ரம்யமான முன்பனிக்கால மாலைப்பொழுதின்கலைந்து செல்லும் மேகங்கள்இழைத்துக் கோர்த்த வண்ணங்களுக்காகவாவதுநீ அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம்உன் புறக்கணிப்பை விடவும்வண்ணக் குழப்பங்களுக்கான என் வருத்தம்உன் வேதனையை புரியவைக்கிறது மொஸார்ட் இசைத்துக் களைத்தபியானோவின் காதலைப் போல்உனக்கான என் காத்திருத்தல்புறக்கணித்தல்களுக்கு அப்பாற்பட்டதுஉன் கோபம்கிழித்தெறிந்த கவிதை, நாட்குறிப்புக்களோடுஎனக்கும் சம்மதமேநாவலொன்றின் குறிப்புக்களோடுஉன் காதல்சிறுகதைகளை நானும் புறக்கணிக்கின்றேன்-------------------------------இருத்தலியத்தின் பெயரைச் சொல்லி அடிக்கும் ஜல்லியாகட்டும், பொழுது போகாமல் எழுதும் சினிமா விமர்சனமாகட்டும் என் பதிவின் தொடர்ச்சி எனக்குப் பிடித்தேயிருக்கிறது....