முன்னாபாய் எம்பிபிஎஸ், வசூல்ராஜா எம்பிபிஎஸ், சங்கர்தாதா எம்பிபிஎஸ் என ஒருவாறு எல்லோருக்குமே நன்றாய் அறிமுகமான படம்தான். அதனுடைய ஸெக்யூல் வெர்ஷன் ரிலீஸ் என்றவுடன் எல்லோரையும் போல் எனக்கும் ஆஹா சும்மா பெயரில் இருக்கும் ரெபுடேஷனை வைத்து காசு பார்க்கப் பார்க்கிறார்கள். ஏன் தான் இப்படி நல்லபடத்தின் ஸெக்யூல் வெர்ஷன் ரிலீஸ் பண்ணி முதல் பாகத்தின் பெருமையையும் குலைக்கிறார்கள் என்று நினைத்தேன் முதலில். ஆனாலும் இந்த படத்திற்கு இன்று சென்றததற்கான காரணம் ரொம்பவே முக்கியமானது.
சஞ்சய் தத்திற்குள் இருக்கும் காமெடியனை முன்னாபாயில் பார்த்ததாலா இல்லை அந்த பொண்ணு பேரு என்ன வித்யா பாலனைப் பார்த்து கொஞ்சம் ஜொள்ளிவிட்டுட்டு வரலாமான்னா என்று கேட்டால், இருக்கலாம் இவையெல்லாம் ஒரு பக்கம் நிச்சயமாய். முக்கியமான காரணம் ஒன்று உண்டு, தொடர்ச்சியாய் என்னுடைய இந்தி சினிமா விமரிசனங்களைப் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். எங்கள் ப்ரொஜக்ட்டின் மிக முக்கியமான கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பது.
எனக்கு முன்னால் யூஸ்கேஸை இம்பிளிமெண்ட் செய்த புண்ணியவான் அல்லது புண்ணியவதி என்ன நினைத்துக்கொண்டு இம்ப்ளிமெண்ட் செய்தார்களோ ஒரு ப்ளோ மொத்தமாக தவறாக இருந்தது. எஸ்ஐடி மொத்தமாக முடிந்து யூஏடி ஆரம்பிக்க இருந்த சமயத்தில் இதைக் கண்டுபிடித்ததால் கடைசி மூன்று நாட்களாக வீட்டிற்கே போகாமல் கம்பெனியின் டோர்மென்ட்டிரியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டு கோட் சேஞ்சஸ் செய்ய வீக் எண்ட் ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயம்.
இல்லையென்றால் திரும்பவும் திங்கட்கிழமை வரும் பிரஷரை சமாளிக்க முடியாது அதனால் சற்றும் முடியாத சூழ்நிலையில்(மூன்று நாளாய் சுத்தமாய் தூக்கம் இல்லை) வேண்டுமென்றே என்னை வற்புறுத்தி சென்ற படம் லஹேரஹோ முன்னாபாய், முன்னாபாய் எம்பிபிஎஸ் இன் ஸெக்யூல் வெர்ஷன். என் சூழ்நிலையை உணர்ந்திருக்கலாம், கொஞ்சம் கம்ப்யூட்டர் பக்கம் பழக்கம் இருந்தால் கூட, என்னதான் சஞ்சய் தத், அர்ஷத்(ஆந்தனி கோன் ஹை, முன்னாபாய் எம்பிபிஎஸ்) அப்புறம் கொஞ்சம் ஜொள்ளுவிட வித்யாபாலன் இருந்தாலும். கொஞ்சம் பிசிறு தட்டியிருந்தாலும் தியேட்டரில் இருந்த அடுத்த நிமிடமே வீட்டிற்கு வந்து தூங்கியிருப்பேன்.
ஆனால் என்னை முழுவதுமாக தங்கி பார்க்கவைத்து, பின்னர் லேப்டாப் திறந்து விமர்சனம் எழுதவைத்து அப்லோட் செய்கிறேன் என்றால் முழுபெருமை, படத்திற்கு உண்டு. பெரும்பாலும் நகைச்சுவை சம்மந்தப்பட்ட படத்திற்கு, முகமூடிகளைக் கழட்டிவிட்டுத்தான் செல்வேன். அதனால் தான் என்னால் மைக்கேல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ்ஸை ரசிக்க முடிந்தது. எனக்குத்தேவை விடுதலை கடுமையான கம்ப்யூட்டர் பணிகளுக்கு மத்தியில் உண்மையில் சப்தமாய் சிரித்து மகிழ ஒரு படம். அப்படிப்பட்ட படமாய் இருந்தது லஹே ரஹோ முன்னாபாய்.
கதையொன்னும் அப்படி பெரியவிஷயம் இல்லை, நம்ப முன்னா பாய்க்கு ரேடியோ ஸ்டேஷனில் வேலை பார்க்கும் ஜான்வியின் குரலில் மயங்கி காதல். இப்படியாக அவர் அந்தக் குரலிலேயே மயங்கிக் கிடக்கும் வேலையில் ஒரு வாய்ப்பு வருகிறது அவரை சந்தித்து நேரடியாக ரேடியோவில் உரையாட, அதை நம்ப முன்னாபாய் தன்னுடைய சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி செஞ்ர்ராரு. அப்படி செய்வதனால் வரும் இன்னல்களைத் தீர்த்து எப்படி அந்த ரேடியோ பார்ட்டியைக் கைப்பிடிக்கிறார் என்பதை அதன் முந்தைய வெர்ஷனைப் போலவே, இன்னும் சொல்லப்போனால் இன்னும் நல்ல முறையில் செய்திருக்கிறார்கள்.
முகமூடியை இன்டீட் மூளையைக் கழட்டி வைத்து விடுவதால், படத்தில் லாஜிக் பெரும்பாலும் நான் பார்ப்பதில்லை, அப்படி லாஜிக் எல்லாம் பார்த்தும் படம் பார்ப்பதுண்டு அப்படிப் சமீபத்தில் பார்த்த இன்னொரு படம், ஓம்காரா. பெரும்பாலும் ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுதி அது எனக்கு மிகவும் பிடித்திருந்தால், அதைவிட நன்றாய் எழுதமுடியுமென்றால் மட்டுமே எழுதுவேன் ஏற்கனவே ஆசாத்பாய் அதைச் செய்துவிட்டதால் அப்படியே மூடிக்கொள்கிறேன்.
அப்புறம் தலைப்புக்கு, லஹே ரஹோ தாஸ் பாய் தலைப்பு என் பெயருக்காக வைத்துக் கொண்டதல்ல, லஹே ரஹோ முன்னாபாயில் முக்கியமான கதாப்பாத்திரம் காந்தி தாத்தா. ஒரு தாதா(அட நம்ம முன்னாபாய்) காந்தியப் பத்தி படிச்சி அதனால கொஞ்சமே கொஞ்சம் மென்டல்(?) ஆனதால் காந்தி அவருக்கு கண்களில் தெரிகிறார். உண்மையில் மென்டலா இருக்கிறவங்களுக்கும் காந்திக்கும் ஏதாவது தொடர்புண்டா என்பது போன்ற கேள்வியை நான் முகமூடியை மாட்டிக்கொண்டு விமர்சனம் எழுதினால் நிச்சயம் கேட்பேன். தலைப்புக்கு காரணம் படத்தில் காந்தி தன்னை மூன்று நான்கு முறையாவது இன்ட்ரொடுயூஸ் செய்து கொள்கிறார், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக. இப்பல்லாம் இதுதானே பேஷன், முன்பே படித்த கமலின் “மோகனுக்கு ஒரு கவிதை” அப்புறம் இணையத்தில் எங்கோ காந்தியை மோகன் என்று விழித்த ஒரு கட்டுரை. அப்புறம் “மோகன்தாஸ் வெர்ஸஸ் காந்தி”(இது நாடகம் தானே?) இப்படியாக காந்தியை அவரைப் பற்றி அறியாத ஒரு பெயரில் விளிக்க நான் நினைத்தேன் கண்டறிந்தது தான். லஹே ரஹோ தாஸ் பாய், தாஸ்னு சர்நேம் சொல்றது தப்புன்னா லஹே ரஹோ மிஸ்டர் தாஸ் பாய்னு சொல்லலாம். ஆனால் இது என் பெயரும் ஆதலால் என்னை ரொம்பவும் அறிந்தவர்கள் தாஸ் என்று என்னைக் கூப்பிடுவதுதான் எனக்கு பிடிக்குமென்பதால் ‘ப்யாராஸே’ லஹே ரஹோ தாஸ் பாய் தான். (அப்பாடா தலைப்பிற்கு விளக்கம்னு சொல்லி ஒரு பத்தி வளர்த்தாச்சு.)
தியேட்டரில் மக்கள் கைத்தட்டிப் பார்த்து நெடுங்காலம் ஆகிவிட்டிருந்தது, பெரும்பாலும் திருச்சி தியேட்டர்களில் நான் இதைப் பார்த்ததில்லை. பிட் பார்ப்பதற்காக படத்திற்குப் போய்விட்டு, இன்டர்வெல் வரைக்கும் காத்திருக்கும் பொறுமையில்லாமல் மக்கள் விசிலடிப்பதைப் பார்த்திருக்கிறேன். ரஜினி, விஜய் க்கு பாலாபிஷேகம் பண்ணும் விஷயத்தை நான் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஸ்டேண்டிங் ஓயேஷன் மட்டும் தான் இல்லை நான் பார்த்த இந்த திரைப்படத்தில்.
காந்தி வழியைப் பின்பற்றுவதால் ஏற்படும் சில நன்மைகளை ப்ராக்டிகலாச் சொல்ல அதன் ரியாலிடியை உணர்ந்ததாலோ என்னவோ மக்கள் கைத்தட்டி உற்சாகப் படுத்தினார்கள். நான் கைத்தட்டினேனா என்ற கேள்விக்கு பதில் கடேசியில். ஹர்ஷத் வர்ஷியின் முகபாவனைகள் எப்பொழுதும் தண்ணியிலேயே இருப்பதாய் இருக்கும் காட்சிகள் முகபாவனைகளுடனான அவருடைய டயலாக் டெலிவரி ம்ம்ம் அருமை. வித்யா பாலன் “குட்மார்னிங் மும்பை”யை நம்ம நிர்மலா பெரியசாமி மாதிரி சொல்கிறார். கொஞ்சம் நடிக்கிறார், ஸ்கிரீனில் அருமையாக இருக்கிறார். இதைப் படிக்கும் அக்காவுக்கு ஒரு நோட், கொஞ்சம் பர்ஸனல் அதனால எல்லோரும் அடுத்த பேராவுக்கு போயிருங்க, “எனக்கு பொண்ணு பார்த்தா வித்யா பாலன் மாதிரி பாருங்க.” (வழியும் ஜொள்ளுடன் மோகன்தாஸ்.)
எப்பொழுதும் போல சஞ்சய்தத் தனது ஆகிரிதியுடன் சிரிக்காமல் நம்மை சிரிக்கவைக்கிறார். அதை விட சோகக்காட்சிகளில் அவருடைய சினிமா எக்ஸ்பீரியன்ஸ் தெரிகிறது.
கமல், தசாவதாரம் படத்திற்குப் பின்னர் உங்கள் பைனான்சியல் ஸ்டேட்டஸ்ஸை உயர்த்தும் நோக்கத்தில் காமெடிப்படம் பண்ணும் ஐடியா வருமானால் ப்ளிஸ் கோ பார், வசூல்ராஜாஸ் ஸெக்யூல் வர்ஷன்.
படத்தில் வரும் காந்தி பற்றிய காட்சிகளில் கைத்தட்டல் இருந்ததென்று சொல்லிவிட்டு நான் கைத்தட்டினேனா என்று கடேசியில் சொல்கிறேன் என்று சொன்னேன், காமெடிப்படமென்றாலும் மெஸேஜ் சொல்வதாய் வரும் சமயத்தில் கழட்டப்பட்ட இன்ட்டலெக்ட்சுவல் தன்மை, தானாய் மீண்டும் புகுந்து கொள்வதால் படத்தில் சொல்வதைப் போல் செய்யமுடியாமா என்று நான் யோசிக்கும் நேரத்தில் அடுத்த காட்சி வந்துவிடுவதால் சாரி கைத்தட்டவில்லை.
Credits,
famecinemas.com
லஹே ரஹோ தாஸ் பாய்
பூனைக்குட்டி
Saturday, September 02, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேற...
-
சிறு வயதிலேயே தோன்றிய ஆசை இப்பொழுது தான் நிறைவேறியிருக்கிறது. அது தமிழில் ஒரு வளைத்தலம் அமைக்க வேண்டுமென்பது. பல முறைகளiல் முயன்று இப்பொழுது...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
paarkalaamkaringa! paarppom
ReplyDeleteஸெக்யூல் வர்ஷன் = அப்டீன்னா தமிழில் என்ன?
ReplyDeletebaba, paarkkalaamnuthaan ninaikkiREn. ;)
ReplyDelete"யாஹூ இந்தியா" விமர்சனத்துல இந்தப் படத்தை ஆஹா ஓஹோன்னு பாராட்டிருக்காங்க. 'முன்னாபாய் எம்.பி.பி.எஸ்' பாத்துட்டு வரும் போது ஒரு "ஃபீல்குட் அனுபவம்" சந்தோஷமாயிருந்துச்சு. இந்தப் படமும் அந்த மாதிரி இருக்கும்னு தோணுது. டிவியில போடற இந்தப் படத்துப் பாட்டுகளும் நல்லாருக்கு. சான்ஸ் கெடச்சாப் பாக்கணும். உங்க விமர்சனமும் நல்லாருக்கு.
ReplyDeletekaippulla, paarunga ungkaLukkum pidikkum.
ReplyDeletechinnaththambi, athE thaan. nEnga athu ponsukku theriyaathunnu ninaikkiRIngkaLaa?
முகப்புப் படம் நல்லாருக்கு.
ReplyDeleteயாருங்க அந்த கண்ணாத்தா?
/*கமல், தசாவதாரம் படத்திற்குப் பின்னர் உங்கள் பைனான்சியல் ஸ்டேட்டஸ்ஸை உயர்த்தும் நோக்கத்தில் காமெடிப்படம் பண்ணும் ஐடியா வருமானால் ப்ளிஸ் கோ பார், வசூல்ராஜாஸ் ஸெக்யூல் வர்ஷன்*/
ReplyDeleteஉண்மை.(முன்னா பாய் 1 போலவே)படம் முழுவதும் "Platform Indipendence " தன்மை இருக்கிறது.கொஞ்சமும் தயக்கமின்றி எல்லா வசனங்களையும் தமிழுக்கு மொழிமாற்றலாம்.இயக்க சரண் கூட அவசியமில்லை..கத்துகுட்டி Director போதும்.
//ஸ்கிரீனில் அருமையாக இருக்கிறார்//
இந்த பாலக்காட்டு தமிழச்சி முதலில் தமிழ் படத்தில் தான் அறிமுகமாவதாக இருந்தது,ஸ்ரிகாந்துடன்.பிறகு..திரையில் வயதானவராக தெரிகிறார் என்று சொல்லி கழற்றி விடப்பட்டார்(அந்த directorஐ பசித்த புலி தின்னட்டும் :) ).இப்போது..கமலின் தசாவதாரத்துக்குக்கூட கால்ஷீட் கொடுக்கமுடியாதபடிக்கு அம்மணி Busy.
சரி இப்போது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்(முகமூடியை அணிந்து கொண்டு)
படத்தில் சஞ்ஜை தத்துக்கு வருவதாகக் காட்டப்படும் வியாதி..ஸீசோபிர்னியாவா?
Beautiful Mind படத்தில் காட்டப்படுவதுபோல..
sinnaththambi, naanum appadiththaan ninaikkiREn.
ReplyDeleteanonymous
http://mohandoss.i.googlepages.com/emmyr8aa9.jpg
http://mohandoss.i.googlepages.com/emmyr12la1.jpg
http://mohandoss.i.googlepages.com/emmyr13xu6.jpg
ivaikal muzuppadangkaL. pEru Emmy, Model.
barath irunga solREn.
//
ReplyDelete“எனக்கு பொண்ணு பார்த்தா வித்யா பாலன் மாதிரி பாருங்க.” (வழியும் ஜொள்ளுடன் மோகன்தாஸ்.)
//
Yen mathiri,vidya balanae okaya!
Okay endral ungal veetuku munnabai varuvar. Jakirathai!
மோகன் எனக்கும் இந்தப் படம் ரொம்பப் பிடிச்சிருந்தது. தமிழ் வலையுலகில் இந்தப் படம் பற்றி அதிகமானப் பேச்சு இல்லையே என்ற வருத்தம் தங்கள் பதிவுகளைப் படித்தப் பின் நீங்கியது.
ReplyDeleteஸ்டாலின் படத்தின் விம்ர்சனமும் போடுங்களேன். ஸ்டாலின் சீரஞ்சிவிக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையில் வெளிவந்திருக்கும் படம் எனக் கேள்விப்பட்டேன்.படத்தின் ரிசல்ட் பற்றி தங்களுக்கு எதாவது தெரியுமா?