வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?
இதைப்பத்தி நான் ஏன் எழுதுறேன்னா, முதல்ல நான் இதைப் போல் சம்பாதிப்பதற்கு என்ன செய்யணும்னு தேடினேன், எனக்கு தமிழ் வலைப்பூக்களில் விவரம் எங்கிருக்கிறதுன்னு தெரியலை. அதான் நான் பட்ட கொஞ்சம் சிரமத்தை இனிமேல் வர்றவங்க படாமயிருக்குறதுக்காக ஒரு பதிவு. உஷா கூட ஒரு பதிவின் பின்னூட்டத்தில் பினாத்தல் சுரேஷிடம் கேட்டிருந்தார்கள். பினாத்தலார் கவனிக்கலையோ இல்லை தனிமடலிட்டாரோ நான் அறியேன் பராபரமே. ஏதோ என்னால் முடிஞ்சது போட்டுட்டேன்.
முதல்ல ஒரு நம்பிக்கை வார்த்தை.
கூகுளிருக்க பயமேன், ஆமாங்க நான் கூகுளைப் பயன்படுத்தி வலைத்தளத்தின் மூலமாக பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்கிறேன்.
முதல்ல கூகுள் கிட்ட நான் பார்த்த வரைக்கும் ஒரு பிரச்சனை தமிழ் வலைப்பூவைப்பயன்படுத்தி இந்த சேவையை முதலில் பெறமுடியாது.(அதனால ஒரு டிரிக் செய்யணும் இதுக்கு அதையும் சொல்றேன் பின்னாடி). அதனால் ஒன்றும் வருத்தப்படாதீங்க. ஒரு ஆங்கிலப்பதிவைத் தொடங்குங்க அதில ஒரே ஒரு பதிவை போட்டு வைச்சிருங்க. எடுத்துக்காட்டுக்கு நான் பயன்படுத்தின ஆங்கிலப்பதிவு ஜாவா பையன் ( எல்லாம் ஒரு விளம்பரம்தான்.)
பின்னாடி அந்த ஆங்கிலப்பதிவின் டெம்ப்ளேட்டிற்கு வந்தால், எடிட் கரென்ட், ஆட் சென்ஸ், பிக் நியூ அப்பிடின்னு மூணு அய்டம் இருக்கும். அதில ஆட் சென்ஸ் அப்பிடிங்கிற அய்டத்தை செலக்ட் பண்ணுங்கோ. பண்ணீங்கன்னா உங்களுக்கு ஒரு பார்ம் வரும் அதில் உள்ள அய்டத்தையெல்லாம் பில்லப் பண்ணுங்கோ, கூகுள் பணம் கொடுக்கும்ங்கிறதால உண்மையான விவரம் கொடுத்தால் நலம். (நான் கம்பெனி அட்ரெஸ் கொடுத்துருக்கேன் போன் நம்பர் உட்பட.)
அப்புறம் சரியான விவரம் எல்லாம் கொடுத்து சப்மிட் பண்ணீங்கன்னா, அடுத்த ஸ்கீரினுல நீங்க எந்த மாதிரியான விளம்பரத்தை உங்க வலைத்தளத்தில் போடப்போறீங்கன்னு கேட்பாங்க, விவரமானவங்க அவங்க வலைத்தளத்தின் கலருக்கு ஏற்ற மாதிரி விளம்பரத்தை தேர்ந்தெடுக்கலாம். என்னை மாதிரி முட்டாளுங்க அவங்க கொடுக்குற டிபால்ட் விளம்பரத்தையே ஒத்துக்கிட்டு ஸேவ் அப்பிடின்னு கொடுக்கலாம். இது முடிஞ்சிருச்சுன்னா எப்பவும் போல திரும்ப பப்ளிஷ் பண்ண கேட்பாங்க பண்ணீருங்க. அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு முதல் கட்டம்.
இனிமேல் இரண்டாம் கட்டம்.
அதாவது இனிமேல் நீங்க சொன்ன மெய்ல் அட்ரஸ்க்கு ஒரு மெயிலை கூகுள் அனுப்பும் எப்பிடின்னா இப்படி,
Hello Mohandoss Ilangovan,
Welcome to Google AdSense. In order to verify your email address and
submit your information for review, please click on the link below.
https://www.google.com/adsense/c?u=1461447&k=0x503
This link will take you directly to an email confirmation page. If it
does not, please copy and paste the full URL into your web browser's
address box and hit the "Enter" key on your keyboard. Once you confirm
your email, we'll review your application and email you after we check
your site for AdSense eligibility. If you're accepted, you'll then be
able to log in to your account at https://www.google.com/adsense, or
through the application or service from
which you originally registered. Please use the email address and
password you
submitted with your application.
இதில் சொல்லப்பட்டிருக்கும் உரலை கிளிக்கினால் மட்டும் போதும்(உங்களுடையதை மட்டும்; என்னுடையதை வேண்டாம் நான் உரலை மாற்றியிருக்கிறேன் இந்த உரல் போகாது) அது ஒரு பக்கத்தை திறக்கும் அதன் பின்னர் கூகுள் உங்கள் பக்கத்தைப் பற்றி விவரங்களை ஆராய்ந்து உங்கள் வலைப்பூவில் தங்கள் விளம்பரத்தை போடலாமா அப்பிடின்னு ஆராய்ச்சி செய்வாங்க. (தமிழ்ல பதிவிருந்தா மட்டும் தான் பிரச்சனை. நானெல்லாம் இரண்டு தடவை முயற்சி பண்ணேன் தமிழில், ரெண்டு தடவையும் அப்ளிகேஷன் ரிஜக்ட் ஆகியிருச்சு ஆனா நம்ம ஆங்கில பதிவு ஓக்கே ஆயிருச்சு அதுமாதிரி.)
இரண்டு நாள்ல உங்களுக்கு திரும்பவும் ஒரு மெயில் வரும் அதாவது உங்களோட அப்ளிகேஷன் ஓக்கேஆயிருச்சா இல்லையான்னு பதில் அனுப்புவாங்க. ஆங்கிலம்னா அப்ரூவ் ஆயிரும் கவலைப்படாதீங்க.
அப்ரூவ் ஆச்சின்னா இப்படி ஒரு மெயில் வரும்.
Congratulations!
Your Google AdSense application has been approved. Your account is now
activated, and Google ads are being delivered to your pages.
You can log in to your AdSense account at any time, to make changes to
your ad layouts or to view your activity reports.
------
Make changes to your Google ads:
Log in to your account at https://www.google.com/adsense?hl=en_US, or
through the application or service from which you originally
registered. Select from the available color and layout options to
select an ad format that works best for your web pages.
-------------------------
இப்ப உங்களோட இரண்டாவது கட்டம் முடிஞ்சிருச்சு மூணாவது தான் முக்கியமான கட்டம் அதாவது உங்களோட தமிழ் பதிவில் வரும் வாசகர்களின் வருகைக்கும் சேர்த்து பணம் சம்பாதிப்பது பற்றி.
அதாவது நீங்க ஒரு ஆடை செலக்ட் செய்தீர்களே அது ஒரு ஜாவா ஸ்கிரிப்டை உங்கள் டெம்ப்ளேட்டில் உருவாக்கும் நீங்கள் அதை வைத்து இரண்டு விஷயங்கள் செய்யணும். முதல் வேலை,
div id="main" div id="main2"
script type="text/javascript"
google_ad_client="ca-pub-5614942101384756";
google_ad_width=468;
google_ad_height=60;
google_ad_format="468x60_as";
google_ad_type="text";
google_color_border="336699";
google_color_bg="FFFFFF";
google_color_link="0000FF";
google_color_url="008000";
google_color_text="000000";
/script
script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"
/script
இது தான் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆட் ஸ்கிரிப்ட் (தயவு செய்து இதை காப்பி செய்யாதீர்கள் இல்லாவிட்டால் எனக்குத்தான் உங்கள் பணம் முழுக்க வரும். இதில இந்த நம்பர் தான் ca-pub-5614942101384756 முக்கியம் இதைவச்சுத்தான் உங்கக்கிட்டேர்ந்து வர்றாங்கன்னு கண்டுபிடிப்பாங்க, அதனா எப்ப காப்பி பண்ணி எத்தனை தடவை எங்கப்போட்டாலும் இந்த நம்பர் தப்பாகாம பார்த்துக்கோங்க. )
முதலில் இதை உங்கள் ஆங்கிலப்பதிவிலிருந்து எடுத்து, தமிழ் பதிவில் இடுங்கள். ஆங்கிலப்பதிவில் எங்கிருந்து எடுத்தீர்களோ அங்கேயே.
அதாவது உங்கள் தமிழ் டெம்ப்ளேட்டின் இந்த இடத்திற்கு கீழே,
Begin #content
div id="content"
Begin #main
div id="main" div id="main2"
//here//
{ நான் < > இந்தக் குறிகள் பயன்படுத்த முடியாத காரணத்தால் நீக்கியிருக்கிறேன் நீங்கள் காப்பி செய்து போடும் பொழுது அதை அப்படியே போடுங்கள் அதாவது <> குறிகளை நீக்காமல். }
முதல் காரியம் முடிந்துவிட்டது. பின்னர் உங்கள் தமிழ் வலைப்பூவில் முன்பே சொன்னதைப்போல டெம்ப்ளேட்டிற்கு வந்தால், எடிட் கரென்ட், ஆட் சென்ஸ், பிக் நியூ அப்பிடின்னு மூணு அய்டம் இருக்கும். இதில் ஆட் சென்ஸை தேர்ந்தெடுங்கள் இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் முதலில் ஒரு இமெயில் முகவரியும் பாஸ்வேர்டும் கொடுத்தீர்கள் அல்லவா அதையே இங்கே கொடுத்து உள்ளே செல்லூங்கள் பின்னர் ஆங்கில பதிவில் சொன்னது போல் உங்களுக்கு பொறுத்தமான ஆடை தேர்ந்தெடுத்தால் முடிந்தது. இனி சம்பாதிக்கவேண்டியது தான் பாக்கி.
https://www.google.com/adsense?hl=en_US
இந்த இடத்துக்கு வந்து லாகின் ஆகி பாத்தீங்கன்னா இப்படி கொடுப்பாங்க,
ஒரு நாளில் நம்ம இம்ப்ரஷன் அதிகம் ஆயிருச்சு. டாலர் கணக்கும் ஆரம்பிச்சுருச்சு. ரொம்ப சந்தோஷம்.
இதிலையும் இரண்டு விஷயம் இருக்கு இரண்டு விதமா நமக்கு பணம் கிடைக்கும் முதல் முறை நாம் போட்டுறுக்குற ஆடைக் கிளிக் பண்ணி யாராவது உபயோகிச்சாங்கன்னா காசு கிடைக்கும் இன்னொன்னு நம்ம வலைப்பூவிற்கு யாரும் வந்தாலும் அந்த கவுண்ட் படியும் காசு கிடைக்கும் அதை அவங்க இம்ப்ரஷன்னு சொல்றாங்க இன்னிக்கு காலையிலேர்ந்து 19 இம்ப்ரஷன் கிடைச்சிருக்கு எனக்கு. இது ஆயிரமா ஆனா டாலர் கிடைக்க ஆரம்பிக்கும் 50$ கிடைத்தால் பணத்தை கூகுளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இதன் காரணமாவே திரும்பவும் பழைய மாதிரி பதிய ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சேன் பின்னாடி வேண்டாம்னு உட்டுட்டேன் அந்த ஐடியாவை. நமக்குத்தான் பிரச்சனை தமிழ் வலையில் குஷ்பு, சுகாசினி, ராமதாஸ், திருமா, ரஜினி, முசலமான் பத்தி எழுதினா சீக்கிரமே 50$ கிடைச்சிரும். :-)
டவுட் இருந்தால் கேட்கலாம். என்னால் முடிந்தால் தீர்த்து வைக்கிறேன்.
mohandoss.i @ gmail.com
நான் கூறிய விஷயங்களில் தவறிருந்தாலும் கூறினால் திருத்திக்கொள்கிறேன். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படிங்கறது தான் நம்ம கொள்கை அதான் இவ்வளவு.
வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?
Posted on Tuesday, November 29, 2005
வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?
பூனைக்குட்டி
Tuesday, November 29, 2005
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
என்னிடமும் இதுபற்றி நண்பர்கள் விசாரித்திருந்தார்கள். ஆனால் எனக்கு இதுபற்றி தெரியாததால் அப்படியே விட்டுவிட்டேன்.
ReplyDeleteமிகவும் நல்ல பதிவு.
நன்றி மோகன். உபயோகமான விஷயம்.
ReplyDeleteஉங்க ஈமெயில் ஐடி அனுப்புங்க, ஒரு சந்தேகம் கேட்கணும்.
ReplyDeletemohandoss.i @ gmail.com
ReplyDeleteI already gave it in my post. :D
நன்றி தமிழ்வாணன், Kay Yes.
ReplyDeletethank you mohan
ReplyDeleteit works and it is a very useful information you have given to fellow bloggers....
நன்றிங்க முத்து, உங்களைப்போன்றவர்களுக்கு உதவினதில் சந்தோஷமே.
ReplyDeletethanks for the post
ReplyDeleteநன்றிங்க சிகிரி
ReplyDeleteமோகன்
ReplyDeleteஇதன்மூலம் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினம் என்றாலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில பதிவுகளில் விளம்பரங்கள் கண்ணில் படுகின்றன.உங்கள் ஆராய்ச்சி அறிவு போற்றத்தக்கது.
நானும் முதலில் தமிழ்பதிவை மட்டும் கூகிள் கிட்டே அனுப்பி ஏமாந்தேன்.நீங்கள் கிரிமினலா ஆங்கில பதிவை பயன்படுத்தினீங்க பாருங்க..அங்கத்தான் நிக்கறான் மோகன்தாஸ்( சும்மா கிண்டல்தான்)
பாத்தீங்களா கத்துக்கொடுத்தவுடனே கிரிமினல்னு சொல்லீட்டீங்க. :-)
ReplyDeleteன்ன தலை அப்படி சொல்லீட்டீங்க..ஒரு கிண்டல்தான்....இதுக்கே வருத்தப்பட்டீங்கன்னா என்னுடைய இன்றைய பதிவை பத்தி என்ன சொல்லுவீங்க?
ReplyDeleteThank you very much Mr.Mohandhass,
ReplyDeletefor your valuable information.
முத்து பார்த்தேன் நல்லா விளையாடியிருந்தீர்கள், நாமக்கல் சிபி நன்றி.
ReplyDeleteதகவலுக்கு நன்றி மோகன்தாஸ்
ReplyDeleteதமிழ் டெம்ப்ளேட்டில் எல்லாம் உள்ளே போகத் தேவையில்லை.
ReplyDeleteஉங்கள் ஆங்கிலப்பதிவில் ஆட்சென்ஸ் உட்கார்ந்ததும், நேரடியாக தமிழ் டெம்ப்ளேடிற்கு வந்து ஆட்சென்ஸை க்ளிக் செய்து லாக்-இன் செய்து, முதலில் ஒரு இமெயில் முகவரியும் பாஸ்வேர்டும் கொடுத்தீர்கள் அல்லவா அதையே இங்கே கொடுத்து உள்ளே செல்லூங்கள் பின்னர் ஆங்கில பதிவில் சொன்னது போல் உங்களுக்கு பொறுத்தமான ஆடை தேர்ந்தெடுத்தால் முடிந்தது. இனி சம்பாதிக்கவேண்டியது தான் பாக்கி.
அதாவது டெம்ப்ளேட்டில் எல்லாம் போய் நகல்-ஒட்டல் எல்லாம் தேவையில்லை. இதைத்தான் நான் இப்போது அதாவது ஜனவரி 8, 2006 அன்று செய்தேன். வந்து விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பயனுள்ள பதிவு.ஆனால் நமக்கு மனசுக்கு பிடிச்ச பதிவுக்கு பின்னூட்டம் போடற ஆனந்தம்தானுங்க.அத்தி பூத்த மாதிரி அப்பப்ப ஏதோ உளறவேண்டியது.நேரம் கிடைச்சா இனி இதனையும் முயற்சி செய்ய வேண்டியதுதான்.மீண்டும் நன்றி.
ReplyDeleteநம்மள மாதிரி பொதுநலவாதிங்களுக்கு(!)
ReplyDeleteபணம் பண்ண கத்துகுடுத்த நின் புகழ் வாழ்க..!!
ரொம்ப நன்றி மோகன்தாஸ் சார்...இது மிகவும் இலகுவான மற்றும் பாதுகாப்பான வழி என்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்..!
ReplyDeleteநலமா மோகன் தாஸ்?
ReplyDeleteஎப்பவோ நீங்க போட்ட பதிவுக்கு இப்ப தொடுப்பு கொடுத்துள்ளேன்.
http://parvaiyil.blogspot.com/2011/09/blog-post_18.html