In ஓவியம்

எனது ஓவியங்கள்

இந்த ஓவியங்களெல்லாம் நான் வரைந்தவை. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நான் வரைவதுண்டு. அத்துனை நன்றாக இல்லாவிட்டாலும் பார்க்கிறமாதிரி இருப்பதாக நான் நினைக்கிறேன்.





Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சுய சொறிதல் சொந்தக் கதை

மோகன்தாஸ் என்ற நான்

சிறு வயதிலேயே தோன்றிய ஆசை இப்பொழுது தான் நிறைவேறியிருக்கிறது. அது தமிழில் ஒரு வளைத்தலம் அமைக்க வேண்டுமென்பது. பல முறைகளiல் முயன்று இப்பொழுது யூனிகோடு முறையில் என் ஆசை நிறைவேறுகிறது.

பாரதியின் பாடல் வரிகளுடன் தொடங்குகிறேன்,

தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

பாரதியை நினைக்கும் பொழுதே மனதில் வீரம் பொங்கும், அதிலும் மிகக் குறிப்பாக இந்த பாடல் வரிகள். எழுதும் பொழுது அவருக்கு என்ன நிலைமையோ தெரியாது. சமயங்கள் பலவற்றில் நான் எனக்கே சொல்லிக்கொள்ளும் வரிகள் இவைகள். மனதிற்குள் ஒரு நம்பிக்கை வரும். பாரதியின் பல பாடல்கள் என் நிலைமையை உணர்த்தியிருக்கின்றன. அதில் ஒன்று இந்த பாடல் மற்றொன்று, இந்த வரிகள்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்கை
பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சுய சொறிதல் சொந்தக் கதை

என்னைப் பற்றி

நான் பிறந்தது, வளரந்தது, படித்தது எல்லாமே திருச்சி தான், வரலாற்று முக்கியத்துவமிக்க ஊர். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள். ஒரே ஒரு அக்கா, மோகன வள்ளி. பெயர் மற்றும் இல்லை பலவற்றில் எங்களுக்குள் ஒற்றுமை உண்டு, அதே போல் பல வேற்றுமைகளும் உண்டு.

ஒன்றும் பணக்கார வீடு கிடையாது, சாதாரணமான நடுத்தர குடும்பம் தான் இன்னும் சொல்லப்போனால் சிறு வயது ஞாபகங்கள் கொஞ்சம் கஷ்டமானவைதான். ஆனால் அவை தேவையில்லை இங்கே. படித்தது அப்பாவினுடைய பள்ளியில் எவ்வளவு நன்மைகள் உண்டோ அதே அளவு தீமையும் இருந்தது. ஓரளவுக்கு படிக்கக்கூடிய மாணவன் நான். படிப்பை தவிர விளையாட்டு, பேச்சு, ஓவியம் ஆகியவற்றிலும் ஆர்வம் இருந்ததால். படிப்பில் முதன்மையானவன் இல்லையே தவிர. என்றுமே நான் படிப்பில் பின் தங்கியதில்லை.

பத்தாம் வகுப்பில் நான் நிறைய மார்க் வாங்குவேன் என்று எல்லோரும் நினைத்த பொழுது, 80 சதவீதம் தான் வாங்கினேன். அதை விட முக்கியமான பன்னிரெண்டாம் வகுப்பில் 70 சதவீதம் வாங்கி பொறியியலின் அத்தனை வாய்ப்புக்களையும் நழுவ விட்டேன். இந்த முறை கூட நான் அதிக மார்க் வாங்குவேன் என்று எதிர்பார்த்தவர்கள் தான் அதிகம்.

பிறகு நான் வாங்கிய மதிப்பெண்ணுக்கு ஏற்ற மாதிரி கிறிஸ்துராஜ் கல்லுரியில் சேர்ந்தேன். கணிப்பொறி அறிவியல் படிக்க, இங்கே நான் கற்றுக் கொண்டது அதிகம். மூன்று ஆண்டுகள் படித்து முடித்து விட்டு நான் சென்றது புது டெல்லிக்கு வேலை வாங்குவதற்காக. அங்கே நான் தங்கியிருந்தது என்னுடைய சித்தியின் வீட்டில். சாப்பாடிற்கு, தங்குவதற்கு என்று ஒன்றுமே கொடுக்காமல் தான் இருந்தேன். இங்கே கற்றுக் கொண்டது அதிகம். வாழத் தெரிந்து கொண்டேன் என்றால் சரியாக இருக்கும்.

பிறகு அங்கிருந்து நான் வந்தது பெங்களுருக்கு, இங்கேயும் வேலை காரணமாகத்தான். இங்கே தங்கியது மாமாவின் வீட்டில். இங்கேயும் அனைத்தும் இலவசம். மிகவும் மகிழ்ச்சியான நாட்கள். பிறகு இப்போது கேன்பே சாஃப்ட்வேரில் வேலை பார்த்துக் கொண்டு புனேயில் இருக்கிறேன். இங்கே தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் நானே செலவழித்துக் கொண்டிருக்கிறேன் சொந்தக்காரர்கள் யாரும் அருகில் இல்லாத காரணத்தால்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

Popular Posts