தஞ்சை பெரியகோவிலில் பார்த்த இந்த இரண்டு சிற்பங்களும் எங்கள் கவனத்தைக் கவர்ந்தன. நான் இது போன்ற சிற்பங்கள் இருப்பதைப் பற்றி எங்கேயும் படித்ததில்லை. பார்த்துச் சொன்னது அக்காவின் கணவர், நல்ல ஷார்ப்பான கண்கள் அவருக்கு என்று நினைக்கிறேன். நான் என் மற்ற கண்ணில் பார்த்தது இங்கே கீழே புகைப்படங்களாய்.இந்தச் சிலையில் இருப்பவரைப் பார்ப்பதற்கு ஒரு சீன நாட்டுக்காரர் போலவே தோற்றமளிக்கிறார். தலையில் தொப்பி அணிந்து இருக்கும் இந்தச்...