முதலில் ஒரு டிஸ்க்ளெம்பர், இது எந்தப் பதிவிற்கு பதில் சொல்லும் விதமாய் எழுதப்பட்ட பதிவில்லை; நல்ல ஒரு நாளில் இந்த விதமான எண்ணம் கொண்ட ஒரு பதிவெழுத முடிந்ததற்கு வேண்டுமானால் அந்தப் பதிவிற்கு நன்றிகள். நேரடியாய் விஷயத்திற்கு வருகிறேன்.
என்னிடம் கூகுளில் சாட்டிக் கொண்டிருக்கும் நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள். முதலில் உன்கிட்ட இருக்கும் ஈகோ போனால் தான் உனக்கு பெண் நண்பர்கள் கிடைப்பார்கள் என்று. சொல்லப்போனால் இது நான் புலம்பியோ(எனக்கு கேர்ள் ப்ரண்டேயில்லை) இல்லை அவர்களிடம் அட்வைஸ் கேட்டோ(கேர்ள் ப்ரண்டு எப்படிங்க கிடைப்பாங்க) கிடைத்த அட்வைஸ் கிடையாது. சரி போவுதுன்னு கிட்ட நெருங்கி அது என்னய்யா ஈகோ என்று கேட்டால் சொல்கிறார்கள்,
"வேறொன்னுமில்லை, ஏற்கனவே இதயத்தைக் கேட்டு வேலைசெய்ய ரஜினி இருக்காரு நான் மெலெருக்கிறதைக் கேட்டு வேலை செய்வேன்னு சொல்றியே! அதுதான் பிரச்சனை."
"அப்ப மேலிருக்கிறதை நம்பி வேலை பார்த்தால் கேர்ள் பிரண்டு கிடைக்க மாட்டாங்களா?"
"யோவ் மேலிருக்கிறதை நம்பினா, நீ முட்டாளை முட்டாள்னு சொல்லணும், அழகில்லாததை அழகில்லைன்னு சொல்லணும், பிடிக்காததை பிடிக்கலைன்னு சொல்லணும், நல்லாயில்லாததை நல்லாயில்லைன்னு சொல்லணும் இல்லையா?"
"ஆமாம் அதுக்கென்ன..."
"அதனால் தான் உனக்கு கேர்ள் பிரண்டு கிடைக்க மாட்டேங்குது."
இப்படிப்பட்ட பதில் வரும் ஒவ்வொரு சமயமும் நான் ஒரு விஷயம் சொல்லுவேன்.
"இங்கப்பாருங்கய்யா அதெல்லாம் கிடையாது, எல்லாம் நம்ம லுக்கு தான் காரணம். இந்த மொகரக்கட்டையைப் பார்த்தா எந்த பிகரு பிரண்டாகும். இருக்குற நாலு முடியும் கொட்டுறதுக்குள்ள கல்யாணம் பண்ணி வைச்சிடுங்கன்னு சொன்னா(அவரு எனக்கு ஒரு விதத்தில் உறவினர்) அதைக் கேட்காம கேர்ள் பிரண்டு புடின்னு சொன்னா எப்படி"
"இங்கத்தான் நீ தப்பு பண்ணுற, பொண்ணுங்களை தப்பா எடை போடுற. பொண்ணுங்க உன் தலையில் எத்தனை முடியிருக்குன்னு கணக்கு போட்டு பிரண்டாவதில்லை; மூளை இருக்கா இல்லையா அப்படிங்கிறத கணக்குப் போட்டுத்தான் பிரண்டாவாங்க."
"அப்படின்னா?"
"மூளை இல்லைன்னா ஓக்கே இருந்தா ரிஜக்டட். அதுவுமில்லாமல் நீ பேச ஆரம்பிச்சா கேப்பே விடாம பேசிக்கிட்டேயிருப்ப; அப்புறம் உன்கூட பொண்ணுங்க எப்படி சிநேகிதமாகும். சொல்லு. ஏன்னா இது ஒரு வழிப்பாதை மாதிரி பொண்ணுங்க பேசுவாங்க நீ பேசக்கூடாது, அவங்க கேள்வி கேட்பாங்க நீ பதில் சொல்லக்கூடாது.
அதுவும் அவங்க செஞ்ச எதையாவது ஒன்னை காண்பிச்சு நல்லாயிருக்கான்னு கேட்டா; அதைப் புகழந்து அரைமணிநேரம் பேசணும். நீயோ குத்தம் குறையெல்லாம் சொல்லிட்டு கடைசியில் இத்தனையிருந்தாலும் உங்க பதிவு நல்லாயிருக்குன்னு அடிக்கிற ஜல்லியெல்லாம் அங்க நடக்காது."
"அப்ப இன்டலக்சுவல் ப்ரண்ட்ஷிப் அப்படிங்கிறதே இல்லையா?"
"யோவ் நீ உதை வாங்கப்போற - பொண்ணுங்கக்கிட்ட இன்டலக்சுவலா பேசின அப்புறம் அவ்வளவுதான். கனவுலகத்திலேயே இருக்காதய்யா வெளிய வா! பறந்து விரிந்திருக்கும் இந்த உலகத்தைப் பார். எவ்ளோ பொண்ணுங்க இருக்கு உனக்கு ஏன் ஒரு கேர்ள் பிரண்ட் இல்லைன்னு யோசிச்சுப் பார்."
"சரி இவ்வளவும் செய்றேன்னே வைச்சுப்போம் அதனால எனக்கு என்ன யூஸ்"
"ஆரம்பிச்சிட்டான்யா? உனக்கு கேர்ள் பிரண்டிறது முள் கீரீடமாயிருந்தாலும். வெளியில் இருந்து பார்க்கிறவனுக்கு அது மலர்க்கிரீடம். அதுவும் கொஞ்சம் அழகான ஸ்டைலான பிகர் மாட்டிக்கிச்சுன்னு வையேன். 'யோவ் இவனுக்கு வந்த வாழ்வைப் பாருய்யான்னு' பொழம்புவாங்கய் பாரு. அப்ப கிடைக்கிற திருப்தி 'உங்களோட அந்தக் கதையைப் படிச்சேன். ச்ச எப்படிங்க அப்பிடி எழுதினீங்க சான்ஸேயில்லை.' அப்படின்னு சொல்றதை விடவும் அதிகமாகயிருக்கும். ஏன்னா 'நீங்க எழுதின கதையிலேயே அது ஒன்னு தான் தேறிச்சு' அப்படிங்கிற உள்குத்து அதில் இருக்கும். ஆனால் உள்குத்தே இல்லாமல் பொறாமைப் படவைக்கும் கேர்ள் பிரண்ட் இருந்தால்."
"அப்ப கேர்ள் பிரண்ட் வைச்சுக்கிறது மத்தவனை பொறாமப் பட வைக்கத்தானா?"
"இல்லையா பின்ன, எப்படியிருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கப்போறதில்லை. நைனா கழுத்தில் அருவா வைச்சிடுவார் இல்லையா. அதுவுமில்லாமல் கேர்ள் பிரண்ட்களை கல்யாணம் செஞ்சிக்கக்கூடாது. இல்லேன்னா கல்யாணத்துக்கப்புறம் டாமினேட் செய்ய முடியாது பாரு."
"ஆனாலும் இதெல்லாம் மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துன கதையா இல்ல ஆய்டும் போலிருக்கு?"
"இங்கப்பாரு இந்த மூட்டைப் பூச்சி வீட்டைக் கொழுத்துறது மாதிரி விஷயத்தை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டுட்டு கேர்ள் பிரண்டு பிடிக்கிற வழியைப்பாரு."
இப்படியெல்லாம் நண்பர்கள் அட்வைஸ் ஆயிரம் கொடுத்தாலும், நம்ம மூளை ஒத்துக்கவே மாட்டேங்குது. எனக்குத் தெரிந்து என்னுடன் சாட்டும் நண்பர்கள் அனைவருமே எனக்கு கேர்ள் பிரண்ட் கிடைக்காததற்கு ஆயிரம் காரணங்கள் இன்னமும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ;)
கேர்ள் ஃப்ரண்ட் தேவையா
பூனைக்குட்டி
Tuesday, November 04, 2008
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேற...
-
இன்று ஆஸ்திரேலியாவிற்கும் பங்ளாதேஷ்ற்கும் இடையேயான சூப்பர் எய்ட் மேட்ச், இதைப் பற்றிய பதிவெதுவும் எழுதும் ஆர்வம் எனக்கு சுத்தமாகயில்லை. மழைய...
-
"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!" எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்ற...
சிக்குமா சிக்காதா கடைசியில ?
ReplyDeleteபார்வை ஒன்றே போதுமே !!!
நண்பர்கள் 1000 என கோடி காரணம் சொல்லட்டும் நீர் சொல்லும்யா உமக்கு தெரிஞ்ச ஒரே ஒரு காரணம் ஏன் இல்லைனு அதை சொல்லாமா ... ராமாயணம் பாடிகிட்டு!
ReplyDeleteகிடைக்கிறது கிடைக்காம போகாது ஆனா கிடைக்காதது என்னிக்கும் கிடைக்காது!
ரவி - யாரோட பார்வை.
ReplyDeleteஉங்க இம்சை பின்னூட்டதை வெளியிடுவதாயில்லை ;)
"எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணும்மடா" என்ற கருத்தாளம்மிக்க "பாய்ஸ்" பட பாடலை கேட்கவும். வாழகையில் தெளிவு பிறக்கும்.
ReplyDelete:))))))))))))))))))
மோகனா,
ReplyDeleteஇப்போதாய்யா தெரியுது?? நீ ஏன் அந்த நீளமுடியை துறந்தேன்னு?? ;-)
யாரோட பார்வையா ? என்ன கேள்வி ? மோகனா நாயோட பார்வை பெங்களூர்லதானே நீயும் இருக்கே ? பாத்துப்பா. ஆறடிகூந்தல அவுக்குன்னு கவ்வினா என்ன பண்ணுவே ? முழங்காலுக்குவந்தது முடியோட போச்சுன்னு இருப்பியா ?எத்தன சம்போ எத்தன ஆயில் ரீட்மெண்ட் குடுத்து வளத்து முடிச்ச கேசம் சகோதரா ?
ReplyDeleteஒரு படத்துல விவேக் நாலு நாளா பட்டினின்றத ஸ்டைலா சொல்லுவாரு.
ReplyDeleteஅதுமாதிரி கேர்ள்பிரண்ட் இல்லை எனபதற்கு சொல்லுற நொண்டிசாக்க இவரு எவ்வளவு ஸ்டைலா சொல்லுராரு பாருங்கோ பெண்மனிகளே.. இப்பவாது தெரியுதா இவரு ரொம்ப நல்லவருன்னு.
யோவ் மொதல்ல சொந்தமா எழுத கத்துக்கங்கய்யா... ;)
ReplyDelete//அதுவும் அவங்க செஞ்ச எதையாவது ஒன்னை காண்பிச்சு நல்லாயிருக்கான்னு கேட்டா; அதைப் புகழந்து அரைமணிநேரம் பேசணும். நீயோ குத்தம் குறையெல்லாம் சொல்லிட்டு கடைசியில் இத்தனையிருந்தாலும் உங்க பதிவு நல்லாயிருக்குன்னு அடிக்கிற ஜல்லியெல்லாம் அங்க நடக்காது.//
உங்கள மாதிரி இல்லாம நீங்க மொக்கை போஸ்ட் எழுதினாலும் பொண்ணுங்க நல்லாயிருக்குனு தான் சொல்லுவாங்க. ஏன்னா அடுத்தவங்க மனச காயப்படுத்தறது பொதுவாவே பொண்ணுங்களுக்கு பிடிக்காது.
அதுமில்லாம எல்லா விஷயத்துலயும் encourage தான் பண்ணுவாங்க. உங்கள மாதிரி discourage பண்ண மாட்டாங்க :)))
ஆழ்ந்த அனுதாபங்கள்
ReplyDeleteஉங்கள மாதிரி கேர்ள் ப்ரண்டு தேவைப்படாதவங்கள பத்தி நம்ம செல்வன் ஓரு தொடர் போடுராரு போல :)
ReplyDeleteஎப்படியிருந்தாலும் உங்க பதிவு நல்லாயிருக்கு அதுல பல கருத்தும் இருக்கு ;)
மோகன்!!!
ReplyDeleteசில்லறையை செலவு செய்ய தயங்குபவர்கள் தான் இப்படி எதையாவது நினைத்துக்கொண்டு கேர்ல் பிரண்ட் வேண்டாம் என்று சொல்வார்கள் என்று எங்க அலுவலகத்திலே சொல்றாங்க..
என்ன நான் சொல்றது சரியா..
அன்புடன்
அரவிந்தன்
இருக்கலாம்க அரவிந்தன்; எனக்கே உண்மையில் தெரியலை நான் இந்த விஷயத்தில் காசை கருத்தில் வைத்திருக்கிறேனா இல்லையா என்று.
ReplyDeleteஆனால் என்னால் முட்டாள்த்தனமாக செலவு செய்ய முடியாது நிச்சயமாய்.
அதுமட்டுமில்லாமல் இதில் அடிபட்டுப்போகும் நேரம் அதிகம். எனக்கும் சாருவைப் போல் நேரம் பணத்தை விட காஸ்டிலியான ஒன்று. ;-)
வ.வா.சவின் மொக்கை போட்டிக்கு இந்தப்பதிவ அனுப்பியாச்சா?
ReplyDelete//ஆனால் என்னால் முட்டாள்த்தனமாக செலவு செய்ய முடியாது நிச்சயமாய்.
ReplyDeleteஅதுமட்டுமில்லாமல் இதில் அடிபட்டுப்போகும் நேரம் அதிகம். //
ம்ஹூம்... இது வேளிக்கே ஆவாது. உங்க ஃபிரெண்ட்ஸ் இவ்ளோ டீட்டெய்ய்ய்லா க்ளாஸ் எடுத்தே உங்களுக்குப் புரியலன்னா வேற எதுவும் சொல்றதுக்கில்ல :(
தாஸ்,
ReplyDeleteநீ "பொண்ணுங்கள புடிக்கிற எப்படி"- என்ற வாலிபத்தின் முதல் தாளை பாஸ் பண்ணனும்னா, இத கொஞ்சம் படி.
திட்டம் 1.
1. கருடா மால் குட்டி சுவர்ல ஒக்காந்து வர்ர போற தனிப்பெண், குழுப்பெண் மற்றும் ஜோடிப்புறா இதையெல்லாம் ஒரு சர்வேசன் பண்ணு, (சர்வேசனையும் ஓட்டிட்டு போ)
நீதி: அளவு, அறிவு, வண்ணம் மற்றும் வசதி இதற்கும் பிகர் மடக்ரத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை.
திட்டம் 2.
1. "பெண்நண்பி வேணும்" அப்படிங்கற கோடிங்க (coding), மூளைங்கற சாப்ட்வேர்ல பதிவு பண்ணிட்டே இரு.
நீதி: கனவுல நெறய பொண்ணுங்கள அனுப்பி மூள நம்மள இம்சை அரசன் 2000'மாவது புலிக்கேசி மாதிரி டார்ச்சர் பண்ணி டவுசர கிழிக்கும். நீ பொண்ண புடிக்கிற வரை "அவன புடிக்கச் சொல்லு நான் நிறுத்துறேன்"னு வசனம் பேசும்.
திட்டம் 3.
1. கம்பெனியிலே 12 வரைக்கும் ஒக்காந்து பொட்டி தட்டாம, மொக்க பதிவுக்கெல்லாம் பின்னூட்டம், முன்னூட்டம், சைடூஊட்டமெல்லாம் போடாம, கொஞ்சம் நேரத்த செலவழி. நாலு பொண்ணுங்க பின்னாடி போய் சைட்வுடு.
நீதி: பீல் பண்ணா மட்டும் பொண்ணு மாட்டாது, பிகருக்கான மரியாதயத் தரணும் மாப்பு.
திட்டம் 4.
1. வீக் என்ட் ஜொள்ள, சானியா, சரபோவான்னு சர்ரியலிசம் பண்ணாம, சரஸ்வதி, சம்பங்கின்னு யார்பின்னாடியாவது கொஞ்ச நாளைக்கு ஜல்லியடி.
நீதி: கனவ நெசமாக்கனும்னா, மொதல்ல எங்கயாவது நம்ம கணக்க ஓப்பன் பண்ணனும்.
திட்டம் 5
1. மடங்கலங்கறத்துக்காக இந்தப் பயம் புளிக்கும்னு சொல்லக்கூடாது. காரணத்த கண்டுபுடிச்சி பரிகாரமெல்லாம் பண்ணி அடித்த ரவுண்டுக்கு ரெடியாகணும் சச்சின் மாதிரி.
நீதி: நம்மள மாதிரியே அவங்களுக்கும் பலகாரணங்கள் இருக்கலாம், எப்பொவுமே இயல்பா இருந்தா "நண்பர்கள்" சுலபமா கெடைப்பாங்க (ஆண், பெண் இருவருமே..)
ஹேய்,
இத ஒரு பதிவாவே போட்ரலாம்னு இருக்கேன். அங்க மீட் பண்ணுவோம், இன்னும் நெறய ஐடியாவ அள்ளிவிடறேன்....
என் அனுபவத்துல சொல்றேன், உங்க பிரச்சினையே இதுதான்!
ReplyDelete1. ஈயம் பித்தளன்னுஎல்லாம் விசு டைப்ல விளக்கம் சொல்றது! (நீயென்பது நானல்லவோ தேவ தேவி என்ற தமிழ்ப்பட மந்திரத்தை தினசரி 108 தடவை உச்சாடனும் செய்யவும்!)
2. நான் இளைஞன் நு பாக்கெட்ல இருக்கிற டிரைவிங் லசன்ஸ்லாம் காம்பிச்சு ப்ரூவ் பண்ரது :-) கொஞ்சம் ஓவர் மக்கா!
3. கிரிடிட் கார்ட் வாங்காத ஹோட்டல்ல சாப்பிட்டுவிட்டு பில் பே பண்றேன்னு சொல்லிட்டு கார்ட்எடுத்து நீட்றது! ( ரஒம்ப புத்திசாலி மக்கா!)
1000 ஓட இதயும் சேத்திக்கங்க அண்ணா!
ஒரு அன்புத் தங்கச்சி
என் முதல் வலையுலக தங்காச்சிக்கு,
ReplyDeleteஉப்பு விக்கப்போனா மழை பெய்யுது மாவு விக்கப்போனா காத்தடிக்குது கதையா நான் கிரெடிட் கார்ட் கொடுக்குறேன்னதும் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டா நான் என்ன பண்ணுவேன் :(. பெங்களூருவில் கிரெடிட் கார்ட் வாங்காத, நார்த் இன்டியன் சாப்பாடு கிடைக்காத ;-), தமிழர்களின் உணவான தயிர்சாதம் கிடைக்காத ஒரு பக்வாஸ் ஓட்டலுக்கு கூட்டிச் சென்றதற்கு நீங்கள் உதைக்க வேண்டிய ஆள், ராமும் ஐயப்பனும் தான்.
நான்-வெஜ் தான் இல்லேன்னா ஸ்வீட் கார்ன் சூப்புக் கூடையா. நீங்க வேற ஏகக் கோபத்தில் இருக்கேன் வம்பிழுக்காதீங்க.
உன்னைப் பற்றி தெரிய உன் நண்பனை கேட்டுப்பார் என்பார்கள். உங்க நண்பர் சொன்ன அறிவுரையை பார்க்கும் போது உங்களைப் பற்றி தெரிகிறது :-)
ReplyDelete//யோவ் மேலிருக்கிறதை நம்பினா, நீ முட்டாளை முட்டாள்னு சொல்லணும், அழகில்லாததை அழகில்லைன்னு சொல்லணும், பிடிக்காததை பிடிக்கலைன்னு சொல்லணும், நல்லாயில்லாததை நல்லாயில்லைன்னு சொல்லணும் இல்லையா?"// பல ஆண்கள் பெண்களை வசீகர வார்த்தைகளால் கவர்ந்து விடலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். சரி அப்படியே நடந்து அவள் மடங்கிவிட்டாள் நீங்கள் கேட்கும் //அப்ப இன்டலக்சுவல் ப்ரண்ட்ஷிப் அப்படிங்கிறதே இல்லையா// அது இல்லாமலேயே போய்விடும் ஜாக்கிரதை. //மூளை இல்லைன்னா ஓக்கே இருந்தா ரிஜக்டட்// இது சத்தியமா தப்பு. எந்த பெண்ணுக்குமே முட்டாள் ஆண்கள் பிடிப்பதில்லை.
அனானி தங்கச்சி, பொன்னால் குறிக்க வேண்டிய பின்னூட்டம்
ReplyDeleteபொண்ணுக்கு வீங்கி --> பொன்னால் குறிக்க வேண்டிய பின்னூட்டம்
ReplyDeleteகொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு எனக்கும் இருக்கு உனக்குமேலே அன்புத்தோழி
ReplyDeleteippadi unmaiyay othuk kolvathal irukkumo? :)