In சுய சொறிதல்

அசமஞ்சங்கள் மற்றும் அம்மாஞ்சிகள்

இந்த தங்கர், குஷ்பு, சுகாசினி, கற்பு, கொம்பு பிரச்சனைகளால் எத்தனை பேர் லாபம் சம்பாதிக்கிறார்கள், ஆச்சர்யமாகயிருக்கிறது.

தங்கருக்கு, தன் படப்பிடிப்பை நிறுத்திய பெண்ணை பொதுவில் திட்டி தீர்த்ததால், அவர் படம் ஜெயாடிவிக்கு விற்கப்பட்டு தீபாவளியன்று வெளியானதில், நடந்த பிரச்சனைகளால் திரையறங்குகளிலும் கொஞ்சம் நல்ல வசூலில்.

குஷ்பு, மனோரமா, ஸ்ரீப்பிரியா உள்ளிட்டவர்களுக்கு தங்கர் விவகாரத்தில் தாங்கள் பணத்திற்காக நடிக்கவில்லை என்று தம்பட்டமடிக்கவும், தங்களை பொதுவில் திட்டினால் இப்படித்தான் நடக்கும் எனக்காட்டவும்.

இந்தியா டுடேவுக்கு, குஷ்புவை இந்த செக்ஸ் பற்றிய சர்வேவிற்கு பதிலளிக்க அழைத்ததால் நிறைய பிரதிகள் முன்பெப்போதுமில்லா அளவிற்கு விற்றுத்தீர்ந்தது. இன்னும் பிரச்சனையை வளர்த்தால் பிரதிகளின் எண்ணிக்கை கூடலாம்.

பதிலளித்த குஷ்பு நினைத்திருக்கலாம், தங்கர் பிரச்சனைக்கு பிறகு பெண்ணியவாதியாக தன்னைக் காட்டிக்கொள்ள கிடைத்த வாய்ப்பு என்று, இது தற்பொழுது பெண்களுக்காக ஒரு இயக்கம் தொடங்கும் அளவிற்கு வளரும் என்பது வேண்டுமானால் அடிஷினல் ப்ளஸ். அடுத்த ஆண்டு அதிமுகவின் ஆயிரம்விளக்கு டிக்கெட் கிடைத்தால் ப்ளஸ்ஸோ ப்ளஸ்.

திருமா, ராமதாஸ் போன்றவர்களுக்கு, ஒரு வழியாக தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ்க்குலப்பெண்களின் கற்பையும் காத்தமாதிரியும் ஆச்சு, அவங்க பேரு பத்திரிக்கையில் அவுட் ஆப் போகஸ் ஆகாம தடுத்தமாதிரியும் ஆச்சு.

பெண்ணியவாதிகளுக்கு, ஒரு வழியா ரொம்பநாளா கிடப்பில் இருந்த தங்கள் நீண்டகால கனவுகளை, எண்ணங்களாக மாற்றி பேப்பர்களும் பேனாக்களும் செலவுசெய்து எழுதி தீர்த்தாவது மக்களின் மத்தியில் எடுத்துரைக்க முடிந்தது.

ஆணியவாதிகளுக்கு, இது எப்படி ஆகப்போச்சு, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளா அடிமைப்படுத்தி வைச்சிருந்த ஒரு இனம் இறக்கை கட்டி பறந்துவிடும் நிலையை எப்படி அடக்குவது ஒன்றிரண்டு இறக்கைகளை பிய்த்து எறியலாமான்னு நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இறக்கையை அடியோடு பிய்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

சன்டிவி, ஜெயாடிவி போன்ற டிவிக்களுக்கு அதிகம் அலையாமல் அதேசமயம் தேடிவந்து விழும் பேட்டிக்களைப்போட்டு தாங்கள் சார்ந்த கட்சிகளின் நிலையை அடுத்த கட்சிக்கு எதிரான போராட்டமாக காட்ட முடிந்தது.

ஞாநி போன்ற சிந்தனை டாங்குகளுக்கு, சுஜாதா பாய்ஸ் படத்திற்கு வசனம் எழுத, தன் கோபக்கணைகளை தீம்தரிகிடவில் வைணவ சரணாகதி, இரண்டுமுறை இதய அறுவைச்சிகிச்சை, இன்னொருமுறை அட்டாக் வந்தால் என காத்திருந்து காரி உமிழ்ந்ததைப்போல பெண்ணியம் சம்மந்தமான தன் சிந்தனை சிகரங்களை காட்ட முடிந்தது. (உபயம் ஜெயஸ்ரீ)

சுகாசினி போன்ற பெண்ணிய சிந்தனை அருவிகளுக்கு, தமிழருக்கு கொம்பிருக்கிறதா, இல்லை தங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமான ஹாலிவுட் சார்ந்தவர்களுக்கும் மேற்கு நாகரீக மக்களுக்கு மட்டுமே கொம்பு முளைத்திருக்கிறதா என்ற ஆராய்ச்சி செய்ய முடிந்தது.

நம் போன்ற வலைபதிபவர்களுக்கு, தங்களின் பிரச்சனைசார்ந்த ஒரு விஷயத்தைப்பற்றிய கருத்துக்களை ஒரு பக்கமாகவோ, மற்றொருபக்கமாகவோ, ப்க்கமே இல்லமலோ வைத்து எழுதக்கற்றுக்கொள்ள உதவியது. எழுத்தின் பல்வேறு உச்சங்களை எட்ட முடிந்தது.

என்னைப்பொறுத்தவரை சாதாரண மக்கள் யாருக்கும் இதனால் ஒரு லாபமும் கிடைக்கப்போவதில்லை, அதனை அறிந்ததன் மூலமாகவோ இல்லை தங்கள் சார்ந்திருக்கும் நிலைப்பாடு வெளிப்படுமோ அது அவமானமோ என நினைத்து முகம் முடியிருக்கிறார்களோ என்னவோ, திமுக, அதிமுக, விஜயகாந்த், பெரும் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனாவாதிகள் வாய் பேசாமல் அப்படியே இருத்தலிலும் அவர்களுக்கு நன்மையிறுக்கிறது. ஆனால் சாதாரண மக்களுக்கு குழப்பமே மிஞ்சியிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களால் மக்கள் மனதில் ஒரு கருத்தை திணிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு சுத்தமாக கிடையாது, அது தங்கர் சொன்ன பணத்திற்காக நடிப்பவர்கள் விபச்சாரிகள் என்ற கருத்தோ, இல்லை குஷ்புவின் சர்வே பற்றிய கருத்துக்களோ, இல்லை ஞானி போன்றவர்களின் காரி உமிழ்வதோ, சுகாசினியின் கொம்பு பற்றிய கண்டுபிடிப்போ எதுவாக இருந்தாலும் சரி.

இந்தப்பிரச்சனை வருவதற்கு முன்னர் எனக்கிருந்த நடிகைகளைப்பற்றிய கருத்துக்களோ, தயாரிப்பாளர்கள் பற்றிய கருத்துக்களோ, சிந்தனை டாங்குகள், அருவிகள் பற்றிய கருத்துக்களோ, கற்பு, பெண்ணியம், ஆணியம், கொம்பு முழைத்தல், தமிழ்ப்பண்பாடு, கலாச்சாரம் பற்றிய என் கருத்துக்களும் அப்படியே இருக்கின்றன. அந்த சமயத்தில் மக்களின் மத்தியில் இருக்கும் கியூரியாசிட்டியை பயன்படுத்தி மீடியாக்கள், அரசியல்வாதிகள் விளையாடும் பணவிளையாட்டு இது என்பதைத்தவிர வேறு ஒன்றும் நினைக்கமுடியவில்லை. என்னைப்பொறுத்தவரை நான் இந்த விஷயத்தில் அதிகமாக சிந்தித்தது, கழுதைகள் மற்றும் எருமைமாடுகள், போல் நாமும் அசமஞ்சங்களும் அம்மாஞ்சிகளும் அப்படின்னு ஒரு கட்டுரை எழுதலாமான்னுதான். யாரும் வாங்கமாட்டாங்கன்னு அதையும் எழுதலை.

Related Articles

10 comments:

  1. இந்தியா டுடேவுக்கு, குஷ்புவை இந்த செக்ஸ் பற்றிய சர்வேவிற்கு பதிலளிக்க அழைத்ததால் நிறைய பிரதிகள் முன்பெப்போதுமில்லா அளவிற்கு விற்றுத்தீர்ந்தது. இன்னும் பிரச்சனையை வளர்த்தால் பிரதிகளின் எண்ணிக்கை கூடலாம்.
    இந்த செக்ஸ்சர்வே இதழின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தபடி சென்றவருட இதழ் உடனேவிட்டுத்தீர்ந்ததாம்.

    ஆனால் இந்த வருடம் குஷ்பு-வின் புண்ணியத்தில் முதல்பதிப்பு இதழ்கள் விற்று மறுபதிப்பு ஏதும் போட்டார்களோ என்னவோ!?

    பி.கு: அப்படில்லாம் எங்க நடந்திருக்கப்போறது... இந்தவிவகாரங்கல்ல கருத்துச்சொல்றதுக்கு தகுதியே: (இந்தியாடுடேயை படிக்காம) தங்களுக்குதோன்ற ஏதாவது சொல்லனும்...

    ReplyDelete
  2. Mohandoss,

    Super post!

    I could agree with most of your points.

    ReplyDelete
  3. நான் இந்தியாடுடே படிக்கலை எனக்குத்தோன்றியத்தைத்தான் சொன்னேன். ஒக்கேவா நான் கருத்து சொல்லலாமா? அன்பு.

    சுரேஷ் உங்கள் விமரிசனத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி.

    ReplyDelete
  4. ippidi yaruku enna payan endu ungalala alasi aaraya mudinthathu lol:-
    \\என்று, இது தற்பொழுது பெண்களுக்காக ஒரு இயக்கம் தொடங்கும் அளவிற்கு வளரும் என்பது வேண்டுமானால் அடிஷினல் ப்ளஸ்.\\i didn't knw this.

    ReplyDelete
  5. நான் இந்தியாடுடே படிக்கலை எனக்குத்தோன்றியத்தைத்தான் சொன்னேன். ஒக்கேவா நான் கருத்து சொல்லலாமா?

    அதானே அடிப்படைத்தகுதியே... நீங்க கலக்குங்க....

    ReplyDelete
  6. சிநேகிதி நான் அதை முன்னாடியே குறிப்பிட்டேன்.

    நம் போன்ற வலைபதிபவர்களுக்கு, தங்களின் பிரச்சனைசார்ந்த ஒரு விஷயத்தைப்பற்றிய கருத்துக்களை ஒரு பக்கமாகவோ, மற்றொருபக்கமாகவோ, ப்க்கமே இல்லமலோ வைத்து எழுதக்கற்றுக்கொள்ள உதவியது. எழுத்தின் பல்வேறு உச்சங்களை எட்ட முடிந்தது.



    நன்றி.

    அன்பு ரொம்ப தாங்ஸ்ங்கோ

    ReplyDelete
  7. //நான் இந்த விஷயத்தில் அதிகமாக சிந்தித்தது, கழுதைகள் மற்றும் எருமைமாடுகள், போல் நாமும் அசமஞ்சங்களும் அம்மாஞ்சிகளும் அப்படின்னு ஒரு கட்டுரை எழுதலாமான்னுதான்.// அப்படி போடு, இப்பதான் சூடி பிடிக்குது, என்ன இருந்தாலும், ஆண்பிள்ளை, ஆண்பிள்ளை தான்:-)

    ReplyDelete
  8. //என்னைப்பொறுத்தவரை நான் இந்த விஷயத்தில் அதிகமாக சிந்தித்தது, கழுதைகள் மற்றும் எருமைமாடுகள், போல் நாமும் அசமஞ்சங்களும் அம்மாஞ்சிகளும் அப்படின்னு ஒரு கட்டுரை எழுதலாமான்னுதான். யாரும் வாங்கமாட்டாங்கன்னு யும் எழுதலை//

    என்னை வம்புக்கு இழுப்பதை கடுமையாக கண்டிக்கிறேன். தூண்டி விடும் வெளிகண்டரையும் சேர்த்துத்தான் - நோ ஸ்மைலி :-)
    «Ð ºÃ¢, ±ýɧÁ¡ Àì¸òÐìÌ ¬Â¢Ãõ åÀ¡ö ¦¸¡Îò¾Á¡¾¢Ã¢ ÒÄõÒÈ£Õ, ±øÄ¡õ Å¢„¾¡Éõ¾¡ý. À¢Ç¡ìÌõ, þ¨½Â¾Çí¸Ùõ ±ÐìÌ þÕìÌ?
    Å¢¨ÃÅ¢ø «. « ±ØÐí¸û.

    ReplyDelete
  9. //அப்படி போடு, இப்பதான் சூடி பிடிக்குது, என்ன இருந்தாலும், ஆண்பிள்ளை, ஆண்பிள்ளை தான்:- //

    வெளிக்கண்ட நாதரே போட்டுக்கொடுத்துட்டீங்க பார்த்தீங்களா, திருச்சிக்காரன் வேலையை காட்டீட்ங்க :-)

    //அது சரி, என்னமோ பக்கத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தமாதிரி புலம்புறீரு, எல்லாம் விஷயதானம்தான். பிளாக்கும், இணையதளங்களும் எதுக்கு இருக்கு?
    விரைவில் அ. அ எழுதுங்கள். //

    உஷா நிச்சயாமா எழுதுறேன்.

    ReplyDelete

Popular Posts