உலகக்கோப்பை முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது, நம் எதிர்பார்ப்புக்கள் எப்பொழுதும் அப்படியே நிறைவேறிவிடுவதில்லை. நான் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் பைனலுக்கு முன் சந்தித்துவிடக்கூடாது என்று பயந்தபடியிருந்தேன். அதற்கு ஆஸி டீமின் வெற்றிவாய்ப்பைப் பற்றிய சந்தேகம் கிடையாது காரணம். எனக்கு மிகவும் பிடித்த தோனியின் எதிர்காலத்தை உலகக்கோப்பை மாற்றிவிடக்கூடாது என்பதில் தான் பயம் அதிகம் இருந்தது.
ஆனால் இந்த முறை ஆஸ்திரேலியா இந்தியா காலிறுதியில் மோத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் ஆட்டத்தின் இறுதியில் டாரன் ஸாமி முகத்தில் தெரிந்த Subtle சிரிப்பு என்னை அசைத்துப் பார்த்தது, நான் இந்தியாவுடன் ஜெயிக்க வேண்டும் என்று மேற்கிந்தியத்தீவுகள் ஆடியதைப் போல் உணரவே இல்லை. நான் முதலாவது காலிறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் சுலபமாக ஜெயிக்கும் என்றே நினைக்கிறேன். அதற்கு பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை வென்றது காரணம் கிடையாது.
எனது அலுவலகத்தில் ஒரு ஜோக் ஓடிக்கொண்டிருந்தது, ஆஸ்திரேலியாவை காலிறுதியில் சந்திக்க விரும்பாத தோனி, யுவராஜிடம் ‘தம்பீ ஒழுங்கா ஆடாத நாம் இந்த மேட்ச் தோற்று, ஸ்ரீலங்காவிடம் காலிறுதி விளையாடலாம்’ என்று சொல்ல யுவராஜ் ‘நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறது’ என்று செஞ்சுரி அடித்து ஜெயிக்க வைத்ததாக. இதில் இருக்கும் அர்த்தம் ஒன்று தான், யாரும் ஆஸ்திரேலியாவோ இந்தியாவோ காலிறுதியில் தோற்க விரும்பவில்லை என்பது. சரி அந்த ஆட்டத்திற்கு வருவோம்.
ஆஸ்திரேலிய அணி வலுவான பௌலிங் கொண்ட அணியாக இருக்கிறது. என்ன தான் பாகிஸ்தானை அவர்களால் 176ல் சுருட்ட முடியாவிட்டாலும் ஆனால் அன்று ஆஸ்திரேலியா 200+ ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் பாகிஸ்தானை ஆஸி சுருட்டியிருக்கும். பான்டிங் சொன்னது போல் டைய்ட்-ற்கு எந்தப் ப்ளானும் ஆஸி போட முடியாது, வைட் போடாமல் குச்சிக்கு பந்து போட்டுக் கொண்டிருந்தாலே டைய்ட்டால் ஆஸிக்கு விக்கெட்டுக்கள் விழும். அதுவும் ஷேவாக், யுவ்ராஜ், தோனி, ரெய்னா என அடித்து ஆடத்துடிக்கும் நபர்களுக்கும் 150+KMPS வரும் பந்துகளில் கிடைக்கும் அவுட்டர் ஸ்விங் பந்துகள் விக்கெட் கொடுக்கும்.
லீ எப்பொழுதையும் போல சிறப்பாக பந்துவீசுவதால் சச்சின், கோ(ய்)லி விக்கெட் அவரிடம் விழ வாய்ப்பு உண்டு. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ப்ராக்டீஸ் மேட்சில் இந்தியா ரன் எடுக்கத் தடுமாறியதை நேரில் பார்த்தவனாதலால். 100/3 ரொம்பவும் சாதாரண விஷயமாக இருக்கும். சச்சினும் ஷேவாக்கும் சரியான ஓப்பனிங் தராமல் மூன்றாவது விக்கெட்டும் விழுந்தால் தற்போதைய நிலையில் இந்தியா 300+ ஸ்கோர் அடிப்பது என்பது இமாலய இலக்கு. இதுவே ஆஸி 300+ ஸ்கோர் அடித்திருந்து முதல் மூன்று விக்கெட் விழுந்தால் அதைத் திரும்ப அடிப்பது என்பதும் இமாலய இலக்கே!
ஆடுகளம் எப்படிப்பட்டதாகயிருக்கும் என்பது மில்லியன் டாலர் கொஸ்ஸீன், என்னைப் பொறுத்தவரை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக Flatஆகத்தான் இருக்கும். டாஸ் முக்கியத்துவம் வாய்ந்தது - டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்யவே ஆஸ்திரேலியா விரும்பும் - இரண்டாவது இன்னிங்க்ஸ் ட்யூ ஃபேக்டரால் பௌலிங் அத்தனை போட முடியாது என்பதால் ஸ்பின் ரொம்பவும் எடுபடாது. ஆனால் பியுஷ் சாவ்லாவை, தோனி இந்த ஆட்டத்திற்கு எடுப்பதற்கான காரணம் ப்ராக்டீஸ் மேட்சில் இருக்கிறது. இல்லாமல் தோனி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிராக ஆடிய டீமை செலக்ட் செய்தால்(ஷேவாக் மட்டும் இன் / ரெய்னா அவுட்) அஷ்வினை ஆடுவதில் ஆஸ்திரேலியாவிற்குப் பிரச்சனை இருக்காது.
ரிக்கி பான்டிங் இன்னும் எந்த ஆட்டத்தையும் அவருடைய ஸ்டான்டர்ட்க்கு விளையாடாததால், இந்தப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. அந்த லெவலில் ஃபார்மிற்கு வர ஐந்து ஆறு ஓவர்கள் கூட போதும். வாட்சன், ஹேட்டின், பான்டிங் மூவரில் ஒருவர் செஞ்சுரி அடித்தால் இந்தப் போட்டில் சுலபமாக ஆஸி வசம் விழும். வாட்சன் இருக்கும் ஃபார்மிற்கு அது ஒன்றும் அத்தனை பெரிய விஷயம் கிடையாது, ப்ராக்டீஸ் மாட்சில் ஹேட்டினும் வாட்சனும் அடித்த அடி இன்னமும் நினைவில் இருக்கிறது. ஆஷஸ் தொடர் ஆரம்பத்திலிருந்து ஹேட்டின் காத்திருக்கும் ஒரு பெரிய வாய்ப்பு காலிறுதியில் இருக்கலாம். கொஞ்சம் சம்ஜோதிமாக விளையாண்டால் ஹேட்டின் இந்தப் போட்டியின் திருப்புமுனையை உருவாக்குவார்.
மிடில் ஆர்டர் கொஞ்சம் மக்கர் செய்தாலும், மைக்கேல் க்ளார்க், வொய்ட், மைக்கேல் ஹஸ்ஸி எல்லாம் பெரிய ஆட்டக்காரர்கள், முக்கியப் போட்டிகள் இம்மாதிரியான ஆட்டக்காரர்களிடமிருந்து திறமையான ஆட்டத்தை வெளிக்கொணரும் என்பதால் பிரச்சனை இல்லை. பான்டிங் புலம்பிக் கொண்டிருந்தது போல் அவருடைய மிடில் ஆர்டர் கொஞ்சம் பேட்டிங் செய்தது குறிப்பாய் ஸ்டீபன் ஸ்மித், பாகிஸ்தானுக்கு எதிராய் எடுத்த ஒவ்வொரு ரன்னும் அவருடைய கான்பிடன்ஸை அதிகரிக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, சச்சின் இன்னமும் விளையாடுவதால் ஏற்படும் டிபெண்டென்ஸி மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முக்கியமான ஆட்டங்களில் போங்கடிக்கும் சச்சின் காலிறுதியில் அதையே செய்வார் என்பதில் பெரிய சந்தேகம் கிடையாது. ஷேவாக் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை, பத்து ஓவர் ஆடினால் எதிரணி தோல்வியைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். ஆனால் அந்த பத்து ஓவரிலும் ஏகப்பட்ட வாய்ப்புக்களை எதிரணிக்குத் தந்து கொண்டேயிருப்பார். யுவராஜ் இதுவரை இந்த உலகக்கோப்பையில் ஆடியதே பெரிய விஷயம் இவரிடம் இருந்து இனிமேல் எதிர்பார்க்க ஒன்றுமில்லை, கோலி அருமையான ஆட்டக்காரர் கொஞ்சம் ஆஸ்திரேலியா இவரிடம் கவனமாக இருக்க வேண்டும். 30 ஓவருக்குள் தோனி ஆட வந்துவிட்டால் அதுவே இந்தியாவின் தோல்வியை முதல் பேட்டிங்கோ இரண்டாவது பேட்டிங்கோ சொல்லிவிடும். ஆனால் தோனி பொறுப்பான ஆட்டக்காரர் என்பதால் லூஸு போல் ஆடாமல் 50 ஓவர் விளையாடி போட்டியாவது இருக்கச் செய்வார்.
இந்திய பௌலிங் பற்றிச் சொல்ல எதுவுமில்லை, தோனி டாஸ் ஜெயித்து ஃபீல்டிங் கேட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. பாவம் தோனி அவ்வளவு தான் இந்திய அணியில் பௌலிங்கை அவர் நம்ப முடியும். ஜாகீர், முனாஃப், ஹர்பஜன் மற்றும் பியுஷ் சாவ்லாவைத் தான் தோனி நம்புவார். யூசுப் பதானை விடுத்து ரெய்னாவை எடுப்பார் என்று நான் நம்பவில்லை. ஆஸ்திரேலியா சேசிங் செய்தால் நிச்சயம் ஜெயிக்கும் என்றாலும் முதலில் பேட்டிங் செய்யும் கான்செப்டையை அவர்கள் எடுப்பார்கள்.
இந்தியாவை நினைத்து பரிதாபப்படவேண்டியிருக்கிறது தற்சமயத்தில். ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா காலிறுதியில் போட்டி பலமாகக் கொடுத்தாலே பெரிய விஷயம். இல்லாவிட்டால் இது ஒரு ஒன் சைடட் கேமாக ஆஸ்திரேலியாவிற்குச் சாதகமாகவே இருக்கும்.
Go Aussie Go!!! Australia Vs India Quarters
Posted on Tuesday, March 22, 2011
Go Aussie Go!!! Australia Vs India Quarters
Mohandoss
Tuesday, March 22, 2011
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
super article.
ReplyDeleteநல்ல அலசல்..
ReplyDeleteநீங்க சொல்றத பார்த்தா, ஆஸி ஒரு 950 ரன் அடிச்சு, இந்தியாவை சரியா 898.4536 ரன் வித்யாசத்துல ஜெயிச்சிரும் போலயே !!!
ReplyDeleteஅருமை
ReplyDeleteதாஸண்ணே, ஆஸி பாகிஸ்தான் கூட சொதப்புன மாதிரியே நீயும் பத்திக்குப் பத்தி சொதப்புறியே, பேசாம கதை மட்டுமே எழுதலாம்...
ReplyDeleteYou may be supporter for Aussies. But you are over confident like Ponting.Lets wait and see..
ReplyDelete//இந்தியாவை நினைத்து பரிதாபப்படவேண்டியிருக்கிறது தற்சமயத்தில். ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா காலிறுதியில் போட்டி பலமாகக் கொடுத்தாலே பெரிய விஷயம். இல்லாவிட்டால் இது ஒரு ஒன் சைடட் கேமாக ஆஸ்திரேலியாவிற்குச் சாதகமாகவே இருக்கும்.//
ReplyDeleteநீங்க ஆஸ்திரேலியா விரும்பியா இருக்கலாம்,அதுக்காக இப்படியெல்லாம் எழுதகூடாது,
ஆஸ்திரேலியா நெலமை தான் ரம்போ பாவமா இருக்கு அம்பயர் அவுட் குடுத்தா கூட பாண்டிங் க்ரௌண்ட விட்டு வெளிய போகமட்டேன்கறாரு ,
காலிறுதில தோத்தா வேர்ல்ட் கப் கிடைக்கும் அப்படினா கண்டிப்பா கப் ஆஸ்திரேலியா டீம்முக்குதன்
இன்னுமா இந்த பதிவ எடுக்கல!
ReplyDeleteஅண்ணா
ReplyDeleteவணக்கம் அண்ணா
அன்புள்ள வரிப்புலியே,
ReplyDeleteவா எம் தளத்துக்கு. ஒன்று சேர்ந்து உலகக்கோப்பை வெல்வோம். :))
Mohandoss the Paul :))
ReplyDeleteyou were wrong didnt you?
ReplyDeleteEat your words!
ReplyDelete