1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?
ஏழு எட்டு வயதில் ஆரம்பித்தது, நினைவு தெரிந்து முதலில் பார்த்த படம் கர்ணன். டிவிப் பெட்டிக்குள் உண்மையில் எல்லாம் நடக்கிறது என்று நம்பினேன். அம்புகள் டிவியின் கண்ணாடித்திரையைத் தாண்டி வரக்கூடாது என்று பயந்தேன், டிவிப் பெட்டியை உடைத்துக் கொண்டு கர்ணனுக்காக உதவ எண்ணினேன்.
2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
’காதலில் விழுந்தேன்’
3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
காதல் - வீட்டில் - டிவியில் - இந்த முறை பெரிதாய் ஒன்றும் இல்லை.
4.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
குருதிப்புனல், மகாநதி - சட்டென்று நினைவுக்கு வந்ததும் மனது தானாய்ப் பதறும் இரண்டு படங்கள்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
என் காலம் இல்லாவிட்டாலும் பராசக்தி முதலான ‘திராவிட’ படங்கள் ஏற்படுத்திய தாக்கம்.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு - குறிப்பாய் சொல்லவேண்டுமானால் பாலுமகேந்திரா, மணிரத்னம், பாலா, ஜீவா இவர்களின் படங்கள். இன்னமும் கூட நிறைய பேரைச் சொல்லலாம்.
6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கண்ணில் படும் எல்லாவற்றையும்.
7.தமிழ்ச்சினிமா இசை?
கேட்பதுண்டு. பெரும்பாலும் புதிய படங்களின் இசையில் கைவைப்பதில்லை. எனக்கான பழைய - புதிய பாடல்கள் தொகுப்பு உண்டு. பிடித்திருக்கிறது - நன்றாயிருக்கிறது என்ற சொன்ன பிறகு கேட்பதுண்டு.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தற்சமயம் தமிழ் சினிமா எ உலக சினிமா 10 : 90 என்ற விகிதத்தில் உள்ளது. அதிகம் தாக்கிய படங்களின் வரிசை இந்தப் பதிவை விட நீண்டு விடும் என்பதால், குறிப்பாய் தற்சமயம் பார்த்து என் பதிவில் குறிப்பிடாத சில,
Perfume, Days of Glory(Indigழூnes), The golden pond, One flew over cuckoo's nest, Mamma Roma, Oedipus Rex...
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நன்றாகயிருக்கிறது. ‘ரே’ ‘கத்தக்’ அளவிற்கும் அதற்கு மேலும் பெயர் தரக்கூடிய படங்கள் விரைவில் வரும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.
11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நான்கு வருடம் முன்பென்றால் உலகமே இரண்டது போலிருந்திருக்கக்கூடும். இப்பொழுது பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்னைப் பொறுத்தவரை. அதுவும் தமிழ்சினிமா மட்டுமென்றால். தமிழர்கள் தங்கள் முதல்வரை வேறெங்கேணும் தேடத் தொடங்குவார்களாயிருக்கும்.
பதிவு போட அழைத்த மதிக்கு நன்றி.
நான் அழைக்க விரும்புபவர்கள் - விருப்பமிருந்தால் போடலாம்.
1) பெயரிலி
2) ஹரன் பிரசன்னா
3) சன்னாசி
4) நண்பன் ஷாஜி
5) ஜமாலன்
சினிமா
Mohandoss
Monday, October 13, 2008
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேற...
-
இன்று ஆஸ்திரேலியாவிற்கும் பங்ளாதேஷ்ற்கும் இடையேயான சூப்பர் எய்ட் மேட்ச், இதைப் பற்றிய பதிவெதுவும் எழுதும் ஆர்வம் எனக்கு சுத்தமாகயில்லை. மழைய...
-
"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!" எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்ற...
\\
ReplyDeleteநான்கு வருடம் முன்பென்றால் உலகமே இரண்டது போலிருந்திருக்கக்கூடும். இப்பொழுது பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்னைப் பொறுத்தவரை. அதுவும் தமிழ்சினிமா மட்டுமென்றால். தமிழர்கள் தங்கள் முதல்வரை வேறெங்கேணும் தேடத் தொடங்குவார்களாயிருக்கும்.
\\
வலை பதிய தொடங்கி நாலு வருசம் ஆகிவிட்டது அப்படித்தானே...
அது சரி முதல்வரை...:)
அழைத்திருக்கும் ஆட்கள் எல்லோரும் எழுதினால் சுவாரஸ்யமாய் இருக்கும்...
ReplyDeleteநல்லா எழுதியிருக்கீங்க மோகன். :))
ReplyDelete\தமிழர்கள் தங்கள் முதல்வரை வேறெங்கேணும் தேடத் தொடங்குவார்களாயிருக்கும்.
ReplyDelete\\
கலக்கல் ;)
King, சென்ஷி, கோபிநாத் - நன்றிகள்.
ReplyDelete///தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
ReplyDeleteஇல்லை. ///
9ஆம் கேள்வியில் மொத்தம் 5 கேள்விகள் இருந்தாலும் எனக்கென்னமோ இதுதான் பொருத்தமா பட்டது...
சும்மா தமாசு.. :-))