விசில் அப்படின்னதுமே எனக்கு நினைவுக்கு வருவது. எங்க BHELலில் காலங்காத்தாலயே விசில் அடிச்சு எம்ப்ளாயிங்கள தூக்கத்திலிருந்து எழுப்பிவிடறதுதான், பின்னாடி வீட்டிலேர்ந்து கிளப்பி கம்பெனிக்கு வர வைக்கிறதுக்கு ஒரு விசில். இந்த விசில் சப்தம் நான் பிறந்ததிலிருந்தே கேட்டுவருகிறேன்.
(பிறந்திலிருந்தே கூடவேவருது)
அப்புறம் எங்கப்பா ஒரு பியிடி(PET) அப்பிடிங்கிறதால எங்க வீட்டில் நிறைய விசில் இருக்கும். இதில் எங்கப்பா உபயோகிக்கிற ஒரு அமேரிக்காவிலிருந்து வாங்கிவந்த விசில் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லா ஆசிரியர்களையும் போல அவர் அந்த விசிலை மற்றவர்கள் உபயோகிப்பதை விரும்ப மாட்டார். ஆனால் நான் எங்க கிளப்பில் நடக்கும் பேஸ்கட்பால் மாட்சுக்கு போய் கலாட்டா பண்ண ஒருமுறை எடுத்துட்டு போய் அப்பாக்கிட்ட பயங்கரமாய் உதை வாங்கியிருக்கேன்.
அந்த மாட்சுக்கு வந்த அப்பாவோட ஒரு பிரண்ட் பின்னாடி நான் வேற ஒரு வாலிபால் மாட்சுல பிரச்சனையே பண்ணாம மாட்டினப்ப 'இவன் தானே நிச்சயம் செஞ்சிருப்பான். விசிலடிச்சான் குஞ்சு தானே இவன்.' அப்படின்னு போட்டுக்குடுத்தார்.(வேற அர்த்தமாயிருக்குமோ ??? :-))
அதிலிருந்து அந்த டெர்ம்மை யார் உபயோகித்தாலும் எனக்கு பிடிக்காது.
பின்னாடி காலேஜ் வந்ததும் சினிமாவுக்கு போனா விசிலடிக்கிறதுக்குன்னே என்னையும் கூட்டிக்கிட்டு போற அளவுக்கு நான் விசில் அடிப்பதில் தேர்ந்திருந்தேன்.
இப்புடி நான் விசில் அடிக்கிறதுல பெரிய ஆள் ஆனதிற்கு எங்கப்பாவும் ஒரு காரணம் அவரு கபடி, கொக்கோ மாட்சுக்கெல்லாம் ஊதுறதுக்கு போவாரு.(சிலசமயம் என்னையும் கூட்டிக்கிட்டு). அப்ப ஏற்பட்ட பழக்கம் தான்.
பின்னாடி நான் இன்டஸ்டிரிக்கு(Software Industry) வந்ததுக்கு அப்புறமும் விசில் என்னை விடலை. இங்க நடக்குற இன்டர் கம்பெனி வாலிபால், டக்வார், பேஸ்கட்பால் மேட்சுக்கெல்லாம் ஊதிக்கிட்டு(விசிலைத்தான்) இருக்கேன்.
அப்புறம் வெளக்கமாறைப்பத்தி, ஒருமுறை இப்படித்தான் டெல்லியில் பார்க்க நார்த் இன்டியன் மாதிரியே இருந்த ஒரு பெண்ணைப்பார்த்து விசிலடிச்சிக்கிட்டே ஒரு பாட்டு பாட நேராய் என்கிட்ட வந்து வெளக்கமாறு பிச்சிறுன்னு சொன்னிச்சே பார்க்கணும் எனக்கு தூக்கிவாறிப்போட்டுறுச்சு.
இப்படியாக எனக்கும் விசிலுக்குமான தொடர்ப்பு நீண்டு நெருக்கமாய் இருக்கிறது. மற்றபடிக்கு இந்த பதிவுக்கும் தற்சமயம் வெளிவந்திருக்கும் எந்தபதிவுக்கும் எந்தச்சம்மந்தமும் கிடையாது.
For more reference on Whistle
http://en.wikipedia.org/wiki/Whistle
http://en.wikipedia.org/wiki/Whistling
(பதிவு ஆழமாயிருக்கணுமில்ல அதான்)
:-))))))))))))))))))))))))))))))
ReplyDeleteஉய்....வுய்...வூய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....:):):)
ReplyDelete(பிகிலு சத்தம் வித்தியாசமா இருக்கா!?)
பீ, பீய் ஆங் பஸ் போட்டேய்!
ReplyDeleteஹி ஹி...
ReplyDeleteஎப்படிதான் இந்த மாதிரி படங்கள பிடிச்சு போடுறீங்களோ. கேட்டா கூகுள் அப்டின்னுருவீங்க...வெளக்கமாத்துக் கட்டைக்கு என்ன படம் போட்டிருப்பார்னு பாத்தா ஒண்ணும் போடலை..!
ReplyDeleteநேர்ல சந்திச்சா ஒரு விசில் அடிச்சிக் காண்பிக்கணும்...சரியா...நானும் பழகிப் பார்த்தேன்..தேறலை, மற்ற எல்லா விஷயம் மாதிரிதான் இதுலயும் மொடாக்காயிட்டேன்.
உஷா இது என்னமாதிரியான உள்குத்து புரியலை.
ReplyDeleteஅன்பு நாராசமாயிருக்குதுப்பா :-)
இறைநேசன் உண்மையிலேயே புரியலை.
குழலி என் கருத்தை நீங்க திரிக்கிறீங்க. :-)
ஜெயஸ்ரீ உங்கள் உரல்களுக்கு நன்றி.
தருமி எப்பிடி மறந்தேன்னு தெரியலை, பெரிய தப்பாயிருக்கும் போலிருக்கு, நீங்களும் சொல்றீங்க, ஜெயஸ்ரீயும் சொல்றாங்க. :-)
தருமி வெ.க போட்டோ ஒன்னும் பெரியவிஷயம் கிடையாது கூகுளிட்டா கிடைச்சிறும். :-)
சாமி, இந்த உள்குத்து என்றே சொல்லே சமீபத்துல தெரிஞ்சிக்கிட்டது. யாரையாவது திட்டணும் என்றால், சொந்த பெயர்ல
ReplyDeleteநேரா திட்டிப்புடரது. இந்த இலக்கிய கருத்துமோதல்கள் (டமிள் மீனிங்) சமாசாரம் எல்லாம் புரியாத, சாதாரண ஆளு நானு
:-) உங்க பதிவு நல்ல்ல்ல்ல்ல்லா இருக்குன்னு
:-)))))))))) இப்படி ஸ்மைலி போட்டேன். சரியா :-)))))
விசிலடிச்சா குஞ்சிகளான்னு தமிழ்ல ஒரு பாட்டு வருமே.. கேட்டிருக்கீங்களா? பாடுனது LR Eswariனு நினைக்கிறேன்.
ReplyDeleteஉங்க பதிவ பாத்ததும் அந்த நாள் ஞாபகம், நெஞ்சிலே வந்ததே,, நண்பனே, நண்பனே.. டிஎம்எஸ் குரல்ல பாடணும்னுதான் நினைக்கிறேன். வேணாம். பொழைச்சி போங்க.
உஷா அது வேடிக்கையாப்போட்டது தப்பா நினைச்சுக்காதீங்க.
ReplyDeleteமன்னிக்கவும்.. இந்த பதிவு நையாண்டியாகவோ, நகைச்சுவையாகவோ தெரியவில்லை..
ReplyDelete-
செந்தில்/Senthil
ஜோசப் கேட்டதில்லை, செந்தில் நானே இரண்டு மூணுவாட்டி யோசிச்சேன் பின்னாடிதான் போட்டேன். உங்கள் கேள்விக்கு என் பதில் இருக்கலாம்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletehmm...ellorum ennai kalaykka arambitchuteenga.. ithellam nalla ille! :-)
ReplyDeleteயாருப்பா அது ராம்கியை கலாய்க்கிறது.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇங்கே வந்து டோண்டு அவர்களின் முகவரியை தவறாகப்பயன்படுத்தும் அன்பருக்கு. நான் IP Tracker வைத்திருக்கிறேன். என்னிடம் விளையாடவேண்டாம்.
ReplyDelete"இங்கே வந்து டோண்டு அவர்களின் முகவரியை தவறாகப்பயன்படுத்தும் அன்பருக்கு. நான் IP Tracker வைத்திருக்கிறேன். என்னிடம் விளையாடவேண்டாம்."
ReplyDeleteமிக்க நன்றி மோகந்தாஸ் அவர்களே.
இப்போது விசிலடிப்பது பற்றி சில வார்த்தைகள். எனக்கு இந்த விஸில் அடிக்க வந்ததேயில்லை. எவ்வளவு முயற்சி, இருப்பினும் ஒன்றும் பயனில்லை. என் நண்பன் ஏ.வி பார்த்தசாரதி விஸிலிலேயே "பீஸ் சால் பாத்" படப் பாடல்களைப் பாடுவான். ரொம்ப நன்றாக இருக்கும்.
தி.மு.க. தலைவர்களில் ஒருவரான அன்பில் தருமலிங்கம் அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் சேலஞ்சுக்காக விஸிலடித்துக் காண்பிக்க அவருக்கு துக்ளக் வாசகர் ஒருவர் அன்பிகில் தர்மலிங்கம் என்று பெயர் வைத்து துக்ளக்குக்கு எழுதினார்.
இப்பின்னூட்டத்தின் நகல் இதற்காகவே நான் வைத்திருக்கும் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடப்படும்.
பார்க்க:
http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி டோண்டு இராகவன்.
ReplyDelete//
ReplyDeleteமன்னிக்கவும்.. இந்த பதிவு நையாண்டியாகவோ, நகைச்சுவையாகவோ தெரியவில்லை..
-
செந்தில்/Senthil
//
அதே! அதாவது, மோகன் தாஸின் மற்ற பதிவுகளை வைத்துப் பார்க்கும்போது, இது எதற்கு என்று தோன்ற
வைக்கிறது !!!
மோகன் தாஸ் --- தவறாக எண்ண வேண்டாம்.
என்றென்றும் அன்புடன்
பாலா
பாலா முழுதும் வேடிக்கையாக் போடப்பட்ட பதிவுதான் அது.
ReplyDeleteமோகன்தாஸ்,
ReplyDeleteOK, OK :)
ஐப்பி டிராக்டர் வைத்திருக்கும் விசிலடிசான் குஞ்சு மோகன்தாஸ் அவர்களுக்கு எனது நன்றி.
ReplyDelete