கிழிந்து தொங்கும் முகமூடியின் கண்ணீர்த்துளிகள்
Posted on Tuesday, February 02, 2021
காதல். பதின்ம காதலை சத்தமில்லாத முத்தங்களுடனும் காற்றைக் கிழிக்கும் அம்புகளைத் தாங்கும் அம்பாறாத்தூளியைத் தோளில் சுமக்கும் அழகிய அர்ச்சுனனின் திறமையை பரிகசிக்கும் விதமாய் யாரோ ஒருவனின் அம்பால் அனுமதியோடோ அனுமதியில்லாமலோ கிழித்தெறியப்பட்ட காற்றை சுவாசத்திற்கு ஒப்புக்கொள்ளும் மனநிலையுடனும் இருந்த என்னை என் மனைவி மணமான சில மாதங்களுக்குள் புரிந்து கொண்டிருந்தால் தான் ஆச்சர்யமே. கேள்விகளைத் தொக்கிக்கூட அவளுடைய புரிதல்கள் நிற்கலாம், எல்லாம் தெரிந்துமா என்ற கேள்விகளுக்கான பதில்களை...
அடுத்து நான் மதுமிதாவை அடுத்த நாள்தான் பார்த்தேன். உடல் முழுவதும் தங்கநகை போட்டுக்கிட்டு, பட்டுபுடவை கட்டிக்கிட்டு, பார்க்கவே சூப்பராகயிருந்தாள். நானும் போனிடைலை கட் செய்துவிட்டு, சாதாரணமான ஸ்டைலில் முடி வெட்டியிருந்தேன். பின்னர் அரண்மனை வழக்கப்படி, கோட், சூட் போட்டிருந்தேன். அருகில் வந்தவள், "ரவி, எனக்கு ஆரம்பத்தில் ஒரு எண்ணம் இருந்தது. நாம அழகா இருக்கிறதாலதான் உங்களுக்கு என்னை பிடிச்சிருந்ததுன்னு, இங்க வந்து பார்த்தா உங்க அக்கா பெண்ணு...
இப்படியே ஒரு மாதம் ஓடியிருக்கும், ஒரு கையால் செய்யக்கூடிய வேலைகளை அவளே செய்யத் தொடங்கியிருந்தாள் இன்னும் கட்டுகள் பிரிக்கப்படவில்லை. தினமும், ஹார்லிக்ஸ், ஃபுரூட் ஜூஸ் குடித்து உடம்பு சிறிதளவு தேறியிருந்தது. என்னிடம் இருந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கி, முன்னேறிக் கொண்டிருந்தாள். ஆனால் முன்னர் பேசுவது போல் இப்போது பேசுவது இல்லை; சொல்லப்போனால் மிகவும் குறைந்திருந்தது. கேட்டக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு அமைதியாகிவிடுவாள். ஒரு நாள் இரவு,...
அடுத்த நாள் வீட்டில் நான் பெயிண்டிங் பண்ணிக் கொண்டிருந்த பொழுது வீட்டு ஓனர் வந்து உங்களுக்கு ஒரு ஃபோன் வந்தது. மதுமிதா என்ற பொண்ணுக்கு ஆக்ஸிடெண்டாம் சைல்ட் ஜிஸஸ்ல வைத்திருக்கிறார்களாம், உங்களை உடனே புறப்பட்டு வரச்சொன்னார்கள் என்று சொன்னார். நான் பதறிப்போய் உடனே கிளம்பி மருத்துவனை போனால் அங்கு அவளைக் கொண்டுவந்து மருத்துவனையில் சேர்த்தவர் இருந்தார். அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். "ஒன்னுமில்லை தம்பி, ஒரு...
சில மாதங்களில் எங்களுக்குள் பழக்கவழக்கங்களில் மாறுபாடு வரத்தொடங்கியிருந்தது. நான் அவளை ஒருமையிலும், 'டி' போட்டும் அழைக்கத் தொடங்கியிருந்தேன். சில சமயங்களில் தொட்டும் பேசியிருந்தேன். ஆனால் பல காரணங்களுக்காக வீட்டிற்கு பெரும்பாலும் வரமாட்டாள். நானும் அதைத் தவிர்த்துவிடுவேன். அவள் ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் இயல்பாகப் பழகிவந்திருந்தாள். "ரவி, உங்க சைக்கிளில் என்னைக் கூட்டிக்கொண்டு போனதேயில்லை!" எதற்காக அதைத் தொடங்கினாள் என்று தெரியவில்லை. "போய்விட்டால் போச்சு!" சைக்கிள் எடுத்துவந்தேன். நான்...
அடுத்த நாள் சனிக்கிழமையாதலால், நான் அந்தப் புத்தகத்தை லைப்ரரியனிடம் காலையிலேயே கொடுத்துவிட்டுச் சென்று விட்டேன். பிறகு வந்த நாள்களில் கொஞ்சம் வேலையிருந்ததால் லைப்ரரி பக்கம் போகவில்லை. வெள்ளிக்கிழமை, பக்கத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று பிரகாரத்தில் அமைதியாகக் கண்களை மூடி உட்கார்ந்திருந்தேன். அரைமணி நேரம் கழித்து கண்ணைத் திறந்தால், எதிரில் மதுமிதா உட்கார்ந்திருந்தாள். ம்ம்ம்.. பெயர் ஞாபகம் இருக்கிறது. "எப்பிடிங்க! அரைமணி நேரம் கண்ணை மூடிக்கிட்டு உட்காரந்துக்கிட்டு...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
காஷ்மீர் போவதென்று முடிவு செய்து டிக்கெட்கள் அனைத்தும் புக் செய்தபிறகு மனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் இருந்து பேசாமல் குல்லு மணால...
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
On a serene Saturday evening, I slowly emerged from the embrace of slumber, rousing from my afternoon repose. Gradually, my senses rekindled...