In Taboo Subject ஈழம் தமிழ்

ஈழத் தமிழர்கள் - Taboo Subject; 7-ம் அறிவு

ஏன் 7-ம் அறிவைப் பற்றி இத்தனை எதிர்ப்பு தெரியவில்லை. ஈழத் தமிழர்களைப் பற்றியும் தமிழர்களைப் பற்றியும் பேசியதாலா தெரியவில்லை. ஈழத்தமிழர்களை Taboo சப்ஜெக்டாக வைத்திருப்பதில் எனக்கு சம்மதம் இல்லை.

முக்கியமான படம், பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இணையத்தில் எழுதப்படும் மொக்கை விமர்சனங்களை வைத்து இந்தப் படத்தை நிராகரிக்காதீர்கள். நிச்சயமாகப் பார்க்க வேண்டிய ஒன்று. தமிழர்கள், ஈழத்தமிழர்கள், இலங்கைப் பிரச்சனை எல்லாவற்றையும் காசாக்கப் பார்க்கிறார்கள் அது இதென்று புலம்புகிறார்கள் என்று நினைக்கிறேன். நான் விமர்சனம் எதையும் படிக்காமல் படம் பார்க்க நினைத்ததால் இதுவரைப் படிக்கவில்லை.


படம் ஆரம்பித்த ஐந்துநிமிடங்களுக்குத் தான் சென்றிருப்போம். போதி தர்மர் சீன குழந்தை ஒன்றிற்கு மருத்துவம் தருவதில் ஆரம்பித்தது 7-ம் அறிவு எங்களுக்கு, ஒன்றும் விட்டுவிட்டதாக நினைக்கவில்லை. ஹாலிவுட் படம் ஒன்றை பார்பது போன்றே இருந்தது ஆரம்பக் காட்சிகள். போதி தர்மனைப் பற்றிய பேச்சு தொடங்கிய பொழுதுகளிலேயே அவரைப் பற்றிப் படிக்கத் தொடங்கியிருந்தேன். ரமேஷ் - பிரேம் படித்துவிட்டு புத்தரைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள நினைத்துப் புத்தமதம் பற்றிப் படித்திருக்கிறேன். கட்டுரையும் - கட்டுக்கரையும் புத்தகத்தில் போதி தர்மனைப் பற்றி இருப்பதை இங்கே குறிப்பிடத்தான் வேண்டும். முடிந்தால் இன்னொரு தருணத்தில் எழுதிப் போடுகிறேன்.

மருத்துவத்தை வைத்துத்தான் மதங்கள் பரவின என்றே நினைக்கிறேன். மன்னனின் நோயைத் தீர்த்ததால் மன்னன் மதம் மாறி அப்படியே மக்களும் மதம் மாறும் காட்சிகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன - பழைய காலங்களில். சமண மதமும் பௌத்த மதமும் தமிழகத்தில் வேறூன்றி இருந்ததற்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்ட நிலையில், போதி தர்மன் பற்றி வந்திருக்கும் இந்தப் படம் முக்கியமானதாக இருக்கிறது.

பௌத்தர், சமணர் படுகொலை செய்யப்படுதல், பௌத்த, சமணப் பள்ளிகள் விஹாரைகள் இடிக்கப்பட்டு கோயில்கள் எழுப்பப்படுதல், பௌத்த சமணம் மற்றும் பிற சமய நூல்கள் எரித்தழிக்கப்படுதல், பௌத்த சமண சமயங்களைப் பின்பற்றிய மக்கள் வாளின் முனையில் சமய மாற்றம் செய்யப்படுதல், சமயம் மாற மறுத்தோர் தீண்டாமைக்குட்படுத்தல், சமண, பௌத்த சான்றோர் தமிழக எல்லைக்கு வெளியே ஓடித் தப்பிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தல், மீண்டும் பேரரசுகளை உருவாக்குதல் போன்றவை இக்காலக்கட்டத்தின் செயல்கள். இவற்றிற்கு ஆதாரம் ஆயிரம் இருந்தும் இன்றுவரை தமிழறிவின் மறைக்கப்பட்ட பகுதியாக இவை இருந்து வருகின்றன. சைவமும், வைணவமும் மக்கள் மேல் முதலில் திணிக்கப்பட்ட, பிறகு ஏற்கப்பட்ட சமயங்கள் என்பதை இன்று கூறுவது ஏதோ பயங்கரவாதச் செயல் என்பது போல மனித வெறுப்பும் ஆதிக்க வெறியும் கொண்ட சாதி ஒடுக்குதலை ஏற்ற அறிவு மரபு ஒன்று இங்கே கூச்சல் இடலாம். ஆனால் உண்மை கூச்சல்கள் மறைக்கப்படுவதில்லை.

நான் கொஞ்சம் நான் - லீனியராகப் படம் போகத் தொடங்கியதுமே நினைத்தேன் தமிழ்நாட்டில் படம் விளங்கிறும் என்று. அது போலவே விமர்சனங்கள் வந்திருப்பது என் நம்பிக்கை பொய்க்கவில்லை என்கிற எண்ணத்தை வளர்க்கிறது. எல்லோருக்கும் A.R. Murugadossயிடன் என்ன எதிர்பார்த்துச் சென்றார்கள் என்று தெரியாது நான் எதிர்பார்த்ததை விடவும் நன்றாகவே வந்திருக்கிறது.

சூர்யாவின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது, ரொம்பவும் அறிவுஜீவி போலக் காட்டியிருப்பதை தவறென்று கூறவில்லை, எதற்கு சர்க்கஸ் என்று புரியவில்லை, ஒருவேளை போதிதர்மர் இன்றிருந்தால் சர்க்கஸ் வேலைக்குத் தான் சரியென்று சொல்லவருவதாக விமர்சனம் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை.

சுருதி நன்றாக நடனம் ஆடுகிறார், இவர்கள் செய்யும் ஜெனிடிக் ஆராய்ச்சியை வைத்து இவரது தகப்பனாரிலிருந்து கொஞ்சம் நடிப்புக் கலையை இவருக்குக் கொண்டுவரலாம், ஆனால் பெரிய வசனம் இருக்கும் காட்சிகளில் கம்ஃபொர்ட்டபிளாக இவர் நடித்திருப்பது தெரிகிறது. சண்டைக் காட்சிகள் தான் பிரம்மாதம், நிறைய உழைத்திருக்கிறார்கள் தெரிகிறது. இன்னமும் இரண்டு அல்லது மூன்று பாடல்களை செதுக்கியிருந்தால் இன்னமும் கிரிப்பாக வந்திருக்கக்கூடும்.

தமிழர்களைப் பற்றியும், ஈழத்தமிழர்கள் பற்றியும், ஈழ விடுதலைப் போராட்டம் பற்றியும் வரும் வரிகளில் எனக்குத் தவறொன்றும் தெரியவில்லை. சொல்லப்போனால் இன்னமும் யாழ் நூலகம் எரிந்தது கூட தெரியாத எத்தனையோ தமிழர்களுக்கு அந்த விஷயம் சென்று சேரலாம். இதைச் சொல்லிப் பணம் பறிக்கிறார்கள் என்று புலம்புவதைக் கேள்விப் படுகிறேன். இவர்கள் அனைவருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது, ஈழத்தமிழர்கள் பற்றிய பிரச்சனைகளை, ஈழப்போராட்டத்தை ஒரு Tabooவாக வைத்திருப்பதற்கு ஆனால் அதைப் பற்றிப் பேசப்பட்டே ஆகவேண்டும். இந்த அளவில் அதற்கான ஒரு ஓப்பனிங் கிடைத்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. இப்பொழுது எடுத்ததற்கு நன்றிகள். படம் பார்த்து வந்ததும் இதை எழுதுகிறேன் உடனடியாக எழுத நினைத்து. பின்னால் தேவையான படம் பற்றிய என் கருத்துக்களையும் எழுதுகிறேன்.

Related Articles

3 comments:

  1. படம் எனக்கும் பிடிச்சிருக்கு

    ReplyDelete
  2. நன்றிகள் கவிதா.

    ReplyDelete
  3. //சொல்லப்போனால் இன்னமும் யாழ் நூலகம் எரிந்தது கூட தெரியாத எத்தனையோ தமிழர்களுக்கு அந்த விஷயம் சென்று சேரலாம். //

    இப்பத்தான் படம் பார்த்து விட்டு யார் படம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று மேலோட்டம் விட்டு விட்டு உங்களுக்கான முதல் பின்னூட்டம் இது...
    யாழ் நூலகம் பற்றிய விபரங்கள் அறியாதவர்களும்,வரலாற்றின் வீரியம் அறியாமல் இருப்பவர்கள் நிறையவே இருப்பார்கள்.முழுவதாக ஈழம் குறித்த படத்தை எடுத்து சென்சார்களையெல்லாம் தாண்டி மக்களை வந்து விட முடியாது.இனிப்பில் மருந்து கலந்து மாத்திரை சாப்பிடுகிற மாதிரிதான் இன்னும் தமிழீழ விடுதலையை திரைக்கதையில் வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.தன்னால் இயன்ற சில மன சலசலப்பை உருவாக்கும் படி அவன் இவன் படத்தில் இரண்டாம் காந்தியென ராஜபக்சே வஞ்சப்புகழ்ச்சி வசனமும் ஏழு பேர் சேர்ந்து ஒருவனை வெல்வது வீரமல்ல ஏழாம் அறிவு போன்ற வசனங்கள் தேவையே.வியாபார ரீதியாக படம் எடுக்கும் போதும் சமூக உணர்வு கருத்துக்களையும் உள்சேர்ப்பதை வரவேற்கிறேன்.

    ReplyDelete

Popular Posts