Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! Australia Vs India Quarters

உலகக்கோப்பை முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது, நம் எதிர்பார்ப்புக்கள் எப்பொழுதும் அப்படியே நிறைவேறிவிடுவதில்லை. நான் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் பைனலுக்கு முன் சந்தித்துவிடக்கூடாது என்று பயந்தபடியிருந்தேன். அதற்கு ஆஸி டீமின் வெற்றிவாய்ப்பைப் பற்றிய சந்தேகம் கிடையாது காரணம். எனக்கு மிகவும் பிடித்த தோனியின் எதிர்காலத்தை உலகக்கோப்பை மாற்றிவிடக்கூடாது என்பதில் தான் பயம் அதிகம் இருந்தது.



ஆனால் இந்த முறை ஆஸ்திரேலியா இந்தியா காலிறுதியில் மோத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் ஆட்டத்தின் இறுதியில் டாரன் ஸாமி முகத்தில் தெரிந்த Subtle சிரிப்பு என்னை அசைத்துப் பார்த்தது, நான் இந்தியாவுடன் ஜெயிக்க வேண்டும் என்று மேற்கிந்தியத்தீவுகள் ஆடியதைப் போல் உணரவே இல்லை. நான் முதலாவது காலிறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் சுலபமாக ஜெயிக்கும் என்றே நினைக்கிறேன். அதற்கு பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை வென்றது காரணம் கிடையாது.

எனது அலுவலகத்தில் ஒரு ஜோக் ஓடிக்கொண்டிருந்தது, ஆஸ்திரேலியாவை காலிறுதியில் சந்திக்க விரும்பாத தோனி, யுவராஜிடம் ‘தம்பீ ஒழுங்கா ஆடாத நாம் இந்த மேட்ச் தோற்று, ஸ்ரீலங்காவிடம் காலிறுதி விளையாடலாம்’ என்று சொல்ல யுவராஜ் ‘நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறது’ என்று செஞ்சுரி அடித்து ஜெயிக்க வைத்ததாக. இதில் இருக்கும் அர்த்தம் ஒன்று தான், யாரும் ஆஸ்திரேலியாவோ இந்தியாவோ காலிறுதியில் தோற்க விரும்பவில்லை என்பது. சரி அந்த ஆட்டத்திற்கு வருவோம்.

ஆஸ்திரேலிய அணி வலுவான பௌலிங் கொண்ட அணியாக இருக்கிறது. என்ன தான் பாகிஸ்தானை அவர்களால் 176ல் சுருட்ட முடியாவிட்டாலும் ஆனால் அன்று ஆஸ்திரேலியா 200+ ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் பாகிஸ்தானை ஆஸி சுருட்டியிருக்கும். பான்டிங் சொன்னது போல் டைய்ட்-ற்கு எந்தப் ப்ளானும் ஆஸி போட முடியாது, வைட் போடாமல் குச்சிக்கு பந்து போட்டுக் கொண்டிருந்தாலே டைய்ட்டால் ஆஸிக்கு விக்கெட்டுக்கள் விழும். அதுவும் ஷேவாக், யுவ்ராஜ், தோனி, ரெய்னா என அடித்து ஆடத்துடிக்கும் நபர்களுக்கும் 150+KMPS வரும் பந்துகளில் கிடைக்கும் அவுட்டர் ஸ்விங் பந்துகள் விக்கெட் கொடுக்கும்.

லீ எப்பொழுதையும் போல சிறப்பாக பந்துவீசுவதால் சச்சின், கோ(ய்)லி விக்கெட் அவரிடம் விழ வாய்ப்பு உண்டு. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ப்ராக்டீஸ் மேட்சில் இந்தியா ரன் எடுக்கத் தடுமாறியதை நேரில் பார்த்தவனாதலால். 100/3 ரொம்பவும் சாதாரண விஷயமாக இருக்கும். சச்சினும் ஷேவாக்கும் சரியான ஓப்பனிங் தராமல் மூன்றாவது விக்கெட்டும் விழுந்தால் தற்போதைய நிலையில் இந்தியா 300+ ஸ்கோர் அடிப்பது என்பது இமாலய இலக்கு. இதுவே ஆஸி 300+ ஸ்கோர் அடித்திருந்து முதல் மூன்று விக்கெட் விழுந்தால் அதைத் திரும்ப அடிப்பது என்பதும் இமாலய இலக்கே!

ஆடுகளம் எப்படிப்பட்டதாகயிருக்கும் என்பது மில்லியன் டாலர் கொஸ்ஸீன், என்னைப் பொறுத்தவரை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக Flatஆகத்தான் இருக்கும். டாஸ் முக்கியத்துவம் வாய்ந்தது - டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்யவே ஆஸ்திரேலியா விரும்பும் - இரண்டாவது இன்னிங்க்ஸ் ட்யூ ஃபேக்டரால் பௌலிங் அத்தனை போட முடியாது என்பதால் ஸ்பின் ரொம்பவும் எடுபடாது. ஆனால் பியுஷ் சாவ்லாவை, தோனி இந்த ஆட்டத்திற்கு எடுப்பதற்கான காரணம் ப்ராக்டீஸ் மேட்சில் இருக்கிறது. இல்லாமல் தோனி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிராக ஆடிய டீமை செலக்ட் செய்தால்(ஷேவாக் மட்டும் இன் / ரெய்னா அவுட்) அஷ்வினை ஆடுவதில் ஆஸ்திரேலியாவிற்குப் பிரச்சனை இருக்காது.

ரிக்கி பான்டிங் இன்னும் எந்த ஆட்டத்தையும் அவருடைய ஸ்டான்டர்ட்க்கு விளையாடாததால், இந்தப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. அந்த லெவலில் ஃபார்மிற்கு வர ஐந்து ஆறு ஓவர்கள் கூட போதும். வாட்சன், ஹேட்டின், பான்டிங் மூவரில் ஒருவர் செஞ்சுரி அடித்தால் இந்தப் போட்டில் சுலபமாக ஆஸி வசம் விழும். வாட்சன் இருக்கும் ஃபார்மிற்கு அது ஒன்றும் அத்தனை பெரிய விஷயம் கிடையாது, ப்ராக்டீஸ் மாட்சில் ஹேட்டினும் வாட்சனும் அடித்த அடி இன்னமும் நினைவில் இருக்கிறது. ஆஷஸ் தொடர் ஆரம்பத்திலிருந்து ஹேட்டின் காத்திருக்கும் ஒரு பெரிய வாய்ப்பு காலிறுதியில் இருக்கலாம். கொஞ்சம் சம்ஜோதிமாக விளையாண்டால் ஹேட்டின் இந்தப் போட்டியின் திருப்புமுனையை உருவாக்குவார்.

மிடில் ஆர்டர் கொஞ்சம் மக்கர் செய்தாலும், மைக்கேல் க்ளார்க், வொய்ட், மைக்கேல் ஹஸ்ஸி எல்லாம் பெரிய ஆட்டக்காரர்கள், முக்கியப் போட்டிகள் இம்மாதிரியான ஆட்டக்காரர்களிடமிருந்து திறமையான ஆட்டத்தை வெளிக்கொணரும் என்பதால் பிரச்சனை இல்லை. பான்டிங் புலம்பிக் கொண்டிருந்தது போல் அவருடைய மிடில் ஆர்டர் கொஞ்சம் பேட்டிங் செய்தது குறிப்பாய் ஸ்டீபன் ஸ்மித், பாகிஸ்தானுக்கு எதிராய் எடுத்த ஒவ்வொரு ரன்னும் அவருடைய கான்பிடன்ஸை அதிகரிக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, சச்சின் இன்னமும் விளையாடுவதால் ஏற்படும் டிபெண்டென்ஸி மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முக்கியமான ஆட்டங்களில் போங்கடிக்கும் சச்சின் காலிறுதியில் அதையே செய்வார் என்பதில் பெரிய சந்தேகம் கிடையாது. ஷேவாக் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை, பத்து ஓவர் ஆடினால் எதிரணி தோல்வியைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். ஆனால் அந்த பத்து ஓவரிலும் ஏகப்பட்ட வாய்ப்புக்களை எதிரணிக்குத் தந்து கொண்டேயிருப்பார். யுவராஜ் இதுவரை இந்த உலகக்கோப்பையில் ஆடியதே பெரிய விஷயம் இவரிடம் இருந்து இனிமேல் எதிர்பார்க்க ஒன்றுமில்லை, கோலி அருமையான ஆட்டக்காரர் கொஞ்சம் ஆஸ்திரேலியா இவரிடம் கவனமாக இருக்க வேண்டும். 30 ஓவருக்குள் தோனி ஆட வந்துவிட்டால் அதுவே இந்தியாவின் தோல்வியை முதல் பேட்டிங்கோ இரண்டாவது பேட்டிங்கோ சொல்லிவிடும். ஆனால் தோனி பொறுப்பான ஆட்டக்காரர் என்பதால் லூஸு போல் ஆடாமல் 50 ஓவர் விளையாடி போட்டியாவது இருக்கச் செய்வார்.

இந்திய பௌலிங் பற்றிச் சொல்ல எதுவுமில்லை, தோனி டாஸ் ஜெயித்து ஃபீல்டிங் கேட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. பாவம் தோனி அவ்வளவு தான் இந்திய அணியில் பௌலிங்கை அவர் நம்ப முடியும். ஜாகீர், முனாஃப், ஹர்பஜன் மற்றும் பியுஷ் சாவ்லாவைத் தான் தோனி நம்புவார். யூசுப் பதானை விடுத்து ரெய்னாவை எடுப்பார் என்று நான் நம்பவில்லை. ஆஸ்திரேலியா சேசிங் செய்தால் நிச்சயம் ஜெயிக்கும் என்றாலும் முதலில் பேட்டிங் செய்யும் கான்செப்டையை அவர்கள் எடுப்பார்கள்.

இந்தியாவை நினைத்து பரிதாபப்படவேண்டியிருக்கிறது தற்சமயத்தில். ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா காலிறுதியில் போட்டி பலமாகக் கொடுத்தாலே பெரிய விஷயம். இல்லாவிட்டால் இது ஒரு ஒன் சைடட் கேமாக ஆஸ்திரேலியாவிற்குச் சாதகமாகவே இருக்கும்.

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட் 2011 - என் கணிப்பு

பொதுவாக உலகக் கோப்பைக்கு முன் இப்படி ஒரு பதிவு எழுதுவது வழக்கம். கடந்த இரண்டு உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலிய அணி என்னை பொதுவாக இக்கட்டில் விடவில்லை. இந்த முறையும் அப்படியே ஆகும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா பங்குபெறும் Group A லீக் ஆட்டங்கள் எதுவும் அத்தனை கஷ்டமாக இருக்காது. Sri Lankaவுடனான ஆட்டத்திலும் நான் பெரிய பிரச்சனை எதையும் பார்க்கவில்லை, சுலபமாகவே ஆஸ்திரேலிய அணி வென்றுவிடும்.



Group A லீக் ஆட்டங்களின் முடிவில் வெற்றி எண்ணிக்கை இப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்.

Australia - 6
Sri Lanka - 5
Pakistan - 4
New Zealand - 3
Zimbabwe - 2
Kenya - 1

Group A லீக் இப்படி.

India - 6
South Africa - 5
England - 4
West Indies - 3
Bangaladesh - 2
Ireland - 1

இதன் மூலம் கால் இறுதி போட்டிகள் இப்படி வரும்.

Australia - West Indies (A1 - B4)
Sri Lanka - England (A2 - B3)
Pakistan - South Africa (A3 - B2)
New Zealand - India(A4 - B1)

கால் இறுதிப் போட்டியின் முடிவில் கீழ் காணும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு வரும்.

Australia - South Africa
India - Sri Lanka

முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்று நான் உணர்கிறேன், ஆனால் மற்ற செமி ஃபைனல் ஸ்ரீலங்காவில் நடப்பதால், அவர்களுக்கு கொஞ்சம் வாய்ப்பு அதிகம் என்றாலும் இந்தியா தான் ஜெயிக்கும் என்றே நினைக்கிறேன்.

Australia - India

Dream final, 2003 போன்று இல்லாமல் இந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா ஃபைனல் வந்தால் கொஞ்சம் கலை கட்டும். ஆனால் நிச்சயம் ஆஸ்திரேலியா தான் உலகக் கோப்பை வெல்லும்.

Go Aussie Go!!!

PS: ஆஸ்திரேலிய அணி பற்றி ஒரு பதிவு எழுதணும்

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In கிரிக்கெட்

Go Aussie Go!!!

ஐய்யா! இன்னொரு ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் சீரியஸ்.

அபிஷியலா இந்தியா தான் முதல் ராங்கில் இருக்காம், இந்த சீரியஸ் தொடங்கும் பொழுது. முடியும் பொழுது எப்படி இருக்கும் என்று ராங்கிங் எப்படிச் செய்வாங்கன்னு சரியாத் தெரியாததால் தெரியலை. ஆனால் நிச்சயம் ஹோம் கிரவுண்டில் இரண்டு டெஸ்ட் மேட்சும் தோற்றால் ஆப்பு பலமாகத்தான் இருக்கும்.

போன முறை இந்தியாவில் நடந்த இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளின் பொழுது விளையாடாத பான்டிங்கிற்கு இது கடைசி வாய்ப்பு(அவர் தான் சச்சின் டெண்டுல்கர் இல்லையே) என்பதால் அடித்து உதைக்க நல்ல வாய்ப்பு.

We never thought about our team as No. 1 team or of our team as being better than anyone else, but when Australia play, there is very good cricket. We don't play draws, we always have results. அப்படின்னு சொல்லியிருக்கும் பான்டிங்கின் ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே நம்புகிறேன் ஏற்றுக் கொள்கிறேன். அதுதான் பான்டிங் அது தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட்.

இந்தியாவிற்கு வந்து தற்சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன்னாய் இருக்கும் இந்தியாவிற்கு ஆஸ்திரேலிய அணி அடிக்கப் போகும் ஆப்பை பார்ப்பதற்கு ஆவலாய் நான் இருக்கிறேன். Go Aussie Go!!!

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In கிரிக்கெட்

Go Aussie Go!!!

ஆஷஸ் தோல்வியால் கொஞ்சம் மனம் தடுமாறியிருந்தேன், ஆனால் அடுத்த பத்தாண்டுகளுக்கான ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதும் நிகழும் (ஏ)மாற்றங்கள் தான் என மனதை தேற்றிக் கொண்டிருந்தேன். அதை இங்கிலாந்து அணியுடன் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் ‘செல்ல’ ஆஸ்திரேலிய அணியினர். ஏழாவது போட்டியை ஜெயிக்கவில்லை என்கிற வருத்தம் கொஞ்சம் அதிகமாய்த் தெரிந்தது, அந்த போராட்ட வெறி பிடித்திருந்தது.

இப்பொழுது சாம்பியன்ஸ் ட்ராபிக்கான போட்டிகளுக்காக சௌத் ஆப்பிரிக்கா வந்திருக்கிறார்கள். கப் எங்களுத்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை, அதுவும் 6 - 1, என்கிற விதத்தில் இங்கிலாந்தை வென்ற பிறகு எந்தக் கவலையுமில்லை. அதுவும் முதல் போட்டி வெஸ்ட் இன்டீஸ் உடனாம், என்ன கொடுமைங்க இது சரவணன். அட்லீஸ்ட் 450 ஆவது அடிக்கணும், அதுக்கு ஆஸ்திரேலியா டாஸ் ஜெயிக்கணும்.

சாம்பியன்ஸ் ட்ராஃபியை வென்று பச்சாப் பசங்களிடம் இருந்து நம்பர் ஒன் ரேங்கிங்கை எடுத்துக் கொண்டு, மீண்டும் நெருங்க முடியாததாய்ச் செய்வார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. மீண்டும் ஒரு முறை பயன்படுத்துகிறேன் என்றாலும், ‘ஷரத் கோடோம்பே லகாதேங்கே கடோர். ஷெகரோம்பே நஹி’ என்பது போல் போட்டிகளிலில்லாத ஆடுகளத்தில் ஆட்டுக்குட்டிகளை அடித்து நகர்த்த வாழ்த்துக்கள்.



இன்னும் ஒரு கோப்பை வைக்கத்தான் இடம் இல்லை ;)

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In கிரிக்கெட்

Gilchrist ஜென்டில்மேன் விளையாட்டில் நிஜ ஜென்டில்மேன்

கில்கிறிஸ்ட் இந்த மாட்ச் உடன் ஒருநாள் போட்டியில் இருந்து விடைபெறுகிறார். ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து இருந்தார். ஜென்டில்மேன்களின் ஆட்டம் என்று சொல்லப்பட்டு வந்தாலும் அப்படிப்பட்ட ஒன்றாக இல்லாமல் தான் இருந்தது/இருக்கிறது கிரிக்கெட். அதற்கு யார் யார் காரணம் எந்த அணி ரொம்ப மோசம் என்ற வெட்டி சர்ச்சைகளை விட்டுவிட்டு; அப்படிப்பட்ட நிலையிலும் கில்கிறிஸ்ட் தனக்கே உரிய நேர்மையுடன் நடந்து கொண்டு 'ஜென்டில்மேன்'என்ற இமேஜுடன் வெளியெறுகிறார்.

விக்கெட் கீப்பராக இருப்பவர் மிகச்சிறந்த பாட்ஸ்மேனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்த ஒரு சூழ்நிலையில் வந்தவர் கில்கிறிஸ்ட். பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் தூண்களில் ஒருவராக கடைசி மூன்று உலகக்கோப்பை ஆட்டங்களில் இருந்திருக்கிறார். மூன்று உலகக்கோப்பை வென்ற மிகச்சில வீரர்களில் கில்கிறிஸ்டும் ஒருவர்.

கில்கிறிஸ்ட் நல்ல தொடக்கம் தந்த, செஞ்சுரி அடித்த எல்லா மாட்சுகளும் ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கும் என்றே நினைக்கிறேன். நன்றாக நினைவில் இருக்கிறது மார்க் வாஹ் விளையாடிக் கொண்டிருந்த பொழுதுகளில் கில்கிறிஸ்ட் என்ற இவரை அறிமுகப்படுத்தினார்கள். மார்க் வாஹ் அந்தப்பக்கம் க்ளாசிக்கல் ஷாட்ஸ் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது இவர் சூறாவழி போல் பட்டையை கிளப்பினார். முதலில் எனக்குப் பொறாமையாக இருந்தது மார்க் வாஹ் சீக்கிரம் அவுட் ஆகிவிடும் சமயங்களில் கூட கில்லி அடித்து நொறுக்குவது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் மார்க் வாஹ்விற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் கிடைத்த நல்ல பார்ட்னர் ஓப்பனர்.

இருவரும் இணைந்து விளையாடிய உலகக்கோப்பை போட்டிகளில் நினைவில் வருகின்றன. பைனல்ஸ் என்று நினைக்கிறேன் சோயிப் அக்தர் ஓவரை கிழிகிழியென கிழித்து தோரணம் கட்டினர் இருவரும். கடைசி வரை அவுட் ஆகலை என்று நினைக்கிறேன். நான் சந்தோஷ வெள்ளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்த நாட்கள். அந்த செமி-பைனல்ஸ் யாரால் மறக்க முடியும்.

ம்ம்ம் இன்று கில்லி ஒரு நாள் போட்டியில் இருந்து விடை பெறுகிறார். தனக்கேயுரிய ஸ்டைலில் செஞ்சுரி அடித்த கையோடு சொந்த மண்ணான பெர்த்தில் இருந்து. இனி ஒரு கில்கிறிஸ்ட் கிரிக்கெட்டுக்கு கிடைப்பார்களா தெரியலை. போய்வா கில்கிறிஸ்ட் வெற்றியின் மகனாய்.

கில்கிறிஸ்டின் ரெக்கார்ட்

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணியைக் கண்டிக்கிறேன்





பச்சைப் புள்ளைங்களை எவ்வளவு நேரம் நீங்களும் இழுத்துப் போட்டு அடிப்பீங்க. போதும் இத்தோட நிறுத்திக்குவோம். வடிவேலு கணக்கா அழுதுடப் போறாங்க...

Go Aussie Go!!!

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணியும் நானூறு ரன்களும் பச்சா பசங்களும்

சரி வேணாம் வேணாம்னு தான் நானும் இருந்தேன். ஆனா உள்ளுக்குள்ள பொறி ஒன்னு தட்டியாச்சு(Mohandoss sparked by etc., etc.,) பத்தாயிரம்(x 2 = இருபதாயிரம்) செலவானாலும் மேட்சை கிரவுண்டில் பார்க்கணும் என்று திட்டமிட்டிருந்தேன். கிர்ர்ர்ர்ர் டிக்கெட் கிடைக்கலை போனால் போகுது; அந்தப் பழம் புளிக்கும் டிவியில் அதைவிட பிரம்மாதமா காட்டுவாங்க. சின்னசாமி ஸ்டேடியத்தில் flood lights போட்டு டெஸ்டிங் எல்லாம் பிரம்மாதமா செய்துக்கிட்டுருக்காங்க.

சரி மேட்டருக்கு வருவோம் இன்று சைமண்ட்ஸ் சொல்லியிருக்கும் விஷயத்தை நான் ஆஸ்திரேலியாவை இந்திய அணி ஜெயிச்சப்பவே சொன்னேன். ரொம்ப பிலிம் காட்டுறாங்க என்று;(எப்பப்பாரு ஜெயிக்கிறவங்க அப்படித்தான் அமைதியா இருப்பாங்க - எப்பவாவது ஒரு தடவை ஜெயிக்கிறவங்க தான் சலம்புவாங்க). அதை அப்படியே ஒத்துக்கொண்டிருக்கிறார் சைமண்ட்ஸ். இந்த விஷயம் இன்னும் பலருக்கும் புரிஞ்சிருக்கும் ஆனால் சொல்லலை ஏன்னா சொன்னா தப்பா எடுத்துப்பாங்கன்னு தான். ஏன் ரவி சாஸ்திரியைக் கேட்டுப் பாருங்களேன் ;) சொல்வாரு. (தோனி ரவி சாஸ்திரிக்கிட்ட கேட்ட சின்னப்புள்ளத்தனம். ஒரே வார்த்தை அவ்வளவு தான்.)



"We spoke about it back in Australia a couple of years ago; that if we can score 200 in a Twenty20 game why can't we score 400 in a 50-over game? It's really just a mental adjustment more than anything. Certainly, batsmen's skills over the last six or seven years in the one-day game have improved dramatically and I think the more Twenty20 cricket is played, the bowlers will start adjusting really well. We saw that at different times during the last event [the inaugural ICC World Twenty20]. But I think if we get some really good conditions here we'll see some good scores."

இப்படி சொன்னது ஆஸ்திரேலிய தல பான்டிங் அண்ணாச்சி; எனக்கு எப்பவுமே ஆஸ்திரேலியாவோட ஓப்பனிங் பேட்ஸ்மேனை யாரும் வம்பிழுக்க மாட்டாங்களான்னு இருக்கும் ஏன்னா கோபத்தில் நல்லா விளையாடுவாங்கன்னு தான். ஆனா யாரும் செய்திருக்க மாட்டாங்க ஏன்னா அது அப்படித்தான் நடக்கும்னு அவங்களுக்கும் தெரியும். ஆஸ்திரேலிய அணி சக்க கோபத்தில் இருக்கிறார்கள்; அதனால் மேற்கண்ட விஷயம் நடந்தாலும் நடக்கும்(ஆஸ்திரேலியா ஏற்கனவே 400 எல்லாம் அடிச்ச அணி தான் என்றாலும் - அதை ஸ்டான்டர்ட் ஆ ஆக்குவதைப் பற்றிய பேச்சு இது.)

ஸ்ரீசாந்த் செய்வதெல்லாம் ஓவர் அலும்பென்பது அவரைத் தவிர மற்றவர் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். சொல்லித் தெரியவேண்டியது ஒன்றுமில்லை இதில். பான்டிங் சொல்லியிருப்பதைப் போல் இப்பொழுது ஒட்டுமொத்த pressure இந்தியன் டீமின் மீது தான். மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன் இந்த ஆட்டத்திற்காக.

Go Aussie Go!!!

PS: இதில் பச்சாப் பசங்களுக்கு விளக்கம் நான் கொடுக்கலை - 7 ஆட்டங்கள் முடிந்ததும் அது யாருன்னு ஆட்டோமேட்டிக்கா தெரிஞ்சிரும். வர்ட்டா!

Read More

Share Tweet Pin It +1

16 Comments

In கிரிக்கெட் சொந்தக் கதை

கல்லூரியில் கிரிக்கெட்

நான் என் கல்லூரி அணிக்குத் தேர்வானது ஒரு நல்ல கதை. முதலில் டென்னிஸ் பந்துகளில் விளையாடுவதைத் தொடங்கினாலும் எனக்கு கிரிக்கெட் பந்துகளில் விளையாட நேரமோ, சூழ்நிலையோ அமையவில்லை. இதனாலெல்லாம் நான் கல்லூரி அணிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் என்றதும்; அதுவும் கிரிக்கெட் பந்தில் என்றதும் தாழ்வு மனப்பான்மையால் அந்தப் பக்கமே போகவில்லை. என்ன பெரிய செலக்ஷன் ப்ராப்பர் கிரவுண்டிலா நடந்ததது? என்றால் இல்லை. கல்லூரிக்கு பின்னால் இருந்த ஒரு இடத்தில் நடந்தது.

நான் அந்த செலக்ஷனுக்குப் போகாத மற்றொரு காரணம் முதலில் பீல்டிங் பயிற்சி என்று காஜி எடுத்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் கல்லூரி நேரம் முடிந்ததும் பக்கத்து பஸ் ஸ்டாப்பில் இருக்கும் ஆயா கடையில் டீ சாப்பிடப் போவது வழக்கம். அன்று அப்படி போயிருந்த பொழுதுதான் தெரிந்தது; பீல்டிங் செலக்ஷன் நடப்பது. நானும் வேடிக்கைப் பார்த்துவிட்டு, நக்கலாக இரண்டு கமெண்ட் அடித்துவிட்டு கிளம்பிவிட்டேன். அதற்கடுத்து சனி, ஞாயிறு என்று நினைக்கிறேன். ஹாஸ்டலில் பெரிய காலமாகப் போகும் அவை.

அடுத்த நாளும் கல்லூரி முடிந்ததும் ஹாஸ்டல் வந்து கைலி கட்டிக்கொண்டு டீகுடிக்க, ஆயாக்கடையை நோக்கி நகரும் பொழுதுதான் கவனித்தேன். பௌலிங் செலக்ஷன் நடந்து கொண்டிருந்தது. கிரிக்கெட் பற்றிய தீராத வெறி என்னை ஒரு ஐந்து பத்து நிமிடம் அங்கே நிற்க வைத்தது. நான் எதிர்பார்த்ததைப் போலில்லாமல் அங்கே டிஸ்டிரிக்ட் டிவிஷினல் என்று கதைகளை விட்டு நிறைய பேர் பௌலிங் போட்டுக் கொண்டிருந்தார்கள். பூரா க்ராப்; ஒரே வார்த்தை. நான் அவசர அவசரமாக கூடவந்த பையனின் பாண்டை உருவி போட்டுக்கொண்டு நானும் பௌலிங் செய்ய பந்து ஒன்றை வாங்கினேன்.

டென்னிஸ் பந்துகளை விட சைஸில் பெரிய பந்துகள்; சிகப்புக் கலர் கூக்குபரா பந்துகள். கைக்கு அடக்கமாக இல்லாத காரணத்தால் நான் எதிர்பார்த்த யார்க்கராக இல்லாமல் முதல் பந்து ஒரு நச்சு பௌன்ஸராகப் போனது. ஹெல்மட் போட்டுத்தான் விளையாடுவார்கள் என்றாலும் அந்த சீனியர் பையன் பயந்து போனது நன்றாகத் தெரிந்தது. அப்பொழுதுதான் முதன் முதலில் கிரிக்கெட் பந்தில் பௌலிங் போடுகிறேன் என்பதை நினைவில் வைக்க வேண்டும். அந்தப் பந்திற்கு பாட்ஸ்மேனிடம் பதிலொன்றும் இல்லாததால். தொடர்ச்சியாக ஒரு ஓவர் போடும் வாய்ப்பு கிடைத்தது.

இப்பொழுது இருப்பதையெல்லாம் விடவும் தலைமுடி அதிகம் வைத்திருப்பேன். நான் ஓடிவர என் தலைமுடி ஒரு பக்கம் தனியாக வரும். ரெண்டு குட் லெங்க் டெலிவரிகளும், இரண்டு யார்க்கரும் போட்டுக்காட்ட, இரண்டு யார்க்கரிலும் பாட்ஸ்மேனின் குச்சி போயிருந்தது. பெரும்பாலும் இந்த கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு கால்கள் அவ்வளவு வேகமாக நகராது ஏனென்றால் அடிஷனல் பர்டன் பேட்கள். அதுவும் கிடைக்கிறதென்று இரண்டு பேட்கள், ஹெல்மெட், காட் என ஏகப்பட்ட அய்டங்களைப் போட்டுவிளையாடுவதால். அவர்களுடைய நேச்சுரல் கேம் வரவே வராது. அதனால் குச்சி பறந்தது பெரிய விஷயம் இல்லை; அந்த வேகத்தில் வரும் பந்தை கரெக்டாக ஜட்ஜ் செய்து டிபென்ஸ் ஆடுவது கடினம்.

நான் ஒரு ஓவர் போட்டு முடித்ததும் கூட டீ குடிக்க போய்விடலாமா என்றுதான் நினைத்தேன். அங்கே செல்க்ஷனுக்காக நின்றிருந்த வாத்தியார் பாட்டிங் செய்வியா இல்லை ஒன்லி பௌலரா என்று கேட்க ஆஹா போட்ட பந்துக்கு காஜியும் அடிக்கலாம் என்று ஆடுவேன் என்று சொன்னேன். சரி போய்த் தயாராகு என்று சொன்னதும். வேகவேகமாகப்போய் இடது காலுக்கு மட்டும் பேட் கட்டிக் கொண்டு போய் நின்றேன். எல்லாம் ஒரு சீன் தான், எங்கள் ஸ்டேடியத்தில் ப்ராக்டிஸ் செய்யவரும் பிரபல BHEL பிளேயர்கள் அந்தக் காலில் மட்டும் பேட் கட்டி விளாயாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் ஹெல்மட் மேண்டேட்டரியாகக் கொடுக்கப்பட அதைமட்டும் போட்டுக் கொண்டு போய் நின்றேன். சீனியர் மக்களுக்கு கோபம் இருந்திருக்க வேண்டும். அதுவரை பௌலிங் செய்து கொண்டிருந்த ஜூனியர் மக்களை நிறுத்தி அவர்களே இறங்கினார்கள் பௌலிங்கிற்கு. நாங்க மதிச்சாத்தானே. ஆறு பந்துகளுக்குமே கீழேயிறங்கி ஆடினேன். என் அதிர்ஷ்டம்(???) நான்கு பந்துகள் கிளிக் ஆகியது. ஒன்று எட்ஜாகி பின்பக்காம் சென்று விட ஒன்று மிஸ். அம்பையர் இடத்தில் இருந்த செல்க்டர் சரி போதும் என்று சொல்ல பேடைக் கழட்டியவன். ஆயாக்கடை சாயாவில் மயங்கி அங்கிருந்து எஸ்கேப் ஆக; டீக்கடைக்கு மெஸேஜ் வந்தது செலக்டர் என்னை தேடுவதாக. ஆல்ரவுண்டராக என்னை அணியில் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அதற்குப் பிறகு ஹாஸ்டல் அணியுடன் டென்னிஸ் பால் கிரிக்கெட். காலேஜ் அணியுடன் கிரிக்கெட் பால் ப்ராக்டீஸ் என பிரகாசமாகப் போனது.

ஆனால் நாங்கள் RECயில் கொங்கு Arts & Scienceவுடன் விளையாடிய மட்ட ரகமான ஆட்டம் ஒருவாறு எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை இல்லாமல் செய்தது என்று சொல்லலாம். சீனியர்கள் செலக்டர் சொல்லியும் கேளாமல் என்னை சப்ஸ்டிட்யூட் ஆக வைத்து விளையாடினார்கள். நாங்கள் RECயில் பிகர் பார்க்கக் கிளம்பிப் போய்விட்டு வருவதற்குள் பாதி பேர் அவுட். இருபத்தைந்து ஓவர்களுக்கு எங்கள் அணி அடித்ததை விக்கெட் இழப்பில்லாமல் ஐந்து ஓவர்களில் அடித்துவிட்டு அவர்கள் கிளம்பிப் போனார்கள். அதற்குப் பிறகு சீனியர்கள் முகம் போன போக்கு... ;). அதற்குப் பிறகு அபிஷியலாக அதிகம் விளையாடாவிட்டாலும்; பக்கத்தில் இருந்த சாரநாதனுடன் நிறைய ஆட்டம் விளையாடியிருக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் சீனியர்களுடன் நல்ல பழக்கத்திற்கு வந்திருந்தேன்.

பின்னர் எங்கள் ஹாஸ்டல் அணியின் நிரந்தர ஆட்டக்காரராகவே இருந்தேன். பெரும்பாலும் எக்ஸாம் இல்லாத நாட்களில் எல்லாம் ஏதாவது ஒரு கல்லூரி அணிக்கும் ஹாஸ்டல் அணிக்கும் இடையில் மேட்ச் இருக்கும். சில சமயம் நான் படிக்கும் வகுப்பிற்கு எதிராகவே விளையாடுவோம். அப்பொழுதெல்லாம் கிளாஸ்மெட்களையெல்லாம் விடவும் ஹாஸ்டல் மெட்கள் தான் பிடிக்கும். ஏனென்றால் நாள் முழுவதும் அவர்கள் தான் எங்களுடன் இருப்பார்கள். கல்லூரியில் உட்கார்ந்திருக்கும் பொழுதுகளிலும் கூட ஹாஸ்டல் நண்பர்களுடன் தான் உட்கார்ந்திருப்பது. டேஸ் ஸ்காலர்களின் உலகம் வேறு, ஹாஸ்டல் மக்களின் உலகம் வேறு...


முந்தைய பாகம்
அதற்கு முந்தையது

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In கிரிக்கெட் சொந்தக் கதை

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia - 1

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia

இந்தச் சமயத்தில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு நடந்தது அது நான் எட்டாவது படித்து முடித்த பொழுது மே மாத விடுமுறைக்காக டெல்லிக்குச் சென்றது. மற்ற விஷயங்களை விடுத்து கிரிக்கெட் சம்மந்தமான முக்கியமான நிகழ்வென்றால் அது நான் என் மாமாக்கள் இருவருக்கும் பந்து வீசியது. இருவரும் உண்மைக் கிரிக்கெட் ;) ஆடியிருந்தவர்கள். அதாவது மேட் எல்லாம் போட்டு விளையாடும் டிவிஷன் மேட்ச்சஸ். இதனால் இருவருக்குமே டெக்னிக்கலாக கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டுமென்று தெரியும்.

அங்கே விளையாடிய பொழுதுதான், Front foot, Back foot, பந்து வீசுபவர்களின் கைகளைக் கவனிப்பது, பந்து கைகளில் இருந்து வெளியேறியது பந்தை கவனிப்பது, பேட்டை எப்படி விளையாடப் போகிறோம் என்பதற்கிணங்க ஹேண்டிலைப் பிடிப்பது(ஸ்ட்ரோக் ஆடுவதற்கும் ஷாட்ஸ் ஆடுவதற்கும் வெவ்வேறு ஸ்டைலில் பேட்டைப் பிடிக்க வேண்டும்) என நிறைய விஷயங்களை ப்ராக்டிகலாக இம்ப்ளிமெண்ட் செய்ய சொல்லித் தந்தார்கள். அதுவரை குருட்டாம் போக்கில் வந்த பந்தை அடிப்பது என்ற நிலையில் இருந்த என்னை அடுத்த அடிக்கு உயர்த்தியது அங்கே தான். எனக்கு என் மாமாக்களுடன் இன்றும் கிரிக்கெட் விளையாடப் பிடிக்கும். இன்று நான் ஆப்-ஸெட்ம்புக்கு அந்தப் பக்கம் நாலு இஞ்சில் போடப்படும் பந்தை லாவகமாக தடுத்தாடுவார்கள் என்று நன்றாகத் தெரியும் ஆனால் வேலை காரணமாக நாங்கள் மூவரும் ஒரு இடத்தில் இருக்கும் வாய்ப்புக்கள் குறைந்ததில் நான் அனுபவிக்கும் வருத்தத்தில் இதுவும் ஒன்று.

இதையெல்லாம் விடவும் முக்கியமான ஒரு விஷயம் மாமா வைத்திருந்த SG பாட் ஒன்றை என்னிடம் தந்தார் நான் டெல்லியில் இருந்து புறப்படும் பொழுது. நான் என் பகுதியில் கேப்டன் ஆனேன் ;). நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த பேட்களுடன் ஒப்பிடக் கூட முடியாது அந்த பேட்டை, கொஞ்ச நாள் யாருக்கும் கொடுக்காமல் நான் மட்டும் தான் விளையாடி வந்தே அந்த பேட்டில் ஆனால் அது பல காரணங்களுக்காக சரிவராமல் போக எல்லோரும் உபயோகிக்கத் தொடங்கினார்கள். சில டோர்னமென்ட் விளையாடுவதற்கு பெரிய டீமில் இருந்தெல்லாம் பேட் கேட்டு வருவார்கள்.

இப்பத்தான் நான் அப்பா ஸ்கூலில் இருந்து வேறு ஸ்கூலுக்கு வந்தது, ஆனால் இரண்டு பள்ளிகளுமே ஒரு மேனேஜ்மென்ட்-ஆல் நடத்தப்படுபவை. நானூறு மீட்டர் இடைவெளி இருக்கும் இரண்டு பள்ளிகளுக்கும் அவ்வளவுதான் விஷயம் என்றாலும். ஸ்கூல் அதையடுத்து ஒரு ரோடு ரோட்டைத்தாண்டினால் "நேரு ஸ்டேடியம்". இது போதுமே ஆனால் இன்னொரு விஷயமும் இருந்தது, "நேரு ஸ்டேடியம்" தாண்டி கேர்ல்ஸ் ஹைஸ் ஸ்கூல் ;).

பள்ளி விடும் 4.15க்கு முன்னமே கிளம்பிப் போய் கிரவுண்டில் குச்சி நட்டு வைச்சு, அந்தப் பெரிய கிரவுண்டில் நல்ல பிச்சா விளையாடுவதற்கு தேர்ந்தெடுத்து வேறுயாரும் விளையாடாமல் பார்த்துக்கொள்ளவென்றே ஒருத்தன். அவன் 4.00 மணிக்கெல்லாம் கிளம்பிடுவான் பாத்ரூம் வருகிறதென்று. நாங்கள் அவன் பையையும் எடுத்துக் கொண்டு கிரவுண்டிற்கு வந்துவிடுவோம். அப்புறமென்ன இரண்டு இரண்டு பேரா அரைமணிநேரத்திற்கு ஒரு தடவை குறையத் தொடங்க. கடைசி இரண்டு மூன்று ஆட்கள் வரும் வரை விளையாடிவிட்டு பேட் பாலை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேருவோம். அந்த கிரவுண்டில் மொத்தம் எங்களைப் போல் இருபது டீம் விளையாடிக் கொண்டிருக்கும்.

இது கிட்டத்தட்ட அந்த நான்கு வருடங்களில் தொடர்ச்சியாக நடந்தது. அப்பல்லாம் டீம் மாட்ச் நடக்கும் 9A, 9B, 9C என மூன்று பிரிவுகள் ஆங்கில வகுப்புக்கள். அப்புறம் 9D ல் தொடங்கி 9M வரைக்கும் தமிழ் பிரிவுகள். ஒவ்வொரு வகுப்பிற்கும் 40 - 45 மாணவர்கள் இருப்பார்கள், அதனால் குறைந்த பட்சம் 11 பேர் பிரச்சனையே இல்லை. எல்லா நாட்களும் மேட்ச் தான், மதியம் இன்டர்வெல்லில் இதற்கென்றே இருக்கும் மாணவர்கள் போய் எதாவது ஒரு க்ளாஸிடம் மேட்ச் கேட்டு வருவார்கள். அப்படி டீம் மாட்சா இருந்தால் சென்டர் பிச்சில் விளையாடுவோம்.

பொதுவாக சென்டர் பிச் காலியாகத்தான் இருக்கும், இதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று பெரிய மைதானம், இருபத்திரெண்டு பேர் விளையாடாவிட்டால் சரிவராது அதுமட்டுமில்லாமல் அந்த சென்டர்பிச் பௌலிங் பிச் அதனால் அதிக ரன்கள் வராது. எட்டு ஓவர்கள் இருபத்தைந்து ரன் அடிப்பதுவே பெரிய விஷயம் அதனால் கிளாஸிக் கிரிக்கெட் போல் இருக்குமென்பதால் அவ்வளவு சுவாரசியமாகயிருக்காது. ஆனால் க்ளாஸ் மேட்ச் என்று வந்துவிட்டால் செண்டர் பிச் தான். அந்தக் காலத்தில் எல்லாம் அப்பா என்னைத் தேடவேண்டுமென்றால் நேராக ஒன்றிரண்டு கிரிக்கெட் கிரவுண்டிற்கு போய்த் தேடி கண்டுபிடித்துவிடுவார்.

அந்தக் காலத்தில் எல்லாம் நான் ஆல்-ரவுண்டர், கொஞ்சம் வித்தியாசமான. பெரும்பாலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர்(நான் பௌலிங் செய்யாத பொழுது), அப்புறம் பௌலர். எட்டு/பத்து ஓவர் மேட்சில் இரண்டு ஓவர்கள் தான் கிடைக்கும். அந்த இரண்டு ஓவர்களும் நன்றாகப் போட்டால் மூன்றாவது கிடைக்க வாய்ப்புண்டு எனென்றால் ஒரு பத்து ஓவர் மேட்சில் ஒரு ஆள் தான் மூன்று ஓவர் போடலாம்.

அதுமட்டுமில்லாமல் விக்கெட் கீப்பிங் ரொம்பவும் முக்கியமான ஒன்று. அதனால் அதுவும் நானே, அப்பல்லாம் கண்ணாடி கிடையாது. ஸ்டெம்புக்கு ரொம்பவும் அருகில் நின்று கீப்பிங் செய்வேன். சிலகாலம் ஒரு அணிக்கு அவர்களிடம் இருந்த ஒரு பேஸ் பவுலரின் பந்துகளை நான் கீப் செய்கிறேன் என்பதற்காகவே குறைந்த வயதில் டோர்னமெண்ட் விளையாடியிருக்கிறேன். எப்படியாவது லெக் அம்ப்பயரை ஏமாத்தி மேட்சுக்கு ஒரு ஸ்டெம்பிங் வாங்கிவிடுவேன் ;). அப்புறம் பௌலிங், முதலில் எங்கள் அணி பௌலிங் செய்தால் நான் தான் முதலில் வீசுவது. முதல் ஸ்பெல் முடிந்து எட்டாவதோ பத்தாவதோ ஓவரை நான் தான் வீசுவேன்.

1500 ஓடுவதாலும் வீட்டில் தண்ணி தெளித்து விட்டிருந்ததாலும் என்னால் அந்தக் காலக் கட்டத்தில் நிறைய கிரிக்கெட் விளையாட முடிந்திருந்தது. பின்னர் எனக்கென்று ஒரு டீம் இருந்தாலும் பிற அணிகளுக்காகவும் விளையாட போய்விடுவேன். கூத்தைப்பார் டோர்னமெண்ட், செக்யூரிட்டி காலனி டோர்னமெண்ட், எழில்நகர் டோர்னமெண்ட் என சுத்துவட்டாரத்தில் நான் விளையாடாத டோர்னமெண்ட்களே ஒரு காலத்தில் இல்லை என்பது போல் ஒன்று கிரிக்கெட் விளையாடுவது இல்லை கிரிக்கெட் பற்றி பேசுவது இது மட்டும் தான் வாழ்க்கை அப்பொழுது.

+1, +2 விலும் அப்படித்தான். நான் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண் வாங்காததற்கு இதுவும் ஒரு காரணம். மற்ற காரணம் தான் முன்னமே தெரிந்திருக்குமே.

அடிக்கிற மழை கொளுத்தும் வெய்யில் என எதற்காகவும் நாங்கள் விளையாடுவதை நிறுத்தியதில்லை. இதுவரையான சமயத்தில் நான் ரொம்பவும் பேமஸான பௌலர் தான் பேட்டிங் பிஞ்ச் ஹிட்டர், ஏனென்றால் டெக்னிக்கலாக தெரிந்திருந்தாலும் 8 ஓவர் மேட்சில் நமக்கு கிடைக்கும் ஒன்றிரண்டு ஓவர்களை ஸ்ட்ரோக் பண்ணியெல்லம் ஆடினால் அடுத்த மேட்சில் ஆட இடம் கூட கிடைக்காது. அதனால் ஓப்பனிங் பிஞ்ச் ஹிட்டர், ஷாட்ச் பிச் டெலிவர் வந்தால் போதும் ஒரு போர் அடித்துவிடுவேன் பெரும்பான்மையான சமயங்களில் என்பதால் என் பள்ளி அணிக்காக பெரும்பாலும் ஓப்பனிங் மட்டுமே விளையாடுவேன். சிலசமயம் ஆப்பொனண்ட் ரொம்பவும் குறைவான ரன்கள் என்றால் நான் இறங்க மாட்டேன்.

ஆனால் இதையெல்லாம் மாற்றிப் போட்ட கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன், +2 படிக்கும் பொழுது. பௌலிங் கிடையாது ஒன்லி த்ரோ தான், ஒரு சதுரம் போல் இருக்கும் இடம் தான் பிச். வெறும் ஆப் சைட் மட்டும் தான். கட்டத்திற்கு வெளியில் தூக்கி அடித்தால் அவுட். அது ஒரு அற்புதமான கிரிக்கெட். ஓவர் கணக்கு கிடையாது அவுடாகும் வரை விளையாடலாம். ஆனால் அந்த சின்னக் கட்டத்திற்குள் இருக்கும் பீல்டர்கள் கைகளில் சிக்காமல் ரன் அடிப்பது என்பது பெரிய விஷயம். ஆனால் சில பேர் வேண்டுமென்றே ஸ்ட்ரோக் வைக்கிறேன் பேர்வழியென்று ஆரம்பித்ததால் - unlimited ஓவர்கள் விளையாட முடியாமல் போனது. அதனால் ஒரு கணக்கிற்கு 15 ஓவர்கள்.

பிரம்மாதமான ஆஃப் சைட் ஆட்டம் கைக்கு வந்தது அப்பொழுது தான். அதேபோல் லெக் ஸ்பின் விளையாட வந்ததும்(பிற்காலத்தில் கல்லூரி அணிக்காகவும், கம்பெனி அணிக்காகவும் ஆடிய பொழுது ஸ்பின்னர்ஸை அடிக்க இந்த ஆட்டம் உதவியது.) அப்பொழுதுதான். ஷென் வார்னேவின் மைக்கேல் ஹோல்டிங்கிற்கான பந்து தெரிந்திருக்கும். அதெல்லாம் என்ன பிரம்மாதம் த்ரோ என்பதால் வெறும் முத்தையா முரளீதரன்களும் ஷேன் வார்னேக்களும் தான் அங்கே. அதுவும் இல்லாமல் நிறைய வெரைட்டி வேறு, ஒரே ஓவரில் பேஸ், பவுன்ஸ், லெக் ஸ்பின், ஆப் ஸிபின், புல்டாஸ் என நிறைய போடுவார்கள். இந்த ஆட்டங்களில் எத்தனை 50 அடித்திருப்பேன் நினைவில் இல்லை. மாமாக்கள் சொல்லிக் கொடுத்த டெக்னிக் இங்கே நிறைய உதவியது.

அடுத்த பாகம் போடுகிறேன், இப்பவே நிறைய ஆச்சுது.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In கிரிக்கெட் சொந்தக் கதை

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia

நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது எப்பொழுது என்று சரியாக நினைவில் வரமறுக்கிறது ஆனால் ஐந்தாவது வகுப்பு படிக்கும் பொழுதெல்லாம் ஆடியிருக்கிறேன் என்பது நினைவில் இருக்கிறது. கொஞ்சம் போல் சீரியஸ் கிரிக்கெட் என்றால் அது ஆரம்பித்தது ஆறாவது ஏழாவது படிக்கும் பொழுதாகயிருக்கலாம்.

எங்கள் பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருந்த ஒரு இடத்தில் விளையாடுவோம்; பக்கத்தில் ஒரு மாங்காய் மரத்துடன் கூடிய வீடிருந்தது. பெரும்பாலும் அந்த வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் எனவே பந்து வீட்டின் கொல்லைப் புறத்திற்கு சென்றுவிட்டால் பிரச்சனையில்லாமல் எடுத்துவரமுடியும் என்பதுகூட நாங்கள் அந்த இடத்தில் விளையாடியதற்கு ஒரு காரணம். அப்பொழுதெல்லாம் ரப்பர் பந்துதான், கிரிக்கெட் பேட் என்று பெரிதாக ஒன்றும் இல்லாவிட்டாலும் எங்கேயோ கிடைத்த ஒரு பேட்டில் விளையாடிக் கொண்டிருந்த நினைவு.

ஸ்டிக் எல்லாம் மரக்குச்சிகள் தான், பெரும்பாலும் பள்ளிவிட்ட பிறகு இரண்டு மணிநேரங்கள் விளையாடுவோம். வெறும் 'லெக்' சைட் மட்டும் தான்; அதுவும் ஸ்டிக்கிற்கு பின்பக்கம் ரன்கள் கிடையாது. ஏனென்றால் அந்த வயதில் பௌலிங் போடும் பொழுது ஷார்ட் பிச் டெலிவர்கள் அதிகம் இருக்குமென்பதால் அந்தப் பக்கம் அடிக்க வசதியாக இருக்கும். அதன் காரணமாகவே அந்தப் பக்கம் ரன் கிடையாது. பள்ளிக்கூடம் விட்டபிறகென்பதாலும் எல்லோர் வீடுகளிலும் உடனே வீட்டிற்கு போய்விடவேண்டிய அவசியம் இல்லாத காரணத்தாலும் சைட் ஒன்றிற்கு ஆறு பேர் என பன்னிரெண்டு பேர் விளையாடுவோம்.

நினைவு தெரிந்து அந்த வயதில் எல்லாமே வேகப் பந்துவீச்சு தான்; சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கொஞ்சம் பெரிய க்ரவுண்ட்களில் இரண்டு செக்டார்களுக்கு இடையில் மேட்ச் நடக்கும். அந்த மொட்டை வெய்யலில் முதல் ஆளாக நான் உட்கார்ந்திருப்பேன் மேட்ச் பார்ப்பதற்கு. நான்கு மணிக்கு ஆட ஆரம்பிக்கும் அவர்கள், ஆறு மணி போல் மேட்ச் ஆடி முடித்ததும் அந்த பெரிய ஆட்களுக்கு பௌலிங் செய்வேன். சொல்லப்போனால் நான் ஓசி காஜி தான் அடிப்பார்கள் அவர்கள் இருந்தாலும்; அதுவரை நானாகப் பார்த்திராத டென்னிஸ் பால்களுக்கு அறிமுகம் அங்கே தான் கிடைத்தது.

ரப்பர் பாலுக்கும், காஸ்கோ பாலுக்கும் வித்தியாசம் நிறைய உண்டு. கொஞ்சம் மித வேகமாக பந்து வீசினாலே ரப்பர் பாலில் வேகமாகச் செல்லும். ஆனால் காஸ்கோ பாலிற்கு வெய்ட் சுத்தமாகயிருக்காது, அதனால் என்ன வேகமாக ஓடிவந்து வேகமாக வீசினாலும் பேட்ஸ்மேனுக்கு டைமிங் நிறைய கிடைக்கும். நான் ஆறாவது படிக்கும் பொழுதெல்லாம் இப்பொழுது மார்க்கெட்டில் கிடைக்கும் 'விக்கி' பந்துகள்(இரண்டு கலர்களில் பெரும்பாலும் இருக்கும், சில ஒற்றைக் கலரிலும்) கிடைக்காது. BHELல் டென்னிஸ் கிளப்பில் இருந்து இந்த காஸ்கோ பந்துகளை அந்த அண்ணன்கள் வாங்கி வருவார்கள்.

சின்ன வயது, எதையாவது சாதிக்கணும் என்ற ஆசை எல்லாம் சேர்த்து அந்த வயதிலேயே நான் வேகமாக பந்துவீசுவேன். காஸ்கோ பந்திலும்; என்னைவிட சற்றேறக்குறைய பத்து வயது பெரியவர்கள் பேட்டிங் செய்பவர்களை என் வேகத்தால் தடுமாறவைப்பேன் சில தடவைகள். சில தடவைகள் பொத்தென்று ஷார்ட் பிச் விழ பந்து பறக்கும்(பஞ்சு மாதிரி ;)). இதில் பிரச்சனை என்னவென்றால் அப்படி அடிக்கப்பட்ட பந்தையும் நான் தான் எடுத்துவரவேண்டும். இதனாலெல்லாம் ஒரு நன்மை என்னவென்றால் ஆஸ்பிட்டல் பக்கம் ஒரு பிரச்சனை என்று படுத்ததில்லை அவ்வளவே.

அப்பா வேறு உடற்பயிற்சி ஆசிரியர், அக்கா ஸ்டேட்-ல் தொடர்ச்சியாக தங்கம் வாங்கியவர். இதனால் காலையில் ஐந்தரை மணிக்கே "நேரு ஸ்டேடிய"த்திற்கு துரத்தப்படுவேன். அக்கா போய் வார்ம் அப் செய்யும் வரை, கேலரியில் படுத்திருந்துவிட்டு. வார்ம் அப் ஆனதும் லாங்க் ஜெம்ப் பிட்டில் படுத்துக் கொள்வேன். அப்பா தூரத்தில் வருவது தெரிந்ததும் நானும் அப்பத்தான் ஓடிக் களைச்சு போயிருக்கிறதா சீன் போடுவேன். ஆனால் அப்பாவுக்கு அதெல்லாம் நல்லாவே தெரியும். ஆனாலும் நான் காலையில் எழுந்து ஸ்டேடியம் போனதற்கு காரணம் அம்மா போய்வந்ததும் தரு கேழ்வரகு கஞ்சி. (அந்த ஏலக்காய் மணம் இப்பவும் நினைச்சா உணரமுடிகிறது.)

காலை இப்படின்னா சாயங்காலம் இப்படி கிடையாது; என்னையும் அக்காவையும் ஸ்டேடியத்திற்கு துரத்திவிட்டுட்டு அப்பாவும் அம்மாவும் வாக்கிங் வருவார்கள். வந்து ஸ்டேடியத்தின் கேலரியில் உட்கார்ந்திருப்பார்கள்; அதனால் ஏமாற்ற முடியாது. அந்த ஸ்டேடியம் பெரியது. எப்படியென்றால் நானூறு மீட்டர்களை ஒரே ரவுண்டில் ஓடக்கூடிய அளவிற்கு பெரியதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நான் அந்த ஸ்டேடியத்தில் பதினைந்து ரவுண்ட்கள் ஓடுவேன். பார்த்துக் கொள்ளுங்கள்(400மீட்டர் x 15). அக்காவிற்கு வெறும் இரண்டு ரவுண்ட்கள் தான் ஏனென்றால் அவள் பங்கேற்பது 100, 200 மற்றும் லாங் ஜெம்ப்.

என்னை இருபது மீட்டர் முன்னால் நிறுத்திவிட்டு எனக்கும் அக்காவிற்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடக்கும் பெரும்பாலும் எல்லா நாளும், 20 மீட்டர் மட்டுமல்லாமல் ஸ்டாட்டிங்கும் முன்னாடியே கொடுத்துவிட்டு ஓடுவேன். ஆனால் அக்கா தீவிரமாக ஓடிக்கொண்டிருந்த காலங்களில் அவள் என்னை முந்திக் கொண்டுதான் முடிப்பாள்.

இதுமுடிந்ததும் அப்பா அக்காவைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குப் போய்விடுவார், நான் அந்த ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடுவேன். இது வேறு ஒரு கூட்டம் கொஞ்சம் போல் நான்-ஸ்டாண்டர்ட் கிரிக்கெட் விளையாடுபவர்கள். அதாவது காலையில் இருந்து வேலை செய்துவிட்டு விளையாட வருபவர்கள். இவர்களிடம் என் பௌலிங்க் வெகு சீக்கிரமாக எடுபடும் பந்தும் ரப்பர் பால் தான். என்னிடம் இருந்த அத்தெலெட்டுக்கான திறமை என்னுடைய பீல்டிங்கிலும் ரன்கள் எடுப்பதிலும் தெரியும்.

சொல்லப்போனால் இவ்வளவு தான் நினைவில் இருக்கிறது நான் எட்டாவது படித்தது வரையிலான கிரிக்கெட் அனுபவம், நினைவுகள், நோஸ்டாலஜியா எல்லாம். அடுத்து நான் கொஞ்சம் போல் கிரிக்கெட் பைத்தியம் பிடித்துக் கிடந்த 8 - 12 படித்த பொழுதுகளின் நினைவுகள்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In Only ஜல்லிஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் சுய சொறிதல்

என்ன தவம் செய்தனை மோகனா?

ஆச்சர்யமாகவே இருக்கிறது வாழ்க்கை எனக்கு பெரும்பான்மையான சமயங்களில். சொல்லப்போனால் அந்த ஆச்சர்யம் இல்லாமல் போகும் நாளில் வாழ்க்கை போரடித்துவிடும் என்பது மட்டும் இன்று பிரகாசமாகத் தெரிகிறது.

"நாடுங்கால் ஒரு மனமற்ற செய்கையை
நல்லதோர் மணமாம் என் நாட்டுவார்
கூடுமாயில் பிரமசரியம் கொள்
கூடுகின்றிலதெனில் பிழைகள் செய்து

ஈடழிந்து நரக வழிச்செல்வாய்
யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண் - பாரதி"


"கெட்டு சீரழிந்து போனாலும் போ, கல்யாணம் மட்டும் செஞ்சிக்காத"(ஒரு மாதிரி என்னுடைய டிரான்ஸ்லேஷனில் - பாரதியின் கவிதைவரிகள் எக்குத்தப்பாக இதைத்தான் சொல்லும்) பாரதியின் கவிதைகளுக்கு இடையில் வரும் இரண்டெழுத்து வரிகள் பெரும்பாலும் என்னைப் புரட்டிப்போட்டுவிடும் திறமை வாய்ந்தவையாகவேயிருந்திருக்கின்றன.

"பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை..." என்று எழுதிய வரிகளுக்குப் பின் என்ன இருந்திருக்கலாம் என்று ப்ராக்டிகலாக நான் அதே போன்றதொறு சூழ்நிலையில் இருந்த பொழுது உணரத் தழைப்பட்டிருக்கிறேன்.

அதைப் போலவே, "வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேனென்று நினைத்தனையோ..." இந்த வரிகளும். பாரதியுடன் ஒப்பீட்டளவில் பேசவில்லையென்றாலும் என் அளவில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளைச் சந்தித்தது குறைவான சமயங்களில் அல்ல. வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்ளலாம் அந்த வரிகள் பாடமான பிறகு வந்த சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நான் இந்த வரிகளைக் கூறி என்னைச் சமாதானம் செய்து கொண்டதாக.

ஆனால் இதைப் போலவெல்லாம் இல்லை, கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றிய பாரதியின் வரிகள். (இலக்கிய)தமிழுடன் அவ்வளவாக பரிட்சையம் இல்லாமல் போனதால் கொஞ்ச காலத்திலேயே பாரதியை விட அவருடைய தாசனின் வரிகளில் பித்து தலைக்கேறியது; அவருடைய இயல்பான தமிழ் வரிகளால்.

"கல்யாணம் செய்து கொள்ளாதே!" என கல்யாணம் செய்த மற்ற ஆண்கள் சொல்வதைப் போல பாரதி சொன்னதை ஒப்பிடலாமா? இல்லை மற்ற கவிதைகளைப் போல மெஸேஜ் சொல்ல பாரதி இந்தக் கவிதையைச் எழுதவில்லை என்று ஓரம் கட்டிவிடலாமா? குடும்பம் பிள்ளைகள், என சாதாரண மனித சிக்கல்களில் விழுந்து புரளும் அளவிற்கு பாரதி மனதளவில் இல்லையென்றாலும்; தான் கவிதைகளில் எழுதிய விஷயங்களுக்கு எதிராகவே(சில சமயங்களில்) வாழமுடிந்ததையும் பற்றி வருத்தப்படும், அதை செய்யாதே என்று சொல்லும் ஒரு சாதாரண மனிதனாக பாரதியை ஒப்பிட முடியுமா? தெரியவில்லை.

வைப்பாட்டி வைத்துக் கொண்டு(அல்லது விபச்சாரம் செய்து) நரகத்திற்கு போனாலும் போ, கல்யாணம் செய்து கொள்ளாதே என்று சொன்னதை எப்படிப் பார்ப்பது கல்யாணம் ஆகாத நான் தீவிரமா யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

"கஞ்சா" அடிச்சா மட்டும் தான் தலைவர் பிரகாசமா எழுதுவார்; அப்படி அடிக்காமல் போய் எழுதியதில் உண்மையைச் சொல்லிட்டாரோ என்னவோ என்று நண்பரொருவர் நாங்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது சொல்லிய நினைவு. அந்தாளைத் தூக்கி குப்பையில் போடுவோம், அதை விடுங்க.

"உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்", "நஞ்சை வாயிலே வந்து நண்பரூட்டும் போதிலும்", "இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்துவிட்ட போதிலும்" எழுதியவருக்கு "கச்சையணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதிலும்" பற்றி எழுத நேர்ந்தது ஏதோ வேறுவழியில்லாமல், மெட்டுப்போட்டாச்சு வார்த்தை இதுக்கு மேல உக்காரலை என்று ஹீராதி ஹீரோ என்று எழுதும் சுயநலக்கவிஞனாக என்னை பாரதியைப் பார்க்கமுடியவில்லை. இதில் என்னமோ விஷயம் இருக்கின்றது; பாரதியின் சுயவரலாறு போல் வரும் கவிதையொன்றில் வருவதைப் போல,

தான் காதலித்த பெண்ணை(???) திருமணம் செய்துகொள்ள முடியாமல் தந்தையின் சொல்லைக் கேட்டு சிறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நேர்ந்ததையும் பின்னர் தன் மகளுக்கும் சிறுவயதில் திருமணம் செய்துவைத்ததையும் வைத்து, அட்வைஸ் சொல்றவங்க அந்த அட்வைஸ் படி நடந்தார்களா இல்லையா என்ற கேள்வி தேவையில்லை என்று வைத்துக்கொள்ளலாமா? "நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனைக் கேட்பதுண்டோ..." எழுதிய பாரதி; தன் பெண்ணிடம் கேட்டிருப்பாரா? அவருக்கு தன் பெண்ணிடம் அந்த அளவிற்கு உரிமையிருந்திருக்குமா? பதின்மூன்று பதினாலு வயது பெண்ணுக்கு தனக்கு வரப்போகும் கணவன் எப்படிப்பட்டவனாகயிருக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிவு இருந்திருக்குமா? தெரியவில்லை.

ராமகிருஷ்னர், சக்கரை சாப்பிடும் வழக்கத்தை தன் பையனிடம் நிறுத்தச் சொல்லுங்கள் என்று சொல்லி ஒரு அம்மையார் வந்த பொழுது ஒரு வாரம் கழித்து வாருங்கள் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பியதாகவும். பின்னர் ஒரு வாரம் கழித்து வந்த அந்தப் பையனிடம் சக்கரை சாப்பிடுவதை நிறுத்து என்று சொல்லியதாகவும் ஏன் ஒரு வாரம் கழித்து இந்த அறிவுரையைச் சொன்னீர்கள் என்று கேட்டதற்கு, தனக்கே சக்கரை அதிகம் சாப்பிடும் வழக்கம் இருந்ததாகவும் அதை நிறுத்திவிட்டு தான் அறிவுரை சொல்லவேண்டும் என்பதால் அப்படி செய்ததாகவும் படித்திருக்கிறேன். தானே தவறு செய்துகொண்டு அந்தத் தவறை இன்னொருவரை செய்யாதே என்று சொல்வது குற்றம் என்று சொன்னதாகவும் படித்திருக்கிறேன். (உண்மையா என்று தெரியாது!)

இப்பொழுது ராமகிருஷ்ணர் செய்தது சரியென்று பாரதி செய்தது தவறென்றும் சொல்லிவிடமுடியுமா? ராமகிருஷ்ணர் செய்தது தனிநபர் செய்யக்கூடியது. ஆனால் பாரதி பாடிய விஷயங்கள் சமுதாயத்தை திருத்தப் பாடியவை இல்லையா(இல்லாவிட்டால் சமுதாயம் இப்படி இருக்க வேண்டும் என்ற பாரதியின் கனவுகள்). சமுதாயத்தை தனி ஒருவனால் திருத்தி விடமுடியுமா? அப்படி திருத்த வேண்டுமானால் அந்த தனிமனிதனின் கடமைகள் என்னவாகயிருக்க முடியும் என ஏகப்பட்ட கேள்விகள் மனதிலே தொக்கி நிற்கின்றன.

----------------------------------

நான் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு திருச்சி சென்றதற்கு சில பல காரணங்கள் வீட்டில் உள்ளவர்களால் சொல்லப்பட்டது. அதில் முதலாவது போனமுறையும் அதற்கு முந்தைய முறையும் ஆஸ்திரேலியா உலகக்கோப்பை ஜெயித்த பொழுது அங்கிருந்ததால் தான் நான் திருச்சிக்கு வந்தேன் என்று சொல்வது சுத்தப் பொய்.

இப்படித்தான் இனிமேலும் உலகக்கோப்பை போட்டிகள் இருக்குமென்றால் ஆஸ்திரேலியாவை டைரக்ட் செமி பைனல் அனுப்பிவிடலாம் ;). கில் கிறிஸ்டின் ருத்ர தாண்டவம் பார்க்க சூப்பராகயிருந்தது. எனக்குத் தெரிந்து கில்'லி செஞ்சுரி அடித்து ஆஸ்திரேலியா தோற்ற மாட்சுகள் மிக மிக குறைவாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

அந்த அற்புதமான ஆட்டத்தை பார்க்க என்ன தவம் செய்தேனோ??? வரும் நவம்பர் வரையில் ஆஸ்திரேலியாவிற்கு எந்தப் கிரிக்கெட் போட்டியும் கிடையாது :(.

உலகக்கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்கமாட்டார்கள் என்று நான் குருட்டாம் போக்கில்(வைச்சுக்கோங்களேன்...) நிறைவேற்றிய ஆஸ்திரேலியாவிற்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.



நான் திருச்சியிலும் பெங்களூரூவிலும் நண்பர்களிடம், பான்டிங் இன்னும் இரண்டு உலகக்கோப்பை விளையாடும் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று சொல்லிப்பார்த்தேன். அதற்கு அவர்களோ ஒரேயடியாய் அதற்கு முன்பே பான்டிங் ரிட்டயர்ட் ஆகிவிடுவார் என்று ஒன்றுபோல் சொன்னது ஆச்சர்யம் அளிப்பதாகவேயிருந்தது.

இன்னும் ஒரு உலகக்கோப்பையாவது பான்டிங் விளையாட ACB பிரச்சனை ஒன்றும் செய்யாமல் இருக்கணும். அதே போல் சச்சினின் எல்லா ரெக்கார்டையும் போட்டு உடைக்கணும் ஏன் என்றால் ரெக்கார்டுகள் அதற்காக மட்டுமே விளையாடுபவர்களுக்கு போய்விடக்கூடாது என்பதற்காகத்தான்.

Go Aussie Go!!!

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 9 (Finals)

திருச்சியில் இருப்பதால் அதிகம் எழுத முடியவில்லை. இருந்தாலும் இவ்வளவு போட்டிகளுக்கு எழுதிவிட்டு இறுதிக்கு எழுதாவிட்டால் எப்படி எனபதால் இந்தப் பதிவு.

சொல்வதற்கு ஒன்றுமில்லை, இந்த இறுதிப் போட்டி ஒன் சைடட் மேட்ச் ஆகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு.

இதற்கு நான் இலங்கை அணியை குறைவாக கணிக்கிடுவதாக ஆகாது. ஆஸ்திரேலியா "பிக்" மேட்ச்களில் மிகச் சிறப்பாக விளையாடுபவற்கள்.

ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் பிடித்தால் முன்னூறு அடிப்பார்கள், மிகச் சுலபமாக ஜெயிப்பார்கள்.

இலங்கை முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன் மட்டுமே எடுப்பார்கள்.

இது என் கணிப்பு மட்டுமே. என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா முதலில் பௌலிங் செய்யவேண்டும்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 8(Semi Final)

ஒருவழியா உலகக்கோப்பை கிரிக்கெட் அதன் இறுதிக் கட்டத்துக்கு வந்தாச்சு. ஏற்கனவே ஒரு அரையிறுதிப் போட்டி முடிஞ்சு நியூஸிலாந்து வெளியேறிவிட்டது. இன்றைக்கு கடைசி அரையிறுதிப் போட்டி, 8 வருடங்களாக உலகக்கோப்பைப் போட்டிகளில் தோற்காமலும், குரூப் ஸ்டேஜில் சௌத் ஆப்பிரிக்காவை போட்டு புரட்டி எடுத்தும் மனதளவில் பிரகாசமாக இருக்கிறார்கள் ஆஸ்திரேலிய அணியினர்.

மாத்யூ ஹைடன், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பான்டிங், மைக்கேல் கிளர்க், அண்ட்ரூ சைமண்ட்ஸ், மைக்கேல் ஹஸ்ஸி போன்ற பலமான பேட்ஸ்மேன்களும். மிகவும் வித்தியாசமான பௌலிங் அட்டாக்குடன் மிகவும் வலுவாகயிருக்கிறது ஆஸ்திரேலியா அணி.

மனதளவில் தளர்ந்து போயே சௌத் ஆப்பிரிக்க அணி இருந்தாலும், செமியிலாவது ஒரு நல்ல போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். முதல் பேட்டிங்காக இருந்தாலும் சரி, இரண்டாவது பேட்டிங்காக இருந்தாலூம் சரி என்று பின்னிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியை சௌத் ஆப்பிரிக்கா ஜெயிக்க வேண்டுமானல் They have to play like champions. அவ்வளவுதான்.

ஒரு மாதிரியான போட்டி கூட இல்லாததால ஒவ்வொரு போட்டிக்கும் பதிவு போடணும்ங்கிற கான்செப்ட் கூட உதைவாங்குது எழுதவே ஒன்னும் இல்லை. யாரும் ஆஸ்திரேலியா பக்கத்தில் கூட வரலைங்கிறதால, என்னாத்த எழுத... ஆனாலும் உற்சாகப் படுத்துவதற்காக(உற்சாகப் படுத்திக் கொள்வதற்காக...) இந்தப் பதிவு.

Read More

Share Tweet Pin It +1

19 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 7

இந்த உலகக்கோப்பையின் ஆரம்பத்தில் இருந்து நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாட்ச். ஸ்ரீலங்காவைப் போல் ஏப்பை சாப்பையாக ஆடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இருவரும் முழு பலத்துடன் ஆடினால் நல்ல மாட்சாகயிருக்கும்.

நியுஸிலாந்திற்கு எதிரான கடைசி சீரியஸ் போட்டியிலும் கூட, ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் திறமையாகத்தான் இருந்தது, கேப்டன்ஸியும், சில வீரர்களும், பவுலிங் அட்டாக்கும் சரியாகயில்லை. ஆனால் இப்பொழுது எல்லாம் பிரகாசமாகயிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு மிகச் சாதகமான ஒரு மாட்சாகத்தான் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் சாதாரணமாகவே இவர்கள் இருவரும் விளையாடினால், இந்தியா, பாகிஸ்தான் மாட்ச் பார்ப்பது போல் இருக்கும். தற்போதைய நிலையில் பைனல்ஸ் வருவார்கள் என்று நான் நினைக்கும் அணிகளாகயிருப்பதால். பைனல்ஸ்க்கு முன் மற்ற போட்டியாளர்களின் மனவலிமையைக் குறைக்க நிச்சயம் நினைப்பார்கள் இருவருமே.

ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கா யோசிச்சாலும் நியூஸிலாந்து ஜெயிக்கயிருக்கும் 5% சான்ஸஸும் அவர்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்தால் மட்டுமே. அதற்குமே கடினமாகப் போராடவேண்டும். பார்க்கலாம்.

இவர்கள் இருவரும் நன்றாக விளையாடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 6

ஒரு நல்ல மாட்சை எதிர்பார்த்து உலகக்கோப்பை வாசகர்கள் காத்திருக்கிறார்கள். உண்மைதான் ரொம்ப நாளாகவே காத்திருக்கிறார்கள் இரு பக்கமும் சம பலமுள்ள அணிகளின் மோதலுக்காக. இந்த ஆஸ்திரேலியா இலங்கை போட்டியில் அது நிறைவேறும் என்று நினைக்கிறேன்.

இரண்டு அணிகளுமே உலகக்கோப்பைக்காக தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்து வந்துள்ளது தெரிகிறது. பெரும்பாலும் ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே காணப்படக்கூடிய Never say Die அட்டிட்டியூட் இப்பொழுது இலங்கை அணியிலும் காணக்கிடைக்கிறது. நல்ல வித்தியாசமான பௌலிங் அட்டாக், அப்படியே ஆஸ்திரேலியாவைப் போல, கண்ட்ரோலான ஆனால் வேகம் குறைந்த விக்கெட் டேக்கிங் பௌலர்களாக மெக்ராத் மற்றும் வாஸ், வேகம் மட்டுமே குறியாய் மலிங்கா மற்றும் ஷான் டைட். தனித்திறமையான ஸ்பின் பௌலிங்கிற்கு முரளீதரன் மற்றும் ப்ராட் ஹாக். மற்றும் மிதவேக, ஸ்பின் பௌலர்கள் இரண்டு அணியிலும்.(ப்ராட் ஹாக்கையும் முரளியையும் ஒப்பிட நேர்ந்தது அவர்கள் அணிக்காக விளையாடும் பொசிஷனுக்காக மட்டுமே. ;))

பேட்டிங் வரிசையில் தான் ஆஸ்திரேலியா, இலங்கையை விட தற்சமயம் நல்ல நிலையில் இருக்கிறது. மாத்யூ ஹைடன், கில்கிறிஸ்ட், பாண்டிங், மைக்கேல் கிளர்க், மைக்கேல் ஹஸ்ஸி, அண்ட்ரூ சைமண்ட்ஸ் என பிரகாசமான அணிவரிசை எந்த வலுவான அணியையும் போட்டுத்தாக்கும் வலுவுள்ளது. எனவே ஆஸ்திரேலியாவின் வீக் சைட் ஆன(பேட்டிங்கோடு ஒப்பிடும் பொழுது) பௌலிங்கைத் தான் இலங்கை முழுதாகப் பயன்படுத்த வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றிபெற. முதல் பதினைந்து ஓவர்களுக்கு இலங்கை விக்கெட் இழக்காமல் இருந்தால் நிச்சயமாக ஒரு நல்ல போட்டியை இலங்கை ஆஸ்திரேலியாவிற்கு தரும்.

ஆனால் வெற்றி பெருவதை எல்லாம் கனவில் தான் நினைத்துப் பார்க்கவேண்டும்.



Read More

Share Tweet Pin It +1

0 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 5

Go Aussie Go!!! - 5

இங்கிலாந்து போய்க்கொண்டிருந்த நிலையில் இந்தப் போட்டியைப்(ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து - சூப்பர் எய்ட்'ஸ்) பற்றி பெரிதாக எழுத எதுவுமில்லையென்றே நினைத்தேன். CB சீரியஸில் ஜெயித்திருந்தாலும் அவர்களுடைய உலகக்கோப்பை ரெக்கார்ட் அவ்வளவு நன்றாக இல்லை.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா போய்க் கொண்டிருக்கும் வேகத்தில் எவரும் பக்கத்தில் கூட வரமுடியாது என்று தான் நினைக்கிறேன் இன்னும் ஸ்ரீலங்கா, நியூஸிலாந்து இரண்டு பேருடன் ஆஸ்திரேலியா விளையாடும் போட்டிகள் தான் விறுவிறுப்பாக இருக்கும்.

நான் இன்னமும் குறைவாகத்தான் எடுப்பார்கள் என்று நினைத்தேன் இங்கிலாந்து. பரவாயில்லை நன்றாக விளையாடினார்கள். ஆனால் கெவின் பீட்டர்சன் தன்னுடைய நூறு ரன்களிலேயே குறியாகயிருந்து கவிழ்த்துவிட்டார். சச்சின் டெண்டுல்கர் விளையாடுவதைப் பார்ப்பது போலிருந்தது சரியாய் 100 அடித்த கொஞ்ச நேரத்தில் அவுட் ஆகி நான் நினைத்ததை நிரூபித்துவிட்டார்.



ப்ராட் ஹாக், நாதன் ப்ராக்கன், ஷான் டைட் இடைப்பட்ட ஓவர்களில் நன்றாக பௌலிங் செய்தார்கள், இங்கிலாந்து ஒரு சமயத்தில் பலமாக 300 அடித்துவிடும் நிலையில் இருந்தார்கள் என்பது உண்மை தான். ஆனால் பந்து வீச்சாளர்களின் திறமை அவர்களை தடுத்துவிட்டது. ஆரம்ப ஓவர்களில் சற்று உதை பட்டாலும் தன்னுடைய முழு திறமையை மெக்ராத் உபயோகித்து ஸ்லாக் ஓவர்களில் பிரமாதமாக பந்து வீசினார். சிங்கம் வயசானாலும் சிங்கம் தான் என்று இன்னுமொறு முறை நிரூபித்திருக்கிறது.



உண்மையில் மைக்கேல் வாஹ்னனைத்தான் பாராட்டணும், உண்மையில் நல்ல முடிவு ஆஸ்திரேலியா திறமையாக அதிக ரன்கள் செட் செய்து ஜெயித்துவரும் நிலையில் அவர்கள் இதுவரை உலகக்கோப்பையில் செய்யாத ஒன்றை நோக்கி அவர்களை புல்(PULL) செய்திருக்கிறார்கள். (பங்க்ளாதேஷ்ஷை நாங்கள் டீமாயெல்லாம் கன்ஸிடர் செய்யலை.) சௌத் ஆப்பிரிக்காவின் தேவையற்ற புகழ் இப்பொழுது இருக்காதென்று நினைக்கிறேன்.

இன்னொரு டீம் நியூஸிலாந்து, உங்களுக்கு இருக்குடீ மாப்பிள்ளை அப்படின்னு ஆஸ்திரேலியா காத்திருக்கிறார்கள். பிரகாசமான ஒரு மேட்சிற்காகக் காத்திருக்கிறேன்.

--------------

மற்றபடிக்கு இந்தப் பதிவை இன்னொரு முறையோ இல்லை இரண்டு முறையோ அப்டேட் செய்வேன் என்று ஐம்பது ஓவர்கள் ஆஸ்திரேலியா விளையாடும் என்ற நம்பிக்கை இல்லை எனக்கு. பார்க்கலாம்.

--------------------

Go Aussie Go!!! - 1
Go Aussie Go!!! - 2
Go Aussie Go!!! - 3
Go Aussie Go!!! - 4

--------------------

ம்ம்ம் ஜெயிச்சாச்சு, இன்னும் முன்னாடியே முடிச்சிருவாங்கன்னு நினைத்தேன். எப்படியிருந்தாலும் வெற்றி வெற்றி தான். பான்டிங் இன்னொரு 100 மிஸ் செஞ்சாச்சு :(. Go Aussie Go!!!

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 4

இன்று ஆஸ்திரேலியாவிற்கும் பங்ளாதேஷ்ற்கும் இடையேயான சூப்பர் எய்ட் மேட்ச், இதைப் பற்றிய பதிவெதுவும் எழுதும் ஆர்வம் எனக்கு சுத்தமாகயில்லை. மழையால் பாதிக்கப்பட்ட மேட்ச் 22 ஓவர்களுக்கு மட்டும் நடைபேற்றது.

முதல் முறையாக இந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா பீல்டிங் செய்தது. பங்ளாதேஷை 104 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா, மெக்ராத் உலகக்கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை இந்தப் போட்டியின் இரண்டாவது விக்கெட் எடுத்த பொழுது பெற்றார்.



விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா சுலபமாக இந்தப்போட்டியை வென்றது. அடுத்தப் போட்டி, அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்திற்கு எதிராக. அதுவரை பொறுமையாக மற்றப் போட்டிகளைப் பார்க்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ் உலகக்கோப்பை கிரிக்கெட்

காதில் வரும் புகையைப் பற்றிய ஜல்லிகள்

ஆ வருது வருது, புகை வருது வருது. அண்ணாச்சி என்னமோ இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு பிரச்சனை வருமென்று சொன்னார். எனக்கென்னமோ ஒரு பாதி முடிந்த பின்னர் அப்படித் தோன்றவில்லை. ஆஸ்திரேலியாவின் வெற்றி தொடரும் என்று தான் நினைக்கிறேன். கடைசியாக ஆஸ்திரேலியா எப்பொழுது உலகக்கோப்பைக் கோப்பையில் தோற்றது தெரியுமா, இரண்டு உலகக்கோப்பைக்கு முன்னர் அதாவது. போன உலகக்கோப்பைக்கு முந்தைய உலகக்கோப்பையில்(ஸ்டீவ் வா தலைமையில் ஜெயித்தது) செமி பைனல்ஸ் ஆகயிருக்குமென்று நினைக்கிறேன்(டிராவை கம்பேர் செய்வதாகயிருந்தால்.) இல்லையென்றால் அதற்கும் முன்னர் தோற்றிருக்க வேண்டும்.

எனக்கென்னமோ இந்த உலகக்கோப்பையிலும் ஒரு போட்டியிலும் தோற்கும் என்று தோன்றவில்லை.

------------------------------

மஹா மட்டமான டெலிகாஸ்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் சோனி. அந்தக் கொடுமையாவது பரவாயில்லை என்றால் எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் என்ற பெயரில் நடத்தும் ஒரு டப்பா ஷோ. மந்திரா பேடியையும் அந்தம்மா கொடுக்கும் பிரம்மாதமான நடிப்பையும் பார்க்கவேண்டாமென்றே நான் டாஸ் யார் ஜெயித்தார்கள் என்று கூட பார்க்கவில்லை. ஏழு மணி மேட்சா அப்பத்தான் உள்ள போறது. கடைசி பால் போட்டா வேற பக்கம் வந்திர்றது, இப்படியே போகுது என் உலகக் கோப்பை.

கிரிக்கெட்டைப் பற்றி ஒரு பொம்பளை பேசுவது எனக்கு பிரச்சனை கிடையாது, நானும் என் அக்காவுமே புள்ளி விவரங்களை அடுக்கி பேசுவோம். (சரி வீட்டை விட்டு வெளி நபர்களிலும் கூட இந்த மாதிரி பெண்களுடன் பேசுவதுண்டு கிரிக்கெட்டைப் பற்றி உண்மையான சுவாரசியத்துடன் பேசினால்.) இந்த ஆண்ட்டி ஒன்னுமே புரியாமல் அடித்த ஜல்லி தாங்காமல் போன உலகக்கோப்பையில் விட்டது. ஆண்ட்டி போட்டிருக்கும் டிரெஸ் கலெக்ஷனுக்காகயெல்லாம் பார்க்கிற அளவுக்கு என்னுடைய கலாரசனை இன்னும் மோசமாகவில்லை. உண்மையில் இங்கே தான் இஎஸ்பிஎன்'ஐ ரொம்பவும் மிஸ் செய்றேன்.

எதுக்காக இந்த ஜல்லியென்றால் பொதுவாகவே ஆஸ்திரேலியா மாட்ச் என்றால் ஒன்றையும் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டுமென்று விரும்புவேன். இன்று ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மாட்சில் மழை பெய்ய வேறுவழியில்லாமல் இந்த ஆண்டியின் ஜல்லியை கேட்க வேண்டியதாயிற்று.

ரொம்ப சீரியஸாக டோனி கிரிக்கும், இயன் செப்பலும் பந்து மற்றும் மட்டையில் தேவைப்படும் தேவைப்பட்ட மாற்றங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஆண்ட்டி தனக்கு பிடித்த கலரையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தது. பிங்க் கலர் என்பது அமேரிக்க கலாச்சார அல்லது மேற்கத்திய கலாச்சார பெண்ணிய மக்களின் ஒரு டப்பா கலர். நீங்கள் இந்தக் கலரை பெண் குழந்தைகளின் மேல் திணிப்பதைப் பார்க்கலாம். சாதாரணமாக ஒரு பெண் குழந்தைக்கு இந்தக் கலர் பிடித்திருந்தால் ஓக்கே. ஆனால் பள்ளிக் கூடத்திலும், மற்ற ஏற்கனவே திணிக்கப்பட்ட குழந்தைகளாலும் இந்தக் கலர் திணிக்கப்படுகிறது.

தற்சமயம் பெண்களுக்கென்று உருவாகி(பெண் பதிவர்கள் பதிவுகளில் இதன் லிங்கை கட்டாயமாகப் பார்க்கலாம்) ஒரு கலெக்ஷன் எக்ஸெம்மல் பைல் கூட இந்த பிங்க் நிறத்தில் இருந்ததைப் பார்த்து ஒரு புன்முறுவல் என் முகத்தில் படர்ந்தது.

ஆனால் மந்திரா ஆண்ட்டி சொன்ன/சொல்லும் விஷயங்களை அங்குள்ள பெருந்தலைகள் கவனிப்பதில்லை என்பது வேறுவிஷயம்.(Bunch of MCP's ;-))

ஹைடனின் அற்புதமான ஆட்டம் பார்க்க கண்கொள்ளாக் காட்சி, முதல் சுற்றைப் போலில்லாமல் அளவில் பெரிய மைதானங்கள், ரொம்ப ஸ்லோவான அவுட்பிச். பந்து பேட்டிற்கே வர மாட்டேன் என்கிறது. ஆனாலும் அற்புதமான ஆட்டம், ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் தங்கள் வேலையை செய்துவிட்டார்கள். எனக்கென்னமோ மேற்கிந்தியத் தீவுகள் இருநூறு சொச்சம் தான் அடிப்பார்கள் என்று படுகிறது பார்க்கலாம்.

-----------------------------

இதையெல்லாம் சொல்லிக் காண்பிக்கணும்னு இல்லைன்னாலும் நான் சொன்னது தான் நடந்திருக்கு இல்லையா? இருநூத்தி சம்திங்கிற்கு வெஸ்ட் இண்டீஸ் அவுட் ஆயாச்சு. இன்னுமொறு 100 ரன்கள் வித்தியாசத்தில் வின்.

எனக்கென்னவோ இதுவும் ஒரு ஒன்சைட்டட் வேர்ல்ட் கப்பாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 3

முன்னாடி இரண்டு தெய்வங்களை நம்பி நான் போட்ட வேர்ல்ட் கப் மேப், ஊத்திக் கொண்டது உண்மைதான். இந்தியாவை பைனல்ஸ் வரை கொண்டு சென்றது என்னுடைய தேசபக்தியால் மட்டும் கிடையாது. அவர்களுக்கு நிச்சயமாக அந்தத் திறமை உண்டு. என்னவோ யார் செய்த சதியோ, வைத்த சூனியமோ ஊத்திக் கொண்டு முதல் ரவுண்டிலேயே வெளியேறும் நிலை.

ஆனால் என்னுடைய புல் சப்போர்ட் அணி பிரமாதமாக விளையாடிவருகிறது. எனக்கென்னமோ இந்த முறையும் ஆஸ்திரேலியா எந்த பிரச்சனையும் இல்லாமலே ஜெயித்துவிடும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்த்த ஸ்டுவர்ட் கிளார்க்கை ஆஸ்திரேலியா களம் இறக்கவேயில்லை :@, அதேபோல் ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சூப்பராக விளையாடுவதால் Mr. Cricketற்கும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன :(.

Home Team வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவிற்கு கொஞ்சம் பைட் கொடுக்க முயல்வார்கள். ஆனால் இந்த இரண்டு டீமிற்கு இடையிலான குவாலிட்டி டிஃப்ரன்ஸ் ஆஸ்திரேலியாவை சுலபமாக ஜெயிக்க வைக்கும். பாண்டிங் தன்னுடைய ஐந்தாவது உலகக்கோப்பை செஞ்சுரியை நலுவவிட்டார்(91 Runs). ஆனால் பிரமாதமான பார்மில் இருக்கும் அவர் இன்னும் குறைந்த பட்சம் இரண்டு செஞ்சுரியாவது அடிப்பார் என்று அடித்துக்கூறலாம். அதுவும் இல்லாமல் கொஞ்சம் கஷ்டமான போட்டிகளில் Captain's Knock ஐ அவரிடமிருந்து நிச்சயமாக எதிர்பார்க்கலாம். மார்க் வா' வின் வேர்ல்ட் கப் ரெக்கார்டுகளை அவர் உடைக்கும் பொழுதெல்லாம் மனசுக்கு கஷ்டமாகயிருந்தாலும். ஒரு சிறந்த ப்ளேயர் இன்னொரு சிறந்த ப்ளேயரின் ரெக்கார்டுகளை உடைக்கிறார் என்ற சந்தோஷம் எப்பொழுதும் உண்டும்.



கடந்த ஆட்டத்தில் அடித்த முதல் 8 ரன்கள் மூலமாக 10,000 ரன்களைக் கடந்த ரிக்கி பாண்டிங்கிற்கு ஒரு பொக்கே.(பொக்கை இல்லை) மெக்ரத்திற்கு இன்னும் நான்கு விக்கெட்கள் பாக்கியிருக்கின்றன. ஷான் டைட் பரவாயில்லை, 61 ரன்கள் கொடுத்தாலும் மிடில் ஆர்டரில் இரண்டு பேரை தூக்கினார், பிராட் ஹாக்கை இந்த மாட்சுக்கு எடுக்கும் பொழுது கமேண்டேட்டர்கள் இது சரிவராது என்றார்கள், ஆனால் சரியாக வந்தது. மாத்யூ ஹைடனின் பார்ம் பிரமிக்க வைக்கிறது, அண்ணாத்தையை பார்மில் இல்லையென்று வெளியில் தூக்கி வைத்திருந்தது நினைவில் வந்தது.



ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் நான்கு போட்டிகள்(Super Eight's) விறுவிறுப்பு இல்லாமல் இருக்குமென்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா நியூஸிலாண்டை துவம்சம் செய்யும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

---------------------

முதல் சுற்று போட்டிக்குப் பிறகு திருத்தியமைக்கப்பட்ட என்னுடைய மேப். சௌத் ஆப்பிரிக்கா செமிஸ் வரக்கூடாது என்று இல்லை ஆனால் வரமாட்டார்கள் என்பது என்னுடைய எண்ணம்.

Group A

1. Australia
2. South Africa

Group B

1. IndiaSrilanka
2. SrilankaBangladesh

Group C

1. New Zealand
2. England

Group D

1. PakistanWest Indies
2. West IndiesIreland

Then Super Eights

A1 & D2 - Australia Vs West Indies - Australia
A1 & B2 - Australia Vs Srilanka - Australia
A1 & C2 - Australia Vs England - Australia
A1 & D1 - Australia Vs Pakistan - Australia
A1 & B1 - Australia Vs India - Australia
A1 & C1 - Australia Vs New Zealand - Australia

March, Tue 27 - Australia v West Indies
March, Sat 31 - Australia v Bangladesh
April, Sun 8 - Australia v England
April, Fri 13 - Australia v Ireland
April, Mon 16 - Australia v Sri Lanka
April, Fri 20 - Australia v New Zealand

The Semi finalists

1. Australia
2. England
3. IndiaNew Zealand
4. West Indies

அப்படின்னா
Australia Vs West Indies - Australia
England Vs IndiaNew Zealand - England

இன்னமும் சொல்லணுமா

Finals

Australia Vs IndiaEngland - Australia

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Bermuda in match pixing scandal

உலகக்கோப்பைப் போட்டியில் பெர்முடாஸ் அணி மேட்ச் பிக்ஸிங் செய்தது தெரியவந்துள்ளது. இதைப் பற்றி தீவிர விசாரணை நடத்தப்படும் என்று ஐசிசியின் தலைவர் மால்கம் ஸ்பீட் தெரிவித்தார். இன்று மதியம் போல் பெர்முடா அணியின் கேப்டன் Irvine Romaine ஐசிசியின் மேட்ச் பிக்ஸிங் தடுப்புக் குழுவால் விசாரிகப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்தியா அணிக்கெதிரான போட்டியின் உத்தப்பாவின் கேட்சைப் பிடித்த Dwayne Leverock ஒரு போலீஸ்காரர் என்பதால் அவரால் தான் இந்த ஸ்காண்டல் வெளிப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது.

பத்திரிக்கையாளர்கள் மால்கம் ஸ்பீடிடம் எப்படி இந்த விஷயம் வெளியில் தெரியவந்தது என்று கேட்ட பொழுது, பெர்முடாஸ் இந்திய அணியிடம் தோற்ற பொழுதே இதைப் பற்றிய சந்தேகம் எழுந்ததாகவும், பின்னர் பெர்முடா அணியினரின் தொலைபேசிப் பேச்சுக்களை கேட்டதில் இந்தச் சந்தேகம் உறுதியானதாகவும் தெரிவித்தார்.

இதைப் பற்றிய விரிவான வெள்ளை அறிக்கை நாளை வெளியாகுமென்று தெரிகிறது.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

Popular Posts