வாழ்க்கையில் ஆட்டோபயோகிராபி எழுதும் ஐடியா சின்னவயதிலிருந்தே உண்டு, யாராவது வாங்கி படிப்பார்களா என்றால், அதற்காகயெல்லாம் வருத்தப்படுவதென்றால் நான் பதிவுகள் கூடத்தான் எழுதமுடியாது. சரி விஷயத்திற்கு வருகிறேன், அப்படி எழுதும் பொழுது உபயோகப்படுத்திக் கொள்வதற்காக குறிப்புக்களை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்கிறேன். அப்படி எழுதத்தொடங்கிய ஒரு சிறுகுறிப்பு போட்டிக்காக...,
------------------------------------------------------------------
அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் பெண் ஒருத்தி சொல்லப்போகத்தான் எவ்வளவு தவறான அனுமானத்துடன் என்னை மற்றவர்கள் அணுகுகிறார்கள் எனத்தெரிந்தது, அதில் என் பங்கு பெருமளவில் உண்டு. இங்கே ஒரு கம்பெனியில் பல ப்ரொஜக்ட்கள் இருக்கும், பெரும்பாலும் தற்சமயம் கணிணித்துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் ஒரு நபர் ஒரே அலுவலகத்தில் ஒராண்டிற்கு மேல் வேலை செய்வதென்பதே நடக்கிறக் கதை கிடையாது. அதிலும் குறிப்பாக எங்கள் கம்பெனியில் இரண்டாண்டிற்கு ஒருமுறை தான் ஒரு ப்ரொஜக்ட்டிலிருந்து வேறொரு ப்ரொஜட்டிற்கு மாற்றுவார்கள். நான் இங்கே குறிப்பிடுவது சாதாரண ப்ரொஜக்டை அல்ல ஒரு அக்கவுண்டை என்று வைத்துக் கொள்ளலாம்.
அதாவது இப்பொழுது நான் எச்எஸ்பிசி(HSBC) அக்கவுண்டில் இருக்கிறேன் என்றால் நான் இரண்டாண்டிற்கு மேல் இதே அலுவலகத்தில் வேலை செய்தால் மட்டுமே இன்னொரு அக்கவுண்டிற்கு மாற்றுவார்கள். அதாவது மார்கன் ஸ்டான்லிக்கோ(Morgan Stanley), இல்லை சிட்டி பேங்கிற்கோ(City Bank). எதற்காக இதைச் சொல்ல வருகிறேன் என்றால் அந்த இரண்டு வருடங்களில் நீங்கள் செய்த உழைப்பென்பது உங்கள் பழைய அக்கவுண்ட் சார்ந்தவர்களுக்குத்தான் தெரியும் பெரும்பாலும். இப்படி அக்கவுண்ட் விட்டு அக்கவுண்ட் மாறும் பொழுது நீங்கள் புதிதாய் வேலை செய்யத் தொடங்குவதைப் போன்ற உணர்வும் ஏற்படும், புதிய பங்காளிகள் புதிய இடம் புதிய மேலாளர்கள் என மொத்தமாய்ப் புதிதாய் இருக்கும்.
அப்படி நான் ஒரு அக்கவுண்டிலிருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு வந்த பொழுதுதான் அந்தப் பெண்ணைச் சந்தித்தேன், இதற்கு முன்னர் இரண்டு மூன்று சமயங்களில் சந்தித்திருக்கிறேன், தென்னிந்தியா என்று தெரியும் ஆனால் தமிழ்நாடென்று தெரியாது. எங்கள் அலுவலகத்தில் ஒரு பழக்கம் உண்டு, வாலிபால் போட்டி நடக்கும் பொழுது பெண்களுக்கும் இடமளிக்கும் வகையில், ஆறுபேரில் ஒரு நபர் பெண்ணாக இருக்கும் படியாக எங்கள் அலுவலகம் ஒரு சட்டத்தை வைத்திருந்தது. அப்படி நான் வேறொரு அக்கவுண்டிற்காக விளையாடிய காலத்தில் இந்தப் பெண்ணை எச்எஸ்பிசி அக்கவுண்டிற்காக விளையாடும் சமயத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் பேசியதில்லை.
சாதாரணமாக என்னைப் பார்க்க கரடுமுரடானவனாகத் தெரியும் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது, அந்த மனநிலையை நானும் இன்னும் அதிகம் தான் படுத்துவேன். இப்படித்தான் அந்தப் பெண் நான் சேர்ந்திருந்த புது அக்கவுண்ட் உபயோகப்படுத்தும் விஷயம் சம்மந்தமாக ஒரு செஷன் எடுத்துக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் நான் சொந்தமாகப் படித்துதான் தெரிந்து கொள்வேன் என்பதாலும், செஷனில் சொக்கிச் சொக்கி விழும் என் தூக்கத்தைப் போக்க எடக்கு மடக்கானக் கேள்விகளை அடுக்கிக் கொண்டேயிருப்பேன். அப்படி நான் தூங்கிவிழுவதையும், கேள்வி கேட்பதையும் வைத்துக்கூட அந்தப் பெண் என்னைப் பற்றிய தவறான எண்ணத்திற்கு வந்திருக்க வாய்ப்புண்டுதான். ஆனால் அது அப்படியில்லை என்று இன்றுவரை நம்புகிறேன் அதற்கு முழுப்பொறுப்பு என் உருவத்தோற்றமாகக்கூட இருக்கலாம்.
பெரும்பாலும் முசுடாக யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல் நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாள் அவள் பின்னாலிருந்து நான் தமிழில் டைப்புவதைப் பார்த்து நீங்க ப்ளாக் எல்லாம் எழுதுவீர்களா என்று கேட்டது நினைவில் உள்ளது, நான் பெரும்பாலும் விளம்பரம் செய்வதில்லை ப்ளாக் எழுதுவதாக அவள் கேட்டுக்கொண்டதற்காக லிங்க் கொடுக்க பார்த்தவள் கூகுள் 'ஆட்'கள் என் பக்கத்தில் இருப்பததைப் பார்த்தே தெரிந்து கொண்டவளாய், ரொம்ப நாளாய் எழுதுவீங்களோ என்று கேட்டாள் என்றாள் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அன்றைக்கு இரண்டு நல்ல நகைச்சுவை சம்பவம் நடந்தது, அதன்பிறகு என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தவள், சாதாரணமாக இந்த கல்கியின் கடல்புறா புத்தகம் உங்களிடம் இருக்கிறதா என்று கேட்க, நான் அவளுடைய தமிழறிவை மொத்தமாகப் புரிந்து கொண்டேன் கொஞ்சம் தவறாக என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். இப்படியாக நாங்கள் பேசத் தொடங்கிய ஒரு நாளில் தான் அவள் சொன்னாள், உங்களைப் பார்த்தால் இவ்வளவு நல்லபடியாக பேசுபவராகத் தெரியவில்லையென்று. உருவத்தைப் பார்த்து எடைபோடுவதில் உள்ள தவறு பெரும்பாலும் பலருக்குத் தெரியவில்லை.
அதே நாளில் என் ப்ளாக்கில் இருந்து ஒரு கதையை பிரிண்ட் அவுட் எடுத்துப் படிக்கப்போவதாகவும் ஒரு நல்ல கதை சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு கூச்ச சுபாவத்தில் நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன், அதன் பயனை பிற்பாடு அனுபவித்தேன். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அன்றுதான் முதன் முறையாக தமிழில் பேச ஆரம்பித்திருந்தோம். அந்தப் பெண் தேர்ந்தெடுத்த கதை 'மக்குக் குடும்பம்', குளிர்கால டிசம்பர் மாதத்தின் தாக்கத்தில் எழுதப்பட்ட ஒரு 'ஏ'த்தனமான கதையது. அன்றிரவு போகிற போக்கில் விண்டோ மெஸஞ்சரில் அவள் இந்த விஷயத்தை தட்டிவிட்டுச் சென்றாள்.
அதற்கு முன் அந்த மாதிரி கதை எழுதுவதைப் பற்றி எந்த முன்முடிவும் இருந்ததில்லை, சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா படித்து கொஞ்சம் செக்ஸியாக எழுத வேண்டுமென்று பெரும்பான்மையான என்னுடைய எல்லாக் கதையிலுமே பார்க்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும் 'அது'. அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை, அந்தப் பெண் கதையைப் படித்து என்ன நிலையில் நாளை வருவாள் என்று. ஆனால் பெரிய வித்தியாசம் அடுத்த நாள் எனக்காக காத்திருக்கவில்லை, மிகவும் சாதாரணமாக அந்தக் கதை அப்படிப்பட்டதென்று சொல்லியிருக்கலாமே என்று சொன்னாள் என்று நினைக்கிறேன். ஆனால் அவள் மனதில் அந்தக் கதை படிந்திருந்ததை நான் இன்னொரு சமயத்தில் பார்த்திருக்கிறேன், நாங்கள் நல்ல நண்பர்களாக ஆன ஒருநாள் விளையாட்டிற்காக கப்டேரியாவில் சென்று கொண்டிருந்த பெண்ணை சைட் அடிப்பதாகச் சொல்லப்போக அந்தப் பெண் அவகிட்ட என்ன இருக்கு அயர்ன் பாக்ஸ் என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள் நான் பதிலெதுவும் சொல்லவில்லை.
சொல்லப்போனால் எங்களிருவரிடமும் ஈகோ உண்டு, அதிலும் நான் எப்பொழுதுமே உள்ளர்த்தம் வைத்து மட்டுமே பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தேன். இப்படி இருவருமே உள்ளர்த்தம் வைத்தும் 'ஈயம்' 'ஈயம்'(பெண்ணீயம், ஆணீயம்) என்றும் பேசிவந்ததால் உள்ளர்த்தத்தை உணர்ந்து கொண்டாமோ என்று இருவருமே மற்றவரைப் பற்றி ஆராய்வதுண்டு அப்படிப்பட்ட ஒரு ஆராய்தல் தான் அன்று நடந்தது.
இப்படியாக அவள் என் கதைகளைப் படித்து ஒரு முன்முடிவிற்கு வந்திருக்க வேண்டும் என்னைய்ப்பற்றி, நாங்கள் நல்ல நண்பர்களாக ஆகிவிட்டிருந்த இன்னொரு நாளில் நீங்க காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற எடக்குமடக்கான கேள்வியைக் கேட்டாள், நான் ஒரே வார்த்தையாக முட்டாள்தனம் என்று பதிலளித்தேன். அவளுக்கு அது ஆச்சர்யமாகக் கூட இருந்திருக்கும், அவள் ஈகோவை விடுத்து, என்னால் இதை நம்பவேமுடியவில்லை, நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று காதல் பற்றி கதைகதையாய் எழுதிக்கொண்டு காதலை முட்டாள்தனம் என்று சொல்வீர்கள் என்று. நான் காதலைப்பற்றிய என்னுடைய எண்ணங்களைத் தெளிவாக மிகத்தெளிவாகச் சொன்னேன், இன்னும் சொல்லப்போனால் அவளை நன்றாகக் குழப்பினேன்.
அன்று அவளிடம் நான் கல்லூரிக் காலங்களில் நம்மிடம் ஏற்படுவது காதலே கிடையாதென்றும் அது வெறும் இனக்கவர்ச்சி மட்டும் தான் என்றும் வாதாடினேன், இரண்டு மணிநேரம். என் பட்டிமன்ற நடுவர்களை பத்து நிமிடப்பேச்சால் என்னால் மாற்ற முடிந்திருக்கிறது. ஆனால் இது ரியல் டைம் கேள்விகள் நேருக்கு நேராய் கேட்கப்படும், கான்சப்டில் குழப்பமிருந்தால் பிரச்சனையாகிவிடும். அவள் யாரோ ஒரு பையன் யாரோ ஒரு பெண்ணை கல்லூரி இறுதி ஆண்டிலிருந்து காதலிப்பதாகவும் முதலில் அந்தப் பெண் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், கல்லூரி முடிந்த இரண்டாண்டுகளில் அதற்குப் பிறகு ஒருமுறை கூட நேரில் பார்த்திராத சமயத்திலும் அவன் அந்தப் பெண்ணையே நினைத்து கொண்டிருந்ததால் அதன் பின்னர் ஒப்புக்கொண்டதாயுமான அவளின் கல்லூரி நண்பர்கள் பற்றீய கதையைச் சொன்னாள். நான் அதைப்பற்றிய என் புரிதல்களையும் விளக்கத்தையும் அளித்தேன். அது இங்கே தேவையில்லாதது, அந்தக் காதலைப் பற்றியும் அந்தப் பெண்ணைப் பற்றியும் நான் முற்றிலுமாக மறந்து போய்விட்டேன் அந்தப் பொழுதில், முற்றிலுமாக. என் மனம் முழுவதும் இப்பொழுது சார்லஸூம் கனிமொழியும் தான் இருந்தார்கள்.
நான் படித்தது ஒரு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி அதாவது பன்னிரெண்டாவது படித்து முடித்தவர்களுக்கு இரண்டவாது ஆப்ஷனாக வைத்திருப்பார்களே அது, அதுதான் எனக்கு முதல் ஆப்ஷனாகக் கிடைத்தது அதைப்பற்றி முன்பே எழுதிவிட்டதால் இப்பொழுது மற்றது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு டிரீம் கப்புள் இருப்பாங்க என்பது என் விஷயத்தில் உண்மை. அந்த டிரீம் கப்புள் தான் சார்லஸூம் கனிமொழியும், சொல்லப்போனால் கொஞ்சம் கூட ஒத்துவராக ஒரு ஜோடி, கனிமொழி ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து குடுப்பப் பிரச்சனைகள் காரணமாக எங்கள் காலேஜில் படித்துவந்தால், சார்லஸிற்கோ அந்தக் கல்லூரியை விட்டால் வேறு காலேஜ் இல்லையென்ற நிலை. பேரிலேயே தெரிந்திருக்கும் முக்கியமான வித்தியாசம்.
முதல் வருடம் நான் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன், சார்லஸ் தான் ஏழு பேர் கொண்ட எங்கள் ரௌடி குரூபின் தலைவன் போன்றவன். அதற்கு முக்கியக் காரணம் கனிமொழியை அவன் காதலித்தது கிடையாது. அவன் உண்மையிலேயே ரௌடி, சிகரெட் பிடிப்பது, தண்ணி அடிப்பது பெண்களுடன் பயமில்லாமல் பேசுவது இதுதான் அந்தக் காலத்தில் தலைவனுக்கு உண்டான அடையாளம், இதில் எதிலும் சார்லஸ் குறைவைக்கவில்லை. இதற்கெல்லாம் மகுடமாக தன்னிடம் சண்டித்தனம் செய்த ஒரு சீனியரை பாத்ரூமில் வைத்து கன்னம் கன்னமாக இழுக்க ஹீரோ ஆனான். மொத்தம் எட்டு பேர், சார்லஸ், பெஞ்சமின், விமல்ராஜ், சரவணலால் ஜெயன், கலைராஜா, இளையராஜா, மோகன்தாஸ் அப்புறம் கடேசியாய் அன்சர்.
ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்வதற்கு நிச்சயமாய் ஒரு கதை உண்டு, இதில் விமல் கொஞ்சம் தலைமைப் பண்புகள் உள்ளவன் நான் சொல்ல வந்தது மேலே உள்ள தலைமைப் பண்புகளை முன்வைத்து. இந்த குரூப்பில் நானும் அன்சரும் இருந்தது தான் ஆச்சர்யமே பலருக்கும். ஏனென்றால் எங்களிருவருக்கு மட்டும் தான் அரியர் கிடையாது. அதுமட்டுமில்லாமல் நானும் அவனும் கொஞ்சம் நன்றாய்ப் படிக்கக்கூடியவர்கள், இந்தக் கொஞ்சமும் மற்ற அறுவர்களுடனான ஒப்பீட்டு மதிப்புதான். ஏன் விமலைப் பற்றி மட்டும் இழுக்கிறேனென்றால் அவனுக்கு இந்த மாதிரியான தலைமைப் பண்புகள் இருந்ததென்றாலும் கொஞ்சம் ப்ராக்டிகலானவன், சொல்லப்போனால்.
இதற்கு ஒரே காரணம் சார்லஸ் கனிமொழியைக் காதலிப்பதாகவும் அந்தப் பெண்ணும் அவனைக் காதலிப்பதாகவும் ஒரு கீழ்த்தர பாரில் பார்ட்டி கொடுத்தபடி சொல்ல முதலில் கண்டித்தவன் அவன்தான். சார்லஸின் முகத்திற்கு எதிராக 'வேண்டாண்டா பங்காளி அவளை விட்டுடு' என்றான். சார்லஸிற்கு கொஞ்சம் கோபமுண்டு இதனால். நானெல்லாம் முதலில் இந்த விஷயத்தை நம்பவேயில்லை, முதலில் ஒரு விஷயத்தை உறுதிசெய்துவிடுகிறேன். என் வயதின் படி, நான் ஒரு வருடம் முன்பே பள்ளியில் சேர்க்கப்பட்டவன், ஆசிரியரான அப்பாவின் கைங்கர்யம். அதனால் பெரும்பாலும் கல்லூரியில் என்னுடன் படித்தவர்கள் என்னை விட குறைந்த பட்சம் ஒருவயது அதிகமானவர்கள். கனிமொழியும் சரி கூடப்படித்த மற்ற ஆறு பெண்களும் சரி என்னைவிட வயதில் மூத்தவர்கள் தான் பெரும்பாலும் அக்கா என்றுதான் எல்லோரையும் அழைப்பேன். சரி விஷயத்திற்கு,
இந்தக் காதல் பெரும் படமெடுக்கும் அளவிற்கு கல்லூரியில் நடந்தது, காதலென்றால் ஒன்றிரண்டு உதாரணங்களைச் சொல்லி அவர்களை அமரக் காதலர்களாக்க வேண்டுமென்ற அவசியம் எனக்குக் கிடையாது. அவர்கள் மற்ற எல்லா கல்லூரிக் காதலர்களைப் போலவும் காதலித்தார்கள். என்ன கொஞ்சம் தீவிரமாய், இடையிடைய எங்கள் ஜிங்கிச்சாவையும் மீறி விமல் மட்டும் இதை எதிர்த்துக்கொண்டேயிருந்தான், மூன்றாவதாண்டில் அவனும் ஒரு முதலாமாண்டு பெண்ணைக் காதலிக்க எதிர்ப்பேயில்லாமல் கனிமொழி எங்கள் எல்லோருக்கும் அண்ணியானாள். நான் நிகழ்வுகளை வர்ணிக்க இங்கே எத்தனிக்கவில்லை. இப்படியாக அவர்கள் காதல் எங்கள் கல்லூரியின், வரலாற்றுப் புகழ்பெற்ற காதலானது, கடைசியாக கல்லூரிக்கும், தமிழ்நாட்டிற்கும் டாட்டா காண்பித்து நான் டெல்லி புறப்படும் வரை. எனக்கு சந்தேகமேக்கிடையாது, சார்லஸ் தண்ணியடித்துவிட்டு உளறிய உளறலிலிருந்தும் கனிமொழியுடனான அவனுடைய நேருக்கத்திலிருந்தும், எதிர்ப்புக்கள் அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு அவர்கள் காதல் சக்ஸஸ் ஆகிவிடுமென்பதில்.
பின்னர் கல்லூரியைப்பற்றியோ, சார்லஸ் கனிமொழியைப் பற்றியோ நினைக்க மட்டுமல்ல என்னைப் பற்றியேக் கூட நினைக்க முடியாத நாட்கள் அவை, டெல்லி, பேங்களூர், புனே என மூன்றாண்டுகள் அப்படியென்பதற்குள் ஓடிவிட்டன. கடைசியாண்டு ப்ரொஜக்ட் செய்வதற்காக என் நண்பர்கள், இவற்கள் வேறு படிக்கிற செட், வந்து புனேவில் தங்கி ப்ரொஜக்ட் செய்துவிட்டு போன பொழுது கூட நான் கேட்கவில்லை சார்லஸ் கனிமொழியைப் பற்றி. ஆனால் என் அலுவலகத் தோழி கேட்ட அன்று எங்கிருந்தோ நினைவில் வந்ததைப் போல சார்லஸ் கனிமொழியைப் பற்றிய விஷயத்தை நினைத்தவனாய். என் அத்துனை தொடர்புகளையும் பயன்படுத்தி அன்றிரவே என்னானார்கள் அவர்கள் என்று கேட்கும் ஆவல் முற்றியது.
முயன்றேன், சார்லஸின் எண் கிடைத்தும் பேச முடியாத சிக்கல், இந்தச் சமயத்திலேயே ஒருவாறாக நண்பர்களின் மூலம் அவர்களைப் பற்றிய செய்தி கிடைத்திருந்தது, ஏனென்றால் முன்பே சொன்னேனே காவியக் காதலர்கள் என்று அவர்கள் தொலைபேசி எண்ணைக் கேட்டால், முழு வரலாற்றையே சொல்லிப் புலம்பாத நண்பர்களே இல்லை, அப்படியிப்படி என்று ராத்திரி பதினொன்று மணிக்கு கனிமொழியின் செல் நம்பர் கிடைத்தது, சாப்ட்வேர் உலகத்தின் மகிமையால் அந்த நேரத்திலும் கால் செய்ய நான் தயங்கவில்லை.
"ஹலோ கனிமொழிங்களா, நான் மோகன் பேசுறேன்.
"ஹலோ எந்த மோகன் தெரியலையே,"
"... காலேஜ், கம்ப்யூட்டர் சைன்ஸ், முத பெஞ்சில் உட்கார்ந்திருப்பேனே மோகன்."
"இல்லங்க தெரியலை."
"கனிமொழி, என் நம்பர் கூட 018, கனிமொழி, லிஜோ பாபு, மலர்விழி, நரேந்திரன் அப்புறம் நான் மோகன் தெரியலையா."
"ம்ஹும் தெரியலை."
"என்னங்க வேறென்னத்தை சொல்ல, சரி நீங்க நல்லாயிருக்கீங்களான்னு கேட்கத்தான் போன் செய்தேன், நல்லாயிருக்கீங்கல்ல சரி வைக்கிறேன்."
"சரி சொல்லுங்க."
"யாருன்னு தெரிஞ்சுதா?"
"இல்லங்க தெரியலை, பரவாயில்லை சொல்லுங்க." என்றவள் ஏதோ ஞாபகம் வந்தவளாக, "ம்ம்ம் நீங்களா சொல்லுங்க, ராத்திரி இல்லையா தூங்கிக்கிட்டிருந்தேன் ஞாபகத்தில் வரலை."
"சரிங்க கனிமொழி நீங்க தூங்குங்க நான் காலையில் போன் பண்றேன்."
வைத்துவிட்டேன், உண்மையில் அதை நான் எதிர்பார்க்கவில்லைதான், ஏனென்றால் நான் படித்த ஒரே ஒரு கல்லூரி அதுதான், அதனால் அந்த நினைவுகள் என்னிடம் எப்பொழுதும் உண்டு, சொல்லப்போனால் என் கதைகளில் கூட அவர்களை வேறு கதாப்பாத்திரப் பெயர்களால் குறித்திருப்பேன். நம்பர், உட்கார்ந்திருந்த இடம் எல்லாமே இன்னும் நன்றாய் ஞாபகத்திலிருக்கிறது. ம்ஹும் கதையெழுதுகிறேன் இல்லையா நினைவில் கொண்டு வந்திருப்பேனாயிருக்கும்.
அடுத்த நாள் காலையில் மீண்டும் போன் செய்தேன், போனை எடுத்தவள் கண்டுபிடித்துவிட்டாள், சொல்லப்போனால் என்னை அவளுக்கு நன்றாய்த் தெரியும் சில நாட்கள் சார்லஸ் சொல்லப்போய் லெட்டர் எல்லாம் கொடுத்திருக்கிறேன் மிகவும் பர்ஸனலான விஷயங்களாகக் கூட இருக்கும் அந்தக் காகிதங்கள். சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவள் என்னைப் என் பெயரால் அவள் அறிந்திராததையும் கல்லூரி நினைவுகள் அவ்வளவாக இல்லாததையும் சொன்னாள், என்னைப் பற்றிக் கேட்ட அவளுக்கு விவரங்களைச் சொன்னேன், மறுபக்கத்தில் வரப்போகும் ஆச்சர்யத்தையும் கணக்கிட்டுத்தான்,
'அப்ப செட்டிலாயிட்டேன்னு சொல்லுங்க, சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கங்க', நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு சைபர் இல்லாத சம்பளம் கூட தங்களுக்கு கிடைப்பது அரிதாக இருப்பதான புலம்பல்கள் ஆரம்பித்ததும் நான் ஆரம்பித்தேன் சார்லஸ் பற்றி, அவள் ஒரேயொரு வார்த்தை தான் சொன்னாள்.
"உங்கக்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்..."
"கேளுங்க..."
"இல்லை நீங்கதான் எங்க காலேஜோட டிரீம் கப்புள்..."
"புரியலை என்ன சொல்றீங்க..."
"இல்லை நீங்களும் சார்லஸூம் தான் அந்தக் காலேஜின் டிரீம் கப்புள்ஸ், என்னாச்சுன்னு கேட்கிறேன்."
"இந்த ஆம்பளைங்க எல்லாமே ஏமாத்துறவங்க தானே, அதை விடுங்க. எல்லாம் அத்துப்போச்சு."
இப்படி நான் கனிமொழி, சார்லஸ் நம்பர்களைத் தேடிய பொழுது கிடைத்த விமல் நம்பருக்கும் போன் செய்தேன்,
"மாப்ள, இது உனக்குத் தெரியாதா இல்லை எனக்கு தெரியாதா, ஆனாலும் நான் அப்பவே சொன்னேன் அந்தப் பொண்ணு பாவம் விட்டுறுன்னு. உனக்குத் தெரியாது ரொம்பக் கஷ்டமாயிருச்சு..."
அதற்கு மேற்பட்ட விஷயங்கள் பர்ஸனலானவை உண்மை பெயர்களை உபயோகிப்பதால் வேண்டாம், என் அலுவலகத் தோழியின் கல்லூரியில் நடந்த காதல் என்ன முடிவிற்கு வந்திருக்கும் என்று கேட்கும் ஆசை சுத்தமாக இல்லை. நான் அவளிடம் பிரயோகித்த என் தர்க்கங்ளை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தி அது எத்தனை தூரம் உண்மையென யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
In Only ஜல்லிஸ் உண்மைக்கதை மாதிரி சிறுகதை தேன்கூடு
ஆட்டோபயோகிராஃபி
Posted on Friday, October 31, 2008
ஆட்டோபயோகிராஃபி
பூனைக்குட்டி
Friday, October 31, 2008
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேற...
-
இன்று ஆஸ்திரேலியாவிற்கும் பங்ளாதேஷ்ற்கும் இடையேயான சூப்பர் எய்ட் மேட்ச், இதைப் பற்றிய பதிவெதுவும் எழுதும் ஆர்வம் எனக்கு சுத்தமாகயில்லை. மழைய...
-
"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!" எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்ற...
என்ன தாஸு தம்பி, கதை எழுதுங்கன்னா, நாவல் எழுதி போட்டிக்கு அனுப்பறீங்க :-)))
ReplyDelete****
இப்ப டைம் இல்ல, திங்க கிழம வந்து படிச்சி பாத்துட்டு கருத்து சொல்றேன்......
பூனா மழ போதுமா ???
கல்லூரி நினைவுகளில் காதல் வசனை. நல்ல எழுத்தோட்டம்.
ReplyDeleteநல்லா இருக்கு
ReplyDeleteஇதையே சிறுகதையா எழுதினா கூட அருமையா வரும்.
தாஸ் உங்க வலைப்பூ இப்படி என்னை கட்டி போடும்னு எண்ணலை. கதைகள் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படிச்சேன்னா பாத்துக்கோங்க :) எதுவும் கற்பனை னு எனக்கு தோணலை.. என்னவோ நீங்க ஒத்துக்க போறது இல்ல.. ;) மேலும் நிறைய எழுதுங்க என்னை போல் எத்தனை பெர் ரசிக்கறாங்ளோ :D
ReplyDelete-ஒருத்தி.
அரையணா, நன்றிங்க உங்கள் கருத்துக்களுக்கு.
ReplyDeleteசோம்பேறிப் பையன் படிச்சிட்டு மெதுவா சொல்லுங்க, அடப்போங்கப்பா நானும் வீம்புக்குன்னுட்டு எத்தனை நாள் இன்னமும் டூவீலரில் வந்து போவேன்னு தெரியலை. சீக்கிரம் மழை விடவேண்டும் என எல்லாம் வல்ல இயற்கையை வேண்டிக்கொள்கிறேன். (அப்படியில்லாட்டி நான் ஆபிஸ் போகும் காலை பதினோறு மணிக்கும் இரவு வீடு திரும்பும் காலை மூணு மணிக்கு மட்டும் பெய்யாமல் இருக்க வேண்டும்.
ஜெஸீலா, நான் உண்மையில் கல்லூரியைப் பற்றி பிரமாதமாக ஒன்றுமே எழுதவில்லை, ஆனால் எழுதுவதற்கு நிறைய இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்பொழுதே நிறைய எழுதிவிட்டதைப் போல் தோன்றுவதால் எழுதமுடிவதில்லை மற்றபடிக்கு உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ReplyDeleteதம்பி இது சிறுகதை இல்லையா? இதுவும் சிறுகதையின் ஒரு வடிவம்னு இல்ல நான் நினைச்சு எழுதினேன். ஹிஹி.
வணக்கங்க ஒருத்தி,
ReplyDeleteஎன்ன சொல்றதுன்னே தெரியலை, அவ்வளவுதான் நன்றி.
Hmmmm... Dunno what to say dude....
ReplyDeleteBut one thing is sure, Your Colleague's "College Friends Love Story" is an utter failure.... :)
That girl said its not possible to the guy and promised her parents to get married to who-ever her parents are going to choose for her.... :)
Ungal kadai-in nadaiyai patri karuthu therivikkira avavukku yenakku arivu ullada yenbathaippatriya vivadham oru puram irruka...
ReplyDeleteThalaiva... Yen ippadi Kurangu kutti mathiri katchikku katchiii idam thavaraa???? Inda post unnaippatri yenbadai vida... Unnudaya Colleague'ai patri yenbadai vida...Unnudaya Kalluri Nanbargalai patri yenbadai vida... Kaadalai pattriya unnudaya yennangal yenbadai vida... "oru azhagana kaadalin sogamava mudivu" yengira thalaippirku yetra kadai yenbadaivida... Muttrilumana Oru manidanin yenna alaigal/ottangal yevvaru irrukumo avvare... oru pinaippillamal unnudaya yennangal inge kottappattulladaaga ninaikiren.... Anal.. Yennangal athanai-um svarasyamaanadaaga irrukinrana... yenave aluppu thattavillai... Nalllaaa Muyarchi... anal nee idai vida nandraga seyyalam...seyyamudiyum...seyyavendum yenbade yennudaya asai.. aval...yedirparppu... :):):)
Vazhhthukkkallll Nanbaaa!!!!
அப்பாடா, ஒரு வழியா முழுகதையையும் படிச்சிட்டேன்...
ReplyDelete****
கனிமொழிகளும், சார்லஸ்களும் ஒவ்வொரு காலேஜிலும் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள்..
கல்லூரிக் காதல்கள், பெரும்பாலும் கல்லூரிக் காலத்துடன் முடிகின்றன.. வெகு சிலவே கல்யாணத்துடன், வாழ்க்கையை எதிர்கொ......
****
//அதற்கு மேற்பட்ட விஷயங்கள் பர்ஸனலானவை உண்மை பெயர்களை உபயோகிப்பதால் வேண்டாம், என் அலுவலகத் தோழியின் கல்லூரியில் நடந்த காதல் என்ன முடிவிற்கு வந்திருக்கும் என்று கேட்கும் ஆசை சுத்தமாக இல்லை. நான் அவளிடம் பிரயோகித்த என் தர்க்கங்ளை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தி அது எத்தனை தூரம் உண்மையென யோசித்துக் கொண்டிருக்கிறேன்.///
ReplyDeleteஇப்படியான ஒரு யோசனையில் நானும் என் கல்லூரி காலங்களை நினைவுப்படுத்திபார்க்கிறேன்!
ஒரு காதல் ஜோடிகள் இருந்தாங்க! ஆனா என்னா ஆச்சுன்னு தெரியல? பட் இன்னும் அந்த ப்ரெண்ட்ஸ் லிங்க் இருக்கு கண்டிப்பா கேட்டுப்பாக்கணும்!
யோவ் தாஸு,
ReplyDeleteஇந்த பதிவுக்கும் உம்ம சமீபகால ஜிமெயில் ஸ்டேடஸ் மெசெஜுகளுக்கும் ஏதாச்சும் லிங்க்கு இருக்கா?!
- கிசுகிசு வெறியில் இளவஞ்சி...
இளவஞ்சி,
ReplyDeleteஇது ஒரு மீள்பதிவு என்பதால் இதற்கும் என் ஸ்டேட்டஸ் மெஸேஜ்களுக்கும் சம்மந்தம் இல்லை.(மீள்பதிவு இப்ப செய்ததற்கும் தான்)
ஆனால் ஒரு கதை எழுதிக்கிட்டிருக்கேன்(ஒரு மாசமா) அதுக்கும் என் ஸ்டேட்டஸ் மெஸேஜ்களுக்கும் சம்மந்தம் உண்டு. :)