In Only ஜல்லிஸ்

ராயர் காப்பி கிளப்

ஆரம்பக்காலத்தில் நான் மரத்தடியில் சேர்ந்த சமயங்களில் இந்த ராயர் காப்பி கிளப் குழுமத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தேன். நல்லவேளை சேராமல் போனேன், இல்லையென்றால் ஓரளவிற்கு நடமாட்டம் இருந்துகொண்டிருந்த மரத்தடி, இன்று நடமாட்டம் இல்லாமல் போனதற்கு நானும் என் கதைகளும் ஒரு காரணம் என்று பாஸ்டன் பாலா ஒருமுறை ஜல்லியடித்ததைப் போல் ராயர் காப்பி கிளப்பிலும் ஏதாவது நடந்திருக்கும். உண்மையில் எனக்கு நான் ஏன் அங்கே உறுப்பினர் ஆகவில்லை என்ற கேள்வி உண்டு. அதற்கு நான் ராயர்களைப் பார்த்து பயந்தது ஒரு காரணமாகயிருக்கலாம். நான் கண்ட இரண்டொரு பெயர்களே கூட பயமுறுத்துவதாகயிருந்தது. உங்களுக்காக ஒன்றிரண்டு எக்ஸாம்புள்கள். பிரகாஷ்ராயன், ஆஸாத்ராயன், மத்தளராயன்.

இதெல்லாம் ஜல்லிக்காக, இரா. முருகன், பா. ராகவன், ஹரியண்ணா சிலசமயங்களில் பெரிய ராயர் சுஜாதா போன்றவர்கள் எல்லாம் அங்கே எழுதவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையில், மரத்தடியில் பட்டுக்கொண்ட பிறகு, கொஞ்ச நாளைக்கு வாயையும் மற்றதையும் பொத்திக்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். சரி மேட்டருக்கு.

இந்தத் தடவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகம் ராயர் காப்பி கிளப் By இரா. முருகன். யானை படம் போட்டிருப்பதற்காகயெல்லாம் புத்தகம் வாங்கி ஒன்றிரண்டு வரி விமர்சனம் எழுத நினைத்ததில்லை. ஆனால் “அரசூர் வம்சம்” புத்தகம் கொஞ்சம் படித்ததும், சரி ஆளு என்னவாவது சொல்ல டிரை பண்ணியிருப்பாரு. படித்துப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் வாங்கியதுதான் இந்தப் புத்தகம். 65 ரூபாய் விலைக்குத் தேவலைதான் புத்தகம்.

சொல்லப்போனால், கற்றதும் பெற்றதுமின் ஷார்ட் வெர்ஷன் மாதிரி இருந்தது. (அது அப்படியில்லைன்னு யாராவது சொன்னால் இந்த வரியைத் தூக்கிவிடுகிறேன்.) ரொம்ப சுய புகழ்ச்சியில்லாமல், ரொம்ப ஜல்லியும் அடிக்காமல் விஷயத்தை ரொம்ப சுருக்கமாச் சொல்லியிருக்கிறார். சுஜாதா அளவிற்கு பொதுபுத்தி மக்களை கவரணும் என்ற எண்ணம் கிளப்பில் எழுதும் பொழுது இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ராயர்களை திருப்தி பண்ண மட்டும் எழுதப்பட்டதா என்று கண்ணில் விளக்கெண்ணை ஊற்றித் தேடினேன். ஆனால் அப்படிக்கிடையாது என்றுதான் தெரிகிறது.

மாந்திரீக யதாரத்தத்தில் கான்செப்டில் தன்னுடைய போட்டியாளராகக் கருதும் கார்சியா மார்க்வெஸ்ஸின் புகழ்பெற்ற நாவலை தமிழில் நக்கலாக “பெரியாத்தா கருமாதி” என்று சொல்லும் பொழுதாகட்டும். ஒரு ஓவியர் தன்னை வரைந்து தந்து சொத்தையே அபகரித்துவிடுவார் என்று சந்தேகப்படும் பொழுதாகட்டும், இந்துவை சைக்கிள் கேப்பில் நக்கல் விடும் பொழுதாகட்டும், இலக்கியச் சந்தில் சிந்து பாடும் பொழுதாகட்டும் பின்நவீனத்துவத்தின் பிளஷர் ஆப் த டெக்ஸ்ட்(Pleasure of the text) தெரிகிறது எனக்கு. ஆமாவா இல்லையா என்று சாருவிடமோ இல்லை ரமேஷ் பிரேமிடமோ கேட்கலாம்.

செப்டம்பர் பதினொன்று அமேரிக்காவில் அழித்தது உயிர்களையும் உலக வர்த்தக மையக் கட்டடங்களையும் மட்டும் இல்லை. அமேரிக்கர்கள் இதுவரை உயர்த்திப் பிடித்த தனி மனித சுதந்திரத்தையும்தான் என்று தோன்றுகிறது. இந்தப் பேச்சில் சமூகத்தின் மீதான அவருடைய பார்வை தெரிகிறது. இப்படியேத்தான் லெனி ரைபென்ஸ்தாலைப் பற்றிச் சொல்லும் பொழுது கல்யாணச்சாவாக விழுந்திருக்க வேண்டிய ஒன்று ஈசானிய மூலைச்செய்தியாக உதிர்ந்துபோனதை பற்றி எழுதியிருப்பதிலும் அவருடைய அக்கறை தெரிகிறது.

புலம்பெயராத ஈழ எழுத்தாளர், குந்தவை, இம்ப்ரஷனிஸ ஓவியர் எட்வர்ட் மனே, “குழந்தை ஏசுவின் சுன்னத் என்ற மார்க்கக் கல்யாணம்” என்ற புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்த ரெம்ப்ராண்ட் என்று தொட்டுச்செல்லும் விஷயங்கள் அதிகம். பெரிய ராயர் சுஜாதாவைப் போட்டுத்தாக்குவதில் ராயர்களுக்கே உரிய நக்கல், எஸ்ரா ரொம்பச் சீரியஸாக, இதுவரை மூன்று நான்கு நாவல்கள் தான் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருக்கும். இவருக்கு ரஜினி சார் ஞாபகம் வருவது, அப்படியே கிருஷ்ணனுடைய “புளிநகக்கொன்றையை” கிழித்துத் தொங்கவிட்டு, ஜெர்மன் ஐயங்காரைப் பற்றி கேள்வி கேட்கப்படும் பொழுதும் தெரிகிறது.

நிறைய விஷயங்களை அவருடைய தெளிந்த நடையில் தந்திருக்கிறார்.

கோயில் மணியின் குரலும் ஒடுங்கிட
வாயில் அழுகை உயர்ந்திடும் சாவில்
அசைவு மறந்த சடலம் சிரிக்க
வசவு மொழியும் கிளி.

இது போல நடைமுறை வெண்பாக்கள் அங்கங்கே சொருகப்பட்டு படிப்பதற்கு நன்றாயத்தான் இருக்கிறது. இந்த இரா. முருகனின் ராயர் காப்பி கிளப்.

PS: அங்கங்கே ஸ்மைலி போட வேண்டும் என்று நினைத்தவாறே தான் எழுதினேன் எழுதிய பிறகு தான் தெரிந்தது. அப்படிப்போட்டால் பதிவில் ஸ்மைலி இல்லாமல் ஸ்மைலியில் பதிவு இட்டதாக ஆகிவிடும் ஆதலாம் ஒன்றைக்கூட போடவில்லை.

நான் போட நினைத்திருப்பேன் என்று நினைக்கும் இடங்களில் நீங்களே போட்டுப் படித்துக்கொள்ளுங்கள்.

Related Articles

7 comments:

  1. Oh! Com'n! sure, you have heard about Pythagorean society

    ReplyDelete
  2. நான் சந்தேகப்பட்டது சரியாத்தான் இருக்கு...ராயர் காப்பி கிளப்புல ஒரே கிழடாத்தானே இருக்கும்...நீங்க எப்படி அதை படிச்சீங்க...அப்போ என்னை சந்திச்சது ப்ராக்ஸிதான்...

    புக் பேர் போனீங்களா ? எங்கே வாங்கினீங்க புக்கு ?

    ஸ்மைலி மேட்டர் சூப்பர்...

    ReplyDelete
  3. தமிழ்மணத்தில், முதல் நாலு வரி படிச்சிட்டு திறக்காமயே விட்டுட்டேன்.. கில்லியில் பார்த்தா, யானை படம், ரெண்டுவரி விமர்சனம்னு.. ம்ஹும்.. என்னத்தச் சொல்ல :)))

    எப்படியோ ராயருக்காக இல்லைன்னாலும், காப்பிக்காகவாவது புத்தகம் வாங்கினதுக்கு ஒரு ஓ.. :)

    இதுக்கு மேல இந்தப் பதிவின் பேசு பொருளைப் பத்தி என்ன கருத்து சொல்றதுன்னு ஹி ஹி.. நிச்சயமா புரியலை :-D

    ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கிறேன்:
    //போட்டிருப்பதற்காகயெல்லாம்//
    போட்டிருப்பதற்காக + எல்லாம் இதில் உடம்படு மெய்யாகத் தோன்றுவது வ். போட்டிருப்பதற்காகவெல்லாம். எ வுக்கு முன் வ் தான் தோன்றும் :-D

    ReplyDelete
  4. claniiquex என்ன பேருய்யா இது, எனக்கு ஆங்கிலம் அவ்வளவா வராது. கூகுளில் தேட நேரம் இல்லை. என்னவோ சொல்றீங்க நல்லாயிருந்தா சர்தான்.

    ReplyDelete
  5. ரவி அதிர்ஷ்டவசமா அந்தப் பக்கம் நான் போகவில்லை. ஒரிரு சமயம் ஹரியண்ணா லிங்க் கொடுக்கப் போனதாக ஞாபகம். அதே போல் ஒரு முறை ஐகாரஸாரின் கதையொன்றைப் படிக்கப்போயிருப்பேன். ஹி,ஹி.

    ஆமாம் புக்பேர் போனேன், அந்தக் கூத்தை ஏன் கேக்குறீங்க. அது ஒரு பெரிய கதை.

    ReplyDelete
  6. //தமிழ்மணத்தில், முதல் நாலு வரி படிச்சிட்டு திறக்காமயே விட்டுட்டேன்..//

    பல சமயம் இதன் காரணங்களால் பல நல்ல ;) பதிவுகளை இழக்க வேண்டியிருக்கும். ஹாஹா

    ஆனை விஷயம் சும்மா தமாசுக்கு. மாத்தணும்னு சொன்னீங்கன்னா மாத்தீரலாம்.

    ReplyDelete

Popular Posts