உண்மைத் தமிழனை எப்பொழுதிலிருந்து தெரியும் என்று யோசித்துப் பார்க்கிறேன். கோவை பதிவர் சந்திப்பில் பார்த்தது, அப்பொழுது பேசவில்லை ஆனால் பிற்பாடு சென்னையில் சந்தித்தபொழுது பேசிய ஞாபகம்.
அப்பொழுதெல்லாம் வெளியாகும் எல்லாப் படங்களுக்கும் சென்று ஒரு மொக்கை விமர்சனம் எழுதுவார், பெரும்பாலும் விமர்சனமாக இல்லாமல் கதையை எழுதித் தொலைப்பதால் எப்பொழுதும் படித்துத் தொலைத்ததேயில்லை. பின்னர் நானே பதிவுகளில் இல்லாமல் போன காலங்களில் அவர் பிரபல பதிவர் வேறு ஆகித் தொலைத்திருந்தார்.
இப்ப அவர் பிரபல பதிவர் என்பதல்ல விஷயம். அவர் வாகை சூட வாவிற்கு ஒரு விமர்சனம் எழுதியிருந்தார், என் மனம் சொல்வது சரியென்றால், மக்களுக்கு வெளியாகும் முன்பே வெளியிடப்பட்ட காட்சியொன்றிற்கு சென்று அன்றைய பொழுதே இரண்டு வரி எழுதி படம் நல்லாயில்லை என்று சொல்லியிருந்தார்.
பொதுவாய் அவர் பதிவிட்டிருந்தால் படிக்காமல் நான் விட்டுப்போயிருக்கும் வாய்ப்பு அதிகம், பஸ்ஸில் எழுதிய இரண்டு வரி கண்ணில் பட்டுத் தொலைந்தது. பெங்களூரில் வாகை சூட வா! போன்ற பட்ஜெட்களில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வெளியாவதில்லை(மல்டிப்ளக்ஸ்களில், நான் மல்ட்டிப்ளக்ஸ் தவிர்த்து படம் பார்ப்பதில்லை, மைனா ஒரே விதிவிலக்கு). நான் இப்பொழுதெல்லாம் அடிக்கடி கிருஷ்ணகிரி செல்வதால் இப்படிப்பட்ட ஆஃப் பீட்(ஹிஹி பட்ஜெட் அடிப்படையில்) படங்களை அங்கே பார்ப்பது வழக்கம்.
இந்த உண்மைத்தமிழன் எழுதிய இரண்டு வரி மொக்கை விமர்சனம் பார்த்து இந்தப் படத்தை பார்க்க விருப்பமில்லாமலே இருந்தேன். கிருஷ்ணகிரியில் கூட ஓடவில்லை என்றே நினைவு. நல்ல வேளைக்கு மனைவியின் மாமன் வாங்கி வந்த விசிடியில் பார்த்து, மனம் நொந்து போனேன், இத்தனை நல்ல படத்தை நல்லாயில்லைன்னு சொல்லிவிட்டாரே என்று. மனம் வேறு திருட்டு விசிடியில் பார்த்ததால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் என் வருமானத்தில் ஒரு பகுதி தமிழ், இந்தி, ஆங்கிலம் படங்களை பெரும்பாலும் மல்ட்டிப்ளக்ஸ்களில் பார்த்து தொலைந்து போவதால், எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.
இந்த உண்மைத்தமிழனுக்கு மன்னிப்பே கிடையாது, சினிமாவைப் பொறுத்தவரை, நான் சில ஆட்களில் விமர்சனங்களை நம்புவதுண்டு, A. O. Scoot, Rajeev Masand, சன்னாசி, அய்யனார், சித்தார்த் என்று வெகு குறைவான ஆட்களுடைய விமர்சனங்களே, ஆனால் சன்னாசி அய்யனார் சித்தார்த் உடனுக்குடன் சினிமா விமர்சனம் எழுதும் அதுவரை நான் பார்க்காமல் இருக்கும் படங்கள் குறைவு. பின்னால் நம் அடிப்படைகளை வளர்த்துக் கொள்ள ஒப்பிட்டுக் கொள்ள உதவுபவர்கள் இவர்கள். பொதுவாய் லக்கிலுக்கின் விமர்சனங்கள் எனக்குப் பிடிக்கும் ஆனால் அவர் இன்ன பிற அரசியல் காரணங்களுக்காய் பட விமர்சனம் செய்யும் பொழுது மட்டுமே கொஞ்சம் உதைக்கும் ஆனால் அதையும் நான் ஊகித்துவிடலாம். சொல்லப்போனால் லக்கி பிடித்திருக்கிறது என்று சொன்ன எல்லா படங்களும் எனக்குப் பிடித்திருக்கிறது, ஆனால் என்ன எனக்குப் பிடித்த சில படங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை.
படம் பார்த்து முடித்ததும் வந்த கோபத்திற்கு உண்மைத்தமிழனை என் இணையத்தில் இருந்து Ban செய்துவிடலாமா என்று கூட தோன்றியது. பெரும்பாலும் நான் இணையத்தில் பார்க்க விரும்பாதவர்களை இப்படித் தவிர்த்துவிடுவதுண்டு. ஆனால் அண்ணனின் நேர்மை எனக்கு உண்மையிலேயே பிடிக்கும், அவர் எழுதுவதற்கு பின்னுள்ள அண்ணனின் இதயம் எனக்குப் பிடித்திருப்பதால் இன்னமும் அவரைப் பின்தொடர்கிறேன். ஆனால் இனி சினிமா விமர்சனம் எதுவும் உத அண்ணன் எழுதினால் அதை நான் படித்துத் தொலைத்தாலும் இனி அதை மதிக்கப் போவதில்லை. வாகை சூட வாவை என்னை இத்தனை காலம் கழித்து பார்க்க வைத்ததற்காக மன்னிக்கவும் போவதில்லை.

உண்மைத்தமிழனுக்கு மன்னிப்பே கிடையாது
Mohandoss
Thursday, November 10, 2011


Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
ஏந்து பேர் அல்குல் நின்றும் கற்றை மேகலைகள் நீங்கி படிமங்கள் ஆபத்தானவை, மனதில் ஒன்றிலிருந்து ஒன்றாய் தோன்றி மறைந்து உருவாகி பதிந்துவி...
-
Chennai buzzing with that sticky night heat, the kind that made you want to drown the world in booze and fuck it all off. I’d been itching t...
-
"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?" இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய ...
வாகை சூடவாவை? பார்க்கக் கூடாத வகையில் எழுதினாரா? அப்பனே முருகா!! ஆச்சரியமா? இருக்கே!!!
ReplyDeleteயோகன் பாரிஸ்,
ReplyDeleteஆமாம் அப்படித்தான் ஒன்றை உத அண்ணன் எழுதியிருந்தார்.
இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறோம்
ReplyDeleteஇவன்
உத ரசிகர்மன்றம்
வட சென்னை
தம்பி மோகனு..
ReplyDelete"ஏமாற்றிவிட்டார் சற்குணம். அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துகள்.." என்றுதான் எழுதியிருந்தேன்.
கிட்டத்தட்ட ஏழாம் அறிவை பார்க்கப் போய் அந்த பில்டப் அளவுக்கு இல்லாத நிலைமைதான் இந்தப் படத்திற்கும். அதனால் மேற்கண்ட விமர்சனத்தை போட வேண்டியதாகிவிட்டது..
http://truetamilans.blogspot.com/2011/10/blog-post.html
இது நான் எழுதிய விமர்சனம். இதைக் கொஞ்சம் படித்திருக்கலாம்.
"மிகச் சிறப்பான ஒரு கதைக்களனில் விளையாட்டு காட்டியிருக்க வேண்டிய இடத்தில், வெறுமனே எழுத்தில் மட்டுமே அதனை செய்திருக்கிறார் என்பதுதான் வருத்தத்திற்குரியது. வாகை சூட வா - திரைக்கதையில் மாற்றம் செய்திருந்தால் நிச்சயம் வாகை சூடியிருப்பான்..!"
இதுதான் எனது இறுதியான கமெண்ட்டு..!
விமர்சனத்தைப் படித்துவிட்டு யாரும் சினிமாவுக்குப் போகாமல் இருக்க மாட்டார்கள்..! அவரவர் ரசனைக்கேற்பதானே அது அமையும்..!
பை தி பை.. இன்னொரு விஷயம். நீ போட்டிருக்கும் புகைப்படத்தில் இருக்கும் அதே சட்டையைத்தான் இன்றைக்கு, இப்போது நான் அணிந்திருக்கிறேன்.. நினைத்துப் பார்த்தேன்.. ஜில்லிட்டது..!
நன்றி மோகன்..
மோஹன்,
ReplyDeleteஹி..ஹி..இம்புட்டு நாளா பதிவுல இருந்துட்டு எப்படி எந்த படம் பார்க்கக்கூடாதுனு தீர்மானிக்கிறாப்போல எந்த பதிவு விமர்சனம் படிக்க கூடாதுனும் கண்டு பிடிக்க தெரியலையா? ரொம்ப லேட் பிக் அப்பு!
கட்டை விரல் விதி என்ன சொல்லுதுன்னா, சினிமாவில ஓரமா இருக்கேன்னு சொல்லிக்கிறவங்க விமர்சனம் எல்லாம் கணக்கிலே எடுத்துக்ககூடாது. அவங்க தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, மனக்கசப்ப எல்லாம் காட்டுவாங்க.
எதவாது கேள்விப்படாத மொக்கைப் பத்திரிக்கைக்கும் விமர்சனம் எழுதுறேன்னு சொன்னாலும் அவங்க பதிவுல போடுற விமர்சனம் , சன்மானத்துக்கு ஏற்பவே இருக்கும்.(கவர் வெயிட்டா கொடுத்தா மொக்கைப்படத்தையும் சூப்பர்னு சொல்வாங்க)
கட்சி,மீடியா சார்பு ஆட்கள் விமர்சனம் என்றாலும் ஹி..ஹி எட்டிப்பார்க்க கூடாது.
யாராவது பதிவர் காசுக்கொடுத்து படம் பார்த்துட்டு வந்து விமர்சனம் போட்டா படிங்க,ஆனால் அவங்க எல்லாம் வெள்ளிக்கு வெள்ளி விமர்சனம் எழுத மாட்டாங்க என்பது தான் சிக்கல்.
உத அண்ணன்,
ReplyDeleteஉங்க பதிவைப் படிக்கலை, என் பதிவில் சொன்ன படி. நல்ல படம் தான் வாகை சூட வா, அதனால் நீங்கள் சொல்லும் மாற்றம் கூட தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.
வவ்வால்,
ReplyDeleteஇது வேண்டுமென்றே எழுதப்பட்ட ஒரு பதிவு. ஹிட்களுக்காய் அதனால் உங்கள் பின்னூட்டங்களுக்கு விளக்கம் அளிக்கலை ;)
ஒரு சினிமாவுக்கு இப்படியா ? வாழ்க்கையே சினிமாவாகி விட்டது!
ReplyDeletemokkai post
ReplyDelete:)
ReplyDelete