In நாத்தீகம்

பொறுக்கித்தனம்

என் வாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்களை அவைகள் என் நம்பிக்கைகளுக்கு நேர் எதிரானவையாக இருந்தாலும் ஒப்புக்கொள்கிறேனோ இல்லையோ அப்படி ஒன்று மக்களால் நம்பப்படமுடியும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் மிகச்சில விஷயங்களில் மட்டும் என் எல்லைகளையும் மீறி என்னைச் சில விஷயங்கள் கோபப்படுத்திவிடும் அதில் ஒன்று கடவுள் நம்பிக்கை.

இதில் பொறுக்கித்தனம் என்று சொல்லக்கூடிய ஒன்றை மிகச்சாதுர்யமாக 'என்' கடவுள் நம்பிக்கையுள்ள அத்தனை நண்பர்களும் செய்திருக்கிறார்கள். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன், இதைத் தெரிந்து கொண்ட அனைவரும் நான் இன்றிருக்கும் நிலைக்கு என் பெற்றோரின் கடவுள் நம்பிக்கை தான் காரணம் என்று சொல்லி வெறுப்பேற்றுவார்கள். சத்தியமாகச் சொல்கிறேன் இது பொறுக்கித் தனம். யாராலும் உங்க அம்மா அப்பா இல்லாட்டி நீ இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் இதை அவர்களுடைய கடவுள் நம்பிக்கையோடு ஒப்பிட்டு நம்மைக் கேவலப்படுத்துவார்கள். ஆமாம் இந்த வார்த்தைகளை கேட்கும் ஒவ்வொரு தடவையும் நான் கேவலப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். ஒவ்வொருதடவையும்.

என் அம்மா அப்பாவை எவ்வளவு மதிக்கிறேனோ அதே அளவு என் கடவுள் நம்பிக்கையின்மையையும் மதிக்கிறேன். இதைப் போல பல முட்டாள்த்தனங்களையும் பொறுக்கித்தனங்களையும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் நாள் தோறும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். என் தனிப்பட்ட கொள்கையாக கடவுள் நம்பிக்கையின்மையைப் பற்றி யாராவது அவர்களாய்ப் பேசாதவரை பேசாமலிருப்பது என்று வைத்திருக்கிறேன். மிகமுக்கியமாக வாக்குவாதம் செய்யவதில்லை.

இன்னிக்கும் அப்படித்தான் ஒரு பதிவு படித்துவிட்டு வெறுத்துப்போய் வாய்விட்டிருக்கிறேன், இவை சர்வநிச்சயமாய் politically correct statement இல்லைதான். ஆனால் இந்த மூடை இங்கேயே விட்டுவிட்டு விலகுவது தான் நன்மைபயக்கும் என்பதால் இப்படி.




PS: முதல் முறையாய் இந்தப் பதிவை நாத்தீகம் என்று வகைபடுத்துகிறேன்.

Related Articles

3 comments:

  1. ஏனிந்த கொலைவெறி?

    என்னாச்சின்னு தனிமடலிலாவது சொல்லவும். தலைவெடித்துவிடும் போலிருக்கிறது :-)

    ஒரு பொண்ணோட மனசை இன்னொரு பொண்ணு தான் புரிஞ்சுக்க முடியும் என்பது மாதிரி ஒரு நாத்திகனோட மனசை இன்னொரு நாத்திகன் புரிஞ்சுக்கலாம் இல்லையா?

    ReplyDelete
  2. //இதில் பொறுக்கித்தனம் என்று சொல்லக்கூடிய ஒன்றை மிகச்சாதுர்யமாக 'என்' கடவுள் நம்பிக்கையுள்ள அத்தனை நண்பர்களும் செய்திருக்கிறார்கள்.//

    மக்கா... இந்த வரிகளில் நீங்க பண்ணி இருக்கிற சித்து விளையாட்டை நான் பார்த்துட்டேன்.

    ReplyDelete
  3. பல விதமான வெறுப்பேற்றல்களில் இதுவும் ஒன்றுதான்.உறவுகளில்,பணிச்சூழலில்,நட்பு வட்டாரத்தில் பல நேரங்களில் தனிமைப்படுத்துவது என்பது இப்பொழுது சாதாரணமாகி விட்டது.

    ReplyDelete

Popular Posts