In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 2

"உங்களோட நோட்ஸ் எனக்கு வேண்டும், கிடைக்குமா?".

மேடையிலிருந்து இறங்கியதும் நேராக ஆயாக்கடைக்குப் போய் சாப்பாடு ஃபுல் கட்டு கட்டிவிட்டு, வகுப்பிற்கு செல்ல படியேறினான். அவன் கல்லூரி இருந்த காட்டில் சாப்பிடுவதற்கான உணவங்கள் அப்பொழுது இல்லை. அவன் கல்லூரியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பிரபலமான பொறியியல் கல்லூரி அருகில் கூட பெரிய உணவகங்கள் கிடையாது. கிழக்குப் பக்கம் ஐந்து கிலோமீட்டர் மேற்குப்பக்கம் பத்து கிலோமீட்டர் தள்ளித்தான் குறிப்பிடும்படியான ஊர்கள் இருந்தன. கல்லூரி இருந்த இடத்தின் அருகில் இருந்த ரைஸ்மில்லிற்காய் ஒரு தாத்தா பாட்டி நடத்தி வந்த கடை தான். பொதுவாய் டேஸ்காலர்கள் அங்கே உணவருந்த வருவதில்லை, ஆனால் மோகன் டேஸ்காலராக இருந்தாலும் ஆயாவுடனான பழக்கத்தில் அங்கே வருவதை வழக்கமாக வைத்திருந்தான். அவன் திரும்பிப்
 போகின்ற வழியிலேயே நின்று கொண்டிருந்தாள். என்னடா இது இவளைப் பார்க்க வேண்டியிருக்கிறதேன்னு மோகன் நினைத்துக்கொண்டே நகர்ந்தான், அவன் கடக்கும் பொழுது அவள் கேட்டாள்.

உடனே, "முதல்ல நான் உங்களோட சீனியர்ன்னு தெரியுமா, நீங்க முதல் வருடம் படிக்க வந்திருக்கிறீங்க. சொல்லப்போனால் இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் தான் கேட்கணும். எங்கிட்ட கேட்கிறீங்க. நோட்ஸ் என்கிட்டயிருந்தாலுமே யார்க்கு தரணும்னு நான் முதல்ல யோசிக்கணும். உங்களைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது, நான் நோட்ஸ் தருவேன்னு எப்படி நினைச்சீங்க, ஒன்னு சொல்லிக்கிறேன். நீங்க முதலாம் ஆண்டு இந்தக் கல்லூரியில் படிக்கிறீங்க, நான் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். அவ்வளவுதான் நமக்குள்ள உள்ளது. முன்னாடி நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டாச்சு, அவ்வளவுதான்!" என்று சொல்லிவிட்டு வகுப்பிற்குள் நுழைந்தான்.

அங்கே என்னுடைய இரண்டாம் ஆண்டு ஜூனியர்கள் இருந்தார்கள்.

"ம்ம்ம்... சொல்லுங்கண்ணே!!" என்றான்.

"அண்ணே, எங்க ஜூனியரைப் வரவேற்க போறோம், உங்களையும் கூட்டிக்கிட்டு போகச் சொல்லி பிரின்ஸி சொன்னாரு, வரீங்களா?"

"என்னடா வம்பாப் போச்சு, உன் ஜூனியரை வரவேற்க நான் எதற்கு, பிரின்ஸிக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். ஏனாம்?"

"ராகிங் பிராப்ளம் இருப்பதால் உங்களையும் கூட்டிக்கிட்டு போகச்சொல்லி சேர்மன் சொன்னாராம்."

"சரி வந்து தொலையுறேன், ஆனா ஒன்னும் பேசமாட்டேன். இங்கையே சொல்லிட்டேன்".

எல்லா புதுமுகங்களும் உட்கார்ந்திருந்தார்கள், இவள் முதல் பெஞ்சிலேயே உட்கார்ந்திருந்தாள், முகம் வாடியிருந்தது. அவனைப் பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டாள்.

"இவர்களெல்லாம் உங்க சீனியர்கள், இவன் பேரு சுந்தரம், கிளாஸ் ரெப். இனிமே சுந்தரம் உங்ககிட்ட பேசுவான்" மோகன் விலகி பின்னால் சென்று நின்றான்.

அவன் நன்றாகவே பேசினான், பேச்சின் இடையே விஷயம் நோட்ஸ் பக்கம் வந்தது. சுந்தரம் என்னவோ பதில் சொன்னான், அப்போது அவன் எதேச்சையாக அவளைப் பார்க்க அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்து தெரிந்தது.

"அண்ணே..." சுந்தரம் கூப்பிட்டதும் தான் மீண்டும் உணர்ச்சி வந்தது.

"ம்ம்ம்... சொல்லு சுந்தரம்".

"இவங்க சிலபஸ் மாறியிருக்காம், பர்ஸ்ட் செமஸ்டர்ல சி-யும், டேட்டா ஸ்ட்ரெக்சரும் இருக்காம். அது எங்களுக்கும் இப்பத்தான் - மூன்றாம் செமஸ்டரில் இருக்கு. நோட்ஸ் வேண்டுமாம். எங்களிடம் இல்லையே? அதான் என்ன செய்யறதுன்னு..."

இது அவன் எதிர்பாராதது, அவள் இதைத் தெரிந்து கொண்டுதான் அவனிடம்  கேட்டாளா என்று அவன் யோசித்தான், ஐயோ என்னடா இது சோதனை என்று நினைத்துக் கொண்டவனாய்

"ஸ்டுடண்ட்ஸ், இங்கே லக்சரர்ஸ் தற்ற நோட்ஸே போதும், அப்புறம் புக்ஸ் இருக்கும். உங்களுக்கு சீனியர் நோட்ஸ் தேவைப்படாது, தேவைப்பட்டால் உங்க லெக்சரர் மூலமா மூவ் பண்ணுங்க." என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான். இப்பொழுதும் அவள் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிறகு அவர்கள் ஒவ்வொருவருடைய பெயர், ஊர், அப்பாவின் தொழில் இன்னபிற விவரங்களைச் சொன்னார்கள். கேட்காமல் இருப்பது போல் பாவனை செய்துவிட்டு அவள் சொல்லும் விவரங்களை கூர்மையாகக் கேட்டேன். பெயர் அகிலாண்டேஸ்வரி, ஊர் ஸ்ரீரங்கம், அப்பா புரோகிதர்.

இதன் கடைசியில், சுந்தரம் கேட்க கூடாத ஒரு கேள்வியைக் கேட்டான்.

"உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தா கேட்கலாம்" என்றான்.

உடனே அகிலா எழுந்து "நான் பேச்சுப்போட்டியில் கலந்துப்பேன், அதுக்கு யார்கிட்ட கேட்கணும்?" என்று கேட்டுவிட்டு அவனை வேறு தனியாகப் பார்த்தாள்.

"தாஸ் அண்ணாதான் கல்ச்சுரல் லீட், அவர்கிட்டத் தான் சொல்லணும். ஆனா உங்களுக்கு வாய்ப்பு இருக்காதுன்னு நினைக்கிறேன். ஏன்னா அண்ணா வருஷாவருஷம் கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்கி வருவார்," என்று சொல்லி பெருமையாக வேறு அவனைப் பார்த்தான்.

தலையெழுத்தே வம்புல மாட்டிவிட்டுட்டானே என்று நினைத்தவனாய் "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, உங்கள் பெயரையும் பதிவு செய்யலாம். போட்டிக்கு முன்பு கல்லுரியில் ஒரு போட்டி நடக்கும். அதில் வென்றவர்கள் தான் யுனிவர்சிட்டி போட்டியில் கலந்திக்கணும். அதனால உங்கள்ல யார் யாரெல்லாம் நல்லா பேசுவீங்களோ அவங்களெல்லாம் கலந்துக்கலாம். அதுக்கு மாலை நேரத்தில என்னை தனியா பாருங்க" என்று மோகன் சொன்னான். அவளுக்காக என்றில்லாவிட்டாலும், அதுதான் முறை.

என்னடா இது இன்று சுத்தி சுத்தி அடிக்குதே என்று  நினைத்துக்கொண்டவனாய் மீண்டும் வகுப்பறைக்கு வந்தான்.

மாலை ஐந்து மணியிருக்கும், கல்லூரி எப்பொழுதும் நாலே காலுக்கே முடிந்துவிடும், ஆனால் அன்று கொஞ்சம் வேலையிருந்ததால் அவன் கிளம்பியிருக்கவில்லை. ஐந்து மணிக்கு அகிலா பர்ஸ்ட் ப்ளோரிலுள்ள அவன் வகுப்பறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது தான் என்னவோ நினைத்தவனாய் வாசல் பக்கம் திரும்ப நின்று கொண்டிருந்தாள். எப்பொழுதிலிருந்து நிற்கிறாளோ தெரியவில்லையென்று நினைத்து உள்ளே கூப்பிட்டான்.

"மறந்தே போயிட்டேன், கூப்பிட்டுயிருக்கலாம்ல."

"இல்ல இன்னொரு பையனும் வந்தான், இப்ப கீழே போயிருக்கான் வரட்டுமேன்னு பார்த்தேன். அதுமட்டுமில்லாம உங்களை கூப்பிட பயமாயிருந்தது" என்று சொன்னாள்.

அவன் அவள் சொன்ன கடைசி வாக்கியத்தை கவனிக்காதது போல விட்டுவிட்டு.

"சரி சொல்லு, நான் உனக்கு என்ன பண்ணனும்"

"இல்ல நீங்கதான் பேச்சுப்போட்டியில கலந்துக்கணும்னா உங்ககிட்ட சொல்லணும்னு சொன்னீங்க, ஆனா நான் பேச்சுப்போட்டியில கலந்துக்கல; வேற என்ன போட்டியிலெல்லாம் கல்லூரி கலந்துக்கும்னு தெரிஞ்சா, எதிலாவாது கலந்துக்கலாமேன்னுதான்"

வேண்டுமென்றே அவனைக் கிண்டுகிறாள் என்று அவன் ‘ஏன் பேச்சுப்போட்டியில கலந்துக்கலை’என்று கேட்கவில்லை.

"நாங்க அது இல்லாம, ஸ்கிட், மைம் இரண்டுலேயும் கலந்துப்போம், டான்ஸ் மற்றதெல்லாம் என்கிட்ட இல்லை"

"நான் டான்ஸ் ஆடமாட்டேன், நாடகத்தில் கலந்துக்கிறேன், முன்னாடி எங்க ஸ்கூல் நாடகத்திலெல்லம் நடிச்சிருக்கேன்"

மோகன் அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாமல், "சரி உன் பேரை சேர்த்துக்கிறேன், தேவையிருந்தால் கூப்பிடுகிறேன். நன்றி" என்று சொல்லிவிட்டு என் நோட்டில் நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தேன்.

ஆனா ஒரு இரண்டு நிமிஷம் ஆகியிருக்கும் அவள் கிளம்பாததால்,

"ம்ம்ம்... அப்புறம்?" என்றான்.

அவள், "இல்லை, நோட்ஸ்..." என்றாள் முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு.

"நான் உன்கிட்ட முதல்லையே சொன்னேன், பின்னாடி கிளாஸ்லையும் சொன்னேன்... இதுக்கு மேல உனக்கு என்ன தெரியணும்." அவனுக்கு உண்மையிலேயே தெரியாததால் கேட்டான்.

"இல்லை, கனிமொழி அக்காத்தான் உங்க கிட்ட கேட்கச் சொன்னாங்க, அவங்க எனக்கு அக்கா முறை வரும். ஆனா இதை உங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி நமக்குள்ள என்னன்னமோ நடந்திருச்சி, உங்களுக்கும் என்னை பிடிக்காமப் போச்சு..." கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவாள் என்று தோன்றியது அவனுக்கு.

"கனிமொழியா?" கனிமொழி மோகனுடைய இரண்டாம் ஆண்டு ஜூனியர், சொல்லப்போனால் அவனுடைய ஒரே பெண் தோழி, நாடகத்திலெல்லாம் அவனுடன் நடிக்கும் பெண், இன்னும் சொல்லப்போனால் இந்தக் கல்லுரியிலேயே அவனைக் கிண்டல் அடிக்கக்கூடிய அளவு உரிமையுள்ளவள் அவள் ஒருத்தி தான்.

"கனிமொழிக்கு என்ன ஆச்சு, இன்னிக்கு ஆளையே காணோம்?" பதறியபடி கேட்டான், இவளிடம் நான் நடந்துகொண்டது தெரிந்தால் என்ன கேட்பாளோ என்று நினைத்தபடி. நிச்சயம் வம்பிழுப்பாள் என்று தெரியும் அவனுக்

"உடம்புக்கு கொஞ்சம் சரியில்லை, நாளைக்கு வருவாங்கன்னு நினைக்கிறேன்" இன்னும் அவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டுதானிருந்தது. நல்ல நேரம் அவள் சொன்ன அந்த மற்றொரு பையன் வந்தான் இவன் தப்பித்தேன்.

"அண்ணா நானும் நல்லா பேசுவேன், நீங்க நாடகமெல்லாம் போடுவீங்கன்னு கேள்விப்பட்டேன், நானும் நடிக்கலாம்னு தான் உங்களைப் பார்க்க வந்தேன்."

"சரி உன்பேரு சொல்லு, எழுதிக்கிறேன், தமிழ் எச்ஓடி கிட்ட சொல்றேன். வாய்ப்பிருந்தா கூப்பிடுறேன்"

"அண்ணா, உங்க நோட்ஸத்தான் லெக்சரர்ஸ் யூஸ் பண்ணுவாங்களாமே, நோட்ஸ் கிடைக்குமா சி-க்கும், டேட்டா ஸ்ட்ரெக்சருக்கும்"

அவனுடைய நோட்ஸுக்கு அந்தப் பெருமை இருந்தது தான். லைப்ரரி லைப்ரரியாய் அலைந்து அவன் எழுதியிருந்ததை திருத்தி படம் வரைந்து விவரித்திருந்ததை அவன் கல்லூரியில் எல்லோருமே உபயோகித்து வந்தனர் என்றாலும் இன்னொருவர் எழுதியதைப் படிப்பதைவிடவும் அவன் செய்தது போல் உணர்ந்து எழுதிப் படித்தால் தான் தேர்ச்சிக்கு உதவியாய் இருக்கும்.

"யேய், அப்படியெல்லாம் உன்கிட்ட யார் சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லை, என்னடா இது ஜூனியரா வந்த இரண்டாவது நாளிலேயே எனக்கும் என் வாத்தியாருங்களுக்கும் சண்டை மூட்டிவிட்ருவீங்க போலிருக்கே? இந்தப் பொண்ணுக்கிட்ட நோட்ஸ் கொடுக்கிறேன் வாங்கிக்க, எனக்கு கொஞ்ச வேலையிருக்கு அப்புறமா பார்க்கலாம்" என்று சொல்லிட்டு அவளைப் பார்க்க தைரியம் இல்லாமல் திரும்பவும் நோட்ஸ் எழுதத் தொடங்கினான்.

அன்றைக்கென்னமோ கீழே விழுந்து இன்னும் கீழே போய்க் கொண்டேயிருந்தது  போல் தோன்றியது அவனுக்கு.

(தொடரும்...)

Related Articles

8 comments:

  1. story is going good, Mohan. keep up your good work.

    -Ramesh.

    ReplyDelete
  2. yei.. ithellam eppa nadanthathu.. Sollave illa..

    ReplyDelete
  3. // பெயர் அகிலாண்டேஸ்வரி, //

    அதானே :-))

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  5. மோகன்தாஸ்: உங்க நடை எனக்கு பிடிக்கிறது! இந்த inverted commas, first person - ல் பேசும் படி, சொல்லும்படி எப்படி எழுதுவது?
    second person-ல் எழுதுவது எப்படி. சொல்லிக் கொடுங்களேன்.

    என் எழுத்தைப் படித்தால் நிறைய தப்புகள் தெரியும். இருந்தாலும் எழுத ஆசை. வெட்கமாக இருக்கு தாய் மொழியில் சரியாக எழுதத் தெரியவில்லை என்று சொல்வதற்கு கூட. எப்படி அழகாக புரியும் படி எழுதுவது என்று ஒரு சிறிய tutorial எழுத முடியுமா? எழுதினால் நலம்.

    ஆங்கிலத்தில் பக்கம் பக்கமாக எழுதினாலும், தமிழில் எழுதும் ஆனந்தம் அளவிலா முடியாது! அனால், முடியவில்லை என்ற போது தயங்காம உதவி கேட்பது என் வழக்கம். அது தான் உங்களிடம்.

    என் மருத்துவக் கல்லூரி கதைகள் நிறை இருக்கு; சுவாரசியமா..க..கவே இருக்கும்.

    யார் சொல்லிக் கொடுத்தாலும் சரி; நீங்கள் இல்லாவிடில் இதைப் படிக்கும் வேறு ஏதாவது வாசகர்கள் எழுதலாமே!
    நன்றி!

    ReplyDelete
  6. நம்பள்கி,

    நிறைய படிங்க, நிறைய எழுதுங்க.

    எழுதினதைத் திருப்பிப் படுங்க, திருத்துங்க, திருப்பி எழுதுங்க, திருத்துங்க இப்படி.

    நான் இந்தக் கதையை first personல் தான் எழுதினேன், இப்பத் தான் திருத்தி third personல் எழுதுறேன். இந்தக் கதையோட first person லிங்க் தேடி கம்பேர் செய்து பாருங்கள்.

    ஆரம்பத்தில் third personல் எழுத வரலைன்னா, என் போல் first personல் எழுதி பின்னர் third personக்கு மாற்றலாம்.

    commas பற்றிக் கவலைப் படாம எழுதுங்க பின்னர் படித்துப் பார்க்கும் பொழுது உங்களுக்கே புரியும் எங்க கமா, போட்டா இன்னும் தெளிவா புரியும் என்று.

    ஒரு ஸ்டைல் முடிவு செய்து கொள்ளுங்கள், நான் கொட்டேஷன் உள் க்லோக்கியல் தமிழும் உரையாடல்களுக்கு வெளியில் உரைநடைத் தமிழும் பொதுவாய் உபயோகிப்பேன்.

    போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன போட்டு எழுத ஆரம்பித்தால் நீங்களும் இலக்கியவாதியே!

    ReplyDelete
  7. ஆங்கிலத்தில் பல இடங்களில் கமா போடலாம். கேள்விக் குறி, ஆச்சரிய குறி, செமி கோலோன்; கோலன், ஹைபென் எங்கு போடணும், இது மாதிரி எல்லா குறியீடுகளும் எளிதாக SECOND NATURE மாதிர் வருது.

    தமிழில் சரியாக வராததற்கு காரணம்...தமிழில், ஒவ்வருவர் ஒவ்வொரு மாதிரி எழுதி குழப்புகிறார்கள்--குறியீடுகளைப் பொறுத்தவரை! இலக்கியாவாதிகளிடையே ஒரு ஒழுங்கு முறை இல்லை.

    ReplyDelete
  8. தமிழில் இது கிடையாதுங்க நம்பள்கி, கல்வெட்டுக்களில் இதெல்லாம் இல்லவே இல்லை. ஆனால் தற்கால உபயோகிப்பிற்காக சேர்த்துக் கொள்வது தான் என்றாலும்.

    நான் கோலன் உபயோகிப்பதில்லை - ஹைபன் உண்டு. உதாரணம் மேலே.

    கமா பத்தி சொன்னேனே எல்லாம் புரியறதுக்குத் தான். அதைப் பத்தி பெரிசா இப்பொழுது கவலை வேண்டாம், நீங்கள் சொல்ல வந்ததை முறையா சொல்ல, மற்றவர்கள் படித்துப் புரிந்து கொள்ள முடியுமான்னு யோசிங்க. அவ்வளவு தான்.

    கேள்விக்குறி ஆச்சர்யக்குறி இரண்டுக்கு அப்புறமும் நான் முற்றுப்புள்ளி வைக்க மாட்டேன் அதுதான் என் வரையிலான ரூல். தேவைப்பட்ட இடங்களில் உபயோகிப்பது தான் என்றாலும். கேள்விக்குறியாவும் ஆச்சர்யக்குறியாவும் இல்லாமல் அதை கதையில் குறிப்பில் சொல்வது இன்னமும் நலம்.

    ’சொல்லிவிட்டு ஆச்சர்யமாகப் பார்த்தான்’ என்றோ ‘அவன் கேள்வியே விநோதமாக இருந்தது’ என்றோ எழுதலாம். !? தவிர்த்து.

    இலக்கியவாதிகளுக்குள் ஒற்றுமை இல்லைங்கிறது புரியுது, ஆனால் தேவையில்லைன்னு நினைக்கிறேன். இங்க எடிட்டருங்களுக்கு பெரிய வேலை கிடையாது ஆங்கிலம் போல். :)

    ReplyDelete

Popular Posts