அப்படியொரு சம்பவம் நடக்குமென்று யாரும் அதற்கு முன்னர் நினைத்துக்கூட பார்க்கவில்லை, ஆனால் நடந்தது. நன்றாக நினைவில் இருக்கிறது அந்த ஒன்றிரண்டு மாதங்கள், ஒவ்வொன்றும் பசுமையாக இன்று நினைத்துப்பார்க்கும் பொழுது சிரிப்பாக வந்தாலும் அன்றைய என்னுடைய நிலைமை எனக்குத் தெரிந்துதான் இருந்தது. இனிமேல் முடியாது என்பதான ஒரு நிலைக்கு நானும் வந்திருந்தேன், அகிலாவும் வந்திருந்தாள். நாங்கள் நடத்திக்கொண்டிருந்த நாடகத்திற்கும் ஒரு முடிவு வேண்டுமே. அந்த நாளும் வந்தது. "மோகன்...