உஸ்மான் சித்தர் அப்படிங்கிற ஒரு கேரக்டர் பற்றி சாருஆன்லைனில் அப்பைக்கப்ப வரும், நான் பாலகுமாரனையே அன்னம் மாதிரி பாலை மட்டும் படித்தவன், சாருவிடம் பாலாவை கம்பேர் செய்ய இந்த வகையறா இம்சை 10% தான் இருக்கும். ஒதுங்கித்தள்ள முடிந்திருந்தது, ஆனால் மனதின் ஓரத்தில் இந்த ஆள் நல்லா மாட்டிக்கிட்டு எங்கையோ வாங்கப் போறார்னு பட்டுக்கிட்டே இருந்துச்சு.
சாருவின் well-wisher என்கிற வகையில் இதைப்பற்றிய ஒரு வருத்தம் இருந்தது. அது அப்படியே ஆகியிருக்கிறது, நினைத்தால் வருத்தம் தான். தற்சமயம் உஸ்மான் சித்தர் சாருவின் வாசகர்களிடன் காசடிக்கிறார் என்கிற செய்தி தெரிந்தது, கால் தரையில் நிற்கவில்லை. மாட்டிக்கிட்டான்யா! என்று. இப்படித் தான் நடக்கும் என்று நான் நினைத்திருந்தேன் என்று சொல்வதை கேவலமான / அதிகப்பிரசங்கித்தனமான ஒன்றுதான் என்பதைத் தெரிந்தும் இதை எழுதுகிறேன். சாரு இந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவரவேண்டும் என்கிற எண்ணத்துடன்.
PS: சுஜாதாவைக் கடத்தைப்போறேன் கதையில் சொன்னதைப் போல் ஒருவேளை பைபாஸ் சர்ஜரி செய்தபிறகு கடவுள் எனக்குத் தெரிவாறா என்று தெரியாது!
PS1: நம்புவதற்கு கஷ்டம் தான் என்றாலும் சாருவின் பெயரை பப்ளிசிட்டிக்காக உபயோகிக்கவில்லை, என்னை நன்கறிந்த நாலுபேருக்கு அது தெரியும் ;) அவங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும்.
PS2: பகுத்தறிவை நோக்கி மட்டுமே இந்தப் பதிவு.
PS3: விஷய மற்றும் புகைப்பட தானம் சாருஆன்லைன்.காம்
மேட்டர் என்னானு புரியலையே தல
ReplyDeleteஒன்னியும் சொல்லறதுக்கில்ல.
ReplyDeleteசமயத்துல சாருவும் காசு வாங்கிட்டாரான்னு யோசிச்சதுண்டு.
பேடு பப்ளிகாசிட்டி
charu = mokkai
ReplyDeleteமுற்றிலும் உண்மை..... நித்தியானந்தரையும், ராக சுதாவைப் பற்றியும் எழுதுகிறார்.......என்ன நடக்குமோ....?
ReplyDeleteபின்னாளில் என்ன சொல்லுவாரோ...?
அன்புடன்
ஆரூரன்
அடுத்து பரமஹம்ஸ நித்தியானந்தம் பத்தி எப்போ வருமோ? எல்லாமே உள் குத்து மாதிரி இருக்குது.
ReplyDeleteஇப்படி பி. ந வா எழுதினா எப்படி தம்பி? துட்டு வாங்கினது எ.சின்னு அங்கேயேயும் பார்த்தேன். ஆனா மாட்டிக்கிட்டது சாருங்கரே?
ReplyDeleteஒண்ணும் புரியலை? விம் ப்ளீஸ்
எப்படி நல்ல சிந்தனையாளர்கள் இந்த மாதிரி டுபாக்கூர் ஆசாமிகளிடம் மாட்டிக் கொள்கிறார்களோ? என்னதான் சாரு மீது பிரியம் இருந்தாலும், அவரது இப்படிப்பட்ட எழுத்து கடும் எரிச்சல் மூட்டத்தான் செய்கிறது. அதே நேரம் அவரது நம்பிக்கைகளை கடும் விமரசினம் செய்த நல்ல கடிதங்களை வெளியிட்டு தன நேர்மையையும் நிரூபித்துள்ளார். நித்தியானந்தம் போன்றவர்கள் சிக்குவது கடினம். சாருவின் வாசகர் கடிதத்தில் எழுதியுள்ளது உண்மையானால் நித்யானந்தம் கொடுத்த பேட்டியில் தொனிக்கும் அகங்காரம்... அப்பப்பா.... மூஞ்சியில் குத்த வேண்டும் என வருகிறது.
ReplyDeleteசாருவுக்கு நன்றாக வேண்டும் என தோன்றினாலும் பரிதாபமாகவும் இருக்கிறது.
அன்புடன்,
நண்பன்
(உங்கள் பழைய colleague from kanbay - உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை)