உரையாடல் ஜன்னல் வழி பழக்கமான நண்பரொருவர் அழைத்ததன் பெயரில் சித்ரதுர்கா சென்றிருந்தேன், சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் மக்கள் வந்திருந்தார்கள். அக்காவும் அவங்க ஊட்டுக்காரரும் மற்ற மக்களுடன் டெம்போ ட்ராவலரில் வர நான் மட்டும் என் வண்டியில் சென்றிருந்தேன். குதிரைமுக் சென்றுவந்த பொழுது என் வண்டி கிளப்பிய சில சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அது அவசியமாகியது. ஒரு அருமையான டீம் அமைந்தது, கலகலப்பாய் நகர்ந்தது பொழுது. நான் தான் பாதி நேரம் ஃபோட்டோ எடுக்கவும் மீதி நேரம் பாத்ரூம் தேடவும் என்று இருந்ததில் அத்தனை தூரம் வந்திருந்த மக்களுடன் பழக முடியவில்லை. நிச்சயம் இன்னொரு முறை வேறு இடத்திற்குச் செல்லும் பொழுது இன்னும் விரிவாகப் பழகிக் கொள்ளலாம் என்று என் தேடலை(அதேதான்) தொடர்ந்திருந்தேன்.
சித்ரதுர்கா புகைப்படங்கள்
Mohandoss
Tuesday, August 11, 2009
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
மிகவும் அழகான படங்கள்
ReplyDeleteநன்றிகள் ரிஷான் ஷெரீப்.
ReplyDeleteHDR values குறைச்சிருக்கலாம்.. கொஞ்சம் harsh’ஆ இருக்கிறமாதிரி எனக்கு தோணுது.. :))
ReplyDeleteஇராம்,
ReplyDeleteஒரு போட்டோவை எந்த ஸ்டேஜில்/ஸ்டைலில் விடணும் அப்படிங்கிறது கலைஞனோட சொந்த விருப்பமாத்தான் இருக்க முடியும். அதை யாரும் வற்புறுத்த முடியும்னு தோணலை. உங்கள் ஒரு பார்ட் கமெண்ட் மட்டும் நான் எடுத்துக்கிறேன், உங்களுக்கு அந்த போட்டோக்களின் HDR அளவு ஹார்ஷா இருக்கிறதா!
அளவுகளைக் குறைப்பதைப் பற்றிய உங்கள் கருத்தை/ஆலோசனயை நிராகரிக்கிறேன் ;)
/மோகன்தாஸ் said...
ReplyDeleteஇராம்,
ஒரு போட்டோவை எந்த ஸ்டேஜில்/ஸ்டைலில் விடணும் அப்படிங்கிறது கலைஞனோட சொந்த விருப்பமாத்தான் இருக்க முடியும். அதை யாரும் வற்புறுத்த முடியும்னு தோணலை. உங்கள் ஒரு பார்ட் கமெண்ட் மட்டும் நான் எடுத்துக்கிறேன், உங்களுக்கு அந்த போட்டோக்களின் HDR அளவு ஹார்ஷா இருக்கிறதா!
அளவுகளைக் குறைப்பதைப் பற்றிய உங்கள் கருத்தை/ஆலோசனயை நிராகரிக்கிறேன் ;)//
அவ்வ்வ் என்னை விட்டுரு மேன்.. :))
பின்நவினத்திலே பதில் சொல்லாமே புரியுறமாதிரி பதில் சொன்னதுக்கே பெரிய நன்னி.. :)
எல்லாப்படங்களும் ரொம்ப அழகா வந்திருக்குங்க தாஸ்.
ReplyDelete//அவ்வ்வ் என்னை விட்டுரு மேன்.. :))
பின்நவினத்திலே பதில் சொல்லாமே புரியுறமாதிரி பதில் சொன்னதுக்கே பெரிய நன்னி.. :) //
:-))
போட்டோஸ் அழகு!
ReplyDeleteஇந்த லொக்கேஷனுக்கு எப்படி போகணும் ?
வாவ்
ReplyDeleteஅருமையான படங்கள் மோகன்தாஸ்
படங்கள் அட்டகாசம்.
ReplyDeleteஅந்த இடம் குறித்தும் கொஞ்சம் சொல்லலாமே.. ஆமாம் என்ன கோட்டை அது? இன்னும் சுற்றுலா வியாபாரத் தலமாக (commercial) ஆகாத இடம் போல் தெரிகிறது.
யப்பா மோகனா,, ராம்க்கு சொன்ன பதில்ல கொல்லீறீயேப்பா, இந்தமாதிரி கொமெண்ட்டெல்லாம் ஒரு புன்னகை சிந்திட்டு கடந்துபோய்கினே இருக்கனூம்ன்னூ உனக்கு சொல்லித்தார அந்த வாழ்க்கையை தூக்கிப் போட்டு மிதிச்சா என்னா..
ReplyDeleteஇப்ப மட்டும் கடவுள பார்த்தேன்ன்னு வச்சுக்க,,,பொடனிய சேர்த்து மிதிப்பேன் ..
நல்லப்படங்கள் மோகன்தாஸ்.
ReplyDeleteபுட்டண்ணா கனகல் அவர்களின் அருமையான, விஷ்ணுவர்தனின் முதல் படமான 'நாகர ஹாவு' (தமிழில் ஸ்ரீகாந்த் நடித்த மாணவன்) திரைப் படம் அங்குதான் எடுக்கப்பட்டதாக நினைக்கிறன். யாரவது கன்னட நண்பர்களைக் கேட்டுப்பாருங்க. எங்களுக்கும் சொல்லுங்க.