அது நடந்து இரண்டாண்டு ஆகியிருக்கும், சந்திரா கண்கலங்க தன் படிப்பை முடித்துவிட்டு தன் அண்ணனுடன் சென்ற நாள் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. அதற்கு பின் சில மாதங்கள் அவளுடன் தொலைபேசித்தொடர்பு இருந்து வந்தது. அதற்குப்பின்னர் என் வேலை காரணமாக புனேவிற்கு மாறியதிலிருந்து தொடர்பில்லாமல் போய்விட்டது. ஆனாலும் ஒவ்வொருமுறை இணையப்பக்கங்களில் ஈழத்தமிழர்களுடன் உரையாடும்பொழுதோ இல்லை ஈழத்தமிழை உரைநடையில் படிக்கும் பொழுதோ சந்திராவின் ஞாபகங்கள் வராமல் இருந்ததில்லை.
எங்கள் வீட்டில் நான் புனேவிற்கு வந்ததும் இவ்வளவு தூரம் வரமுடியாதென்று சொல்லி பெங்களூர் வீட்டைவிற்றுவிட்டு சொந்த ஊரான காரைக்காலிற்கே குடிபோய்விட்டார்கள். ஒரு தீபாவளி விடுமுறையில் வீட்டிற்கு வந்தபொழுது பிரான்ஸில் இருந்து வந்த அப்பா வழி மாமா, என்னை பிரான்ஸ் வந்துவிடுமாறு வற்புறுத்த நானும் சிறிதுகாலம் வெளிநாட்டில் வேலைசெய்துவிட்டு வந்தால் இந்த தொல்லை பிடித்த ஐடி வேலையை விட்டுவிட்டு, ஏதாவது ஒரு பெரிய கல்லூரியில் லெக்சரராய் சேர்ந்துவிடும் எண்ணமும் இருந்தது. அதுவுமில்லாமல் நான் பிறந்தது காரைக்கால் என்பதால் ஏற்கனவே பிரான்ஸ் நாட்டு பிரஜையாகத்தான் இருந்தேன். அதாவது என் அப்பா தன் இந்தியஉரிமையை விட்டுத்தர மறுத்துவிட்டாலும் அம்மா இன்னும் பிரான்ஸ் தந்திருந்த பிரஜா உரிமையின்படி பிரஞ்ச் பிரஜையாக இருந்தார்.
அதனால் தஸ்தாவேஜ்கள் எல்லாம் சீக்கிரமே நகர ப்ரான்ஸ் நாட்டிற்கான விசாவும் விரைவாகவே கிடைத்தது. ஏற்கனவே பிரான்ஸில் இருந்த மாமாவின் வீட்டிற்குத்தான் போயிருந்தேன். அந்த வீட்டில் எனக்கு முறைப்பெண் ஒருத்தியும் இருந்தாள். மனது முழுவதும் சந்திராவேயிருந்ததால் மாமா பெண் சுமதியைப்பற்றி நினைத்துக்கூட பார்க்கவேயில்லை. நான் முன்பே சிஸ்டம் சைட் புரோக்கிராமில் வேலை செய்துகொண்டிருந்ததால் அத்துனை தூரம் பணிசார்ந்த பிரச்சனைகள் இல்லை. பள்ளிப்படிப்பில் ப்ரெஞ்சை ஒரு பாடமாக படித்திருந்ததாலும் நான் ப்ரான்ஸில் வாழ்வதற்கான பிரச்சனை எதையும் சந்திக்கவில்லை. இங்கே வந்தது செங்கன் விசா என்பதால் ஆறுமாதம் கழித்து வந்த விடுமுறையில் ஐரோப்பிய யூனியனில் இருந்த அத்தனை நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுவந்திருந்தேன்.
ஜெர்மனி, இத்தாலி, ஸ்விஸ், இங்கிலாந்து எல்லா நாடுகளையும் சுற்றிவிட்டு கடைசியாக பிரான்ஸை சுற்றிப்பார்க்க வந்திருந்தேன். ப்ரான்ஸ் ஒரு அற்புதமான நாடு, அதைப்போலவே மக்களும். நான் முதன்முதலில் பரியில் இறங்கியதிலிருந்தே அந்த மக்களஇன் பழக்கவழக்கங்கள் ஆச்சர்யத்தை அளஇத்திருக்கின்றன. அந்த நாட்டு மக்களின் நாட்டுப்பற்று தீவிரமானது. ப்ரெஞ்ச் மொழிமேல் அந்த மக்கள் கொண்டிருந்த ஈடுபாடு அலாதியானது. குதிரை வண்டிக்காரனிடம் பேசும் மொழி ஜெர்மன் என்றும், தொழிலாளியிடம் பேசுவதற்கான மொழி ஆங்கிலமென்றும் காதலியிடம் பேசும் மொழி ப்ரெஞ்ச் என்றும் விளையாட்டாக உடன் வேலைசெய்யும் நண்பர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். லூர்து மியூசியம், நெப்போலியனின் அரண்மனை முதற்கொண்டு பலவற்றை அன்று பார்த்துவிட்டு நான் தோரபெல் வந்தேன். அதைப்பார்த்துவிட்டு அதன் பிரமாண்டத்தில் வாயை மூடயியலாமல் இருந்தபொழுதுதான் அவளைப்பார்த்தேன் ஆனால் முதலில் தோற்றமயக்கம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவளாய் வந்து அறிமுகப்படுத்திக் கொள்ளத்தான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டேன்.
"ஏய் மோகன் நீங்கள் எப்பிடி இங்க?" என் கண்களை என்னால் நம்பவேமுடியவில்லை.
சிறிதுநேரம் நன்றாய் விழித்துவிழித்து பார்த்துவிட்டு,
"ஏய் சந்திரா நீ எங்க இங்க, சொரூபன் எப்படியிருக்கான். கல்யாணமாயிருச்சா உனக்கு" எனக்கு நாங்கள் பெங்களூரில் மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருந்தது நினைவில் வந்தது. இன்னும் அப்படியேத்தான் இருந்தாள், எனக்கென்னவோ அவள் கண்களில் பிரகாசம் கூடியிருப்பதாய்ப்பட்டது.
"இல்லை இன்னும் ஆகலை சொரூபன் அண்ணா சுகமா இருக்கிறான்; அவனும் இங்கதான் இருக்கிறான். அது சரி நீங்கள் இங்க என்ன செய்யுறங்கள்" சந்திரா பேச முன்பைப்போல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் முன்னால் இரண்டு கைகளையும் அசைத்தவளாய் என் கவனத்தைக் கலைத்தாள்
"நான் உன்கிட்ட முன்னயே சொல்லியிருந்தேன்ல, எங்கம்மாவிற்கு பிரெஞ்ச் ஸிட்டிஷன்ஷிப் இருக்குன்னு. அதான் கொஞ்சநாள் பிரான்ஸ் வந்து நிறைய சம்பாதித்துவிட்டு. இந்தியா போய் செட்டில் ஆய்டலாம்னு இங்கே வந்தேன். நான் உன்னை இங்கே எதிர்பார்க்கவேயில்லை"
நான் சொல்லிக்கொண்டிருந்ததை ஆர்வமாய்க் கேட்டவள்.
"உங்கட அக்கா மோகனா எப்பிடியிருக்கிறா?"
"அவளுக்கென்ன கல்யாணமாயிருச்சு, அமேரிக்க மாப்பிள்ளை என் சொத்தில் பாதியை எடுத்துக்கிட்டு அமேரிக்கா போய் செட்டில் ஆய்ட்டா." சொல்லிவிட்டு நான் சிரிக்க முதலில் சிரித்தவள்.
"விளையாட்டுக்குக்கூட அப்படி சொல்லாதயுங்கோ மோகன். அக்காக்கு செய்தால் உங்களுக்கு இரண்டு மடங்காய் திரும்பக்கிடைக்கும்."
"ஏய் அப்ப உன்னைக் கல்யாணம் பண்ணிக்க உங்கண்ணன் நிறைய வரதட்சணை தருவான்னு சொல்லு." கேட்டுவிட்டு அவளின் பதிலுக்காய் காத்திருந்தேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான் அவளிடம் காதலுக்காக வேண்டினேன். இதைக்கேட்ட அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள் பிறகு வேறு பக்கம் முகத்தை திருப்பியவளாக,
"மோகன் சொரூபனை நீங்கள் இப்பப் பார்த்தால் நம்பவேமாட்டீங்கள். இங்க ஒரு ஸாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஒரு வருஷத்திலேயே நாங்கள் எங்கள் உறவினர்கள் வழியாக இங்கே வந்திட்டம். முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்ததுதான் ஆனால் இப்ப எல்லாம் பழகிட்டுது..."
அவள் மறைமுகமாக இந்த விஷயத்தைப்பற்றி பேசாதீர்கள் என்று சொல்வதாய்ப்பட்டதால் நானும் விட்டுவிட்டேன். பிறகு நாங்கள் தோரபெல் மேலேயிருந்து கீழிறங்கி வரும் பொழுது எங்களை வரவேற்ற நபரை எனக்கு நிச்சயமாய் அடையாளம் தெரிந்தது. அது சொரூபன்தான் நன்றாய் சதையடித்திருந்தான். முதலில் என்னைப்பார்த்து வியந்தவனாய். 'மோகனண்ணா நீங்கள் எப்பிடி இங்க நிச்சயமாய் னஉங்களை நான் இங்கே எதிர்பார்க்கவேயில்லை. சந்திராவை பார்த்தனீங்களோ?'ன்னு கேட்டதில் நான் வியந்துபோனேன். பின்னே அச்சு அசலாய் அமேரிக்க அக்சென்டில் சொரூபன் பேச என் புருவங்கள் விரிவடைவதை தவிர்க்கவே முடியவில்லை. நானும் திறமையைக்காட்ட சொரூபா நானும் அப்படித்தான். உன்னை இந்த நிலையில் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறதுன்னு ப்ரெஞ்சில் சொல்ல. எல்லாம் ஆண்டவன் அருள் அண்ணே, கதிர்காமக்கந்தன் அருள். வாங்க நமக்குத்தெரிந்த கடையொன்னு பக்கத்தில் இருக்கு அங்கப்போய் பேசலாம். அப்படின்னு அவனும் தெள்ளத் தெளிவான ப்ரெஞ்சில் சொல்ல எனக்கு நான் இருந்த இடம் லேசாய் ஆடுவதைப்போல் இருந்தது. சத்தியமாய் சந்தோஷத்தில் தாங்க.
நாங்கள் ஒருவழியாய் சொரூபனின் ஈழ நண்பன் ஒருவனுடைய கடைக்கு வந்திருந்தோம். சொரூபன் என்னை தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்த எனக்கு கிடைத்த மரியாதை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இந்திய அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் சம்மந்தம் கிடையாது என்பதில் அவர்களுக்கு இருந்த நம்பிக்கை அளவிடமுடியாதது. சொரூபனையும் சந்திராவையும் தவிர்த்து எனக்கு ஈழத்தைப்பற்றி தெரிந்தது கையளவே. இதன் போன்ற காரணங்களால் முன்பே மனதில் விசுவரூபமெடுத்திருந்த ஈழத்தமிழர்களைப்பற்றிய நல்லெண்ணம் பின்பு வாமன ரூபம் கொண்ட மகாப்பிரபு இரண்டடியை அளந்துவிட்டு மூன்றாம் அடிவைக்க நிலம் கேட்ட பொழுது தன் தலையைக் கொடுத்த மகாபலியைப்போன்று என் திருவடியைக்காட்டி எந்தன் உள்ளும் புறமும் புகுந்து எங்கும் நிறைந்த பரம்பொருள் போன்றதொரு நிலையை எட்டியிருந்தது.
"அண்ணே நான் ஒண்டு கேட்டால் கோவிக்க மாட்டீங்கள்தானே" சந்திரா அந்த கடை நடத்தும் அன்பரின் வீட்டிற்குள் சென்றதும் சொரூபன் உயர்தர ஆங்கிலத்தில் கேட்க,
"நிச்சயமாய் சொரூபா" தமிழில் தான் பதிலளஇத்தேன்.
"உங்களுக்கு ஞாபகமிருக்கோ தெரியேல்ல ஒருநாள் உங்க அக்காவை குறிக்க நான் பெட்டைன்னு சொல்லிட்டன் நீங்கள் என்னை அடிக்க கையை உயர்த்தினீங்கள்." அவன் கேட்டுவிட்டு என்னையே பார்த்தான்.
"நினைவிருக்கிறது சொரூபா."
"அண்ணை பெட்டைகள் எண்டால் எங்கட வழக்கில பெண்பாலைக் குறிக்கும் சாதாரண வார்த்தைப் பிரயோகம்."
"ஆனால் எனக்குத் தெரியாதே சொரூபா, தமிழீழ வார்த்தைகள் மட்டுமில்லை, சில தூய தமிழ் சொற்களோட அர்த்தம் கூட எனக்குத் தெரியாது. உதாரணத்துக்கொன்னு எடுத்துக்கோயேன் நாற்றம் அப்பிடின்னா தூயதமிழ்ல வாசனைன்னு அர்த்தம், அதையே மெட்ராஸ்ல இருக்குற ஒருத்தன்ட போய் அண்ணே உங்க சட்டைலேர்ந்து அற்புதமான நாற்றம் வருதுண்ணேன்னு சொல்லிப்பாரு தெரியும். அதுக்காக தமிழ்நாட்டுக்காரனுக்கு தமிழ் மேல மதிப்பில்லை மரியாதையில்லை ஏட்டிக்குப் போட்டியாய் பேசுறான்னு அர்த்தமா? இதைக்கூட நீ என்னை இன்னும் நல்லா புரிஞ்சிக்கணும்னு தான் சொல்றேன். அதெல்லாமிருக்கட்டும் நான் உனக்கு பெங்களூரில் எவ்வளவோ உதவியிருக்கேன். நான் சொல்லிக் காண்பிக்கிறேன்னு நினைக்கக்கூடாது உனக்கு கடைசியில் என்னைப்பற்றிய நினைவு வரும்பொழுது அந்தப் பெட்டைன்னு நீ சொன்னதுக்காக நான் கோபப்பட்டதுதான் நினைவிற்கு வருதா?" நான் கேட்க என்னவோ பதில் சொல்லவந்தவன் நிறுத்திக்கொண்டு,
"உங்கட அம்மா அப்பாவை நம்பி என்ர தங்கச்சியை விட்டுட்டுப் போனால் நீங்கள் கையைப்பிடிச்சு காதலிக்கிறியா எண்டு கேட்டது மட்டும் சரியோண்ணா?. எங்கடப் பெண்கள் எண்டா உங்களுக்கு அவ்வளவு கேவலமா?" இதைக்கேட்ட பொழுது அவன் கண்கள் கோபத்தில் சிகப்பேறியிருந்தது. சிறிது நேரம் யோசித்தவனாய்.
"உண்மைதான் சொரூபா, ஒரு பதின்ம வயது பெண்ணிடம் ஏற்பட்ட சாதாரண இனக்கவர்ச்சியை தவறா உபயோகப்படுத்திக்கிட்டனோன்னு அப்பவே நினைத்தேன். ஆனால் இதெல்லாம் நாம சந்திராவை கல்யாணம் செய்துக்கிட்டா தப்பாகாதுன்னும் நினைச்சதால சரின்னு நினைச்சிட்டேன். ஆனால் இன்று வரை அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் நிச்சயமாய் தப்புதான் சொரூபா, தப்புதான்."
இந்த பதில் சொரூபனின் முகத்தில் ஏற்படுத்திய மாற்றங்ளை குறிப்பெடுக்க நினைத்த எனக்கு குறிப்பெதுவும் கிடைக்கவில்லை. அவன் அந்த பதிலை ஜீரணம் செய்துவிட்டவனைப்போல் நகர்ந்துவிட்டான். சிறிது நேரத்தில் அங்கு வந்த சந்திராவை பார்த்த பொழுது முன்பிறுந்த மனநிலையில் எந்தவொருமாற்றமும் இல்லை.
"மோகன் நான் முந்தியே உங்களிட்ட சொன்னானல்லே. ஆரம்பத்திலாவது பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்தது. நீங்கள் சொரூபன் அண்ணா உண்டியல் பணம் போட உங்கட வங்கிக்கணக்கை கேக்க நீங்க தரமறுத்து ஏதோ கொலைக்குற்றவாளி போல் பார்த்தீங்களாம்.
உண்டியல் பணம் என்றது கடத்தல் பணமோ திருட்டுப்பணமோ இல்லை தெரியுமோ? நேர்மையான வழியில் சம்பாதிக்கிற பணம்தான்."
"சந்திரா நீ கூடவா என்னை புரிஞ்சிக்கவில்லை. தமிழ்ல கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை அப்படின்னு ஒரு பழமொழியிருக்கு. எல்லாப் பழமொழியையும் போல இதையும் மக்கள் திரிச்சிட்டாங்க. கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனைன்னு, கழு அப்படிங்ற ஒரு வகையான பருத்தி வளர்றப்போ கற்பூரம்போல் வாசனை வரும். அதை அறுவடை செஞ்சு தறியில நெஞ்சு துணியா மாத்தினா அந்த பருத்தியில இருக்கிற கற்பூர வாசனை போயிரும் அப்பிடிங்கிறதுதான் அந்த பழமொழி. ஆனா இப்ப மக்கள் கிட்ட இருக்குற பழமொழியோட அர்த்தம் வேறயில்லையா. அதுமாதிரிதான் உண்டியல் சம்மந்தப்பட்ட என்னோட அறிவும். நான் தமிழ்ல கதை கட்டுரையெல்லாம் எழுதுவேங்கிறதுக்காக இந்த விளக்கத்தையெல்லாம் நான் தெரிஞ்சிருக்கணும் அப்படின்னு நினைக்கிறது முட்டாள்தனம் இல்லையா. அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன் உங்கண்ணனை போலீஸ்கிட்டையா புடிச்சிக் கொடுத்தேன். என் அக்கௌன்ட் டீடெய்ல் தரமுடியாதுன்னுதானே சொன்னேன். அதுல வேற பிரச்சனையேயில்லையா, நாளைக்கே நான் டேக்ஸ் ரிட்டர்ன் காமிக்கிறப்ப அந்த பணம் எதுக்கு வந்துச்சுன்னு கேள்விவராதா. நான் எங்கப்போய் பதில் சொல்வேன். ஒன்னும் தெரியாம குய்யோ முறையோன்னு கத்தக்கூடாது."
"அதைத்தான் நானும் சொல்றன். எங்களுக்குள்ள மொழி முதற்கொண்டு பிரச்சனையிருக்கு. அதால நமக்குள் இடைவெளிகள் அதிகம் என்னதான் முயன்றாலும் எங்களைப்பற்றி உண்மையாக நீங்கள் தெரிந்துகொள்வதில் 1 சதவீதம் கூட உண்மையிருப்பதில்லை. அதனால் நீங்க உங்கள் வழியைப் பார்த்து ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணுங்கோ. ஒருவிஷயம் மட்டும் நீங்க நல்லா புரிஞ்சு கொள்ளுங்கோ நீங்கள் பெங்களூரில் செய்த உதவியை நாங்கள் ஒருநாளும் மறக்கமாட்டம். இன்று நாங்கள் நல்ல நிலைக்கு வந்திட்டதால சொரூபன் அண்ணாவோ நானோ இப்படி கதைக்கிறம் எண்டு நீங்கள் நினைக்கக்கூடாது. ஏதோ மனசை உறுத்திக்கிட்டிருந்தது கேட்டிட்டன் அவ்வளவுதான்."
அவள் முன்னமே முடிவெடுத்துவிட்ட ஒரு நிலையில் இருப்பதையே உணர்ந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் நான் கேட்டதற்கும் அவள் அவ்வளவு சாதகமாய் பதில் சொல்லியிருக்காததால். நானும்,
"இல்லை சந்திரா இதுதான் நல்லவழிமுறை. என்பேர்ல எதாவது குற்றம் இருந்தால் அதை நேரா கேட்டுடணும். என்னால முடிஞ்ச பதிலை நானும் கொடுப்பேன். உன்விரும்பம் அதுதான்னா எனக்கும் பிரச்சனை கிடையாது."
சொல்லிவிட்டு அவளின் தொலைபேசி எண்ணை ஒப்புக்காய் வாங்கியவனாய் தோரபெல்லில் என் காதலை தலை முழுக நினைத்தேன். நினைவுகளை காற்றிலே கரைக்க நினைத்தவனாய் சப்தமாய் மூச்சுவிட்டுக்கொண்டே நான் வந்திருந்த பஸ்ஸை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தேன். என்னவோ ஒன்று நீண்டநாளாய் அரும்பாடுபட்டு காத்துவந்தது உடைந்துவிட்டதைப்போன்றதொறு எண்ணம் உண்டானது. என்னவோ நினைவில் செல்லிடைபேசியை எடுத்தவன் மாமாவின் எண்ணை அழைக்க,
"மாமா, நான் சுமனை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். உங்க பதிலை எதிர்பார்க்கிறேன்."
"தம்பி அதை நீ சுமன் கிட்டையே கேளு." சொல்லியவுடன் தொலைபேசி இடம்மாற,
"சொல்லுங்க வாவா, என்ன விஷயம்?"
"இல்லை உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு மாமாக்கிட்ட கேட்டேன் அவர்தான் உன்கிட்ட கேக்கச்சொன்னாரு. அதான்"
"வாவா இதென்ன என்கிட்ட கேக்குறீங்க, நைனாக்குத்தான் அறிவில்லைன்னா உங்களுக்குமா. இங்க நேர்ல வாங்க பேசிக்கலாம். ஆமாம் இப்ப எங்க இருக்கீங்க, எப்ப வீட்டிற்கு வர்றீங்க." சுமன் கேட்க, யாரையோ பழிவாங்க நினைத்தவனாய்.
"சுமன் மாமாக்கிட்ட சொல்லீறாத, நான் இப்ப தோரபெல்லில் இருக்கேன். முல்லா ரூஜ் போய்ட்டு இன்னிக்கு நைட் வந்திற்ரேன்."
நிராகரிப்பின் வலி எல்லா சமயமும் அடக்கிவிட முடிவதாய் இருப்பதில்லை, அதன் ரணங்கள் பெரும்பாலும் நேர்மறையான வினைகளையே ஆற்றியிருந்தாலும் சில சமயங்களில் எதிர்மறையான வினைகளும் அதனால் ஏற்பட்டுவிடுகிறது. யுயுத்சு நூறு சகோதரர்களுடனும் ஒரு சகோதரியுடனும் பிறந்தவன் ஆனாலும் அவனுக்கு சமூகத்தில் அத்தனை நபர்களஇன் நிராகரிப்புத்தான் பரிசாய்க்கிடைத்தது. அதேபோல் தான் அம்பையும் பீஷ்மனின் வில்லின் வலிமையில் சால்வன் தன் இயலாமையைக்கண்டதால் நிகழ்ந்த நிராகரிப்பு, பின்னர் கங்கை புத்ரர் வரை தொடர்ந்தது. நிராகரிப்பின் சுழற்சியில் இருந்து வெளிவர நினைத்தவனாய் இந்த பதிலை சுமனிடம் சொன்னேன். மறுமுனையில் அவள் நக்கலாய்ச் சிரித்தபடி தொலைபேசியை வைக்க, என் ஐந்தாண்டு நினைவை மூளை மடிப்புக்களில் உள்ள நியூரான்களிடமிருந்து ஆஸிட் ஊற்றி அழித்துவிட நினைத்தவனாய் முல்லா ரூஜ்ஜை நோக்கி நகர்ந்தேன்.
--------------
மீண்டும் ஒருமுறை ஈழமக்களின் உரையாடலை திருத்தி எழுதிக்கொடுத்தமைக்கு சினேகிதிக்கு நன்றி. :-) :D
தமிழீழக்காதல்(1) - நீங்கள் கேட்டவை
பூனைக்குட்டி
Wednesday, December 14, 2005
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
மதுமிதா இறந்துவிட்டாள் என்ற செய்தியை என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை, நான் சிறிது சிறிதாக மயக்கமாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. o அந...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
I'm nt able to rite comments in tamil. Please forgive for that.
ReplyDelete"Kaludhaiku teriyumaa.."...idhu naal varaikkum, adhukaana unmai artham theriyaamal irundhadhu. Thagavaluku mikka nandri.
Tamilai naecipavannu solli kittu, indha madhiri chilra vishyam kooda theriyama irundhadhule konjam varuthama irukku.
Please continue tese snippets.
பீலமேடு புல்ஸ், பரவாயில்லை ஆனால் தமிழில் எழுத முயலுங்கள் உதவிவேண்டுமானால் தனிமடலிடுங்கள்.
ReplyDeleteரொம்ப அவசரப்பட்டு முடிச்சிட்டீங்க.
ReplyDeleteபுத்திசாலிதான்.
முதல் கதையின் சுவாரசியமே இல்லாத தொடராக எழுதியதனால்.........?
சரி விடுவோம்.
எதுக்கு வம்புண்ணு.........
அப்பிடித்தானே?
யார்மீதோ இருக்கும் கோபத்தில் உங்களுக்கு பிடித்த சொரூனபையும்,நீங்கள் நேசித்த சந்திராவையும் உங்கள் எதிரிகள் ஆக்கிவிட்டீர்கள், முதல் கதையில் இருக்கும் சொரூபன் இப்படிப்பேசுவானா? என்பது சந்தேகம்தான்.
ReplyDeleteமோகன்,
ReplyDeleteநீங்கள் கடைசிவரைக்கும் இக்கதை எழுதியிருக்கக்கூடாது.
குறிப்பிட்ட சிலருக்காகவே இக்கதை எழுதப்பட்டதெனத் தெளிவாகத் தெரிவதால், உங்கள் முந்தைய கதைகூட சாரமற்றுப்போய்விடுகிறது.
புத்திசாலி என்று அஜீவன் சொல்லலாம். நான் சொல்லப்போவது 'சளாப்பி'.
நீங்கள் சளாப்பியிருக்கத் தேவையில்லை.
அஜீவன் உங்கள் செங்கன் பற்றிய செய்தியை நீங்கள் இங்கேயும் வைத்திருக்கலாம். :-), உங்கள் விமரிசனத்திற்கு நன்றி.
ReplyDeleteபிருந்தன், வசந்தன் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, நான் நீண்ட நேரம் யோசித்துத்தான் இந்தக்கதையை எழுத முடிவெடுத்தேன்.
சளாப்பின்னு சொல்றதுல்லாம் ஒக்கேத்தான் ஆனா சளாப்பின்னா என்னா???
நீர் திருச்சின்னு சொன்னீரு, என்ன..லங்கேஸ்வரன்னு சொல்லலியே!
ReplyDeleteசளாப்பி
ReplyDeleteசொதப்பல்.
நான் புத்திசாலி என்று சொன்னது.
அதற்கு எதிரான கருத்தில்..........
சமாளிப்புக்காக
சுப்பரா சொதப்பீட்டீங்க என்ற கருத்தே அது.........
உங்க பக்கத்தில உங்கள திட்டக் கூடாதுண்ணு வுட்டுட்டேன்
மோகன்தாஸ் ,
ReplyDeleteஅஜீவன் வசந்தன் மற்றும் பிருந்தன் சொல்வதையே நானும் சொன்னேன்/சொல்கிறேன்.
சொரூபன் இப்பிடி கதைக்கிறறது ..மற்றது சந்திரா நீங்கள் சொரூபனோட உண்டியல் விசயத்தில விளங்காம கதைச்சது மற்றும் மொழிப் பிரச்சனையை சாட்டாச் சொல்றது...
மோகன்தாஸ் said...
ReplyDeleteஅஜீவன் உங்கள் செங்கன் பற்றிய செய்தியை நீங்கள் இங்கேயும் வைத்திருக்கலாம். :-), உங்கள் விமரிசனத்திற்கு நன்றி.
மோகன்தாஸ்
தமிழீழக்காதல்
http://imohandoss.blogspot.com/2005/12/blog-post_05.html
இது யதார்த்த சினிமா
தமிழீழக்காதல்(1) - நீங்கள் கேட்டவை
http://imohandoss.blogspot.com/2005/12/1.html
இது சுத்த தமிழ் சினிமா
புரியணுமே?
மேற்கோள்:
இங்கே வந்தது செங்கன் விசாஎன்பதால் ஆறுமாதம் கழித்து வந்த விடுமுறையில் ஐரோப்பிய யூனியனில் இருந்த அத்தனை நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுவந்திருந்தேன்.
ஜெர்மனி, இத்தாலி, ஸ்விஸ், இங்கிலாந்து எல்லா நாடுகளையும் சுற்றிவிட்டு கடைசியாக பிரான்ஸை சுற்றிப்பார்க்க வந்திருந்தேன் என்று சொல்லும்............
ரெண்டாம் பகுதி கதையில ரொம்ப குளறுபடி சார்?
செங்கன் வீசாவுல சுவிஸுக்கு வர முடியாது சார்?
சுவிஸ் ஐரோப்பா யூனியனுக்குள்ள இல்லம்மா............
அதுக்கு தனி வீசா வேணும்.............
அதவுட்டுட்டு பாத்தா
லண்டனுக்கு தனி வீசா வேணும்.
லண்டன் ஐரோப்பா யூனியனுக்குள்ளதான் இருக்கு
ஆனா வீசா விதி முறைகள் வேற..........
கதை முழுக்க ஓட்டையிருக்கு.
சாவகாசமா யோசிச்சு எழுதுங்க.
அவசரம் வாணாம்.
யாரு உங்க அட்வைசர்?
உண்மையா நல்லா கதை சொல்றீங்க?
செங்கன் வீசாவில் கீழ்வரும் நாடுகளுக்கு மட்டுமே போகலாம்.
(அவை ஆங்கிலத்தில் கீழ் உள்ளன.)
மேலதிக விபரங்கள்:
மேற்கோள்:
What countries are Schengen states?
Germany, Austria, Belgium, Denmark, Finland, France, Greece, Iceland, Italy, Luxembourg, the Netherlands, Norway, Portugal, Spain and Sweden have acceded to the Schengen Agreement and are thus Schengen states.
These are the "old" EU member states (with the exception of Britain and Ireland) plus Iceland and Norway. The countries that joined the European Union on 1 May 2004 did not immediately accede to the Schengen Agreement.
Holders of valid Schengen visas (text on the visa reads "valid for Schengen states" in the respective language of the issuing country) or a residence permit of a member state can stay in the entire Schengen area for up to three months per half year (usually without having to go through passport control at internal borders).
மேலதிக தகவல்கள்:-
http://www.auswaertiges-amt.de/www/en/aamt/buergerservice/faq/kat0/F15
application form:-
http://www.luxembourg.co.uk/docs/Schengen_Application_Form.doc
(யாழ் களத்தின் விவாதத்தில் என்னால் எழுதப்பட்டவை மறுபடியும்..............)
அஜீவன் இது உங்களுக்கு,
ReplyDelete// யாரு உங்க அட்வைசர்? //
புரியலைங்க, என்னுடைய மென்டர் பத்தி கேக்குறீங்கன்னா தனிமடலிடுங்க பதில் சொல்றேன்.
mohandoss.i @ gmail.com
செங்கன் கதையை சொல்லிடுறேன் முதலில். அதுவந்து என் மாமாவின் உதவியுடன் ப்ரான்சில் வேலைவாய்ப்புக்காக நான் விசா அப்ளை செய்ய, என் தாய்க்கு சிட்டிஷன்ஷிப் இருப்பதால் பிரச்சனையாகாமல் கிடைத்தை சொல்லியிருந்தேன்/சொல்ல நினைத்திருந்தேன்.
மற்றபடிக்கு பாண்டிச்சேரியில் பிறந்தவர்களுக்கு, இந்தியாவின் லஞ்ச/லாவண்யங்களின் உதவியுடன் பிரான்ஸ் சிட்டிஷன்சிப் பெறுவது அத்தனை பிரச்சனையான ஒன்று அல்ல, அதற்கு வயது ஒரு பிரச்சனையும் அல்ல. இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். ))))
அப்புறம் இங்கிலாந்து ஸ்விஸ். இங்கிலாந்தைப்பற்றி குறிப்பிட்டதற்கு சம்மந்தமான வாழ்வியல் நிகழ்ச்சி நடந்திருந்தது. என்னுடைய நண்பர் ஒருவர் இதே போன்ற விசாவில் போயிருந்து வேலை சம்மந்தமாக இங்கிலாந்து போயிருந்தார். எனக்கு மற்ற விஷயங்களை பற்றி தெரியாது அஜீவன் நாங்கள் ஐடி மக்கள் ஊர்சுற்ற போவதாக இருந்தால் கூட வேலைசம்மந்தமாக போவதாகத்தான் ரெக்கார்ட் சொல்லும். அதுவும் ஐடி மக்களுக்கு இங்கிலாந்து போவதோ இல்லை சுவிஸ் போவதோ விசாவின் படி பிரச்சனை வராது என்பதே நான் சொல்லவந்ததே.
//அது நடை முறை சாத்தியமேயில்லை.
அவர் இந்தியாவில்தான் வீசா பெற வேண்டும். //
எங்களுக்கு இப்படி வராதுன்னு நினைக்கிறேன் அஜீவன். நான் நேரில் சென்றேனான்னு கேட்கக்கூடாது எல்லாமே எங்கோ ஒரிடத்தில் நடந்ததுதான். காதில் கேட்டவை தான் பயன்படுத்தியிருக்கிறேன்.
//இங்கிலீஸ் தமிழ் ஜெர்மன் மற்றும் சுவிஸ் பேசுவேன் என்று............ //
நான் அந்த அளவிற்கு இறங்கவில்லையே. )))))))))))))))))
//தொலைபேசித் தொடர்புகள் இருந்தது என்று சொன்னவர்.
திடீரென பிரான்சில் ஏற்படும் எதிர்பாராத சந்திப்பு?//
அண்ணாத்தை இதை,
//அதற்கு பின் சில மாதங்கள் அவளுடன் தொலைபேசித்தொடர்பு இருந்து வந்தது. அதற்குப்பின்னர் என் வேலை காரணமாக புனேவிற்கு மாறியதிலிருந்து தொடர்பில்லாமல் போய்விட்டது.//
நீங்கள் கவனிக்கலையா இல்லை வேண்டாமென்று விட்டுவிட்டீர்களா????
//பிரான்ஸில் அமேரிக்க அக்சென்டில் இங்கிலீசா?
பிரான்சஸுக்கு வந்தவங்க பிரென்ஞ்தான் கற்றுக் கொள்வாங்க.
பிரென்ஞ்காரர்கள் இலகுவில் வேற்று மொழிகளில் பேச மாட்டார்கள்.(தெரிந்தால் கூட) அங்கு வருவோர் பிரென்ஞ்தான் கற்றிருக்க வேணும். //
அண்ணா நான் சொல்லவந்தது என்னைப்பொறுத்தவரை சொரூபனின் ஆங்கிலக்குறைபாடு என்பது ஒருவருடத்தில் நிவர்த்தி செய்துவிடக்கூடிய மிகச்சுலபமான ஒன்றுதான் என்பதையே. அதையும் விடுத்து எங்கள் வழக்கில் (ஐடி) ஒன்று உண்டு அது லாங்குவேஜ் நியூட்டர்ல் ஆக்குவது என்று அதன் உண்மை என்னவென்றால் எங்கள் அக்சென்டில் இருக்கும் இந்திய வாடையை இல்லை தமிழ் வாடையை நீக்குவது ஆனால் உண்மையில் என்ன நடக்கும் தெரியுமா அமேரிக்க அக்சென்ட் கற்று கொடுக்கப்படும்.
அதைத்தான் சொல்லியிருந்தேன் இது உங்கள் தவறு கிடையாது என்னுடையதுதான், சிறுகதை எழுதுவது சாதாரணமாய் படிப்பவர்களுக்கும் புரியவேண்டும் என்பது அதன் விதிகளில் ஒன்று. ஆனால் இந்தக்கதை அந்த விதிகளின் கீழ் வராது. ))))))
உங்களின் பிரஞ்ச் பற்றியதற்கும் சொல்லியிருந்தேன் சொரூபன் ஆங்கிலம் தவிர ப்ரெஞ்சையும் நன்றாக பேசுவதை; கவனித்துப்பாருங்கள். எங்கள் சைடில் (ஐடி) மொழி பற்றிய பிரதாபங்கள் உதவாது என்ன ஆனாலும் நாங்கள் எழுதும் சாப்ட்வேரை அதிகம் உபயோகிப்பது ஆங்கில அறிவுள்ள மக்களே. அதனால் ஆங்கிலத்தின் தெரிவு தேவையானதே.
//சொருபன் மற்றும் சந்திரா அகதியாக வந்திருந்தால் கூட
அனுமதிக்காக காலமெடுக்கும்.
இக் காலங்கள்..........மொழி...........வேலை..........
//
இவையெதுவும் ஐடி மக்களுக்கு சம்மந்தப்படாதது. எங்களின் தேவை பிரான்சில் நிச்சயப்படுத்தப்பட்டால் விசா (வேலைக்கான) நிச்சயமாகக்கிடைக்கும்.
நான் இரண்டாம் கதையை எந்த நோக்கத்தில் எழுதினேனோ அது நிச்சயமாய் வெற்றியடைந்திருக்கிறது. இதன் கடைசி இரண்டு பக்கங்களை பாருங்கள் புரியும். )))))))))))))))))
இது உங்களின்(total) விமரிசனத்திற்கான பதிலாய் மட்டும் சோகமாய் முடிக்கவில்லை, என்னுடைய அத்துனை கதைகளிலுமே ஒரு சோகமுடிவை(ரியலிஸ்டிக்கான) நான் வைக்க பயந்ததில்லை.
இது விமரிசங்களுக்கான கதையாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் நிச்சயமாய் இன்னொறு பாகம் எழுதியிருப்பேன். வரவேற்புத்தான் எழுதவைப்பது அதன் படி என் தமிழீழக்காதலுக்கு கிடைத்த வரவேற்புக்கு நிச்சயமாய் எழுதப்பட்டிருக்கும். இத்தனை விரைவாகவாய்னு கேட்டால் இருக்காது ஆனால் இந்தப்பாகம் நான் என்ன நினைத்தேனோ அந்த வகையிலேயே விமரிசங்களை பெற்றிருக்கிறது. உண்மையிலேயே, சினேகிதி, அஜீவன், பிருந்தன், வசந்தன் படிக்கேண்டா அப்படின்னு ஒரு டிஸ்கிளெய்ம்பர் போட நினைத்திருந்தவன் விட்டுவிட்டேன். உங்களின் விமரிசன்ங்களின் தேவையறிந்து.
மற்றபடிக்கு இங்கே யாழில் என்னுடைய இந்தக்கதைக்கு விமரிசனம் அளித்தவர் அனைவருக்கும் நன்றிகள். பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்ல ஆசைதான், விமரிசனத்தைப்பார்த்ததுமே பதில் சொல்லவேண்டும் என்பதைப்போல ஆனால் நேரம் கிடைப்பதில்லையே. மீண்டும் ஒருமுறை யாழ்வாழ் மக்களுக்கு நன்றி.
மோகனதாஸ்
ReplyDeleteஎதிலும் லாஜிக்குண்ணு ஒண்ணு இருக்கு.
அதை வச்சு நாம யதார்த்தம் என்னண்ணு முடிவெடுக்கிறோம்.
அடுத்தது கற்பனைக் கதை.
நான் முதல் கதையில வந்த மாதிரியே உண்மை சம்பவம்ணு நினைச்சுட்டேன்...........
இப்பதான் கற்பனையும் இருக்குண்ணு.........
கதையா நினைச்சு படிக்கிறது வேற. நிஜமா நினைச்சு படிக்கிறது வேற......
உங்க மனச்சாட்சிக்கு தெரியும்.
நான் என்ன சொல்ல வர்ரேன்னு....
இங்க பல விசயங்கள் நடை முறை சாத்தியமில்லாதது.
ஏன்னா இதில எனக்கு நல்ல அனுபவம்.
உங்க கதையில வர்ர மாதிரி யாராவது இந்த நாடுகளுக்குள்ள நுழைய முயற்சி செஞ்சா உள்ளதான் இருக்கணும். இருக்காங்க.
நான் இங்க உள்ள போலீசில மொழி பெயர்ப்பாளர் மட்டுமில்ல. மனித உரிமை சம்பந்தமாவும் வேலை செய்யுறேன்.
தப்பா வந்து மாட்டின ரொம்ப பேரை ஜெயில்களில தினந்தோறும் சந்திக்கிறேன்.
நம்ம வேலை பத்தி இதுக்கு மேல சொல்றதுக்கு தடையிருக்கு.........
ஆனாலும்
ஒண்ணு வேலைக்கான வீசாவில வர்ரவங்களுக்கு உடனே ஊர் சுத்த முடியாது.
வந்து கொஞ்ச நாள் வேலை செஞ்சதுக்கப்புறம் வேணும்ணா முடியும்.
அதுக்கும் வேலை செய்யுற இடத்துல காரண்டி பண்ணணும்.
படிக்கவர்ரவங்களுக்கும் இது பொருந்தும்.
இங்க உள்ள கல்லூரி பொறுப்புண்ணு லெட்டர் (காரண்டி) குடுத்தா.......
இந்த சேதி தெரியுமுண்ணு நெனைக்கிறேன்:-
ஒருவேளை சோறு... ரெண்டு தம்ளர் தண்ணி!
அப்பாவித் தமிழர்கள் வெளிநாடு போய் சம்பாதிக்கும் ஆசையில் மலேசியாவுக்கு போவதும், அவர்கள் மோசடி ஏஜென்டுகளால் ஏமாற்றப்பட்டு, போலி விசாவில் பயணித்து, அவதிப்பட்டு, கண்ணீரோடு திரும்பி வந்து கடனை அடைக்க முடியாமல் தவிப்பதும் அடிக்கடி கேள்விப்படும் செய்திகள்.
ஆனால், இது சற்றே மாறுபட்ட கண்ணீர் கதை. ஒரிஜினல் விசாவோடு, நேர்மையான வழியில் போன 39 இளைஞர்கள் இப்போது மலேசிய சிறையில் அடைபட்டுக் கிடக்க, அவர்களுடைய ஊரும் உறவும் என்ன செய்வது என புரியாத தவிப்பில் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றன................
இப்புடி தொடருது வேதனைகள்.
இதெல்லாம் யாரோ சொல்லுறதை படிச்சதை கேட்டு நாமளும் முன்னேறலாமேண்ணு ஏமாந்த அப்பாவிகள் கதை.
அதனால சொல்றேன்.
நம்ம கதைகள் கற்பனை இல்லேன்ண நிலையில எழுதறதா இருந்தா அடுத்தவங்க வழி தவறாம இருக்கணும்ணு நெனைச்சு எழுதுங்க.
இல்ல இதில கற்பனையும் கலந்திருக்குண்ணு சொல்லிடுங்க.
இதுக்கு மேல அவங்கவங்க பொறுப்பு.
சொல்ல வேண்டியதை நான் சொல்லிட்டேன்.
http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=2278&highlight=
ReplyDeleteஉங்க கதையை பாத்து இது மாதிரி யாரும் ஆகிடக் கூடாது.