எனக்கு எப்பொழுதுமே ஒரு படத்தின் மீதான விருப்பம் எப்படிவருகிறது/வந்தது என்பதை அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் உண்டு. அப்படி என்னை இந்தப் படம் பார்ப்பதற்கு பார்க்க வைத்ததற்கான காரணங்களை யோசித்துப் பார்த்த பொழுது, சுஜாதாவுடன் அம்பல அரட்டைகளின் நான் என் சொந்தப் பெயரை உபயோகப்படுத்தியதில்லை என்பதும் எப்பொழுதும்/பெரும்பாலும் Juno என்ற பெயரையே உபயோகித்து வந்ததும் நினைவில் வருகிறது. நான் 'என் இனிய இயந்திரா'விலும் 'மீண்டும் ஜீனோ'விலும் வரும் ஜீனோவை ஜூனோ என்று அர்த்தம் எடுத்துக் கொண்டு juno என்ற பெயரில் அவரிடன் 'சாட்'டி வந்தேன். ஆனால் இடையில் ஒரு பிரச்சனையில் என்னை சொந்தப் பெயரில் அறிமுகப்படுத்திக் கொண்டாலும் juno வாகவே கடைசி வரை தொடர்ந்தேன். எனக்கு ஜீனோ(நாய்) ஆணா பெண்ணா என்ற சந்தேகம் இருந்தது அவரிடம் கேட்ட பொழுது, ஜீனோ என்ற பெயரை அவர் அதே பெயரில் இருக்கும் zeno ஒரு க்ரீக் ஃபிலோசபர் நினைவில் வைத்ததாகச் சொன்னார். அப்படின்னா ஆம்பளை தான் என்ற முடிவிற்கு வந்தோம் அன்று. முதன் முதலில் இந்தப் படம் பற்றிய அறிமுகம் அக்காதமி அவார்ட் நாமினேஷன்களின் பொழுது அடிபட்டது, உடனேயே விக்கிபீடியா மற்றும் நான் சினிமா பற்றி தெரிந்து கொள்ள பார்க்கும் முக்கியமான சில இணையத்தளங்களில் பார்த்து வைத்திருந்தேன். அகாதமியில் Best original screen play விற்காக விருது வழங்கப்பட்டது, Ellen pageற்கு Best actress in leading role விருது கிடைக்கவில்லை.
இந்த முறை சென்னை சென்றிருந்த பொழுது வாங்கிவந்த சிடிக்களில் ஜுனோவும் இருந்தது. ஆனால் மொத்தம் வாங்கிவந்த எல்லாவற்றிலும் இந்தப் படம் மட்டும் மாற்றப்பட்டு இருந்தது அதாவது சிடி அட்டையில் ஜுனோ உள்ளே ஜோதா அக்பர் படம், சரியான காண்டாகியிருந்தேன். இதன் காரணங்களால் இந்தப் படம் வெளியாகப்போகிறது என்று செய்தியைப் பார்த்ததும் டிக்கெட் புக் செய்திருந்தேன்.
அமேரிக்காவில் இருக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஜூனோ என்னும் 16 வயது சிறுமி(?! வேணும்னா டீன் ஏஜ் கேர்ள்) கர்ப்பம் அடைந்துவிடுவதை தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள் தான் ஜூனோ படம். ஆனால் கவிதை மாதிரி எடுத்திருக்கிறார்கள் கதையை, படத்தின் மிகப்பெரிய பலம் இசையும் பாடல்களும், அப்படியே ஹெலன் பேஜும். படம் முழுவதும் அவரைச் சுற்றி நடப்பதாக இருப்பதால் பயங்கர ஹெவி வெய்ட்டான கதாப்பாத்திரம், நன்றாகச் செய்திருக்கிறாள் பெண்.
தான் கர்ப்பமாகயிருப்பது தெரிந்து முதலில் அபார்ஷன் செய்துகொள்ள நினைக்கும் பொழுது அடிக்கும் லூட்டிகள், பின்னர் குழந்தை பெற்று அடாப்ஷன் கொடுக்க தீர்மானிக்கும் பொழுது காட்டும் பெரிய மனுஷித்தனம், அடாப்ஷன் வாங்கப்போகும் தம்பதியினர்(மனைவி மட்டும்?!) முழுமனதுடன் குழந்தைக்காக ஏங்கும் பொழுது அதைப்பார்த்து பூரிப்படையும் காட்சிகள், தன் காதலனை வம்பிழுத்து பின்னர் காதல் கொள்ளும் காட்சிகள் என்று அவள் வயதிற்கு மீறிய முதிர்ச்சி இருக்கிறது.(லின்ட்ஸே லோஹன் மாதிரி இவரும் ஆகிவிடக்கூடாதென்ற ப்ரார்த்தனையும் இருக்கிறது. :()
ஜூனோவின் காதலனாக வரும் ஆளை எங்கிருந்து பிடித்தார்களோ தெரியலை ச்சோ கியூட், சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு ஜூனோ தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லும் பொழுதும் சரி, ஜூனோ இடையில் சீண்டும் பொழுதும் சரி, கடைசியில் ஜூனோ காதலிப்பதாகச் சொல்லும் பொழுதும் சரி அந்தக் கேரக்டர் ஆகவே இருக்கிறார். எப்படி மிகச்சரியாய் இப்படி ஒரு சொம்பைப் பிடித்தார்கள் என்று தோன்றுகிறது.
ஜூனோவின் அப்பாவாகவும், சித்தியும்(Step motherஐ இப்படிச் சொல்லக்கூடாதோ?), அடாப்ஷன் வாங்கப்போகும் தம்பதியினர் மற்றும் ஜூனோவின் காதலன் மற்றும் ஜூனோவின் நண்பி என்று குறைந்த கதாப்பாத்திரங்கள் தான் என்றாலும் அவரவர்களுக்குரிய வேலையை மிகச்சரியாக செய்திருக்கிறார்கள். இந்த அளவிற்கு சீரியஸ் மேட்டர் கொண்ட படத்தை இத்தனை காமெடியாக படமாக்க முடியும் என்பது ஆச்சர்யப்பட வைக்கிறது. அமேரிக்காவில் அபார்ஷன் என்பது பெரிய அரசியல் என்று தெரியும் இந்தப் படம் anti abortionக்கு சாதகமாகப் பேசுகிறது.
பின்னணிப்பாடல்கள் ஒவ்வொன்றையும் கேட்ட பொழுது என் கல்லூரிப் பருவத்தில் கிதார் கற்றுக்கொள்கிறேன் பேர்வழி என்று கழுத்தில் கிதார் மாட்டிக் கொண்டு சுற்றிய நினைவுகளை இயல்பாய் கொண்டு வந்தது. வெறும் கிதார் பின்னணியில்(கொஞ்சம் போல் பியானோவோ இல்லை கீபோர்டோ இருக்கலாம்) பாடல்கள் கேட்பதற்கு உருக வைக்கிறது.
க்ளைமாக்ஸ் பாட்டு
ஜூனோவின் அப்பா கடைசியில் ரஜினிகாந்தின் டயலாக் எல்லாம் விடுறாரு, "Look, in my opinion the best thing you can do is find a person who loves you for exactly what you are. Good mood, bad mood, ugly, pretty, handsome, what-have-you. The right person is still going to think the sun shines out of your a**. That's the kind of person that's worth sticking with." கேட்க சந்தோஷமாக இருந்தது. வசனங்கள் எல்லாம் 'சில்'லிங்காக இருக்கிறது, கமலஹாசனின் காமெடிப் படம் பார்க்கப்போன கதைதான். ஆனால் இது போன்ற படங்கள் சிறுவர் சிறுமிகளுக்கு(ரொம்பத்தான்!) தவறான முன்னுதாரணமாக இருந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தான் கடைசியில் இருந்தது. ஆனால் தவற விடக்கூடாத ஒரு படம் தான் இது.
ஜுனோ படத்தின் ட்ரைலர்
ஜூனோ படத்தை Jason Reitman இயக்க, எழுதியது Diablo Cody இவருக்கு இந்தப் படத்திற்காக அகாதமி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Juno
Mohandoss
Saturday, March 15, 2008
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
-
எல்லோரையும் வியக்க வைக்கக்கூடியதும், மருள வைக்கக் கூடியதுமான நான்கு நூல் தொகுப்புக்கள் எப்படியோ இவர்கள் கையில் கிடைத்துவிட்டன; வேதங்கள் என்...
-
Desperately Seeking Cleavage வோக் ஆர்ட்டிகிள் வெளியான பொழுது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை எழுதிய கேத்லீன் “The tits will not be out for...
படம் வெளியானபோது ஜேசன் ரெயிட்மானுக்காகப் பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்தப் படத்தைப்பற்றி ஏபேர்ட்த்தான் ரொம்பவும் உருகியிருந்தார். எப்போதோ..
ReplyDeleteஇப்போது இந்தப் படம் பற்றிய பேச்சுவந்தாலே எல்லா இடத்திலும் எல்லென் பேஞ் பற்றிய கதையாகத்தான் இருக்கிறது. சமீபத்தைய ஜீனி விருதுகளில் இவருக்கும் ஜூனோ படத்தில் பணியாற்றிய பலருக்கும் விருதுகள் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விருதுக்காகப் படமே அனுப்ப்படவில்லையென்று ஜீனீ ஆட்களும். விருது கொடுக்கப்படவில்லையென்று ரெயிட்மானும் வாக்குவாதப்பட்டபடி இருந்தார்கள். அதுக்குப்பிறகு கவனிக்கல.
எல்லென் பேஜ் குறித்து பயப்பட வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன்.
//CS: Is "Tracy Fragments" really darker than "Hard Candy"?
Page: Yes. I didn't think that I could shoot a movie that was more draining and more intense than "Hard Candy," but that just happened.
CS: What attracts you to these dark roles?
Page: Probably because I read a lot of scripts where it's just girls listening to their iPods or girls who are the girlfriends of the boy who's the lead or girls that fall in love with a boy or girls that play soccer. "Well, this is great, but no, come on!" Especially when you're a teenager, everything is raw, everything is gritty and people are dark. We have really dark sides, and they are typically really honest films in their darkness. Most of the roles that are the most outrageous that I've played have the strongest sense of humanity and that's something that really attracts me. It's fun to just manipulate yourself and your emotions and fall to pieces and try to put them back together.//
இந்தமாதிரிப் பதில் சொல்லுற பொண்ணு.
கூடவே, தன்னைச்சுற்றி நடக்கும் விதயங்களில் அக்கறையெடுத்துக்கொண்டு இப்படிப் பதில் சொல்லும் பொண்ணு
//CS: Are you into politics and are there any issues that you're passionate about?
Page: Lately, I've been kind of obsessing about Le Santo and the patenting of seeds, which is the most ludicrous thing I have ever heard and makes me want to kill myself, basically. Because it's patenting corn, and then basically, stuffing it in the Mexican market and selling it for so cheap that people who don't have that much money can buy it even though they want to buy their century-old corn because it's natural. Then, it infiltrates their crop and then, all-of-a-sudden, you have Le Santo going down to these farmers and going, "Hey, we're suing you!" So, basically, they just want to control the world by patenting seeds.//
அப்புறம் லின்ன் ராம்சேயை ரொம்பப் பிடிக்கும் பொண்ணு. இதே வயசுக்காரங்களுக்கு (சரி விடுங்க. இப்ப இருக்கிற நிறைய திரையுலகக் காரர்கள்னே வைச்சுக்குவோம்) லின்ன் ராம்சேக்கு ஸ்பெல்லிங்கே தெரியுமான்னு தெரியல. லின்ன் ராம்சேயின் 'ராட் கச்சர்' சந்தர்ப்பம் கிடைச்சப்பாருங்க. அமெரிக்காவில மெர்ச்சண்ட் ஐவரி வெளியிட்டாங்க.
பின்னூட்டம் ரொம்ப நீண்டிருச்சு. ஒரு லொள்ளு அடுத்த பின்னூட்டத்தில.
-மதி
jfi
ReplyDelete//CS: Do you consider yourself to be a feminist? Why do you think some people consider that a bad word?
Page: Yes, and why is that a bad word? It's annoying when people start judging things in regards to these ridiculous categories and names like all of a sudden you can't be a feminist because you shave your legs. That's bullsh*t. You're a feminist when you care about equality and to me, it's like why doesn't everybody care about equality and the power of women? How can something be more obvious that we live in a patriarchal society when "feminist" is a bad word?//
-மதி
மதி,
ReplyDeleteஹெலன் பேஜ் பற்றி இப்படித் தெரிந்து கொள்ள சந்தோஷமாயிருக்கிறது.
//லின்ன் ராம்சேயின் 'ராட் கச்சர்' சந்தர்ப்பம் கிடைச்சப்பாருங்க. அமெரிக்காவில மெர்ச்சண்ட் ஐவரி வெளியிட்டாங்க.//
தேடிப்பார்க்கிறேன்.
//How can something be more obvious that we live in a patriarchal society when "feminist" is a bad word?//
ReplyDeleteநான் வரலை இந்த விளையாட்டுக்கு.