நானெல்லாம் கவிதை எழுதினா பிரளயமே வரும்.(நாலே நாலு வார்த்தையெழுதி பெரிய பிரச்சனைகள் எல்லாம் கிளப்பியிருக்கிறேன்.) இல்லைன்னா பிரளயம் வந்தாத்தான் கவிதையே எழுதுறது வழக்கம். இப்ப ஏன் எழுதினேன்னா ஏதோ கவிதைப்போட்டின்னு சொல்லச்சொல்லோ, காசு வேற கொடுக்குறதா சொல்லச்சொல்லோ, நான் என் பின்நவீனத்துவ மூளையை தட்டிவிட்டு எழுதிக்கிழித்த கவிதைகள் இவை.
என் கனவுகள்
------------
கண்கள் முழுவதும் கனவுகள்,
வண்ணங்களாய் இன்றி
நடுங்கும் நினைவுகளாய்
சிலசமயம்
காற்றின் நெருக்கமாய்
இரவின் அடர்த்தியாய்
அன்பின் உணர்ச்சியாய்
பலசமயம்
கானலின் நீராய்
இரவின் நிழலாய்
தூரத்து வெய்யலாய்
கனவுகள்
சுமக்கும் எல்லையற்ற கணங்கள்
சுகங்கள்.
தொலைந்துபோன சுவடைப் போல
நிகரில்லா வானத்தைப்போல
கனவுகள்
மௌனக்கதவில்
முன்னறிவிப்பில்லா அறிவிப்புகள்
தன்னந்தனியாய்,
எந்தக் கணக்கானாலும் எத்தனை எதிர்பார்ப்புகள்
யௌனவத்தின் அழகென்னும்
புதைகுழியாய் கனவுகள்
பச்சைமரத்தின்
ஆழமாய் விமர்சனத்தின் கால்களை
அடக்கிவிடும் நினைவுகளை
கண்டுபிடிக்கக் கனவுகள்
பார்வையினின்றும்
வார்த்தைகளினின்றும்
உணர்ச்சிகளிலினின்றும்
மாறுபடும்
வாசிக்கப்படாத
என் கனவுகள்.
-------------------------------
விபச்சாரி
--------
வானவெளியின் நீலநிறத்தில்
நினைவில் வந்தது
நேற்றைய இரவு
படுக்கையறையின்
பாதி ஒளியில்
வெற்றுடல்களின் வெம்மைப் பரிமாற்றம்
மூங்கில் காட்டின்
சடசடக்கும் சப்தத்தில்
நினைவில் வந்தது
நேற்றைய இரவு
சப்த நிசப்தத்தின்
சங்கட ஓசைகள்
ஆர்ப்பரிக்கும் அலைகடலின்
வெண்நுரையில்
நினைவில் வந்தது
நேற்றைய இரவு
தேடலில் சிக்கிய
மயிறிழைகள்
அவசரகதி வாகனம்
உரசிச் செல்லுகையில்
நினைவில் வந்தது
நேற்றைய இரவு
கீறிச்சென்ற
நகத்தின் பிம்பங்கள்
இன்னும் இன்னும்
நினைவில் வந்தன
நேற்றைய இரவின்
நிழற்படமாய் பல
உரிமையாய்
வரமறுக்கிறது
அவள் முகம் !!!!
------------------------------
புன்னகைகள்
-----------
மனமுடைந்த நிலையில்
நினைவுகள் சொல்ல மறுக்கும்
நாம் காதலில் சுகித்த கணங்களை
சீறிவரும் என் கோபக்கணைகள்
சிதறிப்போகும் உன் புன்னகையால்
தொடுதலுக்காக
காத்திருந்த தருணத்தில்
ஏதேதோ காரணங்களுக்காக
என் மறுத்தலித்தலின்
அத்துனை ரணங்களையும்
தாங்கிக் கொள்ளும் விழுதுகளாய்
உன் புன்னகைகள்
அடுத்த வீட்டுக்காரனின்
வீரியத்தில் என் இயலாமையைக்
காணும் ஆத்திரத்தில்
சிதறும் மனப்பக்கங்களை
சேகரிக்கும்
உன் புன்னகைகள்.
உன் புன்னகைகள்
நிகழ்த்தும்
மாற்றங்களறிந்தும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
எங்கேயே தொலைந்துபோன
என் புன்னகைகளை
-------------------
நாங்கிழிச்ச கவிஜைகள்
பூனைக்குட்டி
Wednesday, November 23, 2005
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
-
"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...
-
வாங்க என்ன வெளியிலேயே நின்னுட்டீங்க, உள்ள வாங்க என்னடா இந்த வீடு கூட அமைதியா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? ம்ஹும் என்ன செய்றது அப்படியாய்...
Neenga Kavithaiyai vitudalaam. Mathathu ellam unga kavithaiyai vida nalla ezuthareenga - katturai, kathai etc. Atula concentrate pannunga :-)
ReplyDeleteAnbudan, PK Sivakumar
கதை, கவிதையின்னு கிளப்புறீங்க போங்க! திருச்சிய்யில எந்த பக்கம்?
ReplyDeleteநன்றி PKS நிச்சயமா செய்றேன். கவிதையெழுதி கிழிக்காம கதை கட்டுரை எழுதிக்கிழின்னு சொல்றீங்க, கவிதையைவிட கதை கட்டுரை நல்லா இருக்குன்னு சொன்னீங்க பார்த்தீங்களா அதுல உள்குத்து எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன். :-) இதுல எதாவது உருப்புடியா செய்யப்பார்க்கிறேன் மீண்டுமொறு முறை நன்றி PKS.
ReplyDeleteவெளிக்கண்டநாதரே, நீங்கத்தான் நம்ம வெப்சைட் எல்லாம் பார்த்துருப்பீங்களே, இருந்தாலும் சொல்றேன். நமக்கு BHEL.