Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

In சினிமா சினிமா விமர்சனம்

காந்தாரா - மாயமந்திரம்


இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனால் பொன்னியின் செல்வன் பற்றி எழுதவில்லை. பொன்னியின் செல்வன் எங்கே போகப்போகிறது எழுதிவிடுவோம்.காந்தாரா பற்றி அந்தப் படம் தியேட்டரில் வெளியாகியிருந்த பொழுதே அறிந்திருந்தேன். நானும் என் மனைவியும் பின்னர் மோசமான தியேட்டர் பிரின்ட் வந்த பொழுது பார்க்கவேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம். தமிழ்நாட்டில் இல்லாமல் போன சோகங்களில் ஒன்று இது. நான் அதற்குப்பின் ரிஷப் ஷெட்டி பற்றி வந்த யூடியூப் வீடியோக்கள், பின்னர் வராஹ ரூபம் பாட்டு பிரச்சனை, என்று ஏகப்பட்ட விஷயங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தேன். எனக்கு அப்படி ஒரு விநோத வழக்கம், ஏறக்குறைய அந்தப் படம் அமேசான் ப்ரைமில் வெளிவந்த பொழுது எனக்கு காந்தாரா பற்றித் தெரிந்திருந்த ஒரே விஷயம், அது கன்னடத்தில் பெறுவெற்றி பெற்றப் படம். அவ்வளவுதான். 


பசுமரத்தாணி என்று நான் பள்ளியில் படித்த பொழுது சொல்வார்கள், அது போல் மனதில் பதிந்து போய்விட்டது இந்தப் படம். Spell boundஎன்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அப்படி, கன்னட ராஜாவிடம் பஞ்சூர்லியை அவர் எடுத்துச் செல்வதற்காக உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, சாமியாடிக் கொண்டே 'ஓவ்' என்று பெருங்குரலெடுத்து கூவி காடே அதிர்ந்த பொழுது, திரைப்படத்துடன் ஒன்றிய மனது, க்ளைமேக்ஸில் சிவா அவனது தந்தையுடன் சேர்ந்து மறைந்த பொழுதுதான் வெளியில் வந்தது. இப்படி ஒரு மனவெளுச்சியை நான் எப்பொழுதும் அடைவதேயில்லை. மொபைல் ஃபோன்களுடனான வாழ்க்கை இப்படியான பொழுதுகளை உருவாக்குவதில்லை. 


ஆரம்பம் மற்றும் முடிவு மட்டுமல்ல, ஏனைய மற்ற பொழுதுகளில் திரைக்கலை அதன் மையப்பகுதியில் இருந்து விலகிவிடவில்லை. வனமும் அதன் வளப்பும் பச்சையும் படம் முழுவதும் விரவியிருந்தது, அங்கிருந்து நீண்டு அப்படியே மனதில் அப்பிக்கொண்டது. பூதகோல அலங்காரத்துடன் கொண்ட ரிஷப் செட்டியின் உருவம் மனதில் இருந்து விலக கனகாலம் பிடித்தது. எத்தனை காலம் அவர் அந்த ஆட்டத்தை கற்றுக் கொண்டார் என்று தெரியாது, அந்த முகம் அளித்த சிறுசிறு நயனம் கூட மனதில் அப்படியே நின்றது, கடைசியில் கிஷோரை அழைத்து அணைத்துக் கொள்ளும் பகுதியெல்லாம் வசனமே தேவையில்லை திரைப்படங்களுக்கு என்பது எத்தனை உண்மை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தியது. அந்த க்ளைமேக்ஸ் ஒரு உச்சம். எப்பொழுதும் சினிமாக்களில் நடைபெறாக, அடைய முடியாத, ஏக்கம் கொள்ளத்தக்கதான ஒரு உச்சம். மனம் நெகிழ்ந்துபோயிருந்தது. 

எனக்கு கடவுள் மீதோ, மயானக் கொள்ளை மீதோ, சாமியாடுவதன் மீதோ நம்பிக்கை கிடையாது. ஆனால் கலை மீது உண்டு, அது ஒரு கலைப்படைப்பு என்றும் அதன் உச்சத்தை ஒரு கலைஞன் அடைய முடியும் என்றும் நம்புகிறேன், ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் நடிப்பு மூலம் அந்த உச்சத்தை நாமும் அதே நிலையில் பார்க்கும், உணரும், அனுபவிக்கும் ஒரு அதிசயம் காந்தாரா மூலம் நடந்தேறி இருக்கிறது. கலகலவென ஆபரணங்கள் ஒலிக்க படம் முழுவதும் வனத்திற்குள் அலையும் பன்றி ஒரு நல்ல உருவகம், செட்டுக்குள் இருந்து சினிமா கேமராவை வெளியில் எடுத்துவந்தது பாரதிராஜா என்று சொல்வார்கள். இப்படி ஒரு ப்ரேமிங், அகலமாகன வனத்தை அப்படியே வெளியில் இருந்து காட்டியிருக்கிறார்கள். கேமரா ஒரு அறைக்குள் இருக்கும் மொத்தக் காட்சிகளை நீங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். 

ஆட்டக்குறை பற்றியும் அதில்லாமல் போகவதைப்பற்றியும் ஜெமோ லங்காதகனத்தில் சொல்லியிருந்த வரிகள் தான் மீண்டும் மீண்டும் நினைவில் வந்தது. 


ஆட்டக்குறை தீர்ந்த ஆட்டம் அனேகமாக எவருக்கும் சாத்தியமாவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு, லட்சத்தில் ஒருவருக்கு அது சாத்தியமாகிறது. அது ஒரு வரம். ஒரு பெரிய சாபமும் கூட. காரணம், பூரணம் என்றால் முக்தி என்று பொருள்; முற்றுப்புள்ளி என்று பொருள். பிறகு பின் திரும்புதல் இல்லை...


அதுதான் இல்லையா? சிவாவும் அவனது தகப்பனும் அடைவது. பூரணம், முக்தி, முற்றுப்புள்ளி. அவர்கள் திரும்பிவருவது இல்லை. இதே போல் வெறிபிடித்துதான் இருந்தது லங்காதகனம் படித்த பொழுது, வெறும் எழுத்து என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும், இயற்றலை விடவும் நாடகத்துக்கான வலிமை என்பதில் இருக்கும் வித்தியாசம் தான் லங்காதகனத்திற்கும் காந்தாராவுக்குமான வேறுபாடு. அடித்துப் போட்டது போலாகிவிட்டது. அது ஒரு ட்ரிக்-ஆக இருக்கலாம், என்னால் கண்களில் கண்ணீர் வராமல் அறம் நாவலின் எந்தக் கதையையும் படிக்க முடியாது. அது ட்ரிக் என்கிறார்கள், நானும் உணர்கிறேன் படிக்கும் பொழுது என் மூளைக்கு புரிவதில்லை. அப்படியானது தான் இந்தப்படமும், மயக்கம் ஏற்படுத்தும் அந்த இசை, அசைவுகள், ஒளி, நிறம் ஒரு ட்ரிக் ஆக இருக்கலாம், ஆனால் எத்தனை படத்தில் இப்படி ஒரு முழுமை கிடைக்கிறது. 


காந்தாரா ஒரு மாயமந்திரம். ஒரு சொடக்கு போட்டதும் மயங்கிப் போவதைப் போல் அந்த முதல் 'ஓவ்'ல் அந்தப் படம் என்னை உள்ளிழுத்துக்கொண்டு விட்டது. 


அவ்வளவுதான். 


பின்னர் தாழ்வுமனப்பான்மையில் திமிரும் தமிழ்நாட்டு மந்தைக்கூட்டம் ஒன்று இந்தப் படம் ஏன் வெற்றி பெற்றதென்றே தெரியவில்லை என்று டிவிட்டரில் பன்றிக்கூட்டமாய் சேற்றில் புரண்டுகொண்டிருந்தது. அவர்களுக்காக,


ஒரு கலைப்படைப்பு என்பது எல்லாருக்குமானது அல்ல. நீங்கள் ஒரு அளவு வளர்ந்தால் தான் ஒரு கலைப்படைப்பின் முழுமையை/உச்சத்தை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வளர்ச்சி என்பது எல்லோருக்குமானது அல்ல. கலை கலைக்கானதே, மக்களுக்கானது அல்ல.

ஒரு பொழுதும் மொசார்ட்டின், பீத்தோவானின், பாக்-இன் இசையை என்னால் முழுவதுமாக உணர்ந்துகொள்ளவே முடியாது. அதன் பிரச்சனை என்னைச் சார்ந்ததே தவிர, மொசார்ட் - பீத்தோவான் - பாக், சார்ந்தது அல்ல. உணர்ந்துகொள்வதற்கான முயற்சி, படிப்பு, பயிற்சி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

ஒரு புயலிலே ஒரு தோனியை, ஜே. ஜே. சில குறிப்பை, சொல் என்றொரு சொல்லை நீங்கள் உங்களின் முதல் புத்தகமாக படிக்கவே முடியாது. அதற்கு ஒரு பயிற்சி வேண்டும். உங்களின் தகுதிக்கு புத்தகம் எழுதுவது எழுத்தாளனின் வேலை இல்லை, அவன் புத்தகத்தை படிக்கும் தகுதியை நீங்கள்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.



Read More

Share Tweet Pin It +1

4 Comments

In Sci-fic சிறுகதை சினிமா சினிமா விமர்சனம்

தனித்தீவு - Science Fiction




ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் வரவழைத்தது. ஒரே மாதிரியான உணவு, உடற்பயிற்சி, இருபத்திநாலு மணிநேரமும் சக்திவாய்ந்த கேமிராக்களின் கண்காணிப்பு, கடந்த சில நாட்களாகவே அவனுக்கான அழைப்பு எப்பொழுது வருமென்ற ஏக்கம் அதிகமாகிக்கொண்டிருந்தது.

இருபத்திரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்த அணுஆயுதப்போரால் அழிந்த போன மனித சமுதாயத்தின் கடைசி சிலரில் ரவிவர்மனும் ஒருவன். பூமியின் பெரும்பாலான பகுதிகள் அழிந்துபோயும், சில பகுதிகள் உயிர்வாழமுடியாத அளவிற்கு கதிர்வீச்சு கொண்டதாகவும் இருந்ததால், அவன் தற்பொழுது சோதனைக்கூடத்தில் சக மனிதஜீவராசிகளின் மீதிகளுடன் வாழ்ந்துவருகிறான். சோதனைக்கூடம் அறிவியல் விஞ்ஞானிகளால் போர் நடந்தபொழுது உருவாக்கப்பட்டது, கதிர்வீச்சு தாக்கமுடியாதபடி கட்டப்பட்டது. இந்த சோதனைக்கூடத்தைப் போல் கதிர்வீச்சால் பாதிக்கப்படாத இடம் பூமியில் இருக்கும் ஒரே ஒரு தீவுமட்டுமே.

சோதனைக்கூடத்திலிருந்து அந்த தீவிற்கு செல்வதற்கு ஒரேயொரு சிறியவானூர்தி தான் அந்த சோதனைக்கூடத்தின் விஞ்ஞானிகளிடம் இருந்தது. அவர்களும் என்ன தான் செய்வார்கள். இந்த மிச்ச மீதிகளை வைத்து ஒரு சந்நதியை உருவாக்கும் முயற்சியை ஒரு ஆராய்ச்சியாக அந்த தீவில் செய்துகொண்டிருந்தார்கள். அந்த வானவூர்தியும் மிகச்சிறியது. ஊர்தியின் விமானிதவிர ஒரேயொரு நபர்மட்டுமே செல்லக்கூடியது. ஒவ்வொரு முறை சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு சென்று ஒரு மனிதனை விட்டுவிட்டு திரும்பவும் சோதனைக்கூடத்திற்கு வருவதற்குள் ஊர்தி பலத்த சேதத்திற்கு உள்ளாகிவிடும். அதைச்சரிசெய்து அடுத்த பயணத்திற்கு தயார் செய்ய பல மாதங்கள் பிடிக்கிறது சிலசமயம் வருடங்கள் கூட.

இப்படி சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு செல்லும் மனிதனை தேர்ந்தெடுக்க ஒருவகையான குலுக்கல் முறை அந்த விஞ்ஞானிகளால் கடைபிடிக்கப்படுகிறது. அந்த குலுக்கலில் வென்ற ஒருவர்மட்டும் தீவிற்கு செல்லலாம். ஆனால் அந்த குலுக்கலும் ஊர்தி சரிசெய்யப்பட்டதும் தான் நடத்தப்படும். இந்த முறை நடந்த குலுக்கலில் கூட அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலிருந்தே ரவிவர்மனுக்கு வாழ்க்கையில் ஈடுபாடு குறைவதாகப்பட்டது. தீவிற்கு போவதற்கும் அங்கு வாழ்வதற்கும் அதிக மனதிடமும் உடல்திடமும் வேண்டுமாதலால், அவர்களுக்கான உணவும் உடற்பயிற்சியும் கட்டாயமானது அதே சமயம் ஆசைக்காக சாப்பிட முடியாமல் கட்டளைக்காக சாப்பிடவேண்டிய கட்டாயம் வேறு.

ஆனால் அவன் மனம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தற்போதைய அவனுடைய மனத்தளர்விற்கு ஒரு பெண்ணும் காரணம் அவள் பெயர் உஷா. அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் செல்லிற்கு அருகில் உள்ள செல்லைச் சேர்ந்தவள். அணுஆயுதப் போரின் விளைவால் அவர்களுடைய பழங்கால வாழ்க்கை நினைவில் இல்லை. அவனுக்கு இதற்கு முன்பு திருமணம் ஆகியிருந்ததா குழந்தைகள் இருந்தார்களா என்பதைப்பற்றிய ஒருவிவரமும் அவன் அறியவில்லை. ஆனால் சில மாதங்களாகவே உஷாவைப்பார்த்தால் அவள் அவனுடைய மனைவியைப் போல் இருக்கிறாள் என்பதைப் போன்ற ஒரு எண்ணம் அவன் மனதில் ஏற்படத்தொடங்கியிருந்தது.

உஷாவும் ரவிவர்மனிடம் நன்றாய்ப் பழகுவாள், விஞ்ஞானிகளின் கட்டளைப்படி அங்கு சோதனைக்கூடத்தில் வாழும் வரை எந்தவிதமான விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் தீவிற்கு செல்வதும் அங்கு சென்ற பிறகு மனித சமுதாயத்தை பெருக்குவதுமே அவனுக்கும் கொள்கையாயிருந்தது. சில வருடங்களாக இப்படி உணர்ந்ததில்லை, உஷாவிடம் அவன் பல மாற்றங்களை சில மாதங்களாக கவனிக்கத்தொடங்கியிருந்தான் அது தந்த பாதிப்பில் தான் கொள்கை காற்றில் பறக்கத்தொடங்கியிருந்தது. அது தந்த பயம்தான் அவன் வாழ்க்கையை சோர்வாக்கிக் கொண்டிருந்தது. அதாவது தான் குலுக்கலில் வென்று தீவற்கு சென்றுவிட்டாலோ இல்லை உஷா தீவிற்கு முதலில் சென்றுவிட்டாலோ என்ன செய்வது என்பதைப்பற்றி சிந்தித்தவனாய் மனதைக் குழப்பிக்கொண்டிருந்தான். உஷாவிற்கும் ஒருவாறு ரவிவர்மனின் நோக்கம் தெரிந்துதானிருந்தது, அவளுக்கும் இது விருப்பமே ஆனால் விஞ்ஞானிகளை மீறி இதில் இறங்குவதற்கு அவள் மனம் ஒப்பவில்லை. சில நாட்களாக இதைப்பற்றி உஷாவிடமும் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தான்.

“உஷா, நேத்திக்கு செல்க்ட் ஆன ஆண்ட்ரூவைப் பார்த்து பேசினியா?”

“ம்ம்ம் பேசினேன், அதிர்ஷ்டக்காரன் அவனுக்கு என்னைவிட ஐந்து வயது குறைவு தெரியுமா?” அவளுடைய பேச்சில் வருத்தம் தெரிந்தது.

“உஷா நீ தீவிற்கு போய்ட்டா என்ன மறந்துடமாட்டீயே” ரவிவர்மனுக்கே தான் கேட்ட இந்தக்கேள்வி ஆச்சர்யத்தையளித்தது. அதைவிட உஷாவிற்கு,

“என்னங்க இப்புடி கேட்டுட்டீங்க, நாம ரெண்டு பேரும் எவ்வளவு நாளா பழகிக்கிட்டிருக்கோம் உங்களைப்போய் மறப்பேனா?”

அவள் சொன்னாலும் நிஜம் அவனை யோசிக்கத்தான் வைத்தது. அவள் தீவிற்கு முதலில் சென்றால் சில மாதங்களிலிலோ, வருடங்களிலோ தானும் அங்கு செல்ல நேரலாம், இல்லை அங்கே தீவற்கே போகாமல் பல ஆண்டுகள் இங்கேயே கழிந்துபோகம்படியும் நேரலாம். அவனுக்கு ராமசாமித்தாத்தாவைப் பற்றித்தான் தெரியுமே அந்தப் பெரியவருக்கு 65 வயதாகிறது. இன்னும் குலுக்கலில் தேர்வு செய்யப்படாமலே இருக்கிறார். அதைப்போலவே நானும் இங்கேயே இருக்கவேண்டிய சூழ்நிலை நேர்ந்தால்? அவனுக்கு நிச்சயமாய் ஒன்று தெரியும் விஞ்ஞானிகள் எக்காரணம் கொண்டும் குலுக்கலில் தேர்வுசெய்யப்படாமல் தீவிற்கு அனுப்பமாட்டார்கள். பின்னர் வந்த இரண்டொறு நாட்களஇல் அவன் உஷாவிடமிருந்து விலகியிருக்க விரும்பினாலும் உஷாவாக வந்து பேச்சுக்கொடுத்தாள்.

சோதனைக்கூடத்திலே அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது இந்த தடவை நிகழ்ந்த தீவிற்கான பயணம். அதிகமாக கதிர்வீச்சிற்கு பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இரண்டே நாட்களில் அடுத்த குலுக்கல் நடைபெற்றது, எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் விதமாக இந்ததடவை ராமசாமித்தாத்தா தேர்வு செய்யப்பட்டார், அங்கிருந்த அத்துனை நபருக்கும் சந்தோஷமே தாத்தா தேர்வுசெய்யப்பட்டதில் அதைவிட சந்தோஷம் ஊர்தி கதிர்வீச்சில் பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இது தொடர்ந்தால் இங்கிருக்கும் அனைவருமே சில வருடங்களில் தீவிற்கு சென்றுவிடமுடியும்.

ஆனால் ரவிவர்மனின் மனதில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களை தெரிந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் அவனை அழைத்துப்பேசினார்கள். பின்னர் அவனை சில மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று கூறி சோதனைக்கூடத்தின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். இத்தனை வருடம் இங்கிருந்தாலும் அவன் அந்தப்பகுதிக்கு வந்ததேயில்லை. இரண்டொரு நாட்கள் அவன் அந்த உள்பகுதியில் தங்கியிருக்க நேர்ந்தது. அந்தச்சமயத்தில் அவன் தெரிந்துகொண்ட அவனைப்பற்றிய, அந்த சோதனைக்கூடத்தைப்பற்றிய, விஞ்ஞானிகளைப்பற்றிய, பூமியைப்பற்றிய ரகசியம் அவனுக்கு பைத்தியம் பிடிக்கச்செய்வதாயிருந்தது.

அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த தூக்கமாத்திரைகள் ஒழுங்காக வேலைசெய்யாததால் விழித்துக்கொண்ட ரவிவர்மன், பக்கத்து அறைகளுக்கு சென்று பார்த்த பொழுதுதான் இதுவரை தீவிற்குச்செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ராமசாமித்தாத்தா மயக்கமான நிலையில் ஒரு அறையில் இருப்பதைப் பார்த்தான். அருகில் சென்று பார்த்தபொழுதுதான் அவருக்கு ஆப்ரரேஷன் செய்யப்பட்டிருப்பதும் அதன் காரணமாய் அவர் இறந்துவிட்டிருந்ததும். இப்படியாக அடுத்தடுத்த அறைகளில் தீவிற்குச்செல்ல தேரந்தெடுக்கப்பட்டதாய் சொல்லப்பட்ட அனைவரும் இறந்துபோன நிலையில் அறைகளில் இருப்பது தெரிந்தது. அவனுக்கு விவரம் புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயமாகத்தெரிந்தது, அது அங்கிருந்து யாரும் தீவிற்குச்செல்லவில்லை. ஏதோஒரு காரணத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று மட்டுமே புரிந்தது. ஒன்றையும் காணாதவனாக வந்து படுக்கையில் படுத்துக்கொண்டான். அடுத்தநாள் அவனை மீண்டும் முன்பிருந்த இடத்திற்கே மாற்றினார்கள். அங்கே சென்றதும் முதல் காரியமாய் ரவிவர்மன் உஷாவிடம் தான் பார்த்ததைச் சொன்னான்.

“ரவி உண்மையைத்தான் சொல்றீங்களா? நம்பவேமுடியலை. நம்மை கொலை செய்யவேண்டிய அவசியம்தான் என்ன இந்த விஞ்ஞானிகளுக்கு. அதுதான் புரியவில்லை.” அவன் சொன்னதைக் கேட்டதும் அவள் அதிகமாய் பயந்துபோனாள்.

“அதுதான் எனக்கும் புரியவில்லை உஷா, இந்த விஷயமாக என்னால் சிந்திக்கவே முடியவில்லை.” சிறிது யோசித்தவன் “உஷா இப்படி செய்தால் என்ன? நிச்சயமாய் அந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் விஷயம் தெரிந்திருக்க வேண்டும். அவர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்து கேட்டால் என்ன.”

உஷாவிற்கும் ரவிவர்மன் சொன்ன திட்டம் சரியாகத்தோன்றியது. இருவரும் திட்டமிட்டு, கேமிராக்கண்கள் படாத ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டார்கள். பின்னர் விஞ்ஞானிகளிலே கொஞ்சம் வயதான விஞ்ஞானியாய்ப் பார்த்து அந்த இடத்திற்கு சாமர்த்தியமாய் அழைத்துவந்தனர். அவர்கள் முன்பே பார்த்துவைத்த அந்த இடத்திற்கு வந்ததும் ரவி தன் வசம் இருந்த கத்தியை எடுத்து அந்த விஞ்ஞானியின் கழுத்தில் வைத்தான் பிறகு,

“இங்கப்பாருங்க இன்ன என்ன நடக்குதுன்னு மரியாதையா சொல்லீறுங்க இல்லைன்னா உங்களை நான் கொலை பண்ணீறுவேன்.” ரவிவர்மன் மிரட்ட முதலில் ஒன்றுமே தெரியாதவர் போல் நடித்த அந்த விஞ்ஞானி பின்னர் ரவிவர்மன் அவர் கழுத்தில் அந்தக் கத்தியால் மெலிதாய்க் கீறவும்.

“சொல்லீற்றேன், உங்கக்கிட்ட சொன்னமாதிரி பூமி அணுஆயுதப்போரால் அழியவில்லை, இருபத்திரண்டாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சியாக, குளோனிங் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த உலகின் பெரும் பணக்காரர்கள் தங்களைப் போன்றே ஒரு குளோனிங் மனிதனை இந்த தொழிற்கூடத்தில் உருவாக்க எங்கள் உதவியை நாடினர். பிற்காலத்தில் அவர்களுக்கு ஏதாவது உடல் உறுப்புக்களில் பிரச்சனை வந்தால் உதாரணத்திற்கு, கிட்னியிலோ, இருதயத்திலோ, நுரையீரலிலோ, இல்லை கல்லீரலிலோ வந்தால் உங்களிடமிருந்து அதை எடுத்து அவர்ளுக்கு பொருத்தி சரிசெய்து கொள்வார்கள்.”

கொஞ்சம் இடைவெளிவிட்டு,

“இது போன்ற பணக்காரர்களின் ஜீன்களின் மாதிரி எங்களிடம் முன்பே உள்ளதால் அவர்களுக்கு இந்த வயதில் இந்த நோய் வரும் என்றுகூட முன்பே கணித்திருப்போம் பின்னர் உங்களை தீவிற்கு அனுப்புவதாய்ச் சொல்லி உங்களிடமிருந்து அறுவை சிகிச்சை செய்து அந்த உறுப்பை அவர்களுக்கு கொடுத்துவிடுவோம். இதுதான் இங்கே நடந்துவருகிறது ஒரு வகையான ஆரம்பக்கட்ட முயற்சிதான் இது. பின்காலங்களில் உங்களை உருவாக்கி வளர்த்துவரும் செலவைக் குறைத்து இந்த திட்டத்தை அனைத்து மனிதர்களுக்கும் பயன்படச்செய்யும் முயற்சியின் முதல் கட்டம்தான் இது.”

“நாங்கலெல்லாம் மனிதர்கள் கிடையாதா? எங்களைக் கொல்வது குற்றமாகாதா?” ரவியின் கேள்வியில் வேகம் இருந்தது.

“இல்லை, நீங்கள் குளோனிங் மனிதர்கள், இன்னும் சொல்லப்போனால் பொருட்கள். அவ்வளவே உங்களை உருவாக்கி நாங்கள் விலைக்கு விற்கிறோம். இதில் தவறொன்றுமில்லை.” அந்த விஞ்ஞானி சொல்ல ரவிக்கு ஆத்திரமாய் வந்தது.

“உங்களுக்கெல்லாம் வீடு எங்கிருக்கிறது. இங்கிருந்து எப்படி வெளியே செல்வது.” ரவி கேட்க,

ஆரம்பத்தில் பதில் சொல்லிக்கொண்டிருந்தவர் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்ல மறுக்க, ரவி அந்தக்கத்தியை சற்று ஆழமாக அவர் கழுத்தில் செலுத்துவதைப்போல் பாவனை செய்ய,

“இருக்கு, இது ஒரு ஆஸ்பிடல் மாதிரிதான், எங்களுக்கெல்லாம் வீடு தனியா இருக்கு. இங்கேர்ந்து எங்களுக்குரிய வேலை முடிந்ததும் வீட்டிற்கு போய்விடுவோம்.”

பின்னர் அந்த விஞ்ஞானியைப் பயன்படுத்தி ரவி, அந்த ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வெளியேற முயன்றான். அவரை அடித்து மயக்கமாக்கிவிட்டு அவருடைய பயனாளர் அட்டையை பயன்படுத்தி, அவர் குறிப்பிட்டிருந்த வழியில் வெளியேறினான். கொஞ்சம் தவறு நேர்ந்தாலும் அவன் கண்டுபிடிக்கப்படும் நிலையிருந்தும் சாமர்த்தியமாக வெளியேறினான். வெளியில் அவனுக்கான புது உலகம் ஆச்சர்யங்களுடன் காத்திருந்தது. அந்த மருத்துவமனையில் கட்டுப்பாட்டிலிருந்து வெளியில் வந்த ரவிவர்மனுக்கு பிறகுதான் தெரியவந்தது அவன் அந்த நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவனுடைய குளோனிங் என்பது அதனால் அவனை பேட்டியெடுக்க வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் இந்த உண்மையைச் சொல்ல, இந்த குளோனிங் பிரச்சனை அந்த நாடாளுமன்றம் வரை சென்றது. பின்னர் ஒரு அவசர சட்டம் இயற்றி இனிமேல் இதுபோன்ற குளோனிங் முறையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது அந்த நாட்டு நீதிமன்றம். அதே தயாரித்து வைக்கப்பட்டிருந்த குளோனிங்க மனிதர்களையும் உடனே அவர்களுக்கான ஒரு சிறிய மாற்றத்தை கொண்டுவரச் செய்து வெளியில் விடச்சொல்லி உத்தரவிட்டது.
-------------------------------------

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In Hiatus சினிமா நாட்குறிப்பு புகைப்படங்கள் புகைப்படம் மரணம்

ஸ்ரீதேவி

#myheartopener என்ற பெயரில் இளவஞ்சி எழுதச் சொன்ன பொழுது கடந்த போன புகைப்படங்களில் ரோஜாவும் மீனாவும் உண்டு. ஸ்ரீதேவி கிடையாது. வயது தான் காரணம். ஜெனரேஷன் கேப்.

ஐஸ்வர்யா ராயைப் போல் ஸ்ரீதேவி மீதும் ஒரு ஏதோ ஒரு காரணமாய் நெருங்க இயலாத தன்மை இருந்திருக்கிறது. காந்தியைப் போல் ஐஸ்வர்யா ராயும், பிடித்து பிடிக்காமல் போய், திரும்பவும் பிடித்து என்று ஒரு சுழற்சி ஸ்ரீதேவிக்கும் உண்டு. ரஜினி ரசிகனா கமல் ரசிகனா என்கிற பிரச்சனை இருந்ததுண்டு. ஆனால் விஜய் - அஜித் விஷயத்தில் அப்படியில்லை. தீர்மானமாய் பிடித்தது அஜித் என்கிற வரை அறிவேன். ஆனால் இதில் விஜய் எதிர்ப்பு என்பது இல்லை. இங்கிருந்து கவுண்டமணி ரசிகன் என்கிற நிலையை அடைந்தது ஜென் நிலையே ஒழிய வேறில்லை.

முதலில் ஸ்ரீதேவி மீதான ஈடுபாடு உண்டானது என்றால் அதற்கு ஒரு படம் காரணம், தெலுங்கு படம், நான் தமிழில் பார்த்தேன். சிரஞ்சீவி - ஸ்ரீதேவி நடித்தது ஸ்ரீதேவி தேவதையாக வருவார் என்று ஊகிக்கிறேன். மனதில் பச்சென்று பதிந்த நிகழ்வு, பின்னர் சீண்டிப் பார்த்தது ஜானி. ஜானியின் ஸ்ரீதேவியைப் பிடிக்காத ஆணாதிக்க எண்ணங்கொண்டவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்க முடியும். திரையில் நடக்கும் கதையை எமோஷனல் அட்டாச்மென்ட் இல்லாமல் பார்க்க முடியாத - இன்னமும் கூட - ஒருவன் என்கிற முறையில், மூன்றாம் பிறை படத்தை இன்னமும் முழுமையாக பார்த்திராவதவன் நான். அந்த முடிவு தெரிந்ததால் அதைப் பார்க்கும் மனமற்றவனாய் இன்னமும் நீடிக்கிறேன். அப்படி தள்ளிவைத்த இன்னொரு படம் பருத்திவீரன் - இன்னமும் - க்ளைமாக்ஸ் பார்த்ததில்லை.

Jennifer Ehleயுடன் காதல் கொள்ள முடிந்த என்னால் ஸ்ரீதேவியுடன் காதல் கொள்ள முடிந்திருக்கவில்லை, என்னவோ என்னை விட வயதில் மூத்தவர் என்கிற உணர்வு. ஆனால் இது பொதுவாய் எல்லோருக்குமானது இல்லை. காஞ்சனாவின் மீது கூட காதல் கொள்ள முடிந்திருக்கிறது, காதலிக்க நேரமில்லை காஞ்சனா இல்லை சாந்தி நிலையம் காஞ்சனா. இது ஒரு வியப்பான மனநிலை இன்னமும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டும் மனநிலை.

ஸ்ரீதேவி அகால மரணம் அடைந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஆறாண்டு கால அமெரிக்க வாழ்க்கையால் கைவந்திருக்கும் மனநிலை ஆச்சர்யமளிக்கிறது. மது அருந்தி பாத்-டப்பில் மயங்கி விழுந்து இறந்தார் என்பது ஒரு இம்மியளவு கூட ஸ்ரீதேவி மீதான மதிப்பில் குறை வரவில்லை.  இங்கே பெண்களின் உடம்பின் மீதான உரிமையை அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்பதில் நம்பிக்கை அதிகம். அவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார், பொடாக்ஸ் இஞ்சக்‌ஷன் போட்டுக்கொண்டார் என்பதில் எல்லாம் நம் கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆதித்த கரிகாலனின் பாற்பட்டு, சின்ன வயதிலேயே இறந்துவிட வேண்டும் என்கிற ஒரு ஈர்ப்பு இருந்தது உண்டு. இப்பொழுதும் அறுபது வயது போதும் என்பதைப் போன்ற ஒரு மனநிலை அவ்வப்பொழுது வருவது உண்டு, ஆனால் மனைவி குழந்தைகள் என்று அமைந்த பிறகு நாம் நம்முடைய வாழ்வை நமக்கானதாய் மட்டும் நினைத்துக் கொள்ள முடியாததாய் நீள்கிறது வாழ்க்கை. யாருக்கும் தொந்தரவும் கொடுக்காமல் ஒரு நீண்ட துயிலில் மரணித்துவிட வேண்டும் என்கிற ஆசை மட்டும் இப்பொழுது இருக்கிறது. நானே நினைத்தாலும் முழு அமெரிக்கன்களாய் என் மகளையும் மகனையும் வளர்த்துவிட முடியாது என்று தெரிந்தே இருக்கிறேன். அன்பும் பாசமும் மட்டுமே தெரிந்த மனைவியிடம் வளரும் குழந்தைகளிடம் அன்பையும் பாசத்தையும் கூட ரேஷனலாக நினைக்க முடியும் என்பதை எப்படி உணரவைப்பது. இந்த மனம் என்பது சூழ்நிலையையும் கூட்டிக் கொண்டே சுழலும் உருவாகும் ஒன்று, பூமி அட்மாஸ்பியரையும் சேர்த்துக் கொண்டே சுற்றுவதைப் போல். மகனும் மகளும் என் வழிக்கு வந்துவிட வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நொடியும் அது என் மனைவிக்கு தரப்போகும் மனவலியைப் புரிந்தே நோகிறேன். மனதிற்கு நெருக்கமானவர்கள் மறையும் தருணம் மனம் தனக்குத் தானே செய்து கொள்ளும் பரிசோதனை தீர்க்கமானதாய் இருக்கிறது.

நான் தீர்க்கமாய் மனதில் ஓடும் சிந்தனைகளை எழுத்தில் கொண்டு வர முடிகிறது என்றே ஊகிக்கிறேன், அல்லது எழுதுவதன் மூலமாய் மனதை சிந்திக்க வைக்க முடிகிறது என்பதை அல்லது எழுதுவதைக் கொண்டு மனதை ஆராய முடிகிறது என்பதை. பிரபாகரன் மரணத்தை ஒட்டி இப்படி யோசிக்க முடிந்திருக்கவில்லை, மனம் யோசனையை மறந்திருந்த காலம் அது. இப்படித்தான் முடியும் என்று தெரிந்திருந்தாலும் அப்படி முடிந்திருக்கூடாது என்று ஏங்கிய மனநிலை. இன்னமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராய் பிரபாகரனை நிறுத்தவில்லை ஆனால் விமர்சனம் வைப்பவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அல்லது நான் நடுநிலையாளர்கள் என்று ஒப்புக்கொண்டவர்கள் ஒப்புக்கொள்ளும் விஷயத்தை ஒப்புக்கொள்ள முடிந்திருக்கிறது. அவ்வளவே.

என்னை மானசீகமாக கமலஹாசனாக உணர்ந்த விந்தை பொழுதுகளில் கதாநாயகியாக ஸ்ரீதேவியை உணர்ந்திருக்கிறேன், பதின்மங்களில். ஸ்ரீதேவி என் அம்மாக்களின் சித்திகளின் கதாநாயகி என்கிற பிம்பம் அகலவில்லை. ஸ்ரீதேவியை கமலஹாசன் மணம் புரிந்திருக்கவேண்டும் என்று வேடிக்கையாய் மனம் வாடியிருக்கிறேன். வறுமையின் நிறம் சிகப்பு ஸ்ரீதேவி, மென்சோகம் வழியும் பேரழகு தான் அவருடைய பிம்பமாக மனதில் பதிந்திருக்கிறது. கோஹினூர் வைரத்தை கொள்ளை கொண்டு போன பிரிட்டிஷாரின் மீதான கோபம், போனி கபூரின் மீதும் இருந்திருக்கிறது. பதின்மத்தில் மனது பட்ட பாடு வேடிக்கையாகத்தான் இருக்கிறது, இன்று உட்கார்ந்து யோசிக்கும் பொழுது. இப்படி பல பதின்ம நாட்களை இரவுகளை கனவுகளை வண்ணமயமாக்கியவர் ஸ்ரீதேவி.

------------------------------------------------------------------------

Google+ல் முன்பு எழுதியது

இவைகளில் ஏதோ ஒன்று தான். தற்சமயம் இல்லாததால் குறிப்பிட்டு சொல்ல முடியாது, ஆனால் tiara அணிந்த இதை ஒத்த அல்லது 95% இந்தப் படம் தான்.

+இளவஞ்சி iLaVAnJi

மலையை மயிரைக்கட்டி இழுக்கும் சாகஸம் தான். இந்தப் படத்தை ஓவியமாக வரைந்தும் இருக்கிறேன். தேடினா வீட்டில் கிடைக்குமாயிருக்கும்.

அவர் இறந்த பொழுது மன உயரங்களில் இருந்து கீழிறங்கியிருந்தார் தான் - பதின்மம் செய்யும் வேலை. விவாகரத்து, அல் பயிது போன்ற காரணங்களால். இன்று அப்படியில்லை. தேவதையும் இல்லை வெறுப்பும் இல்லை.

இறந்த பொழுது அத்தனையையும் தாண்டி கண்கள் கலங்கியது, கமல் ஆர்சி சக்தி பற்றி சொல்வதைப்போலில்லா விட்டாலும் உணர்ச்சிவசப்பட்டவன் தான். அய்யோ நேரில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று. வெட்கமில்லாமல் கூட சொல்வேன், டயானாவையும் ஒரு காலத்தில் மனதார காதலித்தேன் என்று.

ஒரு படம்னா இதைத்தான் சொல்லணும். #myheartopener

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சினிமா

Spider-Man: Homecoming

I lost an electron” “Are you positive? டீஷர்ட்டில் இரண்டு கார்பன் மாலிக்யூல்கள் பேசிக்கொள்வதாக வரும் ஒரு வசனம் சட்டென்று கவனத்தைக் கவர்ந்தது. கிரிஸ்டோபர் நோலனின் பேட்மேன் சீரில்ஸ் ரீபூட் போல் ஸ்பைடர் மேன் (படத்திற்கு) ஒரு புது சட்டை, ஆனால் நன்றாக பொருந்தியிருக்கிறது.



Toby Maguireன் Spider Man சீரிஸ் ரிலீஸ் ஆகும் பொழுது நான் இளைஞன், இன்னும் அந்த சீரிஸ் நன்றாக மனதில் இருக்கிறது. அதைவிட பல மடங்கு நல்ல படம் என்றே நினைக்கிறேன். நல்ல ஒரு ஆரம்பம் கிடைத்திருக்கிறது, அடுத்தப் படம் The Dark Knight அளவிற்கு வரவேண்டும். வரும் என்றே ஊகிக்கிறேன்.

என் மனதின் வயது இன்னும் பதின்மத்தில் இருப்பதாக நினைத்திருப்பதால், இந்தப் படத்தை ரசிக்க முடிந்திருக்கிறது. இளமை வழியும் படத்தில் ஷார்ப் ஹியூமர் நினைத்து நினைத்து இப்பொழுது இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்திலும் புன்னகைக்க முடிகிறது.

பழைய சீரிஸ் போலயில்லாமல் ஸ்பைடர் மேன் தடுமாறுவது, கற்றுக்கொள்வது இதில் நிறைய நேரம் செலவழிவது மிகவும் வேண்டியதாக ஸ்பைடமேன் தன்னை உணர்ந்து கொள்வதாக வரும் காட்சிகள் உணர்ச்சிப் பூர்வமாக இருக்கிறது. படத்தின் அந்த சர்ப்ரைஸ், ஊகிக்க முடிந்தது. கருப்புப் பெண் என்ற பொழுதிலும், ஆனால் ரொம்ப முன்னால் இல்லை, ஹீரோ கார் கதவைத் திறந்து வெளியில் வரும் பொழுது ஊகித்தேன். அதே போல் ஊகிக்க முடிந்தது க்ளைமேக்ஸ், ஐயர்ன் மேன் காட்சி. நகைச்சுவை ஊகிக்காதது. ஐயர்ன் மேன் உடையதும் அன்ட்டி மே உடையதும்.

மை கஸின் வின்னி புகழ், இன்னும் பக்கத்தில் சொல்லணும்னா க்ரேஸி ஸ்டுபிட் லவ் புகழ் மரிஸ்ஸா டொமேய் பற்றிச் சொல்லாட்டா காக்கா கண்ணைக் குத்திடும். ஆன்ட்டி அழகு. ஸ்பைடர் மேனுக்கு ஆன்ட்டி. நம்ம வயசுக்கு ஏத்தப் பொண்ணுதான். நிறைய காட்சிகள்னு கிடையாது ஆனால் க்ளைமேக்ஸ் கரைச்சல். ‘வாட் த...’ முடியும் படம் ஒரு சினிமா geekகளுக்கானது. அதில் நான் ஒருத்தன் என்றே ஊகிக்கிறேன்.


 

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா நாட்குறிப்பு

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

கம்மாட்டிப்பாடம் பார்த்தேன்.

துல்க்கர் சுல்மான் தவிர்த்து படம் நன்றாகயிருந்தது. ரஞ்சித் படம் போல் இருந்தது. இன்னும் கிரிப்பாக மாற்றியிருக்கலாம். ஆனால் மசாலா கூடிவிடுமாயிருக்கும்.

மஹேஷின்ட பிரதிகாரம் படம் பஹத்திற்காகப் பார்த்தேன். மனுஷன் என்னமா நடிக்கிறான். சின்னக் கதையை மலையாளத்தானுங்க எப்படி நல்ல படமா எடுக்குறாங்கன்னு ஆச்சர்யமா இருக்கு.



---------------------------------------------

அசாதாரணமான நேரமொன்றில் நண்பனொருவன் தண்ணியடிக்கலாம் வாயேன் என்று கூப்பிட்டான். அவன் தண்ணியடிப்பதே குறைவு இதில் நான் வேற. என்ன விஷயம் என்றே புரியவில்லை. சரியென்று போயிருந்தேன்.

இரண்டு மூன்று பெக் மன்ஹாட்டன் உள்சென்ற பின் ஆரம்பித்தான். அவன் காசு கொடுத்துச் சென்ற ஒரு பெண்ணைப் போன்ற தோற்றமுள்ள ஒருத்தி அவன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாளாம். அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் மற்ற பெண் ஞாபகம் வந்து வேலை செய்ய முடியாமல் ஆகிறதாம்.

பஃபல்லா விங்க்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் அடைந்த கடுப்பைச் சொல்லி மாளாது. அவனுடைய ஷூவுக்குள் கால் நுழைத்துப் பார்த்தேன். கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.

நான் சொன்னேன், உனக்குன்னு வருது பார் பிரச்சனைகள் சொல்லிவிட்டு அந்தப் புதிதாய்ச் சேர்ந்த பெண்ணிடம் வழக்கத்தை விடவும் இயல்பாய் பழகு என்று. அதுமட்டும் தான் ஒரே வழி, அவளை தவிர்க்க நினைத்தால் இப்படித்தான் லோல்படவேண்டியிருக்கும் என்றேன்.

பேசிப்பார்க்கணும் இப்ப எப்படியிருக்கான்னு.

-----------------------------------

இந்த முறை இந்தியா சென்று வந்ததில் இருந்து மகனிடம் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு உரையாடல் மரணம் பற்றியது. மனைவியின் தாத்தா உடல் நலக்குறைவினால் இறந்து போனார், அவருக்கு வயது 92 இருக்கும். உடல்நலமில்லாமல் இருந்து இறந்ததைப் பார்த்த என் மகனுக்கு அதன் காரணம் சொல்லப்பட வேண்டி வந்திருக்கிறது. வயதானால் மனிதர்கள் இறப்பார்கள் என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரேஷனலாக அவனுக்கு விளக்கியுள்ளனர். மகனுக்கு வயது ஐந்து.

பின்னர் அமெரிக்கா வந்ததில் இருந்து எப்பொழுதெல்லாம் மரணம் பற்றிய காட்சி சினிமாவில் வருகிறதோ அப்பொழுதெல்லாம் இறந்தவருக்கு வயது என்ன என்று கேட்கத் தொடங்கி பின்னால் பின்னலான கேள்விகள். தொடர்ச்சியாக சாவைப் பற்றி மாதம் முழுவதும் பேசிக்கொண்டேயிருந்தோம், அதற்கேற்றார் போல் நாங்கள் பார்த்த படங்களிலும் ஏதோ ஒரு காட்சியில் மரணம் நிகழ்ந்து கொண்டேயிருந்தது.

மக்க கலங்குதப்பா பாடலை ஒருநாள் மகனுக்கு அறிமுகப்படுத்த அவனுடைய ஃபேவரை பாடலானது, பாட்டைப் போட்டுவிட்டு மகனும் மகளும் ஆடுவதை பார்த்துக் கொண்டியேயிருக்கலாம். ஆனால் பிரச்சனை அதுவல்ல. மகனுக்கு அது இறப்பிற்காக பாடுகிறார்கள் என்கிற உண்மை தெரியும். நேற்று ஆப்பிள் பிடுங்கப் போகிறேன் பேர்வழி என்று கிளம்பிய நாங்கள் திரும்பி வரும் வழியில், எங்கிருந்து யோசனை வந்தததோ. அம்மா நீ 92 வயதில் சாகும் பொழுது நான் மக்க கலங்குதப்பா பாட்டைப் போட்டு செலிபிரேட் செய்யறேன்னு என்று ஆரம்பித்தான்.

சாவைப் பற்றிப் பேசுவது என் குடும்பத்தில் பெரிய விஷயம் இல்லை என்பதால் என் மனைவி, நன்னு அது யுவன் அங்கிள் மியூசிக் பண்ணின பாட்டு நீயே மியூஸிக் டைரக்டர் ஆகி ஒரு பாட்டுப் போடணும் என்றதும் என்ன புரிந்ததோ அப்படியே ஆகட்டும் என்று பதில் வேறு. 92 வயதில் என்றால் நானும் மக்க கலங்குதப்பா பாடலைப் போட்டு செலிபிரேட் செய்ய வேண்டியது தான். 

------------------------------------

கமல்ங்கிற ஆள் எவ்வளவு பெரிய நடிகர்ங்கிறதுக்கு ஒரு சின்ன துளி. கிரேசி மோகனுடன் அவர் செய்திருந்த கமல் ஹாஸ்யம் வீடியோவில் இருந்தது.

அவருடைய ஆர் சி சக்தி நடிப்புத்துணுக்கு ஒன்று போதும், அதை உணர. ஒரு செகண்ட்ல எமோட் பண்ண முடிகிறது கமலால்.

கிரேசி மோகனின் உதவாத சில காமடியைப் பொறுத்துக் கொண்டால் ஒரு நல்ல வீடியோ. 



------------------------------------

சில பாடல்கள்

வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது, நான் பதினொன்று அல்லது பன்னிரெண்டு படித்துக் கொண்டு இருந்திருப்பேன். பேச்சுப் போட்டிக்காக சென்ற இடம். BHEL முத்தமிழ்மன்றம். "காற்றில் எந்தன் கீதம்” பாடலை ஒரு பெண் பாடினாள். மழையா குரலை அவளா நினைவில்லை அவளை பிடித்திருந்தது. அதற்குப் பின் அவளைப் பார்த்ததில்லை.

கல்லூரியில் படிக்கும் பொழுது முபாரக் என்றொரு சீனியர். ராகிங் விஷயத்தில் சண்டை வந்து பின்னர் கிரிக்கெட் விளையாடி ஒன்றாகி பின்னர் வேறொரு பிரச்சனையில் - அவர் ஜூனியர் பெண்ணொன்றை லவ் செய்தார், அதே பெண்ணை சைட் அடித்த சக மாணவன் ஒரு வனால் - சண்டை போட்டு என்று லவ்-ஹேட் ரிலேஷன்ஷிப். ”வெள்ளைப் புறா ஒன்று” பாடலை அவர் கல்லூரிக்காகவும் என்எஸ்எஸ்ற்காகவும் அவர் பாடக் கேட்டிருக்கிறேன். பிரமாதம். இப்பொழுது என்ன செய்கிறார் என்று தெரியாது.

கிராமம் ஒன்றிற்கு வருமாறு நண்பன் அழைத்தான், அவனது சொந்த ஊர் அது, துறையூர் பக்கம் சின்ன கிராமம். நான் எந்தக் கிராமத்திலும் அதற்கு முன் மொத்தமாய் நான்கு நாட்களுக்கு மேல் இருந்ததில்லை. அரிசி மரத்தில் காய்க்கும் வகையறா நான். சத்திரத்தில் இருந்து துறையூருக்கும் துறையூரில் இருந்து கிராமத்துக்கும் என்று இரண்டு பேருந்து. முதலாவது பற்றி ஞாபகம் இல்லை. இரண்டாவதில் நண்பன் அந்தப் பேருந்து ஓட்டுநரின் நண்பன் என்பதால் ஓட்டுநருக்கு அருகில் உட்கார்ந்திருந்தோம். அழகி வந்தது எந்த வருடம்னு தெரியாது. ஆனால் “ஒளியிலே தெரிவது தேவதையா” பாட்டு, பஸ்ஸின் வெளிச்சம் மட்டும் நாலு புறத்திலும். அம்மாவாசை என்று நினைக்கிறேன். படம் வந்து சிலகாலம் ஆகியிருக்கலாம். நான் அப்பொழுது தான் முதன் முதலில் அந்தப் பாட்டைக் கேட்டேன்.

நான் என் வாழ்நாளின் முதல் வேலையை டெல்லியில் பார்த்துவந்தேன். ஆங்கிலமும் வராது இந்தியும் வராது ஆனால் தனியாளாய் டெல்லியில் சமாளித்து வந்தேன். நான் பஸ்ஸில் வேலைக்குச் சென்றுவந்த ஒரு இடம் டெல்லி தான். காலை முனிர்காவிலிருந்து கனாட் ப்ளேஸ் இரவு வாபஸ். அப்படிப்பட்ட ஒரு இரவில் தான் “அல்லா கி பந்தே” பாடலை முதன் முதலில் கேட்டேன். இன்றும் அந்தப் பாடலைக் கேட்டால் ரெட் லைன் பஸ்ஸில் இரவுப் பொழுதொன்றில் கனாட் ப்ளேஸில் இருந்து முனிர்கா திரும்பி வரும் ஞாபகம் பளீரென்று வருகிறது.

புனே ஒரு அழகான நகரம், நான் தாளேவாடாவில் தங்கியிருந்தேன். MIDCயில் வேலை நான் புனே சிட்டிக்கே ஒன்றரை வருடத்தில் மூன்று நான்கு முறைக்கு மேல் சென்றதில்லை. முதல் முறை சொந்தமாக நானே வீடெடுத்துத் தங்கியிருந்தேன். அங்கே ஹோட்டல்களில்(ரெஸ்டாரன்டுகளில்) எப்பொழுது ஓடும் பாடல் "ஆஷிக் பனாயா ஆப்னே” ஹிமேஷ் ராஷ்மியாவின் பாடல். புனே சென்றிருக்காவிட்டால் எனக்கு ஹிமேஷை பிடிக்காமல் இருந்திருந்திருக்கும். புனேவாசிகளுக்கோ நார்த் இன்டியன்களுக்கு இதனால் ஹிமேஷைப் பிடிக்கும் என்று சொல்லவில்லை, ஆனால் என் வரையில் ஹிமேஷின் மேல் புனா பூச்சொன்று உண்டு எப்பொழுதும். நிமிடத்தில் புனே செல்ல நான் பயணிக்கும் ஊர்தியின் பெயர் ஹிமேஷ் ராஷ்மியா.

ராப் பாடலொன்றை முதன் முதலில் என் நண்பர் எனக்குப் போட்டுக் காட்டிய பொழுதும் நான் புனேவில் தான் இருந்தேன். 50 சென்ட் பாடலென்று நினைவு. கடித்துத் துப்புவதைப் போலிருந்த ஒன்றை என்னால் ரசிக்க என கேட்கக் கூட முடியவில்லை ஆனால் நண்பர் கேரளாக்காரர் நடுத்தர உயரம் கண்ணாடி அணிந்து நீங்கள் சினிமாவில் பார்க்கும் ஏமாளி அத்திம்பேர் மாதிரியிருப்பார். ரேப் சைகைகளுடன் அவர் பாடிய பொழுது விசித்திரமாகயிருந்தது. நிச்சயமாக அவர் தான் எனக்கு எமினெம் பாடல்களை .எம்பி3யாகக் கொடுத்தவர். நான் ‘mocking bird' பாடலை அங்கு தான் முதன் முதலில் கேட்டேன். இன்று எனக்கு மகள் உண்டு. 'Now I'm sittin' in this empty house, Just reminiscing, looking at your baby pictures, It just trips me out" வரிகள் என் மகளுக்காக என்றில்லை மகனுக்கும் கூடத்தான். 

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

ரெக்க ரெமோ மற்றும் தேவி

தமிழ்ப்படங்களப் பத்தில் தமிழில் நாலு வரி எழுதி எத்தன நாளாகுது. தலைப்பின் வரிசை தரவரிசை இல்லை, நான் பார்த்த வரிசை. நான் அப்படியேப் போறேன்.


ரெக்க படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதி சொன்ன மாதிரி, அவர் மனசாட்சி கேட்ட கேள்விக்கான பதில் இந்தப் படத்தில் நடிக்கக்கூடாதுங்கிறது தான். ஆனா இந்த மாதிரி அப்பப்ப ஒரு கல்லு உட்டுத்தான் ஆகணும் இல்லாட்டி முடியாது. இந்த முற கல்லு பட்டு மாங்கா விழல. அதுனால என்ன. தன்னோட திறமைய நல்லா வெளிக்காட்டியிருக்காரு. கதையெல்லாம் தேவையேயில்லைன்னு முடிவு பண்ணி இறங்கியிருக்காங்க. சின்ன கல்லு பெத்த லாபம் ஃபார்முலான்னு நினைக்கிறேன். காசு வந்துடுமாயிருக்கும்.


ரெமோ ஜெனியுனா நல்ல காமடியிருக்குற படம் வெடிச்சிரிப்பு நாலைந்து முறை வந்ததுன்னா படம் முழுக்க எல்லாவிதமான காமடியும் வைச்சிருக்காங்க. யோகி பாபு, ராஜேந்திரன், சதீஷ்னு காமடி நல்லா வொர்க்கவுட் ஆயிருக்கு. இந்தப் படம் பார்க்கும் பொழுது ரெக்க படத்து லட்சுமி மேனன் கேரக்டர் பெரிய லூசா இல்லை ரெமோ படத்து கீர்த்தி சுரேஷ் பெரிய லூசான்னு ஒரு யோசனை. ஆனா நிச்சயமா கீர்த்தி சுரேஷ் கேரக்டர் தான் பெரிய லூசு. அமெரிக்கால சம்மர்ல இந்த மாதிரி ரொமான்டிக் காமடியெல்லாம் தொடர்ச்சியா வரும். ஸ்டாக்கிங் பத்தியெல்லாம் டிவிட்டரில் பெரிய ரெயில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனா இப்படியே டிரெயின் விட்டிக்கிட்டிருந்தா என்ன படம் தான் எடுக்கிறது. புள்ளைகள நீங்க ஒழுங்கா வளர்த்தா சினிமா பார்த்து கெட்டுப் போக மாட்டாங்க. எனக்கென்னமோ சிவகார்த்திகேயன் ஒரு முழு நீள ஆக்‌ஷன் படத்தில் நடிக்கலாம், போதும் காமடி ஓரியன்டட் மூவிஸ்.


தேவி படத்தோட ட்ரைலர பார்த்தாலே கதை இன்னதுன்னு தெரியும். அதே கதை தான். ஆனால் அந்தக் கதையில் ஸ்கோப் நிறைய இருந்தது. காமடிக்கு ஆக்டிங்கிற்கு என்று. எதையும் உபயோகிக்கவேயில்லை இவர்கள். பிரபு தேவா கேட்கவேவேண்டாம் இயல்பாய் இருக்கிறார், தமன்னா நடித்திருக்கிறார் ஆனாலும் ஒரு டச் மிஸ்ஸிங், அது கேரக்டர் குறைபாடு. தமன்னாவுடையது அல்ல. மூணு லாங்குவேஜில் படமெடுக்குறேன்னு கொலை செய்திருக்கிறார்கள். இந்த இழவை இந்தியிலேயே எடுத்திருக்கலாம். இதை தமிழ்ப்படம்னு சொல்லித்தொலையாதீங்கடா! மணிரத்னம் எடுக்கும் இந்தி/தமிழ் படத்தை விட மோசமாயிருக்கு. ஒரே நல்ல விஷயம் பிரபு தேவா தான். பெண்ணியவாதிகளுக்குப் பிடித்தப் படமாயிருக்கலாம் தேவி, ரெக்க ரெமோவைக் கன்ஸிடர் செய்தால் தேவியில் தமன்னாவின் கேரக்டர் ரொம்பவே தேவலை. கொடுமைக்கென்று ரெக்க ரெமோவை விட தேவி படம் தான். அதன் காரணம் தேவியில்லை, ரெக்கையும் ரெமோவும் தான்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

மாலை நேரத்து மயக்கம்

செல்வராகவனின் சொந்த ஜானர். எழுத்து மட்டும் தான் செல்வராகவனாம், கீதாஞ்சலி இயக்குநர் என்றாலும் செல்வராகனின் இயக்க பாதிப்பு அதிகம் உண்டு, அல்லது முழுவதுமே அப்படித்தான். 3 படம் போல் இதுவும், எனக்குப் பிடித்திருந்தது. அதன்(3 படத்தின்) கிளைக்கதை அத்தனை வலியதில்லை. இந்தப் படம் அவர் பெயரில் வராமல் இருந்தது கூட நல்லதற்குத்தான்.  தமிழில் பெண் இயக்குநர்கள் பற்றி எனக்கிருந்த மூடநம்பிக்கையை நகர்த்தியது 3 படம், இது கீதாஞ்சலி இயக்கியிருந்தால் நான் இன்னும் நகர்ந்துவிட்டேன் என்றே அர்த்தம்.


கொஞ்சம் காமடி கலந்து செய்யாமல் விட்டதற்கே நன்றி சொல்லவேண்டும், மூன்று மணிநேர படமில்லை என்று நினைக்கிறேன், இப்பொழுதைய முதல் ஹாஃப் நீளம் பிந்தைய ஹாஃப் சின்னது டெக்னிக் என்று நினைக்கிறேன், படம் சட்டென்று முடிந்தது போலிருந்தது.

ஹீரோயின் பேசும் வழமை எங்கள் குடும்பத்தில் உள்ளது போல் இருந்ததால் இன்னும் என்னை நெருக்கியிருக்கக்கூடும். வலிந்து திணித்தது போலிருந்தது அந்த ஹோட்டல் சீன், இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். கதையின் திரியே அங்கே தானே பிரிகிறது! ஹீரோ ஹீரோயின் தேவையான நடிப்பை அளித்திருக்கிறார்கள். பெண்களை வசப்படுத்தும் ஹீரோவின் நண்பர்கள் என்பதற்காய் ஆரம்பித்த தொடக்கம், அவர்கள் போக்கிரி பாடல் பாடும் பொழுது ஒட்டவில்லை. கீதாஞ்சலி இப்பொழுதுகளில் கருத்த - தென்தமிழக நிற - ஆண்கள் பிகர் மடிக்கிறார்கள். நீங்கள் கதையை ஹீரோவின் நிறத்திலிருந்து நகர்த்தியிருக்கலாம். பரவாயில்லை.

ஹீரோயின் முன்னமே செல்வராகவன் படத்தில் பார்த்தது போலிருந்தாலும், அடித்துச் சொல்வேன், 7Gயில் நடிக்கவைத்திருக்கலாம். சோனியாவை விட இந்த வகை கதாப்பாத்திரத்துக்கு பொருந்துகிறார். சீன் யோசிக்க முடியாத காரணத்தால் சட்டென்று கதாநாயகி கோபப்பட ஒரு காட்சி போதும் என்று நினைத்திருக்கலாம். பாத்ரூம் கிளின்னஸ் காட்சியின் இயல்பிற்காய்ப் பிடித்திருந்தாலும், ஒட்டவில்லை. இன்னும் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் கதாநாயகி கதாநாயகனை வெறுத்த பின் வரும் காட்சிகள் இயல்பாய் இருப்பதாய்ப் பட்டது.

அட இப்படியெல்லாமா விட்டுவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது வந்த ரேப் சீன் இதற்காகத்தான் விட்டார்கள் என்று உணர வைத்திருந்தது. ரொம்ப காலம் கழித்து தமிழ்ச்சினிமாவில் ஒரு ரேப் சீன், கதையை நகர்த்தியிருக்கிறது. துணிந்து இறங்கிய செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் பாராட்டுக்கள். ரேப் சீனுக்காக இல்லை, துணிச்சலுக்காக மட்டும், ரேப்கள் இல்லாமல் போகும் ஒரு காலத்தில் ரேப் சீன் வைக்காமல் இருக்கலாம். ”பெண்டாட்டியை ரேப்” என்கிற புள்ளியும் அதைத்தொடர்ந்த கோபமும் பயங்கர இயல்பு. ரேப் பண்ணினதும் அடுத்த நாள் குளித்து தலை துவட்டி வெட்கத்துடன் காப்பி கொடுக்கும் வழமை தான் தமிழ் சினிமா.

விவாகரத்துக்குச் செல்வதல்ல. Bravado.

மெச்சூரிட்டி காட்ட கண்ணாடி அணிவதை காண்பிப்பதை நிறுத்துங்கள், கதாநாயகி அந்தக் கண்ணாடியில் அழகாய் தெரிவது வேறு விஷயம். பொதுவாய் இவர்கள் மறந்துவிடும், கதாநாயகியின் அம்மா உருவ வேற்றுமை, பாராட்ட வேண்டியது. டிவிட்டரில் படித்தேன் கதாநாயகியின் அம்மா கதாநாயகியை விட அழகு என்பதை நான் மறுக்கிறேன், அவங்க அழகு தான் ஆனா கதாநாயகியை விட எல்லாம் இல்லை. இங்க வழிகிற ஸ்மைலி.

இதே ஜானரில் நிற்கச்சொல்லவில்லை, ஆனால் செல்வராகவன் அவ்வப்பொழுது இந்த ஜானரில் கதை செய்யணும். வேணும்னா கீதாஞ்சலிக்கோ இல்லை ஐஸ்வர்யாவுக்கோ தரலாம்.

அடல்ஸ் ஒன்லி படம் என்பதால் சொல்லவேண்டிய தேவையில்லை, குழந்தை குட்டியோட எல்லாம் பாக்கமுடியாது. :)

கல்யாணமாய்டுச்சு சொல்லக்கூடாது, ஆனாலும், ஹீரோயின் கொள்ளை அழகு.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

தபாங் 2 - கொண்டாட்டம்

ரஜினி போல் கமல் போல் சல்மான் எனக்கு ஆகிப்போனது எப்பொழுது என்று தெரியாது. அதன் அர்த்தம் படம் நல்லாயிருக்குமா இருக்காதா என்பதைப் பற்றிய கேள்விகள் இல்லாமல் படத்திற்குச் செல்வது, ரஜினி கமல் என்றால் ஒருவித எதிர்பார்ப்பும் இயல்பாகவே வந்துவிடும். ஆனால் சல்மான் விஷயத்தில் அதுவும் கிடையாது, இடையில் இணையத்தில் பார்த்த என் ‘One of the favorite’ கரீனா கபூரின் பாடல் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது, சொல்லப்போனால் எதிர்மறையான விஷயங்கள் தான் இந்தப் படத்தை பற்றி மனதில் இருந்தது. இந்தப் படத்தை அபினவ் இயக்கவில்லை அர்பாஸ் இயக்குகிறார் என்பது ஒரு மிகப்பெரிய தடையாய் இருந்தது இந்தப் படத்தை நான் அணுக.

ஆனால் சல்மான் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் முடிந்தவரை சல்மான் படங்களைப் பார்த்துவந்தேன், இன்று கூட என் உடன் உட்கார்ந்திருக்கும் வட இந்திய நண்பரிடம் தமிழர் ஒருவர்(நானில்லை) படத்துக்கு ரிவ்யூ நல்லா வரலை போலிருக்கே என்று சொல்ல(எவண்டா இதையெல்லாம் சொல்றான்) அட படம் எப்படியிருக்குங்கிறது இரண்டாவது விஷயம் படம் சல்மானோடது என்றார் நண்பர், நான் அப்படி அதுவரை உணரவில்லை என்றாலும், அப்படித்தான் என்று அதற்குப் பிறகு பட்டதெனக்கு.


ரஜினி படம் பார்ப்பதைப் போன்ற கொண்டாட்டம் சல்மான் படம் பார்ப்பது(ஏறக்குறைய தான் - ஒட்டுமொத்தமாய் இல்லை), தியேட்டர் ஃபுல், அதிலும் பெரும்பான்மை அல்லது 99% வட இந்தியர்கள் என்பதால் - ஆடியன்ஸ் எப்பொழுதுமே முக்கியம் - படத்திற்கான வரவேற்பு படத்தின் ஆரம்பத்தில் இருந்தே தெரிந்தது. சல்மான் அடித்து நொறுக்குவது போன்ற விஷயங்கள் - சிறிது சலசலப்பை உண்டாக்கினாலும் - ரஜினியை நாம் ரசிப்பதைப் போல இருந்தது. படத்தை ப்ரேம் பை ப்ரேம் தபாங் முதல் பாகம் போல எடுக்க முயன்றிருக்கிறார்கள்.

படம் மொத்தமே சல்மான் தான், நன்றாக இருக்கிறார் - சண்டைப்பயிற்சி அனல் அரசாமா(ANL Arasu :)) நல்லாயிருக்கு. கேரக்டரைசேஷன் முன்னமே செய்தது என்பதால் அதில் பெரிய மாற்றம் செய்யவில்லை, படம் முழுவதும் தியேட்டர் அதிர்ந்து கொண்டேயிருந்தது - படம் மக்களுக்குப் பிடித்திருந்தது என்பதற்கு நல்ல உதாரணம். உடம்பை இன்னும் நன்றாகத் தேற்றியிருக்கிறார், இன்ஸ்பெக்டர் உடுப்புக்குள் அவர் உடம்பு அடங்க மறுக்கிறது.

சோனாக்‌ஷி கும்மென்று இருக்கிறார், உடன்படம் பார்த்த நண்பரிடம் இதைப்பற்றி சொன்ன பொழுது, அவர் பின்பக்கம் சப்பையாக இருக்கென்று சொல்லி மூடைக்கெடுத்தார். நல்லவேளை இவருடைய கேரக்டர் ஸ்கெட்சையும் மாற்ற முயற்சிக்கவில்லை. அப்படியே சல்மான் தந்தை மற்றும் தம்பியின் கேரக்டரையும். சோனாக்‌ஷி முந்தையப் படத்தைப் போலவே இதிலும் நேரம் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் தன்னால் முடிந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருடைய ஜாக்கெட் மேல் எனக்கு படம் ஆரம்பித்து முடியும் வரை ஒரு கண் இருந்தது. பைக் ஒன்றில் சோனாக்‌ஷி உட்கார்ந்திருக்கும் காட்சி இன்னனும் கண்ணில் நிற்கிறது. :)

கதையெல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது. தபாங் 1 மாதிரியே தான் தபாங் 2ம் ஏற்கனவே உருவாக்கிய கதாப்பாத்திரங்களை வைத்து இன்னும் கொஞ்சம் பணம் பார்க்க உத்தேசித்திருக்கிறார்கள் - எடுப்பார்களாயிருக்கும் தான். படம் 2 மணிநேரம் ஐந்து நிமிடம், இடைவேளை இல்லை என்பதால் அலுக்கவில்லை - பாடல்கள் கொஞ்சம் போல் போரடித்தாலும், கதையென்று ஒன்னும் செய்யவில்லை என்பதால் வேற வழியில்லை.

மாஹி ஜில் மற்றும் கரீனா கபூர் தற்சமயம் இந்தியில் நான் கவனிக்கும் ஹீரோயின்கள். மாஹிக்கு கதாப்பாத்திரம் எல்லாம் ஒன்றும் இல்லை சும்மா ரெண்டு சீன், கரீனாவிற்கு ஒரு குத்துப்பாட்டு - அதற்காகவே கூட இந்தப் படத்தைப் பார்க்கலாம். கஷ்டப்பட்டு தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள் - அதுவும் நன்றாகவேயிருக்கிறது. இப்ப கொஞ்சம் மாடல் ஃபோட்டோகிராஃபியில் இறங்கியிருப்பதால் கூட இருக்கலாம் இவருடைய சோலி(காக்ராவினுடைய) ரொம்பப் பிரமாதம். ஆகமொத்தம் சிறப்பாக எல்லாம் நான் ஒன்றும் எதிர்பார்த்துச் செல்லவில்லை, அர்பாஸ் என்றதும் ஆஃப் ஆன என் எதிர்பார்ப்பு படம் முடிவடைந்ததும் அப்படியில்லை. இதில் அர்பாஸ் எதுவும் புதிதாகச் செய்யவில்லை என்றாலு கலர், ஸ்டைல் முதற்கொண்டு எல்லாவற்றையும் முதல் படத்தில் இருந்து நன்றாக காப்பியடித்திருக்கிறார்.

மறந்துட்டனே இடையில் பிரகாஷ் ராஜ் வேறு - டப்பிங் பேச ஆள் வரலை போல யாரையோ வைச்சு பேசியிருக்கிறார்கள், கொஞ்சம் ஒட்டலை. விடுமுறையில் இரண்டு மணிநேரத்தை இந்தப் படத்திற்காக செலவு செய்யலாம் தான்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

Jack Reacher - தொடக்கம்


தொடர்ச்சியாக இந்தப் படத்தின் ட்ரைலரை இந்த மாதம் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தேன். டாம் க்ரூஸிற்காக இந்தப் படத்தை நிச்சயம் பார்த்திருப்பேனாயிருக்கும் என்றாலும் கொஞ்சம் சுவாரசியத்தையும் ட்ரைலர் கொடுத்தது. பன்னிரெண்டு மணி ராவுக்கு இந்தப் படத்திற்குச் சென்றிருந்தேன்.

இடையில் பத்திரிக்கைகளில், லெட்டர்மேனின் லேட் நைட் ஷோவில் என இந்தப் படத்தின் கதையை எடுத்திருக்கும் புத்தகம் மொத்தம் 17 பாகம் என்று கேள்விப்பட்டேன், லெட்டர்மேனிடமும் டாம் இந்தப் படத்திற்கு கிடைக்கும் சக்ஸஸ் வைத்து இதைத் தொடர்வதாகச் சொல்லியிருந்தார். அப்படிப் பார்த்தால் நல்ல தொடக்கம் என்றே சொல்லவேண்டும்.

படத்தின் கதை ஆரம்பத்தில் இருந்தே ஊகிக்க முடிந்ததாய் இருந்தது, சில சீன்களைக் கூட - ஜெயிலில் டாம் ‘Cop’-ஐ நிறுத்தும் பொழுதே எனக்குத் தெரிந்தது துப்பாக்கியின் சீரியல் தான் சொல்லப்போகிறார் என்று, படத்தின் ஆரம்பக் கொலைகளின் பொழுதே ஊகிக்க முடிந்தது, ரான்டம் கொலைகளின் மத்தியில் பழிவாங்கும் உத்தியென்று, கறுப்பு காப், வெள்ளை அட்டர்னி என்பதில் நாம் ஸ்ட்ரீயோடைப்பாக(கறுப்பரை தவறாக காண்பிக்க மாட்டார்கள்) நினைப்போம் என்றும் அதற்கு மாறாக இருக்குமென்றும். இத்தனைக்கும் பிறகும் எனக்கு இந்தப் படம் பிடித்தேயிருந்தது. இரண்டு மணிநேர என்டர்டெய்னர் சின்னச்சின்ன ஜோக்ஸ் என கோர்த்திருந்தனர்.

17 புத்தகம் என்பதில் இருக்கும் விஷயம் ட்ரை லாஜியாக மூன்று பாகமாவது எடுக்காமல் விடமாட்டார்கள் என்று புரிகிறது, அப்படியே விட்டுச் செல்லும் புள்ளிகளும். ரொம்பவும் அதிகமாய் விஷயத்தைக் கொடுத்து கஷ்டப்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள், CSI போன்ற சீரியல்களில் இருக்கும் சுவாரசியத்தை விட கொஞ்சம் அதிகம் தான் இருக்கிறது என்றாலும், ஸ்டைலிஷான படமாய் எடுத்த விதத்தில் பார்க்கக்கூடியதாய் இருக்கிறது. எப்படியிருந்தாலும் இன்னும் இரண்டு பாகமாவது எடுக்காமல் விடமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல படமாய் கிரிப்பாய் எடுக்கலாம்.



கார் சேஸ் நன்றாக வந்துள்ளது, இப்பொழுது நான் ஓட்டிக்கொண்டிருக்கும் BMW சட்டென்று தரும் பவர், ஏற்கனவே கார்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கார்களின் மீதும் குறிப்பாய் muscle கார்கள் மீதும் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது Fast and Furious லிருந்து தொடங்கியது. படத்தில் டாம் ஓட்டும் ‘70 Chevelle SS’ கார் பார்த்து ஜொள்ளுவிட்டுக் கொண்டிருந்தேன். இது போன்ற படங்களில் கார் இருக்கும் என்பதைப் போல இன்னொன்றும் நிச்சயம் இருக்கும், அது cleavage காண்பிக்கும் ஹீரோயின் :) இந்தப் படத்திலும் உண்டு. பாண்ட் கேர்ள் - சொன்னால் கோவித்துக் கொள்வாரா கூடயிருக்கும் - ரொஸமொன்ட் பய்க். இப்பக் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார், வெறும் செஸ்க் சிம்பலாக மட்டும் இல்லாமல். சட்டென்று டாம் முத்தம் கொடுக்க வருவதாக நினைத்து பின்னர் வழியும் காட்சி ச்ச அக்மார்க் ரமணி சந்திரன். :)

என்னைக் கேட்டால் வெள்ளிக்கிழமை மாலை இரண்டு மணிநேரம் கழிக்க Jack Reacherஐ நிச்சயம் பார்ப்பேனாய்த்தான் இருக்கும். மிஸ் செய்துடாதீங்க என்றெல்லாம் சொல்லமாட்டேன், நேரம் இருந்து பணமும் இருந்தால் பாருங்கள் வருத்தப்பட மாட்டீர்கள்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In கௌதம் சினிமா சினிமா விமர்சனம்

நீதானே எந்தன் பொன் வசந்தம்

ராலே - நார்த் கரோலினாவில் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகள் இன்று வெளியாகயிருந்தது. 8.00 மணி ஷோ, 8.40 வரைக்கும் காத்திருந்து பார்த்துவிட்டு ‘தமிழ்’ படம் டெக்னிக்கல் காரணங்களுக்காய் திரையிடப்படாததால் மற்ற நண்பர்கள் நகர்ந்துவிட நான் மட்டும் தெலுங்குப் பதிப்பில் சென்று உட்கார்ந்தேன். ஈரானிய ஸ்பானிய படமெல்லாம் பார்க்கிறோம். திராவிடப் படம் தானே பார்த்தால் என்ன என்று வந்து உட்கார்ந்தேன்.

ஷார்ப்பான நகைச்சுவை புரியவில்லை ஒப்புக்கொள்கிறேன். முதல் பாதியில் தியேட்டர் அதிர்ந்து சிரித்தது பொழுது உணர்ந்து கொள்ள சிரமப்பட்டேன், ஆனால் மீதி படம் புரிவதில் எனக்கு குழப்பம் இருக்கவில்லை - தெலுங்கு - நெருங்கிய உறவினார்கள் தெலுங்கு பேசுவார்கள் என்றாலும் நமக்கும் தெலுங்குக்கும் காத தூரம். இருந்தாலும் படம் புரிந்தது. இடையில் மனைவியிடம் தொலைபேசும் பொழுது அவர் கேட்டதும் தான் நினைவில் வந்தது - நான் கௌதம் படமெல்லாம் அல்மோஸ்ட் ஆங்கிலத்தான இருக்கும் என்று ஊகித்து சென்றது என் தவறு தான் தெலுங்குப் பதிப்பில் ஆங்கிலம் சுத்தமாகயில்லை. ஜாய்னிங் வேர்ட்ஸாகக்கூட. என்ன ஆச்சு கௌதம், தமிழிலும் இப்படியே இருந்தால் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

மனம் ஜீவாவையே கற்பனை செய்து கொண்டிருந்தது நானீயைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுதும் - நானி நன்றாகச் செய்திருக்கிறார் என்றாலும். இதை ஜீவாவிற்காக நிச்சயம் இன்னொருதரம் பார்ப்பேன். சமந்தாவிற்காகவும் தான். நான் ஈயில் இருந்தே கவனிக்கிறேன், நல்லா முயற்சி செய்யறார். இந்தக் கதாப்பாத்திரம் பிடித்திருந்தாலும் எங்கேயோ எனக்கு ஒட்டவில்லை நானி - தெலுங்கு மட்டும் இதற்குக் காரணம் என்று நினைக்கவில்லை.

கௌதமின் கதாநாயகிகளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் எப்பொழுதுமே - கம்பீரமான கதாநாயகிகளை உருவாக்குவார். இதில் சமந்தாவின் கதாப்பாத்திரம் மனதிற்கு நெருக்கமாய் இருக்கிறது. மெச்சூரிட்டியில் கூட வித்தியாசம் காண்பிக்கிறார், இதற்கு முன்னால் சமந்தா நடிச்சி எந்தப் படம் பார்த்தேன் நினைவில் இல்லை. ஆனால் இந்தக் கதாப்பாத்திரம் எனக்குப் பிடித்திருக்கிறது. சமீரா ரெட்டியை வாரணம் ஆயிரத்தில் பார்த்தப் பிறகு சொன்னது நினைவில் இருக்கிறது - சமந்தாவையும் இனிமேல் வேறுபடத்தில் வைத்து கற்பனை செய்ய முடியவில்லை, மொக்கைப் படங்களி. ஆனால் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றே மனதிற்குப் படுகிறது. நித்யா என்று நானி சொல்லும் பொழுதுகளில் எல்லாம் தனித்து ஒலிக்கிறது அந்தப் பெயர், அகிலாவைக் கொஞ்சம் ஓரம்கட்டி நித்யாவை உபயோகிக்கணும் இதே கேரக்டர்ஸிடிக்ஸுடன்.

இத்தனை காம்ப்ளக்ஸான கதாப்பாத்திரங்களை/காதலர்களை தமிழ்ச் சினிமாவில்(தமிழ் தெலுங்கில் ஒரே கதை என்று நினைக்கிறேன்) பார்த்து காலமாகிறது. அதற்காக ஒரு நன்றி. இதை மட்டுமே தனிப்பட எடுக்க நினைத்ததற்கும். ஆங்கிலத்தில் இது போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். தமிழில் நன்றாகவே வந்திருக்கிறது கௌதம். க்ளைமாக்ஸ் சற்றே உறுத்தினாலும் ரியாலிட்டி வந்திருப்பதைப் போல் பட்டது, நல்ல நேரம் எடுத்து கதாப்பாத்திரங்களை உருவகப்படுத்தியிருக்கிறார்.

படம் பார்க்கும் வரை நான் இந்தப் படத்தின் இசையைக் கேட்டதில்லை என்று சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் நம்பத்தான் வேண்டும். இசையைப் பற்றி பெரிதும் மக்கள் பேசுவார்களாயிருக்கும், என்வரையில் இது ரஹ்மான் படம், கௌதம் சொதப்பிட்டார். ஹாரிஸ் ஜெயராஜுக்குப் பரவாயில்லை என்றாலும் கூட. கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு படத்தொகுப்பு. இளையராஜா இசை உறுத்துகிறது என் வரையில் சொல்ல முடியவில்லை இதுதான் இந்தப் படத்திற்கான பெஸ்ட் இசையா என்று. படத்தைப் பற்றிச் சொல்ல நிறைய இருந்தாலும் கதை வந்திடுமோ என்கிற பயத்தில் நழுவுகிறேன்.

இந்தப் படம் எத்தனைப் பேருக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை, எனக்குப் பிடித்திருக்கிறது. நான் விரும்பிய க்ளைமாக்ஸ் இல்லை என்றாலும் கூட க்ளைமாக்ஸ் பிடித்திருந்தது, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பாதிப்பாக இருக்கும். நல்ல படம் நிச்சயம் பாருங்க.

தமிழ்ப்படம் பார்த்த பிறகு எழுதியது

1) ஜீவாவை விட நானி நன்றாகச் செய்திருப்பதாகப்பட்டது.
2) தெலுங்கு எத்தனை எனக்குப் புரிந்ததுன்னு தெரியாவிட்டாலும், தெலுங்கு வசனம் நன்றாக இருப்பதாகப் பட்டது.
3) சமந்தாவின் வாய்ஸ் தெலுங்கில் நன்றாக இருந்ததாவும் தமிழில் இல்லாததைப் போலவும் இருந்தது, உடன்பார்த்த நபர் அவளே(சமந்தா) தான் பேசியிருக்காள் என்று சொன்னதை நான் நம்பலை - டப்பிங்காகயிருந்தால் தெலுங்கு நல்லாயிருந்தது.
4) தெலுங்கில் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்த, நானி சொல்லும், நித்யா நித்யா நித்யா தமிழில் இல்லை. நானியின் உச்சரிப்புப் பிடித்திருந்தது பித்து கொள்ளச் செய்திருந்தது. நானி சமந்தாவிற்கு நல்ல கெமிஸ்ட்ரி படத்தில் இருந்தது. சத்தியமா அது ஜீவா சமந்தாவிற்கு இல்லை.
5) தெலுங்குப் படம் பார்க்கும் பொழுது எம்பிஏவிற்குப் பிறகு நானியின் கண்ணாடி கொஞ்சம் உறுத்தினாலும் தமிழ்ப் படம் பார்த்த பிறகு நிச்சயமா அதை ஜீவாவிற்கு சஜஸ்ட் செய்திருப்பேன்.
6) ஜீவா மஸ்குலரா இருப்பது படத்தில் உறுத்துது.
7) யுவன் சங்கர் ராஜா பாடும் பாடலைத் தவிர்த்து தமிழில் பாடல்கள் நல்லாவேயில்லை - இதைப் பத்தித் தானா இணையத்தில் இத்தனை உரையாடல்கள் நடந்தது.
8) சந்தானம் காமெடி அருமையாக இருந்தாலும் - இளையராஜாவின் இசையைப் போல் படத்தில் ஒட்டாமல் தனித்திருக்கிறது. இதற்கே கத்தும் தமிழ் சினிமா ரசிகர்கள் - சந்தானம் இல்லாமல் இருந்திருந்தால் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
9) சுத்திச் சுத்தி நான் பார்த்த படம் பார்த்த பெண்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.
10) யாரோ சொல்லியிருந்தது போல முத்தக் காட்சிகள் தெலுங்கில் நல்லாயிருந்தது - நானிக்கும் சமந்தாவுக்கும் ரியல் லைஃபில் லவ்ஸா - சின்னச் சின்ன எக்ஸ்ப்ரஷன்ஸ்களில் நானி அருமையாக கையாள்கிறார்.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

இராணுவத்தினருக்கான பாலியல் சேவை

நிறைய படங்களைப் பார்க்கிறோம், சில தமிழ்ப் படங்கள் முதற்கொண்டு பல படங்களைப் பற்றி ஒரு இரண்டு வார்த்தையாவது எழுதிடுவோம் என்று நினைக்கிற படங்கள் நிறைய. ஆனால் கொஞ்சமே கொஞ்சமாவது எழுதுறதுக்கு பிரயோஜனமா விஷயத்தைச் சொல்லணும்னு நினைச்சதும் நான் எழுத நினைக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாய்ட்டே போகுது. சரி இந்தப் படத்திற்கு வருவோம், Pantaleón y las visitadoras.

எப்பொழுது முதல் முறை இந்தப் படத்தைப் பார்த்தேன் என்று நினைவில் இல்லை, சோமிதரன் உடைய பதிவொன்றில்(நிர்வாண ராணுவம் என்று நினைக்கிறேன்), கடைசியில் குறிப்பாகச் சொல்லும் பொழுது மகிந்தாவிற்கு, ராணுவத்தினரை குறை சொல்ல முடியாது. நீங்க அவர்களுடைய இந்த செக்ஸ் வெறியை தீர்ப்பதற்கு ஒரு வழி செய்யுங்கள் என்பதான ஒரு தீர்வை சொல்லியிருப்பார். அதே போல் பொடிச்சியின் சமீபகால பதிவொன்றும் கொஞ்ச நாள்களுக்கு முன்னர் வந்த இந்தப் படத்தை மீண்டும் தேடிப் பார்க்க வைத்தது.

படத்தின் கரு என்னவென்றால், இதுமாதிரி ஆண்குறிகளை கையில் பிடித்துக் கொண்டு அலையும் பெரு(Peru) நாட்டு ராணுவத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த, அல்லது முடிந்த மட்டும் குறைக்க சிகரெட், தண்ணி, பொண்ணு இப்படி எந்த வித கெட்டப்பழக்கமும்(இது பட இயக்குநரின் கருத்து, இதில் என்னுடைய கருத்து வித்தியாசமாகக் கூட இருக்கக்கூடும் ;-)) இல்லாமல் இராணுவப் பயிற்சியில் நல்ல பெயர் எடுத்திருக்கும் ஒருவரிடம் ஒரு சீக்ரெட் மிஷன் ஒப்படைக்கப்படுகிறது.

சீக்ரெட் மிஷன் என்னவென்றால், பாலியல் தொழிலாளிகளை தேர்ந்தெடுத்து, இராணுவ வீரர்களுக்கு அவர்களுடைய பாலியல் தேவைகளை நிவர்த்தி செய்வது. இது தான் அவருடைய சீக்ரெட் மிஷன், சொல்லப்போனால் படத்தை டைரக்டர் செக்ஸுவல் காமெடியாகச் செய்திருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தின் தீவிரம் எனக்கு புரிந்துதான் இருந்தது. உலகம் முழுவதும் வரலாறு முழுக்கவும் இராணுவங்கள் செய்து வந்த விஷயம் தான் இந்தப் பெண்களை பாலியல் கொடுமைக்கும் உள்ளாக்கும் நிகழ்வு. இதற்கான தீர்வென்றில்லாமல், அப்படியாக இருக்க முடியுமோ என்று யோசிக்க வைத்தப் படம்.

ஆரம்பத்தில் ஒரு பழைய பாலியல் தொழிலாளி, தற்சமயம் பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடுத்தி வருபவரிடம் வந்து இதுபோல் ஒரு விசிட்டர் சர்வீஸ் நடத்த வேண்டும் என்று பேச்சு கொடுக்கத் தொடங்குதில் சூடுபிடிக்கிறது படம். இந்த விஷயத்தை, ஒரு கார்ப்ரேட் கம்பெனியின் ஒழுங்குடன் அவர் நடத்த நினைப்பது, அதற்கான அச்சாரங்களைச் செய்வது, பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை டேட்டாக்களுடன் சீனியர் அபிஷியல்களுக்கு அனுப்புவது என டைரக்டர் தான் எடுக்க நினைத்த் விஷயத்தை மிகச் சரியாகச் செய்ததாகவே படுகிறது எனக்கு.

பின்னர் இத்தனை நல்லவராக இருக்கும் ஹீரோ, அந்த விசிட்டர் சர்வீஸில்(இராணுவ வீரர்களுக்கான ப்ராத்தல் சர்வீஸை அப்படித்தான் சொல்கிறார் ஹீரோ.) வரும் பெண்ணொருத்தியிடம் மயங்கி பின்னர் அவருடைய காதல், இதன் காரணமாக மனைவியுடன் பிணக்கு, இதை(இந்த விசிட்டர் சர்வீஸ், மற்றும் அவருடைய சீக்ரெட் லைப்) இரண்டையும் சொல்லி ப்ளாக்மெயில் செய்யும் லோக்கல் ரேடியோ அறிவிப்பாளர், என்று மசாலாத் தன்மை கொண்ட படம் தான் இதுவும்.

கடைசியில் ஹீரோவுடைய காதலி, ஒரு விபத்தில் - இராணுவத்திற்கு மட்டும் செய்யக்கூடாது நாங்களும் காடுகளில் வசிக்கிறேம் எங்களுக்கும் இந்த விசிட்டர் சர்வீஸ் வேண்டும் என விரும்பும் அதற்காக இராணுவ மேஜர் வரை பேசும் ஒரு லோக்கல் குருப், இந்த விசிட்டர் சர்வீஸ் மக்களை அவர்களுடைய தேவைகளுக்காக கட்டாயப்படுத்தும் ஒரு சூழ்நிலையில் நடக்கும் விபத்தில் - இறந்துவிடுகிறார்.

இந்தச் சமயத்தில் தான் ஹீரோ அந்த பாலியல் பெண்ணிற்கு இராணுவ மரியாதையுடனாக இறுதிமரியாதை தரப்போக அது இராணுவத்தில் பிரச்சனையைக் கிளப்பிவிடுகிறது. பின்னர் இதற்காக அவரை வேலையிலிருந்து தூக்கிவிட நினைக்கும் இராணுவத்திடம் ஹீரோ இல்லை தான் இராணுவத்தில் தான் இருக்க விரும்புவதாக உறுதியாகச் சொல்ல, குளிர்ப்பிரதேசத்திற்கு தூக்கியடிக்கப் படுகிறார். கடைசியில் அவர் இந்த முன்னால் இராணுவத்தினரின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்த பெண்களுக்கும் அவர்களுடைய தலைவிக்கும் கடிதம் எழுதுவதாய் படம் முடிவடைகிறது.

படத்தில் விசிட்டிங், ரெண்டரிங், ஆபீஸ் என்று கொஞ்சம் போல் ஹீரோ ஆரம்பிக்கும் பொது தொடங்கும் காமெடி, தலைவர் பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் அனுப்பும் பொழுதும் அதனுடன் அவர் தான் எதற்காக இந்த முடிவிற்கு வந்தார் என்றும் சொல்லும் பொழுதும் அளவாய் இருக்கிறது. இராணுவ வீரர்களின் மெண்ட்டாலிட்டியைக் கூட சொல்லியிருப்பார் இயக்குநர், கடைசியில் பிரச்சனை ஆன பிறகு அந்த பாலியல் தொழிலாளர்களின் தலைவி, ஹீரோவை, இராணுவ சேவையில் இருந்து பதவி விலகுமாறும், பின்னர் இப்பொழுது இராணுவத்தினருக்கு செய்ததைப் போலவே பாலியல் தொழிலை - கார்ப்பரேட் தொழில் போல செய்யலாம் என்றும், ஹீரோ தங்களுக்கு பாஸாகயிருக்க வேண்டும் என்றும் கேட்கும் பொழுது, ஹீரோ சொல்கிறார்.

எனக்கு நிச்சயம் பாஸ்கள் வேண்டும், அவர்கள் போடும் கட்டளையை நிறைவேற்றுபவனாகவே நான் பழகிவிட்டேன், என்னால் பாஸாகயிருக்க முடியாது என்று சொல்லும் பொழுது சிந்திக்க வைக்கிறார் இயக்குநர். இது அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பொருந்தும். இத்தனைக்கும் ஹீரோவிற்கு அற்புதமான மேனேஜ்மெண்ட் ஸ்கில்கள் இருக்கும். என்ன சொல்வது அருமையான படம், எத்தனை பேருக்கு இந்தப் படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. பெரு நாட்டின் படம், ஸ்பானிஷ் மொழி, சப்டைட்டில் உண்டு, கொஞ்சம் செக்ஸ் சீன்கள் உண்டு.(Obvious இல்லையா???)


ஹீரோயின் பற்றி
படம் பற்றி

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In DTH கமல் சினிமா விஸ்வரூபம்

விஸ்வரூபம் - கமல் பிரச்சனை

விஸ்வரூபம் படத்தை கமல் டிடிஎச்  முறையில் வெளிவிட முடிவெடுத்துவிட்ட நிலையில் எல்லோருக்கும் இதைப்பற்றிச் சொல்ல என்னவோ இருக்கத்தான் செய்கிறது. கேபிள் சங்கர் எழுதிய பதிவு நன்றாக வந்திருந்தது, உத அண்ணன் எப்பொழுதையும் போல குழப்பம் ஆதரிப்பதா இல்லையா என்பதில், பதிவு முடியும் பொழுது ஒரு முடிவு சொல்வது அவருக்கு எப்பவும் குழப்பம் தான். ஜாக்கியின் பதிவுகளும் கூட பிரச்சனையின் கோணத்தைப் பற்றிப் பேசியது, அப்படியே லக்கியுடையதும்.  இடையில் ப்ருனோ ப்ளஸில் சொன்ன விஷயமும் கூட முக்கியமானதாகப் படுகிறது.

“here are two groups of movie watchers

1. Those who see in Theater only
2. Those who see in Home only - pirated CD / Torrent
3. Those who see in both
-
Now, producer gets money only for the movies watched in Theater
Producer gets no money for those who watch through Torrents and Pirated CDs
DTH is aimed at monetizing this group”

ப்ருனோ சொல்வதைப் போல் நான் முதல் வகைக்காரன். பெரும்பாலும் நானறிந்து வெளியாகும் எனக்குப் பிடித்தப் படங்களையெல்லாம் திரையில் சென்று மட்டும் பார்ப்பேன், ஆனால் வழியில்லாமல் அமெரிக்காவில் உட்கார்ந்திருக்கும் பொழுது தியேட்டரில் வெளியாகாமல் போனால் இணையத்தில் பார்க்கும் கோஷ்டி.

சுயநலத்திற்காய் என்னால் தியேட்டரில் படங்கள் வெளியாகாமல் போகும் காலமொன்று பயமுறுத்துவதாய் இருந்தாலும், DTH ஒரு முக்கியமான மாற்றமாகவும் வரவேற்கவேண்டியதாகவும் எனக்குப் படுகிறது. ஆனால் ஏற்கனவே குறைந்தும் அழிந்தும் வரும் தியேட்டர்கள் இதன் காரணமாய் பாதிக்கப்படும் என்பது மட்டுமல்ல குறையவும் செய்யும் என்று தான் நான் ஊகிக்கிறேன். இங்கே அமெரிக்காவிலே மிகப்பிரபலமான படங்கள் தவிர்த்து மூன்றாம் நான்காம் நாளே தியேட்டர்களில் ஆட்கள் இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறேன். எத்தனை முதல் வார படம் பார்த்த பொழுதுகளில் தனியாக நான் மட்டும் தியேட்டரில் இருந்தேன் என்று நினைவில் இல்லை, ஆனால் பத்து படங்களாவது இருக்கும்.

ஆனால் இது சிறுபடங்களுக்கும், பரீட்சார்த்தமான படங்களுக்கும் மிகவும் உதவியாகயிருக்கும். பாலா போல் ப்ரிவ்யூவையே 100 நாள் ஓட்ட வேண்டிய நிலை வராமல் இருக்க உதவலாம். இதை நம்பி படமெடுப்பவர்கள் வரலாம், அதன் காரணமாய் நல்ல உலகத் தரமான படங்கள் மேலெழ வாய்ப்பிருக்கிறது. இந்தப் படமும் ஆளவந்தான் போலத்தான் இருக்குமென்று பட்டாலும் அப்படித்தான் நான் தசாவதாரம் வந்த பொழுதும் நினைத்தேன், ஆனாலும் கூட இந்தப் படம் இன்னமும் ஆளவந்தான் போல இருக்குமென்றே மனம் சொல்கிறது. இந்த ஆளவந்தான் போல என்று சொல்வதில் எங்கும் படம் நல்ல படமா அல்லாத படமா என்ற கேள்வியில்லை பொதுமக்கள் பிடிக்குமா காதா என்கிற கருத்தை வைத்து மட்டுமே சொல்கிறேன்.

சினிமாவில் எடுத்தப் பணத்தை திரும்பவும் சினிமாவிலேயே போடும் முட்டாள் கமல் தோற்றுவிடக்கூடாதென்று மனம் பரபரக்கிறது, அந்த குறைந்தபட்ச மனசாட்சிக்காக. நல்ல திரைப்படங்கள் கொடுக்க வேண்டும் என்கிற கமலுடைய மனம் புரிந்தாலும் மஜித் மஜீதி சொல்லியிருந்தது போல் நல்ல படமெடுக்க இத்தனை பணம் தேவையில்லை, கமல் இதில் ஹாலிவுட்டைப் பின்பற்றுகிறார். பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார், ஆனால் ஹாலிவுட்டில் கூட ஹீரோக்கள் இந்தப் பிரமாண்ட பட இடைவெளியில் நல்ல ஹாப் பீட் படங்களை கொடுத்துவிடுகிறார்கள். கமல் போன்ற கலைஞன் அது போன்ற இடைவெளில் மொக்கை நகைச்சுவைப் படம் தான் செய்ய முடிகிறது. இந்த விதத்தில் கமல் மோகன்லாலை பின்பற்றியிருக்கலாம், ஆனால் கமல் பிறந்த இடப் பிரச்சனை இது. கமல் கேரளாவிலோ இல்லை ஈரானிலோ பிறந்திருந்தால் வேறு மாதிரி முயன்றிருக்கலாம்; இன்னொன்று ஈகோ. எத்தனையோ நல்ல கலைஞனாக இருந்தால் ஒரு நல்ல இயக்குநர் அவருக்குக் கிடைக்காமல் போக அது காரணமாகயிருந்துவிடக் கூடாது.  ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து ஹாலிவுட்டைப் பின்பற்றும் கமலால் முடிந்தது இத்தனையே! அதை அவர் சுயநினைவோடு செய்கிறார், இங்கிருக்கும் கிணற்றில் இருந்து எப்பொழுதும் தப்பித்துவிடவேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருக்கிறது உழைப்பும் இருக்கிறது, காலம் இல்லை.

லைஃப் ஆஃப் பை பார்த்த பொழுது அந்தத் தமிழன் கேரக்டரை ஏன் ஒரு தமிழன் செய்திருக்க முடியாது என்று மனம் அரித்தது, ஏன் கமல் அந்தப் படத்தில் நடித்திருந்திருக்கக்கூடாது, இர்ஃபான் கான் நடிப்புப் பிடித்திருந்தாலுமே கூட. சொந்தமாக தியேட்டர் வாடகைக்கு எடுத்து வெளிவிடுகிறார் என்று கேள்விப்படுகிறேன். நடுநிலையிலிருந்து இதுபோன்ற சூழ்நிலையில் மனம் நகர்ந்துவிடுகிறது, இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்று மனம் வேண்டுகிறது. பணம் வெல்வது தோற்பது பற்றிய கவலையில்லாமல் கமல் படமெடுக்கும் காலம் வரவேண்டும். கமலின் உச்சம் இன்னும் நிகழ்ந்துவிடவில்லை என்றே நினைக்கிறேன், சீக்கிரம் அதை அவர் அடையவேண்டும் என்றும் நினைக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In Talaash சினிமா சினிமா விமர்சனம்

Talaash - one stupid movie

அமீர் கான் படம் என்றால் வரும் இயல்பான ஆசை இந்தப் படத்தின் ட்ரைலரை முதன் முறை பார்த்ததுமே வந்தது. என் வரையில் கரீனா கபூர் ஒரு நல்ல நடிகை, என் A-Listல் நிச்சயம் உள்ளவர். ராணி முகர்ஜியை ‘தில் சே’ காலத்திலிருந்தே பிடிக்கும். இந்தப் படத்தை நான் இதற்கு மேலும் பார்க்காமல் இருந்திருந்திருக்க ஒரு வாய்ப்பு இருந்தது தான். இந்தப் படத்தின் இயக்குநர் ஒரு பெண். ஆனால் ஐஸ்வர்யா(தனுஷ்)ன் 3 படம் என்னில் ஏற்படுத்திய மாற்றம் பெண் இயக்குநர் என்பதற்காக ஒரு படத்தைத் தவிர்க்கக் கூடாது என்பது.

 படத்தைப் பற்றிய விமர்சனம் கண்ணில் பட்டுவிடக்கூடாதென்று பொதுவாய்த் தவிர்த்து வந்தேன், தமிழ் ஆங்கிலப் படங்களைப் போலில்லாமல் என் நேரக்கோட்டில் - Facebook, Twitter - இந்திப் படங்களான ரிவ்யூக்கள் கொஞ்சம் லேட்டாய்த் தான் வரும். ஆனாலும் அருகில் உட்கார்ந்திருந்த நண்பன் ‘I am hearing mixed reviews Mohan’ என்று ஏற்கனவே சொல்லியிருந்தான். இந்திய அமெரிக்க நேர இடைவெளியில் இத்தனையும் நடந்தது. இங்கே ப்ரிவ்யூ ஷோ போடவில்லை என்பதால் வெள்ளி 7.00 மணி ஷோவிற்கு டிக்கட் புக் செய்திருந்தேன்.


படம் என்னை ஆரம்பத்தில் ஏமாற்றவில்லை தான். Layered neo-noir படத்தை எடுக்க வேண்டிய விதத்தில் தான் எடுத்திருந்தார் இயக்குநர். வலுவான நடிகர்கள், கடினமான கதாப்பாத்திரங்களை உள்வாங்கிச் செய்யும் அமீர் கானுக்கும் சவாலான கதாப்பாத்திரம் தான். சட்டென்று அமீர் கானின் பத்தாண்டுகால மனைவி கதாப்பாத்திரமாக அறிமுகமாகும் ராணி முகர்ஜியின் நடிப்பிலும் பிசிர் இல்லை, அவர் குரலும் கூட பொருந்தியிருந்தது. மகனைப் பறிகொடுத்த தம்பதியின் ஏக்கம், நிராசை, கோபம், அழுகை, சங்கடம் எல்லாம் விவரப்படுத்தப் பட்டுள்ளது. எனக்கு இதில் ராணி முகர்ஜி ‘ஆவியிடம் பேசுபவரிடம்’ சென்று பேசுவது கூட இயல்பாக இருந்தது, சங்கடம் இல்லை, இழப்பு ஏற்படுத்தும் தாக்கம் அதைச் செய்து பார்க்கச் சொல்லும் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

கரீனா கபூர் அறிமுகமான இரண்டாவது சீனிலேயே அவர் மானுடர் இல்லை என்பதற்கான துண்டு விரிக்கப்பட்டுவிடுகிறது. சாதாரண சினிமா ரசிகர் கூட இதை உணர்ந்து கொள்ள முடியும் தான். ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியாய் அமீர் கான் பாத்திரம் மூலமாய் இல்லை அது அப்படியிருக்க முடியாது என்கிற எண்ணம் படம் பார்ப்பவர்களின் மனதில் திணிக்கப்படுகிறது. இங்கே தான் படத்தின் cheap trick தொடங்குகிறது. ஒரு பேய்ப்படத்தில் நடிக்க அமீர்கான் எதற்கு வேறொதுவும் காரணம் இருக்கும் எல்லாவற்றையும் லாஜிக்கலாக இணைக்கும் ஒரு புள்ளி என்று மனம் தேடத் தொடங்குகிறது. இது இப்படியில்லாமல் செய்திருக்க முடியும், செய்திருக்க வேண்டும் ஒரு சீரியஸ் க்ரைம் சஸ்பென்ஸ் படத்தின் க்ளைமாக்ஸ் பேய் உதவுகிறது என்பது, முட்டாள்த்தனமானது. யோசிக்கத் துப்பில்லாமல், கதையை இணைக்க முடியாமல் விட்டது போல் உள்ளது.

நவாஸுதீன் இயல்பான நடிப்பை வெளிக்காட்டுகிறார் தொடர்ச்சியாக. விபச்சாரிகள் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் கொஞ்சம் க்ளாமரைஸ் செய்திருப்பதைப் போல் பட்டதெனக்கு. அந்தப் புள்ளியும் கூட ரொம்பவும் இயல்பை விட்டு நகரவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக படம் வைக்கும் கருத்து, இத்தனை லேயர்களையும் தாண்டி பேய் பூதம் பிசாசு என்றால் இது கண்டிப்பாய்த் தவிர்க்கவேண்டிய படம். இயல்பில்லாதப் படமாக இருந்திருந்தால் பேயையும் அப்படியே விட்டுவிடலாம் தான், ஆனால் அது தவிர்த்து இயல்பான படமாக இருப்பதால் இந்தப் படம் இல்லாஜிக்கல் விஷயத்தை நம் மீது திணிக்கிறது. இந்தப் படத்தை அமீர் கான் தேர்ந்தெடுத்திருக்கக் காரணம் புரியவில்லை.

ஏன் இப்படி ஒரு படத்திற்குப் போனேன் என்று கடைசியாக நினைத்தப் படம் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ அதற்கடுத்து அப்படி உணர்ந்த அடுத்தப் படம் ‘தலாஷ்’. ஆனால் படம் எடுத்துக் கொண்டிருக்கும் கான்செஃப்ட் மோசமானது. இந்தப் படம் வெற்றியடையக் கூடாது. நான் பேய் பூதம் இவற்றை நம்பி எடுக்கும் படங்களைக் கூட சொல்லவில்லை. அது பரவாயில்லை ஆனால் இந்தப் படம் அமைத்துத்தரும் அடித்தளம் என்பது மிகவும் மோசமானது. ஒரு முட்டாள்த்தனமான படம் எப்படி எடுப்பது என்பதைப் பார்க்கவேண்டுமானால் தயவு செய்து இந்தப் படத்தைப் பாருங்கள்.

இன்னமும் கூட ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம் பற்றி நினைத்தால் வாந்தி வருகிறது, தெரியவில்லை இந்தப் படம் எப்பொழுது என் நினைவுகளை விட்டு நீங்கும் என்று.

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In சாமுராய் சினிமா த லாஸ்ட் சாமுராய்

Mind the sword, Mind the people, Mind the Enemy, three many minds

சாமுராய்கள் பற்றி நான் முதன்முதலில் அறிந்தது பள்ளிப்பருவத்தில் இரண்டாம் உலகப்போரைப் பற்றி ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்த பொழுது அமேரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டு போட்டதற்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டது எனக்கு மிகுந்த ஆச்சர்யமளித்தது. அதாவது ஜெர்மானியர்களையோ இத்தாலியர்களையோ போலில்லாமல், ஜப்பானியர்கள் இறக்கும் வரை போரிடுபவர்கள் என்றும் 1945ன் இறுதிகளில் ஜெர்மனி, மற்றும் இத்தாலி சரணடைந்துவிட ஜப்பானியர்கள் மட்டும் சரணடையாமல் இறக்கும் வரை சண்டையிட முடிவுசெய்ததாகவும். அமேரிக்கா ஜப்பானிற்குச் சென்று தரைவழியாகவோ, கடல்வழியாகவோ ஜப்பானை வீழ்த்துவதன் பொருட்செலவும் நேரத்தையும் கருத்தில் கொண்டு ஜப்பானை சரணடையச்செய்யவே அணுகுண்டு போட்டது என்பதான ஒன்றை என் வரலாற்று ஆசிரியர் சொல்லியிருந்தார்.



அந்தக்காலத்தில் ஆசிரியர் சொல்வதே வேதவாக்கு, எதிர்த்து கேள்வி கேட்கவோ, இல்லை அதற்கு எதிரான ஒன்று இருக்குமென்றோக்கூட அறியாத வயது அது. அப்படி ஜப்பானியர்கள் சண்டை செய்ததற்கு முக்கிய காரணமாக ஆசிரியர் சொன்னது, ஜப்பானியர்கள் அனைவரும் சாமுராய்கள் என்று அதாவது தோல்வியை ஏற்றுக்கொள்ளாதவர்கள், சாகும்வரை போராடுபவர்கள். அதே போல் சரணடைந்தபிறகு ஜப்பானிய மன்னர், மக்களிடம் அவர்களை காப்பாற்ற முடியாததற்கு மன்னிப்பு கேட்டதாகவும் சொல்ல மனதில் ஜப்பானியர்கள் பற்றிய மதிப்பு அதிகமானது. உண்மையில் ஜப்பானியர்களைப்பற்றியோ, சாமுராய்களைப்பற்றியோ எதுவுமே தெரியாத நிலையில் ஏற்பட்ட ஒரு ஆர்வம் அது.

சாமுராய்

சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழிற்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய ராணுவத்தில் இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இந்த வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகளை எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.


சாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் செபுக்கு என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி சரணடையாமல் கொல்லப்படுவர். இதுவே பெண்கள் இந்த செபுக்குவை செய்யும் முறை வேறுபடும், அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே. சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, சுயக்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, புராதனக் கோட்பாடுகளுடன் வாழ்வது. இவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் அவர்களின் சேவகர்களாகவுமே இருந்து வந்தனர்.



ஹியான் காலம் (794 – 1185)

சாமுராய்களின் தேவை இந்தக்காலத்தில் அதிகரித்தது, நிலச்சுவாந்தார்கள் அவர்களுடைய உடைமைகளைப்பாதுகாக்க இதுபோன்ற சாமுராய்களை வேலைக்கு அமர்த்தினர். இந்தக்காலத்தின் முடிவில் இருபெரும் சாமுராய் இனம் இருந்துவந்தது. ஒன்று மினமோட்டோ இனம், மற்றொன்று டைய்ரா இனம். இவர்கள் ஜப்பானின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பிறகு தங்களுக்கிடையில் ஆதிக்கத்திற்கான போட்டியில் ஈடுபட்டுவந்தனர்.

கமாகுரா காலம்(1192 – 1333)

கி.பி. 1185ல் மினமோட்டா இனத்தினர் டைய்ரா இனத்தினரை வென்றனர். இதன் காரணமாக மினமோட்டா யோரிட்டோமோ ஒரு இராணுவ ஆட்சியை காமகுரா காலத்தில் தோற்றுவித்தார். ஷோகுன் எனப்படும் இராணுவத்தின் உயர்ந்த அதிகாரியாய் இருந்ததால் அவர் ஜப்பானின் மன்னராக தன்னை அறிவித்துக்கொண்டார்.

முரோமச்சி காலம்(1333 – 1573)

இந்தக் காலத்தில் ஜப்பானின் பல உள்பிரிவுகளாக பிரிந்து தனித்தனியா சாமுராய் இனங்களின் கையில் இருந்துவந்தது. இவர்கள் தங்களுக்கிடையில் பெரும்பாலும் போரிட்டு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தனர். இந்தக்காலத்தில் சாமுராய்களின் ஆதிக்கம், அல்லது தேவை அதிகமாகயிருந்தது. போர்காலத்தைத்தவிர இடைப்பட்ட காலத்தில் சாமுராய்கள் நிலங்களில் விவசாயமும் செய்துவந்தனர்.

அகிரா குரோசோவா எடுத்தப்படங்கள் பெரும்பான்மையானவை இந்தக்காலத்தைப்பற்றியதுதான்.

அழுசி-மோமோயாமா காலம்(1573 – 1603)

டோயோடோமி ஹிடேயோஷி ஜப்பானின் சிறுசிறு பகுதிகளை ஒன்றிணைத்தப்பின், மக்களை இனவகைப்படுத்தும் முறையை தோற்றுவித்தார். இதுபின்னர் டோகுகவா லேயாசு என்பவராலும் அவருடைய வழித்தோன்றல்களாலும் நிறைவேற்றப்பட்டது. ஹிடேயோஷி சாமுராய்களை வகைப்படுத்தினார் அதாவது விவசாயம் செய்யும் சாமுராய்களையும், போரிடும் சாமுராய்களையும் வேறுபடுத்தினார். அதற்குப்பின்னர் போரிடும் சாமுராய்கள் மட்டும் தான் வாளை அணிந்திருக்கலாம் என்ற சட்டத்தையும் கொண்டுவந்தார்.

இடோ காலம்(1603 – 1868)

இந்தக்காலத்தில் மக்களின் இனப்பாகுபாட்டில் முதல் இடத்தில் இருந்தவர்கள் சாமுராய்கள், இவர்களுக்குப்பின்னர் விவசாயிகள், கலைஞர்கள், மர மற்றும் இரும்பு வேலை செய்பவர்கள் என ஜப்பானிய இனப்பாகுபாடு இருந்துவந்தது.

அவர்களின் நிரந்தர குடியிறுப்பு பிரதேசத்தை உருவாக்கிக் கொள்ள கட்டுப்படுத்தப்பட்டார்கள் சாமுராய்கள். பின்னர் அவர்களுக்கான கூலி தானியங்களாய் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் அவர்களின் நிரந்தரக்குடியிறுப்பு சிறிது சிறிதாக அழிக்கப்படத்தொடங்க, 1615ல் டோகுகவாவின் எதிரி அழிக்கப்பட்டுவிட, ஒருவகையான அமைதியான சூழ்நிலை ஜப்பானில் தொடங்கப்பட்டது. பின்னர் இது 250 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக சாமுராய்களின் தேவை இல்லாமல் போனது. சாமுராய்கள் போரிடுவதை விட்டுவிட்டு மற்ற தொழில்களை செய்பவர்களாக மாறினர். கிட்டத்தட்ட 1868ல் ஜப்பானில் சற்றேறக்குறைய சாமுராய் இனம் வழக்கொழிந்தது.

சாமுராய்களின் கொள்கை

ஆரம்பக்காலத்தில் இருந்து புத்த மதக்கொள்கை மற்றும் ஜென் கொள்கைகளைப் பின்பற்றி வந்தனர் சாமுராய்கள் அதேசமயம், மிகக்குறைவாக கன்பூஷியஸின் மற்றும் ஷின்டோவின் கோட்பாடுகளும் இவர்கள் வாழ்க்கையில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

ஆயுதங்கள்

சாமுராய்களைப்பற்றிய கதைகளைப்போலவே அவர்களுடைய ஆயதங்களைப்பற்றிய கதைகளும் அதிகம். ஆரம்பத்தில் பார்த்த புஷிடோவின் வழிகாட்டுதலில் சாமுராய்களின் ஆத்மாவானது அவர்கள் பயன்படுத்தும் கடனா என்ற முக்கியமான வாளில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல் சாமுராய்கள் அந்த வாளுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களை வழிபடுத்துவதின் ஒரு முக்கிய பங்கு அவர்களின் வாளிற்கு உண்டென்பதைப்போன்ற தத்துவங்கள் ஜப்பானில் நிறைய இருந்துவந்துள்ளது.



இந்த கடானா என்றழைக்கப்படும் வாளை உருவாக்குவதற்கு சில குறிப்பிட்ட முறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் சாமுராய்கள். அதன் நீளம், அகலம், வலிமை பற்றிய நிறைய விதிமுறைகள் இருந்துவந்துள்ளது. சாமுராய்களைப்போலவே கடானாவின் வடிவமும் ஆரம்பக்காலத்தில் இருந்தே நிறைய மாறுபாடுகளை சந்தித்துவந்துள்ளது.


இந்த கடானாவைத்தவிர வில், பிச்சுவா, சிறிய கத்திகள் போன்றவற்றை சாமுராய்கள் பயன்படுத்திவந்துள்ளனர்.

த லாஸ்ட் சாமுராய்

இந்தப்படம் 2003ல் வெளிவந்தது, பெரும்பாலான டாம் படங்களைப்போலவே இந்தப்படத்தையும் நான் வெளியான சில வாரங்களில் பார்த்திருந்தேன். சில படங்கள் நமக்குள் தீவிரமான ஒரு அதிர்வை உருவாக்கும் என்னைப்பொறுத்தவரை என்னில் கொஞ்சம் அதிர்வை உண்டாக்கிய படம் இந்த த லாஸ்ட் சாமுராய்.

இந்தப்படம் நான் பார்த்த டாம் படங்களில் மிகச்சிறந்ததொன்றும் கிடையாது, போர்க்காட்சிகள் சம்மந்தபட்ட காட்சிகளின் படியும் நான் பார்த்த மிகச்சிறந்த படமாக இதைச்சொல்லமுடியாது. ஆனால் இதையெல்லாம் மீறிய ஒன்று இந்தப்படத்தில் எனக்குப்பிடித்திருந்தது.

நாதன் அல்கெரன், ஜார்ஜ் ஆர்ம்ஸ்டிராங் கஸ்டர்(உண்மை கதாப்பாத்திரம்) என்னும் கமெண்டரின் கீழுள்ள இராணுவத்தின் ஒரு தளபதி, படத்தில் அவருடைய மிகப்பிரபலமான ‘பாட்டில் ஆப் லிட்டில் பிக்ஹார்ன்’ ல் பங்குபெற்றதாக அறியப்படுபவர். இவர்களுடைய ராணுவம் அமேரிக்க சிவில் யுத்தம் மற்றும் இந்தயப்போர்களில் பங்குபெற்றது. குறிப்பிட்ட அந்தப்போரில் மிகக்குறைவான தன்னுடைய படையை அமேரிக்கப்பழங்குடியினரின் பெரும் படையை எதிர்த்து போரிடவைக்க அவரின் படை நிர்மூலமாக்கப்பட்டது. தோல்வி முன்பே தெரிந்திருந்தும் இந்தப்போரில் கலந்துகொண்ட கஸ்டரின் ஒரு படைப்பிரிவு தளபதி தான் நாதன் அல்கெரன். நன்றாகத்தெரிந்தும் இப்படி சக போர்வீரர்களை இழந்ததால் தன்னுடைய ஏதோவொன்றை தொலைத்ததைப்போல் இருக்கும் அல்கெரன் தன்னுடைய தளபதி பதவியில் இருந்து விலகி, துப்பாக்கிகள் பற்றிய காட்சிகளை நடத்துபவராக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஜப்பானின் மன்னர், தன்னுடைய படைகளுக்கு துப்பாக்கி பயிற்சியளிக்க விரும்ப அதற்காகச் செல்லும் அல்கெரனின் மற்றுமொறு முன்னால் கமெண்டர் அவரையும் தன்னுடன் வருமாறு அழைக்க சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அல்கெரன் ஜப்பான் வருகிறார். இங்கே தொடங்கும் கதை.

இங்கே ஜப்பான் வந்ததும் மன்னரின் படைகளுக்கு அல்கெரன் பயிற்சியளித்துக் கொண்டிருப்பார். பயிற்சியின் ஆரம்ப நிலையிலேயே மன்னர் தன்னுடைய படைகளை தன்னுடைய எதிரியான சாமுராய் கட்ஸுமோட்டோவிற்கு எதிராக போர்புரிய அனுப்புவார். அல்கெரன் எவ்வளவோ தடுத்தும் அனுப்பும் படைகள், துப்பாக்கிகள் கைவசம் இருந்தும் சண்டையில் சாமுராய்களின் வாள், அம்பு, மற்றும் வேல்களுக்கு பலியாகி பாதிபேர் சண்டையிலிருந்த உயிர்பிழைக்க ஓடிவிடுவார்கள். கடைசிவரை சண்டை செய்யும் அல்கெரனை கொல்ல வரும் சாமுராயின் மருமகன் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் அல்கெரனால் கொல்லப்படுவார்.

பின்னர் அல்கெரனை பழிக்குப்பழி வாங்காமல், சாமுராய் கட்ஸுமோட்டோ தன்னுடன் பிணைக்கைதியாக அழைத்து சென்றுவிடுவார். பின்னர் சாமுராய்களின் இடத்திற்கு வந்ததும் அவருக்கு சண்டையில் கிடைத்த காயங்களை குணப்படுத்தப்பட்டு, சிறிது சிறிதாக அவர் சாமுராய்களின் நல்லெண்ணத்தைப்பெறுவார். பின்னர் கடைசியில் சாமுராய்களுக்கும் மன்னரின் படைகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் சாமுராய்களின் சார்பாய் பங்கேற்பார். சண்டையில் அல்கெரன் தவிர மற்ற அனைவருமே கொல்லப்படுவார்கள் சாமுராய் உட்பட. இதுதான் கதை.

எனக்கு இந்தப்படத்தில் டாமின் நடிப்பைவிட, கட்ஸுமோட்டோவாக நடித்த கென் வாட்டனபேவின் நடிப்பு பிடித்திருந்தது. தன்னுடைய இருப்பை மிகப்பிரமாதமாக படத்தில் வெளிப்படுத்தியிருப்பார் வாட்டனபே, அதுவும் குறிப்பாக அல்கெரனுக்கும் கட்ஸJமோட்டோவிற்கும் இடையில் நடக்கும் அந்த உரையாடல்களில் பிரமாதப்படுத்தியிருப்பார். சாமுராய்களின் வாழ்க்கை முறைகளை இயக்குநர் மிகஅழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்தப்படம் படமாக்கப்பட்ட விதத்திலும் அழகாகயிருக்கும்.

டாம் வாள்பயிற்சியில் ஈடுபட்டிக்கும் பொழுது செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கட்ஸJமோட்டோவின் மகன், சொல்லும் விஷயங்கள் நன்றாக இருக்கும்."Mind the sword, Mind the people, Mind the Enemy, three many minds." அதேபோல் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு உதவி செய்துவருவது. சண்டையில் தான் கொன்ற சாமுராயின் மனைவிதான் எனத்தெரிந்து கொண்டவுடன் டாம் படும் அவஸ்தைகள் நன்றாகயிருக்கும்.

கட்ஸுமோட்டோவை அவருடைய இருப்பிடத்தில் வந்து கொல்ல முயலும் காட்சியின் பொழுது நடக்கும் சண்டையும், பின்னர் ஜப்பானிய மன்னரிடம் சென்று தன்னுடைய சேவையைப் பெற்றுக்கொள்ளக்கேட்கும் கட்ஸுமோட்டோவைக் கைது செய்து வைத்திருக்க அவரைக்காப்பாற்ற நடக்கும் சண்டையும் இந்தப்படத்தில் எனக்குப்பிடித்த சண்டைக்காட்சிகள். இந்தப்படம் பெரும்பான்மையான இடங்களில் அல்கெரன் கதைசொல்வதாக நகரும். கடைசியில் அவருடன் ஜப்பானுக்கு வரும் டிமோத்தி ஸ்பெல் சொல்வதாக முடியும், டிமோத்தியின் கதாப்பாத்திரமும் மிகஅழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். படத்தின் இயல்பிற்கு மிகஅழகாக இவர் செய்யும் சில நகைச்சுவைக்காட்சிகள் இருக்கும்.

சாமுராய்களைப்பற்றிய என்னுடைய ஆர்வமும் இந்தப்படம் எனக்கு பிடித்திருந்ததற்கான ஒரு முக்கிய காரணமம். முன்பே சொன்னதுபோல் படமாக்கப்பட்ட முறைதான் இந்தப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருமுறை நிச்சயமாக பார்க்கவேண்டிய படம்தான் த லாஸ்ட் சாமுராய்.


இயக்கம் எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன், மார்ஷல் எர்க்ஸ்கோவிட்ஸ், எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன் எழுதிய ஒரு கதையின் தழுவலில் எடுக்கப்பட்டது. டாம் குரூயிஸ், டிமோத்தி ஸ்பெல், கென் வாடனபே, கொயுகி ஆகியோர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

Popular Posts