படத்தில் உயிர் இல்லை, சல்மான் வருகிறார், சண்டை போடுகிறார் எல்லாம் சரி தான் ஆனால் அந்த ஃபீலிங் இல்லை, விஜய் போக்கிரியில் ஒவ்வொரு வசனம் பேசும் பொழுதும் அஜித்தை எதிர்த்து பேசுவதைப் போலவும் அடிக்கும் ஒவ்வொரு அடியும் அஜித்தை அடிப்பது போலவும் இருக்கும். அது இங்க மிஸ்ஸிங். இந்தப் படம் பார்த்தப் பிறகு தான் நினைத்துக் கொண்டேன் விஜய்கிட்டவும் ஸ்கிரீன் பிரசன்ஸ் இருப்பதாய். சல்மான் ஆரம்பத்திலிருந்தே எய்ட் பேக்ஸ் மெயிண்டெய்ன் செய்பவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், உடம்பு இன்னும் அவர் சொன்ன பேச்சு கேட்கிறது போல, ஆனால் என்ன டான்ஸ் ஆடத்தான் வரமாட்டேங்கிறது. எல்லா நல்ல போக்கிரி பாட்டும் படு மொக்கையா இருக்கு இந்தப் படத்தில். போக்கிரி படம் எவ்வளவு தேவலாம் என்றாகிவிட்டது.
அசினுடன் ஆயிஷா தாக்கியாவை ஒப்பிட முடியுமான்னு தெரியலை, எனக்கு இரண்டு பேரையுமே பிடிக்காது. அதென்னமோ அசினை ஆரம்பத்திலிருந்தே நான் ரசிக்கலை, கொஞ்சம் தொட்டுக்கொள்வது போல் ரசித்தது என்றாலும் அது தசாவதாரத்திலே தான். தாக்கியா ‘முன்’னாள் அழகி மந்த்ரா வாகு, சில சமயம் க்ளோசப்பில் ‘அது’ மட்டுமே தெரிந்து, அவரைப் பார்ப்பதற்கென்றே சினிமாவிற்கு வந்திருந்த நண்பர்கள் தூக்கத்தை நிச்சயம் கெடுத்திருக்கும். எனக்கு சமர்த்தா இருந்தா தான் பிடிக்கும் அதிகப் பிரசங்கி‘களை’ நான் விரும்புவதில்லை. தமிழில் இருந்ததான்னு ஞாபகம் இல்லை, தாக்கியா - சல்மானிடம் ‘என்னைச் சாப்பிடு’ன்னு சொல்ல நண்பர்கள் எனக்கு எனக்கு என்று அலைந்து கொஞ்சம் ஓவர் தான். சரி தாக்கியாவை கொஞ்சம் சமீரா ரெட்டி, பிரியங்கா சோப்ராவிற்குப் ‘பின்’வரிசையில் வைக்கலாம், பாந்தமாய் இருக்கிறாரே என்றால் வைரமுத்துவின் வரிகள் தான் நினைவில் வந்து படுத்துகிறது. “சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன், ஆஹா அவனே வள்ளலலடி” சரிதான், ஆனால் மீதி மெல்லிடை மட்டும் அல்லாமல் மொத்தமாவே கஞ்சனாயிருந்துட்டான் கடவுள். ஜீன்ஸில் பார்த்தால் ஒன்னையுமே காணோம். அளவு மீறுகிறது இங்கையே நிறுத்திக் கொள்கிறேன் ;).
இசை மிக மோசம், பேக்ரவுண்ட் ஸ்கோர் கொஞ்சம் காதைக் கிழிக்கும் வகையில் இருந்தாலும் போக்கிரி விறுவிறுப்பாய் போக உதவியது. ம்ஹூம் இங்கே பெரும் தலைவலியாய் இருந்தது. இடைவேளைக்குப் பிறகு சட்டென்று வந்தது போலிருந்த க்ளைமாக்ஸ் இங்கே மிஸ்ஸிங், இடைவேளை இழுத்தடிக்கப்பட்டிருப்பதாய்த் தோன்றியதற்கு முக்கியக் காரணம் இசை தான்னு நினைக்கிறேன்.
இயக்கத்தைப் பத்தியெல்லாம் சொல்றதுக்கு ஒன்னுமில்லை, அதே தமிழ் காப்பி. இந்தப் படத்தை தியேட்டரில் போய்ப் பார்ப்பதற்கு போக்கிரியை இன்னொரு முறை டிவிடியில் பார்க்கலாம்.
ஆயிஷா: ஓர் எளிய அறிமுகம்!
ReplyDeleteசெல்வேந்திரன்,
ReplyDeleteகிகி. இது நல்லாயிருக்கே!
இது வாண்டேட் பற்றிய பார்வையா இல்லை ஆயிஷா பற்றிய பார்வையா???
ReplyDeleteகடவுள் மொத்தமாவே கஞ்சனா இருந்துட்டாருன்னு வருமா இல்ல மொத்தமாவே வள்ளலா இருந்துட்டாருன்னு வருமா????
கஞ்சன்னு சொல்றது, ஜெலோவின் தனிச்சிறப்புக்களை முன்னிறுத்தி! புரியுதா பாருங்க?
ReplyDeleteஏஞ்சலினா ஜூலி நடிச்சா ஆங்கில படம்னு நினைச்சு வந்தேன்!
ReplyDeleteநேத்து தான் அந்த கருமத்தை பார்த்து தொலைச்சேன்!
நீங்க என்ன சொல்றிங்கன்னு பார்த்தா ஏமாந்துட்டேன்!