இல்லாத பர்ஸும் வாங்கிய புத்தகத்தை திரும்பக் கொடுக்க மனம் வராமலும் நானும் எழுதிவைத்து வந்தேன்.

திரும்ப வரும்பொழுது ராகவனும் பத்ரியும் வெளியில் பேசிக்கொண்டிருந்தார்கள், ஒருவாரு அவர்தான் என்று உறுதியாகத் தெரிந்தாலும் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விகடனுக்குள் நுழைந்தேன்.

அங்கே சின்ன பையனுங்களெல்லாம் காசுக்கொடுத்து தங்கள் விளம்பரங்களை வருபவர்களுக்கு கொடுக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். சமூக உணர்வு பெருக்கெடுத்து குழந்தைத் தொழிலாளர் வைச்சுக்கக்கூடாது தெரியுமில்லை. என்று தெரியாதவருக்கு சொல்வதாகச் சொன்னேன். அதைக் கண்டுகொண்டதாகவேத் தெரியவில்லை. நான் இதை எழுதி அனுப்புவேன்னு சொன்னதற்கு செய்யுங்களேன் என்று சொன்னதும் வாயையும் மற்றதையும் பொத்திக்கொண்டு வெளியேறினேன்.

கிழக்கிற்கும் உயிர்மைக்கும் என்ன காண்டு என்று தெரியாது. சாதாரணமாகத்தான் கிழக்கில் உயிர்மை வரலையே யாரவது அவங்க புத்தகம் எடுத்துக்கிட்டு வந்திருக்காங்களான்னு கேட்டேன். தெரியாதுன்னு சொல்லிட்டாங்க சரி நானும் அப்படித்தான்னு போய்ட்டேன். திரும்ப மிளகாய் பஜ்ஜி வாங்க வெளிய வரும் பொழுது காலச்சுவட்டைக் கடந்தேன்.

மனுஷ்யபுத்திரனுக்கும், காலச்சுவடிற்கும் பிரச்சனை இருப்பதாக நான் நினைத்து இவரிடம் எப்படிக் கேட்கலாம் என நினைத்து பிறகு, சில இலக்கிய புக் வாங்கிய நல் மதிப்புடன் கேட்டேன், முழு விளக்கங்களுடன் சொல்லிவிட்டு நிவேதாவில் கிடைக்கும் போய்ப்பாருங்க என்று சொன்னார்.

அங்கே வந்து நண்பர் ஒருவர் ஏற்கனவே எடுத்துக்கொண்டு போன ஜீரோ டிகிரியையும். வாங்கிவிட்டுப் பார்த்தால் முகவும், ரஜினியும் கிழக்கு அட்டைகளுடன் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

PS: எழுதியதற்கு அப்பால் தான் பார்த்தேன், கிரெடிட் கார்ட் பற்றி எழுதியிருந்தது கொஞ்சம் போல கிழக்கு நேரடியாக கிரெடிட் கார்ட் எண்ணை வாங்கி எழுதியது போன்ற பிம்பம் என்னால் உருவாக்கப்பட்டிருந்ததை. ஆனால் உண்மையில் கார்ட் டிரான்ஸாக்ஷன்ஸ் செய்தது புத்தகக்கண்காட்சி நடத்தியவர்கள் தான். இது வேண்டுமென்று நடந்த தவறு அன்று. எழுதும் பொழுது சொற்கள் தவறிவிழுந்து வரிகள் வேறு அர்த்ததத்தை உண்டுபண்ணியிருக்கலாம்.

தனிப்பட்ட விளக்கங்களுக்கு நன்றி பத்ரி.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சினிமா விமர்சனம் சொந்தக் கதை

The Departed

அவன் கண்விடல், கதைக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக வலைபதிவிற்காக எதையும் எழுதவில்லை, இடையில் முன்பொருமுறை வந்த விஷயத்தை மீள்பதிவு செய்ததை தவிர. அது செய்துமே ஒரு மாதம் ஆகிறது. இது கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் சில பல நாட்கள் தமிழ்மணம் பக்கம் கூட வராமல் இருந்திருக்கிறேன். தீபாவளிக்காக திருச்சி சென்று வந்தேன். மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருவதாக சந்திப்பின் முந்தைய நாள் தொலைபேசிய தருமியிடம் வாக்களித்தும் வரமுடியாமல் சேய்த இடியாப்பச் சிக்கல்கள்.

வாழ்க்கை ஓடிக்கொண்டேதான் இருக்கிறது, நிற்காமல். அதே போல் மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. கண்ணதாசனின், "மாற்றம் என்பது மானிடத் தத்துவம் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன். கல்லாய் மரமாய் காடுமேடாய் மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்" என்ற வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.

பில்டப் போதும் என்று நினைக்கிறேன், அம்மாவிடம் நான் "கேன்பே" வை விட்டு வேறு கம்பெனியில் சேரும் எண்ணத்தில் இருக்கிறேன் என்று சொன்னபொழுது அம்மா என்னிடம் கேட்டதுதான் நினைவில் வருகிறது. "எப்பிடிடா இவ்ளோ பிடிச்ச கம்பெனியை விட்டு போக மனசுவருது. கஷ்டமாயிருக்காதா?" என்று, அம்மா ஆசிரியை, பெரும்பாலும் ஆசிரியர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு பள்ளியில் இருந்து முடித்து விடுவார்கள். (அம்மா கொஞ்சம் வித்தியாசம் இரண்டு பள்ளிகள், அது கொஞ்சம் உள்ளூர் பாலிடிக்ஸ்.)

நான் சொன்னேன், "அந்தக் காதல் இல்லாமல் எந்தக் கம்பெனி சேர்ந்தாலும் வேலை செய்ய முடியாது என்னால்" என்று. என்னை நன்கறிந்த நண்பர்கள் பலரும் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள் நான் வேலை மாறி பெங்களூர் செல்கிறேன் என்று சொன்னதும். எக்ஸிட் கிளியரிங்கில் கேட்கப்பட்ட, திரும்பவும் கேன்பே வரவிரும்புவீர்களா, போகும் கம்பெனியில் நண்பர்களுடன் கேன்பே அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்களா போன்ற கேள்விகளுக்கு முழுமனதுடனேயே ஆமாம் என்று எழுதினேன்.

பேப்பர் போட்டாச்சுன்னாலே அடுத்த விஷயம் பார்ட்டி தானே, அதுவும் தொடங்கியது. புனேவில் புகழ்பெற்ற ஐநாக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸில் படம் பார்க்கவும் அப்படியே சிட்டியில் டின்னர் சாப்பிடவும் திட்டமிட்டோம். நல்ல நேரம் "த டிபார்டட்" படத்திற்கான டிக்கெட் நாங்கள் நினைத்த நேரத்திற்கே கிடைத்தது. அப்படியே பக்கத்தில் இருந்த "ஃப்லேக்"(Flag) ரெஸ்டாரென்டில் தண்ணி பார்ட்டி, சென்றிருந்தவர்களில் நான் மட்டும் தான் கெட்டபையன் அதாவது தண்ணி அடிக்காத பார்ட்டி. சிக்கன் கபாப்களும், தம்ஸ் அப், மேங்கோ ஜஸ் என்று அவர்களுக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்தேன். அந்தப் பக்கம் பூரா ஷிவாஸ் ரீகல், வழிந்தோடியது. ஷார்ட் ஸ்கர்ட் போட்ட அமேரிக்க பிகர்களை நோட்டம் விட்டபடி ஒரு வழியாக பில் செட்டில் செய்து தியேட்டரில் உட்கார்ந்தோம்.

கேங்ஸ் ஆப் நியூயார்க், தி ஏவியேட்டர் போன்ற படங்களின் இயக்குநர் என்பதாலும், ஜாக் நிக்கல்ஸன், லியனார்டோ டிகாப்ரியோ, மாட் டேமன், மார்க் வால்பர்க், போன்ற தகுதியான நடிகர்களாலும் நல்ல எதிர்பார்ப்புடன் போய் உட்கார்ந்தோம். படம் பூராவும் அமேரிக்கன் எஃப் வேர்ட் தான் ஆக்கிரமித்திருந்தது. எப்படி சென்னை ரவுடிகளைப்பற்றிய படம் எடுக்கும் பொழுதும் "கோத்தா"க்களும் "தே" வேர்டும் நெஸஸரியோ அப்படி. (ரவுடி என்ன ரவுடி "தே" வேர்ட் தவிர்த்த அனைத்து கெட்ட வார்த்தைகளும் அனாயாசமாய் கல்லு\ரிக் காலங்களில் நானே பேசியிருக்கிறேன். ஒரு சென்ட்டென்ஸ் முடியும் பொழுது ஒரு கெட்டவார்த்தை இருப்பதென்பது அப்பொழுதெல்லாம் வழக்கம். ஒரு முறை சென்னையில் தங்கியிருந்த பொழுது சிஃபியில் ப்ரௌசிங் செய்ய போயிருந்தேன். "எஃப்" வேர்ட் ரொம்ப சகஜமாக சர்வசாதாரணமாக சென்டரெங்கும் நிரம்பிவழிந்தது. அது விளையாடும் இடம் என்று நினைவு.)






"அ ப்யூ குட் மேன்" படத்தில் பார்த்த ஜாக் நிக்கல்ஸனா அது. கொஞ்சம் தளர்ந்தது போல் இருக்கிறார். ஆனால் நடிப்பில் இன்னும் அடிச்சி ஆடுறார். மார்க் வால்பெர்க், ஆரம்பத்தில் புதிதாக ஸ்டேட் போலீஸில் சேரும், மாட் டேமனையும், டிகாப்ரியோவையும் இன்டர்வியூ செய்யும் பொழுது அவர் அசால்டாக படம் காண்பிக்கிறார். அவருடைய எக்ஸ்பீரியன்ஸ் தெரிகிறது. "த பிக் ஹிட்" படம் பார்த்துதான் நினைவில் வருகிறது. அவரா இவர் என்று யோசிக்க வைக்கிறது. குண்டா, Eஹுர்ஸ்டைல் மாற்றி, "த பிரெசிலியன் ஜாப்" இரண்டாம் பாகம் 2008ல் வரத் தயாராகிவருகிறது. பார்க்கலாம் அப்பொழுது எப்படி இருக்கிறார் என்று.

ஜாக் நிக்கல்ஸன் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, மாட் டேமென், டிகாப்ரியோ நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. குறிப்பாக தன்னுடைய சக அதிகாரியை போட்டுத்தள்ளும் இடத்திலும், தொடர்ச்சியான மனவழுத்தத்தில் தடுமாறும் பொழுதும் நல்ல நடிப்பு வெளிப்படுகிறது. மாட் டேமென் இயல்பாய் செய்திருக்கிறார். பார்ன் ஐடென்டிடி, பார்ன் சுப்ரிமஸிக்குப் பிறகு நான் விரும்பித் தேர்ந்தெடுக்கும் நடிகர்களில் ஒருவர்.

ஒரே ரத்தம், துப்பாக்கிச்சூடு, கெட்டவார்த்தைகள் தான் இந்தப் படம். கிளைமாக்ஸ் ஒரிஜினல் வாழ்க்கையை காண்பித்தாலும், தியேட்டரை விட்டு வெளிவரும் பொழுது ஒத்துக்கொள்ள முடியவில்லைதான். ஒரு முறை பார்க்கக்கூடிய படம்தான். நடிகர்களின் பிரமாதமான நடிப்பிற்கும், இயக்குநரின் திறமைக்கும், வேகமாக கொண்டு செல்லும் எடிட்டிங்கிற்காகவும் நிச்சயாமய் ஒரு முறை பார்க்கலாம்.

ராத்திரி படம் பார்த்துவிட்டு இரண்டு மணிக்கு மேல், புனேவில் (கொஞ்சமாக இருக்கும்)அற்புதமான ரோட்டில், தடையில்லாமல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்தது இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு நினைவில் இருக்கும் நிச்சயமாய்.


Directed by Martin Scorsese; written by William Monahan, based on the screenplay for the film "Infernal Affairs"; director of photography, Michael Ballhaus; edited by Thelma Schoonmaker; music by Howard Shore; production designer, Kristi Zea; produced by Brad Pitt, Brad Grey and Graham King; released by Warner Brothers Pictures. Running time: 150 minutes.

WITH: Leonardo DiCaprio (Billy Costigan), Matt Damon (Colin Sullivan), Jack Nicholson (Frank Costello), Mark Wahlberg (Dignam), Martin Sheen (Queenan), Ray Winstone (Mr. French), Vera Farmiga (Madolyn), Alec Baldwin (Ellerby) and Anthony Anderson (Brown).

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In இந்தி சொந்தக் கதை டெல்லி

'மென்டாலிட்டி' மாற்றப்படுமா?

ஒரு மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலைப் பார்ப்பதால் 'மென்டாலிட்டி' மாற்றப்படுமா?

இந்தக் கேள்விக்கு நேரடியாக வருமுன்னர், நான் டெல்லிக்கு சென்ற பொழுது எப்படியிருந்தேன் என்பதைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். அது ஒரு கல்லூரி வகுப்பு நாள் தமிழாசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார், அப்படியானால் இரண்டாம் ஆண்டாக இருக்கவேண்டும். அவர் பெயர் 'கோடையிடி' கோபாலகிருஷ்ணன், தமிழில் டாக்டரேட் வாங்கியவர்(அவர் சொன்னது உண்மையென்னும் பட்சத்தில் இன்னும் பலர் வாங்க பேப்பர் எழுதிக்கொடுப்பவர்.) திருச்சி பட்டிமன்றங்களில் நீங்கள் சர்வசாதாரணமாய் கேள்விப் பட்டிருக்கக்கூடிய ஒருவர்.

எடுத்துக்கொண்டிருந்த பாடம், "தமிழர்களின் வீரம்" உதாரணம் சொல்லிக்கொண்டிருந்தது கம்பராமாயணத்தின் ராமனைப் பற்றி, கொஞ்சமும் கவலைப்படாமல் நான் கேட்டேன் 'சார் தமிழனுக்கும் ராமனுக்கும் என்ன தொடர்பு' என்று. இது உண்மை நடந்தந்து. அப்பொழுதெல்லாம் பட்டிமன்றங்களில் பேசிக்கொண்டிருந்தவன். பாரதிதாசனின் 'தென் திசையைப் பார்க்கின்றேன்' என்ற பாடலின் மொத்த வரிகளையும் சொல்லி வேறேதொபாடலில் வரும், 'மறைந்திருந்து அம்பெய்திய ராமனின் வீரத்தைப் பாரட்டுவதால் தான் நாம் கோழைகளாகிவிட்டோம்' என்று வரும் பாடல் வரிகளையும் சொல்லி ராமனின் வீரத்தை எப்படி தமிழனின் வீரத்துக்கு மதிப்பிடலாம் என்று கேட்டேன்.

நான் அந்தக் காலத்தில் ரொம்ப 'ரா'வானவன். அதற்கு அந்த ஆசிரியர் சொன்ன பதில் ஒருபக்கம் இருக்கட்டும் இன்று இதே போன்ற ஒரு சூழ்நிலை ஏற்படுமானால் 'முகத்தில் ஒரு அலட்சிய புன்னகை' ஏற்படுமே ஒழிய நிச்சயம் எதிர்த்து கேட்டிருக்க மாட்டேன். இது உண்மை, அந்த நிகழ்ச்சியால் நான் இழந்தது அதிகம் அந்த பேராசிரியர், வெளியில் என்னைத் தட்டிக் கொடுத்து தம்பி நீ இதை என்னிடம் தனியில் கேட்டிருக்கணும் உன்னை பெரிய அளவில் பட்டிமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருப்பேன், அற்ப சந்தோஷத்துக்காக ஸ்டூடண்ஸ் மத்தியில் பெயர் எடுப்பதற்காக அங்கே சொல்லி ஒரு நல்ல வாய்ப்பை இழந்திட்ட' இதுவும் அவர் சொன்னது. உண்மை சுட்டது என்னை அவர் என்னிடம் பேசிய இந்த வார்த்தைகள் மாணவர்களிடம் பரப்பட்டது, அவர் தமிழில் பாடம் எடுக்க முடியாத அளவிற்கு நான் பிரிபேர் செய்து வந்து தமிழில் கேள்விகள் கேட்பேன்.

நல்ல வேடிக்கையாய் இருக்கும், இருவரும் பாடல்களால் சண்டை போட்டவாரு இருப்போம். ஆனால் இன்று வேதனையாக இருக்கிறது, நான் இழந்தது என் கண்ணில் தெரிகிறது.(இதற்கும் காரணம் டெல்லிதான்.)

நான் இப்படிப்பட்டவனாய்த் தன் டெல்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஏறினேன், 'ரா'வாக, என்னை ஒரு பொரடக்ட் ஆக மாற்றியது டெல்லி, மற்றும் டெல்லி வாழ் உறவினர்கள், அந்த பழக்கவழக்கங்கள்.

அதுவரைக்கும் அடுப்பாங்கரைப் பக்கமே போகாத எனக்கு நான் சாப்பிட்ட தட்டை கழுவக் கூட கற்றுக்கொடுத்தது டெல்லிதான், ருசியில்லாத சாப்பாடாயிருந்தாலும் சாப்பிட்டால் தான் உயிர் வாழமுழியும் என்ற வாழ்க்கையின் ரகசியம் சொல்லித்தந்தும் டெல்லிதான். மனிதர்களிடம் பழகுவதற்கும் ஒரு பிரச்சனையை அணுகும் விதத்தை சொல்லித்தந்ததும் டெல்லிதான்.

ரோட்டில் சிகரெட் குடிக்கும் பெண்ணை உங்களால் மரியாதையாய் பார்க்க முடியுமா? புருஷனுடன் சேர்ந்து போட்டிப்போட்டுக்கொண்டு தண்ணியடிக்கும் ஒரு கொலிக்கை தப்பான பார்வையில்லாம் பார்க்க முடியுமா? மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் அய்யர் பார்த்துட்டு அந்தப் பெண் 'தேவிடியா' இல்லைன்னு வாதாட முடியுமா? இது எல்லாம் நடந்தது எனக்கு. நான் ஒன்றும் சினிமாவில் வருவது போல ஒரு பாடலில் மாறிவிடவில்லை நிச்சயமாய். அடிபட்டு உதைபட்டு, பித்துபிடித்தவைப் போல் அலைந்து திரிந்து எனக்கு வாக்கப்பட்டுது இவைகள். இன்னும் இவைகள் பலருக்கு தவறானவைகளாக இருக்கமுடியும் தான்.

டெல்லி ஒரு வித்தியாசமான நகரம், கேளிக்கைகள் நிறைந்தது, வெகுசுலபமாக பெண்டாளும் வாய்ப்பு கிடைக்கும் ஒரு ஊர் தான். தனிமனித உரிமைகள் என்ற ஒரு விஷயம் எனக்கும் அடிமுதல் கற்பிக்கப்பட்ட ஊர். புருஷன் பெண்டாட்டி இடையே கூட இந்த உரிமைகளை எதிபார்க்கும் மக்கள் இருக்கும் ஊர். என் அம்மா அப்பாவை, அம்மா அப்பாவாகத்தான் எனக்குத் தெரியும். அவர்களையும் கணவன் மனைவியாக அறிமுகம் செய்து வைத்த ஊர். என் அப்பாவிடம் அம்மாவைப் பற்றி இருக்கும் 'பொசசிவ்நஸ்' புரிய வைத்த ஊர். அவர்களுடைய தனிமனித உரிமைகளில் தலையிடுவதை சுத்தமாக விரும்பாத பல மனிதர்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நான் அவர்களுடைய உறவினனாக இருந்த பொழுதிலும் பல விஷயங்களில் என் தலையீட்டைக் கூட விரும்ப மாட்டார்கள் தான்.

இதை புரிந்து கொள்வது கஷ்டம், என் மாமா, என் அத்தை என்பதே கிடையாத ஒரு ஊரில் என் தமிழன் என்பதை தேடிக்கொள்வதை என்னவென்று சொல்வது. டெல்லி மாதிரியான ஒரு நகரத்தில் பெரிய வேலையில், அரை லட்சம்(நன்றி குழலி) மேல் மாத சம்பளம் வாங்குபவர்கள் கூட சனிக்கிழமைகளில் வேலை பார்க்கவேண்டியிருக்கும். அவர்களை பொறுத்தவரை மீதமுள்ள விடுமுறையை கொஞ்சமும் பாழாக்க விரும்பமாட்டார்கள் அது என்னவாக இருந்தாலும். நாம் சென்று 'நான் டெல்லிக்கு வந்து ஒரு மாசம் கூட ஆகலை, இந்தியும் அவ்வளவா தெரியாது, இங்கிலீஷும் மெதுவடை(நன்றி 'செந்தழல்' ரவி) மாதிரி, நார்த் டெல்லியில் இன்டர்வியூ இருக்கு கொஞ்சம் வந்து உதவ முடியுமா?' என்பது போன்ற கேள்விகள் டெல்லியில் முட்டாள்த்தனமானவை தான். கையில் மேப்பைக் கொடுத்து வண்டி நம்பர்களை கொடுத்து, என்ன பேசவேண்டும் எப்படி பேசவேண்டும் என்பதையும் எழுதிக் கொடுப்பார்களே ஒழிய வந்து வெயிட் பண்ணி உங்களை இன்டர்வியூ முடித்து அழைத்துச் செல்ல மாட்டவேமாட்டார்கள்.

அவர்களுக்கு உங்கள் மீது பாசம் கிடையாதா என்றால் அப்படியில்லை அந்த பாசத்தை விடவும் முக்கியமான விஷயம் இருக்கிறது பார்ப்பதற்கு என்பதுதான் அதற்கு பொருள். இப்படியிருக்க 'சார் நான் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன், இங்கிருக்கிற தமிழ்ச்சங்கம் எங்கேயிருக்குன்னு தெரியலை கொஞ்சம் வண்டியில் இறக்கி விட்டுர்றீங்களா?' என்பது போன்ற கேள்விகளுக்கு எந்த மாதிரியான ரியாக்ஷன் கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

நான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை எழுதி உணர்த்தவில்லை அது நான் டெல்லி வரும் மக்களிடம் தமிழில் உரையாடுவேனா உதவுவேனா என்பதைப் பற்றியது அதற்கான விடையை நான் சொல்லாமல் நீங்களே ஊகித்துக்கொள்ள விட்டுவிடுகிறேன். ஆனால் ஒரு விஷயம் இந்த 'தனிநபர்' கான்சப்டை அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ள முடியாதுதான்.

நான் இளங்கன்றாய் இருந்தாலும் எதைப்பற்றியுமே ஒரு ஒப்பீனியன் பெரும்பாலும் இல்லாமல் இருந்ததாலும் அந்த சூழலுக்கு மாறிக்கொள்ள முடிந்தது. தமிழ்நாட்டு சூழலில் தாம்பத்தியம் நடத்தி பின்னர் டெல்லி வந்தால் வரும் பிரச்சனைகளை என்னால் சொல்லாமலே விளங்கிக்கொள்ள முடிகிறது.

உண்மைதான் இங்கிருக்கும் டெல்லி வாழ் மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு(குறிப்பாக பெண்களுக்கு) டெல்லி வாழ்க்கை முறை தெரிந்த, இங்கே வாழ்ந்தவர்களின் பையனைத்தான் விரும்புகிறார்கள். வண்டியில் ஒன்றாய் பயணம் செய்வது, ஹக்கிக் அண்ட் கிஸ்ஸிங் வெற்ய்ம் எழ்யுத்தாய் இருக்காமல் சர்வ சாதாரணமாய் இருக்கும் ஊர் பெண்களை தமிழ்நாட்டு பாரம்பரிய மணமகன் புரிந்துகொள்வதில் உள்ள பிரச்சனை அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து தான் இருக்கிறது.

இதைத் தான் நான் மங்கையின் பதிவில் மென்டாலிட்டி மாறாமல் டெல்லியில் வாழ்வது வேஸ்ட், நீங்களும் கஷ்டப்படுவீர்கள் மற்றவர்கள்யும் கஷ்டப்படுத்துவீர்கள் என்று கூறினேன். பல சமயங்களில் இந்த விஷயத்தை புரிந்து கொள்வதற்கு உங்கள் படிப்பறிவு போதாது பட்டறிவு அவசியம்.

ஒரு பெண் இன்று என்னுடனும் அடுத்த நாள் இன்னொரு பையனுடனும் பைக்கில் பயணம் செய்வதும், என்னுடனும் அந்தப் பையனுடனும் உரசிப் பேசுவதும் உங்களுக்கு தேவிடியாத்தனமாகத் தெரியலாம். ஆனால் அந்த ஊரில் வளர்ந்த பெண்ணுக்கு அது சர்வ சாதாரணம்.

நான் இந்தப் பதிவில் எங்கேயும் கற்பைப்(???) பற்றி குறிப்பிடவில்லை. அதுமட்டுமில்லாமல் இவைகள் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மட்டுமே, இதை பொதுப்படுத்த முடியாது. ஒன்றே ஒன்று, இவையெல்லாம் இல்லாமல் தமிழ் தமிழ் என்று உயிரைக் கொடுக்கக்கூடியவர்கள் டெல்லியில் மிக அதிகம் பேர் இருக்கிறார்கள். மிக அதிகம் பேர், அவர்கள் ஏன் அப்படியிருக்கிறார்கள் என்று கேட்பதுவும் தவறு, மற்றவர்கள் ஏன் அப்படியில்லை என்று கேட்பதுவும் என்னைப் பொறுத்தவரையில் தவறுதான்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

Popular Posts